சனி, 27 ஜூலை, 2013

திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் அகிலவல்லித் தாயார் கோயில் - கோ.ஜெயக்குமார்.

திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் அகிலவல்லித் தாயார் - கோ.ஜெயக்குமார்.

திருவிடந்தை திவ்ய தேசம் சென்னையிலிருந்து கோவளம் வழியாக மகாபலிபுரம் செல்லும் சாலையில் 43 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. மூலவர், லட்சுமி வராகப் பெருமாள், நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். 
படிமம்:Thiruvidanthai nithyakalyana permal temple entrance arch.jpg
 மூலவர்: நித்ய கல்யாணப்பெருமாள்
தாயார்: அகிலவல்லித் தாயார்
         அமைவிடம்: காஞ்சிபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு, இந்தியா

உற்சவர் பெயர் நித்ய கல்யாணப்பெருமாள், தாயார் கோமளவல்லி நாச்சியார் இவ்விருவர் திருமேனியிலும் தாடையில் பொட்டு இயற்கையாகவே அமைந்திருக்கிறது. ஆண்டாள், ரங்கநாதர், ரங்கநாயகி ஆகியோருக்கும் இங்கு சந்நிதிகள் இருக்கின்றன. 

பெருமாள் நின்ற கோலத்தில் 9 அடி உயரத்துடன் காட்சியளிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் இத்தலத்தில் மட்டுமே மூலவர் வராக ரூபமாக காட்சித்தருகிறார். 

பெருமாள் வலக்கரத்தில் சக்கரமும் இடக்கரத்தில் சங்கும், கீழ் இரு கைகளில் இடக்கை பூதேவியின் திருவடிகளைத் தூக்கியும் வலக்கையில் அணைத்த கோலம் கொண்டு, இடக்காலை ஆதிசேடன் தலை மீது வைத்துக் கொண்டும் வலக்கால் பூமியின் மீது வைத்தும் தேவியை நோக்கியவாறு வராகத் திருமுகத்தோடு அருள்பாளிக்கிறார். 
http://farm5.staticflickr.com/4040/4359730992_d748669a54_z.jpg?zz=1
இங்கு ஆண்டாள், ரங்கநாதர், ரங்கநாயகி, கருடன் ஆகிய சந்நிதிகள் உள்ளன. பலி என்னும் அசுர மன்னனும் காலவமுனிவர், மார்க்கண்டேயர் ஆகியவர்களும் பெருமாளைச் வணங்கி பேறுபெற்ற தலம். 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgr1qM5skm3ENGB19VxCDYqv9CfK7OIY2LvndS5Dl2jfyho1Rzh-OEbPrINCl4Ik1uo8Qi9Zpg71MITI2ftSVukcJDfa3SW_lTUneAzWpWMfqKBKM_OWhWSLs-TZH0uamK7HisifQVfknw/s640/100_2375.JPG
காலவ முனிவரின் 360 பெண்களையும் ஒரே கன்னிகையாக்கி மடியில் வைத்துக் கொண்டு 360 கன்னிகைகளை 360 நாள் திருமணம் செய்து கொண்டு காட்சியளிப்பதால் இறைவனுக்கு நித்திய கல்யாணப் பெருமாள் என்னும் பெயர் ஏற்பட்டது. 
http://thechennai.files.wordpress.com/2011/03/nithyakalyanaperumal.jpg
இத்தலம், திரு இட எந்தை- திருவிடந்தை எனவும், கல்யாணபுரி எனவும் பெயர் பெற்றது. திருமணம் வேண்டுவோர் இப்பெருமாளைத் தரிசித்தால் ஓராண்டில் திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையிலிருந்து புதுச்சேரிவரை செல்லும் கிழக்குகடற்கரை சாலையில் கோவளம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது. மூலவர் நித்ய கல்யாணப்பெருமாள், அகிலவல்லித் தாயார் ஆவர்.
 
மூலவரின் சன்னதிக்கு வலதுபுறத்தில் கோமளவல்லித்தாயாருக்கு ஒரு சன்னதியும், இடதுபுறத்தில் ஆண்டாளுக்கு ஓரு தனிச்சன்னதியும் உள்ளது.
 
 திருவரங்கப்பெருமாளுக்கும் ஓரு தனிச்சன்னதி உள்ளது. தலவரலாற்றின்படி மூலவர் நித்ய கல்யாணப்பெருமாளான மகாவிஷ்ணு தினம் ஓரு பெண்ணாக வருடம் முழுவதும் திருமணம் செய்ததாகவும் அதனாலே மூலவர் நித்ய கல்யாணப்பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார்.ணம் கைகூடும் என்பது ஐதீகம். எனவே, இது ஒரு பிரார்த்தனைத் தலமாகவும் விளங்குகிறது.
 http://www.tamilhindu.com/wp-content/uploads/perumal1.jpg
திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அரசனின் புதல்வன் பலி நல்லாட்சி புரிந்து வந்தான். அக்காலத்தில் மாலி, மால்யவான், ஸுமாலி ஆகிய அரக்கர்கள் தேவர்களுடன் போர்புரிய பலியின் உதவியை நாடினர். பலி மறுத்து விட்டான். இதனால் அரக்கர்கள் தேவர்களுடன் சண்டையிட்டு தோற்று, பின் பலியிடம் மீண்டும் உதவி கேட்டனர்.
 
அரக்கர்களுக்காக தேவர்களுடன் பலி சண்டையிட்டு வென்றான். இதனால் பலிக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் போக்க பெருமாளை குறித்து இத்தலத்தில் தவமிருந்தான். தவத்திற்கு மெச்சிய பெருமாள் வராஹ ரூபத்தில் அவனுக்கு காட்சி கொடுத்து தோஷம் போக்கினார்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4grsuWhi25ZWLFnTwSXekWg00MYBd9MkRemcxpnHhzRYoBhH_8LB49BWId2Va8zTmxFYLQsMtFfsJyHzY8ve_2UnyxcV3YUwLwVOOvIx4fF1eTkEhR1mjqi5ocnoKMe_AKiPDpF5MVQg/s400/pg23.jpg

தினமும் திருமணம்: ஒருமுறை குனி என்ற முனிவரும் அவரது மகளும் சொர்க்கம் செல்ல தவம் இருந்தனர். குனி மட்டும் சொர்க்கம் சென்றார். அங்கு வந்த நாரதர் அந்தப் பெண்ணிடம்,""நீ திருமணமாகதாவள். எனவே உன்னால் சொர்க்கம் செல்ல முடியாது என்று சொல்லி அங்கிருந்த பிற முனிவர்களிடம் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார்.
 
 காலவரிஷி என்பவர் அவளை திருமணம் செய்து கொண்டு 360 பெண் குழந்தைகளைப் பெற்றார். தன் பெண்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென நாராயணனை வேண்டி தவமிருந்தார். நாராயணன் வரவில்லை. ஒருநாள் ஒரு பிரம்மச்சாரி வந்தான். திவ்ய தேச யாத்திரைக்காக வந்ததாக கூறினான்.
 
அவனது தெய்வீக அழகு பெருமாளைப் போலவே இருக்கவே, தனது பெண்களை திருமணம் செய்து கொள்ள அந்த இளைஞனை வேண்டினார். அவன் ஒப்புக்கொண்டு தினம் ஒரு பெண் வீதம் திருமணம் செய்து கொண்டான். கடைசி நாளில் அந்த இளைஞன் தன் சுயரூபம் காட்டினான்.
 
அது வேறு யாருமல்ல. வராஹமூர்த்தி வடிவில் வந்த நாராயணன். அவர் 360 கன்னியர்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே பெண்ணாக்கி தனது இடப்பக்கத்தில் வைத்து கொண்டு சேவை சாதித்தார். திருவாகிய லட்சுமியை இடப்புறம் ஏற்றுக்கொண்ட எம்பெருமான் ஆன படியால் இத்லதலம் திருவிடவெந்தை எனப்பட்டது. இது காலப்போக்கில் மருவி திருவிடந்தை ஆனது.
 லட்சுமியை தன் இடது தோளில் ஏந்தியபடி காட்சி தருகிறார் நித்ய கல்யாணப் பெருமாள்.
 
கைகளை இடப்பக்கம் ஏந்திய திருத்தலம் என்பதால் `திருஇடந்தை’ என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே திருவிடந்தை ஆக மாறிவிட்டது.
கோவில் மூலஸ்தானத்தில் பூமாதேவியின் அம்சமான அகிலவல்லி நாச்சியார் கோவில் கொண்டிருக்கிறார். மூலவராக ஆதிராகவப் பெருமாள் திருக்கல்யாண அவதாரத்தில் பூமாதேவியை தன் இடப்பாகத்தில் ஏந்தி மூர்த்தியாக அருள்பாலிக் கிறார். இவரை நித்ய கல்யாணப் பெருமாள் என்கிறார்கள். லட்சுமி சமேதராக காட்சி தரும் வராக மூர்த்தியை வழிபட்டால் திருமணத்தடை விலகி, சீக்கிரமாக திருணம் நடக்கும் என்பது ஐதீகம்.
பிரார்த்தனைக்கு செல்லும் போது இரண்டு மாலை வாங்கி செல்ல வேண்டும். ஒன்றை சாமிக்கு அர்ச்சனை செய்து, மற்றொன்றை நமக்குத் தருவார்கள். அந்த மாலையைப் பாதுகாப்பாக வைத்து, கல்யாணம் நடந்ததும் தம்பதியராக மீண்டும் கோவிலுக்குச் செல்ல வேண்டும். மறக்காமல் மாலையையும் எடுத்துச் செல்ல வேண்டும். அந்த பழைய மாலையை கோவில் பிரகாரத்தில் இருக்கும் மரத்தில் கட்டிவிட வேண்டும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPzTiJpHbj8OB_gN5NokW1XiN1H3q6LIpd_qjVtrNsqCQRy7G7_HFyJ4cgp1-HUf7Q9OED7jzoBdXFvOtLocMgcuwZLi8mq2yM0FM2J8wWMi8ov9RmPsTCfxiI-Lk2w6d0tfXPVUYxbuR-/s400/Nithya+Kalyana+Perumal.jpg
திருமணமாகாத ஆண்களும் பெண்களும் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் நிச்சயம் திருமணம் நடக்கும் என முழு நம்பிக்கையுடன் பக்தர்கள் கூறுகிறார்கள்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8x8jEI8IyvWcf1BDaQawfb4nogF4oyB_7fobmWYBWK80M6OgqH0vvSL49n1Xf49KyQoJ53QNOGWuPRn0AuXitLpymNBjW5sjzhesLCmleJn4qvnHcy46TYhMyZpFJKq-RqmFWwpiLazE/s640/100_2381.JPG
ஆதிசேஷன் தன் பத்தினியுடன் பெருமாளின் காலடியில் சேவை சாதிப்ப தால், ராகு- கேது தோஷ நிவர்த்தி தலமாகவும்; ரங்கநாதப் பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் தேவியருடன் காட்சி யளிப்பதால் சுக்கிர தோஷ நிவர்த்தித் தலமாகவும் இது விளங்குகிறது.
http://mw2.google.com/mw-panoramio/photos/medium/88468319.jpg
இங்குள்ள பெருமாளுக்கு நித்ய கல்யாணப் பெருமாள் என்று பெயர் வந்த காரணத்தை தல வரலாறு சுவைபடக் கூறுகிறது.
http://holyindia.org/templephotos/thiruvidanthai_temple.jpg
சரஸ்வதி ஆற்றங்கரையில் உள்ள சம்பு என்று அழைக்கப்பட்ட தீவில் குனி என்னும் முனிவர் தவம் செய்து வந்தார். அவருக்குப் பணிவிடை செய்வதற்காக கன்னிகை ஒருத்தி அங்கு வந்து சேர்ந்தாள். ஒரு காலகட்டத்தில் அந்த முனிவர் வீடுபேறு அடையவே, அவரைப் போலவே வீடுபேறு அடைய அந்தக் கன்னிகை கடுந்தவம் செய்து வந்தாள். ஒரு நாள் அங்கு வந்த நாரத முனிவர் அவளிடம், "திருமணம் செய்து கொள்ளாமல் வீடுபேறு அடைய இயலாது' என்று கூறினார். எனவே பல முனிவர்களிடமும் சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினாள். எல்லாரும் மறுத்துவிட, காலவ முனிவர் அவள்மீது இரக்கம் கொண்டு அவளை மணந்து கொண்டார். அவர்களுக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தார்கள். முதலாவது பெண் குழந்தையின் பெயர் கோமளவல்லி. அவர்களைப் பெற்ற சிறிது காலத்தில் குழந்தைகளின் தாய் மறைந்து விட்டாள்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaPjGWgsp8kEaOV9Tvmd8xw-i2Sv19x7cbdlMB0JJ2iAz5j-8vNTcd73-INif5gsYti_-nxBmjCkD5hYjrf8hObrYQ8aick95cWgPFwMPSWP9VSf3oU9ZrQwxpg7_vyOUknZetyt_uSGnf/s400/DSC09203.JPG
360 பெண் குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்டார் காலவமுனிவர். காலம்தான் யாருக் காகவும் காத்திருப்பதில்லையே. பெண் குழந்தைகள் மளமளவென்று வளர்ந்து பருவமடைந்து, திருமணத்திற்குக் காத்திருக்கும் கன்னிகளானார் கள்.
 இத்தனை பெண்களையும் எப்படி திருமணம் செய்து கொடுப்பது என்று தவித்தார் காலவ முனிவர்.
http://nammachennai.in/img/November2012/689d6252-c095-4d4b-bbed-6f856b148e52-mamallapuram2.jpg
சம்புத்தீவிற்கு வந்து மற்ற முனிவர்களிடம் அந்தப் பெண்களுக்கு எவ்வாறு திருமணம் செய்து வைப்பது என்று வருத்தத்துடன் ஆலோசனை கேட்டார். அவர்கள் திருவிடந்தை சென்று பெருமாளை வழிபடக் கூறினார்கள். காலவமுனிவரும் தன் பெண்களுடன் திருவிடந்தை வந்து பெருமாளை வேண்டினார். பெருமாளும் முனிவரின் வேண்டுகோளை ஏற்று, பிரம்மச் சாரியாக வந்து நாள்தோறும் முனிவருடைய ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, 360-ஆம் நாள் தான் அதுவரை கல்யாணம் செய்து கொண்ட அனைத்துப் பெண்களையும் ஒருவராக்கி "அகிலவல்லி' என்னும் பெயரைச் சூட்டினார். தேவியைத் தனது இடப்பக்கத்தில் எழுந்தருள வைத்து சரம ஸ்லோகத்தை உலகத்தாருக்கு உபதேசித்து அருளினார்.
http://ww.dinakaran.com/data1/DAanmeegam/Tamil-Daily-News-Paper_41379511357.jpg
பெருமாள் தினமும் திருமணம் செய்து கொண்டதால் பெருமாள் நித்ய கல்யாணப் பெருமாள் என்றும்; இந்த தலம் "நித்ய கல்யாணபுரி' என்றும் அழைக்கப்படுகிறது
 ஸ்ரீஆதிவராக மூர்த்தி தேவியுடன் இருக்கும் சுதை யிலான சிற்பம் எழிலுற அமைக்கப்பட் டுள்ளது. அதை அடுத்துள்ள மண்டபத்தின் கல் தூண்களில் அழகிய புடைப்புச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. ஸ்ரீ மகாவிஷ்ணு, காளிங்க நர்த்தனர், நரசிம்மர் ஆகியவர்களின் சிற்பங்கள் மிக அற்புதமாக உள்ளன. அதைக் கடந்து சென்றால் இராஜகோபுரம், பலிபீடம், கொடிக் கம்பத்தைக் காணலாம்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjc_MJTr06sQ4NYKnfVjVXLAtLH66rDR4xNgetaS4iDiQ-rIf989mC6rSwcA4DG-cQbFWnALK33ClY3TfhSKb8pPwNzQsDrtnLCmQSNF3aQnWRGfHBO8Yk5KB85Y45J-kYIXEm6qvNDM8A/s640/100_3495.JPG
கருவறையில் மூலவரான ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் சுமார் ஆறரை அடி உயரமுள்ள கல் விக்ரகமாக- தேவியை மடியில் அமர்த்திக் கொண்டு அற்புதமாக வீற்றிருக்கிறார். பெருமாளின் திருவடியின்கீழ் தன் பத்தினியுடன் ஆதிசேடன் உள்ளார்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNlrUS5-G21c2Y9NVC5nAnBAhhgmE6UZhrfwWM2L_vZ_u33FfIwreGz6-UDI9DGvuDOdBJXMppT4dycprZlHvpOs7n3_X5fqtt-X0RSV8Nq44BPIeDlSQtRl2PwHHQK436Ht_1xrIvQVc/s640/100B2300.JPG
உற்சவரான ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி ஆகியோர் பஞ்சலோக விக்ர கங்களாகக் காட்சி தருகின்றனர். ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாளின் திருமுகத்தில் திருஷ்டிப் பொட்டு ஒன்று உள்ளது. இது இயற்கையிலேயே அமைந்ததாம். இந்த திருஷ்டிப் பொட்டையும் தனிச்சந்நிதி தாயாரான கோமள வல்லித் தாயாரின் திருமுகத்தில் இருக்கும் திருஷ்டிப் பொட்டை யும் தரிசிப்பவர்களுக்கு திருஷ்டி தோஷம் விலகும் என்கிறார்கள்.
https://mw2.google.com/mw-panoramio/photos/medium/88469127.jpg
ஆண்டாளும் எழிற்கோலத் தில் காட்சி தருகிறார். ரங்கநாதர், ரங்கநாயகித் தாயார் சந்நிதியும் சிறப்பாக அமைந்துள்ளது. இவர் களை வழிபட சுக்கிர தோஷம் நீங்கும் என்கிறார்கள்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSKN0SIE1aTrSAfwA1K-DvZ5WXWAY59qYEXbx9Jxdfi82Qpo9a1BYwK4Czv4oX25zroqPTZ2gphqHOvhRgAoG_vl6W4oclWurq7GjyAfj1rfAxOqC4JGs3aP6CPnJ6U-fjd9K4EP9JdEFg/s400/nithiya+kalyana+perumal+tirukkalyanam.jpg
வைகானச ஆகம விதிகளின் படி தினமும் நான்கு கால பூஜைகள் நடத்தப் பெறுகின் றன. தல விருட்சமாக புன்னை மரமும்; தல புஷ்பமாக அரளிப் பூவின் வகையைச் சேர்ந்த கஸ்தூரியும் விளங்குகின்றன.
http://www.sirukathaigal.com/wp-content/uploads/2013/01/VirumbiKetaval.jpg
விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ஒன்று விரும்பும் ஆணோ, பெண்ணோ- இங்குள்ள கல்யாண தீர்த்தத்தில் நீராடி விட்டு, மிகவும் பயபக்தியுடன் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு மற்றும் இரண்டு கஸ்தூரி மாலைகளுடன் தன் பெயரில் அர்ச்சனைச் சீட்டு வாங்கி அர்ச் சனை செய்துவிட்டு, அர்ச்சகர் கொடுக்கும் ஒரு மாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டு கோவிலை ஒன்பது முறை வலம் வர வேண்டும். 
 
பிறகு கொடி மரத்தின் அருகில் வணங்கிவிட்டு, அந்த மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்று பத்திர மாக சுவரில் மாட்டி வைக்க வேண்டும். திருமணம் முடிந்த பிறகு தம்பதி சகிதமாக பழைய மாலை யுடன் வந்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்து விட்டுச் செல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikLFsn4z_MoCIMFDqwrOulFPRxYlNJ2f5Ozt0jYC9GeFL48z30IeRr77a-BS0sUvVbNOfYTbOneutqBoS1EEnTdLjxDS1TYhGSWOX7gZuXrOOk3Y0d47WKxZihMRQaOB0FYryvLvJ1i3A/s640/100_2390.JPG
இங்கு சித்திரைப் பெருவிழா மிகவும் சிறப்பாக பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. வைகாசி யில் வசந்த உற்சவமும், ஆனி மாதத்தில் கருட சேவையும், ஆடிப் பூரத்தில் சூடிக்கொடுத்த சுடர்க் கொடிக்கு திருக்கல்யாண உற்சவமும், புரட் டாசியில் நவராத்திரி உற்சவமும் விமரிசையாக நடத்தப்படுகின்றன. நவராத்திரியின் ஒன்பது நாட் களிலும் கோமளவல்லித் தாயாருக்கு வெவ்வேறு விதமாக அலங்காரங்கள் செய்யப் படுகின்றன.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVOK2NNHY9wn4ay1ERk5ioc-aDSakDpz2_f6deSl3cu9csyFAonqKLvFz2NMTF7OZAHkPL4dpqG-fqZTgOo0QjNIhiKdOR29YRDbwO0LTGeo6cSrVFw74QzTBBwYomeDpNfcp_XSmVJCw/s320/Azhagiya+Manavala+Perumal+Temple2.jpg
பங்குனி மாத உத்திர நட்சத் திரத்தில் பெருமாளுக்கு திருக் கல்யாண உற்சவம் நடைபெறு கிறது.
http://holyindia.org/templephotos/thiruvidanthai_temple.jpg
உற்சவ காலங்களில் ஸ்ரீஆதி வராகர் தேவியுடன் கோவிலுக்கு வெளியே மின்விளக்கு அலங் காரத்தில் சேவை சாதிக்கிறார்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaPjGWgsp8kEaOV9Tvmd8xw-i2Sv19x7cbdlMB0JJ2iAz5j-8vNTcd73-INif5gsYti_-nxBmjCkD5hYjrf8hObrYQ8aick95cWgPFwMPSWP9VSf3oU9ZrQwxpg7_vyOUknZetyt_uSGnf/s400/DSC09203.JPG
தினசரி காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை யிலும்; மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
[stotram01.jpg]
விரைவில் திருமணப் பேறை அருளும் திருவிடந்தை அருள்மிகு நித்திய கல்யாணப் பெருமாள் திருக்கோவிலை நீங்களும் சென்று தரிசியுங்கள்.
http://www.dinakaran.com/data1/DAanmeegam/Tamil-Daily-News-Paper_25310480595.jpg
சென்னை அடையாரிலிருந்து எண். 588, தியாகராய நகரிலிருந்து எண். 599, ஜி19, பிராட்வே யிலிருந்து எண். பிபி19, கோயம் பேட்டிலிருந்து தடம் எண்கள். 118, 118சி, 188டி, 188கே உள்ளிட்ட பேருந்துகள் திருவிடந்தை செல்கின்றனர்.
http://1.bp.blogspot.com/-7TVc0W4av4Q/TdOWX4-9dAI/AAAAAAAABHU/Gd77pVVjLDM/s1600/SRIRANGANATHAR.jpg
மாமல்லபுரம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் வழியில் உள்ள இந்த திருக்கோவிலுக்குச் சென்று பெருமாளைத் தரிசித்து விட்டுச் செல்லுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக