ஞாயிறு, 14 ஜூலை, 2013

வரலாற்றில் செஞ்சி - கோ.ஜெயக்குமார்.

வரலாற்றில் செஞ்சி

தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் பெயர் வாங்கியது.

இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் என்பார்கள் அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்து இருக்கலாம் என்பதற்கு சான்று.

செஞ்சிக் கோட்டையை, 13ம் நூற்றாண்டில் கோனார் வம்சத்தினர் கட்ட துவங்கினர். அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை பலம் பொருந்திய கோட்டையாக மாற்றினர். குறிப்பாக, விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர்.
இந்த கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

ஜைனர்கள்

செஞ்சியின் வரலாறு பற்றி அதில் கிடைக்கும் கல்வெட்டுக்களின் அடிப்படையில்
கி.மு. முதல் கி.பி 6 வரை இங்கு ஜைனர்கள் வாழ்ந்தனர் என்று கல்வெட்டுக்கள் சொல்கின்றன.

பல்லவர் காலத்தில் செஞ்சி (கிபி 600-900)

பல்லவர் காலத்தில் சிங்கபுரதில் (சிங்கவரம்) ஒரு குகைகோவில் கட்டப்பட்டது, செஞ்சி தெற்கே பனமலை பகுதியில் ஒரு கோயில் கட்டப்பட்டது , அதன் பின்னர் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட குகை கோயில் உருவாக்கப்பட்டது , இந்த இடம் செஞ்சில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது , 580-630 பல்லவ மகேந்திரவர்மன் விசித்ரசித்தன் ஆக அழைக்க பட்டார், மேலும் பல்லவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கவரம் மற்றும் மேலச்சேரி பகுதிகளில் உள்ள பழங்கால கோயில் முலம் செஞ்சி பல்லவர்களின் ஆளுகையில்ருந்ததாக சொல்கிறது .

சோழர்கள் காலத்தில் செஞ்சி (900-1103)

செஞ்சி கிழக்கு பகுதில் காணப்படும் ஆனங்கூர் கல்வெட்டுக்களின் படி செஞ்சி பல்லவர்களின் காலத்திற்கு பின் சோழர்கள் ஆண்டதாக சொல்கிறது 871 முதல் 907 ஆதித்ய சோழன் 2 முறையே ஆட்சி செய்திருகின்றனர். அவன் தம்பி ராஜராஜன் சோழன் 1 (987-1014) காலத்தில் சிங்கபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது.
பாண்டியர்கள் காலத்தில் செஞ்சி (1014-1190)

1014-1190 களின் செஞ்சி பாண்டியர்களின் கையில் இருந்தததாக கல்வெட்டுகள் சொல்கிறது.

விஜயநகரப் பேரரசுக் காலத்தில்

13 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பெரரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.தமிழ் நாட்டில் நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் செஞ்சி நாயக்கர்களின் தலைமையிடமாகவும் இது விளங்கியது.மராட்டியர்களிடம் இருந்த இக் கோட்டையை பீஜப்பூர் சுல்தானின் படைகள் கைப்பற்றின. இக் கோட்டையை கி.பி 1677 இல் மீளக் கைப்பற்றிய(மீட்ட) மராட்டிய மன்னர் சிவாஜி இதனை மேலும் பலப்படுத்தினார். ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாஜியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராஜாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து அங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டான். முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி விட்டான். பின்னர் இக் கோட்டை கர்நாடக நவாப்புக்களில் கைக்கு வந்தது. அவர்கள், 1750 இல் இதனை பிரெஞ்சுக்காரரிடம் தோற்றனர். இறுதியாக 1761 இல் பிரித்தானியர் இதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும் சிறிதுகாலம் இதனை ஹைதர் அலியும் கைப்பற்றி வைத்திருந்தான்.

அமைப்பு

செஞ்சிக் கோட்டை அமைப்புசெஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர்மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டிருந்தது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் இருந்தது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி, சக்கிலிதுர்க், ராஜகிரி ஆகிய குன்றுகள் இருந்தன.

தற்போதைய நிலை.

இக் கோட்டை இறுதியாகப் பிரித்தானியர் வசம் சென்ற பின்னர் முக்கியமான படை நடவடிக்கைகள் எதுவும் இங்கே நிகழவில்லை. 1921 ஆம் ஆண்டில் இது ஒரு தேசிய நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டு தொல்லியற் துறையின் கீழ் கொண்டுவரப் பட்டது. அதிலிருந்து பழங்கால சுவர்களில் கிறுக்குவதும்..ஞாயிற்று கிழமை டாஸ்மார்க் பார் .. காதலர்களுக்கான கடலை மையமாக இப்போது விளங்கிவருகிறது..

இருப்பிடம்

மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது.


Posted Image


புகைபடங்கள்

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

சென்னையிலிருந்து திருவண்ணாமலை செல்லும் போதெல்லாம் பேருந்துகளின் ஜன்னல் வழியே பார்த்து வியந்த செஞ்சிக் கோட்டையை நேரில் கண்டபோது எங்கள் கண்கள் பிரமிப்பில் தன் இமைகளை மூடிக்கொள்ள மறந்துவிட்டது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு தாலுகாவின் தலைநகரமான செஞ்சி, சென்னையிலிருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ளது.
செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் நடந்து செல்லும்போதே, செஞ்சிக் கோட்டையின் கம்பீரத் தோற்றம் நம்மை வேகமாக நடைபோட வைக்கிறது. செஞ்சிக் கோட்டை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், காலை 9.00 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரைதான் பொதுமக்களை அனுமதிக்கிறார்கள். நாங்கள் காலை 8.30க்கே சென்றுவிட்டதால் அரைமணிநேர காத்திருப்புக்குப் பிறகே கோட்டைக்குள் நுழைய முடிந்தது.
நுழைவு வாயிலுக்கு மிக அருகிலேயே இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் அலுவலகம் இருக்கிறது. அதைக் கடந்து சென்றால் சிதிலமடைந்த நிலையில் உள்ள ஓர் அம்மன் கோயிலும், சிவன் கோயிலும் நம்மை வரவேற்கின்றன. இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் முஸ்லிம் ஆட்சியாளர்களால் சேதப்படுத்தப் பட்டிருக்கின்றன. இருந்தாலும் அதன் அழகு, இந்தச் சிற்பங்கள் சேதப்படுத்தப்படாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நம்மை ஏங்க வைக்கிறது.
தொடர்ந்து நாம் பிரமிப்புடன் நடந்து செல்லும்போது வேலூர் வாயிலும், சாதத்துல்லாகான் மசூதியும் வருகிறது. (இந்த சாதத்துல்லாகான் மசூதி தொல்பொருள் ஆய்வுத்துறையால் வர்ணம் பூசப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.) செஞ்சிக் கோட்டையானது ராஜகிரி கோட்டை, கிருஷ்ணகிரி கோட்டை, சந்திரகிரி கோட்டை, மேற்குமலைக் கோட்டை என்று பல பிரிவுகளாக உள்ளது. நுழைவுக்
கட்டணம் செலுத்தி ராஜகிரி
கோட்டைக்குள் நுழையும்முன், அதன் வரலாற்றை தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.
அனுமன் பர்வத மலையை இலங்கைக்கு தன் கையால் தூக்கிச் சென்றபோது அதிலிருந்து பிரிந்து விழுந்த சிறிய பகுதிதான் சிரஞ்சீவி மலை என்றும், அதுதான் காலப்போக்கில் செஞ்சி என்று மாறியதாகவும் சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் ராஜகிரி கோட்டைக்குள் உள்ள செஞ்சியம்மன் கோயிலின் பெயரிலேயே செஞ்சி என்று அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள்.
செஞ்சி கி.மு. 2-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 6-ம் நூற்றாண்டு வரை சமணர்கள் வசம் இருந்திருக்கிறது. செஞ்சிக்கு அருகே உள்ள சிறுகடம்பூரில் செதுக்கப்பட்டுள்ள 24 சமணத் தீர்த்தங்கர்களின் உருவங்களையும், கிருஷ்ணகிரி மலையில் செதுக்
கப் பட்டுள்ள சமண படுக்கைகளையும் இதற்கு ஆதாரமாகக் கூறுகிறார்கள். கி.பி. 6-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 9-ம் நூற்றாண்டு வரை செஞ்சியை பல்லவ மன்னர்கள் ஆட்சி செய்தார்கள். செஞ்சிக்கு அருகில் உள்ள சிங்கவரம் மற்றும் மேலைச்சேரியில் பல்லவர்களால் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில்களும், பணமலை என்ற ஊரில் குன்றின்மேல் உள்ள கோயிலும் இதனை உறுதி செய்கின்றன.
பல்லவர்களுக்குப் பிறகு சோழர்கள், ராஷ்ட்ரகூடர்கள், பாண்டியர்கள், ஹொய்சளர்கள், கோனார் பரம்பரையினர், விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள், முஸ்லிம்கள், சத்ரபதி சிவாஜி, மொகலாயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் ஆங்கிலேயர்கள் என எல்லோரும் செஞ்சியைக் கைப்பற்றி ஆட்சி செய்திருக்கிறார்கள்.
இப்போதுள்ள ராஜகிரி கோட்டையை கி.பி. 13-ம் நூற்றாண்டில் கோனார் பரம்பரையில் வந்த ஆனந்தகோனார் என்பவர் கட்டியதாகவும், அவரது மகன் கிருஷ்ணகிரி கோட்டையைக் கட்டியதாகவும் வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். கி.பி. 14-ம் நூற்றாண்டிலிருந்து 150 ஆண்டுகள் வரை ஆட்சி செய்த நாயக்க மன்னர்கள், செஞ்சிக் கோட்டையை விரிவுபடுத்தி இருக்கிறார்கள். இவர்கள் காலத்தில்தான் மிக நீண்ட வலிமைமிக்க சுவர்களுடன் கூடிய கோட்டைகளும், நுட்பமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட உயர்ந்த கோபுரங்களுடன் கூடிய கோயில்களும் கட்டப்பட்டன.
பாரத வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த மராட்டிய மாவீரன் சத்ரபதி சிவாஜி கி.பி. 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முஸ்லிம் களிடமிருந்து செஞ்சிக் கோட்டையைக் கைப்பற்றி தனது உறவினரிடம் ஒப்படைத்தார். பிறகு செஞ்சியின் அரசாட்சி சிவாஜியின் மற்றொரு உறவினரான ராஜாராம் என்பவரிடம் வந்தடைந்தது. இதற்குப் பிறகு கி.பி. 1700-ல் மொகலாய தளபதி ஜூல்பீர்கான் செஞ்சிக் கோட்டையை மராட்டியர்களிடமிருந்து கைப்பற்றினார். செஞ்சிக் கோட்டையின் கதாநாயகன் ராஜா தேசிங்கின் தந்தை சொரூப்சிங்கிடம் ஆட்சியை ஒப்படைத்தவர் இவர்தான். சொரூப் சிங்கின் மறைவிற்குப் பிறகு ராஜா தேசிங்கு செஞ்சிக் கோட்டையின் ராஜாவாக முடிசூடிக்கொண்டார்.
செஞ்சிக் கோட்டையில் ஹிந்து மன்னர்கள் கட்டிய கோயில்களையும், சிற்பங்களையும் பல நூறு ஆண்டுகள் ஆட்சி செய்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி இருக்கிறார்கள். முஸ்லிம்களால் சேதப்படுத்தப்பட்டு சிதிலமடைந்துள்ள கோயில்களையும், சிற்பங்களையும் நாம் இன்றும் காணமுடிகிறது.
ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தி ராஜகிரி கோட்டைக்குள் நுழைந்தால் அதன் தரைதளத்திலும் மலையின்மீதும் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. தரை தளத்திலுள்ள கல்யாண மஹால் தூரத்திலிருந்து பார்க்கும்போதே, பார்ப்பவர்களைச் சுண்டி இழுக்கிறது. உச்சியில் பிரமிடு வடிவத்துடன் எட்டு அடுக்குகளைக் கொண்ட இந்த மஹாலில் நீச்சல் குளமும் பெண்கள் தங்குவதற்கென தனி அறைகளும் உள்ளன. இந்த மஹாலில் உள்ள அறைகள் ஒவ்வொன்றும் 3 சதுரமீட்டர் பரப்பளவுடனும், வளைவான சாளரங்களுடனும் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கிலும் அறையின் இருபுறங்களில் இறங்குவதற்கும், மேல் அடுக்கிலுள்ள அறைகளுக்குச் செல்வதற்கும் தனித்தனி வழிகள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அறைகளின் சுவர்களின் உட்பகுதியில் சுடுமண் குழாய்களைப் பொருத்தி அவற்றின் மூலம் நீர் ஊற்றுகள் வருமாறு இந்த கல்யாண மஹால் கட்டப்பட்டுள்ளது.
தரைதளத்திலுள்ள தானியக் களஞ்சியம், வெடிமருந்து கிடங்கு, வேணுகோபால சுவாமி கோயில், சப்த கன்னியர்கள் கோயில், ராஜா தேசிங்கு தகனம் செய்யப்பட்ட இடம், சர்க்கரைக் குளம், செட்டிக் குளம், ஆஞ்சநேயர் கோயில், மரணக் கிணறு ஆகியவை பார்க்க வேண்டிய இடங்கள். செங்குத்தான படிக்கட்டுகளின் வழியே ராஜகிரி கோட்டை யின் மேலே ஏறினால் ஆனந்த கோனாரும், நாயக்க மன்னர்களும் கட்டிய கோட்டைகளும், ரங்கநாதர், கமலக்கன்னியம்மன் போன்ற கோயில்களும் நமக்காகக் காத்திருக்கின்றன. மேலே ஏறஏற மலையேற்றம் கடினமாக இருக்கும்படியாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இழுவைப் பாலத்தின் மூலம் ராஜகிரி கோட்டையின் உச்சிக்குச் சென்றால் அங்கும் நமக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. மணிக்கூண்டு (இந்த மணிக்கூண்டிலிருந்த வெண்கல மணி பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியின்போது பாண்டிச்சேரிக்குக் கடத்தப்பட்டது), பீரங்கி, பால ரங்கநாதர் கோயில், தானியக் களஞ்சியம் மற்றும் நீர் வற்றாத சுனைகளும் நம் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.
ராஜகிரி கோட்டையின் உச்சியில் இருந்து கிருஷ்ணகிரி கோட்டை, சந்திரகிரி கோட்டை, மேற்கு மலைக் கோட்டை மற்றும் கோட்டை இல்லாத மலைத்தொடர்களின் அழகை ரசிக்க, கண்கள் கோடி வேண்டும். ராஜகிரி கோட்டையில் இருந்து இறங்கி பாண்டிச்சேரி வாயிலின் வழியாக வேங்கடரமணர் ஆலயத்தையும், சுழலும் பீரங்கி மேடையையும் தரிசித்து விட்டு நாங்கள் ராணி கோட்டை என்றழைக் கப்படும் கிருஷ்ணகிரி கோட்டைக்குச் சென்றோம். நாள் முழுவதும் மலை யேறிய களைப்பு இருந்தாலும் ராணி கோட்டையிலுள்ள அழகிய கட்டடங்களையும், சிற்பங்களையும் காணும் ஆவல் எங்களின் களைப்பைப் போக்கியது.
ராணி கோட்டையின் படிக்கட்டுகள் மிகவும் செங்குத்தாக உள்ளன. இடையிடையே இளைப் பாறுவதற்கு சிறுசிறு மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. ராணியைப் பல்லக்கில் தூக்கி வரும்போது பல்லக்குத் தூக்கிகள் இளைப்பாறுவதற்காக இந்தச் சிறு மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன என்று சில உள்ளூர்வாசிகள் நம்மிடம் தெரிவித்தனர். எல்லா கோட்டைகளைப் போலவே இங்கும் எண்ணெய் கிணறு, சுழலும் பீரங்கி மேடை, ரங்கநாதர் கோயில், நெற்களஞ்சியம் ஆகியவை உள்ளன. இருந்தாலும் இங்குள்ள கிருஷ்ணர் கோயிலும் தர்பார் மண்டபமும் அதில் உள்ள ஊஞ்சல் மண்டபமும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது.
செஞ்சிக் கோட்டையைச் சுற்றிப் பார்த்துவிட்டு நாங்கள் திரும்பியபோது ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் பயணம் செய்து திரும்பியது போன்ற ஓர் உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. ராஜா தேசிங்கும், ராஜராஜ சோழனும், சத்ரபதி சிவாஜியும் ஆட்சி செய்த செஞ்சிக் கோட்டை, நம் ஹிந்து மன்னர்களின் வீரதீரத்தை வருங்கால சந்ததியினருக்குச் சொல்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறது. ஒருமுறை செஞ்சிக் கோட்டைக்குச் சென்றவர்கள் அதனை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார்கள். 

தென் இந்தியாவில் கண் என்று அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக இருக்கும் செஞ்சிக்கோட்டை, விழுப்புரம் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.
பண்டையகால மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? என்பதை நாம் வரலாற்றில் படித்து தெரிந்து கொள்கிறோம். அதே சமயம், கடந்த கால மன்னர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி அவர்கள் வாழ்ந்த, ஆட்சிபுரிந்த இடங்களை நேரில் கண்டு, தொட்டு பார்த்து, மகிழந்து தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தால்.. அது எவ்விதம் இருக்கும் என்பதை உணர வேண்டும் என்றால், நீங்கள் செல்ல வேண்டியது செஞ்சிக்கோட்டைதான்.
செஞ்சிக் கோட்டையை ஆட்சி புரிந்த ராஜாதேசிங்கு உள்ளிட்ட வீரமிக்க மன்னர்களைப் போன்று கம்பீரமாக விண்ணை முட்டி நிற்கிறது செஞ்சிக்கோட்டை. கால மாற்றங்களையும், பல்வேறு படையெடுப்புகளையும் முறியடித்து காட்சி தருகிறது செஞ்சிக்கோட்டை. கடைசி மன்னராக செஞ்சிக்கோட்டையை ஆண்ட ராஜா தேசிங்கு வாழ்ந்த இடம், போரிட்ட இடம், மரணம் தழுவிய இடம், தேசிங்கின் மனைவி ராணிபாய் உடன்கட்டை ஏறிய இடம் என பார்த்து பரவசம் அடைய ஏராளமான வரலாற்று நினைவிடங்களை தன்வசம் வைத்துள்ளது இந்த இடம்.
வியப்பில் ஆழ்த்தும் கட்டட கலைக்கு எடுத்தக்காட்டாக கலைநயத்துடன் கல்லில் கட்டப்பட்ட கம்பீரமான கட்டுமானத்தை கண்டு வியப்படையாதவர்களே இல்லை. தேசிங்குராஜன் ஆட்சி செய்த 17-ம் நூற்றாண்டின் வரலாற்றின் காலத்திற்கே நம்மை அழைத்து செல்லும் இடமாக விளங்கி வருகிறது இந்த செஞ்சிக் கோட்டை. இதற்குள் நுழையும் போது நமக்கு தேசிங்கு ராஜாவின் ஆட்சி முறை மற்றும் அந்த கட்டடக் கலையின் நுணுக்கங்கள் பற்றி எடுத்துச் சொல்லவோ அல்லது அதைப் பற்றிய விவரங்களை ஏற்கனவே அறிந்து வைத்துக் கொள்வதோ மிகவும் நல்லது.
கோட்டையைப் பார்த்து விட்டு வெளியே வரும்போது நாம் இந்த நூற்றாண்டை அடைந்து விட்டோம் என்ற உணர்வு அனைவருக்கும் ஏற்படும்.
இந்த விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க செஞ்சிக்கோட்டை கொத்தலங்களை பார்ப்பதன் மூலம் வரலாற்றை படிப்பதில் இருக்கும் ஆர்வத்தை விட வரலாற்றை நேரில் பார்த்த அனுபவம் ஏற்படும். இந்திய தொல்லியல்துறையின் முழு கட்டுப்பாட்டின்கீழ் உள்ள செஞ்சிக் கோட்டையில் சுற்றுலாப் பயணிகளுக்கு சில அடிப்படை வசதிகள் செய்து பழமை மாறாமல் பராமரிக்கப்பட்டு  வருகிறது.
ஆனால் அதிகாரபூர்வமாக செஞ்சிக் கோட்டையை தமிழ்நாடு அரசு சுற்றுலா மையமாக அறிவிக்காததும், தமிழ்நாடு அரசு சார்பில் செஞ்சிக்கோட்டையில் எந்த ஒரு இடத்திலும் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதியை செய்து தரவில்லை என்பதும் வேதனைக்குரியது.
ராஜா கோட்டையின் கீழே பார்க்க வேண்டிய இடங்கள்
சிவன் கோயில், அம்மன் ஆலயம், வேலூர் வாயில், சாதத்துல்லாகான் மசூதி, பாண்டிச்சேரி வாயில், வெங்கடரமணர் ஆலயம், சுழலும் பீரங்கிமேடை, உளி வளிக்கும் கல் பட்டறை, கல்யாண மஹால், முகமதுகான் மசூதி, அரண்மணை வளாகம், பணியாளர்கள் தங்கும் அறை, கல்யாண மஹால், குதிரை லாயம், யானைக்குளம், ஆயுதக் கிடங்கு, உடற்பயிற்சி அரங்கம், வெடி மருந்துக் கிடங்கு, நெல் களஞ்சியம், வேணுகோபாலசுவாமி கோயில், ஜும்மா மசூதியின் கலை பாணி, தேசிங்குராஜன் உடல் எரியூட்டப்பட்ட இடம், ஏழு கன்னிமார் கோயில், சர்க்கரை குளம், செட்டிக்குளம், ஆஞ்சநேயர் கோயில், மரணக்கிணறு ஆகியவை பார்க்க வேண்டிய முக்கிய இடங்களாகும்.
ராஜகிரி மலை மீது பல அற்புதங்களை கொண்ட கலைநயத்துடன் விளங்கும் கட்டடங்கள் கலைநயம் மிக்க கோயில்கள், அரண்மனைகள் மற்றும் பாலரங்கநாதர் கோயில், கமலக்கண்ணி அம்மன் கோயில், சுனை நீர், இழுவை பாலம், மணிக்கூண்டு, பீரங்கி என அற்புதமான இடங்களை கோட்டையின் மீது ஏறிச் சென்று பார்த்து பரவசம் அடையலாம்.
ராணிக்கோட்டை என அழைக்கப்படும் கிருஷ்ணகிரி கோட்டை
திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ள ராணிக்கோட்டையை அந்த பக்கம் பயணம் செய்வோர் பார்க்காமல் செல்ல முடியாது. அற்புதமான அழகுடன் காட்சி அளிக்கும் ராணிக்கோட்டையைப் பார்க்க பார்க்க அழகுதான். இயற்கை எழிலுடன் கட்டப்பட்ட மலைக்கோட்டைதான் ராணிக்கோட்டை. கோட்டை மீது சுழலும் பீரங்கிமேடை, நெற்களஞ்சியம், அரங்கநாதர் ஆலயம், எண்ணெய்க் கிணறு, அழகிய கட்டட கலைநயத்துடன் கூடிய தர்பார் மண்டபம், கிருஷ்ணர் கோயில், மலையடிவாரத்தில் உள்ள பூவாத்தமன் கோயில் என பார்க்க பல இடங்கள் உள்ளன.
வரலாற்றின் முந்தைய காலத்தையும் அவர்கள் வாழ்ந்த விதம் மற்றும் கடைசியாக மன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்கள், ஆங்கிலேயர்கள் வரை ஆண்ட செஞ்சிக்கோட்டையை அவசியம் பார்த்து இந்த விடுமுறையை பயனுள்ளதாக்குவோம்.
எவ்வளவு தூரம்?
சென்னையில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது செஞ்சிக்கோட்டை. விழுப்புரத்தில் இருந்து 37 கிலோ மீட்டரும், திண்டிவனத்தில் இருந்து 27 கிலோ மீட்டர் தூரமும், திருவண்ணாமலையில் இருந்து 38 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. செஞ்சிக் கோட்டையை பார்க்க வருவதற்கு பேருந்து தான் வசதியாக இருக்கும். கோட்டை வாயிலுக்கு அருகிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது.

 
".....ஷாஆலம் வாங்கிய ஒரு புதிய முரட்டு குதிரையை யாராலும் அடக்க இயலவில்லை எனவே குதிரை ஓட்டுவதில் வல்லவர் ஆன சொரூப்சிங்கை தில்லி வர சொன்னார் சுல்தான், அவருடன் துணையாக 18 வயதே ஆன ராஜாதேசிங்கும் சென்றான். தந்தையால் குதிரையை அடக்க இயலவில்லை எனவே தன்க்கு ஒரு வாய்ப்பு அளித்துப்பார்க்க சொல்லி தேசிங்கு சுல்தானிடம் முறை இட்டான், வாய்ப்பளிக்கப்பட்டது அனைவரும் வியக்கும் வண்ணம் அக்குதிரையை அடக்கி சவாரி செய்துக் காட்டினான். அக்குதிரையின் பெயர் பரிகாரி. தேசிங்கின் வீரத்தைப் பாராட்டி அக்குதிரையையே பரிசளித்து விட்டார் சுல்தான். அது மட்டும் அல்ல இன்னொரு ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த தளபதி தனது மகளையும் மணமுடித்து வைத்தார். தேசிங்கின் மனைவி பெயர் ராணிபாய் (இவர் பெயரால் உருவான ஊர்தான் ராணிப்பேட்டை).

செஞ்சி அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிங்கவரம் கிராமம். சிங்கவரம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது. அரங்கன் தான் தேசிங்கு ராஜாவின் தெய்வம், எந்த வேலைச்செய்தாலும் இந்த அரங்கனிடம் சொல்லிவிட்டு தான் செய்வாராம்.

தேசிங்கு ராஜன் தன் செஞ்சிக்கோட்டை அரண்மனையிலிருந்தே அந்தக் கோயிலுக்குச்செல்ல சுரங்கப்பாதை அமைத்தாராம். அவனது ராணியும் மற்றத்தோழிகளும் பாதுக்காப்பாகச் செல்லவும் இந்தச்சுரங்கம் உதவப்பட்டது. எந்தப்போருக்குச்சென்றாலும் தேசிங்கு அரங்கனிடம் உத்தரவு பெற்றபின் தான் செல்வாராம்.


செஞ்சியை ஆண்ட மாவீரன் தேசிங்கு ராஜன், ஆர்க்காடு நவாப்பின் படைகளுடன் போரிட தன் குல தெய்வமான இந்த ஸ்ரீஅரங்கநாதரிடம் அனுமதி கேட்டபோது அரங்கன், "இன்று போருக்குச் செல்ல வேண்டாம். நாளை செல்" என்று கூறினாராம். தேசிங்கோ, "எதிரியின் படைகள் எல்லையை அடைந்துவிட்டதே... முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன். இன்றே செல்லட்டுமா?" என்று கேட்டாராம். இதைக் கேட்ட அரங்கன் தலையைத் திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இப்போதும் ரங்கநாதர், முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணலாம்.

போரில் தேசிங்கு, சுபாங்கிதுரை என்பவன் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதில் வீர மரணம் அடைந்தார். இதனைஅறிந்த அவர் மனைவியும் உயிரை விட்டாள், நீலாம்பூண்டி கிராமத்தில் தேசிங்கு ராஜனின் சமாதியும் படைத்தளபதி முகம்மதுகானின் சமாதியும் இருக்கின்றன கூடவே அவனது உயிருக்குக்குயிராய் நேசித்த குதிரை நீலவேணி குதிரையின் சமாதியும் இருக்கிறது."

தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் பெயர் வாங்கியது.

இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் என்பார்கள் அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்து இருக்கலாம் என்பதற்கு சான்று.

செஞ்சிக் கோட்டையை, 13ம் நூற்றாண்டில் கோனார் வம்சத்தினர் கட்ட துவங்கினர். அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை பலம் பொருந்திய கோட்டையாக மாற்றினர். குறிப்பாக, விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர்.
இந்த கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

ஜைனர்கள்

செஞ்சியின் வரலாறு பற்றி அதில் கிடைக்கும் கல்வெட்டுக்களின் அடிப்படையில்
கி.மு. முதல் கி.பி 6 வரை இங்கு ஜைனர்கள் வாழ்ந்தனர் என்று கல்வெட்டுக்கள் சொல்கின்றன.

பல்லவர் காலத்தில் செஞ்சி (கிபி 600-900)

பல்லவர் காலத்தில் சிங்கபுரதில் (சிங்கவரம்) ஒரு குகைகோவில் கட்டப்பட்டது, செஞ்சி தெற்கே பனமலை பகுதியில் ஒரு கோயில் கட்டப்பட்டது , அதன் பின்னர் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட குகை கோயில் உருவாக்கப்பட்டது , இந்த இடம் செஞ்சில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது , 580-630 பல்லவ மகேந்திரவர்மன் விசித்ரசித்தன் ஆக அழைக்க பட்டார், மேலும் பல்லவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கவரம் மற்றும் மேலச்சேரி பகுதிகளில் உள்ள பழங்கால கோயில் முலம் செஞ்சி பல்லவர்களின் ஆளுகையில்ருந்ததாக சொல்கிறது .

சோழர்கள் காலத்தில் செஞ்சி (900-1103)

செஞ்சி கிழக்கு பகுதில் காணப்படும் ஆனங்கூர் கல்வெட்டுக்களின் படி செஞ்சி பல்லவர்களின் காலத்திற்கு பின் சோழர்கள் ஆண்டதாக சொல்கிறது 871 முதல் 907 ஆதித்ய சோழன் 2 முறையே ஆட்சி செய்திருகின்றனர். அவன் தம்பி ராஜராஜன் சோழன் 1 (987-1014) காலத்தில் சிங்கபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது.
பாண்டியர்கள் காலத்தில் செஞ்சி (1014-1190)

1014-1190 களின் செஞ்சி பாண்டியர்களின் கையில் இருந்தததாக கல்வெட்டுகள் சொல்கிறது.

விஜயநகரப் பேரரசுக் காலத்தில்

13 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பெரரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.தமிழ் நாட்டில் நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் செஞ்சி நாயக்கர்களின் தலைமையிடமாகவும் இது விளங்கியது.மராட்டியர்களிடம் இருந்த இக் கோட்டையை பீஜப்பூர் சுல்தானின் படைகள் கைப்பற்றின. இக் கோட்டையை கி.பி 1677 இல் மீளக் கைப்பற்றிய(மீட்ட) மராட்டிய மன்னர் சிவாஜி இதனை மேலும் பலப்படுத்தினார். ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாஜியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராஜாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து அங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டான். முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி விட்டான். பின்னர் இக் கோட்டை கர்நாடக நவாப்புக்களில் கைக்கு வந்தது. அவர்கள், 1750 இல் இதனை பிரெஞ்சுக்காரரிடம் தோற்றனர். இறுதியாக 1761 இல் பிரித்தானியர் இதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும் சிறிதுகாலம் இதனை ஹைதர் அலியும் கைப்பற்றி வைத்திருந்தான்.

அமைப்பு

செஞ்சிக் கோட்டை அமைப்புசெஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர்மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டிருந்தது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் இருந்தது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி, சக்கிலி
செஞ்சிக் கோட்டை இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் தப்பியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் அழைக்கப்பட்டது. இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது. சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளதுதுர்க், ராஜகிரி ஆகிய குன்றுகள் இருந்தன.

செஞ்சியின் வரலாறு பற்றி அதில் கிடைக்கும் கல்வெட்டுக்களின் அடிப்படையில் கி.மு. முதல் கி.பி 6 வரை இங்கு ஜைனர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
பல்லவர் காலத்தில்(கிபி 600-900) சிங்கபுரதில் (சிங்கவரம்)ஒரு குகைகோவில் கட்டப்பட்டது, செஞ்சிக்குத் தெற்கே பனமலைப் பகுதியில் ஒரு கோயில் கட்டப்பட்டது. அதன் பின்னர் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட குகை கோயில் உருவாக்கப்பட்டது. இந்த இடம் செஞ்சியில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கி.பி.580-630 விசித்ரசித்தன் என அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் ஆளுகையில் செஞ்சி இருந்தது. மேலும் பல்லவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கவரம் மற்றும் மேலச்சேரி பகுதிகளில் உள்ள பழங்கால கோயில் முலம் செஞ்சி பல்லவர்களின் ஆளுகையில் இருந்ததாக சொல்லப்படுகிறது .
செஞ்சி கிழக்கு பகுதியில் காணப்படும் கல்வெட்டுகள், செஞ்சி பல்லவர்களின் காலத்திற்கு பின் சோழர்கள் ஆண்டதாகச் சொல்கிறது.[1] 871 முதல் 907 இரண்டாம் ஆதித்ய சோழன் முறையே ஆட்சி செய்திருகின்றனர். அவன் தம்பி ராஜராஜன் சோழன் (987-1014) காலத்தில் சிங்கபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில், சோழர் ஆட்சிக்காலத்தில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறிய கோட்டை ஒன்று இங்கே இருந்தது. 1014-1190 களின் செஞ்சி பாண்டியர்களின் கையில் இருந்தததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. இங்கிருந்த சிறிய நகரமான செஞ்சியைப் பாதுகாப்பதற்காக, விஜயநகரப் பேரரசுக் காலத்தில், 13 ஆம் நூற்றாண்டில் விரிவாக்கப்பட்டது. அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை வலிமை பொருந்திய கோட்டையாக மாற்றினர். 13 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பெரரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. குறிப்பாக, விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர். தமிழ் நாட்டில் நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் செஞ்சி நாயக்கர்களின் தலைமையிடமாகவும் இது விளங்கியது.

கோட்டையுள் அமைந்துள்ள கல்யாண மண்டபத்தின் தோற்றம்-தொலைவிலிருந்து
வெளியார் படையெடுப்பை முறியடிப்பதற்கு உகந்த இடமொன்றாகக் கருதியே இவ்விடத்தில் இக்கோட்டை கட்டப்பட்டது. மராட்டியர்களிடம் இருந்த இக் கோட்டையை பீஜப்பூர் சுல்தானின் படைகள் கைப்பற்றின. இக் கோட்டையை கி.பி 1677 இல் மீளக் கைப்பற்றிய(மீட்ட) மராட்டிய மன்னர் சிவாஜி இதனை மேலும் பலப்படுத்தினார். ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாஜியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராஜாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து அங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டான். முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி விட்டான். பின்னர் இக் கோட்டை கர்நாடக நவாப்புக்களில் கைக்கு வந்தது. அவர்கள், 1750 இல் இதனை பிரெஞ்சுக்காரரிடம் தோற்றனர். இறுதியாக 1761 இல் பிரித்தானியர் இதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும் சிறிதுகாலம் இதனை ஹைதர் அலியும் கைப்பற்றி வைத்திருந்தான்.
கல்யாண மண்டபத்தின் அண்மைத் தோற்றம்.
செஞ்சிக் கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

செஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளடங்கியுள்ளது. 240 மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டிருந்தது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் இருந்தது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி, சக்கிலிதுர்க், ராஜகிரி ஆகிய குன்றுகள் இருந்தன. இடையேயிருந்த வெளிகள் 20 மீட்டர்கள் அகலம் கொண்ட சுவர்களினால் மூடப்பட்டிருந்தன.



3 கருத்துகள்:

  1. சிறப்பு இது போன்ற கட்டுரைகளில் தான் தற்போது வரலாறு வாழ்கிறது. ஆசிறியர் ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றிகள் பல......

    பதிலளிநீக்கு
  2. நன்றாக....காட்சிப்படுத்தப்பட்டுள்ளது...நன்றிகள் பல...செஞ்சிக்கோட்டை..மனதில் நிற்கிறது...

    பதிலளிநீக்கு
  3. 19765,70களில் தமிழ்ப்பாடத்தில்...பட்டிய குதிரையில் பாய்ந்து வருகிறான் ராஜா தேசிங்கு..என்ற பாடல் வரிவரும்..அந்தப்பாடல் முழுமையாக வேண்டும்..அதனை இயற்றியவருடன்.....

    பதிலளிநீக்கு