வியாழன், 24 அக்டோபர், 2013

சென்னைப் பல்கலைக்கழகம் ஒரு வரலாற்றுப்பார்வை - கோ.ஜெயக்குமார்சென்னைப் பல்கலைக்கழகம் ஒரு வரலாற்றுப்பார்வை - கோ.ஜெயக்குமார்சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இது, 5 செப்டம்பர் 1857ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. எனினும் இப்பல்கலைக்கழகம், நடுவண் அரசின் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டது. 

 படிமம்:UniMadras.png

மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக் கழகமாக விளங்கியது. இப்பொழுது சட்டம், பொறியியல், மருத்துவம் ஆகிய பிரிவுகள் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டு விட்டன.

 http://www.alagappauniversity.in/images/universities/madrasuniversity/elevation3.jpg

பல்கலைக்கழகம் என்பது உயர் கல்வியை வழங்கும், ஆய்வை மேற்கொள்ளும் ஒரு நிறுவனம். பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பையும் பட்டமேற்படிப்பையும் பல்கலைக்கழங்கள் வழங்குகின்றன. இந்தக் கல்வி மருத்துவம், சட்டம், பொறியியல், அறிவியல், கலை உட்பட பல துறைகளில் வேலை செய்வதற்கு அடிப்படை அறிவாக கருதப்படுகிறது. தமிழ்ச் சூழலில் பல்கலைக்கழகம் மேற்குநாட்டினரால் 19ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தது.

 http://upload.wikimedia.org/wikipedia/commons/d/d1/Senate_House_(University_of_Madras).jpg

சென்னைப் பல்கலைக்கழக பேரகராதி என்பது சென்னைப் பல்கலைக்கழகத்தால் தொகுத்து வெளியிடப்பட்ட ஒரு தமிழ் அகராதி. இது 1920 களில் ஏழு தொகுதிகளாக வெளிவந்தது. முதல் பதிப்பில் 117,762 சொற்கள் இருந்தன.[1]

 http://www.unom.ac.in/image/data/flashbanner/banner5.jpg

சென்னைப் பல்கலைக்கழக நூல்நிலையம், வில்லியம் கிரிபித் (William Griffith) என்னும் ஆங்கில அறிஞர் சென்னைப் பல்கலைக்கழகத்துக்குத் தரும்படி தமது உயிலில் எழுதி வைத்திருந்த 25 ஆயிரம் உரூபாயைக் கொண்டு, 1903-ல், நிறுவப் பெற்றது. இது தொடக்கத்தில், சென்னை எழும்பூரிலுள்ள அரசாங்கப் பொருட்காட்சிசாலையில் செயற்பட்டு வந்தது. 1928-ல், இது பல்கலைக் கழக செனட் கட்டடத்துக்கு மாற்றப்பட்டு, 1936 முதல் பல்கலைக்கழக அலுவலகத்தில் தனியாகவுள்ள நூல்நிலையப் பகுதியில் செயற்பட்டு வருகிறது.இந்நூல் நிலையத்தில் ஒரு பெரிய படிப்பறை, பத்திரிகையறை, நூலடுக்கறை, நூற்பட்டியறை, அலுவலகவறைகள் முதலியன உள்ளன.

 http://www.unom.ac.in/uploads/library/mul/mul.jpg

நூலடுக்குப் பகுதி 130 அடி நீளமும், 30 அடி அகலமுடையது. நான்கு மாடிகள் கொண்டது. இவற்றிலுள்ள அலமாரிகளை நீளத்தில் சேர்த்து வைத்தால் இரண்டு மைல் நீளமிருக்கும்.நூற்பட்டியறையில் ஒவ்வொரு தட்டிலும், 1500 சூசிச்சீட்டுகள்(Index cards) கொண்ட 336 தட்டுகளுடைய பெட்டிகள் உள்ளன.

 https://www.ideunom.ac.in/ideold/images/university.jpg

இந்நூல் நிலையத்திலுள்ள நூல்கள், பத்திரிகைகள் ஆகியவற்றின் எண்ணிக்கை ஏறக்குறைய 1,82,000. இவை தவிர, தேசப்படங்கள் சு.2200-ம், பல்லைக்கழகம் ஏற்றுக்கொண்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள்(Thesis) சு.820-ம் வேறு சில அறிஞர் அளித்த அரிய நூல்களும் உள்ளன. நூல்நிலையம் தருவிக்கும் பத்திரிகைகள் ஏறக்குறைய 2,700 ஆகும். இவற்றில் தலைசிறந்தவற்றின் முந்திய பல ஆண்டுகளில் வெளியான பத்திரிகைகளும் உள்ளன. கணிதமேதை இராமனுசன், அறிஞர் எல்.டி. சுவாமிக்கண்ணுப்பிள்ளை ஆகியோரின் அரிய கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன.

http://farm3.static.flickr.com/2341/2098207452_e341801b04_b.jpg

இந்நூல்நிலையம் ஆண்டுதோறும் ஏறக்குறைய 8000 புதிய நூல்கள் வாங்கிச் சேர்க்கின்றது. சென்னைப் பல்கலைக்கழகம் தன் வெளியீடுகளான நூல்களையும், பத்திரிக்கைகளையும் இந்தியாவிலும் பிற நாடுகளிலுமுள்ள பல பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிவைக்கிறது. அவற்றிற்கு மாற்றாக அப்பல்கலைக்கழகங்கள் தங்கள் வெளியீடுகளான நூல்களையும் பத்திரிகைகளையும் இந்நூல் நிலையத்திற்கு அனுப்பிவருகின்றன.

 http://upload.wikimedia.org/wikipedia/commons/9/93/University_of_Madras_102.JPG

மெட்ராசில் உயர்கல்வி பற்றி 19ஆம் நூற்றாண்டில் அதிகளவில் விவாதிக்கப்பட்டது. அதன் விளைவாகப் பிறந்ததுதான், 150 ஆண்டுகளைக் கடந்து இன்றும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் சென்னைப் பல்கலைக்கழகம்.

 
http://photos1.blogger.com/hello/273/4422/320/University%20of%20Madras%20Stamps%20100%20yr.jpg


ஆங்கிலேயர்கள், மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா என இந்தியாவின் மூன்று துறைமுக நகரங்களில் கோலோச்சிக் கொண்டிருந்தனர். அதனால் இந்த மூன்று நகரங்களிலும் அவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. இந்நகரங்களில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர்கள், தங்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வி கிடைக்க வகை செய்ய வேண்டும் என எண்ணினர்.

 http://www.thehindu.com/multimedia/dynamic/01048/10_MP_UNIVERSITY_1048379g.jpg

இதுபற்றிய விவாதங்களும் அடிக்கடி நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக, 1854ம் ஆண்டு சார்லஸ் உட் என்பவர் கல்வி தொடர்பாக அரசுக்கு ஒரு குறிப்பு எழுதினார். அதன் பயனாக, 1855ம் ஆண்டு மதராஸ் அரசு ஒரு தனியார் கல்வித்துறையை உருவாக்கியது.
 அப்போது இந்தியாவில் இருந்த கல்விச்சூழல் கிழக்கிந்திய கம்பெனியை மையமாகக் கொண்டே அமைந்திருந்தது. திறமையான கிளார்க்குகளை உருவாக்க ஆங்கிலேயர்களுக்கு ஒரு கல்விமுறை தேவைப்பட்டது. இந்தியர்கள் தாங்கள் சொல்வதை புரிந்துகொண்டு பணியாற்ற வேண்டும் என்பது மட்டுமே இந்த கல்வியின் நோக்கமாக இருந்தது. அதற்கேற்ப பாடத்திட்டங்களை உருவாக்கி, அதற்கு உயர்கல்வி என்று பெயரிட்டார்கள்.
http://www.unom.ac.in/image/data/flashbanner/banner2.jpg
அதற்கு முன்பு வரை, இந்தியாவில் வீட்டிலேயே கற்றுக் கொள்ளும் திண்ணைக்கல்வி, குருகுலத்திற்கு சென்று குருவிற்கு பணிவிடை செய்து கற்றுக் கொள்ளும் குருகுலக்கல்வி, இதையும் விட்டால் சான்றிதழ் கல்வி ஆகியவைதான் நடைமுறையில் இருந்தன. கிழக்கிந்தியக் கம்பெனி நுழைந்தவுடன் தங்களுக்கான வேலையாட்களை தயார் செய்ய உயர்கல்வி(!) முறையை அறிமுகம் செய்தனர்.
http://media.newindianexpress.com/article1409122.ece/alternates/w460/Madras_university_EPS.JPG
இந்த கல்விக்கான பாடத்திட்டங்களை மெக்காலே என்பவர் தயாரித்தார். இவர் அளித்த குறிப்புகளின் அடிப்படையில்தான் கிழக்கிந்தியக் கம்பெனி பள்ளிகளில் பாடங்கள் நடத்த உத்தரவிட்டது. அதன்படி ஐரோப்பிய இலக்கியம், அடிப்படை அறிவியல் போன்ற பாடங்கள் கற்பிக்கப்பட்டன. குறிப்பாக இந்த பள்ளிகளில் ஆங்கிலத்தை கற்றுக் கொண்டதால்தான், இந்தியர்களால் அன்றைக்கு ஆங்கில அரசில் வேலை செய்ய முடிந்தது. நீதிமன்றங்களில் ஆங்கிலத்தில்தான் வாதாட வேண்டும் என்ற சட்டமும் அந்த காலகட்டத்தில்தான் (1837 ஆம் ஆண்டு) கொண்டு வரப்பட்டது.
http://www.unom.ac.in/asc/images/band-img.jpg
இந்த ஆங்கிலக் கல்வி கூடங்களில் படித்த இந்தியர்களின் எண்ணிக்கை மெல்ல உயரத் தொடங்கியது. இந்தியர்கள் ஆங்கிலத்தை சிறப்பாக படிப்பதைப் பார்த்து வியந்து போன கிழக்கிந்தியக் கம்பெனி, அவர்களுக்கு உயர்பதவிகளை வழங்க முன்வந்தது. இதற்கான ஆணையை 1849ஆம் ஆண்டில் ஹார்டிங் பிரபு பிறப்பித்தார். இந்தியர்களில் சிலர் இப்படி உயர் பதவி பெற்று வளமாக வாழ்வதைக் கண்ட மற்றவர்களுக்கும் தாங்களும் அதுபோல் ஆக வேண்டும் என்ற ஆசை பிறந்தது. ஆங்கில கல்வி உயர்ந்தது என்ற மனநிலை வேகமாகப் பரவ ஆரம்பித்தது.
 http://www.alagappauniversity.in/images/universities/madrasuniversity/elevation3.jpg
இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான், 1854ஆம் ஆண்டு ஜுலை 19ஆம் தேதி, அப்போதைய இந்திய கல்வி கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த சார்லஸ் உட், அந்த கல்விக் குறிப்பை எழுதினார். அதற்கு முன்னரே, மெட்ராஸ் மாகாணத்தில் ஒரு உயர்கல்வி நிறுவனம் தேவை என வலியுறுத்தி 70 ஆயிரம் பேர் கையெழுத்திட்ட ஒரு மனு, அப்போதைய ஆளுநர் லார்ட் எல்பின்ஸ்டோனிடம் 1839இல் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து அப்போதைய அட்வகேட் ஜெனரல் ஜார்ஜ் நார்டனை தலைவராகக் கொண்டு, 1840ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பல்கலைக்கழக போர்டு ஒன்று அமைக்கப்பட்டது.
https://www.ideunom.ac.in/Images/pillai.jpg
இதனிடையே 1857ஆம் ஆண்டில் மெட்ராஸ், கல்கத்தா, பாம்பே ஆகிய பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அந்நாட்களில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் உயர்கல்வி தென்னிந்தியா முழுவதும் பரவியிருந்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் படிப்பது மிகுந்த கவுரமான விஷயமாக பார்க்கப்பட்டது. 1858ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 1956ஆம் ஆண்டு சென்னை தனி மாநிலமாக உருவாகும் வரை தென்னிந்தியா முழுவதிலும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் உயர்கல்வி அதிகாரம் பரவியிருந்தது.
http://upload.wikimedia.org/wikipedia/commons/2/29/University_of_Madras_campus_in_Triplicane.jpg
பின்னாட்களில் பல்கலைக்கழகம் பல்கிப் பெருகியதும், இதிலிருந்து மைசூர் பல்கலை(1916), உசுமானியா பல்கலை(1918), ஆந்திர பல்கலை(1926), அண்ணாமலை பல்கலை(1929) என பல பல்கலைக்கழகங்கள், சேய் பல்கலைக்கழகங்களாக உருவெடுத்தன.
http://farm7.staticflickr.com/6040/6229668396_2ddfa706a9_z.jpg
பல்கலைக்கழகத்தில் இருக்கும் பாரம்பரியமிக்க செனட் இல்லம் (Senate House ) எனப்படும் ஆட்சிப் பேரவை மன்றக் கட்டடம் இந்தியாவின் சிறந்த இந்தோ-சராசனிக் பாணி கட்டடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 
 http://farm5.staticflickr.com/4068/4660100293_881d5d24f0_z.jpg
மெட்ராஸ் அரசாங்கம் இந்த கட்டடத்தை கட்டுவதற்கு முன், இதனை சிறப்பாக வடிவமைக்க விரும்பி 1864இல் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்திருக்கிறது. நிறைய பேர் தங்களின் கட்டட வரைபடங்களை அனுப்பி வைக்க, இறுதியில் இந்தோ-சராசனிக் பாணியில் கைதேர்ந்த ராபர்ட் சிஸ்ஹோம் (அருகில் உள்ள மாநிலக் கல்லூரியும் இவர் கட்டியதுதான்) என்ற பொறியாளரின் வரைபடம் தான் தேர்வு செய்யப்பட்டது.
http://www.unom.ac.in/uploads/library/gcl-opac/guindylibrary.jpg
இந்த கட்டடத்திற்கான பணிகள் 1874ஆம் ஆண்டு தொடங்கி 1879ஆம் ஆண்டு நிறைவுபெற்றது. காலத்தின் கோலத்தால் சிதிலமடைந்துபோன செனட் இல்லம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் இருந்தது. பின்னர் புதுப்பிக்கப்பட்டு தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. பட்டமளிப்பு விழாக்கள், சர்வதேச மாநாடுகள், இரண்டாம் எலிசபெத் ராணிக்கு வரவேற்பு, மிகச்சிறந்த இசைக் கச்சேரிகள் என பல நிகழ்ச்சிகளை இந்த கட்டடம் பார்த்திருக்கிறது.
http://d2yhexj5rb8c94.cloudfront.net/sites/default/files/mediaimages/gallery/2013/Aug/4pic-8.jpg
இந்தியாவின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு சென்னைப் பல்கலைக்கழகம் அரும்பெரும் தொண்டாற்றி வருகிறது. அரசியல் மேதைகள், திரைக் கலைஞர்கள், தொழிலதிபர்கள், துணைவேந்தர்கள், தமிழறிஞர்கள், பேராசிரியர்கள் என பலதரப்பட்ட பெருமக்களை இந்த பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.
http://mw2.google.com/mw-panoramio/photos/medium/77464945.jpg
சென்னைப் பல்கலைக்கழகம் இதுவரை ஏறத்தாழ மூன்று கோடிக்கும் அதிகமான மாணவ, மாணவியரை உலகிற்கு அளித்திருக்கிறது. மொத்தத்தில், எதிர்புறம் உள்ள வங்கக் கடலுக்கு போட்டியாக இந்த கல்விக் கடலும் 150 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் இளமை மாறாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. 
 http://farm9.staticflickr.com/8226/8582814839_c4ec61c87f_b.jpg
1937ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாண சட்டப்பேரவைக் கூட்டம் செனட் இல்லத்தில்தான் நடைபெற்றது. 1957ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அச்சமயம் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் 128 கல்லூரிகள் இணைக்கப்பட்டிருந்தன.
 http://www.frontline.in/static/html/fl2111/images/20040604006211101.jpg
வங்கக் கடலின் கரையோரம் 153 ஆண்டுகளாக பாரம்பரியச் சின்னமாக ஓர் ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது சென்னை பல்கலைக்கழகம். இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த மூன்று பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இப்பல்கலைக்கழகம் திகழ்கிறது.
 http://1.bp.blogspot.com/-3fZgC1gAaXQ/Traz1KP7d3I/AAAAAAAACDM/PJ45u8NhbNk/s320/20111106a_0111030022.jpg
இன்றைய தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், ஒரிசா,மகாராஷ்டிர  மாநிலங்களின் சில பகுதிளை உள்ளடக்கிய அன்றைய சென்னை மாகாண மாணவர்களின் உயர்கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, 1857-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி தொடங்கப்பட்டது சென்னைப் பல்கலைக்கழகம்.  தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் தாய் பல்கலைக்கழகம் என்ற பெருமையை இப்பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.
 http://images.travelpod.com/tripwow/photos2/ta-03a2-33c6-f5a1/university-of-madras-chennai-madras-india+13231765281-tpfil02aw-3387.jpg
பழமையும் பெருமையும் வாய்ந்த இந்தப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் கிறிஸ்டோபர் ராலின்சன். இவர் சென்னை நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

அவரைத் தொடர்ந்து வால்ட்டர் எலியட், கே. ஸ்ரீநிவாச ஐயங்கார், நீதிபதி எப்.டி. ஓஸ்ட்ஃ பீல்ட், முகமது உஸ்மான், ஏ. லட்சுமணசுவாமி முதலியார், நெ.து.சுந்தரவடிவேலு, மால்கம் ஆதிசேஷய்யா என பலர் துணைவேந்தர்களாக இருந்துள்ளனர். 42-வது துணைவேந்தராக க. திருவாசகம் இப்போது இருந்து வருகிறார்.
 http://bharatdiscovery.org/w/images/7/72/University-of-Madras-1.jpg
இவர்களில் அதிக ஆண்டுகள் துணைவேந்தராக இருந்தவர் என்ற பெருமை  ஏ. லட்சுமணசுவாமி முதலியார் பெற்றுள்ளார். இவர் 1942 முதல் 1969 வரை தொடர்ந்து 27 ஆண்டுகள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்துள்ளார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கி, சுதந்திரத்துக்குப் பிறகும் துணைவேந்தர் பொறுப்பை இவர் தொடர்ந்துள்ளார்.
 http://1.bp.blogspot.com/_nz0Jt1GtEmc/ScpV_gr-WEI/AAAAAAAABKw/qjIyfcgu-fg/s400/madras.JPG
மால்கம் ஆதிசேஷய்யா துணைவேந்தராக இருந்த காலம்தான், சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொற்காலம் எனக் கூறப்படுகிறது. இவர் துணைவேந்தராகப் பதவி வகித்த 1975-78 கால அளவில் சென்னைப் பல்கலைக்கழகத் துறைகளின் எண்ணிக்கை 29-லிருந்து 52 ஆக அதிகரித்தது. ஊடகவியல், கல்வியியல் மற்றும் உயிரி மருத்துவ அறிவியல் உள்ளிட்ட புதுத் துறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
 http://i1.trekearth.com/photos/76270/madras_univ.jpg
இவருடைய காலகட்டத்தில் கல்லூரி அளவில் இருந்த பி.யு.சி., பிளஸ்-2 என பள்ளி அளவில் கொண்டு செல்லப்பட்டது.
 
எம்.ஐ.டி. பேராசிரியரான சாதிக், 1990-ல் துணை வேந்தராகப் பொறுப்பேற்ற பின்னர் சென்னை பல்கலைக்கழகம் தொழில்நுட்ப அளவில் வளர்ச்சி பெற்றது. பல்கலைக்கழகத் தேர்வு உள்ளிட்ட பல்வேறு நடைமு றைகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டது இவருடைய காலகட்டத்தில்தான். துணைவேந்தர் இன்னாசிமுத்து காலத்தில் பல்கலைக்கழக அறிவியல் துறை நவீனமயாகியுள்ளது. இவருடைய முயற்சியின் மூலம் மூலிகைத் தாவர ஆராய்ச்சிக்காக மத்திய அரசிடமிருந்து ரூ. 30 கோடி நிதி பல்கலைக்கழகத்துக்கு கிடைத்தது.
 http://www.cultcha.org/archives/pics/Indiachennaiunistartrek-thumb.jpg
பல்கலைக்கழகம் இன்று
1912-ல் 17 துறைகள் 30 ஆசிரியர்களுடன் செயல்பட்டு வந்த சென்னை பல்கலைக்கழகம் அதன் பிறகு படிப்படியாக வளர்ச்சியடைந்து இப்போது 72 முதுநிலைப் பட்டப் படிப்புத் துறைகள், 152 இணைப்புக்கல்லூரிகள், 52 அனுமதிக்கப்பட்ட ஆராய்ச்சிக் கல்வி நிறுவனங்கள் என அபார வளர்ச்சி கண்டுள்ளது. இது மட்டுமின்றி பல்கலைக்கழகத்தில் 1981-ம்
ஆண்டு தொடங்கப்பட்ட தொலைதூரக் கல்வி நிறுவனம் மூலம், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் பட்டம் பெற்று வருகின்றனர். 22 இளநிலை பட்டப் படிப்புகள், 20-க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டப்படிப்புகள், 5 தொழில் படிப்புகள், 11 பட்டயப் படிப்புகள் மற்றும் 12 சான்றிதழ் படிப்புகள் தொலைதூரக் கல்வி நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக