புதன், 17 ஜூலை, 2013

அதிகாரம் பெற்ற உள்ளாட்சி அமைப்புகள் - கோ..ஜெயக்குமார்.

 அதிகாரம் பெற்ற உள்ளாட்சி அமைப்புகள் - கோ..ஜெயக்குமார்.
காமராஜர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டபோது கிராமப் பஞ்சாயத்துக்கள், இரண்டாம் நிலையில் ஒரு சில கிராமங்களை இணைத்த பிர்க்காக்கள், மூன்றாம் நிலையில் மாவட்ட ஆட்சிக்குழுக்கள் என்ற மூன்று வகையில் உள்ளாட்சி அமைப்பு அடுக்கு அமைந்திருந்தது. மாவட்டங்கள் பெரிய அளவில் இருந்தன.

மாவட்டங்களில் போடக்கூடிய திட்டங்கள் கிராமங்களை அடிப்படையாகக் கொண்டு போட்டாலும் ஒவ்வொரு கிராமமும் தனித்தனி அலகுகளாகப் பார்க்கப்பட்டதால் பல நடைமுறை சிக்கல்கள் இருந்தன. எல்லா அதிகாரங்களும் மாவட்ட ஆட்சிக் குழுவிடம் குவிந்து இருந்தது. எனவே கிராம மக்களுக்கும் ஆட்சியாளருக்கும் இருக்கக் கூடிய இடைவெளி குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை காமராஜர் கொண்டிருந்தார்.

மேலும் மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உள்ளாட்சிக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என காமராஜர் முடிவு செய்தார். அதனுடைய முதல் பகுதியாக 1957-ல் மாநில அரசு, உள்ளாட்சி நிர்வாக சீர்திருத்தம் பற்றிய ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது.

அதன்படி அதிகாரங்களுடைய மையமாக இருந்த மாவட்ட ஆட்சிக் குழுக்கள் கலைக்கப்பட்டு, கிராமம், ஒன்றியங்கள் என்றளவில் பஞ்சாயத்து கட்டமைப்பை மாற்றியமைக்க திட்டமிட்டது. தொடர்ந்து 1958-ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி இரண்டு அடுக்குகளைக் கொண்ட உள்ளாட்சி கூட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தக்கட்டமைப்பில் கிராம பஞ்சாயத்துக்கள் கீழ்மட்ட அடுக்குகளாகவும், ஒரே பகுதியைச் சார்ந்த பல கிராமங்களை ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட பஞ்சாயத்து ஒன்றியங்கள் மேல்மட்ட அடுக்காகவும் இடம்பெற்றன. ஒரு பஞ்சாயத்து ஒன்றியத்தில் அந்தப் பஞ்சாயத்து ஒன்றியத்திற்குட்பட்ட எல்லா கிராம பஞ்சாயத்துதுத் தலைவர்களும் இடம்பெறுவார்கள் என்று இருந்ததன் மூலம் இரண்டு அடுக்குகளுக்கும் இடையே ஒரு குறிப்பிட்ட தொடர்பு இந்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டது.

1958-ல் கொண்டு வரப்பட்ட சட்டத்தினுடைய இன்னொரு சிறப்பு, உள்ளாட்சி அமைப்புகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு தொடர்வதற்கு வழிவகை செய்ததோடு பெண்களை நியமன உறுப்பினர்களாக நியமித்து கொள்ள வழிவகை செய்யப்பட்டது.

மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் மட்டுமே அதிகாரமளிக்கப்பட்டிருந்த உள்ளாட்சி அமைப்புகள், 1958-ம் ஆண்டு உள்ளாட்சிச் சட்டத்திற்குப் பின்னர் விவசாயம், கால்நடை வளர்ச்சி, ஊரகத் தொழில்கள், கல்வி போன்ற பணிகளை மேற்கொள்ள கூடிய அமைப்புகளாக கிராம பஞ்சாயத்துக்களும், பஞ்சாயத்து ஒன்றியங்களும் மாற்றம் பெற்றிருந்தன.
https://sphotos-a.xx.fbcdn.net/hphotos-ash4/483096_550465971638324_288201342_n.jpg
குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் பஞ்சாயத்து ஒன்றியங்கள் மூலம் உரங்கள், மாடுகள், ஆடுகள் வினியோகம் செய்வது, கால்நடை மருத்துவமனை கட்டுவது, கோழிப்பண்ணைகள், மீன்வளர்ப்பு பண்ணைகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டன. கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் உதவியுடன் ஊரகத் தொழில்கள் உருவாக்கப்பட்டது.
http://vimarisanam.files.wordpress.com/2010/09/indira-kamaraj-anna-together.jpg?w=640
ஆரம்பப்பள்ளிகளைத் திறப்பது, பராமரிப்பது, விரிவுபடுத்துவது, மேம்படுத்துவது போன்ற கல்விப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எந்த வகையான திட்டங்களை அமல்படுத்துவது, எங்கெங்கு அமல்படுத்துவது, அதன் தேவைகள் யார்-யாருக்கு என்பன போன்றவைகளை உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப முடிவுகளை மேற்கொள்ள புதிய அதிகார பரவல்முறை 1958-ம் ஆண்டு பஞ்சாயத்து சட்டம் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/p480x480/601834_577247978963918_1810186672_n.jpg
இத்தகைய நடவடிக்கைகள் மூலம் கிராம பஞ்சாயத்துக்கள் உண்மையான அதிகாரங்களைப் பெற்று உயிர்த்துடிப்புள்ளவைகளாக மாறின. இந்தியா கிராமங்களில் வாழ்வதாக மகாத்மா காந்தி கூறினார். அவரது சீடர் காமராஜர் அதை செயல்படுத்தி காட்டினார்.

நீர்ப்பாசனம்:

மேட்டூர் அணை, பெரியாறு அணை ஆகிய இரண்டைத் தவிர ஆங்கிலேயர்களின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட நீர்ப்பாசன திட்டங்கள் யாவையும் சிறுசிறு திட்டங்கள்தான்.
http://www.newsonweb.com/newsimages/July2013/25d35bd2-048e-45aa-acaa-6f55fbd715c61.jpg
1889 முதல் 1947 வரை ஆங்கிலேயர்களால் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசனத் திட்டங்களால் 9,75,098 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்றன. விடுதலை பெற்ற 1947-லிருந்து 1954 வரை தற்போதைய தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசனத் திட்டங்களால் 66,00 ஏக்கர் நிலங்கள் மட்டுமே பயன்பெற்றன.
http://www.tamiloviam.com/img/JAYAPRAKASHNARAYAN-KAMARAJ.jpg
இந்த சூழ்நிலையில் 1954ஆம் ஆண்டு பதவி ஏற்ற காமராஜர் நீர்ப்பாசனத் திட்டங்களால் மூன்று பெரும்நன்மைகள் உணவு உற்பத்திப் பெருக்கம், புதிய பாசனப் பகுதிகளால் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு மற்றும் மின்சார உற்பத்தி இருப்பதைக் கண்டார்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEDv8YB8JVrehGfgxh3flnWSJaFGB5CA6b_YOBjDO8mGi37lll8iOwwSzeWRb-pOYBfNrRr1ueGbYYcuhTihPBYH_sLSqyGZxxcd4TmYFdgP-4-PaewXsTEjYWNT999b7HQjeD7dxbUe8/s400/kamarajar.jpg
அதன் விளைவாக, சிறிதளவு வாய்ப்பு இருந்த நதிகளிலும் கூட அதற்கேற்ற நீர்ப்பாசனத் திட்டம் என்ற நிலையில், தமிழகத்தின் எல்லா நதிகளிலும் பாசனத் திட்டங்களை ஏற்படுத்தியது காமராஜர் ஆட்சி. இதன் காரணமாக, காமராஜர் ஆட்சியிலிருந்து ஒன்பது ஆண்டுகளில் பெரிய அணைத் திட்டங்களால் மட்டும் ஏறக்குறைய 3,73,436 ஏக்கர் நிலங்கள் புதிதாக பாசன வசதிப் பெற்றது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNbKbvO1rbapxqgJQqNOz1V-Ax6h7G0fPPfFoBMGDa9LlNQABN7XdVhgCa_vTpUdQLR7pUELCRIn_uB0nkT6CrVCmWz39XG68GnvPGB2WV5kvJVA7ZYVR546_MmXO3uWlFJtGt1DHDo1XU/s400/Nehru-Rajaji.jpg
காமராஜர் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட பெரிய அணைத் திட்டங்கள் வருமாறு:-

1. கிருஷ்ணகிரி நீர்த்தேக்க திட்டம் - 1956-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1957-ஆம் ஆண்டு (கிருஷ்ணகிரி அணைத் திட்டம்) முடிவுற்றது. பொன்னி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணைத் திட்டத்தால் 7500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது.

2. அமராவதி நீர்த்தேக்கத் திட்டம் - அமராவதி ஆற்றின் குறுக்கே (1958-ல்) கட்டப்பட்ட இந்த அணைத் திட்டத்தின் பயனாக புதியதாக 15,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன.

3. சாத்தனூர் நீர்த்தேக்கத் திட்டம் - ஆற்காடு மாவட்டத்தில் பொன்னி ஆற்றின் குறுக்கே (1957-ல்) கட்டப்பட்ட இந்த அணைத் திட்டத்தால் 20,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன.

4. புள்ளம்பாடி கால்வாய்த் திட்டம் - காவிரியின் மேல், அணைக்கட்டிலிருந்து 54 மைல் நீளமுள்ள கால்வாய் வெட்டப்பட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி, உடையார்பாளையம் தாலுகாவில் 24,114 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், புள்ளம்பாடி கால்வாய்த் திட்டம் ஏற்படுத்தப்பட்டது.

5. வீடுர் நீர்த்தேக்கத் திட்டம் - திண்டிவனம் அருகில் உள்ள வீடுர் கிராமத்தில் 1958-ல் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தினால் 3200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. இதில் பாண்டிச்சேரி மாநிலத்தில் உள்ள 1000 ஏக்கர் நிலமும் அடங்கும்.

6. புதிய கட்டளை மேல்நிலைக் கல்வாய் திட்டம் - 86 மைல் நீளம் கொண்ட புதிய கட்டளைக் கால்வாய் திட்டத்தின் மூலமாக 8622 ஏக்கர் தரிசு நிலங்கள் பாசன வசதி பெற்றன.

7. கீழ்பவானி திட்டம் - பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணைத் திட்டத்தினால் 2,07,000 ஏக்கர் நிலங்கள் பயனடைந்தன. 1957-ஆம் ஆண்டு இத்திட்டத்தின் மூலம் முழுமையான பலன்கள் மக்களைச் சென்றடைந்தன.

8. மணிமுத்தாறு திட்டம் - இத்திட்டம் 1958-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றோடு, மணிமுத்தாறு சேரும் இடத்திற்கு முன்பாக இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணைத்திட்டத்தோடு, மழைநீரை நம்பி விவசாயம் செய்து வரும் 20,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் விதத்தில், அணையின் வலதுபுறத்தில் 28 மைல் நீளக் கால்வாயும் வெட்டப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலமாக தண்ணீர் பற்றாக்குறையால் அடிக்கடி அவதிப்படும், தாமிரபரணி ஆற்றின் மூலம் பாசன வசதி பெறும் 83,000 ஏக்கர் நிலங்களுக்கு நீர் தொடர்ந்து கிடைக்கும் வகையில் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

9. ஆரணி ஆறு திட்டம் - ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், புதிதாக 3,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றதோடு, 13,600 ஏக்கருக்கு பாசன வசதி உறுதி செய்யப்பட்டது. இந்தத் திட்டம் 1958-ஆம் ஆண்டு முழுமையடைந்தது.

10. பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் - தமிழ்நாடு கேரள மாநிலங்களின் கூட்டு திட்டமாக அன்றே 32 கோடி ரூபாய் செலவில் பல துணை திட்டங்களையும் கொண்டதாக இத்திட்டம் அமைந்திருந்தது. அதற்கான ஒப்பந்தமும் கேரள அரசோடு போடப்பட்டிருந்தது.

இந்தத் திட்டத்தின்படி மேற்கு நோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கின்ற பரம்பிக்குளம் நதி மற்றும் சாலக்குடி துணை நதிகளினுடைய நீரை பயன்படுத்தும் கூட்டுத் திட்டமாக இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி சோழியாறு நதியில் இரு அணைகளும் பரம்பிக்குளம், பெரும்வாரிபள்ளம், தனுக்கடவு மற்றும் தேக்கடி ஆகிய ஒவ்வொரு நதிகளிலும் ஒரு அணைத் திட்டமாக பல திட்டங்களைக் கொண்டது இந்த திட்டம்.

இது தவிர ஆழியாறு நதியின் பல திட்டங்களைக் கொண்டது இந்த திட்டம். இதுதவிர ஆழியாறு நதியின் ஒரு நீர்த்தேக்கமும் பாலாறு நதியில் ஒரு நீர்த்தேக்கமும், இது தவிர பல மைல் நீளத்துக்கு மலைக்குடைவுகளையும் கொண்டதாக இந்த திட்டம் தீட்டப்பட்டிருந்தது. 1963 வரை இந்த திட்டம் பலமுனைகளில் முடக்கி விடப்பட்டு தீவிரமாக வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

சோழியாறு அணை, பரம்பிக்குளம் மலைக்குடைவு பரம்பிக்குளம் அணை, ஆழியாறு அணை, ஆழியாறு மலைக்குடைவு, நவமலைமலைக் குடைவு, திருமூர்த்தி அணை, வேடைக்காரன் புதூர் கால்வாய், பரம்பிக்குளம் பிரதான கால்வாய், சேதுமடை கால்வாய், பொள்ளாச்சி கால்வாய், உடுமலைப்பேட்டை கால்வாய் என்று ஏறக்குறைய திட்டத்தினுடைய பெரும்பகுதி முடிவடையும் நிலையை 1963-ஆம் ஆண்டு எட்டியிருந்தது.

11. வைகை நீர்த்தேக்கத் திட்டம் - மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றின் குறுக்கே 1959-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த திட்டத்தினால் புதிதாக 20,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது.

12. மேட்டூர் கால்வாய் திட்டம் - 1958-ல் முழுமையாக நிறைவு செய்யப்பட்ட இந்தத் திட்டத்தினால் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன.

மின்சாரம்:

காமராஜர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது, 156 மெகாவாட்டாக இருந்த மின்சார உற்பத்தி திறன், 571 மெகா வாட்டுகளாக உயர்ந்தது. இதற்காக நீர்மின் நிலையங்களும் அனல்மின்நிலை யங்களும் புதியதாக உருவாக்கப்பட்டன. இது மட்டுமல்ல ஏற்கனவே இயங்கி வந்த நீர், அனல் மின்நிலையங்கள் திறன் அதிகரிக்கப்பட்டது.

காமராஜர் காலத்தில் ஏற்பட்ட ஏற்படுத்தப்பட்ட மின்உற்பத்தி திட்டங்கள் பின்வருமாறு:-

குந்தா நீர்மின்திட்டம் - பன்னாட்டு திட்டங்களோடு ஒப்பிடும்போது நம்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய நீர்மின் திட்டமாகும். 1956-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டம் கனடா நாட்டு ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்டது.

1960-ஆம் ஆண்டு செயல்பட தொடங்கிய இத்திட்டத்தின் மொத்த உற்பத்தி திறன் 1,40,000 கிலோவாட் ஆகும். மோயாறு நீர்மின் திட்டம் - பைகாரா நீர்மின் உற்பத்தி திட்டத்திலிருந்து வெளியாகக்கூடிய நீரை அந்த திட்டத்திலிருந்து 10 மைல்கல் தொலைவில் உள்ள மோயாறு பள்ளத்தாக்கில் விழச் செய்து 130 அடி உயரமுள்ள நீர்வீழ்ச்சியாக செய்து நீர்மின் திட்டம் அமைக்கப்பட்டது.

இதனுடைய மொத்த உற்பத்தி திறன் 36,000 கிலோ வாட் ஆகும். கூடலூர் நீர்மின் திட்டம் - மதுரை மாவட்டம் கூடலூருக்கு அருகில் பெரியாறு நீரை பயன்படுத்தி இந்த நீர்மின் உற்பத்தி திட்டம் அமைக்கப்பட்டது. 1955-ல் தொடங்கப்பட்டு 1958-ஆம் ஆண்டு நிறைவு பெற்ற இத்திட்டத்தின் உற்பத்தி அளவு 1,40,000 கிலோ வாட் ஆகும்.

சென்னை அனல்மின்நிலையம் - ஏற்கனவே இயங்கி வந்த சென்னை அனல்மின்நிலையத்தில் மூன்றாவது மின்உற்பத்தி பிரிவு 1958 -ஆம் ஆண்டு செயல்பட தொடங்கியது. சமயநல்லூர் அனல்மின்நிலையம் - மதுரைக்கு அருகே சமயநல்லூரில் அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டது. அதனுடைய உற்பத்தி திறன் 14,000 கிலோ வாட் ஆகும்.

மேட்டூர் புனல் மின்உற்பத்தி திட்டம் - மேட்டூர் அணையிலிருந்து விடப்படும் விவசாய கழிவு நீரை பயன்படுத்தி அமைக்கப்பட்ட சுரங்க நீர்மின்திட்டமாகும் இது. இந்த நீர்மின் திட்டத்தினுடைய திறானது ஒரு லட்சம் கிலோவாட் ஆகும். நெய்வேலி அனல்மின் திட்டம் - நெய்வேலியில் பெறப்பட்ட பழுப்பு நிலக்கரியை பயன்படுத்தி நான்கு லட்சம் கிலோவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்டதாக அமைக்கப்பட்டது.

இந்த வகையில், தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட மின்திட்டங்கள் மூலமாக, மின்சக்தித் திறன் 1963 ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று 6,30,700 கிலோவாட்டாக உயர்ந்தது. இதில் நெய்வேலி அனல்மின் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட 70,000 கிலோ வாட்டும் அடக்கம்
 இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, சென்னை நகரத்தை கைப்பற்றி விட வேண்டும். என்று ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக இருந்தனர். தெலுங்கு பேசும் மக்களைக் கொண்ட ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகும் கூட ஆந்திர மாநில மக்களுக்கு சென்னை மீது ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது.

இந்த நிலையில் 1948-ம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்குத் தேர்தல் நடந்தது. அப்போது சென்னை நகரம் ஆந்திராவுக்கே சொந்தம் என்பதை நிலை நாட்ட, ஆந்திர காங்கிரஸ்காரர்கள் பெருமளவில் தேர்தலில் போட்டியிட்டனர். தேர்தலில் வென்று சென்னையை ஆந்திராவுடன் இணைத்து விட வேண்டும் என்பது அவர்களது திட்டமாகும்.

அந்த சமயத்தில் காமராஜர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். ஆந்திரா காங்கிரஸ்காரர்கள் திட்டமிட்டு காய்களை நகர்த்துவதை அறிந்த அவர், சென்னை மாநகராட்சித் தேர்தலில் தமிழக காங்கிரசார் போட்டியிட மாட்டார்கள் என்று அறிவித்தார்.எல்லோரும் காமராஜரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

அதன் பிறகு காமராஜர் தன் அதிரடியைத் தொடங்கினார். தமிழ்நாடு எல்லையைக் கமிட்டி என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். அந்த அமைப்பு சார்பில் "தமிழ் நாட்டுக்கே சென்னை நகரம் சொந்தம்'' என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. அதோடு அந்த அமைப்பின் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

தேர்தலில் தமிழ் நாடு எல்லைக்கமிட்டி சார்பில் காமராஜர் நிறுத்திய வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். ஆந்திர காங்கிரஸ்காரர்கள் படுதோல்வியைத் தழுவினார்கள். இதன் மூலம் சென்னை நகரை காமராஜர் மீட்டு, தமிழ்நாட்டுடன் தக்க வைத்துக் கொண்டார்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு ஆந்திர மாநில தலைவர்கள்,சென்னை நகருக்கு உரிமை கொண்டாடுவதை கை விட்டு விட்டனர். இதன் மூலம் காமராஜர் ஓரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது குறிப்பிடத்தக்கது. ஒன்று தமிழக-ஆந்திர காங்கிரஸ் தலைவர்களிடம் ஏற்பட இருந்த சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இரண்டாவது சென்னை நகரம் கை நழுவி செல்லாமல் பார்த்துக் கொண்டார். சுதந்திரம் அடைந்த மறு ஆண்டே எழுந்த இந்த பிரச்சினையால் பிரதமர் நேரு மிகுந்த பதற்றத்துடன் இருந்தார். ஆனால் பிரச்சினையை காமராஜர் கையாண்ட விதத்தை கண்டு நேரு பிரமித்துப்போனார்.

கர்ம வீரர் என்றால் என்ன அர்த்தம்:

பெருந்தலைவர் காமராஜருக்கு அமைத்த ஒரு சிறப்புப்பட்டம் கருமவீரர் காமராஜர் என்பதாகும். கர்மமே கண்ணாகக் கொண்டவர் என்று இதற்கு அர்த்தம். கரும வீரர்கள் நடவடிக்கைகள் பற்றி குமரகுருபரர் பட்டியலில் தந்துள்ளார். மெய்வருத்தம் பாரார், பசிநோக்கார், கண்துஞ்சார், செல்வி அருமையும் பாரார், அவமதிப்பும் நாடார் என்பது அது.

9 ஆண்டுகள் ஆட்சியில் ஒரு நூற்றாண்டுச் சாதனைகளை காமராஜர் நிகழ்த்தினார். அது எவ்வாறு மெய்வருத்தம் பாராது, பசிநோக்காது, கண்துஞ்சாது, அருமை பார்க்காது, அவமதிப்பையும் பொருட்படுத்தாது, எனவேதான் அவர் கருமவீரர் ஆனார். கருமமே கண்ணாக காமராஜர் உழைத்த காரணத்தால்தான் தமிழகத்தில் உள்ள 20 ஆயிரம் கிராமங்களில் 75 சதவீதம் மின் வசதி பெற்றன.
 காமராஜரை அவரது சென்னை திருமலைப்பிள்ளை இல்லத்தில் சந்திக்க வருகிறவர்களுக்கு ஒரு சந்தேகம் வரும். அவர் சாப்பிடும் போது கூட பேட்டி கொடுக்கும் பழக்கம் உடையவராக இருந்தார். ஆனால் வருகிறவர்களிடம் பேசுவாரே தவிர, மரியாதைக்காகக் கூட சாப்பிடுகிறீர்களா என்று கேட்க மாட்டாராம்.

இந்த விஷயம் பல பேருக்கு ஆச்சரியத்தையும் சிலருக்கு மனக்குறையையும் கூட ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அவர் அப்படி யாரையும் அழைக்காததற்குக் காரணம் என்ன? தமிழ்நாட்டுக்கே மதிய உணவு போட்ட வள்ளல், வீட்டுக்கு வருபவர்களை மட்டும் கவனிக்காதது ஏன்?  இந்த முரண்பாட்டின் பின்னால் இருந்த மர்மம் என்ன?

அவருடைய முதன்மை ஊழியராக இருந்த வைரவனே பதில் சொல்கிறார். காமராஜர் சாப்பிடும் உணவில் போதுமான உப்போ, புளிப்போ, காரமோ இருக்காதாம். டாக்டர் ஆலோசனைப்படி, உடல் நலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு சமைக்கப்பட்ட உணவாக அது இருந்தது நாக்கை அவமானப்படுத்தும் அந்த உணவை மற்றவர்களுக்கும் கொடுத்து சங்கடப்படுத்த அவர் விரும்பவில்லை.

எதிரிக்கும் நன்மை:

1961-ல் சென்னை தி.நகரில் ராஜாஜி சேவா சங்கம் என்ற பெயரில் ஒரு பொது நல அமைப்பு இயங்கி வந்தது. ஒரு நாள் அந்தக் கட்டடத்தை மாநகர வளர்ச்சித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இடித்துத் தரை மட்டமாக்கி விட்டார்கள்.
சென்னையை மீட்ட காமராஜர்
சி.ஐ.டி. நகரின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு உட்பட்ட நிலத்தில் அந்த கட்டடம் இருந்ததால் இடிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. சங்க நிர்வாகிகள் இடிக்கப்பட்ட கட்டடத்தை போட்டோ எடுத்து, முதல்-அமைச்சர் காமராஜரைப் பார்த்து போட்டோவையும், மனுவையும் கொடுத்து விளக்கினர்.

கட்டடத்தை இடித்தது தவறு என்றும், முன்பு போலவே சொந்த செலவில் ராஜாஜி சேவா சங்கத்தை மாநகர வளர்ச்சித் துறை திரும்பக் கட்டிக் கொடுக்க வெண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இதில் என்ன விசேஷம் என்றால், கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக ராஜாஜிக்கும், காமராஜருக்கும் நடந்து கொண்டிருந்த அரசியல் குருசேத்திரம் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த காலகட்டம் அது அரசியலில் எதிரி நிலையில் இருந்தவர்களுக்கு நன்மை செய்யும் குணம் காமராஜருடையது.

கார் தள்ளிய காமராஜர்:

காமராஜர் முதல்-அமைச்சர் ஆன பிறகு தியாகராயநகரில் இந்தி பிரசார சபா எதிரில் தணிகாசலம் சாலையில் சத்திய மூர்த்தி குடும்பத்தினர் வசித்த வீட்டுக்கு அடிக்கடி வருவார். அவர் சத்தியமூர்த்தி குடும்பத்தினர் மீது அளவு கடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தார்.

முதல்-அமைச்சராக இருந்த போது அவரும் சத்தியமூர்த்தி குடும்பத்தினரும் திருப்பதி கோவிலுக்கு சென்றிருந்தனர். ஆந்திர முதல் மந்திரியாக இருந்த பிரமானந்த ரெட்டியும் கோவிலுக்கு வந்திருந்தார்.

திரும்பி காரில் வரும் போது ரேணிகுண்டாவில் புதை மணலில் காரின் டயர்கள் சிக்கிக் கொண்டது. கார் நகரவில்லை. காரில் இருந்த காமராஜர் கீழே இறங்கி காரை தள்ளினார். முதல்-அமைச்சராக இருந்த அவர் எந்தவித கவுரவமும் பார்க்காமல் காரை தள்ளியது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

திருடனை கண்டு பிடித்தார்:

நேரு பிரதமராக இருந்தபோது பெருந்தலைவர் அகில இந்திய காங்கிரசு இயக்கத்தின் தலைவராக இருந்தார். அந்த காலகட்டத்தில் மத்திய அரசின் கோப்பு ஒன்று காணாமல் போய்விட்டது. அதில் இருக்கின்ற செய்திகள் எந்த தனிமனிதருக்கும் பயனளிக்காது.

ஆனால் மிக முக்கியமான பொருளாதாரத்தை அரசுக்கு விளக்கும் குறிப்புகள் அடங்கியதாக அது இருந்தது. ஆகவே காணாமல் போன கோப்பைத் தேடும் பணியில் உயர் அதிகாரிகள் கடுமையாக முயன்று இறுதியில் தோல்வியையே சந்தித்தனர்.

செய்தியறிந்த காமராஜர் இந்தியாவின் புகழ்மிக்க ஓவியர்கள் அனைவரையும் ஒரே இடத்திற்கு அழைத்தார். இந்த இடத்தை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று ஓவியர்களிடம் கூறிய காமராசர் இந்த இடத்தில் உள்ள கோப்பை (பைல்) யாரோ ஒருவர் எடுத்துச் சென்றிருக்கிறார்.

உங்கள் கற்பனையில் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஓவியம் தீட்டி வாருங்கள். அவர் எப்படி இருப்பார் என்று நீங்கள் சிந்தித்து பதினைந்து நாட்கள் காலக் கெடுவுடன் படம் வரைந்து தாருங்கள் என்றார். பிறகு ஓவியர்கள் கொடுத்த பலருடைய ஓவியங்கள் அதிக வேறுபாடுகளின்றி ஒரே சாயலில் காணப்பட்டது.

உடனே காமராஜர், காவல் துறை அதிகாரிகளை அழைத்து ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் உள்ள சமூகவிரோதக் குற்றவாளிகளின் படங்களுடன் ஓவியர்கள் வரைந்த அந்த படத்தை ஒப்பிட்டுப்பார்க்க சொன்னதில் ஒரு குற்றவாளியின் புகைப்படம் ஓவியம் போலவே தோற்றமளித்தது.

பின் அவனை தேடிப்பிடித்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டான். இந்த கோப்பு எனக்கு எந்தவிதத்திலும் பயன்படாது என்பது தெரியும். என் திறமையை பரிசோதிக்கவே நான் இதைத் திருடினேன். காவல் துறையால் கண்டுபிடிக்க முடியுமா? என்பது தான் என்னுடைய பரிசோதனை என்றான். கல்லூரி காணாத காமராசரின் அறிவியல் பார்வை எப்படி இருக்கின்றது என்பதை இந்நிகழ்ச்சியால் புரிந்து கொள்ளலாம்.

குஜராத்தில் கைத்தட்டு:

குஜராத் மாநிலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் முடிந்து மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. அந்த கூட்டத்தில் காமராசர் பேச வேண்டும் என்பது பண்டித நேருவின் விருப்பம். ஆனால் காமராசர் மறுத்துவிடுகிறர். "இங்கு ஹந்திக்காரர்கள் தான் நிறைய கூடியிருக்கிறார்கள்.

நான் தமிழில் பேசி அவர்களுக்கு புரியப்போவதில்லை''என்பது அவரின் வாதம். ஆனாலும் நேரு விடுவதாக இல்லை. "காமராஜர் இப்போது பேசுவார்'' என்று அறிவித்துவிட்டார். மைக் முன்பாக வந்து நாலா பக்கமும் சூழ்ந்திருக்கும் கூட்டத்தினரை பார்க்கிறார் காமராஜர். ஆர்ப்பரித்த கூட்டம் அமைதியாய் காமராசர் பேச்சை கேட்க ஆயத்தமாகிறது.

தனக்கு தெரிந்த மிக எளிய தமிழில் அவர் ஒரு பத்து நிமிடம் பேசுகிறார். அவரின் பேச்சு முடிந்ததும் மொத்தக்கூட்டமும் எழுந்து நின்று கைதட்டுகிறது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு பத்திரிக்கையாளர் கே.ஸ்ரீனிவாசன் "ஒரு ஹிந்திக்காரரிடம், ஏன் காமராஜர் பேசியதும் கைதட்டினீர்கள்?

அவரின் தமிழ்ப் பேச்சு உங்களுக்கு புரிந்ததா?'' என்று கேட்டார். "ஒரு நல்ல மனிதர் பேசுகிறார் என்றால் நல்லதைத்தானே பேசுவார். இதற்கு எதுக்கு மொழி தெரிந்திருக்க வேண்டும்? அந்த உத்தமர் பேசிய மொழி புரியாவிட்டால் என்ன? அவரின் நல்ல எண்ணம் எங்களுக்கெல்லாம் தெரியுமே'' என்று அந்த இந்திக்காரர் சொன்னாராம். ஆம் காமராஜர் என்ற புனிதர் இன, மொழி, மத உணர்வுகளைக் கடந்த தலைவர்.
 பெருந்தலைவர் காமராஜர் எளிமையாக, பெருந்தன்மையாக, யதார்த்தமாக வாழ்ந்தவர். அவர் மனதில் மக்கள் நலனைத் தவிர வேறு எந்த ஒரு விஷயத்துக்காகவும், யார் மீதும் போட்டியோ - பொறாமையோ கொண்டது இல்லை.

அதனால்தான் மகாத்மாகாந்தி உள்பட எல்லாக் கட்சித் தலைவர்களிடமும் அவரால் மிக, மிக இயல்பாக சகஜமாக பேசி பழக முடிந்தது. காமராஜரை பல தடவை ராஜாஜி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஆனால் அவரை "பெரியவர்'' என்றே எப்போதும் காமராஜர் அழைத்தார்.

தன்னை எதிர்த்த சக காங்கிரஸ் தலைவர்கள் அனைவரையும் அவர் அரவணைத்தார். அவர்களுக்கு உரிய பதவிகளையும் கொடுத்து அழகு பார்த்தார். இது அவரை மற்ற தலைவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டியது. தந்தை பெரியாருடன் காமராஜர் வைத்திருந்த அன்பும், நட்பும் பிரமிப்பூட்டுவதாக இருந்தது.

அது போல அறிஞர் அண்ணாவிடமும் காமராஜர் ஆத்மார்த்தமாக பழக்கம் வைத்திருந்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக அவர் இருந்த போது நேரு, சர்தார்படேல் போன்றவர்களிடம் அன்புடன் பழகி கவர்ந்தார். மாநில காங்கிரஸ் தலைவர்கள் எல்லாருமே காமராஜரின் பாசத்தில் கட்டுப்பட்டுக் கிடந்தனர்.

எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல், எல்லாரிடமும் அவர் பழகிய விதம் இன்று வரலாறாக உள்ளது. அந்த வரலாற்று நிகழ்வுகளைப் படிக்க, படிக்க ஒருமனிதரால் எப்படி இப்படியெல்லாம் வாழ முடிந்தது என்ற ஆச்சரியம்தான் எல்லாரது மனதிலும் மேலோங்குகிறது. அத்தகைய வரலாற்று நிகழ்வுகளில் சிலவற்றை வரும் பக்கங்களில் காணலாம்.

அண்ணாவுக்கு சொன்ன ஆலோசனை:

1967-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆளுங்கட்சியானது. அண்ணா முதல்வரானார். அப்பொது பெருந்தலைவர் காமராஜரை சந்தித்து அவரைக் கவுரவிக்கவும், ஆலோசனை பெறவும் அண்ணா அவரது இல்லம் சென்றார்.
தலைவர்களுடன் காமராஜர்!
பெருந்தலைவரிடம் அண்ணா, நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று நினைக்கவில்லை. வந்து விட்டோம். நீங்கள் தான் எங்களுக்கு ஆதரவும், ஆலோசனையும் வழங்க வேண்டும்' என்றார். அதற்குப் பெருந்தலைவர், `அதைப் பற்றி நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம்.

நீங்கள் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை உங்கள் உதவியாளரிடம் சொல்லுங்கள். அந்தக் காரியங்களை இலாகா செயலாளர்களிடம் கூறி செயல்படுத்தச் சொல்லுங்கள். முதலில் உங்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களுக்கு நன்றி சொல்லுங்கள். அவர்கள் உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்' என்றார்.

அண்ணா மீது பாசம்:

ஒருநாள் அண்ணாதுரையைப் பார்க்க ஆஸ்பத் திரிக்குப்போயிருந்தார். உடல் மெலிந்து, கண்கள் ஒளி இழந்து, உணவை விழுங்கக்கூட முடியாமல் கிள்ளிக்கிள்ளி எடுத்து வாயில் போட்டு மிகுந்த சிரமத்துடன் விழுங்க முடியாமல் திணறினார் அண்ணா. இதைப்பார்த்த காமராஜருக்கு மனம் பொறுக்கவில்லை.
https://sphotos-a.xx.fbcdn.net/hphotos-ash3/p480x480/1016668_389425034513911_185601565_n.jpg
"அவரு உடம்புக்கு என்னென்னே இன்னமும் கண்டு பிடிக்கலியா? ரொம்ப லட்சணமாயிருக்கு. நீங்கள்ளாம் நெறைய படிச்சது எதுக்கய்யா? உங்கள்ளே யாரு முக்கியம்கிறது பெரிசில்லை. இவருயாரு தெரியுமில்லே. முதல்-அமைச்சர். இவருதான் இப்ப முக்கியம். டாக்டர்கள் அவங்க அவங்களுக்குண்டான பொறுப்பை எடுத்துகிட்டு டீம் ஒர்க் பண்ணுங்க.

கவனமாய் பாருங்கண்ணுதானே சொல்றேன். கவர்ன் மென்ட்லே பண்றமாதிரி பேப்பர்ங்களே மேலேயும் கீழேயும் அனுப்பிகிட்டு இருக்காதீங்க. எதை செய்தா இவருக்கு நல்லதோ அதை உடனே செய்யுங்க. எது வேணுமோ அதைக் கேட்டு வாங்குங்க.

தயங்காதீங்க... பயப்படாதீங்க..'' என்று உரக்கக் கட்டடமே அதிரதன் கோபத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினார். இதன் பின்னரே அண்ணாதுரை அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அதற்கென உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. அமெரிக்க நிபுணர்களின் சிகிச்சையும் பெறப்பட்டது.

காமராஜரை விட்டு விடாதீர்கள்!:

பெரியார்தன் இறுதி மூச்சுள்ள வரை காமராஜர் ஆட்சிக்கு அரணாகத் திகழ்ந்தார். அதற்கென தொண்டர்களும் ஆதரவாளர்களும் காங்கிரசில் சேர ஊக்குவித்தார். "தோழர்களே, எனக்கோ 82 வயதாகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும் நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம் போன்ற ஒன்றைக் கூறுகிறேன்.

மரண வாக்குமூலம் என்று கூறவேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராஜர் ஆட்சியில் நமது நாடு அடைந்துள்ள முன்னேற்றம் இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை.

நமது மூவேந்தர் ஆட்சி காலத்தில் அகட்டும் அடுத்து நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் எல்லாம் நமது கல்விக்கு வகை செய்யப்படவில்லை. தோழர்களே! என் சொல்லை நம்புங்கள்.

இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராஜரை விட்டுவிடாமல் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள்.

காமராஜரை நாம் பயன்படுத்திக்கொள்ளத்தவறிவிட்டால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே, சிக்காது'' (18-7-1961 தேவகோட்டையில் பெரியார் பேச்சு) பின்னாலே ஆட்சி பீடத்தைக் கைப்பற்றிய அண்ணாதுரை படியேறி வந்தபோது பெரியார் பண்பின் காரணமாக வாழ்த்துக் கூறி அனுப்பினாரே தவிர ஆதரிக்கவில்லை. அரசியலைய அருவருப்பானதாக நினைத்த பெரியார் ஆயுட்காலத்தில் பள்ளிக்கூடம் திறந்தால் போதாது, பள்ளிக்கூடத்திற்கு நிலையான சொத்துக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதுதான் பள்ளிக்கூடம் தொடர்ந்து எவ்வித சிக்கலும் இல்லாமல் செயல்பட வழிவகுக்கும் என்பதை காமராஜர் உணர்ந்தார். இதனால் காமராஜர், சமுதாய பங்கேற்பை ஊக்குவிக்கும் மாநாடுகளை தமிழ்நாடு எங்கும் நடைபெற்றிட ஆணையிட்டார்.

அதன்பேரில் பள்ளிக்கூடங்களின் அடிப்படைத் தேவைகள் எவையென்று பட்டியல்கள் தயாரிக்கப்பட்டன. தொடக்கப் பள்ளிகளுக்கு ஒரு பட்டியல், உயர் தொடக்கப் பள்ளிகளுக்கு ஒரு பட்டியல், உயர்நிலைப் பள்ளிக்கூடங்களுக்கு ஒரு பட்டியல் என்று மூன்று பட்டியல்கள் உருவாயின.

தொடக்கப் பள்ளிக்கூடங்களுக்கு, என்னென்ன வசதிகள் இல்லை என்பது கிராம மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. தேவைப்படும் வசதிகளை அளிக்குமாறு கிராம மக்கள் கேட்டுக் கொண்டார்கள். கரும்பலகைகள், மேஜைகள், நாற்காலிகள், கடிகாரங்கள் முதலியவற்றை கிராம மக்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கூடங்களுக்கு அளித்தார்கள்.

பல இடங்களில் பள்ளிக்கூடக் கட்டிடங்களை விரிவுபடுத்திப் புதியதாக அறைகளை அமைக்கவும் மக்கள் தயாராக முன்வந்தனர். இந்த அனுபவத்தின் அடிப்படையில் பள்ளிக்கூடங்களின் மேம்பாட்டிற்காக விரிவான மக்கள் இயக்கமாக ஆக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்களின் கூட்டம் நடத்தப்பட்ட போது, யாராவது ஒரு கிராமப் பிரமுகர் கூட்டத்திற்கு தலைமை வகிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். மாவட்ட அளவில் பள்ளிக்கூட வளர்ச்சி மாநாடுகள் நடத்தப்பெற்றன.

அவற்றில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு கரும்பலகைகள், மேஜைகள், நாற்காலிகள் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்குத் தேவையான பொருள்கள் முதலியவற்றை நன்கொடையாக அளித்தார்கள். பள்ளிக்கூடக் கட்டிடங்களுக்கு புதியதாக வெள்ளையடிக்கவும், கட்டிடங்களை பராமரிக்கும் பணியை மேற்கொள்ளவும் சிலர் முன்வந்தார்கள்.

இந்த இயக்கம் தொடக்கப்பள்ளிக் கூடங்களுக்கு மட்டுமின்றி, உயர்நிலைப் பள்ளிக்கூடங்களுக்காகவும் நடத்தப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள நன்கொடைகள் இந்த இயக்கத்தின் மூலம் குவிந்தன. பள்ளி மாணவர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது சாத்தியமாயிற்று.'' 28.07.1958 அன்று திசையன்விளை மாநாட்டில் முதல் அமைச்சர் கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில் 102 பள்ளிகள் பங்கேற்றன. மாநாட்டில் முன் வைக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பு ரூபாய் 1,38,000 ஆகும். மாநாடு மூலம் பெறப்பட்ட பொருட்கள் நிதிகளின் மொத்த மதிப்பு ரூபாய் 1,36,000 ஆகும். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு முதலமைச்சர் காமராஜர் கூறினார். `

`இவற்றையெல்லாம் மக்கள் வெற்றிகரமாக நடத்துவதற்கு காரணமென்ன? இது பொது மக்கள் சக்திக்கு உட்பட்டது. இவை, அவர்களுக்கு சுமை அல்ல!'' இத்தகைய ஒரு மாநாடு 22.11.1958 அன்று செங்கல்பட்டு நகரத்தில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் இந்திய கல்வி அமைச்சர் திரு.கே.சி.பந்த் கலந்து கொண்டார்.

826 பள்ளிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் ரூபாய் 23 லட்சத்துக்கு திட்டங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அம்மாநாட்டில் திரு.கே.சி.பந்த் உரையாற்றும் போது, ``பிற மாநிலங்களில் முளைக்காத, நல்ல மேம்பாட்டுத் திட்டங்கள், சென்னை மாகாணத்தில் மட்டும் பயிராவது வியப்பானது என்று கூறினார்.

கூறியது மட்டுமல்ல, டெல்லி சென்றவுடன், பிரதமர் நேருவிடம் இம்மாநாடுகளைப் பற்றி வியந்து கூறியுள்ளார். அதன் பயனாக, 15.01.1959 அன்று காரைக்குடிக்கு அருகில் உள்ள ஆ.தெக்கூரில் நடைபெற்ற பள்ளி சீரமைப்பு மாநாட்டில் பிரதமர் நேரு கலந்து கொண்டார்.

அடுத்த https://sphotos-a.xx.fbcdn.net/hphotos-ash4/p480x480/406201_448776445144406_1834948880_n.jpgநாள் திருநெல்வேலி கல்வி மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகள் பங்கேற்ற அடைக்கலாம்புர மாநாட்டிலும் பிரதமர் நேரு கலந்து கொண்டார். பிரதமர் நேரு, பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் இரண்டில் கலந்து கொண்டது இத்தகைய மாநாடுகள் மீது நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்தது.

இதனைத் தொடர்ந்து, கல்வி மேம்பாட்டு திட்டங்களில் தமிழகத்தின் வழியில் செயல்படுமாறு அனைத்து மாநில முதல் அமைச்சர்களுக்கும் பிரதமர் நேரு கடிதம் எழுதினார். மொத்தமாக 167 பள்ளி சீரமைப்பு மாநாடுகள் 1963ஆம் ஆண்டு வரை நடைபெற்றன. இந்த மாநாடுகள் மூலமாக 7 லட்சம் மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. ஆதரித்தது காமராஜர் ஆட்சியை மட்டுமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக