திங்கள், 21 அக்டோபர், 2013

ஏழைகளின் ஊட்டி ஏற்காடு ஒரு வரலாற்றுப் பார்வை - கோ.ஜெயக்குமார்.

ஏழைகளின் ஊட்டி ஏற்காடு ஒரு வரலாற்றுப் பார்வை - கோ.ஜெயக்குமார்.

சேலம் (ஆங்கிலம்:Salem), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். தமிழகத்தின் 5வது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. சைலம் என்ற சொல்லிற்கு மலைகளால் சூழ்ந்த வாழிடம் என்பது பொருள். இந்த சைலம் என்பதே திரிந்து, சேலம் ஆனது. கொங்கு மண்டலத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள சேலம் ஒரு வணிக நடுவம் ஆகும். சேலம் மல்கோவா வகை, மாம்பழத்திற்கு பெயர் பெற்ற இடம். இதனால் இதனை "மாங்கனி நகரம்" என்றும் அழைப்பார்கள்.
 படிமம்:Salem central bus stand entrance2.JPG
சேலம் என்ற சொல் 'சைலம்' மற்றும் 'ஷைல்ய' என்னும் சொல்லில் இருந்து பிறந்ததாக கூறப்படுகிறது. 'சேலம்' என்றால் 'மலைகள் சூழ்ந்த இடம்' என்று பொருள்.
படிமம்:Admingce.JPGஇவ்வூரில் உள்ள மலையைச் சேரன் ஆண்டதால் சேர்வராயன் மலை ஆயிற்று; அது போலச் 'சேரலம்' என்பது 'சேலம்' ஆயிற்று என்றும் கூறுவர். ஏத்தாப்பூர் செப்பேடு இவ்வூரைச் "சாலிய சேரமண்டலம்" எனக் குறிப்பிடுகிறது. எனவே, சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என வழங்கப்பட்டது. சேலம் மற்றும் கோவைப் பகுதிகள் நீண்ட காலம் மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாடில் இருந்தது.
 http://upload.wikimedia.org/wikipedia/ta/4/45/Mettur_Dam.jpg
பிற்பாடு 1768 இல் மதுரை-மைசூர் போரில் சேலம் ஹைதர் அலி கட்டுப்பாட்டுக்கு சென்றது. பின்பு 1799 இல் லார்டு க்லைவ் கைப்பற்றி சங்ககிரி துர்கத்தை தலைமை இடமாக கொண்டு வெள்ளையர்கள் அரசாங்கம் சார்பில் நிர்வாகம் நடந்தது. ஆங்கிலேயர்களின் இராணுவ படைத்தளமாக சேலம் விளங்கிற்று. அவர்கள் கட்டிய கோட்டை இங்குள்ளது, கோட்டைப்பகுதி தற்போது நகரின் மைய பகுதியாக உள்ளது.
 http://upload.wikimedia.org/wikipedia/commons/6/65/House_at_Oosor_Hosur_,_Salem_District.jpg
சேலத்தில் மூன்று தொடருந்து நிலையங்கள் உள்ளன. அவை சேலம் டவுன், சேலம் மார்க்கெட், சேலம்சந்திப்பு ஆகும். சேலம் டவுன் என்ற தொடருந்து நிறுத்தம், சேலம் மாவட்டத்தின் கிழக்கு வட்ட மக்களுக்கு பெரிதும் பயனாகிறது.
படிமம்:Railway station entrance3, salem town,Tamil Nadu562.jpg
சேலம் மார்க்கெட் என்ற தொடருந்து நிறுத்தம், இந்தியாவின் வெளிமாநில சரக்குப் போக்குவரத்துக்கு பெரிதும் பயனாகிறது. சேலம் சந்திப்பானது சென்னை-கோவை, மற்றும் கேரள மாநிலம் செல்லும் அனைத்து ரெயில்களின் முக்கிய சந்திப்பு. 2007 ஆம் ஆண்டு முதல் சேலத்தை தலைமை இடமாக கொண்டு தனி இரயில்வே கோட்டம் செயல்பட தொடங்கியுள்ளது. பாலக்காடு கோட்டத்தில் இருந்த தமிழக ரயில்வே பகுதிகள் இப்பொழுது சேலம் ரயில்வே      கோட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளது. சேலம் கமலாபுரத்தில் ஒரு விமானநிலையம் 1993 இல் அமைக்கபட்டது.
 படிமம்:Platform--salem town railway station-salem meet upDEC2011-Tamil Nadu587.jpg
சேலம் பல்வேறு கனிமவளங்கள் நிறைந்த இடம். இங்கு கிடைக்கும் இரும்பு தாதுவை பயன்படுத்தி இந்திய நடுவன் அரசின் செயில் (SAIL) நிறுவனம் சேலம் இரும்பாலையை அமைத்துள்ளது, இது தமிழ்நாட்டின் ஒரே உருக்கு ஆலை ஆகும். இந்தியாவில் மாக்னசைட் தாது பெருமளவு கிடைக்கும் இடங்களில் சேலமும் ஒன்று. டால்மியா & தமிழக அரசின் டான்மாங் (TANMAG - TAMILNADU MAGNESITE LIMITED) நிறுவனங்கள் மாக்னசைட் சுரங்கங்களை இங்கு அமைத்துள்ளன.அதிக அளவில் வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழில் இங்கு நடைபெறுகிறது.இது தவிர நூற்பாலை, வாகன உதிரிபாக ஆலை, சேகோ (சவ்வரிசி) ஆலை ஆகியவையும் உள்ளன.
 படிமம்:A photo of Salem Steel Plant entrance.JPG
ஒவ்வொராண்டும் நவம்பர் முதல் நாள் “சேலம் டே எனும் சேலம் தினம்” கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு நவம்பர் நான்காம் நாள் ஞாற்றுக்கிழமை அன்று சேலம் டி.வி.என் திருமண மண்டபத்தில் அது சற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. இண்டேக் மற்றும் தருணம் எனும் இரண்டு அமைப்புகள் சேலம் நகராட்சி உருவான இந்த நாளை கடந்த ஐந்து வருடமாக கொண்டாடி வருகிறது.
 
சேலம் மக்களின் வரலாறு, கலை, பண்பாடு, பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் விதமாகவும், அதன் அருமையை உணர்த்தும் விதமாகவும் இந்த விழாவை நடத்தினர். அனைத்து சேலம் மக்களுக்கும் இவ்விழாவிற்கு அழைப்பு கொடுத்துதிருந்ததால் அன்று முழுவதும் கலை கட்டியது அந்த அரங்கம்.
 
சேர்வராயன் மலைப் பகுதி தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்திற்கு அருகில் காணப்படும் மலைத்தொடர்ச்சியாகும். இது மலைத்தொடர்ச்சியிலிருந்து விலகி தனக்கென 400 ச. கி.மீ. பகுதியை ஆக்கிரமித்துள்ளது. வானியர் என்னும் பள்ளத்தாக்கு கிழக்கு மற்றும் மேற்கு மலைகளாக இவற்றைப் பகுக்கின்றன. இது 4000 - 5000 அடி கடல்மட்டத்தை விட உயரம் கூடுதலாகும். இந்த மலையில் இயற்கையின் ஊற்றாக நிறைய மரங்களும், மூலிகைச் செடிகளும், வன விலங்குகளும் இருக்கின்றன.
 படிமம்:Photograph of two men and two women of the Malaiyali tribe in the Shevaroy Hills in Tamil Nadu - 1860.jpg
மலையாட்கள் (மலையாளிகள் - மலை வாழ் பழங்குடிமக்கள்) மற்றும் வெள்ளாளர்கள் மிகுந்துக் காணப்படுகிறார்கள்.[1]. இம்மலையில் காப்பி(Coffee) என அழைக்கப்படும் வணிகப்பயிரும் விளைவிக்கப் படுகிறது. இதனுள் காணப்படும் ஏற்காடு மலைப் புகழ்பெற்ற சுற்றுலா மையமாகும்.
 படிமம்:A view of Kanjamalai.JPG
இது பண்டுக்காலத்தில் சேர மன்னன் நிலமாகவும் அவன் ஆண்ட நிலப்பகுதியாகவும் இருந்திருக்கக்கூடும். இதிலிருந்தே சேர்வராயன் என்றப் பெயர் மருவியிருக்கக் கூடும் என சொல்லப்படுகிறது.
 படிமம்:A view of Trisul.JPG
கஞ்சமலை என்பது சேலம் மாவட்டத்தின் சேர்வராயன் மலைத்தொடரை சார்ந்த ஒன்றாகும். சேலம் மாவடத்திலுள்ள சின்னசீரகபாடி என்ற கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த மலை அதிகம் சித்தர்கள் வாழ்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது.[1] இந்த மலையில் சடையாண்டி சித்தர் வாழ்ந்ததற்கான அடையாளம் காணப்படுகிறது.மேலும் சித்தர் கோவில்,வற்றாத நீருற்றைக் கொண்டுள்ளது. ஜெரகமலை, கொடுமலை, கல்ராயன் மலை, பச்சைமலை, மேட்டுர் மலை,  நகரமலை.
 படிமம்:A low angle view of Kanjamalai.JPG
ஏற்காடு என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மலை ஊராகும். இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள சேர்வராயன் மலையில் அமைந்துள்ளது. ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து 5326 அடி (1623மீட்டர்) உயரத்தில் உள்ளது. இதை ஏழைகளின் ஊட்டி என்றும் அழைப்பார்கள்.
 படிமம்:Yercaud lake.jpg
ஏரிக்காடு என்பதே ஏற்காடு என்று மருவி விட்டது. இது சேலத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
 படிமம்:Yercaud lake 2.JPG
பக்கோடா முனையிலிருந்து அழகாகத் தெரியும் ஒரு ஊர்.19ம் நூற்றாண்டில் சேலத்தில் தங்கியிருந்த ஆங்கிலேயர்கள் ஏற்காட்டைக் கண்டறிந்தார்கள். சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் காக் பர்ன் இங்கு காபி செடி, ஆப்பிள் போன்ற பழ வகைகளை அறிமுகப்படுத்தினார். 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKEk16ZinyuGOpcWDvs_-Tnm9mIdMRI0DLU7Tic9gba3B1GfexFu9YjSj8JK3kQnECb83uGclhG2bG3kbzztwd3-8fVHcEkA_KJnYgtMogPBwgsVCCEw-qiLepjRcITtmQaf9TrO3HWjU/s1600/3509-Pagoda-Point-of-Yercaud.jpg
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு சொர்க்கமாகும். மரங்களின் நிழலும் தென்றலின் சுகமும் வெயிலின் தாக்கத்தையும் மறைத்துவிடும் சூழல் கொண்ட ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
 http://www.grandpalaceyercaud.com/images/siteseeing-banner.jpg
சுமார் 383 சதுர கிலோ மீட்டர் கொண்ட ஏற்காட்டில் இயற்கை எழில் மிகுந்த குன்றும் அதையொட்டி அமைந்துள்ள ஏரியும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. மேலும் இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்காக்களும் இடம் பெற்றுள்ளன.
 http://upload.wikimedia.org/wikipedia/commons/2/22/Yercaud_Town.jpg
இங்கு அருவியில் குளித்து மகிழ கிள்ளியூர் நீர்வீழ்ச்சி எனும் அருவி ஒன்றும் உள்ளது. ஏற்காடு ஏரியில் நிரம்பினால் இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5342 அடி உயரத்தில் உள்ள மலைக் கோவில் மிகவும் பழமையான, பிரசித்திப் பெற்ற கோயிலாகும். இங்குள்ள பக்கோடா முனை எனுமிடத்திலிருந்து பார்த்தால் கீழுள்ள பகுதி மிக அழகுடன் காட்சியளிக்கிறது.
 http://www.tamilnalithal.com/wp-content/uploads/2013/08/Yercaud-Hill-station.jpg
ஊட்டி, கொடைக்கானல் சென்று கோடைக் காலத்தை கழிக்க வசதியில்லாத ஏழை எளிய நடுத்தர மக்கள் ஏற்காட்டில் மிகக் குறைந்த செலவில் நிறைந்த மகிழ்ச்சியைப் பெறலாம். லேடிஸ் சீட் என்னுமிடத்திலிருந்து மின் விள்க்குகளால் ஜொலிக்கும்.

http://lksthoughts.files.wordpress.com/2010/10/salem_from_yercaud.jpg
ஏற்காடு மலைப்பகுதியில் காபி பழம், பலவகையான பூக்களும், பல்வேறு விதமான மரங்களும் ஊள்ளன். பருவ காலங்களில் இங்கு உண்மையில் இயற்கையை அணுபவிக்க சிறந்த இடம்.





http://cms.outlookindia.com/Uploads/Outlook%20Traveller/20110401/list3_20110415(1).jpg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக