உலகத்தை பலூன் மூலம் இடைவேளை விடாது பறந்த முதல் மனிதர்
உலகத்தை பலூன் மூலம் இடைவேளையின்றி பறந்து சாதனை படைத்தவர் ஸ்டீவ் பொசெட்.
இவர் 1944-ம் ஆண்டு ஏப்.22-ல் அமெரிக்காவில் பிறந்தவர். 2007-ம் ஆண்டு
அக்டோபர் 3-ல் மரணம் அடைந்தார்.
மேலும் இதே நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
* 1578 - மார்ட்டின் புரோபிஷர் கனடாவின் பஃபின் தீவைக் கண்டார்.
* 1823 - பிரேசிலில் போர்ச்சுக்கீசியர்சின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
* 1853 - ரஷ்யா துருக்கியின் மீது படையெடுத்தது. கிரிமியப் போர் ஆரம்பமானது.
* 1881 - அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்பீல்ட் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். இவர் செப்டம்பர் 19-ல் மரணமடைந்தார்.
* 1940 - சுபாஸ் சந்திர போஸ் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.
* 1941 - உக்ரைனில் லூட்ஸ் நகரத்தில் 2000 யூதர்கள் நாசி ஜெர்மனியர்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.
* 1962 - முதலாவது வோல் மார்ட் அங்காடி ஆர்கன்சா மாநிலத்தில் திறக்கப்பட்டது.
* 1966 - பிரெஞ்சு இராணுவத்தினர் பசிபிக் பெருங்கடலில் அணு ஆயுதச் சோதனையை நிகழ்த்தினர்.
* 1990 - மெக்காவில் ஹஜ் யாத்திரையின் போது இடம்பெற்ற நெரிசலில் 1,426 பேர் கொல்லப்பட்டனர்.
* 2004 - ஆசியா அமைப்பில் பாகிஸ்தான் இணைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக