வியாழன், 1 ஆகஸ்ட், 2013

திருமாலிருஞ்சோலை அழகர் கோயில் வரலாறு - முனைவர் கோ.ஜெயக்குமார்.

திருமாலிருஞ்சோலை அழகர் கோயில் வரலாறு -  முனைவர் கோ.ஜெயக்குமார்

அழகர் கோவில் 108 வைணவ திவ்வியதேசங்களுள் ஒன்று. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலமாகும், 
திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம்,சோலை மலை போன்ற பெயர்களால் அழைக்கப் படுவதுண்டு. கருவறையில் இருக்கும் சுவாமியை ஸ்ரீ பரமசுவாமி என்றும், உற்சவரை அழகர் அல்லது சுந்தரராசப் பெருமாள் என அழைக்கப்படுகிறார்.


108 வைணவத் திவ்யதேசங்களில் ஒன்றான இத்தலம், பெரியாழ்வார், பேயாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடப்பட்டது. பரிபாடல், சிலப்பதிகாரம் மற்றும் வராஹ புராணம் போன்ற நூல்களில் திருமாலிருஞ்சோலை பற்றிய குறிப்புகள் உள்ளன. பாண்டியர்கள், சோழர்கள், விஜயநகர மன்னர்கள் மற்றும் நாயக்க மன்னர்களால் இக்கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு விரிவாக்கப்பட்டது. மலையின் உச்சியில் இருந்து வரும் 'நூபுர கங்கை' இக்கோயிலின் முக்கியத் தீர்த்தமாகும்.
பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்க மன்னர்கள் ஆகியோரின் ஆட்சியின் போதான திருப்பணிகளை இந்த கோயில் கொண்டுள்ளது.கோயில் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள சோமசந்த விமானம் வட்ட வடிவமானது. முழுமை அடையாத இராஜ கோபுரம் உள்ளது.
வசந்த மண்டபத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் அழகிய ஓவியங்கள் உள்ளன. கோவிலைச் சுற்றி உள்கோட்டை மற்றும் வெளிக்கோட்டை எனப்படும் இரணியன் கோட்டை அழகாபுரிக் கோட்டை அமைந்துள்ளது. கோவிலின் காவல் தெய்வமாக பதினெட்டாம்படி கருப்பசாமி சன்னிதியில் உள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது. இராஜகோபுரம் திருமலை மன்னரால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறா நிலையில் உள்ளது. சிதைந்த நிலையிலும் இக்கோபுரத்தின் சிற்ப வேலைப்பாடுகள் சிற்பிகளின் உன்னத உளி வேலைப்பாட்டினை வெளிப்படுத்துகிறது.
இந்த ஆலய பிரகாரத்தில் உள்ள ஜ்வலா யோக நரசிம்மர் பிரசித்த பெற்றதாகும். இவர் உக்கிர ரூபத்தில் உள்ளதால் நரசிம்மரின் உக்கிரத்தைத் தனிப்பதற்காகத் தினமும் நூபுர கங்கை நீர், தயிர், வெண்ணெய், தேன் முதலியவற்றால் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இங்கு நரசிம்மர் மூலவர்க்கு நேர் பின்புறம் உள்ளார்.
அழகர் மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ உயரத்தி முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான பழமுதிர்சோலை முருகன் கோயில் அமைந்துள்ளது.அதற்கு மேல் ஒரு கிமீ தொலைவில் ராக்காயி அம்மன் கோயிலும், நூபுர கங்கை நீரூற்று உள்ளது.
மதுரை சித்திரைத் திருவிழா என்னாலே மிகவும் பிரசித்தி பெற்றது. இது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் அழகர் கோயிலிலிருந்து மீனாட்சி திருக்கல்யாணத்திற்காக மதுரை நகருக்கு செல்லக்கூடிய கள்ளழகருக்கு தல்லாகுளத்தில் எதிர்சேவை, வைகை ஆற்றில் இறங்குதல் நிகழ்வு, வண்டியூர் கோயிலுக்கு எழுந்தருளல், தசாவதார சேவை என பல முக்கிய நிகழ்வுகள் நடக்கும்.
அழகர் கள்ளர் வேடத்தில் வருவதால், அழகர் என்ற பெயர் கள்ளழகர் என மாறியது. இதனால் கள்ளர் இனத்திற்கு தலைவராகவும் குல தெய்வமாகவும் அழகர் இருக்கிறார். ஆடி மாத பெளர்ணமி அன்று கோயில் தேரோட்டம் நடைபெறும்.
மூலவரும் உற்சவரும், இங்குக் கொள்ளை அழகுடன், காணக்காணக் களிப்பூட்டும் விதமாக எழுந்தருளியிருக்கிறார்கள். தாயாரின் பெயர் சுந்தரவல்லி நாச்சியாராகும். பஞ்சாயுதங்களோடு இங்குப் பெருமாள் விளங்குகிறார். உற்சவர், முழுவதும் பசும் பொன்னால் ஆனவர். பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்களால், மங்களாசாஸனம் செய்யப் பெற்ற திவ்ய தலம் இது.
  
தர்ம தேவதைக்கும் மலையத்வஜ பாண்டியனுக்கும் பகவான் நேரிடையாக காட்சி தந்த ஸ்தலம். இங்குள்ள 18 ஆம்படி கருப்பண்ண சாமி மிகவும் புகழ்பெற்றது. பெருமாளைக் கவர்ந்து செல்ல ரந்த மந்திரவாதிகளை இங்குள்ள மக்கள் தடுத்து விட்டனர். அப்போது மந்திரத்துக்குக் கட்டுப்பட்டுத் துணையாக வந்த கருப்பண்ணசாமி என்னும் தெய்வம் பெருமாளின் வடிவழகில் மயங்கி இங்கேயே நின்று காவல் தெய்வமாகிவிட்டது
பதினெட்டாம்படி கறுப்பு என்ற தேவதை காவல் புரிவதாகச் சொல்லப்படும் கோபுரவாடல் சமீபகாலமாக திறக்கப்படுவதே இல்லை. வேறொரு கதவு வழியாகத் தான் தரிசனத்திற்குச் செல்ல வேண்டும். கோவிலுக்கு அருகே உள்ள மலை மேல் நான்கு கிலோ மீட்டர் சென்றால் சிலம்பாறு என்னும் நூபுரகங்கை சிறிய அருவியாகக் கொட்டிக் கொண்டிருக்கிறது.
திரிவிக்ரம அவதார காலத்தில் பிரம்மா, பகவான் பாதத்தில் கமலண்டலத்தால் தீர்த்தம் சேர்த்தார். அந்த நீர் தெரித்து விழுந்த இடம் `சிலம்பாறு' என்று சொல்லப்படுகிறது. இங்கே சேத்ர பாலருக்கு ஒரு சந்நிதி உண்டு. அர்ச்சகர்கள் கோவில் சாவியை இரவில் இவரிடம் ஒப்படைத்துப் போவதாக ஐதீகம்.
சித்திரைப் பெருவிழாவான சித்திரா பவுர்ணமியன்று அழகர் வைகையாற்றில் இறங்கி சேவாசாதிக்கிறார். மற்றும் ஆடிப்பவுர்ணமியன்று திருத்தேர்த் திருவிழாவாகும். கூரத்தாழ்வாருக்குப் பெருமாள் அருள்பாலித்த திருத்தலம். அழகர் மலைக் காட்டில் விஸ்வரூபம் போல் நின்று பஞ்சாயுதங்களால் எதிரிகளை விரட்டி நம்மை நிர்ப்பயமாக இருக்க வைத்துக் காத்துக் கொண்டிருக்கும் திருமாலிடம் நாம் நமது கவலைகளை நேரில் சென்று ஒப்படைத்து விட்டால் போதும். திருமால் நம்மை ஒரு போதும் கைவிடமாட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக