வியாழன், 27 ஜூன், 2013

அஜீத்தை கவர்ந்த அவ்வையார் ஆத்திசூடி: படப்பிடிப்பு ஓய்வில் படிக்கிறார்

 அஜீத்தை கவர்ந்த அவ்வையார் ஆத்திசூடி: படப்பிடிப்பு ஓய்வில் படிக்கிறார்
அஜீத்தை அவ்வையாரின் ஆத்திசூடி மிகவும் கவர்ந்துள்ளது. படப்பிடிப்பு ஓய்வில் அறம் செய்ய விரும்பு ஆறுவது சினம் என படித்து மனப்பாடம் செய்கிறார்.

முழு ஆத்தி சூடியையும் தனது மொபைலில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளார். நண்பர்களிடம் பேசும்போதெல்லாம் அதன் வரிகளை மேற்கொள் காட்டுகிறார். ஒவ்வொரு வரிக்கும் தெளிவான விளக்கமும் சொல்கிறார். தனது மகள் அனோஷ்காவையும் ஆத்திசூடியை படிக்க நிர்ப்பந்தக்கிறாராம்.

அஜீத் தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் அஜீத் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஆர்யா, டாப்சியும் நடிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக