சனி, 21 ஜூலை, 2018

தமிழக வரலாற்றில் சித்தன்னவாசல் – கோ.ஜெயக்குமார்

தமிழக வரலாற்றில் சித்தன்னவாசல் – கோ.ஜெயக்குமார்
சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் தமிழகத்தின் புதுக்கோடை மாவட்ட்த்தில் உள்ள சித்தன்னவாசல் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கிராமம் குடைவரை ஓவியங்கள் மற்றும் குகை ஓவியங்களுக்கும் மிகப் புகழ் பெற்றவை. புதுக்கோட்டையிலிருந்து விராலிமலைக்குச் செல்லும்  சாலையில், 16 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது சித்தன்னவாசல். இதற்கு, ‘தென்னிந்தியாவின் அஜந்தா குகை’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. 
அன்னவாசல் என்ற ஊருக்கு முன்னதாக உள்ளது இந்த ஊர். குடைவரைக் கோயில் அமைந்துள்ள பகுதிக்கு, நாம் பேருந்தைவிட்டு இறங்கி கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டும். சிரமம் பார்க்காமல் நடந்துசென்றால், இரண்டாயிரத்துக்கும் முற்பட்ட காலத்தின் சமூகப் பதிவுகளை  ஓவியங்களாகவும் குடைவரைக் கலைகளாகவும் தனக்குள் பொத்திவைத்திருப்பதை ரசிக்கலாம்.
அன்னவாயில் என்பது  மருவி `அன்னவாசல்' என்று அழைக்கப்படுகிறது. அன்னவாசலின் முற்பகுதிதான் சித்தன்னவாசல். `சித்தானம் வாசஹ்' என்னும் வடமொழி சொற்களிலிருந்து இந்தப் பெயர் வந்தது'' என்கின்றனர் தொல்பொருள் ஆய்வாளர்கள். இதற்கு `துறவிகள் இருப்பிடம்' எனப் பொருள். சித்தன்னவாசல் ஓவியங்கள், ஏழாம் நூற்றாண்டில் (கி.பி.600 - 630) சிம்மவிஷ்ணுவின் மகன் மகேந்திரவர்மனால் வரையப்பட்டவை எனச் சொல்லப்படுகிறது. 
பல்லவர் காலத்துக்கு முன்னர் கோயில்கள் செங்கற்களாலும், மரத்தாலும், மண்ணாலும், உலோகங்களாலும் கட்டப்பட்டுவந்தன. குகைக்கோயில்களையும் குடவரைக் கோயில்களையும் தமிழகத்தில் முதன்முதலில் கட்டியவர் மகேந்திரவர்மன்தான். இவர் சமண மதத்திலிருந்து சைவ மதத்துக்கு மாறியவர். சித்தன்னவாசல் சமண மத மையமாக இருந்ததை, இங்கு உள்ள கல்வெட்டுகளும் இந்த ஊரைச் சுற்றியுள்ள பழைமையான சமணச் சின்னங்களும் வெளிப்படுத்துகின்றன.
சமணர் காலத்து ஓவியங்களான இவை கி.பி 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்கள், சமணர்களால் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்டவை. இந்தியாவின் வட பகுதியில் காணப்படும் அஜந்தா ஓவியங்களை போன்று தனிச்சிறப்பு மிக்க இந்த ஓவியங்கள் சுமார் 1000 - 1200 ஆண்டு பழமையானவை.
இந்தியா விடுதலை அடைந்த பிறகும் போதிய பராமரிப்பின்றி புகை படிந்து இருந்த இக்குகைகளும், குகை ஓவியங்களும் கி.பி 1990களில் நிறம் மங்க துவங்கியதால் செயற்கையாக நாம் தற்போது பயன்படுத்தும் வர்ணம் போன்ற பொருளைக் கொண்டு புதுப்பிக்கப்பட்டது. புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல் செல்லும் வழியில் சுமார் 16 கிலோ மீட்டரில் அமைந்த இவ்விடத்தை தமிழக அரசும், தொல்லியல் துறையும் பாதுகாத்து வருகிறது. சுமார் 70 மீட்டர் உயரமே உள்ள இக்குன்றுகளின் மேல் சமணர்களின் படுக்கையும், தவம் செய்யும் இடமும், பல இடங்களில் குடைவறைகளும் காணப்படுகின்றன.
தொடர்புடைய படம்
சிறு மற்றும் பெரும் பாறைகளும் உள்ள இடம் சமண முனிவர்கள் தவம் செய்த இடமாக அறியப்படுகிறது. இவ்விடத்தின் மிக அருகில் உள்ள ஏலடிப்பட்டம் என்ற இடத்தில் சமணர்களின் படுக்கைகளும், தமிழ் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. அறிவர் கோயில் எனப்படுகின்ற சமண கோயில் ஒன்றும் இங்குள்ளது.
தொடர்புடைய படம்
இந்தியாவில் உள்ள அஜந்தா குகை ஓவியங்களுக்கு அடுத்தாற்போல் புகழ் மிக்கது. இவ்வோவியங்கள் சமணர்களின் குகைக் கோயில்களில் எழுதப்பட்டுள்ளன. சித்தன்ன வாசல் ஏழடிப்பட்டம் மேல் கூரையில் ஓவியங்கள் இருந்தற்கான அடையாளங்களை புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் திரு.என். அருள்முருகன் அவர்கள் கண்டறிந்துள்ளார். மலையின் அனைத்து திசைகளிலும் உயிரைப் பணயம் வைத்து ஆய்வு செய்த அவர் ஏழடிப்பட்டம் மேல் பகுதியில் ஓவியங்களின் மீதப்பகுதிகளை கண்டறிந்துள்ளார்.
தொடர்புடைய படம்
தொல் பழங்கால ஓவியங்களை ஆய்வதில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ள அவர் இதுவரை புதுகை மாவட்டத்தில் திருமயம் ஓவியங்களுக்கு பின்னர் சித்தன்ன வாசல் மலையில் புராதன ஓவியங்களை கண்டறிந்துள்ளார். நான்கு வகையான ஓவியங்கள் இங்கு வரையப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. அவற்றிற்கு பிரிப்புப் பட்டை ஓவியம், புள்ளி ஓவியம், கோண ஓவியம், சக்கர ஓவியம் என பெயரிட்டிருக்கிறார் ஆய்வாளர்.
தொடர்புடைய படம்
சித்தன்னவாசலில் தமிழிக் கல்வெட்டுகள் காணப்படுவதால் அது கி.மு. மூன்றாம் நூற்றாண்டு தொட்டே சமயம் மெய்யியல் தொடர்பான பயன்பாட்டில் இருந்த இடம். முதலில் இக்குகை ஓவியங்கள் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தியது என்று கருதப்பட்டாலும் அங்குள்ள கல்வெட்டு ஒன்றில் இதை மாறன் என்ற பாண்டிய மன்னன் சீர்செய்தான் என கூறுவதால் இந்த ஓவியம் சேந்தன் மாறன் (கி.பி. 625-640) காலத்திலோ மாறவர்மன் அரிகேசரி கி.பி. 640-670 காலத்திலோ இந்த ஓவியம் சீரமைக்கப்பட்டது என்று உறுதியானது.
தொடர்புடைய படம்
இந்த குகை ஓவியங்கள் ஆசீவக துறவிகளுடையதுஎன்றும் சைனசமயத்தினருடையது என்றும் இருவேறுபட்ட கருத்துகள் உள்ளன. இதை ஆசீவகத்துறவிகளுடையது எனச்சொல்லும் க. நெடுஞ்செழியன் ஓவியங்களில் காணப்படும் மூன்று ஆண்கள் குளத்தில் நீராடுவது போல் இருப்பதாலும் தலைமுடியை நன்கு வளர்த்திருப்பதாலும் இது சைன துறவுநெறிக்கு முரண்பட்டிருப்பதால் இது ஆசீவக ஓவியங்கள் என்கிறார்.

.

ஞாயிறு, 15 ஜூலை, 2018

காமராஜர் வாழ்க்கை வரலாறு - முனைவர் கோ.ஜெயக்குமார்

காமராஜர் வாழ்க்கை வரலாறு - முனைவர் கோ.ஜெயக்குமார்

காமராசர் (காமராஜர்) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநிலமுதலமைச்சர் ஆனார். இவர் ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தைஅறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர்என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். காமராசரின் மறைவுக்கு பின்,1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னாவிருது வழங்கியது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு சூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். இவர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்குக் குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை "ராசா" என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராசு’ என்று ஆனது. தனது பள்ளிப் படிப்பைச் சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.

தொடர்புடைய படம்

பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராசர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். அங்கிருக்கும்போது பெ. வரதராசுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் காங்கிரசின் உறுப்பினராக ஆனார்.

RK- kamaraj1932.jpg

ராசாசியின் தலைமையில் 1930 மார்ச்சு மாதம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டார். அதற்காகக் காமராசர் கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்த ஆண்டு காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில்  விடுதலை ஆனார்  விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சேலம் டாக்டர் பெ. வரதராசுலு நாயுடுவின் வழக்காடும் திறமையால் குற்றச்சாட்டு நிறுவப்படாததால் விடுதலை ஆனார். 

1940 இல் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும் போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும் நேராகச் சென்று தன் பதவி விலகினார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது. மீண்டும் 1942-ல் ஆகத்து புரட்சி நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் தண்டனையாகப் பெற்றார்.

காமராசர் க்கான பட முடிவு

காமராசர், சிறந்த பேச்சாளரும் நாடாளுமன்றவாதியும் ஆன சத்தியமூர்த்தியைத் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936-ல் சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரானபோது காமராசரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரசு கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டுக் காமராசர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்குதான் தேசியக் கொடியை ஏற்றினார்.

தொடர்புடைய படம்

தமிழக ஆட்சிப் பொறுப்பு

1953-க்குப் பிறகு சக்ரவர்த்தி ராசாசிக்கு அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தால் அதிக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நேரம். காமராசர் ஆட்சித் தலைமைப் பொறுப்புக்கு வரத் தயங்கியதற்கு அவருக்கிருந்த மொழிவளம் குறித்த தாழ்வுணர்ச்சி ஒரு முக்கிய காரணம். (அப்போது தமிழகம் சென்னை ராச்சியமாக ஆந்திராவின் பெரும்பகுதி, கர்நாடகாவின் சில பகுதிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்தது)

Thombakkulam cong meet 1932.jpg

குலக்கல்வித் திட்டத்தால் ராசாசியின் செல்வாக்கு வேகமாகக் கீழிறங்கிக் கொண்டிருக்க, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக (அக்டோபர் 1, 1953-ல் ஆந்திரா பிறந்து விட்டது) தமிழ்நாடும் சுருங்கிப் போக, காங்கிரசின் உள்ளேயே ராசாசிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பி விட்டது. நிலைமை அறிந்த கட்சி மேலிடம், தமிழக அளவில் தீர்மானித்துக் கொள்ள அனுமதி வழங்கி விட்டது. ராசாசி தான் அவமானப்படுவதைத் தவிர்க்க, ‘எனக்கு எதிராகக் கட்சியில் யாரும் தீர்மானம் கொண்டு வர வேண்டாம. நானே விலகிக் கொள்கிறேன்’ என்று அறிவித்து விட்டாலும் தன் இடத்திற்குத் தன்னுடைய முக்கிய ஆதரவாளரான சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்த பின் வேலை செய்தார். அவருடைய இன்னொரு முக்கிய ஆதரவாளரான எம். பக்தவத்சலம் அதனை முன்மொழிந்தார்.

காமராசர் க்கான பட முடிவு
ஆனால் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராசர் பெருவாரியான வாக்குகள் முன்னணியில் வெற்றி பெற்றார். இதுதான், காமராசர் தமிழக முதல்வராக 1953 தமிழ்ப்புத்தாண்டு அன்று பதவியேற்றதன் பின்னணி.
முதலமைச்சராக ஆற்றிய பணிகள்
ராசாசி கொண்டு வந்திருந்த குலக்கல்வித் திட்டத்தினைக் கைவிட்டார். அவரது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27,000 ஆனது. 1920 இல் நீதிக்கட்சி அரசு ஆதரவுடன் சென்னை மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டமே 1960 களில் காமராசரால் அறிமுகப்படுத்தப்பட்டு எம். ஜி. ராமச்சந்திரனால் 1980 களில் விரிவுபடுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தின் முன்னோடியாகும். 
காமராசர் க்கான பட முடிவு
அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாகப் பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 விழுக்காடாக உயர்ந்தது. (பிரித்தானியர் காலத்தில் இது 7 விழுக்காடாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180 இல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்டது.
காமராசர் க்கான பட முடிவு
காமராசர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறுஅமராவதிவைகைசாத்தனூர்கிருசுணகிரிஆரணியாறு ஆகியவையாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குக் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகக் காமராசரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது.

காமராசர் க்கான பட முடிவு

அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும். 2004 ஆம் ஆண்டு காமராஜ் என்கிற பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படம் வெளியானது. அதன் ஆங்கில மொழியாக்க குறுந்தகடு 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
தொடர்புடைய படம்

காமராசருக்கு இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாகக் காங்கிரசு கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. காமராசரின் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசு தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப் போகக் காமராசர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார். தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். 

Kamaraj samaathi.JPG

இந்தியாவின் அரசியல் போக்குகுறித்து மிகுந்த குறையும் கவலையும் கொண்டிருந்த நிலையில் காமராசர் இருந்தார், இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் மற்றும் பல தலைவர்கள் இக்காலகட்டத்தில் இந்திரா காந்தி அரசால் கைது செய்யப்பட்டிருந்தனர். அக்டோபர் இரண்டு காந்தியடிகள் பிறந்த நாளன்று அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தார் காமராசர். ஆனால், அன்று ஆச்சார்ய கிருபளானியும் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியைக் கேட்ட அன்றே உயிர் துறந்தார்.1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) மதிய உறக்கத்திற்குப் பின்னர் அவரின் உயிர் பிரிந்ததுஅவர் இறந்தபோது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்த வித சொத்தோ இல்லை. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.

காமராசர் க்கான பட முடிவு

வியாழன், 7 ஜூன், 2018

உத்திரமேரூர் கல்வெட்டும் குடவோலை முறையும் - முனைவர் கோ.ஜெயக்குமார்...

உத்திரமேரூர் கல்வெட்டும் குடவோலை முறையும் - முனைவர் கோ.ஜெயக்குமார்...

குடவோலை என்பது கிராம நிர்வாக சபை உறுப்பினரை தேர்ந்து எடுக்க பழங்காலத்தில் பயன்பட்டது. இந்த முறையில் கிராமத்தின் பகுதி வாரியாக மக்கள் கூடி, தகுதியான உறுப்பினர்கள் பெயர்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவார்கள். பிறகு அதை மொத்தமாகக் கட்டி, ஒரு பானையில் போட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்கள்.
உத்திரமேரூர் க்கான பட முடிவு
குடவோலை முறை 9வது நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்தது. இதற்கான ஆதாரமாக கி.மு. 907 முதல் 955 வரை ஆண்ட மன்னன் முதலாம் பராந்தகன் காலத்திய மூன்று கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இதில் இரண்டு உத்தரமேரூரிலும், மற்றொன்று தஞ்சைப் பள்ளிப்பாக்கம் கிராமத்திலும் கிடைத்துள்ளன.
உத்திரமேரூர் – ஆயிரம் ஆயிரம் வரலாறு கொட்டிக் கிடக்கின்றது, ” ராஜ ராஜ சோழனுக்கு “முந்தைய” பராந்தக சோழன் ” கல்வெட்டுகள் எல்லாம் காணப்பெறுகின்றது, ஆனால் இன்றைக்கு எல்லாமே அழிவின் விளிம்பில்! போர் மூளும் போது, சிலைகள், மற்ற விலை உயர்ந்த ஆபரணங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதற்கும், பதுங்குவதற்க்கும் இது போன்ற அறைகளை உருவாக்கி உள்ளனர். “பொன்னியின் செல்வன்” புத்தகத்தில் “நிலவறை” குறித்த செய்திகள் கூட உள்ளது, சுமார் ஆறு அடி உயரமும், பனிரெண்டு அடி நிகளமும் கொண்ட இந்த அறை, அழகாக உள்ளே கல்லில் கட்டப்படிருக்கின்றது.
மேலே இருந்து பார்த்தால் நிச்சயம் இது போன்ற ஒரு அறை இருப்பது தெரியாது, அந்த மேல் கல்லை நீக்கினால் மட்டுமே இவ்வளவு பெரிய அறை இருப்பது தெரிய வரும், அவ்வளவு அழகாக, நேர்த்தியாக திட்டமிட்டு கட்டி இருக்கிறார்கள் ஆனால் இன்றைக்கு இது கேட்பாறற்று கிடக்கின்றது, இந்த கோயிலை சுற்றி ஏகப்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றது, தன்னுடைய இனத்தின் புதையலை பாதுகாக்க வேண்டிய தமிழர்கள், இதை மதிக்க தவறிவிட்டதால், இன்றைக்கு “குடி” மக்கள் சுற்றி இருக்கும் வரலாற்றை மறந்து குடிப்பதற்கு மட்டுமே இதை பயன்படுத்தி வருகின்றனர்.
முதலாம் பராந்தக சோழன் :
கி.பி 907 இல் முதலாம் ஆதித்த சோழனை அடுத்து அரசனானவன் பராந்தக சோழன். இக்காலத்தில் சோழப் பேரரசு வடக்கே காளத்தி முதல் தெற்கே காவிரி வரை பரவியிருந்தது. இவனும் போர் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டான். பாண்டியர்களுடன் போரிட்டு மதுரையைக் கைப்பற்றிக் கன்னியாகுமரி வரை பரந்த பாண்டிநாட்டை சோழநாட்டுடன் இணைத்துக் கொண்டான். இந்திய வரலாற்றில் முதன் முதலில் குடியுரிமை மற்றும் வாக்குச் சீட்டு ஆகியவற்றை அறிமுகம் செய்தவன் இவனே ஆவான். இவன் காலத்தில் குடவோலை முறையில் கிராம சபை உறுப்பினர், கிராம சபைகளைத் தேர்ந்தெடுக்கும் முறை, அமைக்கும் முறை, கிராம ஆட்சிமுறை பற்றிய விவரங்களை உத்திரமேரூரிலும் வேறு சில ஊர்களிலும் உள்ள கல்வெட்டுகள் புலப்படுத்துகின்றன. இவன் காலத்துக்குப் பின்னும் சோழர் ஆட்சி 300 ஆண்டுகள் வரை தொடர்ந்தது.
முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907-953) ஆதித்த சோழனின் மகனாவான். களப்பிரரை முறியடித்து கிபி 575 இல் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு இவன் காலத்தில் 915 இல் முறியடிக்கப்பட்டது. அச்சமயத்தில் பாண்டி நாட்டை ஆண்டவன் 2ம் இராசசிம்மன் ஆவான். பல ஆண்டுகள் இடம் பெற்ற இப்போரில் இலங்கை மன்னன் 5ம் காசியப்பன் (913-923) பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான். முடிவில் பராந்தகன் மதுரையை கைக்கொண்டான். போர் முடிவில் பாண்டி மன்னன் இலங்கை தப்பினான். பாண்டிய அரசை கைப்பற்றியதே இவன் காலத்தில் நிகழ்த்த முக்கிய சம்பவமாகும். தன் தந்தை கட்டாது விட்ட பல கோயில்களை கட்டினான்.
தஞ்சையையும் உறையூரையும் கொண்ட சிறு பகுதியைச் சோழர்கள், பல்லவர்களின் தலைமையின் கீழேயே ஆட்சி செய்து வந்தனர். ஆனால் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே சோழர்களின் பலம் பல மடங்கு பெருகிற்று. இந்நிலைக்கு மிக முக்கியமான காரணமாயிருந்தவன் ஒப்பற்ற வீரனும், இராஜதந்திரியுமான முதலாம் ஆதித்தனே ஆவான். இவனுக்கு பிறகு அரியணைக்கு வந்த பராந்தகன் என்றழைக்கப்படும் முதலாம் ஆதித்தனின் மகன், சிறிது காலத்திலேயே பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். தனது மூன்றாம் ஆட்சி ஆண்டிலேயே “மதுரை கொண்ட” என்ற விருதை அவன் பெற்றான். இவன் ஆட்சிக்கு வந்தபொழுது, சோழநாடு வடக்கில் மைசூர் பீடபூமி நீங்கலாக, தெற்கே காவிரிவரையிலான பகுதியும், மேற்குத் கடற்கரையோரமாக ஒரு பகுதியும், சென்னை, காளத்தி வரையிலும் பரவியிருந்தது. கங்க மன்னர்கள் சோழரது அதிகாரத்திற்கு உட்பட்ட நண்பராகவும் சேரமன்னன், நெருங்கிய நண்பனாகவும் கருதப்பட்டனர்.
இலங்கையின் வரலாற்றுப் பதிவான மகா வமிசம் கூறும் குறிப்புகளிலிருந்து (மஹாவம்சா சி.வி. பாகம், 52, பக். 70) சோழ-பாண்டியப் போரில் மூன்று கட்டங்களைப் பற்றி அறியலாம். முதல் கட்டத்தில் பராந்தகனிடம் பாண்டிய மன்னன் தோல்வியுற்றான். இரண்டாம் கட்டத்தில் பாண்டிய மன்னன், ஈழ மன்னனது உதவியைக் கோரிப் பெற்று, சோழப்படையைத் தாக்கினான். பாண்டிய ஈழத்துப்படைகள் சோழப்படையிடம் பின்வாங்கின. ஈழப்படைத்தலைவன் சோழரை வெல்ல மீண்டும் முயன்றது மூன்றாம் கட்டமாகும்.
உத்திரமேரூர் க்கான பட முடிவு
தான் புதியதாக வெற்றி கொண்ட பகுதிகளைத் தன் அதிகாரத்தை ஏற்குமாறு செய்யும் பணியில் பெரும்பாலும் முடிந்து விட்டது என்று எண்ணிய பராந்தகன், தன் வெற்றியை மதுரையில் கொண்டாடும் பொருட்டு, பாண்டிய மன்னனின் முடியையும், மற்ற சின்னங்களையும் தானே அணிந்து கொள்ள எண்ணினான். ஆனால் இவையனைத்தும் இராஜசிம்மனால் (பாண்டிய மன்னன்) ஈழத்து மன்னனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததால் பராந்தகன் நான்காம் உதயன் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 945–53) இவற்றைத் திரும்பிப் பெற முயன்று இம்முயற்சியில் படுதோல்வியடைந்தான்.
தொடர்புடைய படம்
இவை பராந்தகனின் ஆட்சிக் காலத்தின் கடைசி ஆண்டுகளைப் பற்றியதாகவே இருக்க வேண்டும். மறக்கப்படாமலிருந்த இவனது தோல்வி, பல ஆண்டுகளுக்கு பிறகு, இவனது பலம் வாய்ந்த வழித்தோன்றலான முதலாம் இராஜேந்திரனால் மாற்றப்பட்டது (அதாவது பழிவாங்கப்பட்டது).
உத்திரமேரூர் க்கான பட முடிவு
கேரள மன்னன், கீழப்பழுவூர்த் தலைவர்களான பழுவேட்டரையர் ஆகியோரைத் தவிர, கொடும்பாளூரைச் சேர்ந்த வேளிர் தலைவரும், பாண்டியருக்கான போர்களில் பராந்தகனுக்காக உதவி செய்தனர். கொடும்பாளூர் வமிசத்தைச் சேர்ந்த தென்னவன் இளங்கே-வேளிர் என்பவரின் மகள் பூதி ஆதிக்க பிடாரி என்பவளைப் பராந்தகனின் மக்களில் ஒருவனான அரிகுலகேசரி முன்பே திருமணம் செய்திருந்தான்.
உத்திரமேரூர் க்கான பட முடிவு
முதலாம் பராந்தகன் 48 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்பதை அவனது 48-ம் ஆண்டின் கல்வெட்டிலிருந்து அறியலாம். இராஷ்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணன், தன் பேரன் கன்னர தேவனைச் சோழ நாட்டின் அரியணையில் அமரச் செய்த முயற்சியை முதலாம் பராந்தகன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே முறியடித்தான். அது முதல் பராந்தகன் தன் ஆட்சிக்காலம் முழுவதும் வெற்றிமேல் வெற்றி பெற்று பீடுநடைப்போட்டான் தன் தந்தையின் வெற்றிகளை நிறைவேற்றும் வகையில் இவன் பாண்டியர்களஇன் சுதந்திரத்தைப் பறித்து, தன் நாட்டைத் தெற்கே கன்னியாகுமரி வரை பரவச் செய்தான். ஈழத்தின் மீதும் படையெடுத்தான், ஆனால் இம்முயற்சியில் இவனது குறிக்கோள் வெற்றியடையாததை முன்னர் பார்த்தோம். ஏனைய இடங்களில் இவன் பாணர்களை வெற்றி கொண்டதுடன் கங்க மன்னன் ஹுஸ்தி மல்லனைத் தன் அதிகாரத்திற்கு உட்படுத்தினான்.
தொடர்புடைய படம்
எஞ்சியிருந்த பல்லவர்களின் அதிகாரம் அடியோடு மறைந்தது, பராந்தகனின் நாடு, வடக்கே நெல்லூர் வரை பரவியது. எனினும் இவனது ஆட்சி முடிவதற்கு முன், வட மேற்கிலிருந்து மிகுந்த படைபலத்துடன் மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். அதன் விளைவாக நடைபெற்ற போரில் பராந்தகனின் மூத்த மகனான இராஜாதித்தன் உயிரழந்ததோடு, இதற்குப்பின் பராந்தகனும் வெகுகாலம் உயிர் வாழவில்லை. இது முதல் புகழ் மிக்க முதலாம் இராஜராஜன் கி.பி. 985ல் அரியணையில் அமர்ந்தது வரையிலான முப்பது ஆண்டுகள் வரையில் சோழ நாடு பெரும் இருளில் ஆழந்திருந்தது.
தொடர்புடைய படம்
சுமார் கி.பி. 940ல் முதற் பராந்தகனின் நம்பிக்கையுடைய நண்பனும் அவன் ஆட்சிக்குட்பட்டவனுமான கங்கமன்னன் இரண்டாம் பிரதிவீபதி மரணம் அடைந்தான். இதுவே கங்க நாட்டிலிருந்து, பராந்தகனுக்கு ஏற்பட்ட தொல்லைகளின் தொடக்கமாக இருந்தது, பிரதிவீபதி தன் வாழ்நாளின் இறுதியில், ஒரே மகன் விக்கியண்ணனை இழந்திருந்தான். இரண்டாம் பூதகன் என்பவன் இராஷ்டிரகூட இளவரசியும் மூன்றாம் கிருஷ்ணனின் சகோதரியுமான ரேவகா என்பவளை மணந்தான். இவன் கங்க நாட்டின் தனிப்பெரும் தலைவனாக இப்போது விளங்கினான். சோழர்களின் வலிமையைக் கண்டு அஞ்சிய வாணர்களும் வைதும்பரர்களும் ஏற்கனவே கிருஷ்ணனுடைய பாதுகாப்பைக் கோரியிருந்ததோடு, சோழருக்கு எதிராகவும் அவனது உதவியைப் பெற விழைந்தனர். இச்சூழ்நிலையில், அப்போதுதான் தன் நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்புகள் அனைத்தையும் அழித்துப் புகழேணியில் இருந்த கிருஷ்ணன் (இராஷ்டிரகூட மன்னன்) தெற்கு நோக்கித் தன் நாட்டை மேலும் விரிக்கக் கூடிய அரியவாய்ப்பை நழுவவிட விரும்பாமல் சோழருக்கு எதிராகப் படையெடுத்தான்.
தொடர்புடைய படம்
இவ்வரசன் காலத்தில் மாதவர் என்ற வேதியர் ருக்வேத பாஷ்யம் என்னும் நூலை எழுதினார். இந்நூலில் ஜகதேகவீரன் என இவ்வரசனைக் குறிப்பிடுகின்றார். இச்சுவடி இன்றும் சரசுவதி மகாலில் உள்ளது. மேலும் பல வேத நூல்களும் சரசுவதி மகால் நூலகத்தில் சேர்க்கப்பட்டன. திருவெற்றியூரின் கோயில் கல்வெட்டில் உள்ள குறிப்பின் படி இவ்வரசன் தன் காலத்தில் தேவாரம் திருவெம்பாவை பாடல்களைக் கோயில்களில் பாட அறக்கட்டளைகள் ஏற்படுத்தினான் எனத் தெரிகின்றது.
தொடர்புடைய படம்
தமிழகத்தின் மக்களாட்சி பாரம்பரியத்திற்கு உதாரணமாக ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உத்திரமேரூர் கல்வெட்டுகளில் காணப்படும் குடவோலை முறை வாரியத் தேர்தல் பற்றிய குறிப்புகளை பலர் மேற்கோள் காட்டுவார்கள். சிறு வயதில் பள்ளிகளில் வரலாறாகவும், பிற்காலங்களிலும் இதைப் படிக்கும் பொழுதெல்லாம் புலகாங்கிதம் அடைந்தது உண்டு.
தொடர்புடைய படம்
உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலம் சோழர்களால் பார்ப்பனர்களுக்கு தானமாக கொடுக்கப்பட்ட 12 சேரிகளை உள்ளடக்கிய ஊர்களாகும். அந்த சதுர்வேதி மங்கலத்தின் தோட்டம், ஏரி போன்றவற்றிற்கான வாரியங்களை நாட்டாமை செய்பவருக்கான தேர்தல் முறையையே இந்த கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இந்த தேர்தல்களில் எந்த ஜனநாயகக் கூறுகளும் இல்லை. சாதியக்கூறுகள் மட்டுமே உள்ளன. 12 சேரிகளை பார்ப்பனர்களுக்கு தானமாக கொடுத்ததிலிருந்து, குடவோலை தேர்தல் முறை வரை ஒவ்வொன்றும், சோழர்கள் காலத்தில் மனு நீதி எவ்வாறு கட்டி காக்கப்பட்டது என்பதற்கு உதாரணங்களாகத்தான் இருக்கின்றன.
உத்திரமேரூர் க்கான பட முடிவு
உள்ளாட்சி தேர்தலில் பங்குபெறுபவர்களுக்கான தகுதிகளை விளக்கும் இக்கல்வெட்டை கவனியுங்கள்.
1) கால்வேலி நிலமாவது தேவை
2) தன் மனையில் வீடு இருத்தல் வேண்டும்
3) வயது முப்பத்தைந்துக்கு மேல் எழுபதுக்குள் இருக்க வேண்டும்
4) வேதபாஷ்யங்கள், மந்திர ப்ராம்மணம் இவற்றில் எடுத்துரைக்கும் புலமை வேண்டும்
5) ஆசாரம் வேண்டும்
6) முந்தின மூன்றாண்டுகளுக்கு இப்பதவி வகிக்காதவனாக இருக்க வேண்டும்
நல்லொழுக்கமும் திறமையும் மக்களுக்காக ஒரு குறிப்பிட்ட காலம் பணிபுரியும் உள்ளுணர்வும் தியாகத் தன்மையும் உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து நாட்டு ஆட்சியை ஒப்படைத்தால் அந்நாடு எப்படியிருக்கும்? அந்நாட்டில் கல்வி வளரும், கலை வளரும், விஞ்ஞானம் வளரும், மக்களின் மகிழ்வும் வாழ்வும் மலரும் அல்லவா? அப்படியும் எங்காவது தேர்தல் நடந்து ஆட்சி நடந்திருக்கிறதா? தேர்தல் முறை வந்தே நாற்பது ஆண்டுகள் தானே ஆகிறது என்று ஒரு சிலர் எண்ணலாம்.

File:சோழர் கால தேர்தல் குடவோலை என்று கூருவது.jpg
உத்திரமேரூர் தேர்தல் :
அப்படி ஒரு தேர்தல் நடந்திருக்கிறது. “அடிப்படைக் குடியாட்சி” நடந்திருக்கிறது. அதுவும் நம் தமிழகத்திலேயே நடந்திருக்கிறது. ஓராண்டு ஈராண்டு அல்ல ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆண்டிருக்கிறார்கள். சோழப் பேரரசர்கள் ஆண்ட காலத்தில் கிராமங்கள் தோறும் அப்படிப்பட்ட குடியாட்சிதான் நிலவியது. அப்பொழுது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் பொய்யர் தேர்தலில் நிற்க முடியாது. பல்லாயிரம் மக்கள் முன்னிலையில் அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று இல்லாத உறுதிகளை கூறிவிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் “நான் அப்படி எங்கு சொன்னேன்?” என்று அப்பட்டமாகப் பிதற்றும் தன்மையோர் நிற்க முடியாது. ஒரு விதக் கல்வியுமின்றி சொத்துமின்றி சுற்றமுமின்றி இருந்தவர், தேர்ந்தெடுக்கப்பட்ட ஓரிரண்டு ஆண்டுகளில் ஒருவிதத் தொழிலும் செய்யாமல், வியாபாரம் செய்யாமல் எந்த வழியிலும் உண்மையாகச் சம்பாதிக்காமல் திடீரெனப் பல லட்ச ரூபாய் சேர்ப்பாரே! கையூட்டு வாங்கியே வாழ்பவர்கள்! அப்படிப்பட்டவர் தேர்தலில் நிற்க முடியாது. ஒரு பேட்டையில் அடியாட்களை வைத்துக் கொண்டு அந்தப் பகுதியையே நடுங்க வைத்துத் தேர்தலில் ஜெயித்து வர முடியாது. ஊர்க்காரர்களை ஏமாற்றிவிட்டு அகப்பட்டதைச் சுருட்டலாம் என்பவர் வரமுடியாது. வந்த பின்னர் சுருட்ட ஆரம்பித்தால் அவர்களை உடனடியாக நீக்கவும் மீண்டும் அவர்கள் பொது வாழ்வில் தலைதூக்கவே முடியாமல் செய்யவும் வழிவகைகள் இருந்தன.
உத்திரமேரூர் க்கான பட முடிவு
அப்படிப்பட்ட ஒரு தேர்தல் முறை தேர்தலில் நிற்கத் தகுதிகள் யாவை? யார் நிற்கலாம்? யார் நிற்கக் கூடாது என்பதெல்லாம் தெளிவாக அரசியல் சாசனம் சோழர் காலத்தில் எழுதி வைத்திருந்தனர். சென்னைக்கு அருகில் 50 கல் தொலைவில் உள்ள உத்திரமேரூரில் ஒரு பெரிய கல்வெட்டுச் சாசனமே இருக்கிறது. தமிழ்நாட்டைப் பராந்தக சோழன் ஆண்ட போது கி.பி. 920 இல் ஊர்ச்சபைக்குத் தேர்ந்தெடுப்பதைக் குறிக்கும் கல்வெட்டில்தான் இவை அனைத்தும் எழுதப்பட்டுள்ளன. நேற்றுத்தான் எழுதியது போல் உள்ள இந்த ஆயிரம் ஆண்டுக்கு முந்திய கல்வெட்டைப் பார்த்தால் நாம் வியப்போம். அக்காலத்தில் பொது வாழ்வில் அரசியலில் ஈடுபட்டோரின் தன்மை என்ன? இன்று நிலமை எவ்வாறு உள்ளது என்று ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
தேர்தலில் நிற்கத் தகுதிகள் :
  • உத்திரமேரூர் முப்பது குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அந்தந்த குடும்பைச் சேர்ந்தவர்கள் அந்த குடும்பிலிருந்து ஒரு நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்வுக்கு நிற்பவர் சில அடிப்படைத் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். முதலில் அசையாத சொத்து சிறிதாவது உடையவராக இருக்க வேண்டும். கால் வேலியிலிருந்து அரை வேலி நிலமாவது அவருக்கு இருக்க வேண்டும். புறம்போக்கு நிலத்திலோ, பிறர் நிலத்திலோ வீடு கட்டிக் கொண்டிருப்பவராக இல்லாமல் “தன் மனையில் வீடு எடுத்துக் கொண்டவராக” இருக்க வேண்டும்.
  • இரண்டாவது தகுதி 35 வயதுக்கு மேற்பட்டவராக இருகக வேண்டும். 70 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பொதுமக்களின் பிரச்சினைகளையும், வாழ்வையும் சார்ந்த முடிவுகளை ஆட்சிக்கு வருபவர் எடுக்க வேண்டுமாதலால், 35 வயது குறைந்தபட்ச வயதாகக் வகுக்கப்பட்டது. அந்த வயதில்தான் வாழ்க்கையில் அனுபவமும் ஒரு நிதானமும் கிட்டும் என்று அக்காலத்தில் கருதினர். 70 வயதுக்கு மேலும் தாமே ஆட்சி புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணாமல் இளைய சமுதாயத்துக்கு இடமளித்தல் தேவை என்பதால் 70 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்றும் விதிக்கப்பட்டது.
  • மூன்றாவதாக ஒரு குறிப்பிட்ட அளவு கல்வி கற்றிருக்க வேண்டும். படிப்புக் கூட இல்லாமல் சட்டம் இயற்றவோ நெறிப்படுத்தவோ இயலுமா? படிப்பு மட்டுமிருந்தால் போதாது. தெளிவாக எடுத்துக் கூறும் ஆற்றலும் பெற்றிருக்க வேண்டும் என்று கல்வெட்டு கூறுகிறது.
  • நான்காவது செயல் புரிவதில் வல்லவனாக இருக்க வேண்டும். அதைக் கல்வெட்டு “காரியத்தில் நிபுணன்” என்று கூறுகிறது.
  • ஐந்தாவதாக அவன் ஒழுக்க சீலனாக இருக்க வேண்டும். ஒழுங்கீனமாகச் சுற்றித் திரிபவர்க்கு இடமில்லை.
  • ஆறாவதாக நேர் வழியில் சம்பாதித்த பொருளை உடையவனும் நல்ல மனம் உடையவனாகவும் இருக்க வேண்டும்.
  • ஏழாவது மிகமிக இன்றியமையாத தகுதி ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் அடுத்த மூன்று தேர்தல்களுக்கு நிற்க முடியாது. இதனால் ஆற்றலும் தகுதியும் உடைய மற்றவர்களுக்கு வாய்ப்புக் கிட்டும். இல்லையெனில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தாமே எப்பொழுதும் ஆட்சியில் இருக்க முயற்சி செய்வர். அதனால் இளைய சமுதாயத்தினரிடையே வெறுப்பும் கொந்தளிப்பும் ஏற்படும். 25 ஆண்டுகளாக நானே ஆட்சி செய்தேன் என்று ஒருவர் மார் தட்டிக் கொள்ள வழியில்லாமல் பலரும் பங்குபெறும் வாய்ப்பளித்தனர் சோழர்கால மக்கள். இது நம்முடைய ஆட்சி என மக்கள் உள்ளத்தில் உணர வழி வகுத்தது. இவ்வாறு கல்வி, வயது, சொத்து, ஒழுக்கம், செயல்திறன், நேர்வழிச் சம்பாத்தியம், மனத்தூய்மை ஆகியவையே தகுதிகளாகக் கொண்டு அத்துடன் இதற்கு முன் மூன்று தேர்தல்களில் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப் படாதவராகவும் இருத்தல் வேண்டும் என்று தகுதியை வரையறை செய்து குறிக்கிறது கல்வெட்டு.
உத்திரமேரூர் க்கான பட முடிவு
தகுதியற்றவர் யார்?
அது அத்துடன் நின்றுவிடவில்லை. யார் யார் தகுதியற்றவர் என்றும் தேர்தலில் நிற்க முடியாது என்றும் தெளிவாகக் கூறுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஒழுங்காகக் கணக்கு காட்டாமல் இருந்தாரானால் பின்னர் தன் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் நிற்க முடியாது. இவர் மட்டுமல்ல இவரது மகன், பெயரன், தந்தை வழி, தாய் வழி, மகளையோ; மகனையோ சம்பந்தம் செய்து கொண்டவர் வழியில் எந்தவிதமான சொந்தக்காரர்களும் தேர்தலில் நிற்க முடியாது. தான் கொள்ளை லாபம் சம்பாதித்துவிட்டு பின் தனது சொந்தக்காரர் யாரையும் ஆட்சியில் அமர்த்திவிட முடியாது. இதைக் கல்வெட்டு வாசகத்திலேயே காண்போம்.
உத்திரமேரூர் க்கான பட முடிவு
எப்பேர்ப்பட்ட வாரியங்களும் செய்து கணக்கு காட்டாது இருந்தான், இவன் சிற்றவை பேரவை மக்கள், இவர்களுக்கு அத்தை மாமன் மக்கள், இவர்களுக்கு தாயோடு பிறந்தான், இவர்கள் தகப்பனோடு உடன்பிறந்தான், தன்னோடு உடன் பிறந்தான், இவர்களுக்கு பிள்ளை கொடுத்த மாமன், இவர்கள் மனைவியோடு உடன்பிறந்தாளை வேட்டான் (மணந்தான்), உடன் பிறந்தான் மக்கள், தன் மகளை வேட்ட மருமகன், தன்தமப்பன், தன்மகன் இத்தனை யவரையும் நீக்கி என்று கல்வெட்டு கூறுகிறது. பொதுச் சொத்துக்கு கணக்கு காட்ட வேண்டும். தன் சொத்துக்கும் கணக்கு காட்ட வேண்டும் ஒவ்வொரு ஆண்டும் கணக்கு காட்ட வேண்டும் என்பது கருத்து. இல்லையெனில் அவனது இருவழிச் சொந்தக்காரர்களும் எப்பொழுதும் தேர்தலில் நிற்க முடியாது எனக் கடுமையான விதி ஏற்படுத்தப்பட்டது.
தொடர்புடைய படம்
இது மட்டுமல்ல கள் சாராயம் குடிப்பவன், பிறர் பொருள் அபகரித்தவன், பிறர் மனைவியை அபகரித்தவன், முதலியோர் நிற்க முடியாது. இவை எல்லாம் மகாபாதகம் என்று கூறப்பட்டன. இவர்கள் மட்டுமல்ல. இவர்கள் தூய்மையானவர் என்று சாதிப்பவர்களும் நிற்க முடியாது. இவற்றிற்காகத் தண்டனை பெற்று வெளிப்போந்த பின்னரும் நிற்க முடியாது. ஊரில் மாய்மாலம் செய்தல், பேசியே ஏமாற்றுபவர்கள் எல்லாம் நிற்க முடியாது. இவர்களைச் சாஹஸம் செய்வோர் என்று கல்வெட்டு கூறுகிறது.
உத்திரமேரூர் க்கான பட முடிவு
இறுதியாக ஆனால் இன்றியமையாததாகக் குறிக்கப்பட்டுள்ளது லஞ்சம். இதைக் கையூட்டு என்று கல்வெட்டு கூறுகிறது. யாராவது லஞ்சம் வாங்கினால் ஏழு தலைமுறைக்கு தேர்தலில் நிற்க முடியாது. இரண்டே ஆண்டுகளில் பல லட்சம் சேர்த்தாயே எப்படி சேர்த்தாய் என்று மக்கள் கேட்பார்கள். கொஞ்சம் வாங்கினான் என்று தெரிந்தால் கூட ஒரே ஆண்டில் நீக்கிவிடுவார்கள். ஊழலை ஒழிப்பேன் என்று மக்களை ஏமாற்றி பல லட்சம் சேர்ப்பது “சாஹஸம்” எனப்படும். சாஹஸம் செய்தவர், தப்புச் செய்தவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்தவர், இவர்களெல்லாம் அக்காலத்தே தேர்தலுக்கு நின்றிருக்கு முடியாது என்பதை கல்வெட்டு எப்படிக் கூறுகிறது பாருங்கள்! சாஹஸியராயிருப்பான் பரதிரவியம் அபஹரித்தான் எப்பேர்ப்பட்ட கையூட்டும் கொண்டான்.
உத்திரமேரூர் க்கான பட முடிவு
இக்காலத்தில் “பேட்டை ரெளடி” என்பதை அக்காலத்தில் “கிராம கண்டகன்” என்று கூறினர். “கண்டகம்” என்றால் முள் என்று பொருள். முள் போல் ஊருக்கு துன்பம் இழைப்பவன் கிராம கண்டகன் மட்டுமல்ல அவனுக்கு பாதுகாப்பு அளிப்பவனும் நிற்க முடியாது என்பது “கிராம கண்டகனாய் பிராயச்சித்தம் செய்து சுத்தம் ஆனான்” கல்வெட்டில் உள்ள வாசகம். “ஆக இச்சுட்டப்பட்ட அனைவரையும் நீக்கி” பிற தகுதி உடையோர் பெயரிட்டுத் தேரந்தெடுத்தல் வேண்டும் என்று கல்வெட்டு கூறுகிறது.
உத்திரமேரூர் க்கான பட முடிவு
குடவோலை முறை :
இந்தத் தேர்தல் முறையைக் குடவோலை முறை என்கிறோம் குடத்தில் பெயர் எழுதிய ஓலைகளை கட்டிப் போட்டு அதிலிருந்து ஒரு பெயரை எடுத்து அவரே தேர்ந்தெடுக்குப்பட்டவராகக் கொள்ளப்படுபவர். ஆதலின் இது குடவோலை சீட்டு முறை எனப்படும். தகுதியற்றோரை நீக்கி தகுதியுடையவர் 30 பேர் இருக்கலாம் அல்லது 40 பேர் இருக்கலாம் ஒவ்வொருவர் பெயரையும் ஒரு ஓலையில் எழுதி ஒரு குடத்தில் போடுவர். ஒரு சிறுவனை விட்டு ஒரு ஓலையை எடுக்கச் சொல்வர். 40 பேர் தகுதியுடையவராக இருந்தால் 40 பேர் பெயரும் குடத்தில் இருக்கும். யார் ஒருவர் பெயர் வருகிறதோ அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். அவர் நாட்டுக்காக ஒரு குறிப்பிட்ட காலம் உழைக்க வேண்டும். அடுத்த முறை அவர் பெயர் இடம் பெறாது. மற்றவர் பெயர் இடம் பெறும். இதனால் “என்னை தேர்ந்தெடு” என்ற பிரசாரம் இல்லை. தவறான வழியில் ஆட்சியை பிடிக்க முடியாது. யார் பெயர் வருகிறதோ அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் கட்டாயம் நாட்டுக்காக ஒரு முறையாவது உழைக்க வேண்டும். இதனால் “யாரோ நிற்கிறான் நமக்கென்ன” என்று அலட்சியமாக யாரும் இருக்க முடியாது. அனைவருக்கும் பங்கு இருந்தது. தவறு செய்பவர்களை நீக்கவும் வழியிருந்தது.
உத்திரமேரூர் க்கான பட முடிவு
முறைகேடுகள் அகற்றுதல் :
இக்காலத்தில் தேர்தல் பெட்டியில் முறைகேடு, வோட்டுச் சாவடியில் முறைகேடு, வோட்டு எண்ணுவதில் முறைகேடு என்று செய்திகள் வருகின்றன. இது போன்ற குறைபாடுகள் வராமலிருக்க அக்காலத்தே வழி செய்திருக்கிறார்கள். குடவோலை எடுக்கும் முறை ஊர் மக்கள் அனைவரின் முன்னிலையில் நடைபெறும். ஊரில் பெரியவர்கள் மத்தியில் அக்குடம் வைக்கப்படும். குழுமியிருப்போரில் வயதானவர் எழுந்து நின்று பார்வையிடுவர். ஒரு சிறியவனை அழைத்து ஒரு ஓலை எடுக்க சொல்வர். ஒவ்வொரு குடும்புக்கும் ஒரு ஓலையாக முப்பது குடும்புக்கு முப்பது ஒலை எடுக்கப்படும். எடுத்த ஓலையை ஊர் மத்யஸ்தர் கையில் கொடுப்பர். மத்யஸ்தர் தான் கையில் எந்த ஓலையையும் ஒளித்து வைத்திருக்கவில்லை என்று எல்லோருக்கும் தெரிவிக்க தனது கையை அகல விரித்து காண்பித்து பின், அகல விரித்த கையில் சிறுவன் எடுத்த ஓலையை வாங்கி அதில் எழுதியுள்ள பெயரை எல்லோரும் கேட்கும்படி வாசிப்பார். அவ்வோலையை மண்டபத்தில் உள்ள பெரியவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக வாசிப்பர். வாசித்த அப்பெயர் சரிதான் என்ற பின்னர் அவர் தேரந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
உத்திரமேரூர் க்கான பட முடிவு
வாரியங்கள் :
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சேரந்தது ஊர்ச்சபை. இவ்வூர்ச் சபையர் சிறு குழுக்களாகப் பல பணிகளைக் கவனிப்பர். அக்குழுக்களுக்கு வாரியம் என்று பெயர். இளைஞர்கள் உடல் வலியுள்ளவர் கடுமையான பணிகளையும், வயதாலும் ஆற்றலாலும் முதிர்ந்தவர்கள் மேற்பார்வை புரியும் பணிகளையும் புரிவர். இவ்வாறுதான் ஏரி வாரியம், தோட்ட வாரியம் என்றெல்லாம் பல வாரியங்களில் சபையோர் பணிபுரிந்தனர்.
உத்திரமேரூர் கல்வெட்டு க்கான பட முடிவு
நல்லாட்சியும் செல்வச் செழுமையும் :
இவ்வாறு ஊர்தோறும் கிராமங்கள் தோறும் சோழர் காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சபைகளே ஊராட்சி புரிந்தன. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கல்வெட்டு பெருமக்கள் என்று கூறுகிறது. இதனால் ஏரிகளும், குளங்களும் ஆண்டுதோறும் தூர் எடுக்கப் பெற்று நீர்நிலைகளாகத் திகழந்தன. ஏராளமான நீரோடுகால்கள் வெட்டப்பட்டு நீர்பாசனம் நிறைந்து திகழ்ந்தது. பல்லாயிரம் வேலி நிலங்கள் பண்படுத்தப்பட்டு பயிர் நிலங்களாக மாறின. செல்வம் செழித்தது. கல்வி மிகுந்தது. இயல் இசை நாட்டியம் முதலிய கலைகள் மிகுந்தன. அவற்றை பிரதிபலிக்கும் வகையில் கோயில் கட்டங்களும், சிற்பங்களும், கல்வெட்டுகளும் ஆயிரக்கணக்கில் இன்றும் சான்று கூறுகின்றன. அடிப்படை ஊராட்சி தேர்தல் முறையில் நாடு முழுவதும் நிறைந்து விளங்கியதால் நாம் வலிவுள்ளவர்களாகத் திகழ்ந்தோம். எளியர் என நம்மைப் பிறர் நகையாமல் வலியர் என வணங்கும் நல்லோராய்த் திகழந்தோம். நம்மோரையே முதற்பகை எனக் கருதாது உட்பகையின்றி வாழ்ந்தோம் என்பது சோழர் கல்வெட்டுக்கள்.
உத்திரமேரூர் கல்வெட்டு க்கான பட முடிவு
ஒருவருடன் ஒருவருக்கும் ஒன்றினுடன் ஒன்றுக்கும்
வெருவறு பகைமை மனத்தின்றி விழைந்து காதலுடன் சேர
எல்லோரும் தனித்தனியே வாழ்ந்தனம் என இன்புற்று
எனப் புகழ்கிறது. இஃது அன்றிருந்த தேர்தல் முறை. ஆயிரம் ஆண்டுகள் சுழன்று விட்டன. எவ்வளவோ மாற்றங்கள் சுழற்சிகள் வந்துள்ளன. ஆதலின் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள தேர்தல் முறை இக்காலத்துக்கு பொருந்துமா எனில். பொருந்தும் பொருந்தாது என்று சொல்வதற்கு முன்னர் அடிப்படையிலாவது கிராமங்களில் இதை முயலலாமே! அதுதான் இல்லையெனில் கல்லுரிகளிலாவது பிரசாரம் இல்லாமல் கட்சிப் பகை இல்லாமல் மாணவர் தலைமையைத் தேர்ந்தெடுக்கலாமே! அதன் பின்னர் சொல்லலாமே இது பொருந்தும் பொருந்தாது என. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாக கூறலாம். அன்றிருந்த மக்கள் பொது வாழ்விலும், அரசியலிலும் கொண்டிருந்த-விதித்திருந்த ஒழுக்கமும், தூய்மையும், ஆற்றலும், தியாகமும் இன்றுள்ளதா எனில் அது கேள்விக் குறியாகவே நிற்கும் என்பதில் ஐயமில்லை.
உத்திரமேரூர் கல்வெட்டு க்கான பட முடிவு
கி.பி 920 ஆண்டில் முதலாம் பராந்தக சோழர் காலத்தில் உத்திரமேரூர்க் கல்வெட்டு உத்திரமேரூர் வைகுண்ட பெருமாள் கோயிலில் வெட்டப்பட்டிருந்த கல்வெட்டுகளின் ஒரு பகுதிதான் மேற்சொன்னது. குடவோலை மூலம் தேர்தல் நடத்தி ஊர்ச் சபையினர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் சிறப்பான விதத்தை இந்தக் கல்வெட்டு சொல்கிறது பாருங்கள். இத்தனை குற்றங்களை தவிர்த்தவர்கள் மட்டுமே தேர்தலில் நின்றிருந்து, அப்படியும் போட்டி மூலமாகவே வெற்றி பெற்று மக்களுக்கு தர்மாசனம் மூலமாகவோ, ஊர்ச்சபை மூலமாகவோ பணியாற்ற வேண்டும். இத்தகையானோர் மட்டுமே குற்றங்களை விசாரிக்கவும், நீதி வழங்கவும், தண்டனை கொடுக்கவும், ஊர் பரிபாலனை செய்யவும் தகுதி பெற்றவர்கள் என வரும்போது நிச்சயமாக இதைச் சாதாரணமாகவே படிக்கும் நமக்கே இவர்கள் மீது நம்பிக்கை வருகிறதல்லவா.. ஆஹா! எத்தனை நீதிமான்கள் அவர்கள் என்று புகழுகிறோம்.. ஏனெனில் இப்போதெல்லாம் உச்ச நீதி மன்றத்தைத் தவிர மற்றவை அனைத்தும் ஆட்சியாளர் சொல்படி ஆடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கும் காலகட்டத்தில் நாம் உள்ளோம்.
இத்தனைக்கும் இவர்களது பதவிக்காலம் முன்னூற்றருபது நாட்கள்தான். பிறகு மறுபடி இவர்கள் போட்டியிடமுடியாது. குற்றங்களே நடக்காத காலம் எப்போதுமே இருந்ததில்லை. அப்படி இருந்திருந்தால் திருக்குறள் போன்ற அற்நூல்களை எழுதி இருக்கவே மாட்டார்கள். ஆனால் சரியான தலைவனும், அவன் கீழ் பணியாற்ற சிறிய கிராமங்களில் கூட நல்ல தலைமையும் தேவை என்பதில் கண்டிப்பாக இருந்தனர்.
உத்திரமேரூர் க்கான பட முடிவு
ஜாதிக்கலவரங்கள் அப்போதே இருந்தனதான். முதலாம் குலோத்துங்கன் பதவிக்கு வருமுன்பு இப்படிப்பட்ட ஜாதிக்கலவரங்களால் நாடே சீரழிந்து கிடந்தது என்பதை பட்டவர்த்தனமாகவே ‘கலிங்கத்துப் பரணி’ சொல்கின்றது. வட தொண்டை மண்டல மாவட்டங்களில் தோன்றிய வலங்கை இடங்கைப் பிரிவுச் சண்டைகள் நாடு முழுவதும் பரவி மிகப் பெரிய தொல்லையாக அரசுகளுக்கு மாறியதை சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட சில செப்பேடுகள் (குண்டூர் மாவட்டம்) சொல்கின்றன. வேலை கொடுப்போர் வலங்கையினர், வேலை செய்வோர் இடங்கையினர் என நாம் பொருள் கொண்டாலும், (இது எந்நாளும் உலகத்தில் எல்லா இடங்களிலும் பெருந்தொல்லை தரக்கூடியதுதான்). ஆனால் இந்த வலங்கையினரிலும் கொஞ்சம் அதிகாரம் மிகுந்தவர்கள் வல வலங்கைஎன்றும், அதிகாரமில்லாதோர் இட வலங்கை யென்றும் மேலும் பிரிந்தனர். புகழ் பெற்ற (Leyden Plates) ஆனைமங்கலச் சிறிய செப்பேட்டுத் தொகுதியைப் பொறித்தவர் அப்படித்தான் தம்மைப் போட்டுக் கொண்டு பெருமை கொண்டார் என்பதை அந்த செப்பேட்டின் கடைசிப் பகுதியைப் படித்தாலே புரியும்.
தொடர்புடைய படம்
சந்துவிக்ரிஹகன் ராஜவல்லபப் பல்லவரையரும் :
050. திகாரிகள் ராஜேந்திர சிங்க மூவேந்த வேளாரும் சொல்ல இத்தாம்ர சாசனம் எழுதி
051. னேன் உடக்கோடி விக்கிரமா பரணத் தெரிந்த வலவலங்கை வேளைக்காறரில் நிலையுடைய பணை
052. யான் நிகரிலி சோழன் மதுராந்தகனேன் இவைஎன் எழுத்து
ஜாதிகள், உட்பிரிவுகள் எல்லாமே பாரதநாட்டில் ஆதியாக வருபவை போலத் தோன்றினாலும், நீதி நெறி எனப்பார்க்கும்போது பொதுவாகவே நடுநிலைமையாகத்தான் இருந்திருக்கிறார்கள் என்பதும் பல கல்வெட்டுகளின் ஆதாரம் மூலமாக தெரியவந்திருக்கிறது.
தொடர்புடைய படம்
பேரரசன் ஆட்சி என்பது சர்வாதிகார ஆட்சி போலத்தான். பொதுமக்கள் வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் பேரரசன் எந்த சிற்றரச நாட்டு (மண்டலங்கள்) நீதியிலோ, அல்லது கிராமத்து சபைகள் மட்டத்திலோ தலையிடுவது கிடையாது. அப்படி குறுக்கிட்டபோதும் அரசனின் ஆணை என்பது நீதி தவறுவதை தடுப்பதாகவோ அல்லது மேலும் நியாயம் செய்வதாகவோதான் அமையும். மனுநீதி கண்ட சோழ பரம்பரையில் வந்தவர்கள் நீதி பிறழக் கூடாது என்று நியாய சாஸ்திரத்தில் வெகு நியாயமாக நடந்து கொள்ள ஒவ்வொரு அரசனும் முயற்சி செய்கிறான் என்பதையும் மன்னனின் மெய்க்கீர்த்திகள் பறை சாற்றுகின்றன. எப்போதுமே தான் சோழநாட்டான் எனப் பெருமிதமாகச் சொல்லக்கூடிய அளவுக்கு தம் மக்களை வைத்திருந்த சோழ நாட்டு ராஜாங்கத்தைப் பார்த்து நாமும் பெருமிதப்படுவோம்.
உத்திரமேரூர் :
உத்திரமேரூரில் 1,200 ஆண்டு கள் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. உத்திரமேரூர் சின்ன நாராசம் பேட்டை தெருவில் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னர் தண்டிவர்மனால் கட்டப்பட்டது. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு பின் கட்டப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலை மாதிரியாகக் கொண்டு உத்திரமேரூர் கைலாசநாதர் கோவில் கட்டப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் பக்தர்கள் கருவறையை சுற்றி வர வழி உள்ளது. அதேபோல் உத்திரமேரூர் கைலாசநாதர் கோவிலிலும் கருவறையை சுற்றி வர வழி உள்ளது. கருவறையின் முன்புறம் அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் இருந்துள்ளது. 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த உத்திரமேரூர் கைலாசநாதர் கோவில் பராமரிப்பின்றி நாளடைவில் சீரழிந்தது. மகா மண்டபம் இடிந்து விழுந்தது. கருவறை விமானத்தில் விரிசல் ஏற்பட்டது. கோவில் உள்ளேயும், வெளியே யும் செடிகள் வளர்ந்து புதர்போல் மண்டிக்கிடந்தன.
உத்திரமேரூர் க்கான பட முடிவு
கோவில் அர்த்தமண்டபம் பாம்புகளின் புகலிடமாக மாறியது. மக்கள் அப்பகுதிக்கு வரவே அச்சப்பட்டனர். அதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் கோவிலை இடித்துவிட்டு புதிய கோவில் கட்ட முடிவு செய்தனர். இதை அறிந்த ஓய்வு பெற்ற தொல்பொருள் துறை கண்காணிப்பளர் பழமை மாறாமல் உத்திரமேரூர் கைலாசநாதர் கோவிலை புதுப்பிக்க முன் வந்தார்.
தொடர்புடைய படம்
பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தனர். 2008ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி திருப்பணி துவக்கப்பட்டது. 25 லட்சம் ரூபாய் மதிப்பில் பழமை மாறாமல் கோவிலை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. கோவிலை சுற்றியிருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டன. இடிந்து விழுந்து கிடந்த மகா மண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றாக வெளியே எடுக்கப்பட்டன. அப்போது அரிய கல்வெட்டுகள் கிடைத்தன. இக்கல்வெட்டுகள் ஆதித்யசோழன், மூன்றாம் ராஜேந்திர சோழன், விஜயநகர மன்னரான கிருஷ்ணதேவராயர் ஆகியோர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய படம்
பிருகு முனிவர் சிலை தெரிய வந்தது. கோவில் திருப்பணியில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அவர்கள் கோவில் பழமை மாறக்கூடாது என்பதற்காக கோவில் இடிபாடுகளில் சிக்கியிருந்த கற்கள் மற்றும் தூண்களைக் கொண்டே கோவிலை புதுப்பித்தனர். கல் சுண்ணாம்பு, மணல், கடுக்காய், வெல்லம் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து சுண்ணாம்பு கலவை தயார் செய்தனர். அக்கலவையைக் கொண்டு கோவிலை புதுப்பித்தனர்.கோவில் விமானத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதியில் கம்பி வைத்து பூசினர். கோவில் விமானத்தின் மீதிருந்த சிற்பங்கள் சுண்ணாம்பு கலவை உதவியுடன் புதுப்பிக்கப்பட்டன. கோவில் உட்புறம் கருங்கல் பதிக்கப்பட்டு தளம் அமைக்கப்பட்டது. பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட உத்திரமேரூர் கைலாசநாதர் கோவில் தற்போது புதுப்பொலிவுடன் திகழ்கிறது.
தொடர்புடைய படம்
இக்கோவில் முதலாம் ராஜேந்திர சோழ மன்னரின் குரு நாதரான ஈசான குரு தேவர் மடம் மூலம் பராமரிக்கப்பட்டதற்கான கல்வெட்டு கிடைத்துள்ளது. பல்லவ மன்னர்கள், சோழ மன்னர்கள், விஜயநகர மன்னர்கள் எனப் பல மன்னர்கள் இக்கோவிலை பராமரித்து வந்துள்ளனர். கோவிலிலிருந்த கல்வெட்டுகள் சுண்ணாம்பால் மூடப்பட்டிருந்தது.
உத்திரமேரூர் க்கான பட முடிவு
இன்று உத்திரமேரூர் என்றழைக்கப்படும் பண்டைய சதுர்வேதமங்கலம், கைலாசநாதர் ஆலயத்தால் சிறப்புற்று விளங்குகிறது. கி.பி.750ம் ஆண்டு நந்திவர்ம பல்லவன் காலத்திய இந்த திருக்கோயிலில் ஈசனுடன் அம்பாள் காமாட்சி அருட்காட்சி தருகிறாள். இந்த ஆலயம் ஆதித்யசோழன், ராஜேந்திர சோழன், கிருஷ்ண தேவராயர், பிற்காலப் பாண்டியர்கள், சம்புவராயர்கள் போன்றோர்களால் வெகுவாக பூஜிக்கப்பட்டு, அடுத்தடுத்துப் பல திருப்பணிகளைக் கண்டது. உதாரணத்துக்கு, நந்தா விளக்கு எரித்ததற்கான கல்வெட்டுகள் இன்றும் காணக்கிடைக்கின்றன.