திங்கள், 12 ஆகஸ்ட், 2013

தலைக்காவிரி ஸ்ரீரங்கப்பட்டினம் ஒரு பார்வை - கோ.ஜெயக்குமார்.

தலைக்காவிரி ஸ்ரீரங்கப்பட்டினம் ஒரு பார்வை - கோ.ஜெயக்குமார்.

தலைக்காவிரி கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம் பிரம்ம கிரியில் ( கடல் மட்டத்திலிருந்து 1,276 மீ) உள்ள இந்து புனிதத் தலமாகும். தலைக்காவிரி, பகமண்டலாவிலிருந்து 7 கி.மி மற்றும் மடிகெரியிலிர்ந்து 48 கி.மி தொலைவில் உள்ளது. இதுவே காவிரி ஆற்றின் மூலம். இத்திருத்தலத்தில் தோன்றும் காவிரி ஆறு கர்நாடகம் மற்றும் தமிழக மாநிலங்களில் பாய்ந்தோடி வங்கக் கடலில் சேர்கிறது.
படிமம்:Talakaveri.jpg
காவிரி ஆறு (Cauvery river) இந்தியத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ரூரல், சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாவும் தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி , தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது. இது பொன்னி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது.
படிமம்:Kaveri in hogenakkal.jpg
கபினி, ஹேமாவதி, ஹாரங்கி , லட்மண தீர்த்தம் , ஆர்க்காவதி , சிம்சா, சொர்ணவதி ஆகியவை கர்நாடக பகுதியில் பாயும் துணை ஆறுகள். பவானி, அமராவதி, நொய்யல் ஆகியன தமிழக பகுதியில் பாயும் துணை ஆறுகள் ஆகும்.இவற்றில் சொர்ணவதி என்னும் ஆற்றைச் சிலப்பதிகாரம் பொன்னி என்னும் தூய தமிழ்ப்பெயரால் குறிப்பிடுகிறது. 'பொன்படு நெடுவரை'ப் பகுதியில் இது தோன்றுவதால் இதற்குப் பொன்னி என்று பெயர். சங்ககாலப் புலவர் ஆவூர் மூலங்கிழார் பாடல் (புறநானூறு 166) இதனைத் தெளிவுபடுத்துகிறது.
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3d/Hogenakkal_Tamil_Nadu.JPG/325px-Hogenakkal_Tamil_Nadu.JPGhttp://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/4/45/Mettur_Dam.jpg/250px-Mettur_Dam.jpg
மேட்டூர் அணை, கிருஷ்ணராஜ சாகர் அணை, கல்லணை மற்றும் மேலணை ஆகியன காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைகளாகும். பல தடுப்பணைகளும் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன.கர்நாடக மாநிலத்தில் சிவசமுத்திர அருவியும் தமிழகத்தில் ஒகேனக்கல் அருவியும் காவிரியில் உள்ள இரு அருவிகளாகும்கர்நாடக மாநிலத்தில் ஸ்ரீரங்கப்பட்டணம் மற்றும் சிவசமுத்திரம் ஆகிய இரு தீவுகளையும் தமிழகத்தில் ஸ்ரீரங்கம் (திருவரங்கம்) தீவையும் காவிரி ஆறு கொண்டுள்ளது. இந்த மூன்றில் ஸ்ரீரங்கப்பட்டணம் தீவானது மிகப்பெரியது, இது திப்பு சுல்தானின் தலைநகராக விளங்கியது. இம்மூன்று தீவுகளிலும் அரங்கநாத சுவாமிக்கு கோயில் உள்ளது மற்றொரு சிறப்பு. ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள அரங்கனை ஆதிரங்கன் என்றும் சிவசமுத்திரத்தில் உள்ள அரங்கனை மத்தியரங்கன் என்றும் திருவரங்கத்தில் (ஸ்ரீரங்கம்)உள்ள அரங்கனை அந்தரங்கன் என்றும் அழைப்பர்..
http://www.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News_39323061705.jpg
குடகு மாவட்டத்திலுள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் தலைக்காவிரி என்ற இடத்தில் காவிரி உற்பத்தியாகிறது. ஹாரங்கி ஆறானது குடகு மாவட்டத்தில் காவிரியுடன் இணைந்து மாண்டியா மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்தை அடைகிறது. கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கம் மைசூருக்கு அருகில் உள்ளது. ஹேமாவதி மற்றும் லட்சுமண தீர்த்தம் ஆகிய 2 ஆறுகளும் கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்தில் காவிரியுடன் இணைகின்றன.
 http://180.179.36.240:82/Articles/2011/Aug/763a8eee-a7fd-4604-bbc3-11e25402a74c_S_secvpf.gif
கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்திலிருந்து வெளிவரும் காவிரி ஸ்ரீரங்கப்பட்டணம் தீவை உண்டாக்குகிறது. பின்பு கபினி மற்றும் சொர்ணவதி ஆறுகள் காவிரியுடன் இணைந்து கொள்கின்றன. பின் காவிரி சிவசமுத்திரம் தீவை உண்டாக்குகிறது. இங்கு இரு பிரிவுகளாக பிரியும் காவிரி ஒரு புறம் ககனசுக்கி (Gaganachukki)அருவியாகவும் மறுபுறம் பாறசுக்கி அருவியாகவும் விழுகிறது. வலப்புறம் அமைந்த ககனசுக்கி அருவியில் 1902ல் ஆசியாவின் முதல் நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு கோலார் தங்க வயலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. பின் காவிரியுடன் சிம்சா மற்றும் அர்க்கவதி ஆறுகள் இணைகின்றன. அர்க்கவதி ஆறு இணைந்தவுடன் காவிரியானது ஆழமான குறுகிய பாறைகளின் வழியாக பாய்ந்து தமிழகத்தை அடைகிறது. ஆடு கூட இங்கு காவிரியை தாண்டிவிடலாம் என்பதால் இவ்விடத்திற்கு மேகேதாத் (Mekedatu) என்று பெயர், இதை ஆடு தாண்டும் காவிரி என்று அழைப்பர். ( தெய்வ ஆடு மட்டுமே தாண்ட முடியும்.
படிமம்:Talakaveri valley shola.jpg
மிக குறுகிய அகலமுடைய ஆடு தாண்டும் காவிரியிலிருந்து தமிழகம் வரும் காவிரியானது பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது. பின் காவிரியானது மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இங்கிருந்தே தமிழக காவிரி பாசனம் தொடங்குகிறது. மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன் பவானி என்னுமிடத்தில் பவானி ஆறு கலக்கிறது. ஈரோடு நகரை கடந்து செல்லும் காவிரியுடன் கொடுமுடி அருகேயுள்ள நொய்யல் என்னுமிடத்தில் நொய்யல் ஆறு கலக்கிறது.
 http://media.dinamani.com/article1417052.ece/alternates/w460/cauvery.jpg
 அமராவதி ஆறானது கரூர் அருகேயுள்ள கட்டளை என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது. கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பாயும் காவிரி அகண்டு காணப்படுவதால் அங்கு பாயும் காவிரியை அகண்ட காவிரி என்பர். முசிறி & குளித்தலை நகரங்களை தாண்டிச்செல்லும் காவிரி முக்கொம்பு என்னும் இடத்தில் மேலணையை அடைகிறது. இங்கு காவிரி இரண்டு கிளைகளாக பிரிகிறது. ஒரு கிளைக்கு கொள்ளிடம் என்றும் மற்றொன்றுக்கு காவிரி என்றும் பெயர்.
 http://www.vikatan.com/news/images/cauveri(4).jpg
 வெள்ள காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்படுகிறது. கொள்ளிடம் காவிரியின் வெள்ள வடிகாலாக இருப்பதால் பெரும்பாலும் வறண்டே காணப்படும். கொள்ளிடம் மற்றும் காவிரிக்கு நடுவில் திருச்சிக்கு (திருச்சிராப்பள்ளி) அருகே ஸ்ரீரங்கம் (திருவரங்கம்) தீவை உருவாக்கிய பின் காவிரியானது கல்லணையை அடைகிறது. கல்லணையிலிருந்து செல்லும் காவிரி பல சிறு கிளைகளாக பிரிந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி வங்கக்கடலில் கலக்கிறது. காவிரி டெல்டாவில் அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, புதுஆறு, மன்னியாறு ஆகிய பெயர்களால் காவிரியின் சில கிளைகள் அழைக்கப்படுகின்றன. தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் மாவட்டங்கள் & புதுச்சேரியின் காரைக்கால் பகுதி ஆகியவை காவிரி டெல்டாவை சேர்ந்தவை.
http://www.tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_87412226201.jpg
காவிரி நீரானது பாசனத்திற்காகவும், மக்களின் அன்றாடத்தேவைகளுக்காகவும் நீர் மின்உற்பத்திக்காகவும் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.
காவிரியின் குறுக்கே பல அணைகளும் குடிநீர் நீரேற்று நிலையங்களும் தடுப்பணைகளும் நீர்மின்நிலையங்களும் கட்டப்பட்டுள்ளன.
காவிரி ஆற்றின் சிவனசமுத்திர அருவியின் இடது பக்கம் 1902-இல் அமைக்கப்பட்ட நீர்மின்நிலையமே ஆசியாவின் முதல் நீர்மின்நிலையம் ஆகும்.
http://www.mazhalaigal.com/images/issues/mgl0712/im0712_ranganathar.jpg
காவிரி டெல்டாவில் புதுச்சேரியின் காரைக்கால் பகுதி உள்ளதால் காவிரி கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நேரடியாக பாய்கிறது. நீர் பங்கீடு என்று வரும்போது கேரள மாநிலமும் உரிமை கோர காரணம் காவிரியின் துணை ஆறாகிய கபினி கேரளாவில் உற்பத்தியாவதும், கபினி மற்றும் அதன் துணை ஆறுகளின் நீர் பிடிப்பு பகுதிகளும் அமராவதி மற்றும் பவானியின் நீர் பிடிப்பு பகுதிகளும் கேரளாவில் இருப்பதே.

    கர்நாடகாவில் காவிரியின் நீளம் = 320 கிமீ
    தமிழ்நாட்டில் காவிரியின் நீளம் = 416 கிமீ
    கர்நாடக தமிழக எல்லையில் காவிரியின் நீளம் = 64 கிமீ

ஸ்ரீரங்கப்பட்டணம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள நகராகும். மைசூர் நகருக்கு அருகில் அமைந்த இந்நகரம் சமய , பண்பாட்டு & வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும்.மைசூரிலிருந்து 13 கிமீ தொலைவில் இந்நகரம் உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டிலிருந்து வெளிவரும் காவிரி 8 கிமீ பயணித்து உண்டாக்கிய தீவில் இந்நகரம் உள்ளதால் இதை தீவு நகரம் எனலாம். காவிரியில் அமைந்த தீவுகளிலேயே இது தான் பெரிய தீவு ஆகும். மைசூரை பெங்களூருடன் இணைக்கும் தொடர் வண்டிப்பாதையும் சாலையும் இதன் ஊடாக செல்லுகின்றன
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/ba/RanganathaTemple.jpg/250px-RanganathaTemple.jpg
இங்கு அமைந்த அரங்கநாதசாமி கோயிலின் காரணமாகவே இந்நகருக்கு ஸ்ரீரங்கப்பட்டணம் என்ற பெயர் ஏற்பட்டது. அரங்கநாதசாமி இங்குள்ளதால் இந்நகரம் வைணவர்களின் புனித இடமாகவும் விளங்குகிறது. இங்குள்ள அரங்கநாதசாமி கோயில் கங்க மன்னர்களால் 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பின் வந்த போசள மற்றும் விஜய நகர அரசுகளால் மேலும் புணரமைக்கப்பட்டு அவர்கள் பாணி கட்டட கலையும் இக்கோயிலில் கலந்துள்ளதுஇங்குள்ள அரங்கனை ஆதிரங்கன் எனவும் சிவசமுத்திரத்தில் உள்ள அரங்கனை மத்தியரங்கன் எனவும் திருவரங்கத்தில் உள்ள அரங்கனை அந்தியரங்கன் எனவும் அழைப்பர்.
http://www.tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_82410395146.jpg
.
விஜய நகர பேரரசின் கீழ் ஸ்ரீரங்கப்பட்டணம் சிறப்பு இடத்தை பெற்றிருந்தது. இங்கிருந்து அவர்கள் மைசூர் மற்றும் தலக்காடு போன்ற அரசுகளை நிர்வகித்தனர். பிற்காலத்தில் விஜய நகர பேரரசின் பலம் குறைந்ததை கண்டு மைசூர் மன்னர் இராஜா உடையார் விஜய நகர பேரரசை எதிர்த்து அவர்களின் ஸ்ரீரங்கப்பட்டண தளபதி இரங்கராயரை தோற்கடித்து விஜய நகர பேரரசிலிருந்து சுதந்திரம் அடைந்து மைசூர் பேரரசுக்கு அடிகோலினார். விஜய நகர பேரரசின் தளபதியை தோற்கடித்த பிறகு 1610 ல் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் 10 நாட்களுக்கு தசரா திருவிழாவை கொண்டாடி தன் பலத்தையும் மைசூர் அரசின் சுயசார்பையும் பறைசாற்றினார்.
http://dosa365.files.wordpress.com/2012/10/thiruvarangam_cauvery.jpg?w=440&h=240&crop=1
ஹைதர் அலி மற்றும் திப்பு சூல்தானின் காலத்தில் ஸ்ரீரங்கப்பட்டணம் அவர்களின் தலைநகராக விளங்கியது. திப்பு சூல்தானின் அரண்மனை மற்றும் ஜும்மா மசூதி ஆகியவை இந்திய இசுலாமிய கட்டகலைக்கு சான்றாக உள்ளன.இது நான்காம் ஆங்கில மைசூர் போரின் கடைசி சமராகவும் அமைந்தது. இச்சமரின் போது ஆங்கில படையை ஜெனரல் ஹாரிஸ் வழிநடத்தினார். திப்புவின் பிரதம மந்திரி சித்திக்கின் துரோகம் காரணமாக ஆங்கிலப்படைகள் குறைந்த எதிர்ப்புடன் எல்லைச்சுவரை கைப்பற்றினர். அடுத்ததாக குண்டு துகள்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் நீர் புக வைத்ததால் அவை பயனற்று போயின. திப்புவின் மரணத்தோடு இப்போர் முடிவுக்கு வந்தது.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5S1xsDnGQmS-xxCtrMoUKx2t33hHLDpThrAz-PdgAnLU20KaqGHncr1fJYNtFs7T36VF1DZB-DxbH-eyVqMNUHnABk67PNIwABxLfeiRXApAQarHEm9FsTMU35uvcW3Wndw1NhbWqofI/s640/DSCF0478.JPG
 கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் பிரம்ம கிரியில் தலைக்காவிரி என்னும் இட த்தில் காவிரி உருவாகிறது.
பிறப்பிடம்:-
இந்தியத் தீபகற்பத்தின் தெற் குப் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள்ள மேற் குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச்சேர்ந்த தலைக் காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்று கிறது.
காவிரியின் நீளம்:-
காவிரியின் மொத்த நீளம் 800 கிலோ மீட்டர். இதில் 320 கி.மீ. கர்நாடகத்திலும், 416 கி.மீ. தமிழ்நாட்டிலும் பாய்கிறது. இரு மாநில எல்லையிலும் 64 கி.மீ. தூரம் ஓடி இரு மாநிலத் துக்கும் பொதுவான நதி  காவிரி என்று சொன்னால் மிகையாகது.
காவிரி ஓடும் இடங்கள்:-
கர்நாடக மாநிலத்தில் குட கு, ஹாசன், மைசூர், மா ண்டியா, பெங்களூர் ரூரல், சாம்ராஜ் நகர் ஆகிய மாவ ட்டங்கள் வழியாக காவிரி ஓடுகிறது.
தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திரு ச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென் று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கல க்கிறது. இது பொன்னி ஆறு என் றும் அழைக்கப்படுகிறது.
துணை நதிகள்:-
ஹேமாவதி, ஹேரங்கி, லட்சு மண தீர்த்தம், கபினி, சுவர்ண வதி என்ற பெயரில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் துணை நதிகள் காவிரியுடன் வந்து கலக்கின்றன.கர்நாடக மாநிலத்தில் சங்கமம் ஆகும் இந்த நதிகள் பெரிய கா விரியாக உருவெடுக்கிறது. இதி ல் சிம்ஷா, அர்க்காவதி ஆகிய ஆறுகளும் சேர காவிரி மிகப் பெரிய நதியாக கம்பீரமாக தமி ழக எல்லை க்குள் நுழைகிறது.மேட்டூருக்கு கீழே தெற்கு நோ க்கி திரும்பும் காவிரியுடன் பவா னி, நொய்யல், அமராவதி ஆகிய துணை நதிகள் கலக்கிறது. இதனால் காவிரி மேலும் விரிவடை கிறது.
அணைக்கட்டுகள்:-
மேட்டூர் அணை, கிருஷ்ண ராஜ சாகர் அணை, கல்லணை மற்றும் மேலணை ஆகியன காவிரி ஆற்றின் மீது கட்ட ப்பட்டுள்ள அணை களாகும். பல தடுப்பணைகளும் காவிரி யின் குறுக்கே கட்டப்பட்டு ள்ளன.
2 அருவிகள்:-
கர்நாடக மாநிலத்தில் சிவ சமுத்திர அருவியும் தமிழகத் தில் ஒகேனக்கல் அருவியும் காவி ரியில் உள்ள இரு அருவிகளா கும். ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகும்.
கொள்ளிடம், கல்லணை:-
திருச்சி மேல் அணை அமை ந்துள்ள இடத்துக்கு முன்பு அது 2 கிலோ மீட்டர் அளவுக்கு அக ன்று அகண்ட காவிரி ஆகிறது. மேல் அணையில் இரு பிரிவு களாக பிரிந்து வடக்கு பகுதி யில் உள்ள பிரிவு கொள் ளிடம் ஆகிறது.தென்பகுதி, காவிரியாக ஓடி கல்லணைக்கு செல்கிறது. அங் கிருந்து வெண்ணாறு பிரிகிறது. பின்னர் காவிரியின் இரு நதிகளும் பல கிளைகளாக பிரிந்து 36 கிளை நதிகளாக பாய்ந்து வளங்களை வழங்குகிறது. இறுதியில் பூம்புகார் அருகில் சிறிய ஓடை யாக மாறும் காவிரி கடலில் கல க்கிறது.
புனித நதி:-
கங்கை புனித நதி. கங்கையில் மூழ்கினால் பாவங்கள் தொலை யும் என்பது புராணங்கள் கூறும் செய்தி. சிவபெருமானின் ஜடா முடியினுள் கங்கை இருக்கி றாள். அதனால் சிவனுக்கு “கங்காதரன்” என் றும் ஒரு பெயர் உண்டு. கங்கையைக் கடவுள் நதி என்று கம்பன் போற்றுகிறான். கங்கையை விடப் புனிதமான ஒரு நதி இருக்கிறது என்று புராணங்களும், மகரிஷிகளும் கூறுகிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா, ஆனால் அது தான் உண்மை.

“கங்கையிற் புனிதமாய கா விரி” என்கிறார் ஆழ்வார்.
சேர நாட்டினரான இளங்கோ வடிகள்

“மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப
மணிப்பூ ஆடை அது போர்த்தும்
கருங்கயற்கண் விழித்து ஓல்கி
நடந்தாய் வாழி! காவேரி!
கருங்கயற்கண் விழித்து ஓல்கி
நடந்த எல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி காவேரி!”
இதன் பொருள் என்ன தெரியுமா?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSzO3sHDN5ko8bJZkMQKkxMGv-RTjukEvz2-SHtHdgrAuZD4vR-ALEsl0pkzWhfHvR1X1j6bRSR55Ib1-9c0tCFf6XiSO9QDb99ODa-x1c5LTIi2Zn_izmhWPxze43_tWVQsNjpeJjj8hN/s400/darasuram7.jpg
“காவிரி நடை பயின்று வருகின்ற வழி யெல்லாம் கழனிகள் எல் லாம் பச் சைப் பசுங் கம்பளங்கள் போல் திகழ் கின்றன. புனல் பெருகும் வழி யெல்லாம் புது வெள்ளத்தினைக் கண்டு களித்து பூஞ் சோலையிலே மயில்கள் நாட்டியங்கள் புரிய, இன்னிசை பாடுகின்ற குயில்களும்” என்று சேர நாட்டி னரான இளங்கோவடி களும், கம்பனுக்கு இணையாக ரசித்தி ருக்கிறார்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtNXoZxPw632Ze_oX2GgKQtr-Df4uMCmyIF13vpQAvGLtWS3d0jR42kfg1tuHxmaukWliZXVOUDVKOlCswU8iCHHu4gNItvt59weiQxffPakTwL7ObHWod-BEfMSZjcWhpWi7zhrmYMMan/s320/T_500_375.jpg
`காவேரி தீரமு நன்னு பாவனமு ரங்க புரிநீ” என்று தியாகய்யர் தமது கிருதியில் பாடியுள்ளார்.

காவேரிக்கும், கொள்ளிடத்திற் கும் நடுவே ஸ்ரீரங்கம் இருக்கிறது. இங்கு சுகமாக ஸ்ரீரங்கநாதர் பள்ளி கொண்டிருக்கிறார். “அவத்தடா காவேரி இவத்தடா கொள்ளிடம்” என்ற வார்த்தை சரியானது தா னே?
காவேரியம்மன் கோவில்:-
அதைவிட மிக முக்கியமான தாக விளங்குவது சிறப்பு வாய் ந்த காவே ரியம்மன் கோயில்! ஆம் காவிரி த்தாய் சக்தியின் வடிவமாகி நிற்கும் திருக்கோ யில் இங்குதான் உள்ளது. நீண்ட நெடுங்கால த்திலேயே காவிரித் தாய்க்குக் கோயில் அமை த்து தமிழ் மக்கள் வழிபட்டு வருகிறார்கள். பிற்காலத்தில் சிலர் தேச நாதி ஸ்வரர் கோயில் என்று எழுதி வைத்திருக்கலாம். ஆனா ல், இப்பொழுதும் மக்கள் காவே ரியம்மன் கோயில் என்றே அ ழைக்கின்றார்கள். காவிரி அம் மையும், காவிரியப்பனும் இ ணைந்து அமர்ந்துள்ள சிலை யை மக்கள் போற்றி வழி படு கின்றனர். இப்பகுதியில் வாழும் மக்கள் பலருக்கு காவிரியப்பன், காவிரியம்மாள் என்ற பெயரே வை க்கப்பட்டுள்ளது. அடுத்து பிரபலமான பெயராக மாதையனும், மாதம்மாளும் காணப்படுகிறது.
சிவாலயங்கள்:-
காவிரி தோன்றும் இடத்திலிரு ந்து கடலில் கூடுமிடம் வரை காவிரி செல்லும் வழிநெடுக சிவாலயங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது. காவேர முனிவன் காவிரியைக் கொண் டு வரக் காரணமான வன் என் பது புராணச் செய்தி. அந்தக் காவேரமுனிவரே அகத்திய முனி வர். காவிரிக் கரையில் அகத்திய முனிவரால் வணங்கப் பெற்ற ஐந்து புண்ணிய சிவ ஸ்தல ங்களுள் காவிரியம்மன் கோயிலும் ஒன்று. இந்தப் பூதலிங்கங் களையும் காவிரி அம்மனையும் இவர் வணங்கினார் என்பது மக்களிடத்தில் வழங் கப்படும் நம்பிக் கைகளில் ஒன்று.

சக்தியின் வடிவமான காவிரி அன்னை இருக்கும் திருக்கோயிலில் சிவன் இல் லாமலா போய்விடுவார்? இங்கு அமைக் கப்பட்டுள்ள ஐந்து சிவலிங்கம் பிரசித்தி பெற்ற லிங்கங்களின் வரிசையில் போற் றப்படுகிறது. பெரிய பெரிய அளவில் ஐந்து லிங்கங்கள் ஆலயத் திற்குள் ஒரே இடத் தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கங் களை ஐந்து பூத லிங்கங்கள் என்று சிவன டியார்கள் போற்றி வணங்குகின்றனர். இங்கு நிறுவப்பட்டுள்ள நந்திச்சிலை சிற ந்த கலை நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள சிறந்த நந்தி களில் இதுவும் ஒன்று.
திருச்சி காவேரியில் ஆடிப்பெருக்கு விழா:-
திருச்சி மாவட்டத்தின் பல்வே று இடங்களில் இருந்தும் பொது மக்கள் காவிரி ஆற்றுக்கு வருவ துண்டு.அதுமட்டுமல்ல பக்கத்து மாவ ட்டமான புதுக்கோட்டை, திண்டுக்கல் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் பொ துமக்கள் புதுமண தம்பதிகள் காவிரி ஆற்றுக்கு வருவார்கள்.
ஆடிப்பெருக்கையொட்டி திருச் சி அம்மா மண்டபம், காவிரி ஆற்றின் ஓடத்துறை படித்துறை ஆகிய இடங்களில் இன்று அதிகாலை 3 மணி முதலே போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhB0O79AG0uyjTeOKqSFyfnvhl2XDkDKnysjOn4IJ79R0zn2Qo6GUnilecy0WChPVxMR6oG2H9L6wuGYUVNdHk2HFkqvwKepBwaSMkQtF3Q2TqdngwglPZGgzzV1z7pqb4jiXnxCN87p0E1/s1600/srirangam+temple.jpg
இதுதவிர திருச்சி, திருவரங்கம் தீயணைப்பு படையினரும் தயார் நிலையில் இருந்தனர். அதி களவு தண்ணீர் வருவதால் நீச்சல் தெரியாதவர் களை தண்ணீர் அடித்து சென்று விடாமல் அவ ர்களை காப்பாற்ற நீச்சல் வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்படுவர்.

புதுமண தம்பதிகள் மற்றும் தம்பதிகள் எப்படி காவிரி ஆற்றுக்கு வந்து தங்கள் தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும் என்று காவிரி தாயை வண ங்கி பூஜை செய்து வருகிறார்களோ அதே போல திருவரங்கம் ரெங்க நாச்சியார் தாயாரும் காவிரிக்கு வந்து காவிரி தாயை வண ங்கி புது மாலை மாற்றி கொள்கிறார்.
http://www.dailythanthi.com/dt/sites/default/files/trichy_2.jpg
ஆடிப்பெருக்கையொட்டி திருவரங் கம் நம்பெருமாள் நேற்று அதி காலை பூஜைமுடிந்து பல்லக்கில் திருவரங் கம் அம்மா மண்டபத் துக்கு வருவார். அங்கு பக்தர்களுக்கு காட்சி அளிப் பார். திருவரங்கம் அம்மா மண்டபத் தில் காவிரி தாயை வணங்கிய பக்தர் கள் மற்றும் புதுமண தம்பதிகள் அம் மா மண்டபத்தில் எழுந்தருளிய பெரு மாளை தரிசித்து செல்வர். ஆடிப்பெருக்கை கொண்டாடும் பக்தர் களுக்கு ஒரு நாள் முழுவதும் பெருமாள் அம்மா மண்டபத்தில் தங்கி இருநது காட்சி தருவார். திருவரங்கம் கோயில் சார்பில் காவிரி தாய்க்கு பூஜை செய் யப்பட்டு,அதன் பிறகு காவிரி தாய்க்கு படை யல் செய்து பட்டு சேலையும் வழங்கப்படும்.
http://www.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News_86188471318.jpg
பின்னர் திருவரங்கம் நம்பெரு மாள் அம்மா மண்டபத்தில் இரு ந்து புறப்பட்டு திருவரங்கம் வந்தடைந்து நம்பெருமாள் காட்சி அளி ப்பதால் புதுமணத் தம்பதிகள் பெரும்பாலோர் அம்மா மண்ட பத்துக்கு வந்திருந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றியதை காண முடி யும்.
http://www.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News_59134638310.jpg
அம்மா மண்டபத்துக்கு நேற்று பொதுமக்கள் வருகையையொ ட்டி அம்மா மண்டபம் சாலை முழுவதும் தரைக்கடைகள் ஏரா ளமாக அமைக்கப்பட்டு இருக் கும். அந்த கடையில் காவிரி தாய்க்கு ஏற்ற பழ மற்றும் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டு வியா பாரம் நடக்கும். இதே போல காவிரி ஓடத்துறை படித்துறை செல் லும் இடங்களிலும் வியாபாரம் மும்முரமாக நடக்கும். இதுபோல தஞ்சை. திருவை யாறு, பூம் புகார், நீடாமங்கலம், பாபநாசம், முசிறி, குளித்தலை, கரூர் ஆகிய இடங்களிலும் ஆடிப்பெ ருக்கு விழா சிறப்பாக நடக்கும்.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட் டம்:-
ஒகேனக்கல் பகுதி தமிழகத்துக் குதான் சொந்தமானது. இ‌தி‌ல் எ‌ந்த‌ வித ச‌ந்தேகமு‌ம் வே‌ண்டா‌ம்.ஒகேன‌க்க‌ல் க‌ர்நாடகாவு‌க்கு சொ‌ந்த‌ம் எ‌ன்று அ‌ம்மா‌நில அரசு இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌ வி‌த்து வரு‌கிறது. ஒகேனக்கல் பகுதி யானது த‌‌மிழக‌த்து‌க்கே‌ சொ‌ந்த‌ம் எ‌ன்பதை ‌ நிரூ‌பி‌க்க எ‌ங்க‌ளிட‌ம் தகுதியான ஆவண‌ங்க‌ள் உ‌ள் ளன.
இந்த கூட்டுக்குடிநீர் திட்டம் என்பது இப்போது முடிவெடுத்து இப் போதே செயல்படுத்த ஆரம்பிக்கவில்லை. கா‌வி‌ரி‌யி‌ல் இரு‌ந்து த‌‌மிழக‌ த்து‌க்கு‌ச் சொ‌ந்தமான 1.4 டி.எம்.சி. தண்ணீர் பெறுவதற்காக, இர‌ண்டு மாவ‌ட்ட‌ங் க‌ளி‌ல் வாழு‌ம் 30 ல‌ட்ச‌ம் ம‌க்க‌ளி‌ன் தாக‌த் தை‌ ‌தீ‌ர்‌க்கவே கொ‌ண்டு வர‌ப் ப‌ட்டது.
மேட்டூர் அணை:-
மேட்டூர் அணை காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணை யாகும். இது சேலம் மாவட்டத் திலுள்ள மேட்டூரில் அமைந்து ள்ளதால் அவ்வாறு அழைக்கப் படுகிறது. இது அணையைக் கட் டிய ஸ்டேன்லி என்பவரின் பெய ரால் ஸ்டேன்லி நீர்த் தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
மேட்டூர் நீர்த்தேக்கம் கட்டி முடி க்கப்பட்ட போது, இது தான் ஆசி யாவிலேயே மிக உயரமானதும் உலகிலேயே மிகப்பெரியதுமான ஏரியாக விளங்கியது.இந்த அணை 1934ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும்.
கல்லணை:
கல்லணை இந்தியாவின் தமிழ் நாட் டில் உள்ள ஒரு பழமையான அணை யாகும். இது திருச்சிக்கு அருகில்  காவிரி ஆற்றின் குறுக்கே கட்ட ப்பட்டுள்ளது.
கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 40 முதல் 60 அடி வரை உள்ளது. 15 முதல் 18 அடி ஆழத்தில் நிறுவப்பட்ட இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப் படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது பெரிய அதிச யம் ஆகும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9v3TecpE4EtQtciqyDfgXclG82LKKS-GMQ8YT1rLViYyKI-_EuTd7eJuLXQc9YQVGoaaJxYrwd_jvPWtnHdLCHN66M2XVRgv1D5Nq_pZ6_cuSqfqIZ1Khhrs0BfzsY10KtLFrtAUgRZ4S/s320/T_500_351.jpg
இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் கட்டப்பட் டது. தற்போது புழக்கத்தில் இரு க்கும் அணைகளில் இதுவே மிகவும் பழமையானது என்று கருதப் படுகிறது. இதுவே மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது.
விவசாயம்:-
காவிரி டெல்டா மாவட்டங்களா ன தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில்  முக்கிய தொ ழிலாக விவசாயம் உள்ளது. அதில் நெல் சாகுபடியே முக்கிய தொழிலாகும். நெல் சாகுபடிக்கு மேட்டூரி லிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டால் அது காவிரி டெல்டா பகுதி யில் கடைமடை பகுதிவரை சென்றால்தான் அதில் சாகுபடியை முழுமை யாக செய்ய இயலும்.

தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் திருச்சி, புதுக்கோட் டை, கடலூர் எனச் சில பகுதி களை இணைத்துக் காவிரி நீர்ப் பாசன மண்டல மாகப் பிரித் திருக்கிறார்கள். இந்தக் காவிரி நீர்ப்பாசன மண்டலத்தில் குரு வை, சம்பா, தாலடி என்னும் மூன்று பருவ மும் ஒவ்வொரு பருவத்திற் கும் ஏற்ற நெல் ரகங்கள் உரப் பரிந்துரை, பயிர்ப் பாதுகாப்பு முறை ஆகியவற்றைப் பற்றிக் கையேடு தயார் செய்து விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறையினரால் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளும் அந்தப் பரிந்து ரைகளைப் பின்பற்றி அவற்றில் குறிப்பிட் டுள்ள 90% மகசூலைப் பெறுகிறார்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக