புதன், 27 நவம்பர், 2013

துருவக்கோட்டை என்றழைக்கப்படும் ரஞ்சன்குடி கோட்டையை - கோ.ஜெயக்குமார்துருவக்கோட்டை என்றழைக்கப்படும் ரஞ்சன்குடி கோட்டையை - கோ.ஜெயக்குமார்

துருவக்கோட்டை என்றழைக்கப்படும் ரஞ்சன்குடி கோட்டையை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். பகைவர்கள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில், கோட்டையைச் சுற்றிலும் அகழி வெட்டப்பட்டு, உயரமான மதில் சுவர்களுடன் காட்சியளிக்கும் இந்தக் கோட்டை, செஞ்சி கோட்டையை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
கி.பி 1751-ல் பிரெஞ்சுகாரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடைபெற்ற போரில் ஆங்கிலேயர்கள் தோல்வியுற்றனர் என்பதும், ஜாகீர்தார்கள் இக் கோட்டையை தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்தனர் என்பதும், அதன்பிறகு கந்தாசாகிப் என்ற மன்னர் வசம் இக் கோட்டை இருந்ததும் படிப்படியாக கிடைத்த வரலாற்று ஆதாரங்கள் மூலம் தெரிய வருகிறது. இருப்பினும், இக் கோட்டையின் முழு வரலாறு இதுவரை கிடைக்கவில்லை.

தொல்லியியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக் கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பீரங்கிக் குண்டுகள், பழங்கால நாணயங்கள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்கள் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன...."இக்கோட்டையின் உள்ளே காணப்படும் பீரங்கி மேடை, வழிபாட்டு மண்டபம், வெடி மருந்து கிடங்கு, தண்டனைக் கிணறு இஸ்லாமியர் வழிபட மசூதி, நீச்சல் குளம் போன்றவற்றை காண சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புவர். இக்கோட்டை செஞ்சி நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது
'பழமையான ரஞ்சன்குடி கோட்டை பாதுகாப்பு இல்லாமல் சிதைந்து கொண் டிருக்கிறது... காப்பாற்றுங்கள்’ என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரஞ்சன்குடி கிராமத்தில் ஆஜர் ஆனோம். 44 ஏக்கர் பரப்பளவில் 17-ம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப் முகமது அலியால் கட்டப்பட்ட இந்த கோட்டையைச் சுற்றி அகழி, கண்காணிப்புக் கோபுரங்கள், பதுங்கு குழிகள், பீரங்கி மேடை, வெடிமருந்துக் கிடங்கு ஆகியவை இருக்கின்றன.
மதில் சுவர்கள், சூரிய, சந்திரக் குளியலுக்காக கோட் டையின் உச்சியில் ராஜா ராணி குளம் மற்றும் மரண தண்டனைக் கிணறு ஆகியவையும் உள்ளன. சுவர்களில் கலைநயம் கொஞ்சி விளையாடுகிறது என்றாலும் கோட் டையின் பெரும்பாலான பகுதிகள் சிதிலம் அடைந்து கிடக்கிறது.

 
அந்தப் பகுதியில் ஆடு மேய்த்து வரும் ராமரிடம் பேசினோம். ''இங்க, சினிமா ஷூட்டிங் அடிக்கடிநடக்கும். கடைசியா 'பொன்னர்-சங்கர்’ படம் எடுத்தாங்க. பள்ளிக்கூடப் பிள்ளைங்க சுத்திப் பாக்க இங்க வருவாங்க. காதல் ஜோடிகளும் நிறையவே வர்றாங்க. ஷூட்டிங் நடத்துறதுக்கும், கோட்டைக் குள் இருக்குற புளிய மரத்தை ஏலம் விடுறதுக்கும் பணம் வசூலிக்கிற அரசாங்கம், கோட் டையில எந்தப் பராமரிப்பு வேலையும் செய்யலை'' என்றார். குறிப்பாக சமுக சீர்கேடான செயல்கள் அறங்கேரி வருகின்றன என கிராம மக்கள் வருத்தப்படுகின்றனர்.
 
அந்தக் கிராமத்தில் வசிக்கும் பெருமாள், ''இந்தக் கோட்டையை 2003-ல் சுற்றுலா ஸ்தலமாக அரசு அறிவித்து, கோட்டை பராமரிப்பு பணிக்காக http://www.vikatan.com/images/rupee_symbol.png 48 லட்சம் ஒதுக்கியது. ஆனால், கோட்டையில் ஒரு டியூப் லைட் கூட போடாமல் அரியலூர்- கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கு அந்தப் பணத்தை முழுமையாக செலவு செய்து விட்டார்கள். அதுக்குப் பிறகு இரண்டு முறை கோட்டைக்கு பணம் ஒதுக்கீடு செய்தும், தொல்பொருள் ஆய்வுத் துறை அனுமதி கிடைக்கலை என்று காரணம் சொல்லி, அந்தப் பணத்தை வேற செலவுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஒவ்வொரு கலெக்டரும் வந்து கோட்டையை சுத்திப் பர்த்துட்டு, அதோட மறந்துடுவாங்க. இந்தக் கோட் டைக்கு ஒரு விடிவு காலம் வருமான்னு நாங்களும் காத்தி ருக்கோம்'' என்றார்.
 

இதுகுறித்து, மாவட்ட கலெக் டர் தாரேஸ் அகமதுவிடம் கேட்டோம். ''இந்தக் கோட்டையில் அடிப்படை வசதிகள் செய்ய, மத்திய தொல்பொருள் துறையில் அனுமதி கேட்டோம். 'பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம் என்பதால் அனுமதி கிடையாது’ என்று பதில் கடிதம் வந்துவிட்டது. சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக கோட் டையில் இருந்து 300 மீட்டருக்கு அப்பால், குடிநீர் வசதி செய்து தருகிறேன்'' என்று உறுதி அளித்தார்.

கோட்டையில் இருந்து வெளியே வரும் போது, 'பாதுகாக்கப்பட்ட பழமை வாய்ந்த புராதன சின்னத்தை சிதைப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’ என்று ஓர் எச்சரிக்கைப் பலகை இருந்தது. இதை முதலில் படிக்கவேண்டியது, தொல்பொருள் துறையினர்தான்.
போதிய பராமரிப்பு இன்றி, சிதிலமைடைந்து, சமூக விரோதிகளின் கூடாரமாக இந்தப் பாரம்பரியமிக்க கோட்டை மீண்டும்  மாறி  வருகிறது.
 
போதிய வரலாற்று ஆதாரங்கள் கிடைக்காத நிலையில், பல்வேறு கால கட்டங்களில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்தக் கோட்டையின் வரலாறு வெளியிடப்பட்டுள்ளது.  கோட்டையின் மேல்புற மதில் சுவரின் நான்கு திசைகளிலும் பீரங்கி மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோட்டைச் சுவர்களில் மீன் சின்னமும், போர் வாளும் பொறிக்கப்பட்டுள்ளன.
 
கோட்டையின் முதல் தளத்தின் வழிபாட்டு மண்டபத்தில் உள்ள தூணில் சிவபெருமானை பசு வணங்குவது போன்ற சிற்பமும், பல்வேறு வகையிலான சிறு, சிறு சிற்பங்களும் உள்ளன. மேலும், இதே பகுதியில் முஸ்லிம் மக்கள் தொழுகை நடத்துவதற்காக பள்ளிவாசலும் அமைக்கப்பட்டுள்ளது. இரு மதத்தவர் தொடர்புடைய விஷயங்கள் இக் கோட்டையில் இருப்பது, வரலாற்று ஆய்வாளர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் புரியாத புதிராக உள்ளது.
 
கோட்டையின் மேல்புறத்தில் ராணியின் அந்தப்புறம், இதையொட்டி நீச்சல் குளம், ஆயுதக் கிடங்கு, சுரங்கப் பாதைகள் என முடியாட்சி மன்னர்களின் அடையாளமாக விளங்கும் இக் கோட்டை, நவீன கால கட்டடக் கலை வல்லுநர்களை வியக்க வைக்கிறது. காலத்தால் அழியாத வரலாற்றுச் சின்னத்தை காப்பது அரசின் கடமை என்ற வகையில், இந்தக் கோட்டையைச் சீரமைத்து பெரிய  சுற்றுலாத் தலத்திரிக்கு தேவையான அதிக நிதி ஒதுக்கீடு செய்து சுற்றுலா பயணிகளின் நலனுக்காக குடிநீர், சுகாதாரம், விளையாட்டு அரங்கம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருவதுடன், பழமைகால மரபு சின்னங்கள் அழியாமல் பாதுகாக்க  வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
 
பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து வரும் வி.களத்தூர்  அருகே உள்ளே   ரஞ்சன்குடி கோட்டை மதில் சுவர்களில் ஆல, அரசமர கன்றுகள் ஊடுருவி ஆக்கிரமித்துள்ளது. சிதிலமடைந்து வரும் ரஞ்சன்குடி கோட் டை பாதுகாக்கப்பட வேண்டுமென பொதுமக் கள் எதிர்பார்க்கின்றனர்.
 
பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் சுற்றுலா தலங்களில் முக்கிய இடத்தை வகிப்பது நமதூர் அருகே உள்ளே  ரஞ்சன்குடி கோட்டை. பெரம்பலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 18 கி.மீட்டர் தொலைவில் மங்களமேடு கிராமத்தை ஒட்டியுள்ள ரஞ்சன் குடியில் அமைந்துள்ளது. தூங்கானை என்றழைக்கப்படும் ரஞ்சன்குடி கிராமத்தில் 16ம் நூற்றாண்டின் இறுதியில் குன்றின்மீது அமைக்கப்பட்ட இந்த கோட்டைக்கான கட்டுமான பணி, நவாப்புகளின் கட்டுப்பாட்டிலிருந்த தூங்கானைமறவன் என்ற குறுநில மன்னரால் துவங்கப்பட்டது. இறுதிவரை இதன் கட்டுமான பணிகள் முற்றுப்பெறாத நிலையிலேயே உள்ளது.

 
இந்த கோட்டைக்கு ஆற்காடு நவாப்கோட்டை, ரஞ்சன்குடி கோட்டை, குன்றின் மீது கட்டப்பட்டதால் துருவத்துக்கோட்டை என பலபெயர்கள் உள்ளன. 1751ம் ஆண்டு சந்தாசாஹிப், பிரெஞ்சு கூட்டுப்படைக்கும், முகமது அலி, ஆங்கிலேயர் கூட்டுப்படைக்கும் இடையே நடந்த, வால்கொண்டா போரில் முக்கிய பங்குவகித்தது என வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன.
 
வரலாற்று சிறப்பும், தொல்பொருள் ஆதாரங்களையும் கொண்ட இந்த கோட்டையில் இன்னமும் அறிய வேண்டிய ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன. கோட்டையில் இன்றவும் அழியாத நிலையில் பீரங்கிமேடை, கொடிமேடை, தண்டனை கிணறு, வெடிமருந்து கிடங்கு, புறவழி சுரங்கப்பாதை, மழைநீர் சேகரிப்பு தொட்டி, பிற்கால பாண்டியர்கள் பிடியில் இருந்தபோது கட்டப்பட்ட மண்டபம், முகம தியர்கள் ஆண்டபோது அமைக்கப்பட்ட மசூதிகள், கோட்டையை சுற்றியமைக்கப்பட்ட அகழி, இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படாத சுற்றுச்சுவர் என அழியாத நினைவு சின்னங்களாக பலவும் காட்சி தருகின்றன. மாவட்ட நிர்வாகத்தால் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய இந்த கோட்டை தற்போது அழிவுப்பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
 
சுற்றுலா தலமாக இருந்தும் சுற்றுலா பயணிகளை கவருவதற்கான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, தங்குமிடம், உணவு வசதி போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் அரண்மனையைபோல இருக்க வேண்டிய கோட்டை அனாதைபோல் காட்சியளிக்கிறது. இந்த கோட்டையின் அகழி உள்ளூர் மக்களின் பொதுகழிப்பறையாக மாறிவிட்டது.
மேலும் கல்லூரி காதலர்கள் கொஞ்சி மகிழும் இடமாகவும், கள்ளக்காதலர்கள் உல்லாசமாக இருக்கவும், , தடையற்ற டாஸ்மாக் பாராகவும் மாறிவிட்டது. இதுபோன்ற வக்கிரங்களால் வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையின் சிறப்புகள் மங்க தொடங்கிய அதேநேரம் சுற்றுச்சுவர்களில் முளைக்கும் மரங்களால் மதில் சுவர்கள் மண்ணோடு சரியும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
 
இதுகுறித்து தொல்லியல்துறை சார்பில் இக்கோட்டையின் காவலாளியாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற காசிம்பாய் என்பவரிடம் கேட்டபோது, கோட்டையின் சுவர்கள் மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது மதில் சுவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாகும். ஆலமர, அரசமர கன்றுகள் 10 அடி நீளத்திற்கு வளர்ந்துள்ளது. இதன் வேர்கள் சுவர்களில் ஊடுருவி நீண்டளவு பிளந்துள்ளது.

இதுகுறித்து தொல்லியல்துறை கண்காணிப்பாளராக பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவருக்கு நவம்பர் மாதம் கடிதமே எழுதியுள்ளேன். நடவடிக்கை எடுப்பதோடு முறையாக பராமரித்தால்தான் நினைவு சின்னம் நிலைத்திருக்கும். இல்லாவிட்டால் குடிகாரர்களின் கூடாரமாகவும், காதலர்களின் சொர்க்கபுரியாகவும், பொதுமக்களின் கழிப்பறையாகவும் மாறிவிடும் என்பது உண்மை என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக