ஞாயிறு, 13 மே, 2018

பட்டு நகரம் ஆரணி வரலாறு - கோ. ஜெயக்குமார்

பட்டு நகரம் ஆரணி வரலாறு  - கோ. ஜெயக்குமார் 


தென்னிந்தியாவிலுள்ள தமிழ்நாட்டில்,  திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆரணி மாநகரம் பட்டுக்கு மிகவும்  பெயர் பெற்று விளங்கும் முதல்நிலை நகராட்சியாகும். 2014 தேர்தல் படி ஆரணி லோக்சபா அரசியலமைப்பு 10 இலட்சம் தகுதியுள்ள வாக்காளர்களை கொண்டுள்ளது. இங்கு பட்டு நெசவைத்தவிர, விவசாயம், நெல் அரிசி உற்பத்தி மிகவும் சிறப்புற்றதாகும். இங்கு தயாரிக்கும் பட்டு நெசவானது இந்திய அளவில் ஏன் உலக அளவுகூட சிறப்புற்று தனக்கென்றே ஒரு தன்னிகரற்ற தரத்தினை பெற்றுள்ளது. இதேப்போல் நெல்லினை உயர்நுட்ப தரத்துடன் அரிசியாக்கி வியாபாரம் செய்யும் அதிநவீன ஆலைகள் ஆரணியிலும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் பரவலாக காணப்படுகின்றது.
இவைமட்டுமல்லாது கல்வித்துறையில் பல்லவேறு சிறப்புமிக்க பள்ளிகள், கல்லூரிகள்மற்றும் பல கல்விநிறுவனங்களையும், தொழில் நிறுவனங்கள், வங்கிகள்,மருத்துவமனைகள், பொழுதுபோக்கு ஸ்தலங்கள்  என அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள ஆரணி மாநகரம் வரலாற்றையும் தாண்டி இன்றய இளைய தலைமுறையினரால் சிறப்புற்று விளங்குகிறது.
File:Silk saree in Devikapuram.jpg
ஆரணி பெயர் வரக்காரணம்
ஆரணி நகருக்கு ஆரணி என்று பெயர் வர மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன.அவற்றுள் முதலாவது ஆர் என்பதற்கு அத்தி (மரம்) என்று பொருள் உண்டு. முற்காலத்தில் இந்த இடத்தில் அதிகப்படியான அத்திமரங்கள் அணிஅணியாக காணப்பட்டதால் ஆரணி என்று பெயர் வந்திருக்கலாம்.
கோட்டை மைதானம், ஆரணி, தமிழ் நாடு
இரண்டாவதாக இந்த பெயர் சமஸ்கிரத மொழியிலிருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது இதற்கு காரணம் ஆரண்யம் என்றால்  சமஸ்கிரத மொழியில் மரங்கள் நிறைத்த இடம் அதாவது காடுகள் என்பதாலும்.
தொடர்புடைய படம்
மூன்றாவதாக இந்த இடத்தில் கமண்டல நாக நதியொன்று (ஆறு) பாய்ந்ததால் (ஆறு + அணி ) ஆரணி என்று இறுதியாக பெயர் பெற்றதென்றும் கூறப்படுகிறது.

பட்டு நகரம் ஆரணி வரலாறு க்கான பட முடிவு

ஏகோஜி பெங்களூரில் கிளம்பி தஞ்சையை நோக்கி வருகிற வழியில் ஆரணியில் இருந்த கோட்டையைத் தாக்கிப் பிடித்துக் கொண்டார். அங்கு ஆரணி நிர்வாகத்தை கவனிக்க ஆட்களை நியமித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு தஞ்சைக்கு வந்தார். அங்கு அப்போது ஆட்சி புரிந்து வந்த மதுரை சொக்கநாத நாயக்கரின் தம்பியான அழகிரியைத் தோற்கடித்து திருச்சிக்கு விரட்டிவிட்டு தஞ்சாவூர் நாயக்க அரசுக்குச் சொந்தமானவர்களிடம் ஆட்சியை ஒப்புவித்தார். 


தஞ்சை நாயக்க மன்னர்களிடமிருந்து வரவேண்டிய பேஷ்கஷ் பணத்தை வசூல் செய்து கொண்டு திரும்புமாறு தனது இரு வஜீர்களுக்கும் உத்தரவிட்டுவிட்டுத் தன் ஊருக்குத் திரும்பத் தொடங்கினார். அப்படி அவர் திரும்பி வரும் வழியில் கொள்ளிடம் ஆற்றைக் கடந்து திருமழபாடி எனும் ஊரில் தங்க நேர்ந்தது. காரணம் அப்போது நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவிகளில் ஒருவருக்குப் பிரசவ நேரம் நெருங்கியிருந்ததே காரணம். திருமழபாடியில் முகாமிட்டிருந்த ஏகோஜியின் மனைவிக்கு அங்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைதான் சரபோஜி I என்று பதவிக்கு வந்த மன்னர்.தஞ்சை நாயக்க மன்னரிடமிருந்து பேஷ்கஷ் வசூல் செய்து கொண்டு திரும்புவதற்காக அங்கு முகாமிட்டிருந்த இரண்டு வஜீர்களுக்கும் தஞ்சை மன்னன் பேஷ்கஷ் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். அப்போது தஞ்சை அரண்மனையில் ராஜாவின் வாரிசு யார் என்பதில் போட்டி, சண்டை ஏற்பட்டிருந்தது. இவர்களுக்குள் நடந்த குடும்பச் சண்டையில் தங்களைப் பதவியில் அமர்த்திய பீஜப்பூர் சுல்தானையும், அவர்களது படைத் தளபதி ஏகோஜியையும், பேஷ்கஷ் வாங்கிச் செல்ல காத்திருந்த வஜீர்களையும் மறந்து போய் அலட்சியம் செய்து வந்தனர். இவ்விரு தூதர்களையும் ஏமாற்றிவிடலாம் என்ற எண்ணம்கூட இருந்ததாகத் தெரிகிறது.

பட்டு நகரம் ஆரணி வரலாறு க்கான பட முடிவு

சிவாஜியால் மீண்டும் உறுதியாக்கப்பட்ட ஜாகிர்: (கி.பி .1677-1679

1677-ம் ஆண்டின் தொடக்கத்தில் சிவாஜி அவரது இராணுவ படைகளுடன் கோல்கொண்டாவை நோக்கி சென்றார்.அங்கு அவர் கூடப் ஷாஹ்வை  சந்தித்து கர்நாடகாவை (அவர் தந்தை ஷஹாஜி வெற்றிகொண்ட பகுதி தவிர்த்து)  மற்ற வெற்றிகளை பற்றி ஒரு ரகசிய ஒப்பந்த மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தினான். ஆனால் அது சிவாஜி, கூட்டப்ப ஷாஹ் மற்றும் பேஜ்கபூரிடம் பிளவை ஏற்படுத்தியது. பிறகு அவர்களின் உடன்பாட்டின்படி கூட்டப்ப ஷாஹ் அவனது பணம்,குதிரைகள் மற்றும் பீரங்கிகளை சிவாஜிக்கு கொடுத்தான். அவற்றை பெற்ற சிவாஜியின் படை 1677 மார்ச்சில் கர்னூல், கடப்பா,மதராஸ் (தற்போதைய சென்னை) நோக்கி படையெடுத்தது.
தொடர்புடைய படம்
செஞ்சி, வேலூர்-ஐ வெற்றிகொண்டபிறகு தஞ்சையையும் கைப்பற்ற நினைத்தான் சிவாஜி. ஆனால் அது தனது தந்தை ஷஹாஜி ஏற்கனவே பற்றிவிட்டதால் தனது சகோதரனான வெங்காஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தினான். ஆனால் அதை கொடுக்க அவன் தயாராக இல்லை. சிவாஜி தனது படையெடுப்புக்களை கை விடுவதாகவும் இல்லை. அப்பொழுது ஆரணியை தனது பொறுப்பில் வைத்திருந்த வேதாஜி பாஸ்கர் பண்ட் கோட்டையின் சாவியை ஏற்று சிவாஜிக்கு சேவை செய்துவந்தான். அவவின் சேவைக்கு விருதாக அவனை அரணியின் ஜாகிர் சென்று மீண்டும் உறுதிப்படுத்தினான் சிவாஜி. (இந்த தகவல் ஜேம்ஸ் க்ராண்ட் டப்-ன் "History of the Mahrattas" (1863) புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.)  இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக பூசிமைக்குப்பம் மற்றும் SV நகரம் பகுதில் அரண்மனைகள் தற்பொழுதும் இருப்பது உண்மையே.


நடு காட்டில் ஒரு அரண்மனை
தனஞ்செயன்மன்னர்கள் ஆட்சியில் அவர்களது பரம்பரையை பறைசாட்டும் வகையில் ஒவ்வொரு விதமான கோவில்கள், அரண்மனைகள் நினைவு மண்டபங்கள், பல சமூக பணிகள் செய்து அதை கல்வெட்டுகளில் செதுக்கிவைத்துள்ளனர். அந்த வகையில் சோழ பரம்பரையில் ராஜராஜசோழன் பல ஆயிரக்கணக்கான சிறு கோவில்களும் பெரிய கோவில்களும், ஏரிகளும், அணைகளும் கட்டி விவசாய புரட்சி ஏற்படுத்தினார். ஆனால் ஜாகிர்தார் என்ற அரசன் பிரான்ஸ் காதலிக்கு நடுகாட்டில், அழகிய அரண்மனை கட்டி அதில் நீச்சல் குளம் அமைத்து வாழ்ந்த வரலாறு வேலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த வேலூர் திருவண்ணாமலை பிரிக்கப் பட்டு தனித்தனி மாவட்டங்களாக ஆக்கப்பட்டன.
தொடர்புடைய படம்
திருவண்ணாமலையில் உள்ளது. பூசிமலைக்குப்பம், புதுப்பாளையம், ஏ.ஏ. நகர் பகுதிகள். அந்த அடர்ந்த காட்டு பகுதிகளில் மனித நடமாட்டமே இருக்காது. யானை, நரி, காட்டெருமை என வனவிலங்கு வாழும் பகுதி. தற்போது சாலைகள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் மன்னர்கள் ஆட்சி செய்த போது, கொடிய வனவிலங்குகள் வாழ்ந்த காட்டுப்பகுதி இது.  இந்த காட்டின் நடுவே, கிபி 17ம் நூற்றாண்டின் நடுவில் இருந்து ஆரணியை மராட்டியர் ஆட்சி செய்தனர். கி.பி. 17ம் நூற்றாணடிற்கு பிறகு ஆரணிக்கு வடகிழக்கிலும், 6 கிலோ மீட்டர் தொலைவில் செய்யாறு சாலையில் கமண்டல நாகநதியின் வடகரையில் புதியதாக ஒரு நகரை அமைத்து அதற்கு சத்திய விஜய நகரம் என பெயரிட்டு அங்கிருந்து இன்றைய ஆரணி வட்டத்தை ஜாகீர் ஆட்சி செய்து வந்தார்.கி.பி.18ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆற்காடு நவாப்பின் கீழும், மேற்படி ஜாகீரை ஆட்சி செய்தனர்.  
தொடர்புடைய படம்
இந்த சத்திய விஜயநகரின் ஒரு அழகிய செந்நிற செங்கல்லால் ஆன ஒரு அரண்மனை கட்டினான். அங்கு சிறப்பாக ஆட்சி செய்துவந்த நிலையில் காலப்போக்கில் ஜாகீர்தார் மன்னர் கடல்மார்க்கமாக பிரான்சுக்கு பயணித்தபோது, அங்கு ஒரு பேரழகியை பார்த்து அவள் அழகில் மயங்கி, அந்த அழகியை கடல்மார்க்கமாக இந்தியாவில் உள்ள வேலூர் மாவட்ட ஆரணி விஜயநகரத்துக்கு அழைத்து வந்து ரகசியமாக வாழ்ந்துள்ளான். ஒரு நாள் அந்த பிரான்ஸ் அழகி மாறுவேடம் அணிந்து ஜாகிர்தார் ஆண்ட விஜயநகரை பார்வையிட ஆசைப்பட்டு சென்றுள்ளார். அப்போது ஜாகீர்தார் மன்னன் முதல் மனைவியோடு வாழ்ந்த அரண்மனையை பார்த்து பிரமித்து அதேபோல ஒரு அரண்மனையை கட்டி அதில் என்னை வாழ வையுங்கள் என ஜாகீர்தாரிடம் கூறிவுள்ளார் அந்த அழகி. அவளது கட்டளையை ஏற்று  நடுகாட்டில் முதல் மனைவிக்கு கட்டிய அரண்மனைப்போல் அழகிய செந்நிற அரண்மனை கட்டி உள்ளார் அந்த மன்னன். அதில் மூன்று அடுக்கு கொண்ட மாடிகள், மாடிகளுக்கு செல்ல மூன்று இடங்களில் படிகள் அதில் ரகசிய படிகள், முக்கியமாக விஜயநகரம் அமைந்துள்ள ஆரணி அரண்மனைக்கும், காட்டில் கட்டப்பட்ட அரண்மனைக்கும் ரகசிய சுரங்கப்பாதை வழியாக பிரான்ஸ் காதலியை சந்தித்து வந்ததாக வரலாறு கூறுகிறது.
 


ஆரணி கோட்டை
தொண்டை மண்டலத்தில் பல்லவர் வரலாற்று பக்கங்களிலும், சம்புவராயர் வரலாற்று பக்கங்களிலும் தனியிடத்தை பிடித்து இருப்பது ஆரணி பகுதி. பிற்கால சோழர்கள் ஆட்சியில் சிற்றரசர்களாக குறுகிப்போன பல்லவர் வழித்தோன்றல்களில் ஒரு பிரிவான கடம்பூர் சம்புவராயர்கள் படைவீட்டை தலைநகராக கொண்டு தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தனர். இவர்கள் சோழர்களின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டு சுதந்திரமாக தங்கள் மூதாதையர்களின் பெருமையை நிலைநாட்ட முயன்றனர் என்பதும் வரலாற்றில் பதிவான ஒன்று. இவர்களில் கோப்பெருஞ்சிங்கன் என்பவன் சேந்தமங்கலத்தில் சோழர் படையை வென்று 50 ஆண்டுகளுக்கும் மேல் அங்கிருந்தபடியே ஆட்சி செய்தான் என்பதும் வரலாறு. இவ்வாறு படைவீடு சாம்ராஜ்யத்துடன் இணைந்திருந்த ஆரணி, படைவீடு படிப்படியாய் தனது பெருமையை இழந்த நிலையில் விஜயநகர பேரரசின் காலத்தில் முக்கியத்துவம் பெற்றது. விஜயநகர பேரரசின் வேலூர் சிற்றரசுக்கு உட்பட்ட மண்டலமாக ஆரணி விளங்கியது. 
வரலாற்று சின்னமாக  கருதப்படும் ஆரணி கோட்டை மைதானத்தில் அமைந்துள்ள கெல்லியின் நினைவுத்தூண் கி.பி.1760ல் நடந்த கர்நாடக போரில் ஆற்காடு கோட்டையும், ஆரணி கோட்டையும் கிழக்கிந்திய கம்பெனி வசம் வந்தது. அப்போது மதுரையை ஆண்ட மகமூத்கான் என்ற மருதநாயகம், ராபர்ட்கெல்லி ஆகியோர் கிழக்கிந்திய கம்பெனி படைக்கு ஆதரவாக ஆரணி கோட்டையை தாக்கினர். இந்த தாக்குதலில் ஆரணி கோட்டையின் பெரும் பகுதி நாசமானது. இந்த போரில் வீரமரணம் அடைந்த ராபர்ட் கெல்லி, கர்னல் வைசூப் உட்பட பலரின் நினைவாக நினைவுத்தூண்கள் எழுப்பப்பட்டன. இதில் கெல்லியின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத்தூண் இப்போதும் கோட்டை மைதானத்தில் கம்பீரமாக நிற்கிறது. 
ஆரணி மண்டலேஸ்வரர்கள், தங்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதியை கண்காணிக்கவும், பாதுகாக்கவும், நிர்வாகம் செய்யவும் வசதியாக கோட்டை கட்டிக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இப்படி கட்டப்பட்டதுதான் இன்று கான்கிரீட் கட்டிடங்களின் அடித்தளமாக மாறிப்போயுள்ள ஆரணி கோட்டை. இந்த கோட்டைக்காக ஆரணி அடுத்த படைவீட்டை சுற்றியுள்ள குன்றுகளில் இருந்து பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. விஜயநகர பேரரசர்களின் கோட்டை கொத்தளங்களில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்குமோ அத்தனை சிறப்பம்சங்களும் ஆரணி கோட்டையிலும் இடம்பெற்றிருந்தன. மண்டலேஸ்வரர்களுக்கான அரண்மனைகள், அதிகாரிகள், படைவீரர் குடியிருப்புகள், ஆயுத கிடங்கு, குதிரைகளுக்கான லாயம் என அனைத்து அம்சங்களுடன், சுற்றிலும் அகழியுடன் இந்த கோட்டை விளங்கியது. அதோடு சூரியகுளம், சந்திர குளம், சிம்மக்குளம் போன்ற குளங்களும் கோட்டையை ஒட்டி அமைந்தன. இதில் இரண்டு குளங்கள் மட்டுமே இப்போதும் இருந்து கொண்டிருக்கின்றன. 
தொடர்புடைய படம்
அகழியும் தூர்ந்து ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. விஜயநகர பேரரசுக்கு பிறகு இஸ்லாமியர் வசம் சிக்கிய ஆரணி பகுதி பின்னர் மராட்டியர் வசம் சென்றது. அதன் பின்னர் ஆற்காடு நவாபுகளின் பிடியில் இது சிக்கியது. பின்னர் நடந்த ஆற்காடு நவாபு வாரிசு பூசலில் சந்தா சாகிப்புக்கு ஆதரவாக கிளம்பிய பிரெஞ்சுப்படைக்கும், ராபர்ட் கிளைவ் தலைமையிலான கிழக்கிந்திய படைக்கும் இடையே கி.பி.1760ல் நடந்த கர்நாடக போரில் ஆற்காடு கோட்டையும், ஆரணி கோட்டையும் கிழக்கிந்திய கம்பெனி வசம் வந்தது. அப்போது மதுரையை ஆண்ட மகமூத்கான் என்ற மருதநாயகம், ராபர்ட்கெல்லி ஆகியோர் கிழக்கிந்திய கம்பெனி படைக்கு ஆதரவாக ஆரணி கோட்டையை தாக்கினர். இந்த தாக்குதலில் ஆரணி கோட்டையின் பெரும் பகுதி நாசமானது. இந்த போரில் வீரமரணம் அடைந்த ராபர்ட் கெல்லி, கர்னல் வைசூப் உட்பட பலரின் நினைவாக நினைவுத்தூண்கள் எழுப்பப்பட்டன. இதில் கெல்லியின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத்தூண் இப்போதும் கோட்டை மைதானத்தில் கம்பீரமாக நிற்கிறது. மற்றவர்களின் நினைவுத்தூண்கள் அருகருகே அமைந்துள்ளன. 
தொடர்புடைய படம்
பல நினைவுத்தூண்கள் இருந்த இடங்கள் அழிக்கப்பட்டு வீட்டுமனைகளாக மாறி வருகின்றன. கிழக்கிந்திய கம்பெனியின் வசம் கோட்டை வந்த பின்னர் ஆரணியின் நிர்வாகம் முழுவதும் அவர்கள் வசமே சென்றது. பின்னாட்களில் வடாற்காடு மாவட்டத்தின் அங்கமாக ஆரணி மாறி, பட்டு நெசவு, விவசாயம் என்ற இரண்டு பிரதான தொழில்களில் புகழ்பெற்று வளர்ச்சியடைய தொடங்கியது. இங்கிலாந்து ராணியின் நேரடி பார்வையில் நடந்த பிரிட்டிஷாரின் ஆட்சியின் போது ஆரணி தாலுகா தலைநகராக பரிணமித்தது. அப்போது இதன் நிர்வாகம் சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலகங்களும் கோட்டைக்குள் இருந்த கட்டிடங்களில் பிரிட்டிஷாரால் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. அந்த அலுவலகங்கள் இப்போதும் அங்கு அதே கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. அதோடு கோட்டை வளாகத்தில் புதிய கட்டிடங்களும் எழுப்பப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
சனி, 13 மே, 2017தமிழரின் வரலாற்றை தாங்கி நிற்கும் கீழடி -முனைவர் கோ.ஜெயக்குமார்.


தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கிராமம் தான் கீழடி (Keezhadi)  ஆகும். மதுரை நகரிலிருந்து 11 கி.மீட்டர் தொலைவில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.
அகழ்வாராய்ச்சி.
சர்ச்சையை ஏற்படுத்திய  கீழடி அகழ்வாராய்ச்சி  அதிகாரி மாற்றம்
இந்தியத் தொல்லியல் ஆய்வகம் சார்பில் இந்த ஊரில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் சங்க காலப் பாடல்களில் (சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்றவற்றில்) குறிப்பிடப்பட்டிருந்த பல பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக, இங்கு 40இற்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டன. இதுவே தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட பெரிய அகழ்வாராய்ச்சி ஆகும்.

முத்துமணிகள், பெண்களின் கொண்டை ஊசிகள், தாயக்கட்டை, சதுரங்கக் காய்கள், சுடுமண் பொம்மைகள், சில்லுகள், நூல் நூற்கும் தக்ளி போன்றவை இங்கு கிடைத்துள்ளன. வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, மேற்கூரைகள் ஓடுகள் வேயப்பட்டிருந்திருக்கலாம் என்பதையும், வீடுகளின் அருகே பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இருந்திருக்கலாம் என்பதனையும் இங்குக் கிடைத்துள்ள சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன.

வீடுகளில் குளியலறைகள் இருந்ததற்கான சான்றும் கிடைத்துள்ளது. தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு நிறங்களிலான ஏறத்தாழ 1000 கிலோகிராம் திணிவுடைய மண் ஓடுகள் அகழ்வாராய்ச்சியின் பொழுது கிடைத்திருக்கின்றன.

தமிழக-உரோம வர்த்தக உறவுகள் குறித்த சான்றின் மூலம் அந்தக்கால மக்களின் வணிகத் தொடர்பை அறிந்துகொள்ள முடிகின்றது.

கீழடியில் அகழ்வாராய்ச்சி 5 ஆண்டுகளுக்கு தொடரும் என்று மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிக அடையாளங்கள் கிடைத்துள்ளன என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தைப் புதூரில் கண்டறியப்பட்ட பழங்கால சுடுமண் உறைகிணறுகள்.
அகழ்வாய்வு பணிகள் நடைபெறும் கீழடிக்கு வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மகேஷ் சர்மாவுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
keezhadi
தொல்லையல் கண்காணிப்பாளர் அமர்நாத்தை இடம் மாற்றம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா, கீழடியில் அகழ்வாய்வு 2 ஆண்டுகளாக நடைபெறுகிறது என்றும் மேலும் 5 ஆண்டுகளுக்கு அகழ்வாய்வு பணிகள் தொடரும் என்றார். அகழ்வாய்வு பணிகளுக்காக 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

கடந்த 2 ஆண்டில் கிடைத்த சான்றுகள் புத்தகமாக தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிகாரிகள் மாற்றப்படுவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி தான் அமர்நாத் மாற்றப்பட்டு தமிழகத்தைச் சேர்ந்த ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். அகழ்வாராய்ச்சியில் தமிழர் நாகரிக அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் கி.பி 2 ம் நூற்றாண்டில் கீழடியில் சிறந்த நாகரிகம் தழைத்துள்ளது என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.

கீழடியில் கிடைக்கும் ஆய்வு முடிவுகள் தமிழகத்தின் வரலாற்றை மாற்றி அமைப்பதற்கான வாய்ப் புகள் உண்டு. தமிழகத்தில் கல்வெ ட்டுகள், புலவர் பாடல்கள் ஆகியவை உண்டு. ஆனால் நம்மிடம் வரலாற்று சாட்சியங்கள் இல்லை. தற்போது அவை கீழடியில் கிடைத்துள்ளன. அவை அனைத்து சான்றாதரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு தமிழனின் விருப்பமாகும்.

திங்கள், 6 மார்ச், 2017

தமிழ்த் தொன்மை மீட்புப் பணியில் பேராசிரியர் நா.வானமாமலையின் பங்களிப்பு - முனைவர் கோ.ஜெயக்குமார்.
தொல்லியல்ஆய்வுக் கட்டுரைகள்தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சிதறிக்கிடக்கும் வரலாற்றுத் தொன்மைகளையும், உலக அளவில் கேட்பாரற்று பாதுகாக்கப்படாமல் கிடைக்கப்பெறும் தரவுகளையும் கொண்டு ஒப்பிட்டு ஆராயப்பட வேண்டும். இதனைச் செய்தால் தான் முழுமையான தொன்மைகளை மீட்டெடுப்ப தோடு, பாதுகாக்கவும் முடியும். வரலாற்றுத் தொன்மைகள் குறித்தான முழுமையான ஆய்வும் நமக்கு கிடைக்கப்பெறும்.

பேரா. நா.வா. நமக்கு தொன்மைகள் குறித்த புரிதல் வேண்டும் என்று கூறுகின்றார். குறிப்பாக தமிழரின் நாட்டுக் கலைகள் எப்பொழுது தோற்றம் பெற்றன. அவனது வாழ்க்கையில் கலையின் பணி யாது போன்ற வினாக்களின் ஊடாகவே கலையின் தன்மைகளை ஆராய முற்படுகின்றார். நமக்குள்ளே இதுபோன்று எழும் வினாக்களுக்கு விடை காண வேண்டும் என்றால் குறிப்பிட்ட சமூகம் பற்றியான முழுமையான புரிதல் வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகின்றார்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த ஒரு இனத்தினுடைய அடையாளங் களாகவும், சான்றுகளாகவும் கிடைக்கப்பெறும் பொருட்கள், புதைக்கப்பட்ட மனிதர்களின் உடல், எலும்புகள், பயன்படுத்தப்பட்ட பொருள்கள் போன்றவற்றைக் கொண்டு அவர்கள் வாழ்ந்த காலத்தையும், பண்பாட்டையும் அறிய முடியும்.

குகைச்சித்திரங்கள் அனைத்தும் அழகுணர்ச்சி யால் தோன்றியவை அல்ல. ஆற்றல், நம்பிக்கை, சடங்கு இவற்றின் விளைவாகத் தோன்றியவை என்பதை அறிய வேண்டும்.

தமிழக வரலாற்றுக் கண்ணோட்டங்களை நாம் ஆராய்வதற்கு முன்பு இரண்டு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. முதலாவது எண்ணற்ற வேற்றுமைகளுக்கு மத்தியில் இயங்கும் தமிழ்ச்சமூகம். இரண்டாவது துல்லியமான வரலாற்று ஆவணங்கள் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தாதது. இதனால் தான் கால ஆராய்ச்சியில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

சங்க இலக்கியம் பற்றி ‘1800 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கனகசபைப்பிள்ளையின் நூலும், சமணர்களைப் பற்றிய சக்கரவர்த்தி நாயினார் எழுதிய நூலும், சோழ வம்சத்தைப்பற்றி கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார் எழுதிய நூலும், பல்லவர் பற்றி பி.டி. சீனிவாச அய்யங்கார் எழுதிய நூல்களும் இன்னும் பல நூல்களும் ஆய்வாளர்கள் அறிந்தவையே. இருப்பினும் இவையே முழுமையான தமிழர் வரலாறு ஆகாது.

முழுமையான தமிழர் வரலாறு எழுதப்பட வேண்டுமாயின் தமிழர் சமூகம் எப்படி மாற்றம் பெற்று வந்துள்ளன. அதற்கான அடிப்படைக் காரணங்கள் யாவை என்ற புரிதலோடு முழுமை யான தமிழர் வரலாறு எழுதப்பட வேண்டும். தற்போது நம் காலத்தில் பண்பாடு சார்ந்த பலவற்றை மீட்டெடுக்க வேண்டிய சூழலில் நாம் உள்ளோம் என்பதை நமக்கு முன்னரே நா.வா. எச்சரித்துள்ளார். சங்க இலக்கியங்கள், மூவேந்தர், சமணர், பல்லவர் பல ஆராய்ச்சி நூல்கள் வந்தாலும் அவை மட்டுமே போதுமானவை அல்ல. அது சார்ந்து மேலும் பல ஆராய்ச்சி நூல்கள் வர வேண்டும். தொன்மை சார்ந்த ஆராய்ச்சி தொடர வேண்டும்.

பண்டைய கலைகள் அனைத்தும் வாழ்க்கை யோடு தொடர்பு கொண்டவை. பிரான்சு நாட்டில் உள்ள ‘டோர்டோக்னே’ என்ற குகையில் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இருந்த ஓவியங்கள் காணப்படுகிறது என அகழ்வாய் வாளர்கள் கருதுவதையும், இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் ஹோவுங்காபாத் அருகே பிம்பெட்கா நகரில் கண்டறியப்பட்ட செய்யப்பட்ட கருவிகள் அதே காலத் தொன்மை உடையவை என்பதை சுட்டிக்காட்டுகின்றார்.

நடுகல் பற்றிய ஆய்வரங்கம் ஒன்று தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறையினரால் நடத்தப் பட்டது. 24. 7. 1973இல் நா.வா ‘நடுகற்களும் நம்பிக் கைகளும்’ என்ற தலைப்பில் கட்டுரை. ஒன்றை படித்துள்ளார். நடுகற்கள் பற்றிய முழுமையான புரிதலை விளக்கிக் கூறுகின்றார். சங்க இலக்கியத்தில் புறநானூறு 231ஆம் பாடலில் அதியமான் நெடுமான் அஞ்சி இறப்பைச் சுட்டிக்காட்டி நடுகல் பற்றிய சான்றை அவ்வை விளக்கியுள்ளதையும் குறிப்பிடு கிறார்.

நாட்டுத் தொழில்களில் கலை, சுவரோவியம், மண்பாண்ட அலங்காரம், பெருங்கோயில் கலைகள் போன்றவற்றை பண்டைய தமிழர்கள் வளர்த் தெடுத்தனர். இருப்பினும் நா.வா.வின் வருத்தம் தற்காலத்தில் நாட்டுக் கலைகள் பல அழிந்து வருகின்றன. அல்லது பணம் தரும் தொழிலாக மாறிவருகிறது. இந்த நிலையில் நாட்டார் கலை களை ஆய்வதற்கான துவக்க முயற்சிகள் கூட தமிழ்நாட்டில் ஈடுபடவில்லை. எனவே ஆய்வாளர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றார்.

வரலாறு பற்றி நா.வா. தரும் விளக்கம் நமக்கு முழுமையான புரிதலை தரும்.

‘வர்க்கங்களுக்கிடையே இயற்கையில் இருக்கும் முரண்பாடுகள் காரணமாகவே போராட்டங்கள் நிகழ்கிறது. அப்போராட்டங் களின் விளைவாகச் சமூக மாறுதல்கள் தோன்றுகின்றன’

என்றும்

‘பொருளாதார வாழ்வையும் சமூக முரண் பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு மக்களின் வரலாறு எழுதப்பட வேண்டும்’

என்றும் (தமிழர் வரலாறும் பண்பாடும், பக்- 4, 9) கூறுகிறார்.

வரலாறு என்பது சரித்திரங்களின் கால நிகழ்வுகளை விவரிக்கின்றன. இருப்பினும் தமிழ்ச் சமூகம் தோற்றம் முதல் பெற்று வந்துள்ள மாற்றங்கள், அதற்கான சான்றுகளோடு எழுதப்படும் வரலாறே முழுமையான வரலாறு என்று கூறுகின்றார்.

பழங்கால இனக்குழுச் சமூக வாழ்க்கையில் இருந்து படிப்படியாகவும், திடீரெனவும் முன்னேறி வரும் சமூகமாகவும், அரசுகளை நிறுவி, பண் பாட்டையும், கலைகளையும், தத்துவங்களையும் வளர்த்துப் பல நூற்றாண்டுகளாக முன்னேறியும் சில சமயங்களில் பின்வாங்கியும் வாழ்ந்த மனித சமூகத்தின் சரித்திரமே தமிழக வரலாறு என்று குறிப்பிடுகிறார்.

தமிழ் தொன்மை சார்ந்து பல ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும் அது எப்படி நிகழ்த்தப் பட வேண்டும் என்ற புரிதலைப்பற்றிக் கூறும் நா.வா, இலக்கியத்தில் உள்ள சான்றுகளையும், அகழ்வாராய்ச்சி மற்றும் கல்வெட்டுகளுக்கு முந்தைய காலத்து சான்றுகளையும் அயல்நாட்டு வரலாறு, அவர்கள் நம்மோடு கொண்டிருந்த தொடர்புகள் பற்றிய குறிப்புகளோடு ஆராய வேண்டும். அப்போதுதான் முற்கால வரலாற்றை நாம் முழுமையாக அறிய முடியும்.

இடைக்கால வரலாற்றை முழுமையாக அறிய வேண்டும் என்றால் இஸ்லாமிய வரலாற்றறிஞர்கள் பெர்சியன் மொழியில் எழுதிய வரலாற்றை விமர்சன ரீதியாக கற்கவேண்டும். ஆங்கில ஆட்சிக்கு முற்கால சரித்திரத்தை அறிய போர்த்துகீசிய பிரஞ்சுப் பாதிரிமார்களின் தாய்மொழியிலும் இலத்தீனிலும் எழுதிய கடிதங்கள் போன்றவற்றை ஆராய்ந்தால் முழுமையான இடைக்கால வரலாற்றை நாம் பெற முடியும் என வலியுறுத்துகின்றார்.

தமிழகத்தில் கிடைக்கக்கூடிய வரலாற்றுச் சான்றுகளை எப்படி பாதுகாத்து வெளியிட வேண்டும் என்று தாமரை இதழில் நா.வா. எழுதிய கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தமிழ்நாட்டு வரலாற்றுச் சான்றுகளான பல கல்வெட்டுகள் மைசூரில் இருப்பதாகவும் அவை கவனிக்கப்படாமல் அழிந்து கொண்டிருப்ப தாகவும் அவற்றை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும் கூறுகின்றார்.

மதுரையில் நடைபெற்ற புதைபொருள் துறையின் கருத்தரங்கில் பேசிய ஒருவரின் கணக்குப் படி 20,000 கல்வெட்டுப் பிரதிகள் மைசூரில் தமிழக தொல் வரலாற்றுச் சான்றுகள் கவனிப்பாரின்றி அழிந்து வருவதாகவும் அவற்றை மீட்டெடுக்க வேண்டும். அதே போல் நமது காலத்தில் பல இடங்களில் சிதறிக்கிடக்கும் தொன்மைகளை மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டும். அது சார்ந்த வரலாற்று ஆய்வுகள் நிகழ்த்தப்பெற வேண்டும் என்று பதிவு செய்கின்றார்.

மைசூரில் தமிழ்நாட்டு வரலாற்றுச் சான்றுகள் பல அழிந்து வருவதற்கு காரணம் மத்திய அரசின் சாசனத்துறையை உதகையில் இருந்து மைசூருக்கு மாற்றியது. அதனை சென்னைக்கு கொண்டுவர வேண்டும் என்று அன்றைக்கு அமைச்சராக இருந்த நெடுஞ்செழியன் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டதையும், மைசூரில் இருக்கும் இந்த சாசன நிறுவனம் நான்கு மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மைசூர் ஆகிய மாநிலங்களின் சாசனங்களை வைத்துள்ளது. எனவே அந்தந்த மாநிலத்திடம் அவர்களது சாசனம் ஒப்படைக்கப் பட்டு பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் பயனடைய முடியும் என்கிறார்.

மாநில அரசானது கொண்டுவரப்படும் தொன்ம சான்றாதாரங்களை உரிய முறையில் வைத்து அந்த துறை சார்ந்த அறிஞர்களைக் கொண்டு படியெடுத்தல், பதிப்பித்தல், புகைப்படம் எடுத்துப் பாதுகாத்தல் போன்ற பணிகளை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மேலும் பல வரலாற்றுத் தரவுகளும் அது சார்ந்த ஆவணங்களையும் நாம் பெறமுடியும்.

அச்சுக்கு கொண்டு வரப்படும் ஆவணங்களை ஒரு நிறுவனமாக தொடர்ந்து இயக்க வேண்டும். அப்போது தொன்மம் சார்ந்த அறிவைப் பெற்ற ஆய்வாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதோடு நமது ஆதாரங்கள் நம்மிடம் இருக் கின்றன என்ற பெருமையோடு நம்மால் கூற முடியும். இதை கேட்டு வலியுறுத்தி பெறும் உரிமை தமிழக அரசுக்கும் மக்களுக்கும் உண்டு.

தமிழகத்தில் தொன்மைகளை பாதுகாப்பது மற்ற மாநிலத்தில் உள்ளவற்றை கேட்டுப் பெறு வதோடு நின்று விடுவதில்லை. பழமை வாய்ந்த கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகள், பாறை ஓவியங்கள், சமணப்படுக்கைகள், குகைகள், நடுகற்கல், செப்புப் பட்டயங்கள், சுவடிகள் என அனைத்தையும் பாதுகாப்பதற்கான பயிற்சி அளிக்கப்படவேண்டும் இந்த துறையில் ஆர்வ முள்ள ஆய்வாளர்களை தவறவிடக்கூடாது என்பதே நா.வாவின் விருப்பம்.

தமிழகத்தில் கிடைக்கப்பெறும் வரலாற்றுச் சான்றாதாரங்களோடு ஆய்வுப்பரப்பை சுருக்கிக் கொள்ளாமல் பல்வேறு மாநிலங்களில் சிதறிக் கிடக்கும் நமது பண்பாட்டுக் கூறுகளை மீட்டெடுக்க வேண்டும். குறிப்பாக கேரளாவில் 15ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய சாசனங்கள் தமிழில் உள்ளன. விஜயநகர நாயக்கர்கள், அவர்களின் தளவாய்களான மதுரை நாயக்கர்கள், இவர்களின் தளவாய்கள் அழகப்ப முதலியார், இராமப் பையன், நசரப்பையன், கிருஷ்ணப்பையன் முதலியோரது சான்றுகள் தமிழிலும், மலையாழ்மா என்ற மொழியின் வரி வடிவத்திலும் கிடைக்கப் பெறுகின்றன.

தென் மைசூரில் சமண சமய சாசனங்கள், தமிழ்நாட்டு மன்னர்களின் படையெடுப்புகள், தமிழக சிவனடியார்கள், கங்கர் படையெடுப்புகள், பழைய கன்னடம், நவீன கன்னடம் இவைகள் தமிழ்மொழியில் கிடைப்பனவற்றையுமாவது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று ஆய்வு மனப்பான்மையை உருவாக்கித் தருகின்றார்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் வரை பல்லவர்களின் தொன்மங்களும், குல சேகர பாண்டியன், வீரபாண்டியன், சுந்தரபாண்டியன் போன்ற பாண்டியர்களின் தொன்மைகளும், நெல்லூர் வரை பிற்காலச் சோழர்களின் தொன்மைச் சான்றுகளும் கிடைக்கப் பெறுகின்றன. அதே போல 18ஆம் நூற்றாண்டில் கர்நாடக நவாபுகள் நைஜாமின் பிரதிகளாக ஆற்காட்டில் இருந்து ஆண்டனர். அவர்கள் கால அரசியல் மற்றும் போர் நிகழ்வுகள் இவைகளும் வரலாற்றின் முக்கியத் தொன்மங்கள் இவற்றைப் பற்றிய ஆய்வுகள் மூலம் மீட்டெடுக்க முடியும் என்கிறார்.

இவற்றைப் போலவே வெள்ளையரின் ஆட்சிக் காலத்தில் மாவட்ட ஆட்சியர்களாக மராட்டியர்கள் விளங்கினர் (1801 முதல் 1815 வரை). எனவே இந்த காலகட்டத்தில் பல்வேறு சாசனங்கள் மராட்டிய மொழியில் உள்ளன. அந்த தொன்மை சாசனங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இதைப்போலவே சோழர் காலத்தில் சாதியப் பிரிவினைகள் இருந்தன. இது இடங்கை, வலங்கை என்ற இரு பிரிவினுள் அடங்கியிருந்தது. அதனுள் இருந்த பல்வேறு சாதிய முரண்களை கல்வெட்டுச் சான்றுகளோடு ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும்.

பல்வேறு வகையான சமூகப் பிரிவுகள் இந்த இரு பிரிவினுள் அடங்கியிருந்தது. அவர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, தொழில் முறை போன்றவை மீட்டெடுக்கப்படவேண்டும். பொங்கல் விழாவைப் பற்றி தமிழர் வரலாறும் பண்பாடும் என்ற கட்டுரைத் தொகுப்பு நூலில் ‘தைபிறந்தால் வழி பிறக்கும்’ என்ற முதுமொழியைக் கொண்டு நிலத்தில் விதைக்கப்பட்ட நெல்லை அரிசியாக்கி அதனை சூரியனுக்கு படையல் இடுவதையும் பூமியின் செழிப்புக்கு காரணம் சூரியன் என மக்கள் நம்பிக்கையையும் பதிவு செய்கிறார். இந்த மகிழ்ச்சி யினை ‘வள்ளைக் கூத்து’ நெல்குத்துவதுபோல ஆடி மகிழ்ந்ததையும் பதிவு செய்கின்றார்.

கர்நாடகத்தில் சங்கராந்தி பயனுள்ள மரபு வழக்கம் என்ற கட்டுரை ஒன்று ‘புதியவானம்’ என்ற இதழில் நா.வா. எழுதியுள்ளார். தைப்பொங்கல் காணும் பொங்கலில் (ஜனவரி 17ஆம் நாள்) அங்கு பொங்கல் விழாவாக கொண்டாடப்படுவதையும் கதைப்பாடல், கூத்து போன்ற பண்பாட்டு தொன்மைசார்ந்து நடைபெறுவதையும் பதிவு செய்கின்றார்.

நாட்டார் இலக்கியங்களான கதைப்பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள், பள்ளுப்பாட்டு, வில்லுப் பாட்டு, கலைகள், பண்பாடு சார்ந்த தொன்மைகள் பாதுகாக்கப்படவேண்டும். அது சார்ந்த ஆய்வுகள் வேண்டும். குறிப்பாக மக்கள் இலக்கியமான இலக்கியத்தை மாவட்ட வாரியாக உள்ள பாடல்களைத் திரட்ட வேண்டும். திரட்டப்பட்ட பாடல்கள் முழுமையாக அச்சாக்கம் பெற வேண்டும். நாட்டார் கலைக்காட்சிக் களஞ்சியம் ஒன்று தமிழகத்தில் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் தலைமுறைகளைக் கடந்து பண்பாடு காக்கப் பெறும் என்பதை முன்வைக்கிறார்.

தமிழகத்தில் தற்போது கலைகளைப் பாது காக்கவும், பண்பாட்டை மீட்டெடுக்கவும் போராட்டம் நிகழ்த்த வேண்டிய சூழலுக்கு

நாம் தள்ளப்பட்டுள்ளோம் இந்த நிலைக்கு செல்லக்கூடாது என்பதற்காகத்தான் தொன்மங் களை மீட்டெடுக்க ஆய்வுகளை வளர்க்கவேண்டும் என்று பேராசிரியர் நா.வானமாமலை அன்றைக்கே முற்போக்கு சிந்தனையோடு பதிவு செய்துள்ளார்.

வரலாறு என்பது பாதுகாக்க வேண்டியது மட்டுமல்ல. அப்படிப் பாதுகாத்தால் மட்டுமே அழியாமல் எதிர்வரும் சமூகம் பயன்பெற விட்டுச் செல்லமுடியும். எனவே நமது அடையாளங் களையும் தொன்மைகளையும் அழிக்க நினைக்கும் சக்திகளிடம் இருந்து அவற்றை மீட்டெடுப்பதே நா.வா போன்ற மிகப்பெரிய ஆளுமைகளுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாக இருக்கமுடியும்.

சான்றாதார நூல்கள்:-

1. இந்திய இலக்கியச் சிற்பிகள் நா.வா, தோதாத்ரி, சாகித்ய அகாதெமி, புதுதில்லி.

2. நடுகற்களும் நம்பிக்கைகளும், நா.வா.

3.  புறநானூறு.

4. கருநாடகத்தில் சங்கராந்தி பயனுள்ள மரபு வழக்கம், நா.வா, புதிய வானம்- 1972.

5. தமிழ் ஆராய்ச்சியின் புதிய எல்லைகள் (நா.வா. மணிவிழா மலர்) 1978.

6. தமிழரின் பண்பாடும் தத்துவம், நா.வா, என்.சி.பி.எச். 1973, சென்னை.

7. தமிழர் கலை வரலாறும் கதைப்பாடல் ஆய்வும், நா.வா, பல்கலைப்பதிப்பு - 2009.

செவ்வாய், 3 மே, 2016

விக்டோரிய அரசின் வரலாறு - முனைவர் கோ.ஜெயக்குமார்.

விக்டோரிய அரசின் வரலாறு - முனைவர் கோ.ஜெயக்குமார்.

விக்டோரியா காலம் - 1858


1858 இல் விக்டோரியா அரசியின் உத்தரவின் படி இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் பிரித்தானிய இந்தியா என்ற பெயரில் பிரித்தானிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தன. ஹாரிஸ் பிரபு சென்னையின் முதல் ஆளுனராக பிரித்தானிய அரசால் நியமிக்கப்பட்டார். நாட்டின் நிருவாகத்தில் இந்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவர்களுக்கான கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்திய கவுன்சில் சட்டம், 1861 ஆளுனரின் நிருவாகக் குழுவுக்கு சட்டமியற்றும் உரிமைகளை அளித்தது.1892 மற்றும் 1909 ஆம் ஆண்டுகளில் இயற்றப்பட்ட கவுன்சில் சட்டங்கள் ஆளுனரின் நிருவாகக் குழுவை மேலும் விரிவுபடுத்தி புனரமைத்தன. வி. சடகோபச்சாருலு இக்குழுவின் முதல் இந்திய உறுப்பினராவார். கல்வியறிவு பெற்ற இந்தியர்கள் சட்டத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். 1877 இல் டி. முத்துசாமி ஐயர், சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாகப் பொறுப்பேற்றார். இதற்கு ஆங்கிலோ இந்திய ஊடகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அவரே சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதியாகவும் பணியற்றினார் (1893 இல்).1906 இல் சி. சங்கரன் நாயர், தலைமை வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியரானார்.

இக்காலகட்டத்தில் பல சாலைகள், தொடருந்து இருப்புப் பாதைகள், அணைகள், கால்வாய்கள் போன்றவை சென்னை மாகாணத்தில் கட்டபட்டன. சென்னை மாகாணப் பெரும் பஞ்சம், 1876-78, இந்தியப் பஞ்சம், 1896–97 ஆகிய இரு பெரும் பஞ்சங்கள் இக்காலகட்டத்தில் சென்னை மாகாணத்தைப் பீடித்தன. பஞ்சத்தின் பாதிப்பால் 1871 இல் 3.12 கோடியாக இருந்த மாகாண மக்கள் தொகை 1881 இல் 3.08 கோடியாகக் குறைந்தது. இப்பஞ்சங்களும் செங்கல்பட்டு உழவர் வழக்கு (1881-83), சேலம் கலவர வழக்கு (1882) ஆகிய நிகழ்வுகளைக் காலனிய அரசு கையாண்ட முறையும் மாகாண மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தின.

விடுதலை இயக்கத்தின் தொடக்க காலம்

1922 இல் அன்னி பெசண்ட் 19 ஆம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் சென்னை மாகாண மக்களிடைய தேசியவாதம் தலைதூக்கியது. இம்மாகாணத்தில் தொடங்கப்பட்ட முதல் அரசியல் அமைப்பு, 1852 இல் கசுலு லட்சுமிநரசு செட்டி என்பவர் தொடங்கிய சென்னை மக்கள் சங்கம் (Madras Native Association) ஆகும். ஆனால் அவ்வமைப்பு நெடுநாட்கள் செயல்படவில்லை. இதனைத் தொடர்ந்து மே 16, 1884 இல் சென்னை மகாஜன சங்கம் தொடங்கப்பட்டது.

இந்திய தேசியக் காங்கிரசின் முதல் மாநாடு மும்பையில் நடைபெற்ற போது (டிசம்பர் 1885) அதில் கலந்து கொண்ட 72 மாநாட்டு உறுப்பினர்களில் 22 பேர் சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அந்த 22 பேரில் பலர் சென்னை மகாஜன சங்கத்தின் உறுப்பினர்கள். காங்கிரசின் மூன்றவது மாநாடு டிசம்பர் 1887 இல் சென்னை நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது. மாகாணம் முழுவதிலிருந்தும் 362 பேர் இதில் கலந்து கொண்டனர். இதன் பின்னர் 1894, 1898, 1903, 1908, 1914 மற்றும் 1927 ஆகிய ஆண்டுகளிலும் காங்கிரசு மாநாடுகள் சென்னையில் நடைபெற்றன.

1882 இல் எலனா பிளவாத்ஸ்கி மற்றும் ஹென்றி ஆல்காட் ஆகியோர் பிரம்மஞான சபையின் தலைமையகத்தை அடையாறுக்கு மாற்றினர். இந்த சபையின் முக்கிய புள்ளியான அன்னி பெசண்ட் 1916 இல் இந்திய ஹோம் ரூல் இயக்கத்தைத் தொடங்கினார்.சென்னையிலிருந்து ஒருங்கிணைக்கப்பட்ட இந்த இயக்கத்துக்கு மாகாணம் முழுவதும் பெரும் ஆதரவு கிட்டியது. சென்னையிலிருந்து வெளியான தி இந்து, சுதேசமித்திரன், மாத்ருபூமி போன்ற தேசியவாத இதழ்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தன. திரு. வி.காவும், பி. பி. வாடியாவும் இணைந்து இந்தியாவின் முதல் தொழிலாளர் சங்கத்தை 1918 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவினர்.

இரட்டை ஆட்சி (1920-37)

தியாகராய செட்டி (இடது) பிராமணரல்லாதோர் இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர்; பெரியார் (வலது) சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கியவர் தியாகராய செட்டி (இடது) பிராமணரல்லாதோர் இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர் இந்திய அரசுச் சட்டம், 1919 இன் விளைவாக 1920 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை உருவாக்கப்பட்டு முதன்முறையாக நேரடித் தேர்தல் நடைபெற்றது. இவ்வாட்சிமுறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளும் ஆளுனரின் நிருவாகக் குழுவும் இணைந்து மாகாணத்தை நிருவகித்தன.

பிராமணரல்லாதோரின் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி முதல் தேர்தலில் வெற்றி பெற்று அரசமைத்தது. அ. சுப்பராயலு ரெட்டியார் சென்னை மாகாணத்தின் முதல் முதல்வரானார். ஆனால் உடல்நலக் குறைப்பாடு காரணமாக விரைவில் பதவி விலகினார்.

அவரைத் தொடர்ந்து பனகல் அரசர் முதல்வரானார். அவரது ஆட்சியில் அரசுப்பணிகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளிக்க முதல் அரசாணை (613) வெளியிடப்பட்டது. இது தான் இந்தியாவில் இட ஒதுக்கீடு பற்றிய முதல் அரசு நடவடிக்கையாகும். இரண்டாம் மாகாணத் தேர்தலிலும் நீதிக்கட்சி வெற்றி பெற்றது. ஆனால் உட்கட்சிப் பூசல் காரணமாக விரைவில் பிளவடைந்தது. 1926 தேர்தலில் நீதிக்கட்சி தோற்கடிக்கப்பட்டது. பெரும்பான்மை இடங்களை வென்ற சுயாட்சிக் கட்சி அரசமைக்க மறுத்து விட்டதால், ஆளுனர் ஜார்ஜ் கோஷன், ப. சுப்பராயன் தலைமையிலான சுயேச்சைகளின் அரசை உருவாக்கினார்.

1930 தேர்தலில் மீண்டும் நீதிக்கட்சி வெற்றி பெற்று பி. முனுசாமி நாயுடு முதல்வரானார். உட்கட்சிப் பூசல் காரணமாக நவம்பர் 1932 இல் அவர் பதவியிறக்கம் செய்யப்பட்டார்; அவருக்கு பதில் பொபிலி அரசர் முதல்வரானார். இந்திய அரசுச் சட்டம், 1935 இன் படி இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு மாநில சுயாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1937 தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியடைந்து இந்திய தேசிய காங்கிரசு ஆட்சியைக் கைப்பற்றியது.

1920களிலும் 30களிலும் சென்னை மாகாணத்தில் பிராமண எதிர்ப்பு இயக்கம் உருவாகி வலுவடைந்தது. மாகாண காங்கிரசுக் கட்சியில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்துவதை விரும்பாமல் காங்கிரசிலிருந்து வெளியேறிய பெரியார் ஈ. வே. ராமசாமி இதனைத் தொடங்கினார். பார்ப்பனர்கள், இந்து சமயம், சாதிப் பாகுபாடுகள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றை தமது எழுத்துகளால் சாடினார்.

பிரித்தானிய ஆட்சியின் இறுதி நாட்கள்

ராஜாஜி, இந்திய தேசிய காங்கிரசு 1937 இல் ஆட்சியமைத்த போது முதல்வரானார். 1937 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி வெற்றி பெற்று சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரி சென்னை மாகாண முதல்வரானார். தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக் கோயில்களில் நுழைந்து வழிபடும் வகையில் ஆலய நுழைவுச் சட்டத்தை இயற்றினார். மதுவிலக்கு விற்பனை வரி ஆகியவற்றையும் சென்னை மாகாணத்தில் அறிமுகப்படுத்தினார். இந்தி மொழியைச் சென்னை மாகாணப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கினார்.

இக்கொள்கைக்கு மாகாண மக்களிடையே பரவலான எதிர்ப்பு இருந்தது; இதனை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன. அவற்றைப் பெரியாரின் பகுத்தறிவு இயக்கமும், அ. தா. பன்னீர்செல்வத்தின் தலைமையில் நீதிக்கட்சியும் இப்போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றன. போராட்டங்களில் ஈடுபட்ட 1,200 ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் சிறையிலடைக்கப்பட்டனர். தாளமுத்து, நடராசன் எனும் இரு போராட்டக்காரர்கள் மரணமடைந்தனர்.

1939ம் ஆண்டு இந்தியா முழுவதும் பதவியிலிருந்த காங்கிரசு அமைச்சரவைகள் பதவி விலகின. இந்தியர்களைக் கலந்தாலோசிக்காமல் இரண்டாம் உலகப் போரில் இந்தியாவைக் காலனிய அரசு ஈடுபடுத்தியது இம்முடிவுக்குக் காரணமாக இருந்தது. இதன் பின்னர் சென்னை மாகாணம், சென்னை ஆளுனரால் நேரடியாக நிருவாகம் செய்யப்பட்டது. பெப்ரவரி 21, 1940 இல் ஆளுனர் கட்டாய இந்தி அரசாணையை நீக்கினார்.

காங்கிரசின் பெரும்பான்மையான தலைவர்கள் 1942 இல் தீவிரமாக நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றனர். 1944 இல் நீதிக்கட்சி பெரியாரின் கட்டுப்பாட்டில் வந்தது. திராவிடர் கழகம் என அதன் பெயரை மாற்றிய பெரியார், தேர்தல் அரசியல் ஈடுபாட்டிலிருந்து அதை விலக்கிக் கொண்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மீண்டும் காங்கிரசு தேர்தல்களில் போட்டியிட்டது. 1946 தேர்தலில் எளிதில் வெற்றியடைந்து ஆட்சியமைத்தது.
 
த.பிரகாசம் 11 மாதங்கள் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தார். அவருக்குப் பின்னர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வரானார். இந்தியா ஆகஸ்ட் 15, 1947 இல் விடுதலையடைந்தது.

சென்னை மாகாணம் சென்னை மாநிலம் என்று பெயர் மாற்றம் பெற்றது. ஜனவரி 26, 1950 இல் இந்தியா குடியரசான பின்னர் குடியரசின் மாநிலங்களில் ஒன்றாக மாறியது.


காலம் உள்ளவரை போற்றும் தலைவர்களாக இவர்கள் பணி அமைந்ததை எவராலும் மறுக்க முடியாது.

வெள்ளி, 1 ஜனவரி, 2016

சந்திரனுக்கு மனிதனை ஏற்றிச் சென்ற அப்பல்லோ-8 விண்கலம் புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது - கோ.ஜெயக்குமார்.

சந்திரனுக்கு மனிதனை ஏற்றிச் சென்ற அப்பல்லோ-8 விண்கலம் புளோரிடாவில் இருந்து ஏவப்பட்ட நாள்: 21-12-1968

சந்திரனை ஆராய்ச்சி செய்வதற்காக மனிதர்களை அனுப்பும் ‘அப்போலா விண்வெளி திட்டத்தை’ ஆரம்பித்த அமொக்கா, தொடர்ந்து விண்கலங்களை அனுப்பியது. மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பி பாதுகாப்பாக கொண்டு வருவதுதான் இதன் நோக்கம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆராய்ச்சியின் வரிசையில், 2-வது திட்டமான அப்போலோ-8 விண்கலம் புளோரிடாவில் இருந்து 1968-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. இந்த விண்கலம் தான் மனிதர்களை சுமந்து சென்று முதல் முறையாக பூமியின் சுற்றுவட்டப் பாதையைக் கடந்து, பூமியின் நிலவு வட்டப்பாதையை அடைந்த விண்கலம் ஆகும். அதன்பின்னர் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியது.

இதில் பிராங் போல்மேன், ஜேம்ஸ் லோவல், வில்லியம் ஆண்டர்ஸ் ஆகிய மூன்று விஞ்ஞானிகள் பயணித்தனர்.

இதே டிசம்பர் 21ம் தேதியின் சில முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-

1902 - இலங்கையில் போவர் போர்க் கைதிகளாக இருந்தவர்கள் தென்னாபிரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

1913 - உலகின் முதலாவது குறுக்கெழுத்துப் போட்டி "நியூயோர்க் வேர்ல்ட்" பத்திரிகையில் வெளியானது.

1967 - உலகின் முதலாவது இருதய மாற்றுச் சிகிச்சை பெற்ற தென்னாபிரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் நாஷ்கான்ஸ்கி சிகிச்சை பெற்று 18 நாட்களில் இறந்தார்.

1973 - அரபு-இஸ்ரேல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஜெனீவா மாநாடு ஆரம்பம்.

1992 - டச்சு விமானம் ஒன்று போர்ச்சுக்கலில் விழுந்து நொறுங்கியதில் 56 பேர் பலி.

1995 - பெத்லேகம் நகரம் இஸ்ரேலியர்களிடம் இருந்து பாலஸ்தீனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

2007 - பாகிஸ்தானின் பெஷாவர் நகர் மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் சாவு.