ஞாயிறு, 9 ஜூன், 2013

காஞ்சிபுரம்-வரலாறு

தமிழக மாவட்டங்கள் - காஞ்சிபுரம் (Kancheepuram)
தலைநகரம் : காஞ்சிபுரம்
பரப்பு : 3,368.90 ச.கீ.மீ
மக்கள் தொகை : 2,869,920
எழுத்தறிவு : 1,980,898 (77.61 %)
ஆண்கள் : 1,455,302
பெண்கள் : 1,414,618
மக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 647

  :
காஞ்சிபுரம் மாவட்டம் என்று இன்று அழைக்கப்படுவது அண்மை காலம் வரை செங்கல்பட்டு மாவட்டம் என்றே வழங்கிற்று. காஞ்சிபுரம் மாவட்டம் நீர்வளமும் தொழில்வளமும் கலைவளமும் நிறைந்த மாவட்டமாகும். Kancheepuramஇம்மாவட்டத்திற்கு காஞ்சிபுரம் நகரம் தலைநகராய் விளங்கி வருகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் காஞ்சி நகரம் கச்சி என்றும் கச்சிப்பேடு என்றும் வழங்கி வந்தது. சங்கக்காலத்தில் புகழ் பெற்றுத் திகழ்ந்த காஞ்சியையே பல்லவர்கள் தங்களின் தலைநகராய்க் கொண்டு ஆண்டனர். பல்லவர்கள் காஞ்சியைப் பல்லவேந்திரபுரி என்றழைத்தனர். இவர்கள் காலத்தில் பனைமலை தலகிரீஸ்வரர் கோயில், மாமல்லபுரக் கடற்கரைக் கோயில், காஞ்சி கைலாசநாதர் கோயில் ஆகியன கட்டப்பட்டன. பல்லவ அரசு கி.பி. 949க்குப் பிறகு நிலைகுலைந்தது. காஞ்சியை இராட்டிரகூட மன்னன் கைப்பற்றி ஆண்டான். பின்னர் இம்மாவட்டம் சோழநாட்டின் ஒரு பகுதியாயிற்று. சோழர் காலத்தில் இதற்குத் தொண்டைமண்டலம் என்று பெயரிடப் பட்டது.

சோழர்களின் ஆட்சி 13-ஆம் நூற்றாண்டின் மத்தியில் வீழ்ச்சியுறவே, இப்பகுதியை காகாதியர் தம் வசப்படுத்தினார். பின்பு கிருஷ்ணதேவராயர் காலத்தில் பேரரசாகத் திகழ்ந்த விஜயநகர ராஜ்ஜியத்தில் 1393 இல் காஞ்சிபுரம் மாவட்டம் இணைக்கப்பட்டது. விஜயநகரப் பேரரசு முகமதிய மன்னர்களால் 1565 இல் வீழ்ச்சியுற்றது. 1639இல் மூன்றாம் ஸ்ரீரங்கராயர் எனும் அரசப் பிரதிநிதியினால் இம்மாவட்டம் சீர்பெற்றுத் திகழ்ந்தது. இவரிடமிருந்து ஆங்கிலேயர் சென்னையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டுள்ள இடத்தை மானியமாகப் பெற்றனர். பிறகு கோல்கொண்டா சுல்தான்கள் தென்கிழக்கு இந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதும் காஞ்சிபுரமும் அவர்கள் வசமாயிற்று.

1687 இல் கோல் கொண்டாவை முகலாயர் கைப்பற்றியதும் காஞ்சிபுரமும் கர்நாடகமும் முகலாயப் பேரரசின் வசமாயின. 18 ஆம் நூற்றாண்டில் ஆதிக்கவெறி கொண்டு ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் மோதியப் போர்களால் செங்கற்பட்டும் காஞ்சிபுரமும் பலத்தத் தாக்குதல்களுக்கு இலக்காயின. பிரெஞ்சுக்காரர்கள் தோல்வியுற்று, ஆங்கிலேயர்கள் தம் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். ஆங்கிலேயர்கள் தமக்குச் செய்த சேவை காரணமாய் ஆற்காட்டு நவாப் மகமதலி 1763 இல் காஞ்சிபுரம் மாவட்டத்தை அவர்களுக்கு நிரந்தரமாக வழங்கினார். ஆங்கிலேயர் ஆட்சியும் 1947இல் முடிவுற்றது.

எல்லைகள் :

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வடக்கில் திருவள்ளூர் மாவட்டமும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் விழுப்புரம் மாவட்டமும், மேற்கில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களும் எல்லைகளாக உள்ளன. தலைநகர் காஞ்சிபுரத்தின் பரப்பளவு 11.65 ச.கிமீ ஆகும்.

வழிபாட்டுத்தலங்கள் :


காஞ்சி கைலாசநாதர் கோவில், வைகுந்தப் பெருமாள் கோவில், ஏகாம்பரேஸ்வர் கோவில், வரதராஜப் பெருமாள் கோவில், காமச்சியம்மன் கோவில், குமரக்கோட்டம் ஆகிய கோயில்கள், அச்சிறுப்பாக்கம், குன்றத்தூர், திருவிடைச்சுரம், திருப்போரூர், திருமாற்பேறு, திருவான்மியூர், திருக்கழுக்குன்றம், திருமேற்றளி, திருப்பெரும்புதூர் ஆகிய இடங்களில் உள்ள கோயில்கள், மகாபலிபுரம் குடைவரைக் கோயில்கள், மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம்.

Kailasanathar Templeகைலாசநாதர் கோயில் :

இந்த சிவன் கோயிலை 7 ஆம் நூற்றாண்டில் ராயசிம்ம பல்லவன் கட்டினான். பிறகு 8-ஆம் நூற்றாண்டில் கோயிலின் முகப்பு மூன்றாம் மகேந்திர வர்மனால் கட்டப் பட்டது. இது ஆரம்பகால திராவிட கட்டிடக் கலையின் புதுமையும் எளிமையும் பிரதிபலிக்கும் கோயிலாகும். இதன் கட்டிடக்கலை மகாபலிபுரக் கோயில்களை ஒத்திருக்கிறது. பல நடன மாந்தர் நடுவே சிவனும் பார்வதியும் ஆடும் போட்டி நடனச் சிற்பங்கள் காணத் தக்கவை. இக்கோயிலின் எதிரே இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை அலுவலகம் அமைந்திருக்கிறது.

வைகுந்தப் பெருமாள் கோவில் :

இந்த விஷ்ணு ஆலயம் நல்ல எழிலமைப்பைக் கொண்ட வைணவக் கோயிலாகும். கி.பி.674 இலிருந்து கி.பி. 800 வரையிலுமான காலத்தில் பரமேஸ்வர பல்லவனாலும், இரண்டாம் நந்தி வர்மனாலும் கட்டப்பட்டக் கோயிலாகும் இது. கைலாச நாத கோயில் கட்டியப் பின்னரே இது கட்டி முடிக்கப்பட்டது. பிற்கால கோயில்களில் ஆயிரங்கால் மண்டபம் உருவாக, இக்கோயிலின் சிங்கமுகத் தூண்களது வடிவமைப்பே தூண்டுகோலாய் அமைந்தது.

ஏகாம்பரேஸ்வர் கோவில் :Ekambaresvarar

இது சிவன் கோயிலாகும். இது காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களிலேயே பெரிய கோயிலாகும். 9 ஹெக்டேர் நிலப்பரப்பில் இது அமைந்துள்ளது. இதன் கோபுரத்தின் உயரம் 59மீ (192 அடி). பல்லவர்களும், அவர்களை அடுத்து சோழர்களும் இக்கோயிலைக் கட்டி முடித்தனர். இக்கோயிலைச் சுற்றி உயர்ந்துள்ள கல் மதில்சுவரை விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் 1509-இல் கட்டினார். கோயிலின் உள்ளே 5 தனித்தனி பிரகாரங்களும், ஆயிரங்கால் மண்டபமும் உள்ளன. ஏக அமர நாதர் (மாமரக் கடவுள்) என்பதே ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயராக வழங்குகிறது. இங்குள்ள மாமரத்தின் நான்கு கிளைகளும் நான்கு வேதங்களைக் குறிப்பதாகும். தலவிருட்சமான இந்த மாமரத்தின் வயது 3500 ஆண்டுகள் ஆகும்.

வரதராஜப் பெருமாள் கோயில் :

காஞ்சியில் விஷ்ணுவுக்கு அர்பணிக்கப்பட்ட வைணவத் திருக்கோயில்களில் மிகச் சிறப்பு கொண்டது இக்கோயில். Varatharaja perumalஇது ஏறக்குறைய 23 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இக்கோயில் விஜயநகரப் அரசர்களால் கட்டப்பட்டதாகும். ஐந்து பிரகாரங்களும், இருபெரும் கோபுரங்களும் உள்ளன. நாற்பக்கமும் உயர்ந்தெழும்பிய மதிற்சுவர்களும் ஆயிரங்கால் மண்டபமும் இருக்கின்றன. முதற்பிரகாரத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபம் கலையழகுடன் கண்கவர் அமைப்பைக் கொண்டதாகும். ஒவ்வொருத் துணிலும் தேர்ந்தச் சிற்பிகளின் கைவண்ணம் மிளிர்கிறது. நான்கு மூலைகளிலும் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட சங்கிலிக் கோர்வை தொழில் நுட்பத்துடன் வியத்தகு முறையில் அமைந்துள்ளன. அன்னப்பறவை மற்றும் கிளியுடன் காதற்கடவுளும் அவரின் துணைவியும் காட்சியளிக்கும் சிற்பம் காணத்தக்கது. இம்மண்டபத்தைச் சார்ந்த ஆனந்த தீர்த்த குளம் உள்ளது. இக்குளத்தின் நடுவே ஒரு நீராழி மண்டபமும் அத்திவரதர் மண்டபமும் அமைந்துள்ளன. Kamadchi amman

காமாட்சியம்மன் கோவில் :

பார்வதிக்கு (காமாட்சி) அர்ப்பணிக்கப்பட்ட இச்சிறு கோவில் 14-ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. வடிவில் சிறியதென்றாலும் இக்கோவில் இந்தியா முழுவதும் பிரசித்திப் பெற்றது. இந்தியாவில் சக்தியை வழிபடும் மூன்று இடங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. மற்ற இடங்கள் மதுரையும், வாரணாசியும் ஆகும். ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி-மார்ச் மாதத்தில் 9-ஆம் பிறை நாளில் இங்கு தேர்த்திருவிழா நடைபெறுகிறது.

Kumara koddamகுமரக்கோட்டம் :

கந்தபுராணம் இயற்றிய கச்சியப்ப சிவாச்சாரியார் வழிபட்டு அருள் பெற்ற இடம். காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் உள்ளது. காஞ்சிபுரத்தில் எங்கு சென்றாலும் கோயில்கள் உள்ளன. இந்தியாவிலேயே கோயில்கள் நிறைந்த நகரம் இதுவே ஆகும். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் வெள்ளித் தேர்த் திருவிழாவும், மாவடி சேவை, கருடச் சேவை விழாக்களும் மிகச் சிறப்புடையன.

அச்சிறுபாக்கம் :

இது சிவன் கோயில். பாண்டிய அரசன் ஒருவன் கங்கையின் மணலை வண்டியில் கொண்டு வந்தபோது, இவ்வூர் அடைந்ததும் வண்டி மேற்கொண்டு செல்ல முடிய வில்லை. அச்சு முறிந்தது. அப்போது அசரீரி கூறிய மொழியைக் கேட்டு, பாண்டியன் இக்கோயில் திருப்பணியைச் செய்து முடித்தான் என்பது வரலாறு. இவ்வாலயத்தில் இரண்டு கருவறைகள் உள்ளன. கிழக்கில் பெரிய கோபுரம், கோபுர வாயிலுக்கு அப்பால் பானுதீர்த்தம், கோபுரவாயிலுக்கு நேரே இல்லாமல் கொடிமரமும் நந்தியும் சற்று வடக்கே தள்ளி அமைந்துள்ளன. கோபுரவாயிலுக்கு நேராக உமையாட்சி நாதர் என்னும் சிவலிங்கமும், மெல்லியலாள் என்னும் அம்மையும் இருக்கின்றனர். இவை பாண்டிய மன்னரால் நிறுவப்பட்டவை. இக்கோயில் சென்னை-விழுப்புரம் இருப்புப்பாதையில் சென்னையிலிருந்து தெற்கே 90கி.மீ. தொலைவில் உள்ளது.

திருப்போரூர்:

இக்கோயில் சிதம்பர அடிகள் இயற்றிய 'திருப்போரூர் சந்நிதி முறை' என்னும் நூலால் பாரட்டப்படுகிறது. சிதம்பர அடிகளாலும், அவருக்குப் பின் வந்த அடியார்களாலும் வளர்க்கப் பெற்ற கோயில். சென்னைக்குத் தெற்கே 43 கி.மீ. தொலைவில் உள்ளது.

குன்றத்தூர் :


சேக்கிழாரடிகள் பிறந்த ஊர். அவர் அமைத்த சிவன் கோயிலும் இங்குள்ளது. திருநாகேச்சுவரம் என்ற பெயரோடு திகழும் இவ்வூர் மலைமேல் முருகப் பெருமான் விளங்குகிறார். சென்னைக்குத் தென்மேற்கில் 22 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குக் கண்டெடுத்த புதைப்பொருள்களால் இது நாகரிகம் பெற்றிருந்த ஊர் என்பது தெரிகிறது.

திருமாற்பேறு :

சிவன் கோயில் உள்ள இத்திருவூரில் நொடிப் பொழுது தங்கு வோருக்கும் முக்தி கிடைக்கும். கூப்பிய கரங்களுடன் திருமால் இறைவர் திரு முன்பு காணப்படுகிறார். திருமாற்பேறு இரயில் நிலையம் பள்ளூர் என்னும் ஊரில் இருக்கின்றது. காஞ்சிக்கு வடமேற்கில் 11 கி.மீ. தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. 100 மலர்களால் சிவனை அர்ச்சிக்கத் திருமால் முயலுகையில் ஒரு மலர் குறைந்தபோது, தம் கண்ணையே மலராகப் பிடுங்கி 100வது மலராக்கி அளித்து வழிபட்டாராம். இதைச் சித்திரிக்கும் சிற்பமும் அங்குள்ளது.

திருவான்மியூர் :

வான்மீக முனிவர் பூசித்த தலம். இலிங்கம் சற்று வடபுறம் சாய்ந்துள்ளது. பசுவானது பால் சொரிந்து அபிடேகம் செய்த பொழுது அதன் காற்குளம்பு பட்ட வடு காணப்படுகிறது. மேலை கோபுர வாயியில் வான்மீகருக்குத் தியாகராசர் ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் நடனக் காட்சியளிக்கிறார். அந்த நடனம் கோயிலைச் சுற்றிலும், வீதிகளிலும் நடைபெறுகிறது. வடமேற்கில் வான்மீகர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வடக்கே பாம்பன் குமரகுருதாச அடிகள் கற்குகையும் திருமடமும் உள்ளன. இத் திருத்தலம் சென்னை மயிலாப்பூருக்குத் தெற்கில் கடற்கரையில், 5கி.மீ. தொலைவில் உள்ளது.

திருக்கழுக்குன்றம் :


கழுகுகள் வழிபட்டுப் பேறு பெற்ற காரணத்தால் கழுகுக் குன்றம் எனப் பெயர் பெற்று, பின்னர் கழுக்குன்றம் என்றானது. வடநாட்டினர் இவ்வூரைப் 'பட்சி தீர்த்தம்' என்பர். 'கதலிவனம்' என்ற மற்றொரு பெயரும் இவ்வூருக்குண்டு. இந்நாளிலும், இம்மலைமேல் இரண்டு கழுகுகள் வந்து நண்பகலில் குருக்கள் அளிக்கும் நெய், சக்கரைப் பொங்கலை உண்டு செல்கின்றன. இங்குள்ள குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு ஒன்று பிறக்கிறது. இப்பொழுதும் அப்படி நடைபெறுகின்றது. நெடுங்காலமாக அவ்வாறு பிறந்த சங்குகளையெல்லாம் சேர்த்து கோயிலில் வைத்துள்ளனர். இம்மலையைச் சுற்றி வர 3 கி.மீ. தொலைவுப் பாதை உள்ளது. சிற்பச் சிறப்பு வாய்ந்த மாமல்லபுரம் என்னும் கடற்கரை நகரம் இங்கிருந்து 14 1/2 கி.மீ. தொலைவில் உள்ளது. திருக்கழுக்குன்றம் செங்கற்பட்டு இரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கில் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. குன்றுகளில் கல்லுடைத்து வெளிநாட்டுக்குக் கல் ஏற்றுமதி செய்கின்றனர்.  
திருமாகறல் :
இராசேந்திர சோழ மன்னன் துரத்திய உடும்பு இறைவன் திருமேனியில் காணப் படுகின்றது. உடும்பு தழுவிக் கொண்டிருப்பது போன்ற காட்சி அமைந்துள்ளது. இங்கு திங்கட்கிழமை வழிபாடு சிறப்புடையது. மக்கட்பேறு வேண்டுபவர் இந்நாளில் வந்து வழிபடுவர். காஞ்சிபுரம் இரயில் நிலையத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது.

திருக்குரங்கணின் முட்டம் :

குரங்கும் அணிலும் காக்கையும் பூசித்த ஊர் என்பதால் இப்பெயர் வந்தது. இக் கோயில் வாயிலின் வடப்பக்கமும் தென்பக்கமும் குரங்கு, அணில், காக்கை இவை வழிபட்ட முறைகளை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. காக்கை மடு என்பது கோயிலைச் சுற்றியுள்ளது. காக்கை, மூக்கால் கீறிய மடுவாதலால் இப்பெயர் பெற்றது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்திற்குத் தெற்கில் 10கி.மீ. தொலைவிலும், தூசி என்னும் ஊருக்குத் தென்கிழக்கில் 2 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

இளையனார் வேலூர் :

இக்கோயிலில் வேல் கருவறையுள் நிலைநாட்டி வணங்கப்படுகிறது. முருகப்பெருமான் இளமைக் கோலத்துடன் திகழ்கிறார். காஞ்சி புரத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ளது.

திருப்பெரும்புதூர் கோயில் :

இவ்வூரிலுள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயில் மிகப் பிரசித்தமானது. இதன் மண்டபங்கள் விஜயநகர அரசர்களால் கட்டப்பட்டவை. இதன் வைணவத்தைப் பரப்பிய இராமனுஜர் கோயில் உள்ளது. இராமனுஜர் பிறந்த இடமும் இதுதான். இக்கோயிலின் சந்நிதிக் கதவுகள் வெள்ளித் தகடுகளால் ஆனவை. மேலும் இங்கு ஸ்ரீ ஆண்டாள், சக்கரவர்த்தித் திருமகன், வேணுகோபாலன், நம்மாழ்வார் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. இது சைவர்களும் வைணவர்களும் வழிபடும் தலமாகும். இங்குள்ள சிவன் கோயில் பழமையானது. நந்திவர்ம பல்லவன் அமைத்த சிங்கத் தூணும், அவனது உருவச்சிலையும் இக்கோயில் மண்டபத்தில் உள்ளன. முன்னாள் பிரதமர் ராஜஂவ் காந்தியின் நினைவிடம் இங்குள்ளது.

மேல்மருவதூர் ஆதிபராசக்தி :

செங்கற்பட்டுக்கும் அச்சிறுவாக்கத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. தவத்திரு பங்காரு அடிகளார் இக்கோயிலை உருவாக்கினார். இவர் பல ஆன்மீக மாநாடுகளை நடத்தியுள்ளார். இக்கோயிலில் குறிப்பாக பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. பெண்பக்தர்களும் ஆண் பக்தர்களும் சிவப்பாடை அணிந்து சக்தியை வழிபடுகின்றனர். தமிழ்நாட்டில் வேறெங்கும் இல்லாத முறையில் இங்கு வரும் ஒவ்வொருவருமே அர்ச்சராக இருந்து வழிபடலாம். தமிழ்நாட்டின் பலபாகங்களிலிருந்து கால்நடையாகவே இங்கு வந்து சக்தியை வழிபடுகின்றனர். இங்கு ஆடிபூரத்திருவிழா வெகுச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு ஒரு பொறியியல் கல்லூரி ஆதிபராசக்தி கோயில் நிர்வாகத்தாரால் நடத்தப்படுகிறது.

கல்வி நிறுவனங்கள் :


காஞ்சிபுரம் மாவட்டம் கல்வி வளத்திற்கு புகழ் பெற்றது. உயர்நிலைப் பள்ளிகளும், கலைக்கல்லூரிகளும், ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகளும், வடமொழிக் கல்லூரிகளும், தொழில் நுட்ப கல்லூரிகளும் உள்ளன. மகாபலிபுரத்தில் சிற்பக் கலைக் கல்லூரி உள்ளது. இசை, நடனம் கற்பிக்க திருவான்மியூர் கடற்கரையோரம் கலாஷேத்திரம் அமைந்துள்ளது. மேலை நாடுகளிலிருந்தும், கீழை நாடுகளிலிருந்தும் மாணவ மாணவியர் இங்கு வந்து பயில்கின்றனர். தாம்பரத்திலுள்ள சிவானந்தா அனாதை இல்லத்தில பத்து வயத்திற்கும் குறைந்த அனாதைச் சிறுவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டு தொழிற்கல்வி பெறுகின்றனர். காஞ்சிபுரத்தில பக்தவச்சலம் பாலிடெக்னிக்கும், குரோம்பேட்டையில் சென்னைத் தொழில்நுட்ப நிறுவனமும், சிறுதொழில் கல்வி நிலையங்கள் பலவும் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளன.

சுற்றுலா தலங்கள் :

மாமல்லபுரம், காஞ்சிபுரம், வேடந்தாங்கல், கரிக்கிலி, வி.ஜி.பி. தங்கக் கடற்கரை, திருக்கழுக்குன்றம், வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா, காஞ்சிபுரம் அண்ணா நினைவகம் ஆகியவை இம்மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களாகும்.

முக்கிய ஊர்கள் :
மகாபலிபுரம் :


மாமல்லபுரம் என்ற மகாபலிபுரம் வரலாற்று சிறப்புமிக்க ஊராகும். பல்லவர் காலத்தில் இது முக்கிய வணிகத் Mahabalipuramதுறைமுகமாக விளங்கியது. இங்குள்ள குடைவரைக் கோயில்களையும் சிற்பங்களையும் காண சுற்றுலாப் பயணிகள் விரும்பி வருகின்றனர். பலவித சிற்பக் கலைச் செல்வங்களை இங்குள்ள சிற்பக் கலைஞர்கள் உருவாக்கித் தருகிறார்கள். சிற்பக்கலைப் பயில தனியே ஒரு கல்லூரியும் இங்குள்ளது. இவ்வூர் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்தது. மகாபலிபுரம் எனும் பழையத் துறைமுகத்தை 7-ஆம் நூற்றாண்டில் பல்லவப் பேரரசன் மகேந்திரவர்மன் உருவாக்கினான். என்றாலும், முதலாம் நரசிம்மவர்ம மாமல்லன் நினைவாக இக்கடற்கரை நகரம் மாமல்லபுரம் என்றழைக்கப்பட்டது. இதுவே இப்போது மருவி மகாபலிபுரம் என்று அழைக்கப்பட்டது. இங்கே கடற்கரையில் ஏழு கோயில்கள் இருந்ததாக ஐரோப்பிய மாலுமிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்போது கரையில் ஒரே ஒரு கற்கோயில்தான் இருக்கிறது. மகாபலிபுரத்தில் பல அபூர்வச் சிற்பங்கள் கலையழகு மிளிரக் காணப்படுகின்றன.

மகாபலிபுரத்தை காண வருபவர்கள் முதல்முதல் பார்ப்பவை ஒரு பெரும்பாறையும், அதில் வடிக்கப்பட்டுள்ள அமரச் சிற்பங்களுமே இந்தச் சிற்பத்தை அர்ஜுனன் தவம் என்கிறார்கள். தொண்ணுறு அடி நீளமும் முப்பதடி உயரமும் உள்ள இந்தப் பாறை மதிலில் நூற்றைம்பது சிற்பங்கள் மிக அழகாகச் செதுக்கப் பெற்றிருக்கின்றன. தெய்வங்கள், தேவர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள், நாகராஜன், நாககன்னிகை முதலியவர்களையும், யானை, சிங்கம், சிறுத்தை, குரங்கு, பூனை, பறவைகள் இவற்றையும்உயிர்ச்சிற்பங்களாகச் செதுக்கியிருக்கிறார்கள். இந்தப்பாறையின் நடுவில் இயற்கையிலேயே அமைந்த இடைவெளி ஒன்று இருக்கிறது. இது இரண்டு பாகமாகப் பாறையைப் பிரிக்கிறது. வடக்கு பாகத்தில் சிவப்பிரானையும், தவக்கோலத்தில நிற்கும் ஒருவரது சிற்ப உருவத்தையும், கீழே சிறு விஷ்ணுகோயில் ஒன்று இருப்பதையும் காணலாம். இடது பாகத்தில் உயிருள்ளவை போலவே தேவர்களும் தேவியரும் சிலையுருவில் பொறிக்கப் பெற்றிருப்பதைப் பார்க்கலாம்.

மான் ஒன்று தன் பின்னங்காலால் முகத்தை சொறிந்து கொள்ளும் காட்சி, துறவி மார்பு எலும்புத் தெரியத் தவம் செய்யும் கோலம், வேறு சில பிராணிகளின் அழகு, யானைகளின் கம்பீரத் தோற்றம் இவையெலாம் பார்ப்பவரின் மனம் கவரும் சிற்ப காட்சிகள். பஞ்சபாண்டவர் மண்டபம் சிங்கச் சிற்பங்கள் தலைப்பகுதியில் அமைந்த ஆறு தூண்களோடு காட்சியளிக்கிறது. அடுத்து பசுமண்டபம் எனப்படும் கிருஷ்ண மண்டபம்.

இநதிரன் கோபங்கொண்டு கடும்மழை பொழியச் செய்து ஆயர்பாடியில் இருப்பவர்களுக்குத் தொல்லை தருகிறான். அதைத் தடுக்க கிருஷ்ண பிரான் கோவர்த்தன கிரியைக் குடையாய்ப் பிடித்த காட்சியை இதன் சுவரில் வடித்திருக்கிறார்கள். இதன் அடியில் கோபாலர்கள் அமைதியாகத் தங்கள் அலுவல்களைக் கவனித்து வருகிறார்கள். ஒருவன் பால் கறக்கும் காட்சி விநோதமாயிருக்கிறது.

பசு தன் கன்றை நக்கிக் கொடுப்பது தத்ரூபமாய் இருக்கிறது. குட்டியுடன் இருக்கும் பெண்குரங்குக்கு ஆண்குரங்கு பேன் எடுக்கும் சிலை அமைப்பு கண்ணைக் கவர்கிறது. குன்றின் மேல் ஏறும் போது ஒரே பாறையில் இரண்டு அடுக்குகளுடன், மேலே ஒன்பது கலசங்களுடன் செதுக்கப்ட்ட கணேசரதம் காணப்படுகிறது. குன்றின் வடகோடியில் யானை, மான், குரங்கு, மயில் முதலிய சிற்பங்களைக் காணலாம்.

அடுத்து வடமேற்கில் த்ரிமூர்த்தி மண்டபம் உள்ளது. இதில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவருக்கும் மூன்று கர்ப்பகிருகங்கள் அமைந்துள்ளன. இவற்றை அடுத்து ஒரு பாறையில் துர்க்கை ஓர் எருமையின் தலையில் நிற்கும் காட்சி செதுக்கப்பட்டிருக்கிறது. த்ரிமூர்த்தி மண்டபத்திலிருந்து சிறிது தூரத்தில் கோடிக்கல் மண்டபம் இருக்கிறது. இதில் பெண் துவராபாலிகைகள் கழுத்தில் சிறுமாலையுடனும், வில்லைத் தாங்கியபடியும் கம்பீரமாக நிற்கிறார்கள்.

சற்று தெற்கே போனால் வராக குகை மண்டபத்தைக் காணலாம். இதன் உட்பக்கச் சுவர்பாறையின் இடதுபுறம் வராக அவதாரச் சிற்பத்தை வடித்திருக்கிறார்கள். பூமியைக் கவர்ந்துச் சென்ற அரக்கன் கைகூப்பிக் கிடக்கிறான். திருமால் வராக வடிவம் எடுத்து லட்சுமியைத் தாங்கி நிற்கிறார். மேலே தேவர்கள் வணங்குகிறார்கள். இதற்கு எதிர்சுவரில் மகாபலியின் கர்வத்தை அடக்கி உலகளந்த திருமாலின் சிற்பம் இருக்கிறது.

விண்ணை அளப்பது போல் ஒரு கால் தூக்கியிருக்கிறது. கீழே மகாபலி வியப்பும் அச்சமும் தோன்ற அமர்ந்திருக்கிறான். அடுத்து மகிஷாசுரமர்த்தினியாகச் சிங்கத்தின் மேல் ஏறி எருமைத் தலை அரக்கனோடு போர்புரியும் காட்சி அமைந்திருக்கிறது. இதற்கு எதிராகச் சாந்தமாய் ஐந்துத்தலை நாகத்தில யோக நித்திரை செய்கிறார் திருமால். திருமாலுக்கு எதிரே அடிபட்ட இருவர். இப்படி இந்த ஒரு மண்டபத்திலேயே ரெளத்திரத்தை காட்டும் சிற்பத்துக்கு எதிரில் சாந்தமே உரு எடுத்த கோலத்தையும் காணலாம்.

சற்று தெற்கே போனால் இராமானுஜ மண்டபம் இருக்கிறது. ஆனால் இது இராமானுஜரின் காலத்துக்கு நானுறு ஆண்டுகளுக்கு முன் அமைத்தது. இதில் உள்ளத் தூண்களை நிமிர்ந்து அமர்ந்த சிங்க உருவங்கள் தாங்குகின்றன. இதையடுத்து குன்றின்மேல் ஏறிப்போனால் இடிந்த கோபுரம் போன்ற ஒரு கட்டிடம் இருக்கிறது. இது முன்பு கலங்கரை விளக்கமாகப் பயன்பட்டது. இது ஓலக்கணீசர் என்ற பெயருள்ள சிவப்பெருமான் கோயில். இதையடுத்து முற்றுபெறாத ராயகோபுரம் ஒன்று இருக்கிறது. இனி கீழிறங்கி நடந்தால் குன்றுக்குத் தெற்கே பாண்டவரதங்கள் எனப்படும் ஐந்து ரதங்கள் உள்ள இடத்துக்குப் போய்ச்சேரலாம். இவற்றை நெருங்கும் போதே சீறி நிற்பது போன்ற கல் சிங்கம் ஒன்றும், அதன் பின்னால் கம்பீரமான யானை ஒன்றும் காண்போர் கண்ணைக் கவரும். இந்த ஐந்து ரதக் கோயில்களும் ஒரே பாறையில் செதுக்கியவை.

குடிசைபோல் அமைந்திருக்கும் சிறிய கோயில் திரெளபதி ரதமாகும். இதன் அடிப்புற மேடையைச் சிங்கங்களும் யானைகளும் தாங்குவது போல் செதுக்கப்ட்டிருக்கிறது. கர்ப்பக்கிருகத்தின் உள்பகுதியில் துர்க்கை உருவம் பின் சுவரிலே புடைப்புச் சிற்பமாக அமைந்திருப்பதை காணலாம். தாமரை மலரின் மேல் நிற்கும் கோலம்; தலையில் கரண்ட மகுடம்; காலடியில் இரண்டு மனிதர்கள் மண்டியிட்டிருக்கிறார்கள்; ஒருவன் தலையை அறுத்திடும் காட்சி; வெளிப்புறம் இரண்டு துவாரபாலிகைகள் வில் பிடித்து நிற்கிறார்கள். துர்க்கையினுடைய இந்த விமானத்தின் முன்னால் சிங்க உருவம் நிற்கும் விதமாய் செதுக்கப்பட்டுள்ளது.

திரெளபதி ரதத்திற்கு தெற்கே உள்ள கோயில் அர்ஜுனரதம். பழங்காலத்தில் செங்கல்லும் சுண்ணாம்பும் கொண்டு செய்த கோயில்களின் அமைப்பையொட்டி இரண்டு நிலை மாடத்துடன் செதுக்கப்பெற்றிருக்கிறது. முன்புறத்து அர்த்த மண்டபத்தை சிங்கத் தூண்கள் தாங்கிநிற்கின்றன. இதன் வெளிப்புறச் சுவரில் அழகான தூண்களும் நேர்த்தியான புடைப்புச் சிற்பங்களும் அமைந்திருப்பதைக் காணலாம்.

முன்பாகம் தவிர மூன்று புறச் சுவர் ஒவ்வொன்றிலும் ஐந்து கோட்டங்களாகப் பிரித்து ஒவ்வொரு கோட்டத்திலும் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப் பெற்றுள்ளன. வடபுறம் மகா விஷ்ணுவையும் அவரருகில் கருடாழ்வானையும் பார்க்கலாம். இதையடுத்து ஓர் அரசனும் அரசியும் நிற்கிறார்கள். கிழக்குப்புறச் சுவரின் நடுவில் யானையின் மேல் அமர்ந்திருக்கும் இந்திரனையும், தெற்குச் சுவரில் ரிஷபத்துடன் சிவபிரானையும் காணலாம். அடுத்து நீண்ட சதுர வடிவில் அமைந்த கோயிலைப் பீமரதம் என்கிறார்கள். படகை கவிழ்த்து வைத்த மாதிரி மேல் பகுதி அமைப்பும், நாலுபக்கமும் சிங்கத் தூண்களும் தாழ்வாரங்களும் கொண்டது இது. இது திருமாலுக்காக ஏற்பட்ட ஆலயம்.

தெற்கு கோடியில் நாற்பதடி உயரமுள்ள கோயில் தர்மராஜ ரதமாகும். இது மூன்று அடுக்கு கொண்டது. கீழ்ப்பகுதியில் கர்ப்பகிருகம் செதுக்கப் பெறவில்லை. ஆனால் அதற்கு மேல் ஒன்றன் மீது ஒன்றாக இரண்டு கர்ப்பகிருகங்களும், சுற்றிலும் பிரகாரங்களும், நாற்பத்திரண்டு அழகிய சிற்பங்களும் இருப்பதைக் காணலாம். இரண்டாவது கர்ப்ப கிருகத்திலிருந்து மேலே போக படிகள் செதுக்கப் பெற்றிருக்கின்றன. இவற்றில் பல சிவபிரானின் திருவுருவங்கள்.

கிழக்குக் கோடியில் அவரே அர்த்த நாரீசுவரராகவும் விளங்குகிறார். அவரருகில் மாமல்லன் நரசிம்மனின் சிற்பம் ஒன்றும் இருக்கிறது. இப்படி சிறப்பான அமைப்புள்ள கற்கோயிலை வேறு எங்கும் காண முடியாது. மேல்பகுதி சிவபிரானுக்கும், நடுபகுதி விஷ்ணுவுக்கும் கீழ்ப்பகுதி பிரம்மாவுக்குமாக ஏற்பட்ட திமூர்த்தி கோயில் இது. மேற்கண்ட நான்கு ரதக் கோயில்களுக்கும் முன்னால் உள்ள சிறுகோயில் சகதேவ ரதம்.

இதன் வெளிப்புறத்தில சிற்பங்களே இல்லை. இது எந்த தெய்வத்துக்காகவும் அமைக்கப் பெற்றதில்லை. இந்திரன் இங்கிருந்து மும்மூர்த்திகளை வணங்குவதாக கொண்டு அமைத்த கோயிலாக இது இருக்க வேண்டும். அவனது வாகனம் ஐராவதம் என்ற யானை. அதுவும் பின்னால் இருக்கிறது. இந்த விமானத்தின் அமைப்பும் யானையின் பின்புறத்தை ஒத்தது.

தமிழில் இந்த வகை கோயில் அமைப்பை துங்கானை மாடம் என்றும், வடமொழியில் கஜ ப்ருஷ்டம் என்றும் சொல்வார்கள். இனி இந்த ஊரில் வந்த வழியே திரும்பிச் சென்றால் பார்க்க வேண்டியது புகழ் பெற்ற கடற்கரைக் கோயில். அலைமோதும் கடற்கரையில் கருங்கல்லினால் முதல் முதலாகக் கட்டியது இந்தக் கோயில்.

அலைகள் அடிப்பதாலும், உப்பங்காற்று வீசுவதாலும் இந்தக் கோயில் பழுது பட்டிருந்தாலும், இதன் அழகு சிறிதும் குன்றவில்லை. உயரமான விமானமும் அருகிலே சிறிய விமானமும் இரண்டு கோயில்களுக்கு ஏற்பட்டவை.

கடலை நோக்கியுள்ள கோயிலில் பெரிய லிங்கம் ஒன்றும், சோமாஸ்கந்தர் உருவமும் இக்கோயில் சிவபெருமானுக்காக அமைத்தது என்பதைக் காட்டும். இந்தக் கோயில்களின் முன்பக்கமும் பின்பக்கமும் பெரிய பிரகாரங்கள் இருந்தன.

கிழக்கே இருந்ததைக் கடல் கொண்டுவிட்டது. மேற்கே இருந்த பிரகாரம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மணல் மேடாக இருந்தது. மணலைத் தோண்டி மறைந்திருந்த சிற்பங்களைக் கண்டெடுத்து பல இடங்களில் வைத்து, ரிஷபங்களை வரிசையாக அமைத்து அழகு படுத்தியிருக்கிறார்கள், அரசாங்கத்தார்.

பழமையான பாடல் பெற்ற விஷ்ணுகோயிலில் வழிபாடு இல்லாத குறையை நீக்க, ஊர்நடுவில் ஸ்தலசயனப் பெருமாள் கோயில் ஒன்று அமைத்திருக்கிறார்கள். விருப்பம் உள்வர்கள் இங்கே வழிபாடு செய்து திரும்பலாம். இங்கிருந்து வடக்கே மூன்று மைல் தொலைவில் சளுவன்குப்பம் என்றொரு கிராமம்இருக்கிறது. அங்கே கடற்கரை யோரம் விசித்திரமான குகை ஒன்றைப் பார்க்கலாம். இதன் நடுவே ஒரு சிறு அறையுடன் மேடை ஒன்றும், அதற்கு மேல் அழகிய சிங்கச் சிற்ப வரிசையும் செதுக்கப் பெற்றிருக்கின்றன. இந்த மேடையில் அமர்ந்து பாடினாலும் பேசினாலும் நன்றாக ஒலிக்கிறது. இது பிரசங்க மேடையாக இருந்திருக்க வேண்டும். சிங்கச் சிற்பம் அமைந்த இக்குகைக்கு புலிக்குகை என்று தவறான பெயர் வழங்கி வருகிறது. மகாபலிபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் முதலைப் பண்ணை இருக்கிறது. முதலைகளை இங்கு இனவிருத்தி செய்து வளர்க்கிறார்கள். எல்லா அளவிலும் முதலைகள் இங்கு இருக்கின்றன. புதுப்புது இன முதலைகளும் உள்ளன. மகாபலிபுரத்திலிருந்து சைக்கிளிலோ பஸ்சிலோ செல்லலாம்.
  
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:
Kancheepuram - காஞ்சிபுரம் - Tamilnadu Districts - தமிழக மாவட்டங்கள் - கோயில், உள்ளது, காஞ்சிபுரம், தொலைவில், இருக்கிறது, கோவில், இரண்டு, காணலாம், இக்கோயில், மண்டபம், அடுத்து, தெற்கே, அமைந்துள்ளது, காட்சி, கோயில்கள், பெருமாள், என்னும், அமைந்துள்ளன, சிற்பங்கள், இங்குள்ள, கோயிலாகும், நூற்றாண்டில், கொண்டு, காஞ்சி, ஒன்றும், மூன்று, காலத்தில், மகாபலிபுரம், மாவட்டம், திருக்கழுக்குன்றம், நிற்கும், திருமால், மாமல்லபுரம், செதுக்கப், செய்து, சிற்பம், அமைந்த, நான்கு, மண்டபமும், என்றும், ஆண்டுகளுக்கு, சுவரில், வடமேற்கில், இரயில், இந்தக், விஜயநகரப், சிங்கச், வடக்கே, பாறையில், கிருஷ்ண, பிரகாரங்களும், இங்குள்ளது, கொண்டது, சக்தியை, ஒருவன், பிறந்த, இவ்வூர், பெற்றிருக்கின்றன, என்பது, கைலாசநாதர், ஒவ்வொரு, புடைப்புச், பார்க்கலாம், இதையடுத்து, அமைத்த, பெற்றது, சிற்பக், இடங்களில், போன்ற, தெற்கில், சிங்கத், ஆதிபராசக்தி, திருவான்மியூர், திருமாற்பேறு, குரங்கு, காக்கை, மற்றும், வழிபாடு, திருப்போரூர், காஞ்சிபுரமும், நிற்கிறார்கள், இங்கிருந்து, கடற்கரை, ஆயிரங்கால், கல்லூரிகளும், இக்கோயிலின், கடற்கரையில், கல்லூரி, நாடுகளிலிருந்தும், மகாபலிபுரத்தில், இராமனுஜர், அதற்கு, கோடியில், ஏற்பட்ட, மாமல்லன், சிற்பத்தை, வேண்டும், வழிபடுகின்றனர், இல்லாத, விமானமும், முக்கிய, இப்போது, மகாபலிபுரத்திலிருந்து, என்கிறார்கள், சிற்பங்களும், இவற்றை, துர்க்கை, ரதமாகும், உருவம், த்ரிமூர்த்தி, விமானத்தின், இக்கோயிலில், சிற்பங்களைக், திரெளபதி, தலையில், காட்டும், அமைத்தது, உருவங்கள், இப்படி, பின்னால், போனால், இதற்கு, குன்றின், முன்னால், நடுவில், அவரருகில், பாகத்தில், யானையின், அமைப்பும், மனிதர்கள், சிங்கம், அமைக்கப், கோலம், எனப்படும், வடித்திருக்கிறார்கள், கண்ணைக், கோயில்களின், அர்த்த, கவரும், தூண்களும், தேவர்கள், சென்னை, வைகுந்தப், ஏகாம்பரேஸ்வர், வரதராஜப், வேலூர், விழுப்புரம், ஆங்கிலேயர்கள், மாவட்டமும், கிழக்கில், குமரக்கோட்டம், குன்றத்தூர், அமைந்திருக்கிறது, விஷ்ணு, காஞ்சிபுரத்தில், கோயிலின், பல்லவன், திருப்பெரும்புதூர், குடைவரைக், இந்தியா, ஆங்கிலேயர், வருகிறது, வழங்கி, வந்தது, நிறைந்த, வரலாறு, மக்கள், பெண்கள், திகழ்ந்த, பல்லவர்கள், பட்டது, விஜயநகர, மூன்றாம், இம்மாவட்டம், பின்னர், கடற்கரைக், மன்னன், நிலப்பரப்பில், சுற்றி, முன்பு, பூசித்த, வடபுறம், பொழுது, விளங்குகிறார், அடிகள், சென்னைக்குத், காணப்படுகிறது, கோயிலைச், தென்கிழக்கில், உடும்பு, இப்பெயர், நிலையத்திலிருந்து, கோயிலில், சுற்றிலும், கழுகுகள், சிதம்பர, கோபுரவாயிலுக்கு, தொழில், முறையில், காமாட்சியம்மன், இருக்கின்றன, அரசர்களால், மாமரத்தின், சிறப்பு, வடிவில், வழிபடும், பாண்டிய, கோபுரம், கோபுர, வெள்ளித், இயற்றிய, ஒன்றாக, நடைபெறுகிறது, தொலைவிலும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக