வெள்ளி, 14 ஜூன், 2013

சேலம் காவலாளி கொடூரமான முறையில் துண்டு துண்டாக வெட்டிக் கொலை

சேலம் காவலாளி கொடூரமான முறையில் துண்டு துண்டாக வெட்டிக் கொலை - கோ.ஜெயக்குமார்.

கட்டடப் பணியில் காவலாளியாக இருந்த வயதான ஒருவர் துண்டு துண்டாக வெட்டிப் படுகொலை.
ரவுடியாக வலம் வந்த இளைஞர் பட்டாளம்
செய்த கொடூரக் கொலையால் உறைந்து போயிக்கும் கிராமம்.
காவல்துறையின் மெத்தனப் போக்கே கொலைக்கு முக்கிய காரணம் என குற்றம் சாட்டும் கிராம மக்கள்
நவீன கால சினிமா காதநாயகர்களைப் போன்று நிஜ வாழ்க்கையிலும் வலம் வர நினைக்கிறது ஒரு  இளைஞர் கூட்டம்.
சினிமாவில் வரும்  காதநாயகன் போன்று, ரவுடியாக மாறுவதில் ஒருசில இளைஞர்களுக்கு அலாதிப் பிரியம் உண்டு.

ரவுடிகளுக்கு சினிமாவில் கொடுக்கப்படும் முக்கியத்துவம், தங்களுக்கும் கிடைக்கும் என்ற எண்ணம்  இந்த இளைஞர்களின் ஆழ்மனதில் உறுதியாக பதிந்து விடுகிறது.
முடிவு.
தங்கள் நிஜ வாழ்க்கையிலும் மாற்றங்களை கொண்டு வந்து விடுகின்றனர் சில இளைஞர்கள்.
ரவுடித்தனமாக அராஜப் போக்கில் ஈடுபடுவது, அப்பாவிகளை மிரட்டுவது. இப்படிப்பட்ட செயல்களை நாள்தோறும் அரங்கேற்றி அதில் தனி இன்பமும் இவர்கள் காணுகின்றனர்.
தாங்கள் செய்யும் ரவுடித்தனமாக செயல்களை பார்த்து பயப்படும் மக்களை இந்த இளைஞர்கள் கண்டு மகிழ்ச்சி அடைவதும் உண்டு.
இளைஞர்களின் இத்தகைய போக்குகளால் சில நேரங்களில் விபரீதங்களும் ஏற்படுவது உண்டு.
அப்படிப்பட்ட ஒரு விபரீத கொடூர சம்பவம் அண்மையில் சேலம் மாவட்டத்தில் நடந்து முடிந்தது.
ரவுடியாக மாற கனவுக் கண்டு, ஒரு கிராமத்தையே மிரட்டி வந்த இளைஞர் பட்டாளம் ஒன்று,  திருட்டு, கொள்ளை என பல சமூக விரோத செயல்களில்  ஈடுபட்டதுடன், தைரியமாக காவலாளி  ஒருவரை கொலை செய்து, அவரது உடலை துண்டம் துண்டமாக வெட்டி வீசி எரிந்துள்ளது. 
அதிர்ச்சி அளிக்கும் இந்த சம்பவத்தால் ஒரு கிராமமே உறைந்து போயிருக்கிறது.
வாருங்கள். ரவுடி இளைஞர் கும்பல் செய்த அந்த அக்கிரம கொலை சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்.
சேலம் அருகேயுள்ளது கன்னங்குறிச்சி கிராமம்.
தமிழகத்தின் பல  கிராமங்களைப் போன்று,  இங்குள்ள மக்களும் விவசாய கூலித் தொழிலாளிகள்.
ஒருசிலர், கட்டப்பணிகளிலும் கூலி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைதியான இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்தான் குழந்தா கவுண்டர். இவரது மனைவி சேவத்தா.
இந்த தம்பதிக்கு ஆறுமுகம், ஏழுமலை, கவுண்டர் என மூன்று ஆண் பிள்ளைகளும், ஜெயந்தி, செவுந்தி என்ற இரண்டு பிள்ளைகளும் உண்டு.
இவர்கள் அனைவரும் சிறுசிறு கூலித் தொழில்களை செய்து கவுரவமான ஒரு வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.                                                   
அமைதியான இந்த கள்ளங்குறிச்சி கிராமத்தையொட்டி உள்ள ஏரிப்பகுதியில் பொறியாளர் ஒருவர் பெரிய மாளிகையை கட்டி வருகிறார்.
இதற்காக இரவும் பகலும் பணிகள் அங்கு மூம்முரமாக நடைபெற்று வருகின்றன.
இப்படி மூம்முரமாக நடைபெற்று வந்த இந்த கட்டடப் பணியில் குழந்தா கவுண்டரும்,  இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
பொறியாளர் தமது மாளிகை கட்டப் பணிக்காக வாங்கி வைக்கும் சிமெண்ட் மூட்டைகள், இரும்பு கம்பிகள் உள்ளிட்டவை திருடு போகாமல் இருக்க, குழந்தா கவுண்டரை காவலாளியாக நியமித்தார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு ஏற்கனவே அறுவைச் சிகிச்சை முடித்துக் கொண்ட குழந்தா கவுண்டர், மெல்ல மெல்ல நடக்கும் பழக்கம் உள்ளவர்.
இருந்தும், இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வந்த கவுண்டர், பொறியாளர் கட்டப் பணிக்காக வாங்கி வைத்துச் சென்ற சிமெண்ட், இரும்பு கம்பி உள்ளிட்ட பொருட்களை கவனத்துடன் பாதுகாத்தே வந்தார்.
இந்த நிலையில்தான், கன்னங்குறிச்சி கிராமத்தில் இளைஞர் கும்பல் ஒன்று, தங்களை ரவுடியாக காட்டிக் கொண்டு மக்களை அடிக்கடி மிரட்டி வந்தனர்.
கைகளில் கத்தி வைத்துக் கொண்டு ரவுடித்தனமாக செயல்களை அரங்கேற்றி, அதன் மூலம் அலாதி இன்பமும் கண்டு வந்தது  இந்த இளைஞர் பட்டாளம்.
இளைஞர்களின் இந்த ரவுடி ராஜ்ஜியத்தை கன்னங்குறிச்சி காவல்நிலையம் கண்டுக் கொண்டதாக தெரியவில்லை.
அல்லது கண்டும் காணாது இருந்து விட்டதா என்றும் புரியவில்லை.
 இப்படி, அந்த இளைஞர் கும்பல் ரவுடித்தனமாக செயல்களை அரங்கேற்றி வந்த நிலையில்தான், ஒருநாள் அதிர்ச்சி சம்பவம் ஒன்று கன்னங்குறிச்சி கிராமத்தில் நிகழ்ந்து முடிந்தது.
கிராம மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைச் செய்தது இந்த கொடூர சம்பவம்.
கன்னங்குறிச்சி கிராமத்தில் உள்ள ஏரிப் பகுதியில் பொறியாளர் ஒருவர் புதிதாக கட்டி வரும் கட்டப் பணிகளில் இரவு நேர காவலாளியாக இருந்து வந்த குழந்தா கவுண்டர் ஒரு நாள் இரவு, வழக்கம் போல் காவல் பணிக்கு சென்றார்.
மறுநாள் அப்பகுதியில் இருக்கும் ஆடு மாடு மேய்ப்பவர்கள் ஏரிக்கரைப் பகுதிக் சென்றபோது கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியின் உச்சிக்கு அழைத்துச் சென்றது.
ஆம், இரவு நேர காவல் பணிக்கு சென்ற குழந்தா கவுண்டர், மறுநாள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.
அவரது தலை தனியாக வெட்டப்பட்டு முள்வேலி மரத்தில் தொங்கப்பட்டு கிடந்தது.
கால்கள், கைகள் துண்டம் துண்டமாக வெட்டப்பட்டு மற்றொரு இடத்தில் வீசப்பட்டு கிடந்தன.
வயல்வெளியில் உடம்பு தனியாக இருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆடு, மாடு மேய்க்கும் மக்கள், பெரும் சத்தம் போடவே, ஒடோடி வந்தது கன்னங்குறிச்சி கிராமம்.
கொலையுண்ட குழந்தா கவுண்டரின் உடலைப் பார்த்து உறைந்து போனது அவரது குடும்பம்.
மிரண்டு போன கிராம மக்கள், உடனே கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது காவல்துறை.
 பல இடங்களில் வெட்டி வீசப்பட்ட காவலாளி குழந்தா கவுண்டரின் உடலை ஒன்றாக சேகரித்து பிரேதப் பரிச்சோதனைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் காவல்துறையினர்.
காவலாளி குழந்தா கவுண்டரின் கொடூர கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த கன்னங்குறிச்சி காவல்துறை, தீவிர விசாரணையில் ஈடுபட்டது.
அப்போது, பத்து பேர் கொண்ட ஒரு இளைஞர் கும்பல் தங்களை ரவுடிகளாக மாற்றிக் கொண்டு, கன்னங்குறிச்சி கிராமத்தை மிரட்டி வந்தது காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த ரவுடி கும்பல் இரவு நேரங்களில், கிராமத்தை ஆட்டிப் படைத்ததும் விசாரணையில் தெரிந்தது.
விழித்துக் கொண்ட கன்னங்குறிச்சி காவல் நிலைய அதிகாரிகள், உடனே ரவுடியாக மாற நினைத்த நிர்மல்குமார் என்பவனை கைது செய்தனர்.
இந்த கைது மூலம், காவலாளி குழந்தா கவுண்டர் கொலை வழக்கில் உடனே பெரிய திருப்பம் கிடைத்தது.
மணி என்ற மற்றொரு ரவுடி கோவை  காவல்நிலையத்தில் இந்த கொலை வழக்கு தொடர்பாக சரண் அடைந்தான்.
கைது செய்யப்பட்ட கொலையாளிகளிடம்,  நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தா கவுண்டரை கொலைச் செய்து துண்டம் துண்டமாக வெட்டி வீசியதை இருவரும் ஒப்புக் கொண்டனர்.
பொறியாளர் புதிதாக கட்டி வந்த கட்டப்பகுதியில் இருந்து சிமெண்ட், இரும்பு கம்பி ஆகியவற்றை அடிக்கடி திருடி அதன் மூலம் பணம் பார்த்து வந்தது இந்த ரவுடி கும்பல்.  ஆனால், இரவு நேர காவலாளியாக குழந்தா கவுண்டர் அமர்த்தப்பட்டவுடன், ரவுடி கும்பலால், சிமெண்ட், இரும்பு கம்பி ஆகியவற்றை களவாட முடியவில்லை.
இதனால் ரவுடி கும்பலுக்கும் காவலாளி குழந்தா கவுண்டருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடி இளைஞர் பட்டாளம், ஒருநாள் குழந்தா கவுண்டரை கொலை செய்து அவரது உடலை துண்டம் துண்டமாக வெட்டி வீசி எரிந்து அங்கிருந்து தப்பி ஓடியது.
கன்னங்குறிச்சி காவல்நிலையம் அருகேயே இந்த கொடூர கொலை நிகழ்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிர்மல்குமார், மணி ஆகிய இருவரை கைது செய்த காவல்துறை, அவர்களை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர், சேலம் மத்திய சிறையில் அடைந்தது.
இந்த கொலைத் தொடர்பாக மேலும் பலரை வலைவீசி தேடி வருகிறது கன்னங்குறிச்சி காவல்துறை.
யார் யார் கொலையில் ஈடுபட்டார்கள் என்ற விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
அமைதியான ஒரு கிராமத்தில் இப்படி ஒரு பயங்கர கொலை நடக்க யார் காரணம் ?
கன்னங்குறிச்சி கிராம மக்கள் அனைவரும் குற்றம் சாட்டுவது காவல்துறை மீதுதான்.  கன்னங்குறிச்சி கிராமத்தில் ஒரு இளைஞர் கும்பல், தங்களை ரவுடியாக மாற்றிக் கொண்டு, மக்களை மிரட்டி வந்ததை ஏன் காவல்துறை கண்டுக் கொள்ளவில்லை என்ற கேள்வியை எழுப்புகின்றனர் கிராம மக்கள்.                                                    
இரவு நேரங்களில் வழக்கமாக மேற் கொள்ளப்பட வேண்டிய ரோந்து பணிகளை கன்னங்குறிச்சி காவல்நிலைய காவலர்கள் மேற்கொள்ளாதது ஏன் என்ற கேள்வி கணைகளை அள்ளி வீசுகின்றனர் கிராம மக்கள்.
காவல்துறையின் பொறுப்பற்ற செயலே இக்கொலைக்கு முக்கிய காரணம் என்பது பொதுவான குற்றச்சாட்டு.
கைது செய்யப்பட்ட கொலையாளிகள் நிர்மல்குமார், மணி ஆகியோர் மீது ஏற்கனவே கற்பழிப்பு, கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருந்தும் அவர்களை தீவிரமாக தங்களது கண்காணிப்பில் வைக்க வேண்டிய காவல்துறை ஏன் சுதந்திரமாக வலம் வர விட்டது ?
இப்படி அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்புகின்றனர் கன்னங்குறிச்சி கிராம மக்கள்.
கணவன் குழந்தா கவுண்டர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டதைக் கண்ட அவரது மனைவி சேவத்தா, அதிர்ச்சி உறைந்து போயியுள்ளார்.
கணவரின் கொலையால் பைத்தியம் பிடித்தது போன்ற ஒரு நிலைக்கு ஆளாகியுள்ளார்  சேவத்தா.
சிறிய மிட்டாய் கடை, கூலி வேலை என சிறுசிறு தொழில்களில் ஈடுபட்டு வந்த குழந்தா கவுண்டரின் குடும்பம், இன்று அதிர்ச்சியின் உச்சிக்கு போய், என்ன செய்வது என்று அறியாமல் திகைத்துப் போய் உள்ளது.
கன்னங்குறிச்சி கிராம மக்களும் குழந்தா கவுண்டரின் கொடூர கொலையால் நிலைகுலைந்து போயியுள்ளனர்.
அதிர்ச்சியில் உறைந்து போன கிராம மக்கள், அதில் இருந்து இன்னும் மீளவே முடியவில்லை.
கன்னங்குறிச்சி காவல்நிலைய காவலர்கள், தங்களது கடமையை சரியாக செய்திருந்தால் கொலை நிகழ்ந்திருக்காது.
ஆனால். காவல்துறையினரோ மவுனமே சாதிக்கின்றனர்.
எது எப்படி இருந்தாலும், அமைதியான ஒரு கிராமத்தில் மிகப் பெரிய கொடூரமான கொலை சம்பவம் நடந்து விட்டது.
இந்த கொடூர சம்பவத்தில் இருந்து கன்னங்குறிச்சி கிராமம் மீள வெகு நாட்கள் ஆகும்.
கொலையாளிகள் இருவர் கைது செய்யப்பட்டாலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வது யார் ?
கணவனின் குறைந்த வருமானத்தில் வாழ்க்கையை நகர்த்தி வந்த சேவத்தாக்கு இனி உதவி செய்யப் போவது யார் ?
கணவனின் கொலையை கண்டு பைத்தியம் பிடித்தது போன்ற மனநிலைக்கு மாறியுள்ள அவரின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது யார் ?
வரும் முன் காப்போம் என்பது தமிழ் மொழி.
ஆனால், காவல்துறையோ, கொலை, கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்து முடிந்து விட்ட பிறகுதான் விழித்துக் கொள்கிறது.
இதற்கு பல சம்பவங்கள் சாட்சிகளாக இருந்தாலும்,  கன்னங்குறிச்சி கிராமத்தில் ரவுடிகளின் அட்டகாசத்தை கண்டுக் கொள்ளாமல் காவல்துறை மவுனமாக இருந்தது  ஒரு நேரடி சாட்சியாக ஆகிவிட்டது.

வரும் முன் காப்போம் என்ற மொழிக்கு ஏற்ப காவல்துறை, விழித்துக் கொண்டிருந்தால், அப்பாவி ஏழை காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டு துண்டம் துண்டமாக வீசி ஏறிப்பட்டிருக்க மாட்டார்.
ஒரு குடும்பம் துன்பத்தின் உச்சிக்கு சென்றிருக்காது.
ஒரு கிராமமே அதிர்ச்சியில் உறைந்து போயிருக்காது.
குழந்தா கவுண்டர் கொலை வழக்கில் கொலையாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டாலும் இனி வரும் நாட்களில் காவல்துறை விழிப்புடன் இருக்க வேண்டும்.
இதுதான், இந்த கொலையின் மூலம் கிடைக்கும் படிப்பினை.

காவல்துறை தங்களது வழக்கமான கடமைகளை செய்து விட்டாலே, தமிழகத்தில் அவ்வப்போது நடக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சமூக விரோத செயல்களை ஒரளவு கட்டுப்படுத்த முடியும்.

இனியும் காவல்துறை விழித்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதே கன்னங்குறிச்சி கிராம மக்களின் ஆசை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக