ஞாயிறு, 16 ஜூன், 2013

மெட்ராஸ்" பெயர் மாறியது: "சென்னை" என்று பெயர் மாற்றம் - கோ.ஜெயக்குமார்



தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நகரம், வரலாற்று சிறப்பு மிக்கது. இதனை `மதராஸ்' என்றும், `சென்னை' என்றும் இரு பெயர்களால் அழைத்தார்கள். மதராஸ் என்பதை "மெட்ராஸ்" என்று பிற மொழிகளில் எழுதினார்கள். எனவே சென்னை நகரின் பெயரை சென்னை என்று ஒரே பெயரில் மட்டுமே எல்லா மொழிகளிலும் அழைக்க தமிழக அரசு மு
டிவு செய்தது.
 
"மெட்ராஸ்" பெயர் மாறியது: "சென்னை" என்று பெயர் மாற்றம்இதை முதல்- அமைச்சர் கருணாநிதி 17-7-1996 அன்று சட்ட சபையில் அறிவித்தார். சென்னை நகர் என்று பெயர் வந்ததற்கு வரலாற்று அடிப்படையில் இரு காரணங்கள் கூறப்படுகிறன. தற்போதைய ஐகோர்ட்டு கட்டிடம் உள்ள இடத்தில் சுமார் 365 ஆண்டுகளுக்கு முன்பு சென்னகேசவர் கோவில் ஒன்று இருந்தி ருக்கிறது.

அதனால் சென்ன கேசவபுரம் என்று அழைக்கப்பட்டு பின்னர் சென்னை என்று பெயர் வந்ததாக கூறப் படுகிறது. ஆங்கிலேயர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை (தற்போது தலைமை செயலகம் இயங்கும் இடம்) கட்ட இடம் அளித்த அய்யப்ப நாயக்கர், வேங்கடப்பன் ஆகியோர் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் "சென்னப்பட்டினம்" என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. அனைத்து மொழிகளிலும் "சென்னை" என்றே அழைக்கவேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை பல தரப்பினரும் வரவேற்றார்கள்.


அந்த சமயத்தில் அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகன் கூறியதாவது:-

"சென்னப்பட்டினம் என்பதன் சுருக்கம்தான் சென்னை என்று அழைக்கப்படுகிறது. தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி, சென்னை என்ற பெயரே எல்லா மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும் என்று அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது."

இவ்வாறு தமிழ்க்குடிமகன் கூறினார்..

மிழ்நாடு காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரும் வரவேற்று அறிக்கை வெளியிட்டார்கள். குமரிஅனந்தன் வெளியிட்ட அறிக்கையில், "மெட்ராஸ்" என்று அழைக்கப்படுவதற்கு பதிலாக எல்லா மொழிகளிலும் சென்னை என்று அழைக்கப்பட வேண்டும் என்ற அரசின் முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கிறது" என்று குறிப்பிட்டு இருந்தார்.

பழ.நெடுமாறன் விடுத்த அறிக்கையில், "மெட்ராஸ் என்பதை இனி சென்னை என எல்லா மொழிகளிலும் அழைக்கப்படும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். அதைப் போல தமிழகத்தில் பல ஊர்ப்பெயர்கள் இடைக்காலத்தில் வடமொழியில் மாற்றம் செய்யப்பட்டன.

அவற்றின் தமிழ்ப் பெயர்களை மீண்டும் நிலை நிறுத்தும்படி வேண்டுகிறேன்" என்று கூறி இருந்தார். இந்தியாவின் முக்கிய 4 நகரங்களில் ஒன்றான பம்பாய் பெயரும் மும்பை என்று மாற்றப்பட்டது. 4-5-1995 அன்று நடைபெற்ற மராட்டிய மந்திரிசபை கூட்டத்தில் `பம்பாய்' பெயரை `மும்பாய்' என்று மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது. 

இதை முதல்-மந்திரி மனோகர் ஜோஷி தெரிவித்தார். டெல்லியில் பிரதமர் நரசிம்மராவை சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தார். அதன் பிறகு பம்பாய் என்பது மும்பாய் என்று மாறியது.       புதுமை
பழமை

கொஞ்ச காலத்தில் அதுவும் மாற்றப்பட்டு `மும்பை' ஆனது. இதனை அடுத்து மேற்கு வங்காளத் தலைநகரும் இந்தியாவின் பெரிய துறைமுக நகருமான கல்கத்தா "கொல்கத்தா" என்று மாற்றப்பட்டது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக