ஞாயிறு, 9 ஜூன், 2013

காஞ்சீபுரம்

தலைநகர்
 காஞ்சீபுரம்
பரப்பு
 7,857 .கி.மீ
மக்கள்தொகை
 28,77,468
மக்கள் நெருக்கம்
 668/.கி.மீ
ஆண்கள்
 14,57,242
பெண்கள்
 14,20,226
ஆண்-பெண்
 975
எழுத்தறிவு விகிதம்
 76.85%
இந்துக்கள்
 2,83,590
கிருத்தவர்
 1,70,416
இஸ்லாமியர்
 1,13,666


புவியியல் அமைவு

ஆட்சரேகை
 110.00 - 12000N
தீர்க்கரேகை
 770.28-780.50E


எல்லைகள்: தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களுள் ஒன்று. கிழக்கில் வங்காள விரிகுடாவும், சென்னை மாவட்டமும், வடக்கில் திருவள்ளூர் மாவட்டமும்; தெற்கில் விழுப்புரம் மாவட்டமும்; மேற்கில் திருவண்ணாமலை மற்றும் வேலுர் மாவட்டங்களும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: முற்காலப் பல்லவர்களின் தலைநகரம் காஞ்சீபுரம், துவக்கத்தில் சோழர் சாதவாகனர், பலலவர் ஆட்சிக்கட்பட்டிருந்த்து. 1361-இல் விஜயநகர மன்னர் குமார கம்பணன் தொண்டைமண்டலம் முழுவதையும் தன் ஆட்சிக்குட்படுத்தினார்.

1788இல் இது வடக்கு மற்றும் தெற்கு காஞ்சீபுரம் என்று இரண்டு புரிவாக பிரிக்கப்பட்டு, தனித்தனி ஆட்சித் தலைவர்களின் நிர்வாகத்தின் கீழ் வந்தது.

1968 இல் உருவாக்கப்பட்ட இம்மாவட்டம் பிற்பாடு 1997 இல் காஞ்சீபுரம்,திருவள்ளூர் எனும் இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன.

1997 ஜூலை ஒன்றாம் தேதி புதிய காஞ்சீபுரம் மாவட்டம் நடைமுறையில் வந்த்து.

முக்கிய ஆறுகள்: பாலாறு, செய்யாறு, அடையார்.

நிர்வாகப் பிரிவுகள்

வருவாய்க் கோட்டங்கள் - 3: காஞ்சீபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம்,

தாலூகாக்கள்-8: காஞ்சீபுரம், திருக்கழுக்குன்றம், ஶ்ரீ பெரும்புதூர், உத்திரமேரூர், தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யாறு.
நகராட்சிகள் -10: ஆலந்தூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர், தாம்பரம், செங்கல்பட்டு, பல்லாவரம், தாம்பரம், மதுராந்தகம், அனகா புத்தூர், மறைமலைநகர், பம்மல், உள்ளகரம்.
ஊராட்சி ஒன்றியங்கள்- 13: அச்சரப் பாக்கம், சிதாமூர், காஞ்சீபுரம், கட்டாங்குளத் தூர் குன்னத்தூர், லத்தூர், மதுராந்தகம், ஶ்ரீ பெரும்புதூர், பரங்கிமலை, திருபோரூர், திருக்கழுக்குன்றம், உத்திரமேரூர், வாலாஜா பாத்.

குறிப்பிடத்தக்க இடங்கள்

கன்னத் ஜமாத் ஜூம்ஆ மஸ்ஜித்: மத நல்லிணக்க மசூதி, ஏகாம்பரேஸ்வர்ர் ஆலயத்தின் அருகில் ஆற்காடு நவாபினால் 450 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்: பல்லவர், சோழர், விஊயநகர மன்னர்களால் புனருத்தாரணம் செய்யப்பட்ட இக்கோவில் கோபுரம், 57 மீ. உயரமானது. இங்குள்ள பிருத்வி லிங்கம் தென்னிந்திய பஞ்சலிங்களுக்குள் ஒன்று.

அர்ஜூன் தவம்: மிகப் பெரிய திமிங்கல வடிவப் பாறையில் கடவுளர்கள், தேவர்கள், மனிதர்கள், அரசக்கர்கள், பறவைகள் மற்றும் பூச்சிகள் என மனம் கொள்ளை கொள்ளும் யாராலும் கலைக்க முடியாத தவத்தை கொண்ட சிற்பப் பாறை.

காமாட்சி அம்மன் ஆலயம்: இங்குள்ள காமாட்சியம்மன் திருவுருவின் முன்புறமுள்ள ஶ்ரீ சக்கரத்தையே அம்பிகையாக நினைத்து வழிபடுகின்றனர்.

ஶ்ரீபெரும்புதூர்: விசிஷ்ட்டாத்வைதம் கண்ட மகான் ஶ்ரீராமானுஜர் பிறந்த மண். அந்தணர் குலத்தில் தோன்றிய அவர் சாதி அமைப்பிற்கு எதிராகப் போராடினார்.

திருக்கழுக்குன்றம்: மூலவர் வேதகிரீஸ்வரருக்கு வழங்கப்பட்டும் திரு அமுதை கருடனுக்கு வழங்குவதான நம்பிக்கையில், கழுகுகளுக்கு உணவு படைக்கப்படுகிறது. இவ்வூரின் பெயர்காரணமும் இதுவே.

பஞ்ச பாண்டவர் ரதம்: வெவ்வேறு பாணியில் ஒற்றைக் கல்லிலில் செதுக்கப்பட்ட ஐந்து கோயில்களையே பஞ்ச பாண்டவர் ரதங்கள் என அழைக்கின்றனர். இதன் கற்சுவர்களில் கலைநயத்துடன் சிற்பங்கள் வடிவமைக்கப்படுள்ளன.

முதலைப் பண்ணை: ரோமுலெஸ் விட்டேகரால்துவங்கப்பட்டது.

இருப்பிடமும், சிறப்புகளும்:


சென்னையிலிருந்து 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைந்துள்ள மாவட்டம்.
தாம்பரம் - விமானப்படை விமான நிலையம், மீனம்பாக்கம் - சர்வதேச விமான நிலையம் மற்றும் உள்ளூர் விமான நிலையம்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்.
செம்பரம்பாக்கம், மதுராந்தகம் ஏரி
பல்லவர் கால குறைக் கோவில்கள், சிற்பக் கலை அற்புதம் அர்ஜூனன் தவம் நிறைந்த சுற்றுலாத் தளம் மகாபலிபுரம்.
ஹூண்டாய்(The Hyundai cars), மகேந்திரா போர்டு கார் தொழிற்சாலைகள்(Mahindra Ford cars) தொழிற்சாலைகள்.
சமண சமய நினைவுச் சின்னங்கள் நிறைந்த திருப்பருத்திக் குன்றம், பசுவான் மகாவீரரின் பேருருவச் சிலைகளும், சுவரோவியங்களும் இங்கே தீட்டப்பட்டுள்ளன.
குறிப்பிடத்தக்கோர்: தமிழக முதல்வர் சி.என். அண்ணாதுரை, வைணவ ஆச்சாரியர் ரானுமாஜர் பிறந்த இடம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக