செவ்வாய், 22 அக்டோபர், 2013

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் - கோ.ஜெயக்குமார்.


சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் - கோ.ஜெயக்குமார்.

மாடர்ன் தியேட்டர்ஸ் லிமிடெட் (Modern Theaters Ltd) 1935ஆம் ஆண்டில்  தயாரிப்பு நிறுவனம். தென் இந்தியாவில் முதன்முததமிழ்நாட்டின் சேலத்தில் திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் (டிஆர்எஸ்) துவக்கிய திரைப்படத்லாக உருவாக்கப்பட்ட பெரிய திரைப்படக் கூடம் இதுவே. சென்னை போன்ற பெரிய நகரங்களை விட்டு முதன் முதலாக சேலம் போன்ற வெளி நகரம் ஒன்றில் மாடர்ன் தியேட்டர்ஸ் உருவாக்கப்பட்டது .
 படிமம்:Modern theatar -salem.jpg
மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்படக் கூடம் ஒரு காலத்தில் ஆண்டுக்கு மூன்று படங்களையாவது உருவாக்கிக் கொண்டிருந்தது. முதன் முதலாக தென் இந்தியாவில் வண்ணப்படத்தைத் தயாரித்த பெருமையும் மாடர்ன் தியேட்டர்சுக்கு உண்டு.
 
இந்த நிறுவனத்தின் தயாரிப்பு அரங்கில் 1982ஆம் ஆண்டுவரை 150க்கும் மேலான தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, சிங்களம் மற்றும் ஆங்கிலத்திலும் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தமிழ்த் திரைப்படங்களே.
 படிமம்:Modern Theatre.jpg
தமிழ்த்திரையுலகில் பல பிரபலங்களை உருவாக்கிய பழம்பெருமை வாய்ந்த சேலம் மார்டன் தியேட்டரில், 27 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனை பழைய நடிகைகள் தொடங்கி வைத்தனர்.
http://suriyantv.com/wp-content/uploads/2011/07/output.jpg
திரைப்பட வரலாற்றில் முக்கிய பங்கு வகிப்பது மாடர்ன் தியேட்டர்ஸ். சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் இந்த ஸ்டுடியோ உள்ளது. எம்.ஜி.ஆர் மற்றும் தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட பலர் இங்கு நடித்துள்ளனர்.
படிமம்:A back view- entrance.jpg
கருணாநிதியும் இந்த தியேட்டரில் பணியாற்றியுள்ளார். கண்ணதாசன், மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்றோர் மாடர்ன் தியேட்டருக்கு சென்று பாடல் எழுதி உள்ளனர்.
 http://awardakodukkaranga.files.wordpress.com/2008/11/mt.jpg?w=630
9 மொழிகளில் 118 திரைப்படங்களை தயாரித்த பெருமை மாடர்ன் தியேட்டருக்கு உண்டு. 1936-ல் நேருவும், வல்லபாய் படேலும் மாடர்ன் தியேட்டருக்கு சென்று படப்பிடிப்பை கண்டுகளித்துள்ளனர். சென்னையில் ஸ்டுடியோக்கள் முளைத்ததும் மாடர்ன் தியேட்டர் உருக்குலைந்து குடியிருப்பு வளாகமாக மாறியது.
 
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் அதிபரான டி.ஆர்.சுந்தரம், சேலம் மாவட்டம் திருச்செங்கோட்டில் 1907 ஜுலை 16_ந்தேதி பிறந்தவர். இவருடைய தந்தை நூற்பாலைகளில் இருந்து நூலை வாங்கி மொத்தமாக வியாபாரம் செய்து வந்த வி.வி.சி. ராமலிங்க முதலியார். தாயார் பெயர் கணபதி அம்மாள். இவர்களுக்கு ஐந்தாவது மகனாக டி.ஆர்.சுந்தரம் பிறந்தார்.தனது தொடக்கக் கல்வியை சேலத்தில் கற்ற சுந்தரம், சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து, "பி.ஏ" மற்றும் "பி.எஸ்.சி" பட்டங்கள் பெற்றார்.
 
சுந்தரம் இங்கிலாந்து சென்றார். ஜவுளித் தொழிலில் உயர் கல்வி பயின்றார். நூல்களுக்கு வண்ணம் சேர்க்கும் தொழில் நுட்பத்தை கற்றறிந்தார். அங்கு படித்த போது லண்டனில் டி.ஆர்.சுந்தரத்துக்கும், 'கிளாடிஸ்' என்ற பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டது. இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.
 
ஜவுளித் தொழிலில் உயர் படிப்பு படித்திருந்த சுந்தரத்துக்கு, தன்து குடும்பத் தொழிலின் மீது ஆர்வம் ஏற்படவில்லை. திரைப்படத் துறை இவரது கவனத்தை ஈர்த்தது. இந்தத் துறையில் காலடி வைக்க ஒரு துணை வேண்டியிருந்தது. லண்டனில் இருந்து அவர் சேலம் திரும்பியபோது (1933_ல்) சேலத்தில் "ஏஞ்சல் பிலிம்ஸ்" என்ற நிறுவனம் திரைப்படத்தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது.
 http://www.thinakaran.lk/2013/08/20/cinema3.jpg
திரைப்படத் தொழிலில் ஆர்வம் கொண்ட டி.ஆர்.சுந்தரம், ஏஞ்சல் பிலிம்ஸ் அதிபர்களான வேலாயுதம் பிள்ளை, சுப்பராய முதலியார் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து திரைப்படங்கள் தயாரித்தார்.
 
இந்நிறுவனத்தின் தயாரிப்புகளான 'திரௌபதி வஸ்திராபரணம்'(1934), 'துருவன்'(1935), 'நல்ல தங்காள்'(1935) ஆகிய படங்களில் பணி புரிந்தார். அக் காலத்தில் தமிழ்ப் படங்களுக்கு மும்பை, கொல்கத்தா போன்ற வட இந்திய நகரங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. டி.ஆர். சுந்தரம் குழுவினரும் கொல்கத்தா]] நகரம் சென்று இரண்டு படங்களை எடுத்தார்கள். இவ்விரண்டு படங்களும் ஓரளவு நல்ல வருமானத்தைத் தந்தன.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6j3jXs4Rv9ZiGwm0BnDzHhGfXKoGJNKfGDnWt_6gAjJ2yspMmCMsXVMu3EiXw1oYajdZHURQICEEngM_1WPSY3Y-Rm9d6l9IJUdch2be_7i2pazHdL-CINn4WTLb6T6_55owO8BjoqI0/s1600/annadurai_mgr_karunanidhi.jpg
ஒவ்வொரு முறையும் கொல்கத்தா செல்ல வேண்டுமா என நினைத்த சுந்தரம், சேலத்தில் தானே ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்க எண்ணினார். சேலம் ஏற்காடு மலையடிவாரத்தில் 10 ஏக்கர் நிலத்தை சுந்தரம் வாங்கினார். வளாகத்தினுள் நுழைந்தால், அங்கேயே முழுப்படத்தையும் தயாரிக்கக்கூடிய வசதிகள் அனைத்தும் இருக்கவேண்டும்" என்று நினைத்தார்.படப்பிடிப்பு தளம், பாடல் பதிவு செய்வதற்கான அறை, கூடம், திரைப்படத்தை போட்டுப்பார்க்க ஒரு அரங்கம் என அனைத்து வசதிகளுடனும், 1935 இல் "மாடர்ன் தியேட்டர்ஸ்" நிறுவனம் உருவானது.
 http://www.muthamil.com/2009/images/jayalalitha_karuna.jpg
27 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென்று அழகு மகன் என்ற புதிய படத்தின் படப்பிடிப்பை மாடர்ன் தியேட்டரில் நேற்று நடத்தினார்கள். முன்னதாக விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. மாடர்ன் தியேட்டர்சில் பயன்படுத்திய சினிமா புரொஜெக்டரை கொண்டு வந்து வைத்து பூஜை போடப்பட்டது.
இதில் நடிகைகள் சி.ஐ.டி.சகுந்தலா , ஜெயக்குமாரி, பின்னணி பாடகி எல்.ஆர். ஈஸ்வரி, இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ், நடிகர்கள் இளவரசு, சிங்கம்புலி, இயக்குனர் கவுதமன், ஆசைத்தம்பி, விஜய்ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் பூக்களை புரொஜெக்டரின் மேல் கொட்டி துவக்கி வைத்தனர்.
 https://sphotos-a.xx.fbcdn.net/hphotos-ash4/p480x480/269248_286329711492541_266001094_n.jpg
பின்னர் சி.ஐ.டி. சகுந்தலா கூறியதாவது:
சேலம் மாடர்ன் தியேட்டர்சில் நடித்தது என்னால் மறக்க முடியாது. சாகும்போது கூட மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவுடன் தான் சாவேன். அந்தளவிற்கு என் வாழ்க்கையிலும், என்னை போல் மற்றவர்கள் வாழ்க்கையிலும் மாடர்ன் தியேட்டர்ஸ் அங்கம் வகித்துள்ளது.
மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரத்தையும் நாங்கள் மறக்க மாட்டோம்.
 
பல கலைஞர்களை உருவாக்கி சாதனை படைத்தவர் அவர். அவர் கையால் குட்டுப்பட்டவர்கள் தான் இன்று திரையுலகில் இருப்பவர்கள். பல சாதனை கலைஞர்களை இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் தான் உருவாக்கி இருந்தது. எனக்கு வாழ்க்கைத்தந்தது. சாதனை பல புரிந்த இந்த இடத்தில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன்.

விழாவில் கலந்து கொண்ட சங்கர் கணேஷ் சித்தாடை கட்டிக்கிட்டு பாடலை பாடி அனைவரையும் கைதட்ட வைத்தார். அவர் கூறியதாவது:
மாடர்ன் தியேட்டர் தயாரித்த பல படங்களை பார்த்து வியந்து இருக் கிறேன். இந்த இடத்தில் நிற்பதே பெருமை. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த அனைத்து படங்களிலும் பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் வகையில் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
 
சேலம் மாடர்ன் தியேட்டர் பகுதிக்கு நடிகர் நடிகைகள் வந்துள்ளதை அறிந்த திரளான பொதுமக்கள் அங்கு கூடி விட்டனர். இவர்கள் நடிகர்களை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அங்கு வந்து பொது மக்களை ஓரமாக நிற்க வைத்து படப்பிடிப்பு நடக்க ஏற்பாடு செய்தனர்.
 https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash4/431500_384995328236247_1822162545_n.jpg
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை டி.ஆர்.சுந்தரம் ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் ஒரு தொழிற்சாலையைப் போல நடத்தலானார். திரைப்படம் மூலமாகப் பிரச்சாரம் செய்வது, சமூக சீர்திருத்தம் இப்படிப்பட்ட எண்ணங்கள் ஏதுமின்றி மக்கள் விரும்பிப் பார்த்து மகிழும்படியான பொழுதுபோக்குப் படங்களைத் தரமாகக் கொடுக்க வேண்டுமென்பது தான் இவரின் நோக்கமாக இருந்தது.
 
திரைப்படம் என்பது மக்களை மகிழ்விக்க வந்த ஒரு சாதனம், அதில் பொழுதுபோக்கும், மகிழ்ச்சியும்தான் இருக்க வேண்டும், தேவையில்லாத மற்ற பிரச்சினைகள் அதற்குள் தலையிடாமல் இருக்க வேண்டுமென விழிப்புடன் டி.ஆர்.சுந்தரம் தனது கொள்கைகளை நிறைவேற்றி வந்தார். நகைச்சுவை நடிகர்கள் 'காளி என்.ரத்தினம்', 'டி.எஸ்.துரைராஜ்', 'வி.எம்.ஏழுமலை', 'ஏ.கருணாநிதி' ஆகியோர், இங்கு மாத சம்பளத்துக்கு வேலை பார்த்தனர்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgt4vaT5Ddb9RtONjPk0lQGZJJD8EOoHyEYD83Bj1zukl8bpJbHg3ddl4IrclcCLzs6rZaPCKkmS9CT2ZjJxVeoPVgfiC8zumhuff93XiocPYA_BDXk50BsGgb3mabrDu-g8lZMT_P4u0ze/s1600/mu+ka..jpg
படப்பிடிப்பு குறிப்பிட்ட தேதியில் தொடங்கி, குறிப்பிட்ட தேதியில் முடியவேண்டும் என்பதில் சுந்தரம் கண்டிப்பாக இருந்தார்.
 சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் சுமார் 250 தொழிலாளர்கள் வேலை செய்தார்கள்.சுந்தரம் தமது நிறுவனத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல் படுத்தினார்.
 http://lordmgr.files.wordpress.com/2010/07/800px-mgre34wk3wk.jpg
நடிகைகள் உள்ள பகுதிக்கு, நடிகர்கள் போகக்கூடாது. கதை வசனம் முழுமையாகத் தயாரான பிறகுதான், நடிகர் நடிகைகள் யார் என்பது முடிவாகும். நன்றாக ஒத்திகை பார்த்த பிறகுதான் படப்பிடிப்பு தொடங்கும்.இங்கு நடிக்க வந்த நடிகர்கள் கூட ஒரு தொழிலாளர்களைப் போல சரியான நேரத்துக்கு வருவது, கட்டுப்பாட்டோடு பணியாற்றுவது, வீண் வம்பு, விவகாரம் இவற்றில் ஈடுபடாமல் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது என்று இருந்தார்கள்.
 http://kannadasan.files.wordpress.com/2012/11/e0ae95e0aea3e0af8de0aea3e0aea4e0aebee0ae9ae0aea9e0af8d-e0ae95e0af81e0ae9fe0af81e0aeaee0af8de0aeaae0aeaee0af8d.jpg
நடிகர், நடிகைகள் ஒப்பந்த முறையில் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். அங்கு சேர்ந்து அறிமுகமாகி, புகழ்பெற்ற நடிகராக விளங்கியவர்களில் எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்காராவ், அஞ்சலி தேவி இவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
 http://abedheen.files.wordpress.com/2010/01/karunanidhi.jpg
படத்தயாரிப்பில் தீவிரமாக இறங்கிய சுந்தரம் தனது முதல் தயாரிப்பாக "சதி அகல்யா" என்ற படத்தை தயாரித்தார். பிற்காலத்தில் "கவர்ச்சிக் கன்னி"யாகத் திகழ்ந்த இலங்கைக் குயில் தவமணிதேவி தான் இந்தப்படத்தின் கதாநாயகியாவார்.1937-இல் வெளிவந்த இப்படம் நல்ல வெற்றி பெற்றது. தொடர்ந்து, "பத்மஜோதி" என்ற படத்தையும் "புரந்தரதாஸ்" என்ற கன்னடப் படத்தையும் தயாரித்தார்.
 
1938இல், "பாலன்" என்ற மலையாளப் படத்தைத் தயாரித்தார். மலையாள மொழியின் முதல் பேசும் படம் இதுதான். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. பின்னர் சுந்தரம் தயாரித்த படம் "நாம தேவர்." இது, தமிழில் வெளியான 100_வது படம் என்ற பெருமையைப் பெற்றது. 1938_ம் ஆண்டில் "மாயா மாயவன்" என்ற படத்தை சுந்தரம் தயாரித்தார். தமிழில் எடுக்கப்பட்ட முதல் சண்டைப்படம் இது.
 http://kannadasan.files.wordpress.com/2012/08/e0ae95e0aea3e0af8de0aea3e0aea4e0aebee0ae9ae0aea9e0af8d.png?w=570
இதில், டி.கே.சம்பங்கி என்ற பிரபல நாடக நடிகர் கதாநாயகனாக நடித்தார். நொட்டானி என்பவர் இப்படத்தை இயக்கினார்.1944-இல் பர்மா ராணி, 1946-இல் சுலோச்சனா,1948-இல் ஆதித்தன் கனவு,1949-இல் மாயாவதி,1950-இல் எம்.என்.நம்பியார் நடித்து வெளியான துப்பறியும் கதை திகம்பர சாமியார்,1951-இல் சர்வாதிகாரி,1952-ல் வளையாபதி, 1960-இல் பாக்தாத் திருடன், போன்ற பல வெற்றிப் படங்களை மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தினர் எடுத்தனர்.இந்நிறுவனம் எடுத்த முதல் வண்ணப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும் ஆகும்.
 
இவர் எடுத்த சில படங்கள் விவரம் வருமாறு: தட்ச யக்ஞம், கம்பர், தாயுமானவர், மாணிக்கவாசகர், உத்தமபுத்திரன், பக்த கெளரி, தயாளன், மனோன்மணி, செளசெள, பர்மா ராணி, ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, ஆதித்தன் கனவு, திகம்பர சாமியார், மந்திரிகுமாரி, பொன்முடி, சர்வாதிகாரி, தாய் உள்ளம், திரும்பிப்பார், இல்லறஜோதி, சுகம் எங்கே?, கதாநாயகி, மகேஸ்வரி, அலிபாபாவும் 40 திருடர்களும், பாசவலை, ஆரவல்லி, பெற்ற மகளை விற்ற அன்னை, தலைகொடுத்தான் தம்பி, வண்ணக்கிளி, கைதி கண்ணாயிரம், குமுதம், கொஞ்சும் குமரி, அம்மா எங்கே?, வல்லவனுக்கு வல்லவன், வல்லவன் ஒருவன், இரு வல்லவர்கள், எதிரிகள் ஜாக்கிரதை, காதலித்தால் போதுமா, நான்கு கில்லாடிகள், சி.ஐ.டி.சங்கர், ஜஸ்டிஸ் விஸ்வநாதன், கருந்தேள் கண்ணாயிரம் இப்படிப் பல படங்கள் உண்டு.
 http://www.thinakaran.lk/vaaramanjari/2010/08/22/f9_3.jpg
இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்தைச் சித்தரிக்கும் பர்மா ராணி, தமிழிலக்கியத்தில் புகழ்பெற்ற வளையாபதி, இவற்றோடு சிறுவர்களுக்கான கதை அலிபாபா இவற்றை மிகவும் சுவைபட படம் எடுத்தனர். ஆர்.எஸ்.மனோகரை வைத்து கைதி கண்ணாயிரம் போன்ற படங்களையும் எடுத்தனர் . ஜெய்சங்கரை வைத்து பல 007 மாதிரியான துப்பறியும் படங்களையும் எடுத்திருக்கிறார். இவர்கள் எடுத்த மொத்த படங்களின் பட்டியல் அந்த நிறுவனத்தின் வாயிலில் பெரிய விளம்பரப் பலகையில் எழுதி வைத்திருந்தார்கள்.
 Modern Theaters Ltd
'எனது சுயசரிதம்' கண்ணதாசன் எழுதிய புத்தகம்.என்னுடைய கலைப் பாதையில் ஆரம்ப கட்டத்தில், ஒவ்வொரு படிக்கட்டிலும் ஏமாற்றமும், தோல்வியும் காத்திருந்தன. நான் அலட்சியப்படுத்தப்பட்ட இடங்கள் அதிகம்.
 இது எனக்கு மட்டும் ஏற்பட்ட கதி' என்று நான் கூற வரவில்லை. ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு எழுத்தாளனின் கதியும் இதுதான். திறமையுள்ளவர்கள் அந்தத் தடைச் சுவரைத் தாண்டி வந்து விடுகிறார்கள். திறமையில்லாதவர்கள் சோர்ந்து விரக்தியடைந்து ஒதுங்கி விடுகிறார்கள்.
 Modern Thieator-02
கலை உலகில் எனது ஆரம்பக் காலத்தில், நான் அதிக திறமையுள்ளவனாக இல்லை. அப்போது சில சந்தர்ப்பங்கள் கிடைத்தன. சந்தர்பத்திற்கேற்ப என் திறமையை வளர்த்துக் கொண்டேன். ஆனால், அதைப் பயன்படுத்த விடாமல் சிலர் தடுத்தார்கள்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZTw68JLo-xZWbwnX2jkmcZlI7q-CtXfa7EydHmKrRJRLl3ANbN5hNIB0B7hFxtD7WhVPY9Nwu8l1UDFbln6aYUSgZayNEYt2EPZFJAyKUSjUxD_J1vd88MTcvFNW4H74brt7JwlWSYNW_/s1600/kannadaasan+4.jpg
1947 – ஆம் ஆண்டு, நான் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸார் நடத்தி வந்த 'சண்டமாருதம்' என்னும் மாதமிருமுறைப் பத்திரிக்கையில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தேன். சினிமாவுக்குக் கதை எழுதும் வாய்ப்புக் கிடைக்கும் என்ற ஆசையில்தான் அந்தப் பத்திரிக்கையில் போய்ச் சேர்ந்தேன்.
பத்திரிக்கையில் அதிகம் வேலை இல்லை. மாடர்ன் தியேட்டர்ஸ் செய்திகளையே அதிகம் வெளியிட வேண்டும். மாதத்தில் இருபது நாட்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.
 
அந்தப் பத்திரிக்கையில் நான் வேலை பார்த்த போது, மாடர்ன் தியேட்டர்ஸார் தயாரித்த 'அபூர்வ சிந்தாமணி' படம், முடியும் தறுவாயில் இருந்தது. “நானும் ஒரு கதை எழுதித் தருகிறேன்,” என்று டி.ஆர். சுந்தரத்திடம் சொல்ல எனக்கு பயம்.
 
அப்போது மாடர்ன் தியேட்டர்ஸ் விநியோகத் துறையிலிருந்த சுலைமான், அப்துல் காதர் போன்ற நண்பர்களோடு மாலையில் நான் 'பாட்மிண்டன்' ஆடுவது வழக்கம்.அந்நாளில் மாடர்ன் தியேட்டர்ஸில் ஏராளமான பேர் வேலையிலிருந்தார்கள். சீர்காழி கோவிந்தராஜன், ஓ.ஏ.கே. தேவர் உட்பட சுமார் ஐம்பது பேர் நிரந்தர ஊழியர்களாக இருந்தார்கள்.
 
என்னோடு நெருங்கிப் பழகிய சுலைமான் போன்றவர்களிடம், என் மனப் போக்குக்கு ஏற்ப எழுதிய கதைகளை நான் படித்துக் காட்டுவது வழக்கம். இந்த நிலையில், ஒரு நாள் மாலையில், நான் பாட்மிண்டன் ஆடி விட்டு விநியோக அலுவலகத்துக்குப் பின்புறமிருந்த குளிக்கும் அறையில் குளித்து விட்டு, வெளியே வந்தேன்.
 
அப்போது, அங்கு முதலாளி நிற்பதைப் பார்த்துப் பயந்து, பின்புறமாக வந்து இடது பக்கமாகப் போனேன். அதற்குள் அவர் முன்புறமாக நடந்து இடது பக்கம் வந்து விட்டார். வேறு வழியில்லாமல் அவரைப் பாராதது மாதிரி நடை போட்டேன்.
 
“இந்தா மேன்,” என்று அவர் கூப்பிட்டார். நான் தயங்கி நின்றேன்.
“உனக்கு 'ட்ரீட்மெண்ட்' எழுதத் தெரியுமா?” என்றார். 'ட்ரீட்மெண்ட்' என்றால் திரைக்கதை.தயக்கத்தோடு "தெரியும்" என்று சொல்லி விட்டேன். உண்மையில் அது எனக்குத் தெரியாது.
 
“சரி; நாளை காலையில் போய் சுந்தரேசனைப் பார்; ஒரு கதை கொடுப்பார். அதை வாங்கி ட்ரீட்மெண்ட் எழுது,” என்றார்.எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நீண்ட நாளைய கனவு நிறைவேறப் போகிறது என்பதால் அன்றிரவு எனக்குத் தூக்கமே பிடிக்கவில்லை.
 
மறுநாள் காலையில், ரிகர்சல் ஹாலில் முதலாளிக்கு உதவியாளராக இருந்த சுந்தரேசனைப் போய்ப் பார்த்தேன். 'ஆதித்தன் கனவு' என்னும் கதையை என்னிடம் கொடுத்தார். அதே கதைக்கு வேறு சிலரும் திரைக்கதை எழுதிக் கொண்டிருந்தார்கள்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpnxIVyyvVbrPfIPvLk3PtPkpwF-3HeQqqa809t2rzOwF424P15lB9NqpNyNqdt19qmhs6lDb5wqebEqdCTOzWVTd7_EhbRbDto-E3bH-owurrQ1Nqq79neJJoUBUGeNhD5NCiud2JcxA/s320/184.jpg
ஜலகண்டபுரம் பா.கண்ணன் இதில் முக்கியமானவர். அவரிடம் போய் அதற்கு முன்னால் எழுதப்பட்ட வேறு சில திரைக்கதைகளை வாங்கிப் பார்த்தேன். காட்சிகளை எப்படி பிரிப்பது என்பது உடனே எனக்குப் புரிந்து விட்டது. சண்டமாருதம் அலுவலகத்தில் வந்து உட்கார்ந்து உடனே எழுத ஆரம்பித்தேன்.
பல வருஷங்களாகாத் திரைக்கதை எழுதிப் பழகியவன் போல், 'காட்சித் துவக்கம்', 'காட்சி முடிவு' இவற்றிலெல்லாம் ஆங்கில வார்த்தைகளைப் போட்டு புதிய முறையில் எழுதினேன்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpPv0j1iUeWrbDgp7nlEXl7_w7imnioRZZEmqK4rKSnzEm2torC95LaSCq6CFWgUToW7-V7W-rju0VBXr7foJ0QFk9puybitVTVu56RZqUMlWm7mz4da8VnIxv9XbWSxZ4X67DkN-Luc8/s1600/veteran_modern_theatres_salem_01.jpg
நண்பர் சுலைமானிடமும், பிறரிடமும் படித்துக் காட்டினேன். எல்லோருக்கும் பிடித்திருந்தது.

2 கருத்துகள்: