புதன், 18 செப்டம்பர், 2013

தமிழக வரலாற்றை கட்டமைத்த வந்தவாசி போர் - முனைவர் கோ. ஜெயக்குமார்.

தமிழக வரலாற்றை கட்டமைத்த வந்தவாசி போர்  - முனைவர் கோ. ஜெயக்குமார்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg12z7m-8QkLdx0MWHmruTPL4LAeI9mnSfynaWYCx6-EPlI7iFBqnQGk0J7cg9NSXFm2zV7_OSlSjORI_cChA3aCIGlcNq7iGdPwns6mvjF7OfXk-hntyHRW7Nr5MTTYbxYcY-tZttdI5rB/s1600/vanthavaasi_kootai.jpg
வந்த என்ற சொல்லுக்கு நூறு என்று பொருள். வாசி என்பது வசிப்பவரைக் குறிக்கும். எனவே இதை நூற்றுவர் வாழுமூர் எனக் கொள்ளலாம். சமஸ்கிருதத்தில் வெள்ளிமலை என்ற பொருளில் இதைத் தளகிரி என்பர்.
இவ்வூர் இன்று அம்பேத்கர் வட ஆர்க்காட்டு மாவட்டத்தின் வந்தவாசிக் கோட்டத்தில் உள்ளது. இது சித்தூரிலிருந்து தென்கிழக்கில் சுமார் 90 கிலோ மீட்டர், இராணிப்பேட்டையிலிருந்து தெற்கே தென்கிழக்கில் சுமார் 53 கிலோ மீட்டர், திருப்பதியிலிருந்து தெற்கில் சுமார் 110 கிலோ மீட்டர், வேலூரிலிருந்து தென்கிழக்கில் சுமார் 65 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இவ்வூர் சூக்க ஆற்றின் வடக்கே சிறிது தொலைவில் உள்ளது.
வந்தவாசியில் சலகண்டேசுவரர் கோயில் உள்ளது. வாலாசா மலைக்குத் தவளகிரி என்ற பெயர் உண்டு. இங்கு கோரைப்பாய் முடைவதும், தோல் பதனிடுவதும் பெருந்தொழில்களாகும்."
 


சந்தா சாகிபும் முகமது தக்கி கானும் சகோதரியரை மணந்திருந்தமையால் நெவாயத்துகளையடுத்து 1744 இல் ஆர்க்காட்டு நவாபுகளான வாலாசாக்கள் முகமது தக்கி கானை நீக்கி விட்டுப் பிரெஞ்சுப் படையதிகாரிகளை வந்தவாசிக் கோட்டைக்குள் விட்டனர். இந்தக் கோட்டை இந்துக் கட்டடக்கலைப் பாணியில் கட்டப்பட்டது என்றும் இதன் சுற்றளவு சுமார் ஒன்றரைக் கிலோ மீட்டர் இருக்கலாம் என்றும் இவர் குறிப்பிடுகின்றார்.
 


தமிழக சரித்திரத்தை அறிந்தவர்களுக்கு வந்தவாசிப் போரின் முக்கியத்துவம் நிச்சயம் தெரிந்திருக்கும்.1760ம் ஆண்டு ஜனவரி 22ம் நாள் தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள்.தமிழகத்தில் வணிகம் செய்ய வந்த இரண்டு ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்த குழுக்கள் இந்திய தேசத்தில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட மேற்கொண்ட போர் நடைபெற்ற தினம். ஆங்கிலேயர்களும் ப்ரெஞ்சுக்காரர்களும் எதிர்கால ஆட்சிப் பொறுப்பை முடிவு செய்த ஒரு போர் வந்தவாசிப் போர்.

புதுச்சேரியில் பிரெஞ்சு கவர்னராக டியூப்ளெக்ஸ் கி.பி.1742ம் ஆண்டு பொறுப்பேற்றார். பிரெஞ்சு ஆதிக்கத்தை இந்தியாவில் வலிமையாக அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு பிரெஞ்சு இந்திய வாணிபத்தை பெருமளவில் ஊக்குவித்து வந்தார். பிரெஞ்சு பேரரசை இந்தியாவில் நிறுவ வேண்டும் என்ற எண்ணமும் கனவும் இவருக்கு இருந்தது. ஆனால், இவருடைய கனவை வந்தவாசியில் நடைபெற்ற போரானது கலைத்தது.
 

பிரெஞ்சு ஆட்சியாளர்களின் வசமிருந்த வந்தவாசிக் கோட்டையைக் கைப்பற்ற கி.பி.1752ல் மேஜர் லாரன்ஸ் தலைமையிலும் கி.பி.1757ல் கர்னல் ஆல்டர் தலைமையிலும் பிரிட்டிஷ் படையினர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. 22 ஜனவரி 1760 அன்று தளபதி பிரிட்டிஷ் படை சர்.அயர்கூட் தலைமையில் மீண்டும் வந்தவாசியைத் தாக்கியது. இதில் தளபதி கவுண்ட் டி லாலி என்பவர் பிரெஞ்சு படையினருக்குத் தலைமை ஏற்றார்.


வந்தவாசியில் 22 ஜனவரி 1760 அன்று பிரெஞ்சுப் படையினருக்கும் பிரிட்டிஷ் படையினருக்கும் இடையே நடைபெற்ற போர் இந்திய வரலாற்றையே மாற்றி அமைத்த ஒரு போராகக் கருதப்படுகிறது. இந்தியாவில் வாணிபத்தை மட்டுமே தங்களுடைய குறிக்கோளாகக் கொண்டிருந்த பிரிட்டிஷார் முழுமையான ஆட்சியாளர்களாக மாற இந்தப் போரே காரணமாக அமைந்தது என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
கி.பி 1760-ல் நடந்த மூன்றாவது கர்நாடகப் போரின் ஒரு பகுதியான வந்தவாசி போர். இதில் பிரெஞ்சுப் படைகளும், ஆங்கிலப்படைகளும் மோதின. வந்தவாசி கோட்டையை கைப்பற்ற பிரெஞ்சுப்படை லாலி என்பவர் தலைமையிலும், ஆங்கிலேயப் படை சர் அயர் கூட் தலைமையிலும் போரிட்டன. 


பிரெஞ்சுப் படையினருக்கும் பிரிட்டிஷ் படையினருக்கும் கடும் போர் நிகழ்ந்தது. இந்தப் போரில் ஆங்கிலேயப் படை சார்பில் 1700 போர் வீரர்களும் பிரெஞ்சு படை சார்பில் இரண்டாயிரம் போர் வீரர்களும் போரிட்டனர். இந்த போரில் பிரிட்டிஷ் படை வெற்றி பெற்றது. வந்தவாசியில் நடைபெற்ற இப்போரானது, ‘மூன்றாம் கர்நாடகப் போர்’ என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறாக பதினெட்டாம் நூற்றாண்டில் பல போர்களைக் கண்டதன் காரணமாக இக்கோட்டை சிதைந்தது.



இந்தப் போரின் மூலமாக வந்தவாசிக் கோட்டையானது ஆங்கிலேயர் வசம் சென்றது. பிரெஞ்சு படையினர் தோல்வி அடைந்ததன் காரணமாக இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. இவ்வாறாக பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த கோட்டையாக வந்தவாசிக் கோட்டை கருதப்படுகிறது.

வந்தவாசி திருவண்ணாமலையிலிருந்து சுமார் அறுபது கிலோமீட்டர் தொலைவிலும், காஞ்சிபுரத்திலிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவிலும், செங்கற்பட்டிலிருந்து சுமார் அறுபத்தி ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

பூரி ஜெகந்நாதர் கோயில் போன்ற தோற்றம் கொண்ட இந்த கோயில் புதிய கட்டக்கலைக்கு உதாரணம். பார்பதற்கு பிரமாண்டமாகவும் கோயில் உட்புறத்தில் வண்ண பெயிண்டிங் ஓவியங்கள் பார்ப்பதற்கு அழகாகவும் சிறப்பாகவும் இருக்கும். திருவண்ணாமலை மாவட்டமான வந்தவாசி வட்டத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
 http://upload.wikimedia.org/wikipedia/commons/d/dc/Thennangur_Panduranga_temple_panorama.jpg
   
இங்கு மாடுகள் வளர்க்கப்படுகின்றது,மருத்துவமனை உள்ளது,சிவன் கோயில் உள்ளது,சிவன் அமர்ந்த நிலையில் மிகப்பெரிய உருவம் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டதில் இது பெரிய கோயில்.



வந்தவாசி - திருவண்ணாமலை மாவட்டத்தில் அடங்கிய ஒரு நகர். வந்தவாசி என்றால் தமிழக மக்களுக்கு முதலில் நினைவில் வருவது வந்தவாசி பாய். இந்த நகருக்கும் சரித்திரம் உண்டா என்றால் ஏன் இல்லை என கேட்டு நம்மை வியக்க வைக்கின்றது இந்த நகரைப் பற்றி நாம் அறிந்து கொள்ளும் செய்திகள்.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக