முக்தி தேடி காசியை நோக்கி வரும் பயணிகளுக்கு மெய் சிலிர்க்கும் பயணம் முக்தி தேடி காசியை நோக்கி வரும் பயணிகளுக்கு மெய் சிலிர்க்கும் பயணம் சிறப்பு பார்வை - முனைவர் கோ.ஜெயக்குமார்
முத்தி தரும் தளத்தில், அசத்த போகும் ரோப்காரர் சேவை. 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட திட்டம்
நான்கு கிலோமீட்டர் தூரத்தை, 16 நிமிடங்களில் கடக்கும் அதிசயம்
பொதுமக்கள் வீடு, நில விடுப்பு இல்லாமல் நடுவானில் பறக்கும் அதிரடி திட்டம்
முக்தி தேடி காசியை நோக்கி வரும் பயணிகளுக்கு மெய் சிலிர்க்கும் பயணம்
போக்குவரத்து நெரிசல் இல்லாமல் காசி விஸ்வநாதரை தரிசிக்க வைக்கும் உத்தரப்பிரதேச அரசு
ஐம்பது ரூபாய் கட்டணத்தில் முங்திநாதரை தரிசிக்க சிறப்பு ஏற்பாடு
ஒரு பயணி 15 கிலோ எடை கொண்ட உடைமைகள் கொண்டு செல்ல அனுமதி
கூடுதல் உடமைகள் இருந்தால் தனி ரோப்கார் சேவை மூலம், கூடுதல் கட்டணத்தில் கொண்டு செல்ல ஏற்பாடு
இந்தியாவிலேயே முதல்முறையாக மாநகரத்திற்குள் ரோப் கார் சேவை
போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்போக்கு திட்டம்
பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாக ஸ்விட்சர்லாந்து நிறுவனம் மற்றும் ஸ்பெயின் நாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தம்
15 ஆண்டுகளுக்கு 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து பராமரிப்பு செலவுகளையும் பார்த்நுக்கொள்ளும் அதிரடி திட்டம்
முக்தியை தேடிச் செல்லும் பயணிகளுக்கு காசியின் அழகை பார்க்கும் பாக்கியம்
நவம்பர் மாதம் பாரத பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் மெகா ரோப் கார்ட் சேவை
வளர்ந்து வரும் மாநகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் பொது மக்களுக்கு தொந்தரவு இல்லாமல் திட்டங்களை செயல்படுத்தவும் உத்தரப்பிரதேச மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது அந்த முயற்சிகளில் மகத்தான ஒன்றாக வாரணாசி முதல் காசி வரையிலான நான்கு கிலோமீட்டர் தூர ரோப்கார் சேவை பார்க்கப்படுகிறது. இந்தியாவிலேயே நகரப் பகுதிகளுக்குள் ரோப் கார் சேவை தொடங்கப்படுவது இதுவே முதல் முறை. உலக அளவில் என்று பார்க்கும் போது பொலிவியா மற்றும் மெக்சிகோ விற்கு அடுத்து மூன்றாவதாக இந்த திட்டம் இந்தியாவில் தொடங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தில் 3.75 முதல் 4.2 கி.மீ. வரை நீண்டு, வாரணாசி கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை அதாவது கோடோவ்லியா சௌக்குடன் (காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் தசாஷ்வமேத் படித்துறைக்கான முக்கிய அணுகல் மையம்) நேரடியாக இணைக்கிறது. வாரணாசியின் அதிக மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதியாக உங்களால் ஒரு மணி நேர பயணத்தை, வெறும் 16 நிமிடங்களில் ரோப் ஃபார் சேவையில் சென்றடைய முடியும்.
இந்த பயண நேரத்தில் திட்டமிடப்பட்ட 5 நிலையங்கள் வாரணாசி கண்டோன்மென்ட், காசி வித்யாபீடம், ரத யாத்திரை, கிர்ஜாகர் (தொழில்நுட்பம்), மற்றும் கோடோவ்லியா சௌக் உள்ளிட்ட ஐந்து நிலையங்களை கொண்டு இந்த பயணத் திட்டம் அமைக்கப் பட்டுள்ளது. மேலும் நாள் ஒனறுக்கு நூறு ரோப் கார் நூறு ரோப் கார் பெட்டிகளுக்கு மேல் இயங்கவும், சுமார் ஒரு லட்சம் பயணிகளுக்கு மேல் பயணிக்கவும் மிகப்பெரிய அளவில் திட்டமிடப்பட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள மத்திய பார்வத்மாலா திட்டத்தின் கீழ் சுமார் ₹815 கோடி வரையிலான மதிப்பிடப்பட்ட செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் நோக்கம் வாரணாசி ரயில் நிலையத்திற்கு வரக்கூடிய பல்வேறு நாடுகள் மற்றும் மாநில மாவட்ட பகுதியிலிருந்து வரக்கூடியவர்கள் எந்த நெருக்கடியும் இன்றி போக்குவரத்து நெரிசலை கடந்து எளிமையான முறையில் காசி விஸ்வநாதரை தரிசித்துச் செல்ல சிறப்பு ஏற்பாடாக இந்த மெகா திட்டத்தை அதிரடியாக உத்தரப்பிரதேச அரசு செய்து காட்டியுள்ளது. 
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் மாதம் முதல்வர் யோகி ஆதித்தனார் முன்னிலையில் மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். காசியில் பறக்க போகும் இந்த ரோப் கார் சேவைக்கு, பயணிகள் மற்றும் மாநில மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

.jpeg)

.jpeg)




.jpeg)
.jpeg)




.jpeg)





