திங்கள், 28 செப்டம்பர், 2026

உத்திரபிரதேச மாநிலத்தின் ஆளுநர் திருமதி. ஆனந்தி பென் பட்டேலுடன் சந்திப்பு, உரையாடல் - முனைவர் கோ.ஜெயக்குமார்

உத்திரபிரதேச மாநிலத்தின் ஆளுநர் திருமதி. ஆனந்தி பென் பட்டேலுடன் சந்திப்பு, உரையாடல் - முனைவர் கோ.ஜெயக்குமார்

வாழ்க்கையில் எவ்வளவு உயரம் உயர்ந்தாலும், வளர்ந்தாலும் கிடைக்காத பெரும் மகிழ்ச்சி, புத்தகங்களை உருவாக்குவதிலும், சமூகத்திற்கு கொண்டு சேர்ப்பதிலும் எனக்கு பெரும் மகிழ்ச்சி, அதை மற்றவர்களுக்கு வழங்குவதிலும், அவர்கள் பெற்றுக்கொண்டு வாழ்த்துவதிலும் கிடைக்கும் பேரன்பு அதைவிட அலாதியானது. அதன் மதிப்பு அளவிட முடியாதது. அப்படித்தான் அன்மையில் ஒரு சந்திப்பு என்னை மேலும் உற்சாகப்படுத்தியது.



எழுத வேண்டும், எழுதிக்கொண்டே இருக்க வேண்டும், இறக்கும் வரை ஒயாமல் எழுத வேண்டும் என்ற பெருந்தூண்டுதலை என்னுள் பாய்ச்சியது. அப்படி யாரை சந்தித்தேன் என்று உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


ஒரு பெண் சிங்கம் என்றும் கூறலாம். அந்த அளவிற்கு ஒரு மாநிலத்தின் பல்வேறு பிரச்சனைகளை, வளர்ச்சியை, குறிப்பாக கல்வி, வேலைவாய்ப்பு, நோய் தாக்கம், கலாச்சார சீரழிவு, தொழில்நுட்ப வளர்ச்சி, அங்கன்வாடி முதல், கல்லூரி, பல்கலைக்கழகம் அனைத்து தகவல்களையும் கையடக்கத்தில் வைத்துக் கொண்டு வெளிப்படுத்துபவர்.

முன்னாள் குஜராத்  மாநிலத்தின் முதல்வர், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் முன்னாள் ஆளுநராகப் பணியாற்றியவர், கடந்த 7 ஆண்டுகளாக தற்போது வரை உத்திரப்பிரதேசம் மாநில ஆளுநராக பணியாற்றி வரும் ஆனந்தி பெண் பட்டேலுடன், முனைவர் கோ.ஜெயக்குமார் தனது கண்ணாடி பொம்மை மற்றும் நா.வானமாமலையின் ஆக்கங்கள் -ஆய்வு என்ற நூலைகளை உத்திரபிரதேசம் ஆளுநர் மாளிகையான  ஜென் பவனில் வழங்கிய மகிழ்ச்சியான தருணம்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் இளங்கலை (பி.ஏ.) தமிழ் இலக்கியம், சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை (எம்.ஏ.), ஆய்வியல் இளைஞர் (எம்ஃபில்) ,முனைவர் பட்டம் (பி.எச்டி), UGC PASS, கல்வெட்டு பட்டயப் படிப்பு, ஆகிய ஆய்வுகளை மேற்கொண்டு, தமிழில் கதைப்பாடல் திரட்டு இந்த தொகுப்பு நூலில் கட்டபொம்மன் கதைப்பாடல், கட்டபொம்மன் கூத்து, கான்சாகிபு சண்டை, ஐவர் ராசாக்கள் கதை, காத்தவராயன் கதைப்பாடல், முத்துப்பட்டன் கதை, வீணாதி வீணன்கதை உங்கிட்ட கதைப்பாடல் நூல்களின் தொகுப்பாகும், நாவாவின் ஆய்வுகளில் நாட்டார் கதை பாடல்கள், தமிழர் கலை வரலாறும் கதைப்பாடல் ஆய்வும், நா.வானமலையின் ஆக்கங்கள் ஆய்வு, நான் வானமா மலையின் ஆராய்ச்சி பணிகள், பருந்து நோக்கில் பேராசிரியர் வானமாமலை நேர்காணல் தொகுப்பு, கண்ணாடி பொம்மை, உள்ளிட்ட பல்வேறு நூல்களை தமிழ் சமூகத்திற்கு வழங்கி உள்ளேன்.


                                                  

மேலும் தமிழர் வரலாறு (Tamizarvaralaru.blogspot.in) என்ற இணைய பக்கத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட வரலாற்று ஆய்வுக் கட்டுரைகளை கொடுத்திருக்கிறேன். 

எனது எழுத்துப் பயணத்தில் இது மட்டுமல்லாது, உங்கள் நூலகம் என்ற மாத இதழகல் தொல்லியல் துறை சார்ந்த நடுகல், சதிகல், வீரக்கல், பழங்குடி மக்கள் வாழ்வியல், பேராசிரியர் நா.வானமாலை தொடர்புடைய ஆய்வுக்கட்டுரைகள், நேர்காணல் என எழுதி வருகிறேன். இது பன்ற ஆளுமைகளை சந்திப்பது அவர்களுக்கு புத்தகங்களை வழங்குவது மேலும் என்னை இழுத்துப் பணியில் தீவிரமாக பயணிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அறிந்துகொள்வதற்காகச் சென்னை பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின்  துணை இயக்குநர் திருமதி ஜெ. விஜயலட்சுமி தலைமையில் மோகன சுந்தரம் மற்றும் ஊடகவியலாளர்கள், லக்னோவில் உள்ள மக்கள் மாளிகையில் உத்தரப் பிரதேச ஆளுநர் திருமதி. ஆனந்திபென் படேல் சந்தித்துப் பேசினர்.  இச்சந்திப்பில் லக்னோ பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் இயக்குநர் திரு. திலீப் குமார் சுக்லா உடனிருந்தார்.

இந்தச் சந்திப்பின்போது ஆளுநர் திருமதி. ஆனந்திபென் படேல் பேசுகையில், மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய ஆளுமை மற்றும் சமூக நலத்திட்டங்கள் குறித்து விளக்கினார். உயர்கல்வியில்\ பல்கலைக் கழகங்களின் தரத்தை உயர்த்துவதுடன், ‘கேஜி முதல் பிஜி வரை’ (KG to PG) என்ற விரிவான அணுகுமுறையின் கீழ் கிராமங்களைப் பல்கலைக்கழகங்கள் தத்தெடுத்து, கிராமப்புற மாணவர்களிடையே உயர்கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சுகாதாரம் மற்றும் குழந்தைகள் நலம் சார்ந்த திட்டங்களைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், 9 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான எச்பிவி தடுப்பூசி திட்டம், காசநோயாளிகளுக்கான ஊட்டச்சத்து உதவித் திட்டம் மற்றும் அங்கன்வாடி மையங்களின் தரம் உயர்த்துதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று அரசு நலத்திட்டங்களை ஆய்வு செய்து வருவதாகவும், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் , விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகள்  ஆகியவற்றின் வளர்ச்சி மற்றும் சிறைச்சாலைகளில் உள்ள பெண்கள், குழந்தைகளின் நலனிலும் தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


போக்சோ  சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பாதுகாப்பு, கல்வி மற்றும் அவர்களது மறுவாழ்வுக்கு மாநில நிர்வாகம் அதிக முக்கியத்துவம் அளித்துச் செயல்பட்டு வருவதாக ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல் அடிக்கோடிட்டுக் காட்டினார். குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக