வியாழன், 2 மே, 2013

தொல்பொருள் கொலைகள்



இந்தியா என்பதும் அனைவருக்கம் நினைவிற்கு வருவது, பல்வேறு மாநிலங்கள், பல்வேற மொழிகள், பலவகைப்பட்ட கலாச்சாரங்கள். இவற்றில் சிதைந்த மறைந்த பண்பாட்டை கலாச்சாரங்களை நோக்கியே சிலரின் பார்வை செந்று கொண்டிருக்கின்றன. என்த ஒரு உயிரினமும் தான் வாழ்கிற, தன்னைச் சார்ந்து இயங்குகிற  இடிப்படைகளை சிறப்பாக கட்டமைத்துக் கொள்ளதான் விரும்புகின்றன. மனிதனும் அப்படிதான்.
இந்திய மண்ணிற்கு நீண்டதொரு பாரம்பரியம் உண்டு. நமது பாரம்பரியத்திற்கு மிகப்பெரிய வரலாறுகளும் இருக்கின்றன. சிந்துசமவெளி நாகரீகம் தொடங்கி அன்மையில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வு சாசனங்கள் வரையில் நமது பண்பாட்டை பரைசாற்றி நிற்பகைளாக உள்ளன. பலவகைப்பட்ட சமயத்தாரின் பதிவுகளை கொண்டாடுவதிலும், பெருமைப்ட்டுக் கொள்வதிலுமே நம்முடைய கவனம் சென்றுகொண்டிருக்கின்றன. இவற்றை கைவிட்டு விட்டு வரலாறுகளாக காணக்கூடிய ஒரு பரந்து பட்ட ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்திய நாட்டில் 28 மாநிலங்கள்ள உள்ளன. இவற்றள் தமிழ்நாடும் ஒன்று என்ற பெருமைஒவ்வொரு தமிழனையும் தலைநிமிரச்செய்கின்றன. இந்த தலைநிமிர்வி னமது பண்பாட்டை உயர்த்தி பிடிப்பதாகவும் அமைய வேண்டும். தமிழ்நாடு என்று  தற்போது நாம் அழைத்துக்கொள்ளம் இந்த மாநிலம் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் ‘சென்னை மகாணம்’ (Madras State)  என்றே அழைக்கப்பட்டது. தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய பலகட்ட போராட்டங்கள் நடந்தேறின. குறிப்பாக ‘சுந்தரலிங்கனார்’ என்ற பெரியவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்துள்ளார். அதன்பிறகே 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்றுள்ளது.
கி.மு. 500 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தில் இருந்தே தமிழர்கள் வாழ்ந்ததற்காண தரவுகளை நமது கல்வெட்டுச்செயதிகள் சான்று பகர்கின்றன. நமது நாட்டிற்காண எல்லை அமைப்பைப் பற்றி நமக்கே கிடைத்திருக்கும் இலக்கண நூலான தொல்காப்பியம் ‘வடவேங்டம் தென்குமரி ஆயிடைத்தமிழ் கூறும் நல்லுலகம்’ (1-3) என்றும் சங்க இலக்கிய நூல்களுள் ஒன்றான புறநானூறு வையக வரைப்பால் தமிழகம் கேட்ப, என்றும் ஐம்பெரும் காப்பிங்களுள் முதல் காப்பிமான சிலப்பதிகாரத்தில் ‘இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய’ (அரங்கேற்றுகாதை- 35) ஆகியன சான்று பகர்கின்றன.
தமிழகத்தை பேரரசுகளும், சிற்றரசுகளும் ஆட்சி புரிந்துள்ளனர். குறிப்பாக பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜயநகரத்து பேரரசுகள் என நமது நாட்டை பலர் ஆண்டதற்கான  குறிப்புள் ஏராளமாக இருக்கின்றன. இவர்கள் கால சிறப்புகளை பல்வேறு கலைவடிவங்களில் காணுகின்றோம். கோயில்கள், சமணபடுக்கைகள், சிற்பங்கள், கல்வெட்டுகள், நடுகற்கள் இவற்றின் வாயிலாக நாம் அறிந்துக்கொள்ள கூடிய வரலாற்றக்குறிப்புகள், இவற்றினூடாக ஆராய்ச்சிகள் என பல தகவல்கள் குவிகின்றன.
வரலாற்றை நாம் ஆராய்வதற்கான ஏராளமான குறிப்புகள் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கிடைக்கின்றன. குகைகோயில்கள், சமண சிற்பங்கள், படுக்கைகள், பாறை ஓவியங்கள், அகழ்வராய்ச்சி சான்றுகள் உள்ளிட்ட தொல்பொருள்கள் பாதுகாக்கப்படவேண்டிய பண்பாட்டு பெட்டகமாகம். இந்த வரலாற்றுக் குறிப்புகளை தோண்ட தோண்ட ஏராளமான தகவல்கள் மலை போல் குவிந்து கிடைக்கின்றன. பல்வேறு சிறப்புகளக்கு சொந்தமான தென்மாவட்டங்களில் மிக முக்கியமான மாவட்டம் மதுரை மாவட்டம். மதுரை என்றாலே கற்றவர்கள் மத்தியில் தமிழ் தோன்றிய இடமாகக் கூறிகொள்வர். காரணம் மூன்று சங்கங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டதுதான் என்று சொல்லிக்கொள்ளலாம். சிலர் மதுரை என்றால் மீனாட்சி அம்மன், அழகர் கோயில் என்று சொல்லிக்கொள்வதில் ஆத்திக வாதிகள் சிலர் . பெருமை பட்டு கொள்கின்ற உணவுப் பிரியர்கள் ஜிகர்தண்டா என்று கூறுவர் இருப்பினும் மதுரை கூறும் வரலாறு என்ன, அது சார்ந்த தொல்பொருள்களை பாதகாக்கப்படுகின்றனவா இல்லை தவறிவிட்டோமா என்பதுதான்?
ஆங்கலேயர் ஆட்சி காலத்தில் சென்னை மாகாணத்தில் இருந்த மாவட்டங்களில் மதுரையும் ஒன்று, அப்போது திண்டுக்கல், தேனீ, விருதுநகர், ராமநாதபுரம் மற்றம் சிவகங்கை உள்ளிட்டவை மதுரையோடு உள்ளடங்கியதாகவே விளங்கியது. இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு தனிமாவட்டமாக பிரிக்கப்பட்ட மதுரையில் 7 சட்டமன்ற தொகதிகள் (மதுரை வடக்கு, தெற்கு,திருமங்கலம், பேரையூர், உசிலம்பட்டி, வாடிப்பட்டி,, மேலூர்) உள்ளடக்கியாதாக இருந்தது.  கிழக்கின் ஏதென்ஸ், மல்லிகை நகர், தூங்கா நகரம் என்ற சிறப்பு பெயர்களும் உண்டு.
பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள மதுரை மாவட்டத்தினுடைய கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த ஒத்த கடை  என்ற ஊரில் அமைந்துள்ள மலைதான் யானை  மலை. மதுரையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் சுமார் 7கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.  இந்த யானை மலைக்கு நரசிங்க மங்கலம் என்ற ஒரு பெயரும் உண்டு. இம்மலையின் நீளம் 4 கி.மீ (4000 மீட்டர்), 1200 மீட்டர் அகலம், 400 மீட்டர் உயரமும் கொண்டது. பார்ப்பவர்களுக்கு மிகப்பெரிய யானை படுத்து உறங்குவது போல தோன்றும்.  இது மதுரையின் அடையாளமாக விளங்கி வருகிறது இந்த யானைமலை என்ற தொல்பொருள்.
மாறஞ்சடையான் பராந்தகநெடுஞ்சடையன் என்ற பாண்டிய மன்னன் கி.பி. 770 ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆட்சி புரிந்த காலகட்டத்தில், யானை மலை வடமேற்குப் பகுதியில் நரசிங்க பெருமாளுக்கு குடவரைகோயில் கட்டி முடிக்கின்ற தருவாயில் நோய்வாய்பட்டு இறந்துபட இவனது தம்பி ‘மங்கல விசய அதையன்’ குடமுழக்கு செய்த தகவல்களை கல்வெட்டு வாயிலாக அறியமுடிகிறது. அதே போன்று முருகனுக்கான கோயில் ஒன்று உள்ளதாகவும், ‘நம்பிரான் பட்ட சோமாசி பரிவிராஜா’ என்பவர் புதுப்பித்து கொடுத்ததாக கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று சான்று பகர்கின்றன. சுமார் 2500 ‘ஆண்டுகால பழமையை கொண்ட மதுரை பகுதியில் உள்ள யானைமலைக்கு எண்பெருங்குன்றம், கழிஞ்ச மலை என்ற பெயர்களும் உண்டு.
யானைமலையில் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்ப்பிராமிக் கல்வெட்டு ஒன்று கூறும் செய்தி,
                ‘இவ குன்றத்தூ உறையுள் பாதந்தான்
                ஏரி ஆரிதன் அத்துவாயி அரிட்டகாயிபன்’
என்று காணப்படுகின்றன.
‘இவ’ என்பது யானையைக் குறிக்கும். ‘குன்றம்’ என்றால் ‘மலை’, ‘இவகுன்றம்’ என்றால் யானை ‘மலை’ என்பது பொருள். பா என்றால் படுக்கையையும் குறிக்கும்.  இந்த இடத்தில் சமணதுறவிகள் படுக்கை என்று பொருள்படும். ஏரிஆரிதன், அத்துவாயி, அரட்டக் காயிபன், என்ற இரண்டு சமணத்துறவிகளின் தங்கிய செய்தியை இக்கல்வெட்டுச் சான்று உறுதிப்படுத்துகின்றன.
யானைமலையின் நுழைவாயிலில் செல்லுகின்றபோது நரசிங்கபெருமாள் குடவரை கோயிலுக்கு முன்பாகவே வலது புறத்தில் சமண சிற்பங்கள் உள்ள பகுதி உள்ளது. தொல்பொருள் துறையினரால் அறிவிப்பு மற்றும் தகவல்பலகை வைக்கப்பட்டு உள்ளது. இந்தப்பகுதியில் உள்ள பெரிய பாறை ஒன்றில் மகாவீரர் தியானத்தில் இருப்பதுபோன்று ஒரு சிலை இடதுபுறத்தில் அமைந்திருக்கும். வலது புறத்தில் மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி, அம்பிகா ஆகிய சிற்பங்கள் வரிசையாக செதுக்கப்பட்டிருக்கம். இந்தச் சிற்பங்களின் மேல் சுதை பூசியது போன்று தோற்றமளிக்கும். இவற்றிக்கு கீழே கிரந்தம், வட்டெழுத்து ஆகிய வடிவில் கல்வெட்டுகள் இருக்கின்றன.. இக்கல்வெட்டு கி.பி. 9, 10 நூற்றாண்டிணைச் சேர்ந்தவையாகும். அதே போன்று சமணப்படுக்கைகளும் உள்ளன.
குகையின் வெளிப்புற தோற்றத்தில் காணப்படும் இந்த உருவங்கள் ‘அர்த்த பரியாங்காசன’த்தில் அமர்திருக்கும் தீர்த்தங்காரரின் உருவமாகும். (படம்) இந்த சிற்பகாட்சிகளை ஒரு பாறையில் செய்வித்தவர் அச்சணந்தி என்ற முனிவர் ஆவார். இப்படி மதுரைமாநகர்  சுற்றி ஏராளமான ஊர்களில் தொல்பொருள் செய்திகள் கிடைக்கின்றன. குறிப்பாக அரிட்டாபட்டி, யானைமலை, அழகர்மலை, மாங்குளம், கீழ்வளவு, கீழ்கயில்குடி, மேல்குயில்கடி, மத்துபட்டி, கொங்கர் புளியங்குளம், விக்கிரமங்கலம், சித்தர்மலை, கருங்காலகடி, திருவாரவூர், வரிச்சூர், குன்னத்தம், உத்தமபாளையம், கிரண்ணடி, திருகாட்டாம்பள்ளி, கிடாரிபட்டி உள்ளிட்ட இடங்களில் காணப்படுகின்றன.
மதுரை மாநகரில் சுமார் 13 இடங்களில் பிராமிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ‘துவரிமான்’ என்ற கற்காலகருவி ஒன்று அரிட்டாப்பட்டியிலும், மாங்குளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ‘புலமான்’ என்ற இடத்தில் ‘நடுகற்கள்’ கிடைத்துள்ளது. பலசங்கப்புலவர்கள் மதுரை மாநரில் வாழ்ந்தள்ளனர். குறிப்பாக நக்கீரனார், நல்லந்துவனார், குமரனார், மருதனிலநாகனார், இளந்திருமாறன், பெருங்கொள்ளனார், சீத்தலைசாத்தனார், கண்ணணாகனார், சேந்தம்பூதனார் ஆகிய புலவர்கள் வாழ்ந்த குறிப்புகள் கிடைக்கின்றன.
தொல்பொருள் ஏராளமான தரவுகள் மதுரை மாநகரில் இருந்து வருவதை இதன்வாயிலாக அறிந்து கொள்ளமுடிகிறது. பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள்கள் குறிவைத்து வேட்டையாடுகின்ற போக்கு தமிழகத்தில் உள்ள சில வேடர்களால் அரங்கேறிவருவதை சமீப காலமாக காண முடிகிறது. ஆங்கிலேயர்கள் செய்த பிழையை தற்பொழுது தமிழன் என்று சொல்லி மார்தட்டிக் கொண்டி செய்துவரும் வேடதாரிகளை காணமுடியும். அரசு, அரசியல் இரண்டுமே மக்களுக்காணதாக இருக்க வேண்டும். தொல்பொருள் கொலைகளை செய்து (மலைகலைவெட்டுதல்) கொண்டிருக்கும் இந்த தொலை தூர (நாசக்கார) கும்பலுக்கு என்ன தண்டனையை கொடுத்து, ஈடுசெய்யப்போகிறது நமது அரசு என்பது கேள்விக்குறியே.
குடவரைகோயில்கள் இருந்தால் என்ன, சமணர் படுக்கைள், சிற்பங்கள், கல்வெட்டுகள், நடுகற்கள், கருவிகள் போன்ற மாநகரத்தின் தொல்பொருள் இருந்தால் என்ன, இவர்களுக்கு வேண்டியது கருப்பு, சிவப்பு கிராணைட் கற்கள் தான். வரலாற்றை எப்படி தங்களுக்கானதாக மாற்றி எழுத தரவுகளை அழித்து மாற்றி தவறான ஆவணமாக்குகிற முயற்சியில் ஆங்கிலேயர்கள் ஈடுபட்டார்களோ அதுபோலலே அடையாள தமிழர்களும் தொல்பொருள் கொலைகளைச் செய்து வரலாற்றுச் சுவடுகளே இல்லாமல் போகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மதுரை மாநகரத்தில் 50 சதவீதத்திற்கும் மேலான மலைகள் கொலை செய்யப்பட்டு அறுத்து கூறு போடுவதைப்போல் போட்டு சாலைகளில் சடலங்களைப்போல அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. எரிப்தற்கல்ல மெருகேற்றி விற்பனை செய்து பணம் பார்ப்பதற்காக. இதுவரை பார்த்ததே பல ஆயிரம் கோடிகள் என்கிறார்கள் காவல் துறையினர்.
அரசுக்கு தெரியாமல் மின்கம்பத்தில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் எடுத்துப்பயன்படுத்தும் சாதாரணகுடிமகனை சிறையில் அடைக்கும் நிலையில், பெருவாரியான மக்கள் வாழுகின்ற மதுரை மநகர் சுற்றியுள்ள ஊர்களில்உள்ள மலைகளை கொலைசெய்து அந்தப்பணத்தில் கப்பம் பெற்றுக்கொண்டு சுதந்திரமாக வெளியே சுற்றித்திரிவதுதா வேடிக்கையான சம்பவம். ஒரு வீட்டில் 5 சவரன் நகை அதிகமாக வைத்திருந்தால் கூட நடவடிக்கை எடுக்கம் மத்திய புலனாய்யவுத் துறை ஆயிரம் கோடிகளை விழுங்கிவிட்டு பொதுச்சொத்துகளை கொலைசெய்துள்ள கொலைக்கார கும்பல்கள்  மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது. இழந்த வரலாற்றை தொல்பொருள்களை நமக்கு ஈடுசெய்து தரப்போகின்றதா?
மதுரை மாகரில் நடந்தேரியுள்ள தொல்பொருள் கொலைகள் அரசுக்கு தெரியாதா? அரசின் கட்டுபாட்டில் கனிமவளங்கள் பாதுகாக்கப்படவேண்டியவை என்று மார்தட்டிக் கொண்டிருக்கம் ‘தமிழ்நாடு கனிமவள நிறுவனம்’ என்செய்தது. இனிமேல் என்ன செய்ய போகின்றது? மக்கள் வரிபணத்தில் .ஊதியம் வாங்கும் இவர்கள் மக்களுக்கான தொல்பொருள்களை பாதுகாக்க தவறிவிட்டு கொலைகார கும்பலுக்கு துணைபோக காரணம் என்ன நடவடிக்கை எடுக்க விரும்பவில்லையா? அல்லது அச்சுருத்தப்பட்டனரா இல்லை ஒவ்வொரு மலை கொலைக்கும் இத்தனை மூட்டைப் பணப்பைகள் என பெற்றுக்கொண்டனரா? பணத்தைப் பார்த்ததும் வாய்மூடிய ஊமைகளாகி விட்டார்களா என்பதுதான் தற்போது மதுரை மக்கள் மத்தியில் அனலாய் கொதிக்கும் கேள்விக்கனைகள்.
தொல்பொருள் கொலைகளை பணத்திற்காக திட்டமிட்டு அரங்கேற்றும் இந்த முதலைகளின் உடம்பில் விலைமதிப்பற்ற பொருள்கள் உள்ளன என்பதற்காக உயிரோடு வேட்டி எடுத்துக்கொள்ள அனுமதி அளிப்பார்களா? இதற்கு இசைவுதர மறுக்கும் இவர்களது மனம் எங்களின் மலைகளை எப்படி கொலை செய்யலாம், இந்த துணிச்சலை இந்த நாசகார கும்பலக்கு அளித்தது யார்?  இந்த கொலைகள் குறித்து சாட்சியம் அளிக்க நாம் மறந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தொல்பொருள் கொலைகளை தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். ஒருமித்தகுரலில் ஒட்டுமொத்த தமிழகமும் ஒலித்தால்தான் காப்பாற்ற முடியும் என்கிற எண்ணம் இளைஞர்களின் மனதில் உருவாக வேண்டுமென்ற எதிப்பார்ப்புகளை ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றன.