செவ்வாய், 19 நவம்பர், 2013

பண்டைய தமிழர்களின் போர்முறை - கோ.ஜெயக்குமார்

பண்டைய தமிழர்களின் போர்முறை - கோ.ஜெயக்குமார்
தமிழர்களின் போர்முறை அறப்போர்முறை ஆகும். தமிழிசை புத்துயிர் பெற்று வரும் இன்றைய சூழலில் நம்முடைய பண்டைய தமிழிசைக் கருவிகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். உண்மை மாதமிரு இதழில் (ஜனவரி1631/2010) வெளிவந்துள்ள இது பற்றிய தகவல்களை இங்கே காண்போம்.
http://tamilgrande.files.wordpress.com/2012/05/moovendar1.jpg?w=300
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் “”செந்தமிழ்ச் சிறப்பு”  நூலில் இடம் பெற்றுள்ள செய்திகளை மேற்க்கோள் காட்டி இத்தகவல்களை உண்மை இதழ் வெளியிட்டுள்ளது.
இதோ அதன் விவரம்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvo5mXYdPiOfbGxIaBBzkrymEryXzi1tJi-3qrFUjMm0aPVG_LH_oUYPJgkmYP3ZQ8PJhJ_Nw2oOR7xccEtTqdK-gvBRcUWarm93bL8IcF7ZBN1e_f55O8b64PDdpz5TrAJj-AKExXI-Z0/s1600/026.JPG
கருவிகள், தோற்கருவி, துளைக்கருவி, நரப்புக்கருவி, தாளக்கருவி (கஞ்சக்கருவி) என நான்கு. அவற்றுள், தோற்கருவிகள் “”பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, மதி (சந்திர) வளையம், மொந்தை, முரசு, கண்விடுதூம்பு, நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரவேறு, பாகம், துணையுறுப்பு (உபாங்கம்), நாழிகைப்பறைகூடி, பெரும்பறை” முதலியவாகப் பல்வகைப்படும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhispwycZ5LVHqN7xkYr9Q8hzES_5oVq_uWhcys7cI0IIEquW_61U_4HYzZNytT31EnH6R1r5SKWNvBb_PCYBGT0AoomK84_BaR-0iY2STMXgL1eHkK3PvzY-Ji6bf97i8nWhzYnUWcys0/s1600/Bangalore+Bhacan.Panel.jpg
இவை அகமுழவு, அகப்புறமுழவு புறப்புறமுழவு,  பண்ணமை முழவு, நாண்முழவு, காலை முழவு என ஏழு வகைப்படும். மீண்டும் பாட்டுறுப்பு (கீதாங்கம்), கூத்துறுப்பு (நிருத்தாங்கம்), பொதுவுறுப்பு (உவயாங்கம்) என மூவகைப்படும். துளைக்கருவி புல்லாங்குழல் நாகசுரம் முதலியன. நரப்புக்கருவி, பல்வகைத்து, அவற்றுள், பேரியாழ் (21 நரம்பு), மகரயாழ் (19 நரம்பு), சகோடயாழ் (14 நரம்பு), செய்கோட்டியாழ் ( 7 நரம்பு) என்பன பெருவழக்கானவை.

இவற்றுள் செங்கோட்டியாழே இது போதுள்ள வீணை. நரப்புக் கருவிகட்கெல்லாம் யாழ் என்பது பொதுப் பெயர். 
http://www.vikatan.com/jv/2012/11/mzniod/images/p30b.jpg
வீணை என்னும் பெயர் பிற்காலத்தது, பழமலை (முதுகுன்றம்), மறைக்காடு முதலிய தமிழகத்தூர்ப் பெயர்கட்குப் பதிலாக விருத்தாசலம் வேதாரணியம் முதலிய வடமொழிப் பெயர்கள் வழங்குவது போன்றே,  யாழ் என்னும் தமிழ்ச் சொற்குப் பதிலாக வீணை என்னும் வடசொல் வழங்கி வருகின்றது. யாழ்கள் செங்கோடு (சிவப்பு தண்டி), கருங்கோடு (கறுப்புத் தண்டி) என இருநிறத் தண்டிகளையுடைய வையாயிருந்தன.
http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2013/07/aa861.jpg
செங்கோட்டையுடைய யாழ் செங்கோட்டியாழ், “”கருங்கோட்டுச் சீறியாழ்” எனப் புறப்பாட்டில் வருதல் காண்க. ஆங்கிலத்தில்  Fiddle எனப்படும். கின்னரி தமிழகத்தினின் மேனாட்டிற்குச் சென்றதே. இதை மேனாட்டாரும் ஒப்புக் கொள்கின்றனர்.
இஃது இராவணனால் மிகுதியாய்ப் பயிலப்பட்ட தென்றும், அதனால் “இராவணாசுரம்’ எனப்பட்டதென்றும், ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சிலர் மிடற்றையுங் கருவியாகக் கொண்டு கருவி அய்ந்தென்பர். 
http://upload.wikimedia.org/wikipedia/commons/f/f3/Boys_King_Arthur_-_N._C._Wyeth_-_p306.jpg
 மிடறு= தொண்டை, வாய்ப்பாட்டுக் கருவி, மேற்கூறிய கருவிகளையெல்லாம். தொன்று தொட்டுச் செய்து வந்த வரும் இயக்கி வந்தவரும் தனித் தமிழரே. அவர் பாணர், மேளக்காரர் (நட்டுவர்) என இரு வகுப்பினர். இசைத் தெய்வத்திற்கே மாதங்கி (பாடினி) என்று தான் பெயர். அடேயப்பா! இவ்வளவு தமிழிசைக் கருவிகளா? இச்செய்திகள் மூலம் நம் தமிழிசையின் சிறப்புடன்  தேவநேயப் பாவாணரின் அரிய தமிழாய்வு முயற்சிகளையும் நம்மால் ஓரளவுக்கு தெரிந்து கொள்ள முடிகிறது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoLwBCBZEaCQ7tZwLzX1T5OxDXC2cr1vdiUZ3Hyth2FPKxtr9hZ2Hrl4G1YyrFt8wAajcDo9ezoMf7oUQBMFS5YdC9MIfr55trap4OvBop68L3bCBq_PgSbb7BaMzyXv55BFOTKwpYUFs/s1600/mm4.jpg
* அவர்களின் போர்முறை வஞ்சகம், சூழ்ச்சி, அடுத்துக் கெடுத்தல் அற்றதாக நேரானதாக இருந்துள்ளது.
* காலை முரசறையத் தொடங்கும் அவர்களின் போர் மாலை முரசறைய நிறுத்தப்படுவதாக இருந்துள்ளது.
* முழுஇரவு ஓய்விற்குப் பின் மீண்டும் அடுத்தநாள் காலை தொடங்கும் அவர்களின் போர்முறை எதிரிகளுக்கு இரங்கும் நெஞ்சம் உடையதாக, எதிரிகளுக்குத் தக்க வாய்ப்பளிக்கும் போக்கினதாக அமைந்திருக்கிறது.
* இன்று போய் போர்க்கு நாளை வா என்று இராவணனை அனுப்பிய இராமனின் உள்ளம் தமிழர் போர் பண்பாட்டின் வழிப்பட்டதாகக் கம்பரால் வரையப் பெற்றதாகும்.
* எதிர் குழுவினரையும் தம்மொடு ஒத்த மனித உள்ளமாக, மனித உடலாகக் கொண்டு தமிழர்கள் போர் செய்துள்ளனர்.
* அவர்கள் தன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தைப் போலவே பிறன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தையும் கண்டுள்ளனர்.


இதன்மூலம் போர்க்களம் என்பது கொலைக் களமாக மட்டும் விளங்காமல் துயரம் கண்டு இரங்கும் களமாகவும் இருந்துள்ளது. இவ்வகைப்பட்ட போரை நடத்திட தமிழர்க்குப் பல போர்க் கருவிகள், பல திட்டங்கள் உதவி புரிந்திருக்க வேண்டும். அவர்கள் இவ்வகைக் கருவிகளை உருவாக்கி, அவற்றைப் பயன்படுத்திடக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். தமிழர் இத்தகைய போர் அறிவியலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தமைக்கான சான்றுகள் பண்டை இலக்கண நூலான தொல்காப்பியம் முதலாக கிடைக்கப் பெறுகின்றன.
http://upload.wikimedia.org/wikipedia/ta/8/8b/Madras_famine_1877.jpg
தமிழர் தொல்காப்பிய காலந்தொட்டே போர்க் கருவிகளைக் கையாள்வதிலும். அவற்றை வடிவமைத்துக் கொள்வதிலும் பழக்கமுடையவராக இருந்துள்ளனர். மேலும் தமிழர்களின் எயில் போர் மிகச் சிறப்பு வாய்ந்த்தாக இருந்துள்ளது. எயிலிடத்து பல கருவிகளை அவர்கள் பரப்பிப் போர் செய்துள்ளனர். தமிழர் பயன்படுத்திய மரபுசார் போர்க் கருவிகளை இரண்டு வகைகளாக பகுத்துக் கொள்ள இயலும்,

அவை:
1. இயல்புப் போரில் பயன்படுத்தப் பெறும் வாள், வேல், வில் ஆகிய முப்போர்க்கருவிகள்.
2. எயிற்போர்க்கருவிகள் என்பனவாகும்.
இவற்றுள் இயல்புப்போர் (அதாவது ஒருவகையில் தும்பைத் திணைப் போர்) என்பது மட்டும் இங்கு எடுத்துக் கொள்ளப் பெற்று விளக்கப்படுகிறது.
http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2013/09/OpiumWarCousinMontaubanCampaignOf1860Wiki.jpg
மன்னர்களும் அவர்களின் போர்க்கருவிகளும்
* "மன்னன் வழித்தே மலர்தலை உலகம்" என்ற அற்றை மொழிக்கு ஏற்ப மன்னர் தம் வழித்ததாக அற்றைத் தமிழக மக்கள் செயல்பட்டனர்.
* அவர்களின் பாதுகாப்பு கருதி மன்னர்கள் போர்ப் படைகளை வைத்திருந்தனர்.
* நால் வகைப் படைகள் - மன்னர்களால் அமைக்கப் பெற்றிருந்தன.
* இம்மன்னர்கள் பொன், பொருள், நிலம், பாதுகாப்பு முதலானவற்றில் ஏதேனும் ஒரு காரணம் பற்றிப் போர் தொடங்குகையில் ஊருக்கு அல்லது வீட்டிற்கு இத்தனைபேர் என்ற நிலையில் ஆண்கள் போரில் கலந்து கொண்டனர்.
* களிறு, தேர், நடைநவில் புரவி ஆகிய இணைய நாற்படை கொண்டிருத்தல் அரசரின் இலக்கணமாகிறது.
* கொடி, குடை, முரசு, தார் (மாலை), முடி(மணிமுடி), செங்கோல் முதலியன மன்னர்க்குரிய மற்ற அடையாளச் சின்னங்களாகும். இவற்றுள் குடை, முரசு ஆகியன போர்க் கருவிகளாகவும் கொள்ளத் தக்கனவாகும். எனவே நாற்படை உடைய அரசன் அப்படைகளைப் பெருக்கி, மக்களை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ வழி செய்ய வேண்டிய கடப்பாடு உடையவனாக விளங்க வேண்டும் என்பது தொல்காப்பியர் காலத்திலேயே மன்னர்க்குரிய முறையாக இருந்தது என்பது தெரிய வருகிறது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtynhk2eU4T5KXDOJAFL7IWH1LwRfsv0KVflYpVr3JrPAN95DajGb7iHWEjnNF-bVs0W4oyekY6hya_obKyZDeHFwIHHbQHoSM-wqChngDGfYpXEAHE5h36lmqjHDLGgZAVE9oPcNCnC8/s1600/Trouw+article+14-8-13+017.jpg
மன்னர் பின்னோர்
மன்னர் பின்னோராக விளங்கும் ஏனைய மக்கள் வில், வேல், கழல், கண்ணி, தார், மாலை, தேர், குதிரை ஆகியன கொண்டு போர் புரிந்தனர். தேர், குதிரை ஏறிப் போர் புரியும் வீரர்கள் வில், வேல் ஆகியன கொண்டு போர் புரிவர். இவ்வகையில் போர்க் கருவிகளில் முக்கிய இடம் வகிக்கும் வாள், வில், வேல் முதலியன குறித்த சிறப்புச் செய்திகள் பல தமிழிலக்கியங்கள் வாயிலாக கிடைக்கின்றன.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuq31QbMTctko7KBiGPQjGCEVXzy4EVX04lNJmxBhUg1fohLgM1ce376vx7BIa-CSan7TJtVX3aqiB3B6Lx_Xkrq4bVGeZzwKW7oIIUlmBjoUkLGkL25BXh6a7ibFkxSjwI06XQFivvIw/s1600/malar+%25282%2529.jpg
தமிழரின் முப்போர்க்கருவிகள்
*தொல்காப்பிய காலம் முதலாக தமிழர் மூன்று போர்க் கருவிகளை முதன்மையானதாகக் கையாண்டு வந்துள்ளனர். அவை வாள், வில், வேல் என்பனவாகும்.
*இவற்றுள் வாள் என்னும் போர்க்கருவி நெருங்கி நின்று போர் செய்கையில் பயன்படுத்தப் படுவதாக இருந்துள்ளது.
*வில்லும் வேலும் பகைவரை தூரத்தில் இருந்து தாக்கப் பயன்பட்டுள்ளது.
*இம் முதன்மைக் கருவிகள் தவிர வேறு சில கருவிகளும் தமிழர்களால் பயன்படுத்தப் பட்டுள்ளன. அடார், அரம், அரிவாள், ஆயுதக்காம்பு, எஃகு, கண்ணாடி தைத்த கேடகம், கணிச்சிப்படை, கலப்பை, கழிப்பிணிப் பலகை, காழெஃகம், கிளிகடிகருவி, குந்தாலி, குறடு, கேடகம், கோடாலி, சக்கரம், சிறியிலை எஃகம், சேறுகுத்தி, தறிகை, துடுப்பு, நவியம், படைவாள், பூண்கட்டிய தண்டு, மழு, வாள், வில், வேலுறை ஆகிய கருவிகளையும் தமிழர் பயன்படுத்தியதாக புறநானூற்றின் முன்னுரையில் உ,வே, சாமிநாதைய்யர் குறிப்பிடுகின்றார்.
*மேலும் போர்க்கருவிகள் தம்மை ஊறு செய்யாவண்ணம் காக்க கரடித்தோல் மற்றும் புலித்தோலாற் செய்யப்பட்ட கேடயமென்னும் கருவிகளை பயன்படுத்தியதாக கந்தையாப்பிள்ளை குறிப்பிடுகின்றார்(தமிழகம், ப,176).
வாள்
வாள் என்பது ஆண்களுக்கு மிகுதியாகப் பயன்படும் போர்க்கருவி என்றாலும் அதனைப் பெண்களும் கையாண்டுள்ளனர்.

வேல்
வேல் - முருகக் கடவுளின் கருவியாக சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ளது. வேல் என்னும் போர்க்கருவி அதிக அளவில் பயன் படுத்தப்பட்டுள்ளன.

வில்
வில், அம்பு, அம்பறாத்தூணி இவை மூன்றும் அமைந்த கூட்டுக் கருவியாக தமிழர்கள் வில்லைப் பயன் படுத்தியுள்ளனர்.

படைக்கலக் கொட்டில்- தொழிற்கூடம்
சங்ககாலத் தமிழர் போர்க் கருவிகளைப் பெரும்பாலும் இரும்பால் ஆக்கி கொண்டனர். அவற்றைப் புதிதாக உருவாக்கிட, சீர் செய்ய உலைக் கூடங்களை அவர்கள் அமைத்துக் கொண்டனர்

படைவீடு
போரில் வெற்றி பெற்ற பின் வென்ற வீரர்கள் தோற்ற நாட்டில் படைவீடு அமைத்துத் தங்குவர். அந்தப் படைவீடு உறுதி ஒழிந்த, சிதைந்த போர்க் கருவிகள் கொண்டு கட்டப் பெற்றிருக்கும். உடைந்த போர்க் கருவிகளின் பகுதிகள் தூணாக மாற்றப் பெற்று, கயிற்றால் அவை இறுக பிணைக்கப் பெற்று குந்தம், கிடுகு முதலானவை தடுப்புச் சுவர்களாகவும் துணிகள் கூரைகாளகவும், அமைக்கப் பெற்றிருக்கும்.சங்கம் மருவிய காலத்திலும் இம்மூவகைக் கருவிகள் பெருமளவில் பயன்படுத்தப் பெற்றுள்ளன.
"தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்" என்ற குறளில் காட்டப்பெறும் தொடர் வஞ்சகமாக பழிதீர்க்கும் பான்மை திருவள்ளுவர் காலத்தில் இருந்தமையை எடுத்துரைப்பதாகும். சங்க காலத்தில் நிலவிய போர்த் தூய்மை இக்காலம் முதல் திரியத் தொடங்கியது என்பதற்கு இக்குறள் சான்றாகிறது.
http://www.ndpfront.com/wp-content/uploads/2011/10/Suva01.jpg
பண்டையப் படைகளை 19 பெயர்களில் பிரித்து அதன் அடக்கம், அவற்றில் தேர், யானை, குதிரை காலாள் எத்தனை இருக்க வேண்டும் என்று ஒரு கணக்கும் வைத்திருந்திருக்கின்றனர்.
எண்
பெயர்
அடக்கம்
தேர்
யானை
குதிரை
காலாள்
1
பதாதி
...
1
1
3
5
2
சேனாமுகம்
3 பதாதி
3
3
9
15
3
குமுதம்
3 சேனாமுகம்
9
9
27
45
4
கணகம்
3 குமுதம்
27
27
81
135
5
வாகினி
3 கணகம்
81
81
243
405
6
பிரளயம்
3 வாகினி
243
243
729
1215
7
சமுத்திரம்
3 பிரளயம்
729
729
2187
3645
8
சங்கம்
3 சமுத்திரம்
2187
2187
6561
10935
9
அநீகம்
3 சங்கம்
6561
6561
19683
32805
10
அக்ரோணி
3 அநீகம்
19683
19683
59049
98415
11
ஏகம்
8 அக்ரோணி
157464
157464
472392
787320
12
கோடி
8 ஏகம்
1259712
1259712
3779136
6298560
13
மாசங்கம்
8 கோடி
10077696
10077696
30233088
50388480
14
விந்தம்
8 மாசங்கம்
80621568
80621568
241864704
403107840
15
மாகுமுதம்
8 விந்தம்
644972544
644972544
1934917632
3224862720
16
பதுமம்
8 மாகுமுதம்
5159780352
5159780352
15479341056
25798901760
17
நாடு
8 பதுமம்
41278242816
41278242816
123834728448
206391214080
18
மாகடல்
8 நாடு
330225942528
330225942528
990677827584
1651129712640
19
வெள்ளம்
8 மாகடல்
2611807510224
2611807510224
7925422620672
13209037701120


2 கருத்துகள்: