செவ்வாய், 20 அக்டோபர், 2026

சோழர் கால ஆட்சியில் நடுகல் - முனைவர் கோ.ஜெயக்குமார்

சோழர் கால ஆட்சியில் நடுகல் - முனைவர் கோ.ஜெயக்குமார்

சோழர் கால நடுகற்களில் செய்திகள் நீண்டதாயும் வட்டெழுத்து ஒழிந்து தமிழ் எழுத்து பொறிப்பு பெற்றுதாயும் ஒப்பீட்டில் பல்லவர் கால எழுதும்முறை, சொல்லாட்சி ஆகியவற்றினின்று மாறுபட்டதாயும் உள்ளன. சோழர் ஆட்சியில் தமிழகத்தில் வட்டெழுத்து கைவிடப்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கீழ் முட்டுகூர் எனும் ஊரில் தமிழ் எழுத்தில் 10 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு உள்ளது. (E. I. Vol  4, Pg. 179)
ஸ்ரீ மதிரை கொண் / ட கோப்பரகேசரி பன் / மர்கு யாண்ட் இருபத்தொ / ன்ப(தா)வது பெருமான / டிகளான் முக்கு / ட்டூர் தொறு /  (கொள்)ள மீ(ட்டுப்) பட்டா / ன் வடு(ந) / (வா)ரண்ட (வா)ரதன் தா / ண்டன்
பாண்டியனை வென்று மதுரையைத் தன் ஆட்சியின் கீழ் கொண்ட கோப்பர கேசரியான முதலாம் பராந்தகச் சோழனின் இருபத்தொன்பதாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 936) பெருமானடிகளால் முக்குட்டூர் ஆநிரைகள் கவரப்பட அவற்றை மீட்டு வீரசாவடைந்தான் வடுந வாரண்டன் மகன் வாரதன் தாண்டன் என்பவன்.
வடுந என்பது வடுக என்பதாக இருக்கலாம். வார, வாரத ஆகிய தமிழ்ப் பெயர்கள் எதியோபிய நாகரிகத்திலும் பரவி உள்ளன. ஒரு எதியோபிய மன்னன் பெயர் Tsawi Terhak Warada Nagash 730 - 681 BC > சவ்வி தேர்காக்(அன்) வாரதன் நக்க(ன்).


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கீழ் முட்டுகூர் எனும் ஊரில் தமிழ் எழுத்தில் 10 ஆம் நூற்றாண்டு நடுகல் இன்னொன்று உள்ளது. (E. I. Vol  4, Pg. 179)

ஸ்ரீ / மதிரை கொ /  ண்ட கோப்பர / கேசரி வந்மற்கு யா /  ண்டு முப்பத்து இர(ண்)டாவது வடகரை முக்குட்டூர் கு / மார நந்தை புழ / (ல)ப்பன் பு / லி குத்தி / ன கரைனா /  டுகுமாரன் - மைந்தன் (son of the soil), குத்தி - ஆய்தத்தால் குத்திக் கொன்று; கரைநாடு - ஆற்றங்கரை ஊர்முதலாம் பராந்தக சோழனுடைய முப்பத்து இரண்டாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 939) பாலாற்றின் வடகரையில் அமைந்த முக்குட்டூர் எனும் ஊரில் புகுந்த புலியை அவ்வூரின் மைந்தன் (குமாரன்) அந்தை புழலப்பன் என்பவன் அப் புலியை ஆய்தத்தால் குத்திக் கொன்ற ஆற்றங்கரையில் அமைந்த ஊர் இது. அவன் இறந்தது பற்றி கல்வெட்டில் குறிப்பு இல்லை. அவன் வீரம் மட்டும் மெச்சிக் கூறப்பட்டு உள்ளது. அத்தகையோன் ஊர் இது என ஊர்ப பெருமையே கல்வெட்டில் விஞ்சி நிற்கின்றது.
நாமக்கல் மாவட்டம் கூளிப்பட்டி பெருமாள் கோவில் அருகே கிணற்றோரம் உள்ள 10 ஆம் நூற்றாண்டு நடுகல். (ஆவ. இதழ் 7, 1996, பக். 29)
மதிரை கொண்ட கோப்பர / கொடுக்க / மங்கலத் / தூராழ்வான் / சடையமரைய / ன் காலி கொ/ ள்ள மகனை /  ச் சேமஞ் செய்து / எதிரே / ய் நட / ந்து / சென் / று பட்டா / ன் ச / டை / ய மரை / யன் மகன் /  ஆரை / யன் / ஆயி / ரவன் / கல் பொ / றிப் / பிச் / சான் / தந் / தையா / ரைச் / சாத்தி
ஆழ்வான் - ஆள்பவன்; காலி - பசு, ஆநிரை; கொள்ள - கவர; சேமம் - ஏமம் [ச் + ஏமம்], காப்பு; கல் பொறிப்பி - நடுகல் நிறுத்தி கல்வெட்டு பொறித்து; சாத்தி -  ஒருவர் பெயர் நிலைத்திருக்கும் நோக்கில் அவர் நினைவாக ஒன்றைச் செய்தல் (செ. சொ. பி)முதலாம் பராந்தகனின் (907 - 953) ஆட்சி ஆண்டு சிதைந்து உள்ளது.  கொடுக்க மங்கலத்து ஊரை ஆளும் சடையமரையன் என்பவன் பகைவர் ஆநிரைகளைக் கவரும் போது அதைத் தடுக்க ஏற்பட்ட போரில் தன் மகன் மேல் நிகழ இருந்த தாக்குதலில் இருந்து அவனைப் பாதுகாப்பாக அனுப்பி அவன் உயிர் காத்து தான் பகைவர்க்கு முன்னே சென்று போரிட்டு அதில் தாக்கப்பட்டு வீர சாவடைந்தான். தன்னைக் காக்கத் தன்னுடைய இன்னுயிரையும் ஈகம் செய்த தந்தையின் பெயரை நிலைக்க வைக்கும் நோக்கில் மகன் ஆரைய்யன் ஆயிரவன் நடுகல் நிறுத்து தந்தையின் ஈகத்தை அதில் எழுத்தில் பொறித்தான்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வெங்கட்டூரில் தமிழ் எழுத்து பொறிப்பு உள்ள நடுகல் கல்வெட்டு உள்ளது. (ஆவ. இதழ் 5,1995, பக். 16/17)
வீரபாண்டியனைத் தலைகொண்ட கோப்பரகேசரி / பன்மற்கு யாண்டு மூன்றாவது செங்குன்றத்து /  தூம்படைப்பூர் சாத்தயன் திருவூறல் சோள / நூர் ஊரழிஞ்சி தொறுக் கொள்ள கொட்டுப் பூ /  சல் போய் தொறு மீட்டுப் பட்டான்
தூம்பு அடைப்பு - வாயில் [gateway] அடைப்பு, கொட்டு பூசல் - தெருச் சண்டை, பறை அடித்து போருக்குச் செல்வதுவீரபாண்டியனின் தலைகொண்ட கோப்பர கேசரியான ஆதித்த கரிகாலச் சோழனுடைய மூன்றாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 953) செங்குன்றத்தில் அடங்கிய தூம்படைப்பூரில் வாழும் சாத்தய்யன் திருவூறல் என்பவன் சோழனூரை அழித்து ஆநிரைகளைப் பகைவர் கவர்ந்து விட அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பூசலில் பங்குகொண்டு ஆநிரைகளை மீட்டு வீர சாவடைந்தான்.

\திருவூறல் உடன் பட்டான் / முத்தரையன் தும்பன்
அதே தொறுப் பூசலில் திருவூறல் என்பானுடன் சேர்ந்து போரிட்டு முத்தரையன் தும்பன் என்பவன் வீர சாவடைந்தான்
வீர பாண்டியனைத் தலைகொண்ட கோப்பர கேசரி /  பன்மற்கு யாண்டு மூன்றாவது செங்குன்றத்து தூம்ப / டைப்பூர் விக்கிரமாதித்தனாகிய தின்ம செட்டி மகன் / சாத்தயன் சோளனூர் ஊரழிஞ்சு தொறுக் கொ / ள்ளக் கொட்டுபூசல் போய்த் தொறு மீ /  ட்டுப் பட்டார்.



சோழன் ஆதித்த கரிகாலனுடைய மூன்றாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 953)  செங்குன்றத்தில் அடங்கிய தூம்படைப்பூரில் வாழும் விக்கிரமாதித்தனாகிய தி(ன்)ம்ம செட்டி என்பவனுடைய மகன் சாத்தய்யன் என்பவன் சோழனூரை அழித்து ஆநிரைகளைப் பகைவர் கவர்ந்து விட அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பூசலில் பங்கு கொண்டு ஆநிரைகளை மீட்டு வீர சாவடைந்தான்
சாத்தயன் உடன் பட்டான் அடியா / ன் ஊர் பேர(ய)ன் முத்தரை(ய)ன் காரி
அதே தொறுப் பூசலில் சாத்தய்யன் உடன் அவனுடைய படைஆள் ஊர்ப்பேரயன் முத்தரைய்யன் காரி என்பவன் வீர சாவு அடைந்தான். ஒரே பூசலில் ஆநிரைகளை மீட்க நால்வர் மடிந்த செய்தி தனித் தனியே வெட்டப்ப்டுள்ளது என்பது அந் நால்வருக்கும் தனித் தனியே மதிப்பு செய்யப்பட்டதைக் குறிக்கின்றது. திருவூறல் பெயர் முத்தரையன் தும்பன் கல்வெட்டில் குறிக்கப்பட்டிருப்பதில் இருந்து அவன் திருவூறலுக்கு அடியான் என்பது புலனாகின்றது.ஒரு சப்பானிய வேந்தனின் ஈமப் பெயர் Korei 290 -215 BC > காரி என்பது தமிழாகும்.


வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் காட்டேரி என்ற ஊரில் அமைந்த 10 ஆம் நூற்றாண்டு நடுகல் இக்கால் வேலூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. (நடு. பக். 245)ஸ்வஸ்தி ஸ்ரீ கோவீர பாண்டியனை / முடித்தலை கொண்ட /  கோப்பரகேசரி பருமற்கு / யாண்டு நாலாவது பானைச் சுணையைப் பூத்து வாண்டை வந்தழித்த விடத்து ஒந் / டப்படுத்து எதிரே பத்தரம் மு / ருவிப் பட்டினத்துப் பட்டா / ன் தோவி டென்.ஒண்ட - பதுங்கி, மறைந்து,ஒளிந்து; பத்திரம் - குற்றுவாள், அம்பு; பட்டினம் - கடற்கரை ஊர், காவிரிப் பூம்பட்டினம்.

சோழன் ஆதித்த கரிகாலன் உடைய நான்காம் ஆட்சி ஆண்டில் (கி.பி.954) சோழனுக்குப் படைத் தலைவனாய் இருந்த பூத்து வாண்டை என்பவன் பானைச் சுணை எனும் ஊர் மேல் படை கொண்டு வந்து அழித்த இடத்தில் மண்ணோடு மண்ணாகப் பதுங்கிப்படுத்து கொண்டிருந்த தோவிடன் என்ற படைஆள் வாண்டைப் படை தனக்கு அருகே வந்ததும் திடீரென்று எழுந்து திகைப்புற எதிரே தோன்றி குற்றுவாளை உருவிப் போரிட்டு கடற்கரை ஊரான காவிரிப்பூம்பட்டினத்தில் வீர சாவடைந்தான்.
வாண்டையார் என்ற பெயருடையோர் இன்றும் உள்ளனர். இவர்களுடைய முன்னோர் சோழப் பேரரசில் படைத்தலைவராய்  பொறுப்பில் இருந்து உள்ளனர். காவிரி கடலில் கலக்கும் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது கடற்கரை ஊரான காவிரிப் பூம்பட்டினம். அத்து என்ற சாரியை பூம்புகாரில் என்று பொருள் தருவதால் கடல் கொண்ட பின் சிற்றூராகிப் போன புகாரின் ஒரு அண்டைப் பகுதியில் பானைச் சுணை என்ற ஊர் இருந்து உள்ளது எனலாம். எனவே போர் சோழ நாட்டில் நடைபெற்று உள்ளது. ஆனால் மாண்ட தோவிடன் வாணியம்பாடி வட்டம் காட்டேரி ஊரைச் சேர்ந்தவன் என்பதால் அவன் நினைவில் இந் நடுகல் அவன் உறவினரால் அங்கு நடப்பட்டது. எனினும் தோவிடன் யார் சார்பில் போரிட்டான் என்ற செய்தி கல்வெட்டில் குறிக்கப்படவில்லை.

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் கெரஹோடஹள்ளி எனும் ஊரில் தமிழ் எழுத்து பொறிப்பில் ஒரு நடுகல் கல்வெட்டு அறியப்பட்டுள்ளது. (தரும. கல். 139/1974)ஸ்வஸ்தி ஸ்ரீ பூர்வ தேசமும் கங் / கையும் கிடாரமும் கொ / ண்ட கோப்பர கேசரி பந் / மரான உடையார் ஸ்ரீ ரா / ஜேந்திர சோழ தேவற்கு / யாண்டு 20 ஆவது நுளம் / ப பாடியாகிய நிகரிலி / சோழ மண்டலத்து / புறமலை நாட்டுப் /  பாகலப்பள்ளி ஊர் அ / ழிய எதிரே எறிஞ்சு / பட்டான் வேசாலிப் பேர / ரையர் மருகன் அண்ணயன் மக /  ன் பப்பையன் இவன் மகன் / பாலிதேவன் இக்கல் நிறுத்தி / னான் எறிஞ்சு - அழித்து; மருகன் - மருமகன்; நிறுத்தினான் - நட்டுவித்தான் முதலாம் இராஜேந்திரச் சோழனின் 20 ஆவது ஆட்சி ஆண்டு (கி.பி. 1032) நிகழ்வை ஒட்டி எழுந்த இக்கல்வெட்டு அவன் பூர்வ தேசத்தையும் கங்கையையும் கிடாரத்தையும் வென்று கைப்பற்றிய வெற்றிச் சிற்ப்புகளைக் முதலில் கூறத் தொடங்குகிறது. (இராசராசன் காலத்தில்) நிகரிலிச் சோழ மண்டலமாக நுளம்பப்பாடி மாற்றப்பட்டதையும் சுட்டுகின்றது.

அந்த நுளம்பப்பாடியில் அடங்கிய புறமலை நாட்டின் பாகலப்பள்ளி எனும் ஊர் அழிப்பில் நிகழ்ந்த ஆநிரைப் போரில் ஆநிரைகளை மீட்க பகைவர் படையை எதிர்த்து அழித்து வீர சாவடைந்தான் வேசாலிப் பேரரையரின் மருமகனும் அண்ணயனின் மகனுமான பப்பைய்யன் என்பவன். இதை நினைவு கூறும் வகையில் பப்பைய்யன் மகன் பாலிதேவன் என்பவன் இந்த நடுகல்லை நட்டுவித்தான்.அண்ணய்யன், பப்பைய்யன், பாலிதேவன் ஆகியோர் நுளம்ப மரபு அரசர்கள். நுளம்பன் ஐய்யப்ப தேவனின் இரு புதல்வருள் ஒருவன் இந்த அண்ணய்யன் இவனுடைய தமபி திலீப்பரசன் என்பவன்.

 
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் பட்டாலிக் கிராமம் எனும் ஊரில் கொங்கு சோழ அரசன் ஆட்சியில் இந்நடுகல் கல்வெட்டு வெட்டப்பட்டு உள்ளது.(ஆவ. இதழ் 7, 1996, பக். 31) ஸ்வஸ்தி ஸ்ரீ /  கோ அபி / மான சோ / ழ ஸ்ரீ ராஜாத் ராஜ தேவ / ற்குத் திரு / வெழுத்திட்டு / ச் செல்லா நின்ற திரு / நாளி யாண் / டு பத்தாவ / து நாயக / விச்சி நாக / ந் சிலம்பி /  யேந் குறும் /  புள்ளரில் எ / ந் மணவாள / ந் காவன் அ / ரையனைச் / சாத்தி எடுப் / பிச்ச பிடாரி / கோயில் இ / து ரக்ஷிப்பா / ந் காலிற் பொடி / எந் தலை மேலிது

திரு எழுத்திட்டு - கோரிக்கை மடல் எழுதி; செல்லா நின்ற - நடக்க, நடக்கின்ற; நாயகன் - தலைவன், சிற்றரசன்; மணவாளன் - கணவன்; சாத்தி - ஒருவர் பெயர் நிலைத்திருக்கும் நோக்கில் அவர் நினைவாக ஒன்றைச் செய்தல்; எடுப்பித்த - கட்டிய; ரக்ஷிப்பான் - காப்பவன்; பொடி – தூசு
கொங்குப் பகுதியை ஆண்ட சோழருள் அபிமான சோழ இராசராசனுக்கு கோரிக்கை மடல் எழுதி நடக்கின்ற திரு நாளி பத்தாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 1090) குறும் பிள்ளர் தலைவன் விச்சி நாகன் என்பவனுக்கு மகளான சிலம்பி எனும் நான் என் கணவன் காவன் அரையன் என்பவன் பெயர் நிலைத்து இருக்கும் பொருட்டு கட்டிய பிடாரிக் கோயில் இது. இதை அழியாமல் காப்பவனுடைய கால் தூசியை என் தலை மேல் இட்டு பூசை செய்வேன்.

குறும் பிள்ளர் வேட்டுவ இனத்தவர் ஆவர். மனைவி ஒருத்தி தன் கணவனுக்காக எடுப்பித்த நடுகல் இது. அரையன் என்ற பெயர் எதியோபிய நாகரித்திலும் உள்ளது. ஒரு மன்னன் பெயர் El Aryan 3914 - 3836 BC > எல் அரையன். ஒரு சப்பானிய வேந்தனின் ஈமப் பெயர் Kobun 672 AD > காபன் > காவன் என்பது. இவனுடைய இயற்பெயர் Otomo > ஓடம(ன்).

சித்தூர் மாவட்டம் புங்கனூர் வட்டம் நெலப்பள்ளி எனும் ஊரில் 10 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு ஒன்று உள்ளது.(ஆவ. இதழ் 12, 2001, பக். 2)
ஸ்ரீ மாவலிவாண விச்சாதிரரான / புழலம் மரையர் மகன் ஸ்ரீ கண் /  டைய்யன் முகப்பு வேட்டையில் சேதட்டியார் / மகன் இந்தப்பன் அவர் கோயிற்றமன் புலி குத்தி / ய்ப் புலியுந் தானுமுடனேய் பட்டான் இதுக்குக் கு / டுத்த மண்ணழித்தான் க(ங்)கை யொ - / (டுகு)மரியிடை (ய்) ச் செய்த பாவங் கொள்வான்

முகப்பு - முதன்முதல், தொடக்க, முன்; கோயிற்றமன் - கண்காணிப்பில், கண்முன்னே;  குத்தி - ஆய்தத்தால் குத்திக் கொனறு வாண மரபு அரசருள் சில நடுகல் கல்வெட்டில் மாவலி வாண அரையன் என்ற இவன் பெயர் இடம் பெறுகின்றது. குடியாத்தம் வட்டம் கொண்டத்தூர் நடுகல் கல்வெட்டில் சக ஆண்டு 932 என குறிக்கப்படுவதால் இவன் கி.பி. 1010 இல் ஆட்சி செய்தவன் என அறிய முடிகின்றது. இவனுக்கு விச்சாதிரராய் விளங்கும் புழலம்ம(ன்) அரையன் என்பவனுடைய மகன் ஸ்ரீ கண்டைய்யன் என்பவன் முதன்முதலாக வேட்டைப் பழகும் போது அவனுடன் வேட்டைக்கு சேதட்டி என்பவனுடைய படைஆள் இந்தப்பன் என்பவன் சென்றான். அப்போது திடீரென்று ஸ்ரீ கண்டைய்யன் கண்காணிப்பில் அல்லது கண்முன்னே ஒரு புலி இந்தப்பனை தாக்கி அழிக்க உடனே இந்தப்பன் ஆய்தத்தால் அதைக் குத்திக் கொல்ல புலியும் அவனும் என இருவரும் அதே இடத்தில் இறந்தனர். 
இதற்காக இந்தப்பனுக்கு நெய்த்தோர் பட்டி நிலம் கொடையாக வழங்கப்பட்டது. இந்தக் கொடை மண்ணை அழித்தவன் கங்கைக்கும் குமரிக்கும் இடையே வாழ்வோர் செய்த பாவத்தை அனுபவிப்பான் என சாவிக்கப்பட்டுள்ளது.Vicchad என்பதற்கு மானியர் உவில்லியம்சின் ஆங்கில சமற்கிருத அகராதியுள் uncover, unclothe ஆகிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. மாவலி வாணராயனுக்குப் போர்ப் பயிற்சியின் போதும், போரின் போதும் அணிவிக்கும் காப்புக்கவச ஆடையைக் களைய உதவுபவன் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. புழலம்ம(ன்) அரையன் ஒரு சிற்றரசனாகவோ அல்லது படைத் தலைவனாகவோ மாவலிவாணராயனிடத்து பணி செய்திருக்கலாம் என ஊகிக்க முடிகின்றது.


தென்னிந்திய வீரக் கற்கள் எனும் நூலுள், 2008,  வெ. கேசவராஜ் மேற்கோல் காட்டி உள்ளது, தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் குரும்பட்டி எனும் ஊரில் உள்ள நடுகல் கல்வெட்டு. ( தரு. கல்.1974 / 66) ஸ்ரீ மாவலி வாண கொட்டி வேங்கை மீடிந்த / ஞான்று புலய மன்னர் புறமலை நாடாள / அவர் அடியான் இநொட்டைப் பெருவணயன் மகன் மகன் பட்டான் தாழன் அவர்க்கு / நெற்றமை பட்டி தீர ஏரிக் கீழ் அறு செறுவு / பேர் ஏரிக் கீழ் கருமீன் விற்று மணட்டி / இது அரமழித்தான் பாதகன் கொட்டி - அடித்து; வேங்கை - வங்கத்து பெரும் புலி வகை; மடிந்த - செத்த; அடியான் - சேவகன், படைஆள்;  மகன் - படைஆள்; கீழ் - கிழக்கே; செறுவு - வயல், அரசன் வழங்கும் நிலக் கொடை; மணட்டி(மணை + அட்டி) - தாழ்வான மண் தடுப்பு மேடை, மண் தடுப்பு; பாதகன் - துரோகி.

மாவலிவாண ராயனுக்குக் கீழ்ப்படிந்து புறமலை நாட்டை புலைய மன்னன் ஒருவன் ஆண்டு வரும் போது அவனுக்கு படைத் தலைவனாக விளங்கும் இநொட்டைப் பெருவணயன் என்பவனுடைய படைஆள் ஒருவனது மகன் தாழன் என்பவன். மாவலி வாணராயன் வேட்டையில் இருக்கும் போது தாழனை ஒரு வேங்கைப் புலி தாக்கிவிட அவன் வீர சாவு எய்துகிறான். அதே வேளையில் மாவலி வாண ராயன் அந்த வேங்கை மீது அம்படிக்க அது செத்துப் போகின்றது. 
மாவலிவாண அரையன் கண்முன்னே தாழன் இறந்ததால் அவனுக்கு நெய்த்தோர் பட்டி நிலமாக தீர ஏரிக்குக் கிழக்கே ஆறு அளவை வயலும், பேர் ஏரிக்குக் கிழக்கே கருமீன் விற்பதற்கு மண்தடுப்பு மேடையும் தானமாக வழங்கப்பட்டது. இந்த அறம் அழித்தவன் ஒரு பாதகன் என சுட்டப்பட்டு உள்ளது. அல்லது மிடிந்த (மிடுக்கு) என்பது விரைந்த என்று பொருள்படுமானால். மாவலி அடித்த அம்பிற்கு மிரண்டு விரைந்து ஓடிய வேங்கை எதிரே மறித்த தாழனைக் கொன்றது அதனால் அவனுக்கு நிலக் கொடை வழங்கப்பட்டது எனக் கொள்ளலாம்.இக்கல்வெட்டின் வாயிலாக 10 ஆம் நூற்றாண்டில் புலையரும் நாடாண்டு உள்ளனர் எனத் தெரிகின்றது. மதம் நன்கு வேரூன்றியதற்கு அடையாளமாக பாதகன் என்ற சமற்கிருத சொல் ஆளப்பட்டு உள்ளது. ஈரானின் எலாம் நாகரிகத்தில் Simashki ஆள்குடியில் ஒரு மன்னன் பெயர் Tazitta I 2040 - 2037 BC > தாழித்தன் [தாழ்(அன்) + இத்தன்]

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் - ஊத்தங்கரை சாலையில் கொரட்டி எனும் ஊரில் தமிழ் எழுத்தில் அமைந்த 9 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு ஒன்று உள்ளது.(ம. காந்தி & ப. வெங்கடேசன் ஆவ. இதழ் 12, பக் 5)
ஸ்வஸ்தி ஸ்ரீ வலியடக்கியார்க் கேழாவது / வலியடக்கியார் போவூர் நாடைந்நூறு பூமி / யுமாள காடு வெட்டிப் படை ஆறு (கு)ழுகூர் மேல் /  வந்தெறிந்த ஞான்று வலியடக்கியார் கோ / யிற்றமன் வாணிக வாணிளவரையன் இரண்டு /  குதிரையும் மேலரையும் குத்திப் பட்டான் நெ / த்தோர் பட்டிஎறிந்த - அழித்த; ஞான்று - அது போது; கோயிற்றமன் - கண்காணிப்பில், கண்முன்னே; மேலர் - மேல் அமர்ந்தோர்
வலியடக்கியார் எனும் சிற்றரசருக்கு ஏழாவது ஆட்சி ஆண்டில் வலியடக்கியார் போவூர் நாட்டு ஐநூற்று நிலத்தை ஆண்டு கொண்டிருந்த போது பல்லவக் கிளை மரபினனான காடு வெட்டியின் படை ஆறு குழுகூர் மீது வந்து ஊரழித்த போது நடந்த போரில் வலியடக்கியார் கண்முன்னே வாணிகனான வாண் இளவரையன் காடு வெட்டிப் படையின் இரு குதிரைகளையும் அதன் மேல் அமர்ந்துள்ள வீரர்களையும் ஆய்தத்தால் குத்திக் கொன்று வீர சாவடைந்தான். அதற்கு போரில் குருதி சிந்தியமைக்கு அரசனால் வழங்கப்படும் நெய்த்தோர் பட்டி நிலம் கொடையாக வாணிக வாண் இளவரையனுக்கு வழங்கப்பட்டது.
வலியடக்கியார் எந்த வேந்தனுக்குக் கீழ் ஆண்டார் என்ற செய்தி குறிக்கப்பட இல்லை. ஒருகால் பல்லவர் ஆட்சி சிலகாலம் குலைந்திருக்கலாம். அப்போது இவர் தனி ஆட்சி செலுத்தியவராகலாம்.


 
1. அரசர்களுக்காகவும், நாட்டுக்காகவும் உயிர்விடுதல்.
2. சிற்றரசர்கள் பற்றிய செய்தி
3. சமூக நிலை (சதி, உடன் கட்டை, களப்பலி)
4. மொழி வளர்ச்சி (வட்டெழுத்து மாற்றம்) (வட்டார வழக்கு சொற்கள்)
5. ஓயாத பூசல்கள்
6. கால்நடைகளே பண்டைய மக்களின் செல்வம்
7. காடுகளை அழித்து நாடு செய்தல் (காட்டு விலங்குகளுடன் போரிடும் நடுகல்)
8. நன்றி மறவாமை (நாய், கோழி, குதிரை போன்றவற்றிற்கு நடுகல் அமைத்து வழிபாடு)
9. பண்டைய தமிழ்மக்களின் இரும்பின் பயன்(ஆயுதங்கள் உடைய நடுகற்கள்)
10.நம்பிக்கைகள் (படையல் வைத்து வழிபாடு)

பார்வை நூல்கள்
  1. Inscriptions of Andhra Pradesh, Cuddapah Dist. Vol I, Para Brahma Sastry, 1977
  2. South Indian Memorial Stones - Rajan .K, 2000
  3. செங்கம் நடுகற்கள் , தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 1972
  4. தருமபுரி கல்வெட்டுகள் தொகுதி I, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 1975
  5. தொல்குடி - வேளிர் -  அரசியல் (செங்கம் நடுகற்கள் ஓர் ஆய்வு), பூங்குன்றன் . ஆர், 2001 தமிழோசை பதிப்பகம்
  6. நடுகற்கள், கிருஷ்ணமூர்த்தி .ச, 2004, மணிவாசகம் பதிப்பகம்
  7. கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 2007
  8. கல்லெழுத்தில் காலச் சுவடுகள், Dr. சூ. சுவாமிநாதன்
  9. தென்னிந்திய வீரக்கற்கள், கேசவராஜ் .வெ, 2008, காவ்யா வெளியீடு
  10. ஆவணம் இதழ் 1991 - 2011, தொல்லியல் ஆய்வுக் கழகம் வெளியீடு, தஞ்சாவூர்
பொருள் கொள்ள உதவிய அகராதிகள்
  1. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி (செ. சொ. பி)
  2. Monier - williams, A Sanskrit English dictionary, 1899






































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக