சனி, 6 ஜூலை, 2013

குளோனிங் முறையில் உருவான முதல் செம்மறியாடு ‘டோலி’ பிறந்தது - கோ.ஜெயக்குமார்.

குளோனிங் முறையில் உருவான முதல் செம்மறியாடு ‘டோலி’ பிறந்தது
1996-ம் ஆண்டு ஜுலை மாதம் 5-ந் தேதி எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ரோஸ்லின் ஆராய்ச்சிக் கூடத்தில் முதன்முதலாக டோலி என்ற செம்மறியாடு குளோனிங் முறையில் பிறந்தது.
குளோனிங் முறையில் உருவான முதல் செம்மறியாடு ‘டோலி’ பிறந்தது
சோதனைக்குழாய் மூலம் வளர்க்கப்பட்ட டோலி, எம்பிரியோ வளர்ச்சிக்குப் பிறகு ஒரு பெண் ஆட்டின் கர்ப்பப்பைக்குள் வைக்கப்பட்டு முழு வடிவம் பெற்றது. இதன் உருவாக்கத்தில் தலைமை வகித்தவர் லான் வில்மட் என்ற விஞ்ஞானி ஆவார். இவர் செம்மறியாட்டின் படைப்பாளி என புகழப்படுகிறார்.

மேலும் இதே நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

• 1811 - வெனிசுவேலா ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

• 1945 - பிலிப்பைன்சின் விடுதலை அறிவிக்கப்பட்டது.

• 1950 - அமெரிக்கப் படைகளுக்கும் வட கொரியாப் படைகளுக்கும் இடையே மோதல் தொடங்கியது.

• 1962 - பிரான்சிடமிருந்து அல்ஜீரியா விடுதலை அடைந்தது.

• 1977 - பாகிஸ்தானில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் சுல்பிக்கார் அலி பூட்டோ பதவி இழந்தார். ராணுவ சட்டம் கொண்டுவரப்பட்டது.

• 1987 - விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.

• 1998 - செவ்வாய்க் கோளுக்கு ஜப்பான் முதலாவது விண்கலத்தை அனுப்பியது

• 2004 - இந்தோனேசியாவில் முதலாவது அதிபர் தேர்தல் நடந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக