செவ்வாய், 29 செப்டம்பர், 2026

தென்காசியில் பிறந்து காசியின் வளச்சிப் பணிகளின் முக்கிய அதிகாரியாக செயல்படும் திரு.ராஜலிங்கம் ஐஏஎஸ் அவர்களுடன் ஒரு சந்திப்பு -முனைவர் கோ.ஜெயக்குமார்.

தென்காசியில் பிறந்து காசியின் வளச்சிப் பணிகளின் முக்கிய அதிகாரியாக செயல்படும்  திரு.ராஜலிங்கம் ஐஏஎஸ் அவர்களுடன் ஒரு சந்திப்பு -முனைவர் கோ.ஜெயக்குமார்.

தமிழகத்தின் கடைசி மாவட்டங்கள் ஒன்றான தென்காசியில் பிறந்து உத்தரப்பிரதேச மாநிலங்களுக்கும் காசி கிழக்கு மண்டலத்தின் ஆணையராக பணியாற்றி காசியின் வளர்ச்சிக்கு பெருமை சேர்த்து வரும் திரு ராஜலிங்கம் ஐஏஎஸ் அவருடைய சந்திப்பு மற்றும் அவர் அளித்த பல்வேறு தகவல்கள் ஒரு அரசாங்கத்திற்கு அதிகாரி எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார். அவரது அறிவும் அறிவு கூர்மையும் பரந்த வரலாற்று தொல்லியல் சார்ந்த புரிதலும் இந்தியாவிற்கு தேவை என்பதை தனது உரையின் மூலமாக எடுத்துரைத்தார். அவற்றில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

உலகின் மிக பழமையான வாழும் நகரமான காசியை அதன் வரலாற்றை பாதுகாக்க எந்தவித கட்டுமானங்களையும் சேதப்படுத்தாமல் இருக்க பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் உத்தர பிரதேச அரசு. 

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி ரயில் நிலையத்திலிருந்து காசி விஸ்வநாதர் கோயில் அருகே வரையில் ரோப் கார் சேவைக்காக சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நான்கு கிலோ மீட்டருக்கு, 16 நிமிடங்களில், ஒரு ரோப் கார் பெட்டியில் 10 பேர் பயணம் செய்யும் விதத்தில், ஒரு பயணிக்கு 15 கிலோ உடமைகளோடு, ஒரு நபருக்கு 50 ரூபாய் கட்டணத்தில் பயணம் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. எந்த வித நிலை ஆக்கிரமிப்பும் இல்லாமல், நகரபகுதியில் குடியுருப்புகளுக்கு மேலே செல்கிறது. நிறுத்தங்கள் மற்றும் தலைமையிடத்திற்கான மையம் அமைக்க தேவையான இடத்தை மட்டுமே கொண்டு அமைத்துள்ளனர். காசி கிழக்கு மணடல ஆணையர் திரு.ராஜலிங்கம் பேட்டி.
                                           
                                                    
நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் பயணம் செய்யக்கூடிய அளவில், பாதுகாப்பு தொடர்பாக ஸ்விட்சர்லாந்து நிறுவனம் மற்றும் ஸ்பெயின் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்யப்பட்டு, 15 ஆண்டுகளுக்கு 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து செலவுகளையும் பராமரிப்புகளையும் அந்த தொகையிலே செய்யாது கொள்ளும் விதமாக, பாதுகாப்பான ஒரு சேவையை மக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருக்கிறது உ.பி.அரசு. நவம்பர் மாதம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை திறந்து வைத்து மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.அதற்கான 95சதவீத பணிகள் நிறைவடைந்து, சோதனை ஓட்டம் முடிந்து, தயார் நிலையில் உள்ளது. காசி கிழக்கு மணடல ஆணையர் திரு.ராஜலிங்கம் பேட்டி.

                                          

இதே போல சர்வதேச தரத்தில் காசியில் உருவாக்கப்படும் கிரிக்கெட் மைதானத்தம், 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படுகிறது. இந்த மைதானம் ஊடக மற்றும் விளையாட்டு தொடர்பான அறிவிப்பு அரங்கம் உடுக்கை வடிவிலும், மைதானம் சிவன் தலையில் உள்ள பிறை போலவும், மைதானத்தைச் சுற்றியுள்ள மின்விளக்கு கோபுரங்கள் திரிசூலம் போலவும், பாதுகாப்பு சுவர், வில்வ இலைகள் போலவும் தத்ரூபமான முறையில், காசியின் ஆன்மீக அடையாளங்களை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. பாரத பிரதமர் நரேந்திர மோடி தேதி கொடுத்ததும் விரைவில் திறக்கப்பட உள்ளது. காசி கிழக்கு மணடல ஆணையர் திரு.ராஜலிங்கம் பேட்டி.

இதன் அருகே வெளிவட்ட சாலைகள் அமைக்கப்பட்டு, விமான நிலையம் மற்றும் பல்வேறு மாநிலங்கள் நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளை ஒருங்கிணைப் பதற்காக சாலைகளை மேம்படுத்தும் வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாரணாசியின் வளர்ச்சிக்கு ஏற்கனவே 40,000 கோடி மதிப்பீட்டில் ஆன பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக் கிறது.

குறிப்பாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய டவுன்ஷிப்  வருணா டவுன்ஷிப் மற்றும் கங்கா டவுன்ஷிப், 25,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்றரை ஆண்டுகளில் ஏறக்குறைய 50 ஆண்டுகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் சாலை போக்குவரத்தை, எளிய முறையில் மக்கள் சென்றடைய இந்த திட்டம் மேற்கொள்ளப்படவிருக்கிறது.
இந்த திட்டம் மேம்படுத்தப்பட்ட பிறகு, முற்றிலும் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும். சாலை மார்க்கத்தில் எளிமையான பயணங்களில் மேற்கொள்வதற்கு இது முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அமையும். ரோப் கார் சேவை குறித்து முனைவர் கோ.ஜெயக்குமார் தரும் தகவல்.

இப்படி ஒரு மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளை புள்ளி விபரங்களோடு தெரிவித்த அவர், காசி இந்த புண்ணிய பூமியில் வசிப்பவர்கள், ஏன் எங்கும் செல்ல விரும்பாது வில்லை, ஒரு பெட்டிக்கடை காரர் கூட தனது வாழ்நாள் முழுவதும் அந்த கடையிலேயே வியாபாரம் செய்ய விரும்புவாரே தவிர இடம்பெயர விரும்பமாட்டார்.இது தவிர அவருக்கு பெரிய இடமோ, பெரிய கடையோ அரசு கொடுத்தால் கூட அந்த இடத்தை விட்டு செல்ல மாட்டார்கள். அதே போன்று இந்த மண்ணில் உள்ள இளைஞர்களுக்கு மாதம் 25 ஆயிரம் 30 ஆயிரத்தில் வேலை வாய்ப்பு மாற்று இடத்தில் தருகிறோம் என்று கூறினாலும், அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். காரணம் இந்த மண்ணில் இறந்தால் தான் முத்தி என்கிற ஒரு நம்பிக்கை ஒருபுறம், அவர்கள் தலைமுறை தலைமுறையாளராக தீர்மானித்துவிட்ட எழுதப்படாத விதி என்பதை தெளிவுபடுத்தினார்.

இந்த அரசு அமைந்த பிறகு குற்றங்கள் எப்படி குறைந்து இரக்கிறது. அது மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு பிரதிபலிப்பை ஏற்படுத்தியிருந்தால், இரண்டாவது முறையாக யோகி ஆதித்தனார் ஆட்சியை அவர்கள் விரும்பி இருக்கிறார்கள், குறிப்பாக சட்ட ஒழுங்கு பிரச்சனையில் பெண்கள் மிக முக்கியமாக கவனிக்கப்படும் அரசாக இந்த அரசு உள்ளது. பாதுகாப்பு பெருமூச்சு அவர்கள் விடுவதை உணர முடிகிறது என்பதையும் தெளிவுபடுத்தினார்.


ஒரு மன்னருடைய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களை தாண்டி, அதிகாரிகள் எந்த அளவிற்கு அறிவு சார்ந்த இருக்க வேண்டும் என்பதற்கு காசியின் கிழக்கு மண்டல ஆணையர் திரு.ராஜலிங்கம் போன்றவர்களே சாட்சியாக காசியில் வீற்றிருக்கிறார்கள். 



இந்த சந்திப்பில் காசியின் கிழக்கு மண்டல ஆணையர் திரு. ராஜலிங்கம் அவர்களுக்கு சென்னை மத்திய மக்கள் தொடர்பு துறையின் உடைய இணை இயக்குனர் திருமதி. விஜயலஷ்மி மற்றும் திரு மோகனசுந்தரம் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர். குழுவில் இடம் பெற்ற அனைத்து ஊடகவியலாளர்களும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.



வாரணாசி விமான நிலையம், சர்வதேச தரத்திலான கிரிக்கெட் விளையாட்டு மைதானம், ரோப்கார் சேவை இவை அனைத்துமே சிவபெருமானின் அம்சங்களாக, காசியின் இறை தத்துவங்களாக காட்சி படுத்தப்பட்டுள்ளது, காசி மண்ணின் பெருமையை மேலும் உலகறிய செய்துள்ளது வரவேற்பிற்குறியது.




















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக