செவ்வாய், 3 ஜூன், 2014

வந்தவாசி போர் vandavasi battle - கோ.ஜெயக்குமார்.

வந்தவாசி போர் vandavasi battle - கோ.ஜெயக்குமார்.

வந்தவாசி (ஆங்கிலம்:Vandavasi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டிற்கும் பிரிட்டன் நாட்டிற்கும் இடையே ஆசியாவை கைப்பற்றும் முயற்சியில் போர் நடந்தது. அப்போது மூன்றாவது கர்நாடக போர் என்ற பெயரில் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து போர் நடந்து வந்தது. இந்த போர் 1756 முதல் 1763 வரை நடைபெற்றது. இதில் 1760 ஆம் ஆண்டு வந்தவாசி கோட்டையை கைப்பற்ற இரு நாடுகளும் மோதிக்கொண்டன.

இந்த போரில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த அயர் கூட் தலைமையிலான படை பிரான்சு நாட்டை சேர்ந்த ஜெனரல் லால்லி தலைமையிலான படையை தோற்கடித்தது. இந்த வெற்றி பிரிட்டன் நாட்டின் மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்தது.

பிளாசிப் போர் கி.பி. 1757 ராபர்ட் கிளைவின் தலைமையிலான ஆங்கிலப் படைக்கும், வங்காள நவாப் சிராஜூத் தௌலா வுக்கும் நடைபெற்றது. இதில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். வங்காளத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கம் நிலை நாட்டப்பட்டது.


வந்தவாசி கோட்டையிலிருந்து செஞ்சிக் கோட்டை வரை சுரங்கப் பாதை இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த சுரங்கப் பாதைகள் காலப் போக்கில் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அழிந்து விட்டதாக கூற படுகிறது. தற்போது கோட்டையில் மிஞ்சி இருப்பது சில பகுதிகள் மட்டுமே.

 மக்கள் ஆக்கிரமிப்பால் பெரும்பாலான கோட்டை அழிந்துவிட்டது. ஆனால் இப்போதும் கோட்டைக்குள் நுழைந்தால் பழங்காலத்து கத்தி, போர் உடைகள், குதிரை கடிவாளம், பீரங்கி குண்டுகள் போன்ற ஏராளமான பொருட்கள் கிடைப்பதாக கூறப் படுகின்றது.. மேலும் இந்த கோட்டையின் சுரங்கத்தினுள் புதையல்கள் இருக்க கூடும் எனவும் மக்கள் நம்புகின்றனர்.

வந்தவாசியில் இருந்து 23 கிமீ தொலைவில் தேசூர் அருகில் சியமங்கலம் மற்றும் அறியம்பூண்டிஎன்ற கிராமகள் உள்ளது. இங்கு பல்லவ அரசரால் கட்டப்பட்ட குகைக் கோவில் உள்ளது.


வந்தவாசி ஈஸ்வரன் கோவிலுக்கு ஒரு தனி சிறப்பும் உண்டு. மழை காலங்களில் இந்த கோவில் முழுதும் தண்ணீரால் நிரம்பி விடும். மூலவர் ஜலகண்டீச்வறரை தொடும் அளவிற்கு நீர் ஊற்றெடுத்து தேங்கும். இது எவ்வளவு உயரம் தேங்கும் என்றால் ஒரு மனிதரின் இடுப்பு அளவிற்கு என்றும் கூறலாம். இவ்வாறு ஏன் அந்த கால கட்டத்தில் அமைக்கப் பட்டது என்றால் "ஈஸ்வரர் கோபத்தில் நெற்றிக்கண் திறந்து பார்க்கும் பொது மிகுந்த உஷ்ணமாக இருக்கும்.

அதனை குளிர்விக்க தண்ணீருக்குள் தவம் புரிவார் ஈஸ்வரர். அதனால் தான் அவருக்கு ஜலகண்டீஸ்வரர் என பெயரும் வந்தது" என்று கூறுவர். ஆகவே தான் ஈஸ்வரர் தண்ணீரில் மூழ்கும் படி இவ்வாறு வடிவமைத்து உள்ளனர். ஆனால் பக்தர்கள் உள்ளே செல்ல அவதி படுவதால் தற்போது கட்டமைப்புகளில் மாற்றம் செய்து தண்ணீர் உள்ளே தேங்காத வண்ணம் அமைத்துள்ளனர்.

இந்த கோவிலின் புதுப்பிக்கும் பனி மற்றும் கும்பாபிஷேகம் கடந்த 2011 ஆணி மாதம் தான் முடிந்தது என்பது குறிப்பிட தக்கது. பழங்காலத்தில் இந்துக்கள் சிவ கோத்திரம் மற்றும் விஷ்ணு கோத்திரம் என்று இரு வேறு மதத்தவர் போல பிரிந்து காணப்பட்டனர். இவர்களுக்குள் போட்டிகளும் கருத்து வேறுபாடுகளும் நிலவி வந்தன.

இவைகளை போக்க ஒரு மாமுனிவரின் ஆணைப்படி "ஹரியும் சிவனும் ஒன்று" என்பதை சுட்டிக்காட்ட நாடெங்கிலும் ஒரே சுற்றுச்சுவரின் உள்ளேயே சிவன் மற்றும் பெருமாள் சன்னதிகள் நிறுவப்பட்டன. அவ்வாறு கட்டப்பட்ட கோவில்களுள் வந்தவாசி பெருமாள் கோவிலும் ஒன்று ஆகும். இந்த கோவிலின் புதுப்பித்தல் மற்றும் கும்பாபிஷேகம் முடிந்து விட்ட போதிலும், தலை வாசல் கோபுரம் எழுப்பும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது.

இந்த கோவில் அமைவிடம் வந்தவாசி கோட்டையின் நுழைவு வாயில் ஆகும். வந்தவாசி கோட்டை மிகவும் சேதம் அடைந்துவிட்ட நிலையிலும் இந்த வீர ஆஞ்சநேயர் கோவில் மட்டும் பாதுகாக்கப் பட்டு வருகிறது. இந்த கோவில் பக்கத்தில் பழங்காலத்தில் மன்னர்களாலும் பிரிட்டனாலும் உபயோகிக்கப் பட்ட பீரங்கி ஒன்றும் உள்ளது. கோவிலும் பீரங்கியும் தற்போது அறநிலையத் துறையால் பாதுகாக்கப் பட்டு வருகிறது.
படிமம்:India Tamil Nadu location map.svg
தெள்ளாற்றுப் போர் வரலாற்றில் எத்தனையோ போர்கள் நடந்திருந்திருந்தாலும், சில போர்களால் தமிழகத்தின் வரலாறே மாறியுள்ளது, அப்படியான போரில் குறிப்பிட்டு நாம் பார்க்க வேண்டியது"தெள்ளாற்றுப் போர்". இந்த இடத்தில் நடந்த இரு பெரும் போர்களால் என்ன நடந்தது?.பார்ப்போம்..

"தெள்ளாறு", இன்றைக்கு, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம், அங்கு இருப்பவர்களுக்கே தெரியுமா என்று தெரியவில்லை தங்கள் ஊர் இவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்று.... பல்லவர்கள் காஞ்சியை தலைநகராக கொண்டு கி.பி. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் வலிமையுடன் ஆட்சி புரிந்தவர்கள்.

இவர்களை அழிக்க எத்தனையோ போர்கள் நடந்திருந்தாலும், குறிப்பாக சோழரும், பாண்டியரும் ஒன்றாக இணைந்து பல்லவ பேரரசின் சாம்ராஜ்யத்தை அழிக்க நினைத்தது இங்கு தான். அப்போது பாண்டியர்கள் பேரரசர்கள், சோழர்கள் அங்கும் இங்குமாய் சிற்றசர்களாகவே இருந்தனர்,அப்போது ஆட்சி செய்த வந்த பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825-850) ,இங்கு நடந்த போரில் சோழர் மற்றும் பாண்டிய படையை எதிர் கொண்டு அதில் வெற்றியும் கண்டான், அதோடு விட்டானா,அவர்களை கடம்பூர், வெறியலூர், வெள்ளாறு, பழையாறு ஆகிய இடங்களில் எதிர்கொண்டு பாண்டிய நாட்டு எல்லை வரை ஓட ஓட விரட்டினான், சோழர்கள் பல்லவர்களுக்கு கப்பம் கட்ட உடன்பட்டனர் !

அது முதல் நந்திவர்மன் "தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்" என போற்றப்பட்டான். இந்த போர் குறித்து ஏராளமான கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன, அவன் மீது பாடப்பெற்ற "நந்திக் கலம்பகத்தில்" இந்த தெள்ளாற்று வெற்றியினை பலவாறு புகழந்துரைக்கிரார்கள். இந்த போரின் வெற்றிக்குப் பிறகு பல்லவர்கள் பெரிதும் வலிமை பெற்றனர், இறுதிக்காலம் வரை பகைவர்கள் நந்திவர்மனை கண்டு அஞ்சியே இருந்தனர். பல்லவர்கள் தங்கள் வலிமையை நிலைநிறுத்திய போராக இது விளங்கியது.

அடுத்தாக வடக்கே கங்கை வரையும், தெற்கே கடல் கடந்து கடாரம் வரை ஆட்சி புரிந்த சோழப் பேரரசு ! விஜயலாயன், ராஜ ராஜன் சோழன், ராஜேந்திரன் சோழன் என்று புகழின் உச்சிக்கே சென்ற சோழர்கள் கி.பி-1279 பிறகு எங்கே சென்றார்கள் ? அவர்கள் வீழ்ந்த இடமும் இந்த "தெள்ளாறு" தான்.

சோழப் பேரரசு மூன்றாம் ராஜ ராஜனின் ஆட்சியின் போது அழிவின் விளிம்பில் இருந்தது, தெற்கே "சுந்தர பாண்டியன்" சற்றே வலிமை பெற்று, சோழர்களின் மீது போர் தொடுத்தான், பாண்டியனுக்கு அஞ்சிய சோழன் காஞ்சிபுரத்தை நோக்கி ஓடினான், அவனை காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் இந்த தெள்ளாற்றில் இடைமறித்து போர் புரிந்தான், அதில் மூன்றாம் ராசா ராசன் தோல்வியுற்றான், பின்னர் அவனது தலைநகரான சேந்தமங்கலத்திற்கு கொண்டு சென்று அங்கு சிறை வைக்கபெற்றான்.

இதை அறிந்த பாண்டியனும், சோழனின் மாமனாரான மேலைச் சாளுக்கிய மன்னனும் சேந்த மங்களத்தின் மீது போர் தொடுத்து சோழனை சிறை மீட்டனர், சேந்தமங்கலமும் அதன் கோட்டையும் முற்றிலுமாக அழிக்கப்பெற்றது, இங்கு தமிழக அரசு தொல்லியல் துறை அகழாய்வு செய்து கோட்டைப் பகுதிகளையும், காடவர் தலைநகரையும் வெளிக்கொணர்ந்தது. மூன்றாம் ராசா ராசனுக்கு பின், மூன்றாம் ராஜேந்திரன் சிறிது காலம் ஆட்சி புரிந்தான், பின்னர் கி.பி-1279ல் சோழப் பேரரசு தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போனது !!

இவ்வாறு இந்த இடத்தில் நடந்த இரு பெரும் போருக்கு பின்னர் தமிழகத்தின் வரலாற்றின் பாதையே மாறியுள்ளது, ஒரு வேலை முதல் போரில் பல்லவர்கள் தோற்று பாண்டியர்கள் வெற்றிபெற்றிருந்தால், சோழ வம்சமே மீண்டும் வராமல் போயிருக்கும், அவர்கள் பாண்டியர்களுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னர்களாகவே இருந்திருப்பார்கள் ! தஞ்சை கோயில், கடாரம் வரை ஆட்சி என தமிழர்களின் புகழ் விரிவடையாமலே சென்றிருக்கலாம் ஒரு வேலை இரண்டாவதாக காடவர்களுடன் நடந்த போரில் சோழன் வென்றிருந்தால் ? இன்னும் அவர்கள் வலிமையுடன் தமிழகத்தை ஆண்டிருப்பார்கள், கடாரம் வரை கப்பலில் சென்று போர் புரிந்த சோழர்களுக்கு, ஆங்கிலேயர்களை விரட்ட எவ்வளவு காலம் பிடித்திருக்கும்.

1 கருத்து:

  1. Very informative photo-story. Some more information may add some more value. Thank you Regards...

    1760 -- On January 22 1760, Lally was defeated by Sir Eyre Coote, an Irishman born in Kilmallock, Co. Limerick, at the Battle of Wandewash and finally surrendered to a British force. The British then undertook the Siege of Pondicherry. On September 3, a sortie conducted by Lally failed. The English captured Pondicherry and Mahe, badly defeating the French. This defeat put an end to the French empire in India.
    1766 -- 9 May, 1766 - Thomas Arthur Lally, Comte de Lally was executed for losing Pondicherry in India to the English.
    Lally was a courageous man and an able general, but his arrogance meant that he was not popular with his officers and was hated by his men. He despised native Indians and readily violated their customs and traditions. Initially he had some minor military successes, but his manner and demeanour were against him.
    For Further information: Find out my posts - Evolution of Fort St.George http://muthusamyphotostream.blogspot.in/2014/04/evolution-of-fort-stgeorge-1758-as.html

    பதிலளிநீக்கு