திண்டுக்கல் பாதரசமணி சித்தர்-கோ.ஜெயக்குமார்.
தான் கண்டு பிடித்த
மருந்தை தனக்கே பரிசோதித்துக்கொள்ளும் பயங்கரம் !...
கொடிய நோய்களுக்கும்
மருந்து இருப்பதாக கூறும் விநோதம் !...
ஆங்கில மருத்துவத்திற்கு
சவால் விடும் பாதரச மணி சித்தர் !...
========
நோய்களை குணப்படுத்த
உலகம் முழுவதும் அலோபதி, ஹோமியோபதி, சித்தா, யுனானி, அக்குபஞ்சர், அயுர்வேத போன்ற பலவிதமான
மருத்துவ முறைகள் கையாளப்படுகின்றன. இதனால், நோய்களை குணப்படுத்துவதில் இவைகளுக்குள்
போட்டி நிலவுகிறது. இது மருத்துவ துறைக்கு ஆரோக்கியமானது என்றாலும், இதில் சுயநலம்
தலைதூக்கினால் சமுதாயத்திற்கு பெரும் ஆபத்து விளையும் சம்பவத்தை பற்றி இப்போது பார்ப்போம்.
இந்தியாவில் கடைபிடிக்கப்படும்
அனைத்து மருத்துவ முறைகளை விட சித்த மருத்துவம் தான் மிகச் சிறந்தது என்று பறை சாற்றும்
ஒருவர், பாரம்பரியமிக்க இயற்கை மருத்துவமான இந்த சித்த மருத்துவம் பயங்கர உயிர் கொல்லி
நோய்களையும் குணப்படுத்தும் என்று கூறும் சம்பவத்தின் உண்மையையும் அதன் பின்னணியையும்
இப்போது பார்ப்போம்.
திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து
ஓட்டன் சத்திரம் போகும் சாலையில் சுமார் 30 கிலோ மீட்டர் தெலைவில் அமைந்துள்ளதுதான்
கன்னிவாடி கிராமம். இங்கிருந்து ஒருவழி சாலையாக இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்றாலே
வந்துவிடும் சோமலிங்கபுரம். இந்த ஊருக்கும் ஆன்மீகத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு
இருப்பதாக கூறப்படுகிறது.
சோமலிங்கபுரத்திற்கு
வெகு அருகாமையில் உள்ள ஒரு சிறு கர்ப்ப கிரகத்திற்குள் சிவன் லிங்க வடிவில் சோமலிங்கராக
அருள் பாலிக்கிறார். அந்த கர்ப்ப கிரகத்தின் மீது கூம்பு வடிவிலான சிறு கோபுரமும்,
கோவிலுக்கு முன்பாக நந்தியும் அமைந்துள்ளது. இதன் பின்னால் மெய்கண்ட சித்தர் வாழ்ந்த,
தீப வடிவிலான குகை ஒன்று உள்ளது. இதற்கு அருகில் மலை மீதிருந்து மூலிகைகள் கலந்த, சுவையுடைய
ஊற்று நீர் வந்து சேருகிறது. "வேதியூற்று' என்று இதற்கு பெயர். இந்த ஊற்று அகஸ்தியரால்
உண்டாக்கப்பட்டது என்றும், இதனை அருந்துபவர்கள் நீண்ட ஆயுள் பெறுவார்கள் எனபது அந்த
ஊர் மக்களின் நம்பிக்கை.
இந்த கோயிலுக்கு அருகே
மெய்கண்ட சித்தரின் ஜீவ சமாதி உள்ளது. இவர் பரஞ்சோதி முனிவரின் சீடராக இருந்தவர் என்றும்,
கன்னிவாடி கிரமத்தில் வாழ்ந்து பல ஆன்மீக பணிகள், சித்த மருத்துவ சேவைகள் செய்து இதே
பகுதியில் ஜீவ சமாதியானதாக கூறப்படுகிறது.
இப்படி பெருமை வாய்ந்த
இந்த பகுதியில், தற்போது பாம்பு படம் எடுத்திருப்பதுபோல் சடைமுடியுடன் பாம்புச்சடை
சித்தர் என்ற மனோகர்சாமி என்பவர் வாழ்ந்து வருகிறார். ஆனால், இவர் எப்போதும் கஞ்சா
அடித்துக்கொண்டே இருப்பார். நெற்றியில் பட்டையும், உடம்பில் காவி துணியும், கையில்
கஞ்சாவுமாக எப்போதும் சோமலிங்க மலைப் பகுதியில் சுற்றி சுற்றி வருகிறார்.
மாதக் கணக்கில் கூட
உணவு உண்ணாமல் வெறும் கஞ்சாவை மட்டுமே குடித்துக் கொண்டு உயிர் வாழ்ந்து வருகிறார்
இந்த மனோகர்சாமி.
இப்படி சித்தர்களுக்கும்,
பல பாரம்பரிய கலை மற்றும் சித்த மருத்துவம் போன்ற செயல்பாடுகளுக்கும் புகழ் பெற்ற இந்த
ஊர், தற்போது எந்தவித வளர்ச்சியும் இல்லாமல் கலையிழந்து நிற்கிறது.
பாதரசம் முதலிய பாஷானங்களிருந்து
மருந்து தயாரிப்பதும், பாதரச மணிகள், சிலைகள் செய்வது போன்ற பெரும் கலைகளில் சித்தர்கள்
இந்த பகுதியில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி, பரம்பரை தொழிலாக
பாதரச மணி மாலைகளை இந்த பகுதியில் இன்றளவும் செய்துவருகிறார் இளங்கோ என்ற சித்தர்.
இவரை பற்றி இப்போது பார்க்கலாம்.
இளங்கோவிற்கு சித்திரா
என்ற மனைவியும், கௌதம் ராஜ் என்ற மகனும் உள்ளனர்.
இவரது மூதாதையர்கள் மாந்திரீக வித்தைகளையும், சித்த மருத்துவ முறைகளையும் செய்துவந்ததாகவும்,
இந்த பரம்பரையில் பிறந்த இவர், தன் வீட்டிலேயே வாதம், பித்தம், மூட்டுவலி, புற்றுநோய்,
நரம்பு சோர்வுகள், இதய நோய்கள் மற்றும் கல்லீரல் தொடர்பான பலவிதமான நோய்களுக்கு நிவாரணம்
தருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இவருக்கும்
அதே ஊரை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கும் சோமலிங்கேஸ்வரர் கோயிலை நிவர்வகிப்பதில்
மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் பல மோசடி தொடர்புகள் காரணமாக இருவருக்கும் இடையே
பிரச்சனைகள் ஏற்பட்டு மோதிக்கொண்டாத கூறப்படுகிறது.
இதனால் கொதித்துப்போன
முருகானந்தம் தரப்பினர், சித்த மருத்துவம் என்ற பெயரில் இளங்கோ பல வருடங்களாக ஊர் மக்களை ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இப்படி இருவரிடையே முளைத்த இந்த ஈகோ பிரச்சினையால் இளங்கோ தன்னுடைய பரம்பரை தொழிலான
சித்த மருத்துவத்தை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சித்த மருத்துவத்தை
தான் தற்செயலாக கற்றுக் கொள்ளவில்லை என்றும், இது தங்களின் பாரம்பரையை சேர்ந்த தொழில்
என்றும் கூறும் இளங்கோ, தனது முன்னோர்கள் எழுதி வைத்துச்சென்ற குறிப்புக்களை வைத்துதான்
தற்போது இந்த மருத்துவத்தை செய்து வருவதாக விளக்கம் கூறினார்.
இளங்கோவை சந்தித்த
நமது படக்குழுவினரை, சோமாலிங்கபுரத்தில் இருந்து ஒரு காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்றார்.
அங்கே இரண்டாயிரம் ஆண்டுகளாக உள்ள அழிஞ்சல் மரத்தை காட்டி அந்த மரத்தின் கொட்டைகள்
உயிர்ப்பு சக்தி மிகுந்தவை என்றும், இவை கீழே விழுந்ததால், பக்கத்தில் ஆயிரம் மரங்கள்
இருந்தாலும், உடனே தன் தாய் மரத்தில் மட்டுமே ஒட்டிக்கொள்ளும் என்று அதிசய விளக்கம்
கொடுத்தார்.
தன்மீது வரும் குற்றச்சாட்டுக்களை
மறுக்கும் இவர் ஒருகட்டத்தில் ஆர்வ கோளாறு அதிகமாகி பண்ணப்பட்டி அருகே உள்ள காமராஜ்
அணையில் குதித்து மணிக்கணக்கில் தண்ணீரில் நீந்தாமல் ஒரு கட்டை போல மிதந்து கிடந்தார்.
இளங்கோவின் சேஸ்டைகளை
கண்டு இவரை சித்தர் என்ற நம்பாத நமது படக்குழுவினர், அவரது முன்னோர்கள் பாதரச மணியை
செய்வார்கள் என்று கூறுவதை தங்களால் நம்பமுடியவில்லை என்று கூறியதும், கொதித்துப்போனார்.
உடனே, உங்கள் மத்தியிலேயே பாதரச மணியை தயார் செய்து காட்டுகிறேன் பார் என்று அதற்கான
வேலைகளில் அதிரடியாக இறங்கினார்.
இதற்காக, இரண்டு வகையான
உப்பு, கொஞ்சம் பாதரசம் மற்றும் சிறிதளவு எலும்மிச்சை சாறு என சமையல் குறிப்பு போன்று
ஒவ்வொரு பொருளாக எடுத்து அதை ஒரு குடுவையில் கலந்தார். என்ன ஆச்சர்யம், சில நிமிடங்களில்
அந்த குடுவையில் இருந்த கலவை தானாக கொதிக்கத் தொடங்கியது.
பின்னர் குளிர்ந்த
நீரின் மூலம் பிரித்தெடுத்து, அதனை ஒரு சிறிய வௌ்ளைத் துணியில் வடிகட்டி எடுத்தார்.
பின்பு அழுக்கு போன்று இருந்த பொருளை உருண்டையாக உருட்டி ஒரு மணியாக மாற்றக் கூடிய
அளவில் செய்து காட்டினார்.
மேலும், பாதரச மணி
தயாரிக்கும் போது, கையில் தங்க நகைகள் அணிந்திருக்க கூடாது என்று கூறிய இளங்கோ, அப்படி
அணிந்திருந்தால் தங்கம் தன்னுடைய சுய நிலையை இழந்து மதிப்பற்றதாகிவிடும் என்று பயமுறுத்தினார்.
இதுபோலத்தான், பண்டைய
காலங்களில் மலைப் பகுதிகளில் வாழ்ந்த சித்தர்கள் பாதரச மணியை செய்தார்கள் என்றும்,
இந்த முறையைத்தான் தானும் பின்பற்றி செய்வதாக
சுய புராணத்தை வாசிக்க தொடங்கினார்.
பெரும்பாலான சித்தர்கள்
இதுபோன்ற பாதரச மணிகளை கழுத்தில் அணிந்துக்கொண்டு இருந்ததாகவும், அப்படி அணிந்திருந்தால்
காடுகளில் வாழும்போது எந்த விலங்குகள் பயந்து ஓடும் என்றும், தங்களை எந்தவித தீமைகளும்
அண்டாது என்றும் அந்த காலத்திலேயே இந்த பாதரச மணிக்கு அமோக வரவேற்பு இருந்ததாகவும்
இளங்கோ கூறினார்.
மேலும், தனது சித்த
வைத்திய நிலையம் ஒரு மெக்கானிக் செட் போலத்தான் ஆரம்பிக்கப்பட்டதாகவும், எந்த பிரச்சினையாக
இருந்தாலும் வாகனத்தை எப்படி பார்ட்ஸ் பார்ட்சாக கழட்டி இஞ்சினை ரிப்பேர் செய்கிறார்களோ
அது மாதிரி மனிதர்களை தாக்கும் நோய்களை தனித்தனியாக பிரித்துப் பார்த்து தன்னால் சரி
செய்ய முடியும் என்று சவால் விடுகிறார் இந்த இளங்கோ. சித்தர்.
ஏன், உலகத்தையே கதிகலங்க
வைக்கும், கோடிக்கணக்கில் செயவு செய்தும் பயனளிக்காத உயிர்கொல்லி நோயான எயிட்ஸ் போன்ற
நோய்களுக்கும் தன் சித்த மருத்தவத்தால் நல்ல தீர்வு காண முடியும் என்று அடித்துக் கூறும்
இளங்கோ சித்தரை பற்றி சற்று யோசித்துப் பாருங்கள்.
இவரது ஆதங்கம் இதோடு
அடங்கவில்லை. இன்றைய நவீன உலகில் பிரசித்திப்பெற்ற ஆங்கில மருந்துவத்தையும், அந்த முறையை
கையாளும் டாக்டர்களையும் மக்கள் நாடிச் செல்வதை கண்டு கொதித்துபோனார். மேலும், நம்மைச்
சுற்றி ஏராளமான நன்மை தரக்கூடிய இயற்கை மருந்துவ முறைகள் இருக்கும்போது, வீணான மருத்துவத்திற்கு
முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுகிறார் இளங்கோ சித்தர்.
மேலும், மருந்துகளை
கண்டுபிடிக்கும் மருத்துவ விஞ்ஞானிகள், அந்த மருந்துகளை பரிசோதிக்க விலங்குகளைதான்
பயன்படுத்துகிறார்கள். ஆனால், இளங்கோ சித்தரோ தான் கண்டுபிடித்த சித்த மருந்தை, தனக்கே
சோதனைக்கு உட்படுத்தி பரிசோதித்த பின்னர்தான் நோயாளிகளுக்கு கொடுப்பதாக பெருமையாக கூறினார்.
தனக்கு வாழ்க்கையில்
பணம் சம்பாதிக்க வேண்டிய நோக்கம் இல்லை என்றும், இந்த சித்த மருத்துவத்துறையில் தடம்பதிக்க
வேண்டும் என்ற ஒரே வெறியில் இருப்பதாகவும், இதை தெரிவிக்கவே தனது அறையில் 18 சித்தர்கள்
51 மகான்களின் படங்களை வைத்து பூசை செய்து வருவதாகவும் கூறுகிறார் இந்த இளங்கோ சித்தர்.
மேலும், இந்த பரபரப்பு
சித்தரால், பயனடைந்த பலர் பாதரச மணியின் மகத்துவத்தையும், சித்த மருத்துவத்தின் பலனையும்
பெருமிதத்துடன் கூறினர்.
பாதரசம், சில தாவரச்
சாறுகளின் புரதப் பொருள்களான சிஸ்டைன் என்ற கந்தகம், அமினோ அமிலத்துடன் கலந்து
கெட்டியாகி பாதரச மணியாகிவிடுகிறது. இதை சிலர் மணியாக, சிவலிங்கமாக அணிவதால் செல்வம்
கொழிக்கும் என்றும், கொடிய நோய்களும் தீரும் என்றும் நம்புபவர்கள் உண்டு. ஆனால்,
பாதரசம் அணிவதால் அது மெதுவாக வெளிப்பட்டு உடலுக்கு ஊறு விளைவித்து அல்ஷைமர் எனப்படும்
மறதி வியாதியை உருவாக்கும் என்பது மருத்துவர்களின் கருத்து.
தற்போது நாட்டில் நடைமுறையில்
உள்ள சித்தா, ஆயுர்வேதா போன்ற பல இயற்கை மருத்துவ முறைகள் பிணியை போக்க கடைபிடிக்கபட்டு
வந்தாலும், பல போலி ஆசாமிகள் சித்த வைத்தியர்கள் என்ற போர்வையில் நம்மிடையே உலா வருகிறார்கள்.
மக்கள் தான் இதுபோன்றவர்களை அடையாளம் கண்டு கவனமாக செயல்படவேண்டும்.
ஒரு காலத்தில் கொஞ்ச
குலாவிக்கொண்டிருந்த இந்த இரு தரப்பினரும், தற்போது இரு துருவங்களாக பிரிந்து ஒருவர்
மீது ஒருவர் மோசடி புகார்களை அள்ளி வீசிகின்றனர்.
25 வயதுள்ள லீனா மரியா
பால் ஒரு பல் மருத்துவ பட்டதாரி. துபாயில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், கடந்த இரண்டு
ஆண்டுகளாக மாடலிங் மற்றும் சினிமா துறையில் நடித்துள்ளார்.
பி.எஸ். ஜைஸ்வால்,
டி.எஸ்.பி
சமூக ஆர்வலர்
பொதுமக்கள்
ஆட்டோ ஓட்டுனர்
இரு மாநில போலீசாரின்
கூட்டு விசாரணையில் கேரளாவை சேர்ந்த லீனா மரியா பால் மற்றும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
அந்த பண்ணை வீட்டிலிருந்து பல சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை போலீசார்
கொடுத்த தகவலின் அடிப்படையி்ல், நாங்கள் டெல்லியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் சோதணை
நடத்தினோம்.
இந்த வழக்கில் சென்னை
கனரா வங்கியில் வியாபார முதலீட்டுக்காக, போலி ஆவணங்கள் தயாரித்து அதன் மூலம் 19 கோடி
ரூபாயை முறைகேடாக பெற்றதும், பெங்களூரை சேர்ந்த சந்திரசேகர ரெட்டி என்பவரிடம் தன்னை
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று அறிமுகம் செய்துக்கொண்டு அவரிடமும் பணம் மோசடி செய்தது
தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக