திங்கள், 5 ஆகஸ்ட், 2013

உலக மரபுச் சின்னம் தாராசுரம் - கோ.ஜெயக்குமார்.

உலக மரபுச் சின்னம் தாராசுரம் - கோ.ஜெயக்குமார்.

தமிழ்நாட்டில் யுனஸ்கோ நிறுவனத்தினால் பாதுகாப்பட வேண்டிய உலக மரபுச் சின்னம் என்று அறிவிக்கப்பட்ட பெருமையுடைய கோயில்களுள் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிற்பங்கள் கொத்துக்கொத்தாக காட்சியளிப்பது இந்தியாவில் வேறெங்கும் பார்க்க இயலாத அதியமாக தோன்றுகிறது. விரல்நுனி அளவிலிருந்து விரல், கை, முழங்கை, எட்டுவகையிலான எட்டு தாளம், ஒன்பது வகை நவதாளம், பத்துமடங்கு தசதாளம் என்றெல்லாம் விதவிதமான அளவில் விசித்திரமான சிற்பங்கள் நிறைந்த சிற்பச் சரணாலயமாக இக்கோயில் திகழ்கிறது. 800 ஆண்டுகளுக்கு முன் மாமன்னன் இரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்ட இக்கோயில் சிற்பம், ஆடல், கட்டுமானம், கட்டடம், வானவியல், கோயில் ஐதீகம், புராணங்கள், சிவதத்துவம் போன்ற பல்வேறு துறைசார்ந்த நுட்பமாண வேலைபாடுகளை உடைய கோயிலாகத் திகழ்கிறது. 
 
இதனால் பிரான்சு, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்காண பயணிகள் இக்கோயிலை பார்த்த வண்ணம் உள்ளனர். 
 
 தென்புரம் நோக்கிய தெட்சிணாமூர்த்தி சிலை, மேற்கு நோக்கிய லிங்கோத்பவர், அகோரவீரபத்திரர், அன்னமிடும் அன்னலெட்சுமி, அன்னபூரணி, கண்ணப்ப நயனார் போன்ற பெரும் சிற்பங்களும், வீரதீர செயல்களை காட்டும் சிற்பங்கள், நடன வகைகள், ஒரு உருவத்திற்குள்ளே நான்கு உருவங்களும், ஒரு தலைக்குள் யானையும் காளையும் தோன்றும் புதுவிதமான சிற்பம், அக்கால சமுதாய வழக்கங்களை காட்டும் சமுதாய சிற்பங்கள், குழந்தையைப் பெரும் பேருகாலத்தில் பெண்ணை அரவணைத்துச் செல்லும் பெண்கள் சிற்பங்கள், என்றெல்லாம் விதவிதமான சிற்பங்களைக் காட்டுகின்றது இக்கோயில்.
 
நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள் இதனை மென்மேலும் அழகு படுத்தியுள்ளனர். இக்கோயிலின் விமானம் வானவியல் ரகசியத்தை உணர்த்துமாறு கட்டப்பட்டுள்ளது என்று அமெரிக்க வானவியல் அறிஞர் காரல்சேகன் கூறியுள்ளார். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த லூயிகான், பிரான்சு நாட்டைச் சேர்ந்த கபு+சியர் போன்ற கட்டடகலை நிபுணர்கள் நேரில் கண்டு வியந்த பெருமைக்குறியது இக்கோயில். 
 
இக்கோயிலை மத்திய அரசின் தொல்பொருள் துறையினர் பாதுகாத்து வருகின்றனர். இதற்கு முன்பு இக்கோயிலில் வெளியில் கிடந்த கஜசம்காரமூர்த்தி எனும் கருங்கல் சிற்பம் மற்றும் ரிஷிபத்தினிகள் சிற்பத்தொகுப்பு போன்றவற்றை தஞ்சை அருங்காட்சியகம் பாதுகாத்து வருகிறது. இக்கோயிலின் உள்ளே அருங்காட்சியகத்தில் இச்சிலைகள் வைக்கப்பட வேண்டும் என்று கலை ஆர்வளர்கள் கருதுகின்றனர்.

    உலக பிரசித்தி பெற்ற கோயிலான இச்சிற்பக் கூடத்தை கட்டட கலை நிபுணர்கள், சிற்பிகள், ஆடல் வல்லுநர்கள், இசை மேதைகள், வானவியல் அறிஞர்கள், வீடியோ, ஆடியோ போன்ற ஊடகங்களாலும் நூல்களாலும் ஆவணப்படுத்த வேண்டும். தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்டசோழபுரம் ஆகிய இரு கோயில்களை பிரான்சு நாட்டைச் சேர்ந்த பியரிபிச்சார்டு எனும் கட்டடக்கலை நிபுணர் நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து உழைத்து ஆவணப்படுத்தியுள்ளார். தரை வடிவப் படங்கள், விமானத்தின் தோற்றம், அதன் குறுக்குவெட்டு தோற்றம், சிற்பங்கள், ஜியோமிதி வடிவங்கள் போன்ற எண்ணற்ற கோணங்களில் இவற்றை ஆவணப்படுத்தி ஆங்கிலம், பிரஞ்சு மொழியில் நூல்களாக வெளியிட்டுள்ளார். இதைப்போல் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலையும், பல கோணங்களில், பல துறைகளில் ஆவணப்படுத்தி நூல்களாக வெளிவரவேண்டும்.
 கும்பகோணம்: ""வருங்காலத் தலைமுறையினரும் பாதுகாக்க வேண்டிய கலை பெட்டகம் தான் தாராசுரம் ஐராவதீஸ்வர் கோயிலாகும்,'' என கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். நாகை மாவட்டம் பூம்புகார் மேலையூர் சீனிவாசா மேல்நிலைப் பள்ளியில், "விழித்திரு' என்ற அமைப்பு கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உறுப்பினராக உள்ளனர். பாடப்புத்தகங்களில் படித்த யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள கலைச்சிற்பங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும், அது தொடர்பான ஆய்வினை மேற்கொள்ளவும் "விழித்திரு' அங்கத்தினர் நேற்று தாராசுரம் கோவிலுக்கு வந்தனர்.
அவர்களுக்கு கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில். ஒரே மாவட்டத்தில் இரண்டு கோவில்கள் யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் மட்டும் தான்.
 
 இந்த கோயிலில் 40 ஆயிரத்துக்குக்கும் மேற்பட்ட நுண்ணிய அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் உள்ளன. பெரிய புராணத்தில் உள்ள கதைகளை இந்த கோவிலில் சிற்பமாக சோழர்கால சிற்பிகள் வடிவமைத்துள்ளனர். மேலும் திருக்கயிலாயகாட்சி, சிவபெருமான் திருமண காட்சியும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
அதே போல் இந்த கோவிலில் தேவாரத்தை பாடிய 108 சிவதீட்சை பெற்றவர்களுடைய உருவங்கள் இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு காட்சி வழியாக இந்த கோவிலை ஒரு முறை சுற்றிப்பார்த்தால் படித்ததும் பார்த்தும் அப்படியே மனதில் நிற்கும். இந்த கோவில் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்ததால் இந்திய தொல்லியல் துறை தன் வசம் எடுத்துகொண்டு பராமரித்து வருகிறது.
 
தாராசுரம் கோவில் உள்ளே உள்ள சிற்பங்களையும், வெளியே உள்ள புல்வெளிப் பூங்காவும் சிறப்பாக பராமரித்து வரும் இந்திய தொல்லியல் துறை இந்த கோவிலுக்கு அதிக முக்கியத்வத்தை அளித்து வருகிறது. கோவிலில் உள்ள ஒவ்வொரு சிற்பங்களும் ஒரு கதையை விளக்குகிறது.
 
சிற்பங்களை தெரிந்து கொள்வதோடு நின்று விடாமல் அதை எப்படி வடித்தார்கள் என்பதை ஆராய வேண்டும். தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலை வருங்காலத் தலைமுறையினரும் போற்றி பாதுகாக்க வேண்டிய  ஒரு கலை பெட்டகமாக திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார். பள்ளி செயலாளர் ராஜசேகரன், பள்ளி ஆசிரியர்கள், கும்பகோணம் வழக்கறிஞர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 தாராசுரம். ரொம்ப பெரியதாகவும் இல்லாமல், சிறியதாகவும் இல்லாமல் அளவோடு அழகாக இருக்கும் கோவில். ஸ்பெஷல் கோவிலுக்கு, நண்பர் மகேந்திரனின் ஸ்பெஷல் வர்ணனைகளுடன் புகைப்படங்கள்.
அது யாரையுமே ஒரு நிமிடம் அயர வைக்குமொரு சோழனின் சுவடு... தாராசுரம்... தினம் பல வெளிநாட்டவர் வியப்புடன் வாய் திறந்து நோக்கியும், வழக்கம் போல் நம்மவர் சூடம் கொளுத்தி எண்ணெய் துடைக்க இடம் தேடுமொரு அற்புத தலம்.

 
கும்பகோணத்திலிருந்து வெறும் மூன்று கிலோமீட்டர் தொலைவில் நகரத்தின் ஜன சந்தடியிலிருந்து ஒதுங்கி நிற்கும் ஊர் தாராசுரம். இரண்டாம் ராஜராஜனால் (கி.பி 1146 -1173) பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயில். தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரத்தை விட அளவில் சிறிய ஆனால், அவற்றின் நுணுக்கத்துக்கு சற்றும் குறை சொல்ல முடியாத கோயில் தற்போது UNESCOவின் உபயத்தில் மிளிர்கிறது.வல்லுனர்களால், "சிற்பிகளின் கனவு" என்று இன்றளவும் கருதப்படும் இந்த தலம் வழக்கமான சைவத்தலங்களின் அமைப்பிலிருந்து சற்றே வேறுபட்டு, இறைவிக்கென்று தனியே ஒரு கோயில் மூலத்தலத்தின் வலதுபுறம் அமைந்துள்ளது. இது வழக்கமான தலங்களைபோல முதலில் அமையப்பெற்று பின் கால மாற்றத்தில் சுற்றுச்சுவர் மறைந்து தனித்தனி சன்னதிகளாக அமையப்பெற்றிருக்கலாம் என்று ஒரு கூற்று இருந்தாலும், நாங்கள் சென்ற போது வந்திருந்த ஒரு அயல்நாட்டு தம்பதியிடம் உடன் வந்திருந்த வழிகாட்டி, ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பெண் தெய்வத்துக்கும் சமமாய் ஒரு தனி கோயில் அமைத்திருப்பதாய் சொல்லி, அவர்கள் முகத்தை பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். இதிலென்ன இருக்கு என்ற ரீதியில் அவர்கள் அடுத்த தூணுக்கு நகர்ந்து கொண்டிருந்தனர்.கோயிலின் உட்பகுதி, சமதளத்தை விட சற்றே தாழ்ந்திருக்கிறது, நுழைவாயிலில் நந்தியினருகே அமையப்பெற்றிருக்கும் இசைத்தூண்கள் மற்றுமொரு சிறப்பு. வெவ்வேறு கனங்களிலிருக்கும் இந்த தூண்கள் தட்டும்போது சுரங்களை கொடுப்பது வெகு அழகு. இதே போன்ற தூண்களை மதுரை, ராமேஸ்வரம் மற்றும் சிதம்பரத்திலும் கண்டிருக்கிறேன். அவையெல்லாம் மக்கள் தட்டி தட்டி இப்போது கவுண்டமணி கேட்டு செந்தில் வாசிக்கும் "நலந்தானா?" போல ஒலிக்கிறது. மதுரையில் மட்டும் தொடமுடியாதவாறு கம்பிவலை போட்டு பாதுகாக்கிறார்கள்.குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தின் அமைப்பில் இருக்கும் மண்டபம், நுணுக்கமான பல சிற்பங்களுடன் கூடிய தூண்களால் நிறைந்திருக்கிறது. தூண்களில் நர்த்தன கணபதி உள்ளங்கை அகல சிற்பமாக நிற்கிறார். நாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும், வாத்தியக்காரர்களின் குழுக்களும் சில சென்டிமீட்டர் அளவிலேயே தெளிவாக செதுக்கப்பட்டுள்ளன. எத்தனை சிற்றுளிகள், எத்தனை விரல்கள், எத்தனை நாட்களாய் ஒரு தவமென செய்திருக்குமிதை என்று உணர முடிகிறது. கோபுரத்தை சுற்றி வருகையில் பின்புற சுவரில் மங்கிப்போன ஓவியங்கள் தென்படுகின்றன. கோபுரம் ஐந்து நிலை மாடங்களுடன் 85 அடி உயரமாய் நிமிர்ந்து நிற்கிறது.ஒருபுறத்தில் யானையாகவும், எதிர்புறத்தில் காளையாகவும் தோன்றுமொரு சிற்பம், இதை திருபுவனத்திலும் பார்த்தது போல நினைவு. ஒரு தலை இடுப்புவரை, இடம், வலம், மேலென மூன்று புறமும் கால்கள் அந்த உடலுடன் இணையும் சிற்பம், ஒரு கழைக்கூத்தாடி பெண்ணை நினைவுபடுத்துகிறது. கோயில் தூண்களில் கழைக்கூத்தாடியின் சிற்பம், கலைகளுக்கு மதிப்பளித்த ராஜராஜனின் விசாலமான மனதை காட்டுகிறது.இரண்டாம் இராஜராஜனின் காலத்தில் இராஜராஜபுரம் என்று பெயரிடப்பட்டு, இராராசுரமாகி இன்று தராசுரமென நிற்கிறது. ஐராவதேஸ்வரரின் துணைவி தெய்வநாயகி. இந்திரனின் வெள்ளை யானையான ஐராவதம் வந்து இங்கு லிங்க வழிபாடு செய்ததால் இறைவனின் பெயர் ஐராவதேஸ்வரர். யமதர்மன் சாபம் பெற்றதால் கொண்ட உடல் எரிச்சல் தீர இங்கு நீராடி விமோசனம் பெற்றதால், இங்கு தீர்த்தம் "யமதீர்த்தம்".2004 ம் வருடம் UNESCO வினால் உலக புராதான நினைவிடமாக (world heritage monument ) அறிவிக்கப்பட்டு, புனரமைக்கப்பட்டு சுற்றிலும் புல்வெளியும், பசுந்தரையுமாய் இருக்கிறது. இருந்தும் உள்ளூர் வாசிகள் கூட எட்டிப்பார்க்க மறுக்கிறார்கள்.எப்போதும ஒன்றிரண்டு அயல் நாட்டவர் தென்படுவதும் அவரை நம்மவர் பின்தொடர்வதும் இங்கு வாடிக்கை. நாங்கள் சென்றிருந்த நாளில் வந்திருந்த அயல்நாட்டு பெண்மணி, அங்கிருந்த ஒரு இளம்பெண்ணிடம், அவள் திருமணத்திற்கு யார் மணமகனை தேர்ந்தெடுப்பார்களென்றும், தந்தை தேர்ந்தெடுக்கும் மணமகன் அவளுக்கு விருப்பமில்லை எனில் என்ன செய்வாள் என்றும் கவலையோடு விசாரிக்க, அதை வழிகாட்டி மொழி பெயர்த்துக்கொண்டிருந்தார். அந்த யுவதி இறுகப்பற்றிய கைகுட்டையால் வியர்வையை மட்டுமே துடைத்து வெட்கத்தை துடைக்க முடியாமல் விழித்தது - அந்த வெயில் நேரத்தில் குறுங்கவிதை.ஊரில் சௌராஷ்டிர மக்கள் அதிகமிருப்பதால் விதிகளில் பளபளக்கும் பட்டு நூல் காய்கிறது. சுற்று பிரகாரங்களில் அமைக்கப்பட்ட வரிசையான சிறு நந்திகளின் தலைகளும், ரதத்தில் பிணைக்கப்பட்ட குதிரைகளின் முகமும் இறை மறுப்பாளர்களால் சிதைக்கப்பட்டிருப்பதை பார்க்கையில் மிகுந்த வேதனையளிப்பதாய் இருக்கிறது. இவர்கள் இறையை மறுக்கிறார்களா இல்லை கலையை மறுக்கிறார்களா என்றொரு கேள்வி வருகிறது. இதையே யோசிக்காமல் செய்திருக்கும் இவர்களின் பகுத்தறிவு மெச்ச வைக்கிறது...!!உரைப்பார் உரைஉகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி யூர்அவி னாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.
உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே, உன்னை எஞ்ஞான்றும் மறவாது நினைக்க வல்லவரது தலைமேல் இருப்பவனே, அரையின்கண் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே, எல்லாப் பொருட்கும் முதலும் முடிவுமானவனே, சிறந்த முல்லை நிலத்தையும், சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள, ` அவினாசி ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, கூற்றுவனையும் முதலையையும், இக்குளக் கரைக்கண் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள்.
 http://4.bp.blogspot.com/-dN-iwRvpmdA/UTilEomQvyI/AAAAAAAAAWA/TulqycQB61Q/s400/2.jpg
அவர் பாடிய திருப்பதிகத்தில், `கரைக்கால் முதலையை பிள்ளைதரச் சொல்லு காலனையே` என வேண்டிப்பாடுவதைக் காணலாம்.
 
முதலையுண்ட வரலாறு: ஐந்து வயது நிரம்பப் பெற்ற அந்தணச் சிறுவர் இருவர், இங்குள்ள நீர் நிலையில் குளித்தபோது ஒரு சிறுவனை முதலை விழுங்கிற்று. மற்றொருவன் அதன்வாயில் அகப்படாது பிழைத்துத் தம் இல்லம் சேர்ந்து, நிகழ்ந்ததை அச்சிறுவனின் பெற்றோரிடம் தெரிவித்தான்.
 
 அவனின் பெற்றோர் மிக்க துயருற்றனர். இது நிகழ்ந்து சில ஆண்டுகளான நிலையில் உயிர் பிழைத்த அந்தணச் சிறுவனுக்கு அவனுடைய பெற்றோர் உபநயனச் சடங்கு நடத்தினர். அவனது இல்லத்தில் மங்கல ஒலி கேட்ட அளவில் முதலையுண்ட சிறுவனின் பெற்றோர் இன்று நம் மகன் நம்முடன் இருந்தால் அவனுக்கும் உபநயனம் செய்வித்து மகிழலாமே என மனங் கவன்றனர். அவர்களின் நற்காலம் சுந்தரர் அத்தலத்துக்கு எழுந்தருளினார்.
 
சுந்தரர் திருவாரூரிலிருந்து சேரமான் பெருமாள் நாயனாரின் அழைப்பினை ஏற்று, அவரைச் சந்திக்கத் திருவுளம் கொண்டு சோழநாடு கடந்து, கொங்கு நாட்டை அடைந்தார். அவிநாசி என்னும் இத்தலத்திற்கு வந்தபோது, ஒருவீதியில் ஒருவீட்டில் மங்கல ஒலியும், எதிர் வீட்டில் அழுகை ஒலியும் கேட்பதை அறிந்து இவ்வாறு நிகழக் காரணம் யாது என வினவினார்.
 http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/25/Airavateshwarar_Gopuram.jpg/250px-Airavateshwarar_Gopuram.jpg
நிகழ்ந்ததை அவ்வூர் வேதியர்கள் உரைத்தனர். அவ்வேளையில் சுந்தரர் தம் ஊருக்கு எழுந்தருளி வந்துள்ளார் என்பதைக் கேட்டு, மகனை இழந்து வருந்திய அந்தணர் அழுகை நீங்கி, மலர்ந்த முகத்துடன் அவரை வரவேற்று வணங்கினார். சிறந்த சிவபக்தராகிய இவ்வந்தணரின் மகனை முதலையிடமிருந்து மீட்டுத் தந்த பின்னரே, திருக்கோயில் வழிபாடு செய்ய வேண்டுமெனச் சுந்தரர் முடிவு செய்து, முதலை வாழ்ந்த நீர்நிலையை அடைந்து, அவிநாசி இறைவனை வேண்டி `எற்றான் மறக்கேன்` என்னும் திருப்பதிகத்தைப் பாடினார்.
 http://2.bp.blogspot.com/-RZnHYe0w3vw/UYo4aEBHuJI/AAAAAAAAHsQ/T-NnYqn3Ms8/s1600/DSC00761.JPG
அம்முதலை, தான் உண்ட மதலையைக் கரையின் கண் உமிழ்ந்து மீண்டது.அவனது பெற்றோரும் மற்றவரும் இவ்வற்புதத்தைக் கண்டு அதிசயித்தார்.
 http://2.bp.blogspot.com/-P-yTEPR10ig/UYo045yeslI/AAAAAAAAHlo/CQAQNr-GFsI/s1600/DSC00652.JPG
 கும்பகோணத்தில் இருந்து மினி பேருந்துகள் அடிக்கடி செல்லும்.10 நிமிட பயணம்தான் 3 கிமீ இருக்கலாம்.மிக இனிமையான பொழுதாக மாற்றியது அந்த இரண்டாம் ராஜராஜசோழன் கட்டிய பொக்கிஷம். பொக்கிஷம்தான் அது. யுனெஸ்கோ அமைப்பு பாதுகாப்பட்ட வேண்டிய பாரம்பரிய சின்னமாக அறிவித்திருக்கிறது இந்த கோவிலை.


http://3.bp.blogspot.com/-r8MKODrCKQ8/UTikj4Fee3I/AAAAAAAAAVw/x9mF3YG0SbM/s640/1.jpg
நாம கோவிலுக்கு போகமலே ஒரு ஆறு மாசம் இருப்போம். அப்புறம் கொஞ்ச நாள் வெவ்வேறு சிவன் கோவிலா தேடிதேடி ஓடுவோம் பித்து தலைக்கேறி அது தனியும்வரை. இந்த பழக்கம் ரொம்ப நாளா இருக்கு. அப்படி கடந்த சில மாசமா போய்கிட்டே இருக்கேன்.

http://lh6.ggpht.com/-qHf0VCKinfM/UWAKzDUtIqI/AAAAAAAAA3w/AVn55r5HREI/P_7171306HDR-resized2_thumb%25255B7%25255D.jpg?imgmax=800
பொதுவா கோவிலுக்கு உள்ளே போனால் ஆரம்பத்துலயே நாளு பிச்சைக்காரர்கள்,சற்று கடந்து சென்றால் கடைகள் வாங்கம்மா,வாங்கையான்னு அர்ச்சனை,தேங்காய்,பழம் அழைப்புகள்.அதை தாண்டிப்போனா இங்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறையால் அன்னதானம் வழங்கப்படுகிறதுன்னு பெரிய்ய போர்டு.அதை தாண்டி உள்ளே போனா காசு இருக்கறவனுக்கு ஒரு வழி காசில்லாதவனுக்கு ஒரு வழின்னு ஏற்பாடு.

http://3.bp.blogspot.com/-f5C9Qf6ljb8/UQyyK0tI2tI/AAAAAAAALBo/dpSHXG-gG2E/s1600/Airavateshwarar_full.jpg
இதெல்லாம் தாண்டி உள்ளே போனா சாமிகிட்ட போய்ச்சேர்வதற்குள்ளேயே “நிக்காதிங்க நிக்காதிங்க போயிகிட்டே இருங்கன்னு ஒரு குரல் வரும்” நம்ம வாயிக்குள்ள போடாங்க்கோகோகோன்னு வரும். இருந்தாலும் சாமீ கோச்சுக்குமேன்னு கடந்து போகவேண்டியிருக்கும். சரின்னு நிக்கிற ரெண்டு நிமிஷத்துக்குள்ள ஐயர் தேவ பாஷையில்  ஏதோ கடமைக்கு சொல்லித்திரும்பி நம்ம கைல திருநீற்றை தெளித்துவிட்டு போக.இடையிலே ஏதோ தீபாராதனைக்கு மட்டும் சாமி வந்து வந்து மறைந்து போவது போல எல்லாரும் முண்டியடித்து நம்மை மறைத்துவிட்டு சாமியை பாத்துவிட்டு போகச்சொல்லிவிடுவார்கள்.

http://lh4.ggpht.com/-UoyBhIW927Q/UWAK9bPaLvI/AAAAAAAAA4g/zpz0xofPAKo/P7171285_stitch_thumb%25255B2%25255D.jpg?imgmax=800
அந்த ரெண்டு நிமிஷத்துள்ள பக்கத்துல நிக்கிற INTEL INSIDE டுன்னு டி ஷர்ட் பெண்ணை பார்த்து சரி உள்ள PROCESSOR இருந்தா என்ன வெர்ஷனா இருக்கும்னு நினைப்பேனா இல்லை சாமியை பார்ப்பேனா.இதுல சாமியும் கூட்டுக்களவானிதான்.அதிலும் கபாலிதான் ரொம்பச்சரியான ஆளு அவன பார்க்கப்போறப்போதான் இந்த மாதிரி டிஷர்ட் யுவதிகள் நிறையபேர் வருகிறார்கள்.

சரி இதெல்லாம் எதுக்கு சொல்லுறேன்னா மேற்சொன்ன கொடுமைகள் ஏதும் இல்லாத கோவில் தாராசுரம்.பசும்புல்வெளிகளுக்கு நடுவில் மிக அழகா அமைந்திருக்கிறது.உள்ளே சென்றால் ஒரு அசாதாரணமான அமைதி. அதை என்னென்று சொல்ல..ஹ்ம்ம்ம். நிச்சயமாய் ஒரு வித்தியாசமான அனுபவமா இருக்கும். எந்த இடையூறுகளும் இல்லாத ஒரு தனிமை ஆனால் அது தனிமை கிடையாது. கடவுள்தான் கூட இருப்பாரே.

பல கோவில்களில் அர்ச்சகர்கள் அரசு மருத்துவமணை செவிலியர் மாதிரிதான் இருப்பார்கள்.இங்கே வேறுவிதமாய் இருக்கிறது.வாங்க வாங்க என்ற அன்பான அழைப்பு. சுக்லாம் பரதரமோ,வக்ரதுண்ட மஹா காயவோ இல்லாத விநாயகர் அர்ச்சனை தூய தமிழில்.

 ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞாநக்கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே!
தென்னாடுடையவனுக்கும் அதேபோல “தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி பொற்றி” பாடிப்போற்றினார். இதுதான் மிகவும் ஜிலிர்ப்பாக இருந்தது.

இந்த கோவில் மயிலாடுதுறை மாயுரநாதர் திருக்கோவில்,சீர்காழி சட்டைநாதர் திருக்கோவில்,சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பிறகு கட்டியிருக்கனும் என்று நினைக்கிறேன்.கோவில் விமானத்தை உற்று நோக்கினால் இந்த கோவில்களின் வரலாறு சொல்லும் சிவனின் ரூபங்கள் சிலையாய் இடம்பெற்றிருக்கின்றன்.

கோவில் பலி பீடத்தை தட்டினால் வித்தியாசமான ஒலி எழுப்புகிறது என தகவல் இருக்கு.அங்கே சென்றிருந்தபோது அந்த பலி பீடத்தில் ஏறும் படி முழுவதும் சுற்றி இரும்பு கம்பிகளால் வேயப்பட்டு அடைக்கப்பட்டு இருந்தது.அப்போது ஏன் என்று புரியவில்லை.இனையத்தில்தான் இந்த தகவலை கண்டேன்.
குழல் ஊதுறவன் சிலையும்,சங்கு சக்கரம் தாங்கியவன் சிலையும் கூட இடம்பெற்றிருக்கு.வைணவர்களை சைவர் கழுமரம் ஏற்றிக்கொன்றார்கள் என்றால் இது எப்படி சாத்தியம்.எங்கோ இடிக்கிறதே..கோவிலுக்கு பின்புறம் மேற்கு பக்கத்தில் வீரபத்திரர் கோவில் இருக்கிறது கிட்டதட்ட இடியும் தருவாயில்.
 

3 கருத்துகள்:

 1. very useful information about sculpture of tamil nadu thank you very much for bring out this wonderful sculpture and the tharasuram temple.

  பதிலளிநீக்கு
 2. அன்பு கட்டுரையாளர் முனைவர் ஜெயகுமார் அவர்களுக்கு

  இன்று தான் உங்கள் கட்டுரை படித்தேன்.மிக அருமை .
  அரிய பல தகவல்களை அறிய வைத்துள்ளீர்கள்.மிக்க நன்றி

  கணபதி கிருஷ்ணன்

  பதிலளிநீக்கு
 3. Dear Sir, You are doing great service to Tamil by elaborately studying and uploading our cultural heritage structures and its value in the internet. Thanks for the same.

  பதிலளிநீக்கு