நடிகை
லீனா மரியா பால் - கோ.ஜெயக்குமார்.
சினிமா சான்ஸ் காட்டி
நடிகையை வளைத்துப்போட்ட பயங்கரம் !...
போலி ஆவணங்களுக்கு
ரூ.19 கோடி கடன் கொடுத்த பிரபல வங்கி !..
மோசடி பணத்தில் சொ
குசு வாழ்க்கை நடத்தியது அம்பலம் !...
---------------------
பொதுவாக தேசிய வங்கிகளில்
அரசு ஊழியர்களுக்கே கடன் கொடுப்பதற்கு மேலும் கீழும் பார்ப்பார்கள். ஆனால், ஒரு நடிகையை
வைத்து, பல கோடி ரூபாய் வங்கியில் மோசடி செய்துவிட்டு தப்பிஓடிவிட்டது ஒரு கும்பல்.
இந்த மோசடி கும்பல் போலீஸ் வலையில் சிக்கிக்கொண்ட சம்பவத்தை பற்றி இப்போது பார்ப்போம்.
பிரபல நடிகை ஒருவர்
பணத்திற்கும் பந்தாவிற்கும் ஆசைப்பட்டு கர்நாடகாவை சேர்ந்த மர்ம நபருடன் இணைந்து சென்னையில்
உள்ள ஒரு பிரபல வங்கியில் 19 கோடி கடன் வாங்கி பக்காவாக எஸ்கேப் ஆகியுள்ளனர். அந்த
மர்ம நபர் தான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறிய சம்பவத்தின் உண்மையையும் அதன் பின்னணியையும்
இப்போது பார்ப்போம்.
தேசிய விருது பெற்ற
‘ரெட் சில்லீஸ்’ என்ற மலையாள படத்தில் நடிகர் மோகன்லாலுடன் நடித்தவர்தான் 25 வயதான
நடிகை லீனா மரியா பால். ‘ஹஸ்பண்ட்ஸ் இன் கோவா’, ‘கோப்ரா’ ஆகிய படங்களிலும், இந்தி நடிகர்
ஜான் ஆபிரகாமுடன் ‘மெட்ராஸ் கபே’ படத்திலும் நடித்த லீனா மரியா பால் கேரள மாநிலம்,
திருச்சூரை சேர்ந்தவர். பல் டாக்டருக்கு படித்த இவர். பள்ளிப் படிப்பை துபாயில் முடித்தார்.
இந்நிலையில், ஒரு சினிமா
படப்பிடிப்புக்காக வெளியூர் சென்ற லீனா மரியா பாலுக்கு பெங்களூரைச் சேர்ந்த, பாலாஜி
என்ற சுகாஷ் சந்திரசேகருடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நண்பர்களாக பழகிய இவர்கள்,
நாளடைவில் காதலர்களாக மாறினர். அதன்பின்னர், இருவரும் சென்னையில் திருமணம் செய்யாமலேயே,
சேர்ந்து வாழ துவங்கினர்.
இந்நிலையில், தங்களின்
சொகுசாக வாழ்க்கைக்காக பல குறுக்கு வழிகளில் பணம் சம்பாதிக்க திட்டம் போட்டனர். இதற்கு
இவர்களின் மூலதனமே வாய்பேச்சு தான். இதைவைத்தே சுகாஷ், அம்பத்தூர் கனரா வங்கியில்,
தான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி எனக்கூறி, புதிய தொழில் நிறுவனம் தொடங்க, 19 கோடி ரூபாய்
கடன் வாங்கினார்.
இருவரும் போலி ஆவணங்கள்
கொடுத்து, கடன் வாங்கி மோசடி செய்தது, வங்கிகளின் நிர்வாகத்தினருக்கு பின்னர்தான் தெரியவந்தது.
மோசடி செய்த, இவர்கள் மீது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், வங்கி அதிகாரிகள்
அளித்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலிசார் வழக்குப் பதிவுசெய்தனர். அதன்
பேரில் கடந்த மார்ச் மாதம் சுகாஷ் சந்திரசேகர், லீனா ஆகிய இருவர் மீதும் இந்திய தண்டனை
சட்டம் 420 ,120 பி 406 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது,
இருவரும் மாயமாகிவிட்டது தெரியவந்தது.
மேலும், போலீஸ் விசாரணையில்,
சுகாஷ் சந்திரசேகர் தன்னை முக்கிய அரசியல் தலைவர்களின் உறவினர் என்று கூறி ஏற்கனவே
ஒரு வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்ததும், அது தொடர்பாக சென்னை சேத்துப்பட்டு போலீசாரால்
அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டதும் தெரியவந்தது. மேலும் சுகாஷ் தனது பெயரை மாற்றிக்
கொண்டு மேலும் சில வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்து இருப்பதும் தெரிய வந்தது.
அத்துடன் நடிகை லீனாவும்,
தன்னை சுகாஷ் சந்திரசேகரின் மனைவி என்று கூறிக் கொண்டு ஒரு வங்கியில் ரூ.65 லட்சம்
கடன் வாங்கி மோசடி செய்து இருப்பதையும் விசாரணையின் மூலம் போலீசார் கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து, தலைமறைவான
இருவரையும் கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம் தனிப்படை அமைத்து,
தீவிரமாக தேடி கைது செய்ய உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நடிகை
லீனாவும், சுகாஷ் சந்திரசேகரும் டெல்லியின் தெற்கு பகுதியில் அசோலா என்ற இடத்தில் உள்ள
ஒரு பண்ணை வீட்டில் தங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, உடனடியாக, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான சென்னை தனிப்படை போலீசார்
டில்லி சென்றனர். அங்கு டில்லி போலீசாருடன் இணைந்து, விசாரணையில் இறங்கினர்.
அப்போது, லீனா மரியாபால்
மற்றும் சுகாஷ் ஆகியோர் நான்கு லட்சம் ரூபாய் வாடகையில் ஒரு பண்ணை வீட்டை எடுத்து,
அதில், குடியிருப்பது தெரிந்தது. முதலில் போலீசார் சென்ற போது, அவர்கள் வீட்டில் யாரும்
இல்லை. தொடர்ந்து கண்காணித்த போது, அவர்கள் "ஷாப்பிங் சென்று விட்டு, மீண்டும்
வீடு திரும்பினர். அப்போது, அதிகாலை போலீசார் திடீரென பண்ணை வீட்டுக்கு உள்ளே நுழைந்து,
இருவரையும் கையும் களவுமாக பிடிக்க முயன்ற போது, அங்கிருந்த நடிகை லீனா மரியா பாலை
மட்டும் கைது செய்தனர். ஆனால், போலீசார் வருவதை முன்பே அறிந்த சுகாஷ் சந்திரசேகர் அங்கிருந்து
தப்பி ஓடி விட்டான். மேலும் அவனுடைய பாதுகாவலர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில்
3 பேர் முன்னாள் ராணுவ வீரர்கள் என்பது குறிப்பிடதக்கது.
லீனா, சுகாஷ் தங்கியிருந்த
மிகப் பிரமாண்டமான பண்ணை வீட்டில், போலீசார் சோதனை நடத்தியபோது, 81 விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள்
உள்ளிட்ட பொருட்கள் சிக்கின. மேலும், அங்கு விலை உயர்ந்த, "ரோல்ஸ் ராய்ஸ் கார்
உள்ளிட்ட, ஒன்பது கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இவற்றையும், போலீசார் கைப்பற்றினர்.
நடிகை லீனாவிற்கு, காதல் கணவர் பாலாஜி என்ற சுகாஷ் சந்திரசேகர், மோசடி பணத்தில்தான்,
இந்த கார்களை வாங்கித் தந்ததாக கூறப்படுகிறது. கைதான பாதுகாவலர்களிடம் இருந்த 4 துப்பாக்கிகளும்
கைப்பற்றப்பட்டன. அரியானாவில், லைசன்ஸ் வாங்கப்பட்ட துப்பாக்கிகளை இவர்கள் பயன்படுத்தியதையும்
போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட, லீனா உள்ளிட்ட ஐந்து பேரையும்,
டில்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் தனிப்படை போலீசார்
விசாரணைக்காக, அவரை ரெயில் மூலம் சென்னை அழைத்துவந்தனர்.
பார்க்க கொஞ்சம் நடிகை
அமலா பால் மாதிரி தெரியும் இந்த லீனா மரியா பால். உண்மையில் பலே கில்லாடி. முகம்தான்
பால் வடிகிற மாதிரி இருக்குமே தவிர, அம்மணி செய்துள்ள வேலைகள் அடேங்கப்பா அது ஒரு தனிரகம்.
இவரும் இவரது காதலன் சுகாஷ் சந்திரசேகரும் சேர்ந்து ஆள்மாறாட்ட மோசடிகளில் ஈடுபட்டு
பல கோடியை அபேஸ் செய்தது போலீசாரையே அதிர வைத்துள்ளது. அதுமட்டுமல்ல, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப்
போல வேடமிட்டு, பல பெரும்புள்ளிகளிடம் பல கோடிகளை முதலீடு என்ற பெயரில் பெற்று ஏமாற்றியுள்ளனர்.
கமிஷனர் அலுவலகத்தில் லீனா பாலிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
அப்போது, அவர் சுகாசுடன்
எப்படி நட்பு ஏற்பட்டது என்பது பற்றி விரிவாக கூறினார்.
கேரளாவில் பிறந்த தனக்கு
சினிமா நடிகையாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. 5 மலையாளப் படங்களில் நடித்தேன். சுகாஷ்
கேரளாவில் தங்கி இருந்தபோது நான் நடித்த மலையாளப் படங்களை பார்த்துவிட்டு என்னை போனில்
தொடர்பு கொண்டார். தான் ஒரு சினிமா டைரக்டர் என்று சொல்லி அடிக்கடி என்னிடம் பேசினார்.
இதனால், தமிழ், இந்தியில் சினிமா முன்னணி பிரமுகர்களை தனக்கு தெரியும் என்று கூறி,
அவர்களிடம் சான்ஸ் வாங்கித் தருவதாக ஆசை காட்டினார். அதன்படி சென்னையில் உள்ள சினிமா
முன்னணி டான்ஸ் மாஸ்டர் ஒருவரையும் சந்தித்தோம்.
அதன்பிறகு மும்பையில்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரபல டைரக்டரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்
படுத்தியாதால், சுகாஷ் மீது நம்பிக்கை ஏற்பட்டது. அவருடன் நெருங்கி பழகி அவரைப்பற்றி
விசாரித்த போது தமிழக அரசியல் தலைவர் ஒருவரின் மகள் வழி பேரன் என்றும், அதே குடும்பத்தில்
திருமணம் செய்யப்போகிறேன் என்றும் சொன்னார். இதனால் சுகாசுடன் நெருங்கிப்பழகி அவரை
திருமணம் செய்ய திட்டமிட்டேன்.
ஆனால் திருமணம் செய்யாமலையே
ஒன்றாக வாழ்ந்து வந்தோம். 6 மாதத்துக்கு முன் டெல்லியில் பண்ணை வீட்டை வாடகைக்கு பிடித்து
தங்கி குடும்பம் நடத்தினோம். அப்போது போலீசார் வந்து தன்னை கைது செய்துவிட்டனர். அவர்
மட்டும் சாதுர்யமாக தப்பிச்சென்று விட்டார் என்று கண்ணீர் மல்க கூறினார்.
அதன் பின்னர், லீனாவை
சென்னை போலீசார், தாம்பரம், பூந்தமல்லி கோர்ட்டுகளில், ஆஜர்படுத்தி, புழல் சிறையில்
அடைத்தனர்.
சென்னை, அம்பத்தூரில்
உள்ள கனரா வங்கியில், போலி ஆவணம் தயாரித்து, 19 கோடி ரூபாய் கடன் பெற்றுமோசடி செய்தது
தொடர்பாக, அண்ணா நகரைச் சேர்ந்த தொழில் அதிபர் பாலசுப்ரமணியன், சித்ரா ஆகியோரை, மத்திய
குற்றப்பிரிவு போலீசார், கடந்த ஒரு மாதத்துக்கு முன், கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
சுகாஷ் சென்னையில்
தங்கியிருந்த நேரத்தில், பல பெண்களுடன் தொடர்பு இருப்பது, லீனாவுக்கு தெரியவந்தது.
இதுகுறித்து சுகாஷிடம், நடிகை லீனா கேட்டபோது, பந்தா காட்டினால் நம்மை எல்லோரும் மதிப்பார்கள்
என்று கூறி சமாளித்துள்ளார்.
ஒருகட்டத்தில், சுகாஷின்
சுயரூபம் தெரிந்த பின், அவரை விட்டு விலகிய லீனா, கேரளா சென்றுவிட்டார். சில மாதங்கள்
கழித்து, மொபைல் போனில் லீனாவை தொடர்பு கொண்ட சுகாஷ், தான் திருந்திவிட்டதாக நாடகமாடி,
மீண்டும் சென்னைக்கு அழைத்து லீனாவின் மனதை மாற்றி திருமணம் செய்து கொண்டு, தன் மோசடித்தனத்துக்கு
உடந்தையாக, செயல்பட வைத்துள்ளதாக நடிகை லீனா கூறினார்.
கடந்த ஏப்ரல்,
2012ம் ஆண்டு, சென்னை சேலையூரைச் சேர்ந்த, தனியார் ஜவுளி உற்பத்தி நிறுவனத்தை நடத்தி
வந்த சக்கரவர்த்தி என்பவரை, லீனா தொடர்பு கொண்டு, தன்னை, கர்நாடக திட்ட வளர்ச்சி நிறுவன
அதிகாரி ஜெயக்குமாரின் தனி அலுவலர் என, அறிமுகப்படுத்தி, கர்நாடக மாநில மருத்துவம்
மற்றும் போக்குவரத்து ஊழியர்களுக்கு சீருடை தைக்க சக்கரவர்த்தியின், ஜவுளி உற்பத்தி
நிறுவனம், தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். பதிவு கட்டணமாக, 62.47 லட்சம்
ரூபாய் செலுத்த வேண்டும் எனக்கூறி, அவரது வங்கி கணக்கில் பணத்தை செலுத்த வைத்துள்ளார்.
பின்னர் சக்கரவர்த்தி, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, சென்னை போலீசில் புகார் அளித்துள்ளார்.
மேலும் சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஸ்பா பியூட்டி பார்லர் நிர்வாகிகளிடமும் இவர்கள்
லட்சக்கணக்கில் ஏமாற்றியதாக போலிசில் புகார் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னை ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக
அறிமுகப்படுத்தி கொண்ட சுகாஷ், தன் மனைவியும் நடிகையுமான லீனா, தாய் மாலா, தந்தை சந்திரசேகருடன்
சேர்ந்து, கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர் என்பது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது..
இதில் நடிகை லீனா மட்டுமே போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
மற்றவர்களை விரைவில் பிடித்துவிடுவோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், மோசடி வழக்கில்
கைது செய்யப்பட்ட நடிகை லீனா, கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து போலீசாரிடம்
விசாரித்தபோது, சில மாதங்களுக்கு முன் கர்ப்பமாக இருந்த லீனா, சுகாஷின் வற்புறுத்தலின்
பேரில், கருவை கலைத்ததாக கூறியுள்ளார்.
நாட்டில் நடக்கும்
பெரும்பாலான மோசடி செயல்கள் மற்றும் குற்ற செயல்கள் அனைத்தும் பிரபலங்களின் பெயரை சொல்லித்தான்
அரங்கேறுகின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு எச்சரிக்கையாக
இருக்கவேண்டும். அதேபோல் கவர்ச்சி, பகட்டு, பந்தா போன்றவைகளுக்கு இடம் கொடுத்து ஏமாறாமல்
இருக்கவேண்டும் என்பதே அனைவரது வேண்டுகோள்.
================

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக