தமிழரின் வரலாற்றை தாங்கி நிற்கும் தமிழரின் தாய்மடி கீழடி -முனைவர் கோ.ஜெயக்குமார்.
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையும் பண்பாட்டைஒயும் உலகிற்கு உணர்த்திய மிக முக்கிய தொல்லியல் களமாகும்.
இது தமிழ்நாட்டின் வரலாற்றின் தொடக்க காலத்தை கி.மு. 6-ஆம் நூற்றாண்டு வரை பின்னோக்கி நகர்த்தியுள்ளது.
கீழடி அகழாய்வு வரலாறு மற்றும் முக்கிய கட்டங்கள்
கீழடியில் இதுவரை 10 கட்டங்களுக்கு மேல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன.
- ஆரம்பம் மற்றும் முதல் கட்டம் (2014-2015): இந்திய தொல்லியல் ஆய்வகம் (ASI) வைகை நதிக்கரையில் மேற்கொண்ட மேற்பரப்பு ஆய்வில், கீழடி பகுதியில் பழங்கால உறைவிடங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

- இரண்டாம் கட்டம் (2016): மத்திய தொல்லியல் துறை இங்கு அகழாய்வுகளை மேற்கொண்டது. இதில் சுடுமண்ணால் செய்யப்பட்ட கட்டடங்கள், உறைகிணறுகள், மண்பாண்டங்கள் மற்றும் தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

- மாநில தொல்லியல் துறையின் வருகை (2018 முதல்): மத்திய அரசின் தொல்லியல் துறை ஆய்வை முடிக்க முற்பட்ட நிலையில், தமிழக தொல்லியல் துறை களத்தை ஏற்று 3, 4, 5 மற்றும் அடுத்தடுத்த கட்ட ஆய்வுகளைத் தொடர்ந்தது.
- கார்பன் வயது சோதனை (2019): கீழடியில் கிடைத்த கரிம மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள ‘பீட்டா அனாலிடிக்’ ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அதன் முடிவில், அங்கு கிடைத்த பொருட்கள் கி.மு. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை (சுமார் 2600 ஆண்டுகள் பழமையானவை) என்பது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
இந்தியத் தொல்லியல் ஆய்வகம் சார்பில் இந்த ஊரில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் சங்க காலப் பாடல்களில் (சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்றவற்றில்) குறிப்பிடப்பட்டிருந்த பல பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக, இங்கு 40இற்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டன. இதுவே தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட பெரிய அகழ்வாராய்ச்சி ஆகும்.
- நகர நாகரிகம்: கீழடியில் மக்கள் வரிசையான வீடுகள், சுடுமண் கூரைகள், வடிகால்கள் மற்றும் உறைகிணறுகளுடன் ஒரு நேர்த்தியான நகர நாகரிகத்தில் வாழ்ந்துள்ளனர்.
- தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம்: சாயத்தொழிற்சாலை இருந்ததற்கான சுவடுகள், தங்க நகைகள், செம்புப் பொருட்கள், இரும்புக் கருவிகள் மற்றும் முத்திரைக் காசுகள் கிடைத்துள்ளன.
சிந்து சமவெளி நாகரிகத்திற்குப் பிறகு, இந்தியாவில் கங்கை நதிக்கரையில் உருவான நகர நாகரிகங்களுக்கு இணையான நாகரிகம் தமிழகத்திலும் வைகை நதிக்கரையில் இருந்ததை கீழடி அகழாய்வு நிரூபித்துள்ளது. இதன் மூலம் தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் நாகரிகம் பழமையானது என்பதை இந்த ஆய்வு உலகிற்கு அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.
முத்துமணிகள், பெண்களின் கொண்டை ஊசிகள், தாயக்கட்டை, சதுரங்கக் காய்கள், சுடுமண் பொம்மைகள், சில்லுகள், நூல் நூற்கும் தக்ளி போன்றவை இங்கு கிடைத்துள்ளன. வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, மேற்கூரைகள் ஓடுகள் வேயப்பட்டிருந்திருக்கலாம் என்பதையும், வீடுகளின் அருகே பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இருந்திருக்கலாம் என்பதனையும் இங்குக் கிடைத்துள்ள சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன.
வீடுகளில் குளியலறைகள் இருந்ததற்கான சான்றும் கிடைத்துள்ளது. தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு நிறங்களிலான ஏறத்தாழ 1000 கிலோகிராம் திணிவுடைய மண் ஓடுகள் அகழ்வாராய்ச்சியின் பொழுது கிடைத்திருக்கின்றன.

தமிழக-உரோம வர்த்தக உறவுகள் குறித்த சான்றின் மூலம் அந்தக்கால மக்களின் வணிகத் தொடர்பை அறிந்துகொள்ள முடிகின்றது.
கீழடியில் அகழ்வாராய்ச்சி 5 ஆண்டுகளுக்கு தொடரும் என்று மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிக அடையாளங்கள் கிடைத்துள்ளன என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.
அகழ்வாய்வு பணிகள் நடைபெறும் கீழடிக்கு வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மகேஷ் சர்மாவுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தொல்லையல் கண்காணிப்பாளர் அமர்நாத்தை இடம் மாற்றம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா, கீழடியில் அகழ்வாய்வு 2 ஆண்டுகளாக நடைபெறுகிறது என்றும் மேலும் 5 ஆண்டுகளுக்கு அகழ்வாய்வு பணிகள் தொடரும் என்றார். அகழ்வாய்வு பணிகளுக்காக 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

கடந்த 2 ஆண்டில் கிடைத்த சான்றுகள் புத்தகமாக தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிகாரிகள் மாற்றப்படுவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி தான் அமர்நாத் மாற்றப்பட்டு தமிழகத்தைச் சேர்ந்த ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அகழ்வாராய்ச்சியில் தமிழர் நாகரிக அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் கி.பி 2 ம் நூற்றாண்டில் கீழடியில் சிறந்த நாகரிகம் தழைத்துள்ளது என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.
கீழடியில் கிடைக்கும் ஆய்வு முடிவுகள் தமிழகத்தின் வரலாற்றை மாற்றி அமைப்பதற்கான வாய்ப் புகள் உண்டு. தமிழகத்தில் கல்வெ ட்டுகள், புலவர் பாடல்கள் ஆகியவை உண்டு. ஆனால் நம்மிடம் வரலாற்று சாட்சியங்கள் இல்லை. தற்போது அவை கீழடியில் கிடைத்துள்ளன. அவை அனைத்து சான்றாதரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு தமிழனின் விருப்பமாகும்.
கீழடியில் கிடைக்கும் ஆய்வு முடிவுகள் தமிழகத்தின் வரலாற்றை மாற்றி அமைப்பதற்கான வாய்ப் புகள் உண்டு. தமிழகத்தில் கல்வெ ட்டுகள், புலவர் பாடல்கள் ஆகியவை உண்டு. ஆனால் நம்மிடம் வரலாற்று சாட்சியங்கள் இல்லை. தற்போது அவை கீழடியில் கிடைத்துள்ளன. அவை அனைத்து சான்றாதரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு தமிழனின் விருப்பமாகும்.
மதுரை நகரிலிருந்து தென்கிழக்கு திசையில் 13 கி.மீ. தூரத்தில் இந்த இடம் அமைந்திருக்கிறது. இந்த இடத்திலிருந்து வடக்கில் இரண்டு கி.மீ. தூரத்தில் வைகை நதி ஓடுகிறது. இந்த ஊருக்குக் கிழக்கே மணலூரும் தென்கிழக்கில் அகரம் என்ற ஊரும் மேற்கில் கொந்தகையும் அமைந்திருக்கின்றன.
கீழடியில் உள்ள தென்னந்தோப்பில்தான் முதன் முதலில் அகழ்வாய்வுப் பணிகள் நடத்தப்பட்டன. பெங்களூரில் உள்ள இந்திய அகழ்வாய்வுப் பிரிவு 2014 - 15, 2015- 16 ஆகிய ஆண்டுகளில் ஆகழ்வாய்வுகளை மேற்கொண்டது. இதற்குப் பிறகு தமிழ்நாடு அரசு 2017 -18ல் அகழாய்வுப் பணிகளைத் துவங்கியது.