தமிழரின் வரலாற்றை தாங்கி நிற்கும் கீழடி -முனைவர் கோ.ஜெயக்குமார்.
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கிராமம் தான் கீழடி (Keezhadi) ஆகும். மதுரை நகரிலிருந்து 11 கி.மீட்டர் தொலைவில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.
அகழ்வாராய்ச்சி.
இந்தியத் தொல்லியல் ஆய்வகம் சார்பில் இந்த ஊரில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் சங்க காலப் பாடல்களில் (சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்றவற்றில்) குறிப்பிடப்பட்டிருந்த பல பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக, இங்கு 40இற்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டன. இதுவே தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட பெரிய அகழ்வாராய்ச்சி ஆகும்.
முத்துமணிகள், பெண்களின் கொண்டை ஊசிகள், தாயக்கட்டை, சதுரங்கக் காய்கள், சுடுமண் பொம்மைகள், சில்லுகள், நூல் நூற்கும் தக்ளி போன்றவை இங்கு கிடைத்துள்ளன. வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, மேற்கூரைகள் ஓடுகள் வேயப்பட்டிருந்திருக்கலாம் என்பதையும், வீடுகளின் அருகே பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இருந்திருக்கலாம் என்பதனையும் இங்குக் கிடைத்துள்ள சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன.
வீடுகளில் குளியலறைகள் இருந்ததற்கான சான்றும் கிடைத்துள்ளது. தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு நிறங்களிலான ஏறத்தாழ 1000 கிலோகிராம் திணிவுடைய மண் ஓடுகள் அகழ்வாராய்ச்சியின் பொழுது கிடைத்திருக்கின்றன.
தமிழக-உரோம வர்த்தக உறவுகள் குறித்த சான்றின் மூலம் அந்தக்கால மக்களின் வணிகத் தொடர்பை அறிந்துகொள்ள முடிகின்றது.
கீழடியில் அகழ்வாராய்ச்சி 5 ஆண்டுகளுக்கு தொடரும் என்று மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிக அடையாளங்கள் கிடைத்துள்ளன என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.
அகழ்வாய்வு பணிகள் நடைபெறும் கீழடிக்கு வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மகேஷ் சர்மாவுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தொல்லையல் கண்காணிப்பாளர் அமர்நாத்தை இடம் மாற்றம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா, கீழடியில் அகழ்வாய்வு 2 ஆண்டுகளாக நடைபெறுகிறது என்றும் மேலும் 5 ஆண்டுகளுக்கு அகழ்வாய்வு பணிகள் தொடரும் என்றார். அகழ்வாய்வு பணிகளுக்காக 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
கடந்த 2 ஆண்டில் கிடைத்த சான்றுகள் புத்தகமாக தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிகாரிகள் மாற்றப்படுவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி தான் அமர்நாத் மாற்றப்பட்டு தமிழகத்தைச் சேர்ந்த ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். அகழ்வாராய்ச்சியில் தமிழர் நாகரிக அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் கி.பி 2 ம் நூற்றாண்டில் கீழடியில் சிறந்த நாகரிகம் தழைத்துள்ளது என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.
கீழடியில் கிடைக்கும் ஆய்வு முடிவுகள் தமிழகத்தின் வரலாற்றை மாற்றி அமைப்பதற்கான வாய்ப் புகள் உண்டு. தமிழகத்தில் கல்வெ ட்டுகள், புலவர் பாடல்கள் ஆகியவை உண்டு. ஆனால் நம்மிடம் வரலாற்று சாட்சியங்கள் இல்லை. தற்போது அவை கீழடியில் கிடைத்துள்ளன. அவை அனைத்து சான்றாதரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு தமிழனின் விருப்பமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக