செவ்வாய், 10 டிசம்பர், 2013

தென்னிந்தியாவின் பண்பாட்டுக்கருவூலம் தக்ஷிணசித்ரா – கோ.ஜெயக்குமார்.தென்னிந்தியாவின் பண்பாட்டுக்கருவூலம் தக்ஷிணசித்ரா – கோ.ஜெயக்குமார்.தமிழ் மக்களின் கலை கலாச்சாரம் மொழி என்பது மற்ற மாநில மக்களை எளிதில் இழுக்கக்கூடியது. பல்லாயிரம் ஆண்டுகளை கடந்து வாழ்கிற மொழி நமது தமிழ் மொழி ஆகும். பல குழுக்களை, மன்னர்களை, தலைவர்களை, அமைப்புகளை கொண்டுள்ள மொழி என்ற பெருமையோடு செம்மொழி என்ற தனிச்சிறப்பையும் தன்னிடத்தே கொண்டுள்ள மொழி, முத்தமிழுக்கும் சொந்தமான மொழி தமிழ்மொழியாகும்.
 
தமிழ்நாடு என்றால் வந்தோரை வாழவைக்கும் மாநிலம் என்று எனைவரும் கூறுவதோடு அனைவரும் இங்கு வந்து சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. இந்திய அளவில் வாழும் அனைத்து தரப்பு மாநில மக்களும் விரும்பிப் போற்றும் கலாச்சாரம் தமிழ் மக்களின் கலாச்சாரம் ஆகும்.
 
இவ்வளவு பெருமைகளுக்கும் சொந்தமான மாநிலமான தமிழகத்தில் பல மாநில மற்றும் மாவட்டங்களில் இருந்து அனைவரும் விரும்பி குடியேரும் மாநகரமாக சென்னை விளங்குகிறது. சென்னையை நொக்கி அனைவரும் வருவதற்கு காரணம் தொழில் வளர்ச்சியே காரணம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
 
நெருக்கடிகளும் இல்லை, பஞ்சமும்  இல்லை என்பதால் அனைத்து மாநில மக்களும் தமிழகத்தில் ஒற்றுமையோடு அண்ணன் தம்பியாய், மாமன் மச்சானாய், பாசப்பினைப்போடு வாழ்கின்றனர். வாழ்கிற மக்கள் தங்களின் சமகால கலைப்பண்பாட்டை மறந்து போகிறார்கள். இன்னும் சில கலைகள் மறைந்தும் போகின்றது. இதனால் நமது பண்பாட்டை இழந்து வாழ்கிறார்கள், அடுத்த தலைமுறையினரும் அறியாமல் போகும் நிலை உருவாகிறது.
 http://img706.imageshack.us/img706/2695/288500477911829c36ecb.jpg
நமது கலைப்பண்பாட்டைப் போற்றும் வகையில் சென்னையில் இருந்து சுமார் 30 கி.மீ தூரம் கிழக்குக்கடற்கரைச் சாலை வழியாக சென்றால் முட்டுக்காடு என்ற இடத்திற்கு முன்பாக தக்ஷிணசித்ரா என்ற இடம் உள்ளது. சென்னையில் உள்ள சுற்றுலாத்தலங்களில் இது முற்றிலும் வித்தியாசமான் ஒன்று. இந்த பண்பாட்டு சுற்றுலாதலத்தை சென்னை கைவினைக் கலைக் கழகத்தின் சார்பில் தக்ஷிணசித்ரா என்ற அருங்காட்சியம் 1996-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. 
 
சென்னை கைவினைக் கலைக் கழகம், தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் அவர்களின் பழக்கவழக்கங்கள், கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவை இந்த தக்ஷிணசித்ரா இடம்பெற்றுள்ளன.
 
தக்ஷிணசித்ராவை பார்ப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியர்களுக்கு நபருக்கு 75 ரூபாய் அயல்நாட்டவருக்கு 200 ரூபாய், மாணவர்களுக்கு சலுகை உண்டு, புகைப்படக் கருவிகளுக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
 http://upload.wikimedia.org/wikipedia/commons/c/c4/Dakshina-Chitra-Inside-house-1.JPG
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களில் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் குறிப்பாக தமிழக மக்கள் வாழும் வீடுகளில் பார்ப்பணர்கள், வேளாளர்கள், நெசவாளர்கள், குயவர்கள், செட்டிநாட்டு மக்கள் இவர்கள் பயன்படுத்திய பொருட்கள், இந்தப்பொருட்கள் தயாரித்தல் முறை போன்றவை செயல்முறையாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும்.
 http://upload.wikimedia.org/wikipedia/commons/d/db/Dakshina-Chitra-Tamil-Nadu-House.JPG

 http://upload.wikimedia.org/wikipedia/commons/d/d9/Dakshina-Chitra-Karnataka-House.JPG

 http://farm5.staticflickr.com/4125/5113278509_f55b112d6b_z.jpg

 
 
பார்ப்பணர் வீட்டில் பூணூல் அணிந்த இருவர் அமைந்திருப்பது, வீணை இசைக்கும் அறை, பூசை அறை, சோதிட அறை, விளக்குகள், இசைக்கருவிகள், போன்றவைகள் இயல்பான நிலையில் காட்சிபடுத்தப்பட்டு இருக்கும்.
 
 
வேளாள இன மக்களின் வீட்டில் உழவுத்தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் மரக்கலப்பைகள், இரும்பு கலப்பைகள், மண்வெட்டி, தானியப்பயன்பாட்டிற்காண முரம், அம்மி, உரல், கூடைகள், தட்டுகள், சமைக்கும் முறை, தானியங்கள் சேமிக்கும் மச்சிகள், நெல்குதிர், திருமண முறைகள், வழிபாட்டு முறைகள் என ஏராளமான பண்பாட்டு குவியலாக உள்ளது.
 
 
 
நெசவாளர்கள், குயவர்கள், செட்டிநாட்டு மக்களின் வீட்டுகளிலும் அவர்களின் தொழில், பழக்க வழக்கங்கள் சிறப்புற அமைக்கப்பட்டுள்ளன. நெசவாளர்களின் வீடுகளில் நெசவு செய்தல், குயவர்களின் வீட்டில் பானைசெய்தல், விளக்குகள் உள்ளிட்ட கலைப்பொருட்கள் செய்து காட்டுவதோடு விற்பனையும் செய்யப்படுகின்றன. மீனவ மக்களின் தொழிலுக்கு பயன் படுத்தும் கட்டு மரம், வலை, துடுப்புகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
 
 
ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வாழும் மக்கள் கட்டிட கலை , தொழில் முறைகள், கலாச்சாரம் போன்றவைகளும் இடம் பெறுள்ளன. கேரளாவில் கட்டப்படும் வீடுகள் மரங்களால் கட்டப்படுவதையும், அவர்கள் பயன் படுத்தும் கட்டில், நாற்காலிகள் உள்ளிட்டவை சிறப்பாக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 
 
இந்த பண்பாட்டு சுற்றுலா இடத்தி்ற்கு வெளிநாட்டு மக்களும் அதிகமாக வந்து செல்கின்றனர். இதனால் பண்பாட்டு பரவல் எற்படும் என்பதோடு எதிர்காலத்தில் வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் பண்பாட்டு வரலாறாக இந்த இடம் விளங்குகிறது.
 
தென் மாநிலங்களின் கலைகளும், வாழும் மக்களின் பழக்க வழக்கங்களும் மறைந்துவிடா வண்ணம் அவைகளைப் போற்றிப் பாதுகாப்பதற்காகவும், மேலும் வளர்ப்பதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ள ஓர் மையமே த.சி ஆகும். 
 
இங்கு கிட்டத்தட்ட 5 மணி நேரம் செலவு செய்ததில் தமிழ்நாடு,ஆந்திரா, கர்நாடகா, கேராளா உள்ளிட்ட மாநிலங்களின் பண்பாடுகளை செய்தும் காட்டப்படுகின்றன. அய்யனார் கோவில் உள்ளது


http://img2.holidayiq.com/photos/ma/Mahabalipuram-Photos-Beautiful-Art-shareiq-1314168640-091640-JPG-destreviewimages-500x375-1324602755.JPG
  • சைக்கிள் வித்தை: கிராமங்களில் சைக்கிள் (மிதிவண்டி) வைத்துக்கொண்டு பலவித வித்தைகளைச் செய்து பிழைப்பவர் உண்டு. அதை இருவர் இங்கு செய்து காட்டினர். சைக்கிளை மிதித்தவாரே கீழிருந்து தண்ணீர் நிரம்பிய குடத்தை வாயால் கவ்வி எடுத்து, ஒரு சுற்று சுற்றிவிட்டு, மீண்டும் கீழே வைப்பது; கைகளால் மிதிப்பானை சுழற்றிக்கொண்டே சுற்று வருவது; ஒரு சைக்கிள் டயரானால் ஆன வலையத்தில் சைக்கிளோடு தானும் புகுந்து வெளி வருவது; மற்றொருவரை தன் முதுகில் சுமந்து, கைகளால் கைப்பிடியைத் தொடாமல் சுற்றுவது என்று பல வித்தைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
  • தெருக்கூத்து: திரௌபதியை அவளது அண்ணன் சொத்துக்கு ஆசைப்பட்டு துரியோதனனிடம் கடத்திக்கொண்டு வரப்போக, பீமனிடம் உதை வாங்குவது பற்றிய கதை. ஆட்டம், பாட்டம், வசனம், இசை என்று அமர்க்களமாய் இருந்தது, ஒரு முப்பது நிமிடங்களுக்கு சில நேரங்களில் மட்டும் செய்து காட்டப்படுகின்றன.
  • பொம்மலாட்டம்: இது நிழல் பொம்மலாட்ட வகையைச் சேர்ந்தது. கிருஷ்ண லீலையில் பூதனையை வதம் செய்தது சில நேரங்களில் மட்டும் செய்து காட்டப்படுகின்றன.
  • ஆட்டம்: ஒயிலாட்டம், கரகாட்டம், காவடியாட்டம் போன்றவை: தவில் தாளம் போட சிறுமியர் அதற்கு ஏற்ப ஆட்டமாடுவது சில நேரங்களில் மட்டும் செய்து காட்டப்படுகின்றன.
  • குயவர் ஒருவர் பானை, குவளை செய்து காண்பிப்பது, ஒலையால் சிறு கூடைகள் செய்வது, கண்ணாடியால் கலைப்பொருட்கள் செய்தல், சோதிடம் பார்த்தல், பொம்மலாட்டம் பொம்மைகள், இசைக்கருவிகள் (கிளி,சோழி,கை).
  • பம்பரம், ஓவியங்கள் வரைவது, துணி வேலைப்பாடு, மர வேலைப்பாடு, தோரணம் செய்வது என்று பல்வேறு நிகழ்ச்சிகள் இங்கு ஊள்ளன.
 
நாட்டுப்புறத்தில் புழங்கும் பல்வேறுவிதமான வீடுகளைக் கட்டி வைத்து இப்படித்தான் இருக்கும் அந்தணரின் வீடு, இப்படித்தான் இருக்கும் செட்டி நாட்டு வீடு, நெசவாளர்கள் வீடு உள்ளிட்ட மற்ற மாநில வீடுகளும் இப்படித்தான் இருக்கும் என்று காட்டுகிறார்கள். ஓர் மூலையில் ஒரு சிறிய தேர், குதிரை வண்டி நிறுத்தப்பட்டுள்ளது. 
 
பிறந்தது முதல் சென்னையின் கான்கிரீட் காடுகளுக்கிடையே வாழ்ந்து வரும் குழந்தைகளுக்கும், பண்பாட்டாளர்களுக்கும்  இது ஒரு நல்ல படிப்பினைக் கொடுக்கும் இடம் என்பதில் ஐயம் இல்லை.
 
 
குறிப்பு:
தக்ஷிணசித்ராவில் உள்ள கழிவறைகள் சில கவலைக்கிடமாக உள்ளது. ஒரு நபருக்கு 75 ரூபாய் வசூலிக்கும் நிர்வாகம் இதிலும் கவனம் செலுத்த வேண்டும். கட்டணத்தை இன்னும் சற்று குறைத்துக்கொண்டால் அனைத்து தரப்பு மக்களும் வருவார்கள். குடிநீர் வசதி சரியாக இல்லை, வழிகாட்டிகள் சரியாக வைக்க வேண்டும். உணவு விடுதிகளில் விலை கட்டுப்பாடு தேவை. கடைகளில் விற்கும் பொருட்களுக்கு கட்டுப்பாடு தேவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக