உதயகிரிக் கோட்டை ஒரு வரலாற்றுப்பார்வை - கோ. ஜெயக்குமார்.
உதயகிரிக் கோட்டை இந்தியாவின் தற்காலத் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. இது நாகர்கோயில் நகரில் இருந்து 14 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் கி.பி 1600 களில் கட்டப்பட்டதாகக் கருதப்படும்.
பத்மநாபபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு திருவிதாங்கூர் அரசர்கள் ஆண்ட காலத்தில் இக் கோட்டை
அவர்களுக்குப் பெரிய சொத்தாக அமைந்திருந்தது. இது பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர்
அரசர் மார்த்தாண்ட வர்மரால் மீளக் கட்டப்பட்டது.

90 ஏக்கர் (36 ஹெக்டேர்) பரப்பளவை உள்ளடக்கியுள்ள
இக் கோட்டையுள் 200 அடி (79 மீட்டர்) உயரமுள்ள ஒரு குன்று உள்ளது. இதற்குள் துப்பாக்கிகளை
வார்ப்பதற்கான வார்ப்பு உலை ஒன்றும் உண்டு.

உதயகிரிக் கோட்டையுள் காணப்படும் டி லனோயின் சமாதி.
டச்சு அட்மிரலான இயுஸ்ட்டாச்சியஸ் டி லனோய் (Eustachius De Lannoy) என்பவரது அவரது
மனைவி, மகன் ஆகியோரதும் சமாதிகள் இங்குள்ள பகுதி அழிந்த நிலையில் காணப்படும் ஒரு கிறிஸ்தவ
சிற்றாலயத்துள் உள்ளன. ஒரு காலத்தில் இக் கோட்டை இவரது பெயரைத் தழுவி தில்லானைக் கோட்டை
(டி லனோய்ஸ் கோட்டை - De Lennoy's Fort) என அழைக்கப்பட்டு வந்தது.

இக்கோட்டை, திருவனந்தபுரம் - நாகர்கோயில் தேசிய
நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புலியூர்க்குறிச்சியில் உள்ளது. பத்மநாபபுரத்தைத் தலைநகராகக்
கொண்டு ஆண்ட திருவிதாங்கூர் அரசர்களின் மிக முக்கியமான படைநிலை இதுவேயாகும். இக்கோட்டை
பாரிய கருங்கற்களால் ஒரு தனியான குன்றைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ளது.

பல்லுயிர்மப் பூங்கா உதயகிரிக் கோட்டை தற்போது தமிழக
வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கே பல்லுயிர்மப் பூங்கா என்ற பெயரில் சில
மான்கள் வேலியிடப்பட்ட சிறிய பகுதியில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளன. மேலும் காதற்பறவைகளும்
கினி பன்றிகளும் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.

கினிக் கோழிகள் தன்னிச்சையாயத்
திரிகின்றன. மீன் காட்சியத்தில் சில வகை மீன்கள் உள்ளன. அத்தோடு பர்மா பாலத்தில் நடத்தல்,
மரக் குடிலில் ஏறுதல் போன்றவற்றுக்குத் தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இப் பூங்காவில்
குடும்பத்துடன் வருவோர், தனியாய் வரும் ஆடவர், தனியாய் வரும் பெண்டிர் ஆகியோருக்கு
மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. காதலர்களாய் அல்லது நண்பர்களாய் வரும் ஆண் - பெண்களுக்கு
இங்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
இதன் முதல் மன்னர் கார்த்திகை திருநாள் ராமவர்மன். இவர் காலத்திலிருந்து வேணாடு திருவிதாங்கூர் என்ற பெயரில் செயல்பட தொடங்கியது வேணாட்டு மன்னன் பால மார்த்தாண்ட வர்மா காலத்தில் தலைநகர் கல்குளத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.
பின்பு வந்த திருவிதாங்கூர் மன்னர்களும் திருவனந்தபுரத்தையே தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர். வெள்ளி நிறத்தில் வலம்புரிச் சங்கு பொறித்த செந்நிறக் கொடியைக் கொண்டு ஆட்சி நடத்தப்பட்டது.
1 ஜூலை 1949 இல், திருவிதாங்கூர், மலையாளம் பேசும் இன்னொரு அரசாக இருந்த கொச்சியுடன் இணைந்து திருவிதாங்கூர்-கொச்சி ஆனது. பின்னர் இது மதராஸ் மாநிலத்தின், மலபார் மாவட்டம் ஆக்கப்பட்டது. இச் சமஸ்தானத்தின் கடைசி அரசர் சித்திரைத் திருநாள் பாலராம வர்மர் ஆவார்.
மார்த்தாண்ட வர்மர் (1706 - 1758) திருவிதாங்கூர் அரசை உருவாக்கி அதனைப் பல ஆண்டுகள் வெற்றிகரமாக ஆண்டுவந்தவர் ஆவார். இவர் அட்டிங்கல் இளைய ராணியின் மகன். இந்தியாவின் தென்கோடியில் இருந்த சிறிய சிற்றரசான வேணாட்டின் அரசுரிமை இவரது மாமனாரான ராஜா ராம வர்மரிடம் இருந்து இவருக்குக் கிடைத்தது.
இத் தாய்க் கால்வழி மரபுரிமை
நாயர்களிடம் இருந்து வருவது. மிகுந்த தந்திரமும், புத்தியும் நிறைந்த மார்த்தாண்ட வர்மர்,
முடிக்குரிய இளவரசராக இருந்தபோதே பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியாருடன் 1723
ஆம் ஆண்டில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார்.
உதயகிரி கோட்டை அனைவரும் பார்க்க
வேண்டிய இடம்





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக