புதன், 17 ஜூலை, 2013

தமிழர் திருவிழாவிற்கு மோதூம் ‘தல’-‘தளபதி’ படங்கள் - கோ.ஜெயக்குமார்.

 
தமிழர் திருவிழாவிற்கு மோதூம் ‘தல’-‘தளபதி’ படங்கள் - கோ.ஜெயக்குமார்.
 
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கிற படம் அவருக்கு 53-வது படம். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடைந்து வெளியாகும் நிலையில் உள்ளது. இன்னமும் பெயரிப்படாத இப்படத்தில் ஆர்யா, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர்.
பொங்கலுக்கு மோதும் ‘தல’-‘தளபதி’ படங்கள்
இந்த படத்திற்கு பிறகு தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படம் அவருக்கு 54-வது படமாகும். விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்குமார் ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்து விட்டது. இந்நிலையில் வரும் பொங்கலன்று இப்படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tutyonline.net/gallery/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/b/ajith_vijay.jpg
இயக்குனர் சிவாவின் வேகமும், திட்டமிடுதலும் நடிகர் அஜித்-ன் ஒத்துழைப்பும் இப்படம் திட்டமிட்டதைபோலவே  2014ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட முடியும் என நம்பிக்கையுடன் உள்ளதாக தயாரிப்பு வட்டாரம் கூறுகிறது.
http://www.tutyonline.net/gallery/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/b/ajith_vijay1.jpg
இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இப்படத்தில் அஜீத், தமன்னா ஜோடியுடன் ஆடி பாடும் 2 பாடல் காட்சிகள் ஸ்விட்சர்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளது. கடுங்குளிரையும் பொருட்படுத்தாது அஜித் எளிமையாக இப்படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம். இது படக்குழுவினரை மேலும் உற்சாகமூட்டியதாம். இப்படத்தில் சந்தானம், பாலா, விதார்த், ‘நாடோடிகள்’ அபிநயா, ரமேஷ் கண்ணா, இளவரசு, அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/vijay-and-ajith/wmarks/vijay-and-ajith01.jpg
இதேபோல், விஜய் தற்போது நடித்து முடித்துள்ள ‘தலைவா’ படம் அடுத்த மாதம் வெளியாகிறது. இதையடுத்து நேசன் இயக்கும் ‘ஜில்லா’ படத்தில் தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படமும் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிகிறது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZtibqsJcJ1PVVXFYKfzx-3INkrbPu_ybiaN2thel7AFI2ZR-R5-Txga9yk-819QYCuhOaQIcKDENJPy39k8HpKEhyphenhyphenCe7V1Iamez9ZyZjoh1wvyFEvGQp9zv4sKukjKBWpJ-G3GGEgng86/s400/va.jpg
பொங்கல் நாளில் ‘தல’-‘தளபதி’ ஆகியோரின் படங்கள் ஒரே நேரத்தில் ரீலிசாவது ரசிகர்களிடேயே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அடுத்த வருட பொங்கல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக