தந்தி விடைகொடுத்த விஞ்ஞானம் -கோ.ஜெயக்குமார்.
தந்தி (Telegraph) எனப்படுவது ஓரிடத்திலிருந்து தொலைவில் உள்ள வேறோர் இடத்திற்கு விரைந்து செய்தியனுப்பப் பயன்படுத்தப்படும் கருவி ஆகும். இதில் செய்திகளை அனுப்ப எந்தவொரு பொருளும் எடுத்துச் செல்லப்படுவதில்லை. முன்னதாக கொடிகளை அசைத்தோ தீப்பந்தங்கள் மூலமாகவோ அனுப்பப்படுவது ஒருவகை தந்தியே ஆகும்; ஆனால் புறாக்கள் மூலமாக தூது விடுதல், அவை மடல்களைத் தாங்கிச் செல்வதால், தந்திமுறை இல்லை.இதில் சங்கேத முறையில் அனுப்பப்படும் செய்தியைப் பெற அனுப்புநரும் பெறுநரும் இந்த குறிமுறையை அறிந்திருக்க வேண்டும். இந்தக் குறிமுறை அமைப்பு அனுப்பப்படும் ஊடகத்தைப் பொறுத்து அமையும். புகை குறிப்பலைகள், எதிரொளிக்கப்பட்ட ஒளிகள், தீப்பந்தங்கள்/கொடிகள் மூலம் துவக்க காலத்தில் செய்திகள் அனுப்பப் பட்டு வந்தன. 19வது நூற்றாண்டில் மின்சாரம் கண்டறியப்பட்ட பின்னர் இந்தக் குறிப்பலைகளை மின்சாரத் தந்தி மூலம் அனுப்ப முடிந்தது. 1900களின் துவக்கத்தில் வானொலி கண்டுபிடிப்பு வானொலித் தந்தியையும் பிற கம்பியில்லாத் தந்தி முறைகளையும் கொணர்ந்தது. இணையம் வந்த பிறகு குறியீடுகள் மறைந்திருக்க இயற்கை மொழியிலேயே இடைமுகம் கொண்ட மின்னஞ்சல்கள் , குறுஞ் செய்திகள், உடனடி செய்திகள் வந்த பிறகு வழமையான தந்திப் பயன்பாடு குறைந்துள்ளது.
மின்சாரத் தந்தியில் கருவிகள் மின்காந்த சக்தியின் துணைகொண்டு இயக்கப்படுகின்றன. இக்கருவியை 1837 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த சாமுவெல் மோர்சு என்பவர் கண்டுபிடித்தார். அதனாலேயே இக்கருவியும் அவர் பெயராலேயே 'மோர்சு தந்தி' என அழைக்கப்படுகிறது. தந்திச் செய்தியை அனுப்புவதற்கும் மறு முனையில் பெறுவதற்கும் தனித்தனியே இரு முனைகளில் கருவிகள் உண்டு. தந்திச் செய்தி 'மோர்சு சாவி' எனப்படும் கருவி மூலம் ஒரு முனையிலிருந்து அனுப்பப்படுகிறது. மறுமுனையில் அச்செய்தி 'மோர்சு ஒலிப்பான்' எனும் கருவி மூலம் பெறப்படுகிறது.
தந்தி முறைகள் ஐரோப்பாவில் 1792இலிருந்தே கொடிகள் மூலமாகவும் தீப்பந்தங்கள் மூலமாகவும் பயன்பாட்டில் இருந்தன. இவை பார்வைக்கோட்டில் இருக்கும் பெறுநருக்கு குறுஞ்செய்திகளை அனுப்பப் பயன்படுத்தப்பட்டன. 1837இல் அமெரிக்காவில் ஓவியராக இருந்த சாமுவெல் மோர்சு கண்டுபிடிப்பாளராக முதன்முதலில் வெற்றிகரமாக மின்சாரப் பதிவு முறையில் தந்தியை அனுப்பினார்.
ஐக்கிய இராச்சியத்தில் பொதுமக்களுக்கான முதல் தந்தி சேவை நிறுவனம், எலெக்ட்ரிக் டெலிகிராஃப் நிறுவனம், 1846இல் நிறுவப்பட்டது.[1] 1850இல் இந்தியாவில் சோதனைமுறையில் மின்சாரத் தந்தி கொல்கத்தாவிற்கும் டயமண்டு துறைமுகத்திற்கும் இடையே நிறுவப்பட்டது. இது 1851இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது
தந்திக் கருவியின் அமைப்பு
மோர்சு தந்திக் கருவியில், செய்தி அனுப்பும் 'மோர்சு சாவி'க் கருவியில் குத்து வசமாக இயங்கக்கூடிய ஒரு நெம்புகோல் அமைப்பு இருக்கும். இதன் மேற்புறமுள்ள எபனைட் என்னும் குமிழை விரலால் அழுத்தி கீழேயுள்ள பித்தளைக் குமிழைத் தொடுமாறு செய்ய வேண்டும். இக்குமிழ் மின்கலத்தில் உள்ள நேர்முனையுடன் இணைக்கப்பட்டிருக்கும். மின்கலத்தின் எதிர் முனையானது பூமியுடன் இணைக்கப்பட்டிருக்கும். செய்தி பெறும் இடத்திலுள்ள 'மோர்சு ஒலிப்பான்' கருவியில் இருக்கும் மின்காந்தத்தின் மேற்புறத்தில் ஓர் இரும்புச்சட்டம் இருக்கும். இதன் ஒரு முனை மேற்பகுதியில் அமைந்துள்ள இரு பித்தளைத் திருகுகளுக்கு இடையே மேற்புறத் திருகைத் தொட்ட வண்ணம் இருக்கும். மின் காந்தத்துடன் சுற்றப்பட்டுள்ள கம்பிச்சுருளின் மற்றொரு முனை பூமியுடன் இணைக்கப்பட்டுள்ள கம்பியோடு இணைந்திருக்கும். இதுவே தந்திக் கருவியின் அமைப்பு ஆகும்.செயல்படும் முறை
தந்திக்கருவியில் அமைக்கப்பட்டுள்ள குமிழ் அழுத்தப்படும் போது மின்சாரம் பாய்கிறது. அதனால் செய்தி பெறும் இடத்தில் உள்ள ஒலிப்பான் காந்த சக்தி பெறுகிறது. அக்காந்த சக்தி இரும்புச் சட்டத்தைக் கீழாக இழுக்கிறது. அதன் விளைவாகச் சட்டத்தின் ஒருமுனைக் கீழாகத் தாழ்ந்து திருகின் மீது மோதி ஒலி எழுப்புகிறது. அப்போது செய்தி அனுப்புபவர் குமிழை அழுத்துவதை விட்டுவிட்டால் மின்சாரம் பாய்வதும் நின்றுவிடும். இதன் மூலம் மின்காந்தம் தன் சக்தியை இழப்பதால் ஓசை எழுப்புவதையும் நிறுத்திவிடும். இதனால் இரும்புச் சட்டம் மீண்டும் மேலெழுந்து திருகின் மேல் மோதி அடுத்தடுத்து ஒலி எழுப்பும். இந்த ஒலிகளின் தன்மைக்கேற்ற ஒலிக்குறியீடுகளை மோர்சு வகுத்தளித்துள்ளார். அவ்வொலிக் குறியீடுகளை எழுத்துகளாக மாற்றுவதன் மூலம் செய்தியை பெறலாம்.நிக்கோலா தெஸ்லாவும் பிற அறிவியல் அறிஞர்களும் கம்பியில்லாத் தந்தி, வானொலித் தந்தி, அல்லது வானொலியின் பயன்பாட்டை 1890களின் துவக்கத்தில் வெளிப்படுத்தினர். மே 5, 1895இல் பொதுமக்களுக்கு அலெக்சாண்டர் பப்போவ் தனது கம்பியில்லா பெறும் கருவியை பறைசாற்றினார். இது ஒரு மின்னல் உணரியாகவும் செயல்பட்டது.[3] குறிப்பலைகளைப் பெறும் வகையில் இது 30 அடி கம்பின் உச்சியில் அமைக்கப்பட்டிருந்தது. 1895இல் ஆல்பர்ட் துர்பெயின் பிரான்சில் முதன்முதலாக மோர்சு குறிமுறையை பயன்படுத்தி வானொலி அலைகள் மூலமாக குறிப்பலைகளை அனுப்பி 25 மீ தொலைவில் பெற்றுக் காட்டினார்.[4]
மார்க்கோனி இத்தாலியில் தனது முதல் வானொலி குறிப்பலைகளை 6 கிலோமீட்டர்களுக்கு அனுப்பினார். மே 13, 1897இல் மார்க்கோனி, கார்டிஃப் அஞ்சல்முறை பொறியாளர் ஜார்ஜ் கெம்ப்பின் உதவியுடன், முதன்முதலில் நீரின் மீது கம்பியில்லா குறிப்பலைகளை வேல்சின் இலாவர்நாக்கிலிருந்து பிளாட் ஹோமிற்கு அனுப்பினார்.[5] இத்தாலிய அரசின் ஆதரவு கிடைக்காததால், 22-அகவை-நிரம்பிய மார்க்கோனி பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்தார். அஞ்சல்துறை முதன்மை பொறியாளர் வில்லியம் பிரீசின் ஆதரவுடன் 34 அடி உயரமுள்ள இரு கம்பங்களை நட்டு இந்தச் சோதனையை நடத்தினார்.
1901இல் மார்க்கோனி ஆங்கில எழுத்து "S" என்பதை அத்திலாந்திக்குப் பெருங்கடலைக் கடந்து கார்ன்வாலில் இருந்து நியூபவுண்டுலாந்தில் உள்ள அலுவலகத்திற்கு அனுப்பி சாதனை புரிந்தார். வானொலித் தந்தி கப்பல்களுக்கு இடையேயும் கப்பல்களிலிருந்து கடலோர நிலையங்களுக்கு நெருக்கடிக்கால செய்தி பரிமாற்றங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
தந்தி முறைகள்
இன்றைய அறிவியல் துறையின் பெருவளர்ச்சியின் விளைவாக பல்வேறு வகைப்பட்ட தந்தி முறைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை:- வீடங்டன் முறை
- பாடட் முறை
- கிரீடு முறை
இந்தியாவில் தந்தி சேவை
- இந்தியாவில் தந்தி சேவை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் பயன்பாட்டுக்காக 1851 முதல் செயல்பட்டது.
- 1902 முதல் கம்பி இல்லா தந்தி சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
- இந்திய அஞ்சல் துறை சார்பில் வழங்கப்பட்டு வந்த இந்தச் சேவை, 1990-முதல் தொலைத்தொடர்புத் துறைக்கும் பின்னர் 2000இல் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.
- தற்போது இச்சேவை 99 சதவீதம் பயன்படுத்தப் படாததால் இச்சேவையைக் கைவிட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.[6]
குமுகாயத் தாக்கம்
மின்சாரத் தந்திக்கு முன்னதாக அனைத்து செய்தி பரமாற்றங்களும் ஒரு மனிதர் அல்லது மிருகத்தின் பயண விரைவிலேயே நடந்தன. செய்தித் தொடர்பை இடம், நேரத் தடைகளைக் கடந்து தந்தி மக்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியது. [7] 1870இல் ஐக்கிய அமெரிக்காவின் தந்தி பிணையம் 9,158,000 செய்திகள் கையாண்டது; இது 1900இல் 63,168,000 ஆக உயர்ந்தது.[8] தந்திச் சேவையால் "தொடர்வண்டி நிறுவனங்கள், பங்கு/நிதிச் சந்தைகள்,பண்டச் சந்தைகள், மேம்பட்டன; நிறுவனங்களுக்கிடையேயான மற்றும் உள்ளே தகவல் பரிமாற்றச் செலவு குறைந்தது."[8] இந்தியாவில் அடித்தள மக்களும் செலவிடக்கூடிய சேவையாக விளங்கியது. வேலை நியமனங்கள், உடல்நிலை/மரணச் செய்திகள், வங்கி நிதிநிலைகள் ஆகியவற்றிற்கு தந்திச்சேவை முதன்மையாக இருந்தது.இந்தியாவில் கடந்த 160 ஆண்டுகளாக இன்ப, துன்பங்களை சுமந்து வந்த தந்தி சேவை முடிவுக்கு வந்தது. கடைசி நாளில் வரலாற்று பதிவாக இருக்கும் என்று ஆயிரக்கணக்கானோர் தங்கள் உறவினர், நண்பர்களுக்கு வாழ்த்து தந்தி கொடுத்தனர். நேற்றிரவு 9 மணியுடன் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இந்தியாவில் தந்தி சேவை முதல் முறையாக ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது 1850ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியால் கொல்கத்தா துறைமுகத்துக்கும், இங்கிலாந்தில் உள்ள டைமண்ட் துறைமுகத்துக்கும் இடையே அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னர் 1854ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்காக ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்தியா முழுவதும் தந்தி சேவையை கொண்டு வந்தனர். தந்தி சேவைக்காக பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஆண்டு தோறும் ணீ100 கோடியை செலவிட்டு வந்தது. இதன் மூலம் அரசுக்கு ரூ.75 லட்சம் வருவாய் கிடைத்து வந்தது. இந்தியாவில் தந்தி சேவை முந்தைய காலங்களில் விஞ்ஞான பொக்கிஷம் என்று சொல்லலாம், அந்த அளவுக்கு இச்சேவை முக்கியமானதாக கருதப்பட்டது.
வெளியூரில் நடக்கும் திருமணத்திற்கு செல்ல முடியாதவர்கள் வாழ்த்து தெரிவிக்கவும், வெளியூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்புகிறவர்கள் அது குறித்து தகவல் தெரிவிக்கவும், நெருக்கமான ஒருவர் இறந்து விட்டால் தகவல் தெரிவிக்க, வேலை வாய்ப்புக்கான நேர் காணல் அழைப்பு போன்றவவை அனுப்ப தந்தி சேவை பயன்பட்டு வந்தது.
பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களுக்கும் தந்தி சேவை மிகவும் வசதியான சேவையாக இருந்து வந்தது. காரணம் கடிதத்தை விட தந்தி வேகமாக சென்று சேர்ந்து விடும். கிராமங்களில் ஒருவர் வீட்டிற்கு தந்தி வந்தால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என்ன ஏதோ என்று பதறும் நிலைமையும் இருந்தது. இதுவும் காலப்போக்கில் மாறியது. தந்தியை எவ்வித பயமும் இன்றி கையாள தொடங்கினர்.
ஆனால் இன்டர்நெட், செல்போன் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் வந்தவுடன் தந்தி சேவை யின் பயன்பாடு படிப்படியாக மங்கத் தொடங்கியது. இதனால் தந்தி சேவையை நிறுத்தி கொள்ள மத்திய அரசு முடிவு எடுத்தது. தற்போது நாட்டில் 75 தந்தி சேவை மையங்கள் உள்ளன. ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் அனைவரும் பிஎஸ்என்எல்லில் வேறு துறைக்கு மாற்றப்படுகின்றனர்.
கடைசி நாள் என்பதால் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் உள்ள தந்தி அலுவலகங்களில் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் நேற்று அதிகமாக இருந்தது. மும்பை, கொல்கத்தா, டெல்லியில் இளைஞர்களும் முதியோரும் தங்கள் உறவினர்களுக்கு கடைசியாக வாழ்த்து தந்தி அனுப்பினர். இனிமேல் இந்த சேவை கிடையாது என்பதால் பலர் வருத்தத்தோடு இருந்தனர்.
கடந்த 160 ஆண்டுகளாக மக்களின் வாழ்க்கையோடு இன்பங்களையும், துன்பங்களையும் சுமந்து வந்து உறவாடிய தந்தி சேவை நேற்றிரவு 9 மணியுடன் நம்மிடம் இருந்து பிரியா விடை பெற்றது. கடைசி நாள் என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள தந்தி அலுவலகங்களில் நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் நேற்று தந்தி அனுப்பினர். சென்னையை பொறுத்தவரை அண்ணா சாலை தந்தி அலுவலகம், பாரிமுனை ஜி.பி.ஓ கட்டிடம் மற்றும் எத்திராஜ் சாலையில் உள்ள தந்தி அலுவலகங்களில் வழக்கத்தை விட நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது. தந்தி சேவையை நிறுத்த வேண்டாம் என மூத்த குடிமக்கள் பலர் மத்திய அரசுக்கு நேற்று தந்தி அனுப்பினர்.
கடைசி நாள் என்பதால் பலர் அடுத்த தலைமுறையினருக்கு தந்தி சேவை குறித்து சொல்ல தனக்கு தானேயும், உறவினர்களுக்கும் தந்தி அனுப்பி வாழ்த்து செய்திகளை பறிமாறிக் கொண்டனர். அதே போல், பெற்றோர் சிலர் தங்கள் சின்ன வயது மகன், மகள்களுக்கு தந்தி அனுப்புவதற்கான விண்ணப்பங்களை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பதை சொல்லி கொடுத்த காட்சியை காணமுடிந்தது.
மேலும் கடைசி நாள் என்பதால் முக்கிய தந்தி அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ காட்சிகளாக பதிவு செய்யப்பட்டன. இந்த பதிவுகளை வரும் காலங்களில் நடத்தப்படும் கண்காட்சிக்கு பயன்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வளவு நாள் தந்தி அனுப்ப வருபவர்களிடம் இன்பங்களையும், துன்பங்களையும் பகிர்ந்து கொண்டோம். இனி இது போன்ற நிகழ்வுகளை காண்பது என்பது முடியாத காரியம். இதுவரை தந்தி சேவைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததற்காக தந்தி ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.
சென்னை எத்திராஜ் சாலையில் உள்ள தந்தி அலுவலக ஊழியர்கள் கூறுகையில், ‘ ஒரு நாளைக்கு இங்கிருந்து அதிகபட்சம் 50 தந்தி வரை செல்லும். தந்தி சேவைக்கு கடைசி நாள் என்பதால் நேற்று மட்டும் இரவு 7 மணி வரை 350 தந்திகள் வரை அனுப்பப்பட்டன. அண்ணா சாலை தந்தி அலுவலகத்தில் 400 தந்திகள் வரை பெறப்பட்டன. சாதாரண நாட்களில் 50 தந்திகள் தான் இங்கிருந்து அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
.தந்தி விடைகொடுத்த விஞ்ஞானம்
160 ஆண்டுகள் சேவை வழங்கிய தந்தி சேவையை நிறுத்த கூடாது என்று தந்தி நிறுவன ஊழியர்கள், தந்தி சேவையை நேற்று கடைசியாக பயன்படுத்த வந்தவர்கள் நூற்றுக்கணக்கில் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபலுக்கு தந்தி அனுப்பினர். கடைசியாக தந்தி கொடுப்பது 9 மணியோடு நிறுத்தப்பட்டது. அது வரை பெறப்பட்ட தந்திகள் அனைத்தும் முழுமையாக உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தோஷம்... வருத்தம்
* தந்தி என்று வந்தாலே போதும், குஷியை விட குடும்பத்தில் பயம் தான் கவ்வும்; அதை திறந்து படிக்கும் வரை.
* மொபைல், எஸ்எம்எஸ் என்று அறிவியல் புரட்சியால் பலவீனம் அடைந்தது தந்தி.
*ராணுவத்தினருக்கு பெரிதும் கைகொடுத்தது தந்தி. லீவு, டிரான்ஸ்பர், பணி அழைப்பு எல்லாம் தந்தியில்தான்.
* கோர்ட்டில் வலுவான ஆதாரமாக தந்தி கருதப்பட்டது.
* குக்கிராமங்களில் மட்டும் தான் தந்தி சேவை கடைசி வரை முக்கிய தகவல் தொடர்பாக இருந்தது.
*தந்தி சேவைக்கு செலவு மிக அதிகம். 100 கோடி செலவுக்கு ஆண்டு வருமானம் 75 லட்சம் ரூபாய் தான்.
* 60 ஆண்டுக்கு பின் 2011 மே மாதம் தான் 50 வார்த்தைகளுக்கு ரூ.27 என்று கட்டணம் உயர்த்தப்பட்டது.
*கடைசி நாள் என்பதால் தந்தி கொடுப்பது வீடியோ எடுக்கப்பட்டது.
*மக்களிடம் காணப்பட்டது குஷி; ஆனால், ஊழியர்கள் என்னவோ கனத்த மனதுடன் பணியை முடித்தனர்.
* சினிமாவில் திடீர் திருப்பங்களை ஏற்படுத்த கைகொடுத்ததும் தந்திதான்.
ந்தி சேவை நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில் கடைசி தந்தி காங்கிரஸ்
துணை தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவில் 163 ஆண்டுகளுக்கு முன்பு தந்தி சேவை துவங்கப்பட்டது. தற்போது
நவீன உலகில் தந்தி சேவையின் பயன்பாடு வெகுவாக குறைந்ததையடுத்து நேற்று
நள்ளிரவுடன் தந்தி சேவை நிறுத்தப்பட்டது. நேற்று இரவு 11.45 மணிக்கு தந்தி
கவுண்ட்டர்கள் மூடப்பட்டன. கடைசியாக தந்தி சேவையின் மூலம் ரூ. 68,837
வருவாய் கிடைத்தது. நள்ளிரவு 12 மணி அடிக்க 15 நிமிடங்கள் இருக்கையில்
தந்திக்கு விடை கொடுக்கப்பட்டது.
டெல்லியில் தந்தி சேவையை நிறுத்தும் முன்பு கடைசி தந்தி காங்கிரஸ் துணை
தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்டுள்ளது. நல்ல செய்தி, கெட்ட செய்தி
ஆகியவற்றை தந்தி மூலம் இனி அனுப்ப முடியாது.
கிராமங்களில் தந்தி வந்தாலே ஏதோ கெட்ட செய்தி என்று நினைத்து பதட்டம்
அடைவார்கள். இனி அந்த பதட்டம் தேவையில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக