மருங்கூர் அகழாய்வில் சோழர்கால கால ஆவணங்கள் கண்டெடுப்பு - முனைவர் கோ.ஜெயக்குமார்
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் 2024ம் ஆண்டிற்கான அகழாய்வுப் பணிகள் எட்டு இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. கொந்தகை, வெம்பக்கோட்டை, கீழ்நமண்டி, பொற்பனைக்கோட்டை, திருமலாபுரம்,சென்னானூர், கொங்கல்நகரம், மருங்கூர் ஆகிய இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. மருங்கூா் கிராமத்தைச் சோ்ந்த ஒருவரின் விவசாய நிலத்தில் முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பல்வேறு தொன்மையான பொருள்கள் கிடைக்கப் பெற்றன.
அங்கு மேலும் ஆய்வு மேற்கொண்டதில்,2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தமிழ் பிராமி எழுத்துகள் உடைய பானை ஓடுகள் உள்ளிட்ட பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே இங்கு அரசு அகழாய்வு பணிகளை நடத்த வேண்டும் என தொல்லியல் ஆா்வலா்கள் கோரிக்கை வைத்தனர்.
மருங்கூர் அகழாய்வில் செம்பினால் ஆன அஞ்சனக்கோல் கண்டெடுப்பு
கடலூர் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில் இராசராசன் காலச் செம்புக் காசு, சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகள், பச்சை நிறக் கண்ணாடி மணி, ரெளலட்டட் வகைப் பானை ஓடுகள் போன்ற தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன.
கண்களுக்கு மைத்தீட்டுவதற்கு உபயோகப்படுத்தப்படும் செம்பினால் ஆன அஞ்சனக்கோல் 127 செ.மீ ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த அஞ்சனக்கோல் 4.7செ.மீ நீளமும் 3.6 கிராம் எடையும் கொண்டுள்ளது
பண்ருட்டியிலிருந்து 12 கி.மீ., கடலூரிலிருந்து 32 கி.மீ. மேற்கே அமைந்துள்ள மருங்கூரில், 10 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டன. இதில் 8 வாழ்விடப் பகுதியிலும், 2 ஈமச்சின்னப் பகுதியிலும் அமைந்தன.
11 ஈமத்தாழிகள், 2 சேமிப்புக் கொள்கலன்கள், கருப்பு-சிவப்பு மற்றும் சிவப்பு வண்ணப்பூச்சுப் பானை ஓடுகள், கீறல் குறியீடுகளுடன் கூடிய 29 பானை ஓடுகள் கிடைத்தன. செப்பு, இரும்பு, கல், கண்ணாடி, சுடுமண் பொருட்கள், மணிகள், இரும்பு வாள்கள் உள்ளிட்ட தொல்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன. ‘அதியகன்’ என்ற தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாகும்.
இரும்புக் கத்தி, அம்புமுனைகள், ஆணிகள் மற்றும் வாள்கள் சூதுபவளம் (carnelian), அகேட் (agate), கண்ணாடி மணிகள், பச்சை நிறக் கண்ணாடி மணி மற்றும் சங்கு வளையல் துண்டுகள். ரவுலட்டட் (Rouletted) வகைப் பானை ஓடுகள், கருப்பு - சிவப்பு நிறப் பானை ஓடுகள் மற்றும் தமிழ்-பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட ஓடுகள் ராஜராஜ சோழன் காலத்துச் செம்புக் காசுகள், சுடுமண் வட்டச் சில்லுகள் (hopscotches), அஞ்சனக் கோல் மற்றும் முதுமக்கள் தாழிகள்.














கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக