புதன், 15 ஜனவரி, 2014

யாளி என்னும் தொன்ம உயிரினச் சிற்பம் - கோ.ஜெயக்குமார்

யாளி என்னும் தொன்ம உயிரினச் சிற்பம்  - கோ.ஜெயக்குமார்

யாளி என்பது இந்துக் கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும். இதை வியாழம், சரபம் என்றும் அழைக்கிறார்கள். இவற்றைப் பொதுவாக இந்துக் கோயில்களின் தூண்களில் காணலாம்.
 http://1.bp.blogspot.com/-MUYX1BYx7g8/UOkIvKAHjaI/AAAAAAAAADQ/UGvosdbCphg/s1600/yazhi.jpg
தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளி யானையைத் தாக்குவது போன்று உள்ளதைச் சிற்பங்களில் காணலாம்.
http://3.bp.blogspot.com/-wQZaZ6yas80/UpjM8QFUZdI/AAAAAAAACis/b7BqeQtPgrc/s1600/u.jpg
மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் வேறு சில முருகன் கோயில்களிலும் உற்சவர் சிலைகள் உலா வரும் பொழுது யாளி போன்று வடிவமைத்த வாகனங்களில் வருவது வழக்கம்.
http://3.bp.blogspot.com/-v18izLlesjk/ULn96UWloAI/AAAAAAAADPQ/6KnSFanfTpA/s1600/srirangam%2Bold%2BYali%2Bvahana.jpg
சிங்கமுகத்தில் யானையின் துதிக்கையை நினைவூட்டும் உறுப்புடன் காணப்படும் யாளி, இந்தியாவில் கி. மு. 25,000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வழக்கத்துக்கு வந்தது[சான்று தேவை]. கி. பி. 800களில் தமிழ்நாட்டின் கோயில் கட்டுமானம் செங்கற்களுக்குப் பதிலாக கருங்கற்களைப் பயன்படுத்தத் தொடங்கியது[சான்று தேவை.
 http://upload.wikimedia.org/wikipedia/commons/c/ca/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88.jpg
முதன்முதலாக பராந்தக சோழன், ஆதித்த சோழன் காலத்தில் கோயில்களைக் கருங்கற்கள் கொண்டு கலைநயத்துடன் கட்டினார்கள்[சான்று தேவை]. இதனைக் கற்றளி என்று வரலாற்றாளர்கள் குறிப்பிடுவார்கள். இதற்கு முன் மாமல்லபுரம், அஜந்தா, புத்தவிகாரங்கள் போன்ற இந்தியக் கோவில்களில் உள்ள சிற்பங்களில், இந்தச் சிற்பத்தினைப் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்தியச் சிற்ப நூல்களிலும் இதைப் பற்றிக் குறிப்புகள் இல்லை.
http://1.bp.blogspot.com/-aGTop0nChLc/UNgts7t6KoI/AAAAAAAADg4/iqESDXi6Qac/s1600/b22280e4914b75fd357c1b85a745_grande.jpg
யாளிகள் பொதுவாக சிங்கத்தின் உடல் அமைப்பைக் கொண்டுள்ளன. அவற்றின் தலைகளோ வேறு ஒரு விலங்கின் சாயலில் வடிவமைக்கப்படுகின்றன. யானை, சிங்கம் (சிம்மம்), ஆடுகளின் (மகரம்) தலைகளையும், அரிதாக நாய், எலிபோன்றவற்றின் தலைகளையும் யாளியிடம் காணலாம்.
http://1.bp.blogspot.com/_-uIEydldXV8/TVIpuxtz0CI/AAAAAAAAO5I/c_hdw38-pJg/s400/2-Mantapam.jpg
செந்தமிழ் நாட்டுத் திருக்கோவில்களில் எல்லாம் கலை வண்ணம் நிறைந்த சிலைகள் பலவற்றைக் கண்டு ரசிக்கலாம். அவற்றுள் யாளியும் ஒன்று.

யாளியின் வாயில் முட்டை வடிவில் ஒரு கல் உருண்டை இருக்கும். அதனைக் கையை விட்டுச் சுழற்றலாம். ஆனால் வெளியே எடுக்க முடியாது. யாளி சிலைகளைக் காண்போர் பார்த்து ரசித்து விட்டுத் திரும்பிவிடுவர். ஆனால், மணி தணிகைகுமார் என்னும் இளைஞருக்குக் கற்பனை சிறகடித்துப் பறந்தது. பிறந்தது, யாளி என்னும் புதுவகையான நாவல்.

இத்தகைய கருப்பொருளுடன் கூடிய புதினம் தமிழில் இதுவரை வந்ததில்லை என்று துணிச்சலுடன் சொல்லலாம். ஏனெனில், நூற்றாண்டுக்காலமாகக் கோவில்களும் இருந்துவருகின்றன. யாளி சிலைகளும் இருந்துள்ளன. இவருக்கு ஏற்பட்ட தாக்கம் வேறு எந்தப் படைப்பாளிக்கும் ஏற்படவில்லை என்பதே இவரது சிறப்பு. மேலும், இதனைப் படிக்கும்பொழுது கூடவே பயணிக்கும் உணர்வையும் தன் எழுத்துவன்மையால் ஏற்படுத்திவிடுகின்றார், நூலாசிரியர். படித்து முடித்தபின், சில் நாட்கள் இரவில் யாளிகள் என் கனவில் தொடர்ந்து வந்தவண்ணமாகவே இருந்தன.

சென்ற நூற்றாண்டின் இறுதியில்தான், மானுட இனம், தனக்கும் ஐந்தாறு கோடி ஆண்டுகளுக்கு முன் இந்தப்பூமியில் வாழ்ந்த ராட்சத விலங்குகளான டைனோசர் பற்றிய தகவல்களை உறுதி செய்தது. டைனோசரைக் கதாநாயகனாகக் கொண்டு பல திரைப்படங்கள் வெளியாயின. உலகம் வியப்பு எய்தியது. டைனோசர் ஆய்வுகள் இன்றும் தொடர்கின்றன. அதைப் போன்று யாளியும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டால் இன்னும் பல உண்மைகள் தெரியவரும் என்பதே கதாசிரியரின் எதிர்பார்ப்பு.

இலண்டனைச் சேர்ந்த கோடீஸ்வர ஆங்கிலேயர் ஒருவர் தன் கொள்ளுத்தாத்தாவின் டைரியினைப் படிக்கும் வாய்ப்பு நேரிடுகின்றது. அதில் யாளியைப் பற்றிய தகவல் கிடைக்கின்றது. இந்தியாவில் யாளி உயிருடன் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது என்று டைரி சொல்கின்றது. இந்த ரகசியத்தை வெளியிடக்கூடாது என்பது முப்பாட்டனார் கோவில் நிர்வாகிகளிடம் சத்தியம் செய்து கொடுத்துள்ளதாகவும் எழுதப் பட்டிருந்தது.
 
டைரியில் யாளியின் படங்களும் இருந்தன. படங்களைப் பார்த்த அவரது ஆர்வம் அதிகரிக்கின்றது. யாளி இந்தியாவில் இருக்குமிடம் எது என்று டைரியில் குறிபிடப் படவில்லை. இந்தியாவில் உள்ளது என்பது மட்டும்தான் டைரி தரும் தகவலாக இருந்தது. கோடிஸ்வரருக்கு இந்தியாவைப் பற்றிய கேள்வி அறிவு மட்டுமே உண்டு. வேறொன்றும் தெரியாது.

ஆனால், முப்பாட்டனாரின் டைரி சொல்லும் உண்மையினைக் கண்டறிந்து விட வேண்டும் என்ற வேட்கையின் உந்துதலால், நண்பர் ஒருவர் மூலம் புத்திசாலியான இந்திய இளஞன் ஒருவனின் அறிமுகத்தைப் பெறுகின்றார். அவன் தமிழகத்தைச் சார்ந்தவன் என்பது சிறப்பு. கணிசமான சம்பளத்திற்கு அவனுடன் உடன்படிக்கை செய்துகொண்டு அவனுடன் இந்தியாவிற்குப் பயணிக்கின்றார்.

அவர்களது இந்தியப் பயணத்தில் திருக்கோவில்கள்தோறும் செல்வது, கொள்ளுத்தாத்தா வைத்திருந்த யாளி படத்துடன் ஒத்துப்போகும் யாளி சிலை எஙுகுள்ளது என்பதைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான் கதை. யாளிகள் உயிரோடு பாதுகாக்கப்பட்டு வருவதைக் கண்களால்ப் பார்த்து விடுகின்றனர், யாளிகள் உல்ளதாகக் குறிப்பிடும் இடம், செல்லும் வழி, நீர்வழிக்கால்வாய் அமைக்கப்பட்டுள்ள நவீனத் தொழில் நுட்பம் குறித்த விவரிப்பும், வெள்ளையரும் இந்திய இளைஞனும். யாளியால் தூக்கி எறியப்படுவதும், அந்தத் தாகுதலினின்றும் தப்பிக்கும் காட்சிகளும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.

யாளி என்றொரு உயிரினம் இருந்திருந்தாலும், டைனசோர்போல் அழிந்திருக்கக் கூடுமே தவிர உயிருடன் இருபதற்குச் சாத்தியமில்லை என்ற கேள்வியைச் சிலர் எழுப்பக்கூடும்

சீனாவில், பாண்டா கரடி, இத்தாலியில் வெள்ளைப்புலி இபடிச் சில விலங்கினங்கள் அழியாமல் இப்போதும் பாதுகாப்பதுபோல், யாளியையும் நமது முன்னோர்கள் பாதுகாத்து வந்துள்ளனர். யாளிகள் காப்பகம் மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவில் இன்றும் உள்ளது என்று கதை முடிகின்றது. இறந்துபோன கொள்ளுத்தாத்தாவும் , கோவில் நிர்வாகிகளும் யாளிகள் குறித்த ரகசியத்தைத் தொடர்ந்து காப்பாற்றி வரும் பாதையினையே தானும் பின்பற்ற முடிவு செய்தார், வெள்ளையர்.

முப்பாட்டனார் டைரியில் எழுதிவைத்துள்ள ரகசியத்தின் உண்மையை உள்ளபடித் தெரிந்துகொண்ட மகிழ்ச்சியுடனும், இந்தப் பயணத்தில் இந்தியாவின் பரிசாகக் கிடைத்த அருமைக் காதல் மனையாளோடும் இலண்டன் மாநகருக்குப் பய்ணிக்கின்றார், கதாநாயகன்.

பல நூறாண்டுகள் பூட்டிய அறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் வெளிப்பட்டதுபோல், காலம் நேரம் வரும்பொழுது ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டுவரும் யாளிகளும் உயிருடன் வெளிவரும் என்ற நம்பிக்கையை விதைக்கின்றது இந்த நாவல்.

கற்பனை, அறிவியல், வரலாறு, சமூகம் கலந்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. திகிலுக்கும் பஞ்சமில்லை இந்த நாவலில். சாகசக் கதைகளை விரும்பிப் படிக்கும் இளைஞர்களுக்கும் இந்தப் புதினம் ஒரு நல் விருந்து.

25அத்தியாயங்கள்,330பக்கங்கள்,25க்கும் மேற்பட்டவண்ணப்படங்கள், விலை உயர்ந்த தாள்களில் அச்சிடப்பட்டுள்ளன. அனுபவக் குறைவால் இவர் வைத்துள்ள விலைரூபாய்150/-தான்.

தமிழ்வழியில் அறிவியல் கல்வி கற்று, ஆங்கில வழியில் தொழிற்பயிற்சி (பி.இ) பெற்ற மாணவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கின்றார்.இவர் படைப்பான இந்த ஒரு புத்தகமே இவர் பெயரைக் காலத்திற்கும் எடுத்துச் சொல்லும்.

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உரியவர் பார்வையில் பட்டால், டைனோசர், அனகொண்டா போன்றதொரு திரைப்படமாகக் கூட யாளி வெளிவரக்கூடும். இந்தக் குறையினையும் நீக்கிவிட்டார் படைப்பாளியின் நண்பர், எஸ்.டி.பாலயோகேஷ்! ஆம்! எட்டு பக்கங்களில் ஆங்கிலத்தில் கதையினைச் சுவை குன்றாமல் மொழிபெயர்த்துள்ளார். அது இந்த நாவலின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

குறை என்று சொல்லப்போனால், யாளிகளை ரகசியமாகப் பாதுகாக்கும் கோவில் குடும்பத்தைச் சார்ந்த பெண், கதாநாயகனான வெள்ளைக்காரரைக் காதலிப்பது வலியத் திணிக்கப்பட்டுள்ளது போல் தோன்றுகின்றது.


யாளியை உங்களுக்குத் தெரியும்தானே! புராணக் கதைப் புத்தகங்களில் நீங்கள் இதைப் பார்த்திருக்கலாம். அல்லது கோயில்களில் நிச்சயம் யாளி சிலையைப் பார்த்திருக்கலாம். நம் யாளி சிங்க முகமும், யானையின் துதிக்கையையும், தந்தத்தையும் கொண்ட விசித்திர மிருகமாக இருக்கும். இதைப் போன்றதுதான் டிராகனும்.ஆனால், இந்த டிராகன் பார்ப்பதற்கு முதலையைப் போல மிகப் பெரிய உருவமாக இருக்கும்.
 
இது முழுக்க முழுக்க கற்பனையில் உருவான பிராணிதான். உலகத்தின் அனைத்து மக்களின் மனதிலும் பதிந்திருக்கும் பிராணி இது. கற்பனை அம்சமுள்ள கதைகளிலும், சினிமாக்களிலும் இது இடம்பெற்றிருக்கும். தீமையின் சின்னமாகக் கருதப்படும் டிராகன், நெருப்பைக் கக்கும் பாம்பாகவும் சித்திரிக்கப்படுகிறது. டிராகன், "பறவை நாகம்' என்றும் அழைக்கப்படுகிறது.
 
சீனா, எகிப்து, அஸ்ஸீரியா, கால்தியா, பினீஷ்யா முதலான புராதனக் கலாசாரம் நிலைபெற்றிருந்த நாடுகளிலெல்லாம் நூற்றாண்டுகளுக்கு முன்பே, அந்நாடுகளின் புராதன நூல்களில் இந்தப் பாம்பு உருவம் இடம்பெற்றிருந்தது.
 
இதோ, டிராகனைப் பற்றி சீனப் புராணக் கதையில் உள்ள ஒரு விவரணம்: ""மேகங்களில் வசித்து இடி மழையைப் பெய்யச் செய்யக்கூடியது; மலைகளில் வசித்து பூகம்பங்களை உண்டாக்கக்கூடியது; கடலில் வசித்து பெரும் புயல்களையும் ஏற்படுத்தக்கூடிய மிகப் பயங்கரமான மிருகம்தான் டிராகன்.''
அது மட்டுமல்ல, சீனாவில் ஒரு அரசாங்கச் சின்னமாகவும் டிராகன் இருக்கிறது.

ஜப்பானியர்கள் டிராகனை "டாட்டஸ்' என்று அழைக்கிறார்கள். ஜப்பானியர்களின் இந்த டிராகனால் எப்போது வேண்டுமானாலும், தன் உடலைப் பெரிதாக்கவும் முடியும், சிறிதாக்கவும் முடியும். திடீரென்று மறைந்துபோகும் திறமையும் உண்டு. பல கிறிஸ்தவக் கலாசாரங்களிலும் டிராகன் எனும் கற்பனை இருந்தது.

இதற்குச் சிறந்த உதாரணமாக, குதிரைமேல் இருக்கும் புனித ஜார்ஜ், ஈட்டியால் டிராகனைக் கொல்வதைச் சித்திரிக்கும் புகழ்பெற்ற ஓவியத்தைச் சொல்லலாம்.
 
இந்த ஓவியத்தை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். இதில் உள்ள டிராகனுக்கு நான்கு நகங்கள் வீதமுள்ள கால்களும், நீண்ட வாலும், வெவாலுடையதைப் போன்ற சிறகுகளும் இருக்கும்.
 
சீனத்து டிராகனுக்கு கால்களில் ஐந்து நகங்கள் இருக்கும். சிறகுகள் இல்லாத ஜப்பானிய டிராகனின் காலில் மூன்று நகங்கள் இருக்கும்.இந்தியாவில் உள்ள டிராகன்கள் யாளிகள்தான். இந்திய யாளிகளைப் பற்றியும் நிறையக் கதைகள் இருக்கின்றன.

சனி, 4 ஜனவரி, 2014

உதயகிரிக் கோட்டை ஒரு வரலாற்றுப்பார்வை - கோ. ஜெயக்குமார்.உதயகிரிக் கோட்டை ஒரு வரலாற்றுப்பார்வை - கோ. ஜெயக்குமார்.

உதயகிரிக் கோட்டை இந்தியாவின் தற்காலத் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. இது நாகர்கோயில் நகரில் இருந்து 14 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் கி.பி 1600 களில் கட்டப்பட்டதாகக் கருதப்படும்.
 படிமம்:Udayagiri Hill-scene.jpg
பத்மநாபபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு திருவிதாங்கூர் அரசர்கள் ஆண்ட காலத்தில் இக் கோட்டை அவர்களுக்குப் பெரிய சொத்தாக அமைந்திருந்தது. இது பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மரால் மீளக் கட்டப்பட்டது.
 http://upload.wikimedia.org/wikipedia/commons/1/1e/Udayakiri_fort3.jpg
90 ஏக்கர் (36 ஹெக்டேர்) பரப்பளவை உள்ளடக்கியுள்ள இக் கோட்டையுள் 200 அடி (79 மீட்டர்) உயரமுள்ள ஒரு குன்று உள்ளது. இதற்குள் துப்பாக்கிகளை வார்ப்பதற்கான வார்ப்பு உலை ஒன்றும் உண்டு.
 http://upload.wikimedia.org/wikipedia/commons/e/ee/Udayakiri_fort5.jpg
உதயகிரிக் கோட்டையுள் காணப்படும் டி லனோயின் சமாதி. டச்சு அட்மிரலான இயுஸ்ட்டாச்சியஸ் டி லனோய் (Eustachius De Lannoy) என்பவரது அவரது மனைவி, மகன் ஆகியோரதும் சமாதிகள் இங்குள்ள பகுதி அழிந்த நிலையில் காணப்படும் ஒரு கிறிஸ்தவ சிற்றாலயத்துள் உள்ளன. ஒரு காலத்தில் இக் கோட்டை இவரது பெயரைத் தழுவி தில்லானைக் கோட்டை (டி லனோய்ஸ் கோட்டை - De Lennoy's Fort) என அழைக்கப்பட்டு வந்தது.
 http://upload.wikimedia.org/wikipedia/commons/0/03/Udayakiri_fort7.jpg
இக்கோட்டை, திருவனந்தபுரம் - நாகர்கோயில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புலியூர்க்குறிச்சியில் உள்ளது. பத்மநாபபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட திருவிதாங்கூர் அரசர்களின் மிக முக்கியமான படைநிலை இதுவேயாகும். இக்கோட்டை பாரிய கருங்கற்களால் ஒரு தனியான குன்றைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ளது.
 http://upload.wikimedia.org/wikipedia/commons/8/83/Udayakiri_fort6.jpg
பல்லுயிர்மப் பூங்கா உதயகிரிக் கோட்டை தற்போது தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கே பல்லுயிர்மப் பூங்கா என்ற பெயரில் சில மான்கள் வேலியிடப்பட்ட சிறிய பகுதியில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளன. மேலும் காதற்பறவைகளும் கினி பன்றிகளும் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.
 http://upload.wikimedia.org/wikipedia/commons/f/fa/Udayakiri_fort8.jpg
கினிக் கோழிகள் தன்னிச்சையாயத் திரிகின்றன. மீன் காட்சியத்தில் சில வகை மீன்கள் உள்ளன. அத்தோடு பர்மா பாலத்தில் நடத்தல், மரக் குடிலில் ஏறுதல் போன்றவற்றுக்குத் தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 
 http://upload.wikimedia.org/wikipedia/ta/a/a9/De_lannoy_Tomb.jpg
இப் பூங்காவில் குடும்பத்துடன் வருவோர், தனியாய் வரும் ஆடவர், தனியாய் வரும் பெண்டிர் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. காதலர்களாய் அல்லது நண்பர்களாய் வரும் ஆண்‌ - பெண்களுக்கு இங்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
 http://upload.wikimedia.org/wikipedia/commons/7/78/Vivekananda_Rock_%26_Valluvar_Statue_at_Sunrise.JPG
திருவிதாங்கூர் நாடு, இந்தியாவின் கேரள மாநிலத்தின் தென்பகுதிகளையும், தமிழ் நாட்டின், கன்னியாகுமரி, மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்த ஒரு சமஸ்தானம் (princely state) ஆகும். கி.பி. 1758ல் வேணாட்டின் கடைசி மன்னன் பால மார்த்தாண்ட வர்மா மர்மமான முறையில் மரணமடைந்த பின் மலபார் பகுதியை ஆண்டு வந்த நம்பூதிரி-நாயர் கூட்டணி ஆட்சி வேணாட்டு அரசை கைப்பற்றியது. 
 http://upload.wikimedia.org/wikipedia/ta/0/09/Marthandan.jpg
இதன் முதல் மன்னர் கார்த்திகை திருநாள் ராமவர்மன். இவர் காலத்திலிருந்து வேணாடு திருவிதாங்கூர் என்ற பெயரில் செயல்பட தொடங்கியது வேணாட்டு மன்னன் பால மார்த்தாண்ட வர்மா காலத்தில் தலைநகர் கல்குளத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. 
 http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/2/2c/Vattakottai_Fort_Entrance.jpg/300px-Vattakottai_Fort_Entrance.jpg
பின்பு வந்த திருவிதாங்கூர் மன்னர்களும் திருவனந்தபுரத்தையே தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர். வெள்ளி நிறத்தில் வலம்புரிச் சங்கு பொறித்த செந்நிறக் கொடியைக் கொண்டு ஆட்சி நடத்தப்பட்டது.
 http://upload.wikimedia.org/wikipedia/ta/4/4d/Maharaja_of_travancore_Chithira_Thirunal_Balarama_Varma%28color%29.jpg
1 ஜூலை 1949 இல், திருவிதாங்கூர், மலையாளம் பேசும் இன்னொரு அரசாக இருந்த கொச்சியுடன் இணைந்து திருவிதாங்கூர்-கொச்சி ஆனது. பின்னர் இது மதராஸ் மாநிலத்தின், மலபார் மாவட்டம் ஆக்கப்பட்டது. இச் சமஸ்தானத்தின் கடைசி அரசர் சித்திரைத் திருநாள் பாலராம வர்மர் ஆவார்.
 http://upload.wikimedia.org/wikipedia/commons/e/ee/De_Lannoy_Surrender.JPG
மார்த்தாண்ட வர்மர் (1706 - 1758) திருவிதாங்கூர் அரசை உருவாக்கி அதனைப் பல ஆண்டுகள் வெற்றிகரமாக ஆண்டுவந்தவர் ஆவார். இவர் அட்டிங்கல் இளைய ராணியின் மகன். இந்தியாவின் தென்கோடியில் இருந்த சிறிய சிற்றரசான வேணாட்டின் அரசுரிமை இவரது மாமனாரான ராஜா ராம வர்மரிடம் இருந்து இவருக்குக் கிடைத்தது.
 http://www.nativeplanet.com/photos/big/2013/02/_13603022411.jpg
இத் தாய்க் கால்வழி மரபுரிமை நாயர்களிடம் இருந்து வருவது. மிகுந்த தந்திரமும், புத்தியும் நிறைந்த மார்த்தாண்ட வர்மர், முடிக்குரிய இளவரசராக இருந்தபோதே பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியாருடன் 1723 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார்.
 
 

இதுதான் உதயகிரி கோட்டை.  நாம,  இப்ப கருங்கல் சுவர்களை கொண்ட பிரம்மாண்டம்மான கோட்டையோட வெளிப்பக்கம் நின்னுட்டிருக்கோம். இது கோட்டைக்கு செல்லும் வழி.  சீக்கிரம் வாங்க. பிரபல பதிவர்கள்லாம் வர்றாங்களேன்னு நம்மை வரவேற்க மழை ரெடியா இருக்கு. அதோட அன்பு மழையில நனைஞ்சு திக்கு முக்காடி போறதுக்குள்ள கோட்டைக்குள்ள போய்டலாம்!!


ஸ்ஸ் அப்பாடா! ஒரு வழியா மழையோட அன்புல முழுசா நனையாம கோட்டைக்குள்ள வந்துட்டோம். இங்க செண்பகவள்ளி,  சுடலைமாட சுவாமி , குலசேகர தம்புரான் கோவில்கள் இருக்கு.  எல்லோரும் நல்லா இருக்கனும்ன்னு சாமியை கும்பிட்டுக்கோங்க.
நம்மோட இந்த பயணம் நல்ல படியா அமைய, தொல்பொருள் இலாகாவும் , வனத்துறையும் சேர்ந்தே இந்த கோட்டையை பராமரிக்கிறாங்க.  இங்க ஒரு மூலிகை பண்ணையும், ஒரு அக்வாரியமும் இருக்கு.  இந்த கோட்டை வேணாடு அரசரான வீரரவிவர்மா (கி பி 1595 கி பி 1607)காலத்தில் மண் கோட்டையாக கட்டப்பட்டட்டு, ”மார்த்தாண்டவர்மா”(கி பி 1729 கி பி 1758) காலத்தில கற்கோட்டையாக மாற்றியதாகவும் சொல்றாங்க. 
பத்பநாபபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த திருவிதாங்கூர் மன்னர்களின் முக்கியமான படைதளங்களில் இதுவும் ஒன்று.  இந்த கோட்டை16 அடி உயர கருங்கல் சுவர் கொண்டது. கோட்டை 90 ஏக்கர் பரபளவில் 200 அடி உயரம் உள்ள ஒரு குன்றைசுற்றி கட்டப்பட்டுடிருக்கு. 
இனி, இந்த கோட்டைக்கு ஏன் டி லனாய் கோட்டைன்னு அழைக்கபடுதுன்னு தெரிஞ்சுக்கலாம். வாங்க...
     
மன்னர் முன்பு டச்சு தளபதி சரணடைவது குறித்த ஓவியம்  

1741 ம் வருஷம் குமரி மாவட்டம்.  அப்போது இருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் மார்த்தாண்டவர்மா ஆட்சி செய்து கொண்டு இருந்த காலத்தில டச்சு கிழக்கிந்திய கம்பெனி "குளச்சல் கோட்டையை" அவர்கள் வசம் வைத்து அங்க ஏராளமான வீரர்களுடன் வைத்து ஆட்சி செஞ்சிருக்காங்க. 
அப்ப மன்னருக்கும், டச்சு காரர்களுக்கும் பகை இருந்த சமயம். சில தளபதிகளின் மூலம் டச்சு படையை தோற்கடித்து, டச்சு வீரர்களை சிறை பிடித்து,  நாம நிற்கிற இந்த உதயகிரி கோட்டையில் காவலில் வெசிருக்காங்க. அவங்கள்ல முக்கியமானவர்தான் டச்சு தளபதி யுஸ்டேஷியஸ் -டி- லனாய் அவரது மனைவி மர்கெரெட்டா மகன் ஜான் டி லனாய் அவரது இராணுவத்தளபதி பீட்டர் ப்ளோரிக்.
இவர்களை மார்த்தாண்டவர்மாவின் தளபதி வேலுத்தம்பி கைது செய்திருக்கிறார்.  அப்ப நடந்த பேச்சு வார்த்தையில் ஐந்து வருஷம் கழித்து டச்சு வீரர்களை விடுதலை செய்ய மார்த்தாண்டவர்மா ஒப்புகொண்டாராம் . அப்ப டி லனாய்மார்த்தாண்டவர்மாவின் படையில் சேர விருப்பம் தெரிவித்திருக்கிறார்.  அந்த நேரத்துல அவருக்கு வயது 26 தான் ஆச்சு.
போர் தளவாடங்கள் செய்வதிலும், பீரங்கி குண்டுகள் செய்வதிலும், போர் பயிற்சி அளிபதிலும் சிறந்து விளயங்கியதுனால மன்னர் மார்த்தாண்டவர்மா அவரை படைத்தளபதியாக நியமிச்சிருக்கிறார்.  அதன் பிறகு தளபதி டி லனாய் மன்னர் மார்த்தாண்டவர்மாவிற்கு நம்பிக்கையான படைதளபதிய்யகவும், நண்பராகவும் 37 ஆண்டு காலம் இருந்து தன்னுடைய 62 வயதில் மரணமடைந்திருக்கிறார்.
திருவிதாங்கூர் அரச வீரர்களுக்கு தற்கால போர் தந்திரங்களை, துப்பாக்கி போன்ற ஆயுதங்களை கையாளுவதற்கும் இவர்தான் பயிற்சி அளித்திருக்கிறார். அவருடைய கல்லறையில் தமிழிலும், இலத்தீன் மொழியிலும் இதெல்லாம் குறிக்கப்பட்டிருக்கு.  தன்னுடைய வாழ்நாளின் பெரும் பகுதியை இந்த கோட்டையை சீரமைப்பதிலும், கட்டுவதிலும் செலவிட்டிருக்கிறார்.  
   
இப்ப கோட்டையை சுற்றி பார்க்கலாம் வாங்க.  இங்க தெரிகிற இந்த நீர் நிறைஞ்ச குளத்தை சுத்த படுத்தும் போது நிறைய பீரங்கி குண்டுகள் கிடைச்சிருக்கு.  ஏன்னா இந்த கோட்டை பீரங்கி துப்பாக்கி போன்ற போர் ஆயுதங்கள் செய்யும் தொழில் கூடமாகவும், ஆயுத சேமிப்பு கிடங்காகவும் இருந்திருக்கு.
நாம போறவழியெல்லாம் மூங்கில் காடுகளும், இயற்கை சூழ்நிலையும் மனசை கொள்ளை கொள்ளுது.  நடைபாதைகள் எல்லாம் அழகாக கட்டப்பட்டு இருக்கு.  காட்டு பகுதியையும், மான்களையும் பார்க்கும் போது பிரமாண்டமான அரண்மனைகள் இல்லாமலும், கோட்டை எளிமையாக வும் அதே நேரத்துல அழகாவும் காணபடுது .


மான்களை எல்லாம் பார்த்துக்கிட்டே தொல்பொருள் துறையினரால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பத்பநாபபுரம் கோட்டைக்கு செல்லும் சுரங்க பாதையையும்,  இங்கே அமைக்க பட்ட குகை மூலம் ஆரல்வாய்மொழி என்னும் இடத்தில உள்ள காற்றாடி மலையடிவாரத்திற்கும்,     அங்க இருந்து களக்காடு மலைக்கு சென்று டி லனாய் மூலமா போர் பயிற்சி கொடுக்கபாட்டதா சொல்லப்படும்  அந்த சுரங்க பாதையையும் பத்தின குறிப்புகளை காண மலையடிவாரத்திற்கு வந்துவிட்டோம்.  


போகிற வழியெல்லாம் காடு. வழியெல்லாம் புதர்மண்டி காணபடுது. அதைவிட அங்க இருக்கிற மலை உச்சிக்கு செல்லும் பாதை மிகவும் ஆபத்தானது.செங்குத்தா செல்லும் பாறையின் மேல் சிறிய தடத்துடன் கம்பி பிடியுடன் அமைக்கப்பட்டிருக்கு.  எந்த பிடிமானமும் இல்லாம ரொம்ப சாய்வா இருக்கு ’ . மேலே செல்ல , செல்ல அந்த கம்பி பிடிகளும் கூட இல்லை. உச்சியில் ஒரு சாஸ்தா கோவில் இருந்தாக சொல்றாங்க.
சிதிலமடைந்த ஒரு செங்கல் கட்டிடம் மட்டும் இடிபாடுகளுடன் அங்க இருக்கு. மேலும், நாங்க போன போது மழை மேகம் திரண்டு இப்ப கொட்ட போறேன்னு பயமுறுத்துன நேரம். மேகப்பொதிகள் நம் தலையில் மோதி செல்வதை போல் போனது அற்புதமான காட்சி.
இந்த மாதிரி சூழ்நிலைகள்ல மின்னல் தாக்கும் அபாயம் அதிகம்ங்குறதால சீக்கிரம் கீழ போய்டலாம் வாங்க. கீழே இறங்கும் போது பார்த்து கவனமா இறங்குங்க. கொஞ்சம் கால் ஸ்லிப் ஆனாலும் அவ்வளவுதான். பிடித்து இறங்கும் கம்பிகளும் அவ்வளவா பாதுக்காப்பு இல்லை. 
 
மேலும் அவ்வளவு உயரத்திலிருந்து ஒரு சிறிய கம்பியினை மட்டும் பிடித்து இறங்கும் போது உடம்பில் ஒரு பதட்டம் ஏற்படும். அதனால, ஒருத்தர் கை ஒருத்தர் பிடிச்சுக்கிடு கீழ இறங்கலாம். இந்த பாறை மேல எதும் இல்ல, அதனால, இங்க இம்புட்டு கச்டப்பட்டு ஏறி வர்றது வேஸ்ட். என்ன சுத்திலும் இருக்குற ஊர்லாம் சின்னதா தெரியும் அழகையும், மேகக்கூட்டம் மூஞ்சில மோதும் அனுபவத்துக்காக போகலாம்.
நாம இந்த அடர்ந்த காடுகளுக்கிடையில போலாம் வாங்க, சுத்திலும் மரம், செடி, கொடிலாம் புதர் எல்லாம் மண்டி கிடக்கு. பார்த்து வாங்க. எதாவது பாம்பு கீம்பு வரப்போகுது. இப்படியே போனா, நாம பார்க்கவேண்டிய முக்கியமான இடத்துக்கு போய்டலாம்.
இந்த வழி ரொம்ப தொலைவு மாதிரி இருக்கும். நடக்க முடயாதவங்க இங்க வாடகைக்கு வைத்திருக்கும் சைக்கிளை எடுத்து சுற்றலாம். 1 மணிநேரத்துக்கு மணிகூர் 20 ரூபாய். எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாதேன்னு சொல்றவங்க சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கிட்டு தள்ளிக்கிட்டே வாங்க. சீக்கிரம் போய்டலாம்.
இதுதான் தளபதி டி லனாய்கல்லறை. சர்ச் வடிவில் இருக்கும் தோற்றத்தில் வெளியே தமிழ் மற்றும் இலத்தீன் வாசகங்களுடன் கல்வெட்டு குறிப்புக்கள் காணப்படுது
அந்த குறிப்பு என்னன்னா வேணாட்டுஅரசர் மார்த்தாண்ட வர்மா காலத்திலும், அவருக்கு பின் வந்தகார்த்திகை திருநாள் ராமவர்மா காலத்திலும், முன்னர் டச்சு படை தளபதியாயிருந்த டி லனாய்என்பவர் காயங்குளம் முதல் கொச்சி வரையுள்ள நமது எதிரிகளை கீழ்படுத்தி நம்முடைய வலிய தம்புரானுக்கு விசுவாசமாயிருந்து 62 வயசும் 5 மாசமும் 1777 ஜூன் மாசம் 1 நாள் மரணத்தை அடைந்து இந்த இடத்தில அடக்கம் செய்ய பட்டு இருக்கிறார். 
 
அவருடைய மகன் ஜான் டி லனாய் களக்காடு சண்டையில் காயம் பட்டு இறந்து போனதாகவும் கல்வெட்டில் குறிக்க பட்டுள்ளது. அவரது மனைவி மர்கெரெட்டா அவரது அடுத்தநிலை இராணுவத்தளபதி பீட்டர் ப்ளோரிக் ஆகியோரது கல்லறைகளும் காணபடுது. இந்த இடத்தை சுத்தி கல்லறைகளுக்கே உண்டான ஒரு விதமான ஒரு அமைதி காணபடுது.

இந்த கோட்டை உருவான பின்னரே சுற்றியுள்ள ஊர்களில் அமைதி திரும்பியதாகவும், மன்னர் மார்த்தாண்டவர்மாவும் தளபதி டி லனாய் நிறைய பணிகள் இங்கே இருக்கிற மக்களுக்கு செய்ததாகவும், பொன்மனை என்னும் இடத்தில அணைக்கட்டு ,கால்வாய் கட்டியதாகவும் அதனால் விளை நிலங்கள் செழித்து விவசாயம் நல்ல படியாக இவரது காலத்தில் இருந்ததாகவும் கல்வெட்டு குறிப்புகள் சொல்லுது.


நாம பார்க்கிற இந்த பகுதி ராஜா மார்த்தாண்ட வர்மா (1729-1758) காலத்தில் பீரங்கி குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் செய்யும் உலைகளத்தின் சிதைந்த பகுதிகள். சமீபததில் தொல்பொருள் ஆய்வுத் து‌றையினர் கோட்டையின் அருகே ஒரு சுரங்கப்பாதையினை கண்டுபிடிச்சிருக்காங்க. அந்தப் பாதை கோட்டையிலிருந்து‌ பத்மநாபபுரம் அரண்மனைக்கு ஆபத்து காலங்களில் ரகசியமா போய் வர கட்டியிருக்கலாம்.
 
18 ம் நூறாண்டின் இறுதி பகுதியில் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரா போரிட்ட திப்புசுல்தானின் வீரர்கள் இந்த கோட்டையில் கைதிகளா காவலில் வைக்கப்பட்டதாக சொல்லபடுது. 19 ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இந்தக்கோட்டையில் கிழக்கிந்திய கம்பெனியின் ராணு‌வபடைகள் நிறு‌த்திவைக்கப்பட்டதாகவும் கூறப்படுது‌.
தற்போது வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் உதயகிரி கோட்டையில் பல்லுயிர்மம் பூங்கா ஒன்று பராமரிக்கபடுகிறது. அட ஏன் இப்படி முழிக்குறீங்க!, ”ஜூன்னு தமிழ்ல சொன்னாதான் உங்களுக்குலாம் புரியுமோ!! சில மான்கள், வெள்ளை எலிகள் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு இருக்கு. லவ் பேர்ட்ஸ் மற்றும் மயில்களும், மீன் காட்சியகமும் இருக்கு.
மரக்குடிலில் ஏறுதல், பர்மாபாலம் வலையில் ஏறுதல் போன்ற வீர விளையாட்டுகள் இங்க இருக்கு. இதுக்கு தனி கட்டணம் உண்டு. இதெல்லாம் முடித்து விட்டு வெளியே வரும் போது ஒரு குதிரை நம்மளையே பார்க்குதே!! அது ஏன்னுதான் தெரியலை!!
கோட்டையின் நல்லா சுத்தி பார்த்தாச்சா!? இங்க தெரியுறது தான் நாகராஜா கோவில். இது கோட்டையின் நுழைவு வாயில் பகுதியிலேயே அமைந்து இருக்கு


ஒருவழியா வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையை சுற்றி பார்த்தாச்சு இப்ப அதன் வரலாறும், அதுகண்ட போராட்டங்களும் உங்களுக்கு தெரிந்திருக்கும். இதுல கவனிக்க பட வேண்டிய முக்கியமான் விஷயங்கள் என்னனா...,.

நுழைவு கட்டணம் 10 ரூபாயும், ஸ்டில் கேமராவிற்கு 30 ரூபாயும், வீடியோ கேமராவிற்கு 50 ரூபாயும் வசூலிக்கபடுது .சில முறை கேடுகள் நடந்தாலும் , இங்க பெரும்பான்மையான இடம் வனபகுதிகளா இருக்குறதால காதலர்களாய் இல்லை நண்பர்களாய் வரும் ஆண் -பெண்களுக்கு அனுமதியில்லை. குடும்பத்துடன் வருபவர்களுக்கும் தனியாய் வரும் ஆண்கள் தனியாய் வரும் பெண்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படுது (அப்ப தனித்தனியா போய் ஜாய்ன் பண்ணிக்கலாமான்னு குதர்க்கமா யாரும் கேள்வி கேக்காதீங்கப்பா! ஏன்னா, பதில் சொல்ல அக்காவுக்கு தெரியாது.
 
 
உதயகிரி கோட்டை அனைவரும் பார்க்க
வேண்டிய இடம்