சனி, 8 ஜூன், 2013

இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை?

       அன்மையில் பாபா ரம்தேவ் இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்து ஆக வேண்டும் என்று கூறினார்.  இது மக்களுக்கு பெரிதும் ஏன் என்ற அச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால், தற்போதைய ஊழல் நிறைந்த இந்தியாவின் தேவையும் அது தான்.  அப்படி இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்ய பல காரணங்களும், தடை செய்தால் பல நன்மைகளும் ஏற்படஇருக்கிறது.  அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். முதலில் ரூபாய் நோட்டுககளை தடை செய்ய என்னென்ன காரணம் என்று பார்ப்போம்.  

                            
 முழு முதற் காரணம்:         
மொத்த இந்திய வருவாயை இப்படி பிரிக்கிறார்கள்.
100 ரூபாய் நோட்டுக்கள் = 23%
500 ரூபாய் நோட்டுக்கள் =44%
1000 ரூபாய் நோட்டுக்கள்=24%
இந்தியாவின் மொத்த (100%) வருவாயில் 93% சதவிதம் 100, 500, 1000 ரூபாய் நோட்டுக்களாக அச்சடிக்கிறார்கள்.
சில நாடுகளின் தனி மனித சராசரி ஆண்டு வருமானம்(per capita income) எவ்வளவு என்று பார்த்தோமானால்,  US–ல் 40000$ ஆகவும்,UK-ல் 20000£ ஆகவும், ஜப்பானில் 40,00,000¥ ஆகவும் இருக்கிறது.  ஆனால் இதுவே இந்நியாவில் ரூபாய் 46,492 ரூபாயிலிருந்து 54,527 ரூபாய் உயர்ந்திருக்கிறது.( Feb 7,20ll நிலவரப்படி).  இதை நாம் US $ல் கணக்கிட்டால் 46,492 ரூபாய்=1,037.19 US $ (june 16 நிலவரப்படி).
தனி மனித சராசரி ஆண்டு வருமானத்தை(Per capita income) நமது அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களாய் பிரித்தால் நமக்கு ஒரு சூனிய எண் கிடைக்கும். அது USல் 400 ஆகவும், UKல் 400 ஆகவும், ஜப்பானில் 400 ஆகவும், இந்தியவில் 47 ஆகவும் இருக்கிறது(1000 ரூபாய் நோட்டுக்களை நம் எடுத்துக் கொண்டால்).   ஆக இந்தியாவிற்கு இது மிகவும் குறைவு, இதை  400 ஆக்க வேண்டும்.
ஆனால் US-ல் அதிக $ நோட்டுக்கிள் மதிப்பு 100$ ஆகவும், UK-ல் 50£ ஆகவும் இருக்கிறது,  ஆனால் இந்தியாவில் தனி நபரின் சராசரி வருமானம் 1041$ (46,492 ரூபாய் ) ஆக இருக்கும் போதிலும், நமது அதிக ரூபாய் நோட்டின் மதிப்பு 1000 ஆக இருக்கிறது.
40000$ = 100$
1037$   = ?






            ஆக இந்தியாவின் ரூபாய் நோட்டுக்களின் அதிக மதிப்பும் 100 ரூபாய்க்கும் மேல் இருக்க கூடாது என்பது நமக்கு புலப்படுகிறது.
இரண்டாம் காரணம்:
  தற்போது ஊழல் நிகழ்வது எல்லாம் கோடி கணக்கில் தான். 
1 கோடி ரூபாய் லஞ்சம் 50, 100 ரூபாய நோட்டுக்களாக கொடுத்ததாக கேள்விப்பட்டதுண்டா..?  அந்த மாதிரி சம்பவங்கள் மிகவும் அரிது, நாம் கேள்வி பட்டதும் இல்லை.  பெரும்பாலும் லஞ்சப் பணம் 500, 1000 ரூபாய் நோட்டுக்களாக தான் கைமாறுகிறது. 
மூன்றாம் காரணம்:
போலி ரூபாய் நோட்டுக்கள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களாக தான் இருக்கிறது.  ஊடகங்களின் அறிக்கையின் படி 1,69,000 கோடி ரூபாய் முதல் 2,00,000 கோடி ரூபாய் வரை இந்தியாவில் போலி ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன. 
எங்கேனும் கோடி கணக்கான ரூபாயில் 50, 100 ரூபாய் நோட்டுக்களில் போலி நோட்டுக்களை கண்டதுண்டா..?
நான்காம் காரணம்:
ஒரு நாடு முன்னேற்றம் அடைய அந்நாட்டின் பண பரிவர்தனை வங்கிகள் மூலமாக நடக்க வேண்டும். முன்னேறிய நாடுகளில் 90% பணபரிவர்த்தனை வங்கிகள் மூலமாக நடக்கிறது.  ஆனால் இந்தியாவில் 20% மட்டுமே வங்கிகள் மூலமாக நடக்கிறது.  இந்தியாவில் வங்கிகள் மூலம் பரிவர்த்தனை அதிகம் நடக்காததற்கு அதிக மதிப்பு ரூபாய் நோட்டுக்களும் ஒரு காராணம்.

அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட $ நோட்டுக்கள்:
அமெரிக்காவிலும் 1969ல் ஊழலை ஒழிப்பதற்காக அதிக மதிப்பு கொண்ட $ நோட்டுக்களை தடை செய்திருக்கின்றனர்.  அந்த சமயத்தில் அமெரிக்க ஊழல் நிறைந்த நாடாக இருந்தது.  அப்போது அங்கு வங்கி பரிவர்த்தனையும் இல்லை.  எல்லா பண பரிவர்தனையும் 500, 1000, 10000,100000 $ நோட்டுக்கள் மூலமாக தான் நடந்தது. 
அப்போது இருந்த ஊழலால் மக்கள் பெரிதும் அவதி பட்டனர்.  அப்போது அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் துணிந்து ஒரு முடிவு எடுத்தார்.  அதை யாருமே எதிர்ப்பார்க்கவில்லை.  அவர் 1969ல் 100$ நோட்டுக்கு மேற்ப்பட்ட அனைத்து $ நோட்டுக்களையும் தடை செய்தார். அதனால் ஊழலும் பெரிதும் குறைந்தது.  வங்கி பரிவர்த்தனையும் பெரிதும் வளர்ந்தது. 
அமெரிக்காவை போல் இந்தியாவிலும் 500 , 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்ய வேண்டும்.
500, 1000 ரூபாய் நோட்டுக்களை அரசு தடை செய்தால் என்ன நடக்கும்..? 
கொஞ்ச நாளுக்கு எதுவும் நடக்காது, முதலில் இது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் சில மாதங்கள் சற்று சிரமமாக இருக்கும்.  பிறகு மக்கள் வங்கி பரிவர்த்தனையை உபயோகிக்க தொடங்கி விடுவார்கள்.  ஒரு மாற்றம் வேண்டுமானால் சிறிது சிரமப்பட்டுதான் ஆக வேண்டும்.
ஒரு நாட்டில் அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் அந்த நாடு ஊழல் மிகுந்த நாடாகவும், ஊழல் மிகுந்த அரசியலாகவும் இருக்கும்.
ரிஸரிவ் ரிஸ்ர்வ் வங்கி 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்ய எந்த அதிகாரமும் கிடையாது.  இந்திய அரசாங்கத்திற்கு தான், அதை தடை செய்ய அதிகாரம் இருக்கிறது.  ரிஸர்வ் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் வேளையை மட்டும் தான் செய்யும், அதில் என்ன அச்சடிக்க வேண்டும் என்பதை இந்திய அரசாங்கம் தான் முடிவு செய்யும். 
இந்தியாவை ஊழல் இல்லாத நாடாக்க இதுவே சிறந்த வழி.  இந்த தடையை அரசு கொண்டு வர வேண்டும்.  இத்தடையை கொண்டு வர வரவேற்போம் .., ஆதரிப்போம்..,  இந்தியாவை ஊழல் இல்லாத நாடாக்குவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக