ஞாயிறு, 15 மார்ச், 2015

மூன்றம் நந்திவர்மனின் தெள்ளாற்றுப்போர் -கோ. ஜெயக்குமார்.

மூன்றம் நந்திவர்மனின் தெள்ளாற்றுப்போர் -கோ. ஜெயக்குமார்.
 வந்தவாசி - திண்டிவனம் பாதையில் 8 கி.மி. தொலைவில் தெள்ளாறு உள்ளது. தெள்ளாறு பேருந்து நிறுத்தத்திற்கு அருகே கோவில் உள்ளது.தமிழக வரலாற்றில் தெள்ளாறு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஊராகும். தமிழக வரலாற்றை மாற்றிய இரு முக்கியமான போர்கள் தெள்ளாறை மையமாக வைத்து நடந்துள்ளன.
 http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/images/a0312206.jpg
வரலாற்றில் எத்தனையோ போர்கள் நடந்திருந்திருந்தாலும், சில போர்களால் தமிழகத்தின் வரலாறே மாறியுள்ளது, அப்படியான போரில் குறிப்பிட்டு நாம் பார்க்க வேண்டியது "தெள்ளாற்றுப் போர்". இந்த இடத்தில் நடந்த இரு பெரும் போர்களால் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

முதல் போர்: பல்லவர்கள் காஞ்சியை தலைநகராக கொண்டு கி.பி. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் வலிமையுடன் ஆட்சி புரிந்தவர்கள். இவர்களை அழிக்க எத்தனையோ போர்கள் நடந்திருந்தாலும், குறிப்பாக சோழரும், பாண்டியரும் ஒன்றாக இணைந்து பல்லவ பேரரசின் சாம்ராஜ்யத்தை அழிக்க நினைத்தது இந்த தெள்ளாறு தலத்தில் தான.

 பாண்டியர்கள், சோழர்கள் அங்கும் இங்குமாய் சிற்றசர்களாகவே இருந்த காலத்தில் பல்லவ நாட்டை ஆட்சி செய்த வந்த பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825 to 850). ,இங்கு நடந்த போரில் சோழர் மற்றும் பாண்டிய கூட்டுப் படையை மூன்றாம் நந்திவர்மன் எதிர் கொண்டு அதில் வெற்றியும் கண்டான், அதுமட்டுமல்லாது அவர்களை கடம்பூர், வெறியலூர், வெள்ளாறு, பழையாறு ஆகிய இடங்களில் எதிர்கொண்டு பாண்டிய நாட்டு எல்லை வரை ஓட ஓட விரட்டினான், சோழர்கள் பல்லவர்களுக்கு கப்பம் கட்ட உடன்பட்டனர்.
http://kallarperavai.weebly.com/uploads/2/8/3/1/2831341/3757121.jpg
அது முதல் நந்திவர்மன் "தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்" என போற்றப்பட்டான். இந்த போர் குறித்து ஏராளமான கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன, அவன் மீது பாடப்பெற்ற "நந்திக் கலம்பகத்தில்" இந்த தெள்ளாற்று வெற்றியினை பலவாறு புகழந்துரைக்கிறார்கள் . இந்த போரின் வெற்றிக்குப் பிறகு பல்லவர்கள் பெரிதும் வலிமை பெற்றனர், இறுதிக்காலம் வரை பகைவர்கள் நந்திவர்மனை கண்டு அஞ்சியே இருந்தனர். பல்லவர்கள் தங்கள் வலிமையை நிலைநிறுத்திய போராக இது விளங்கியது.
http://www.noolulagam.com/book_images/6850.jpg
இரண்டாவது போர்: அடுத்தாக வடக்கே கங்கை வரையும், தெற்கே கடல் கடந்து கடாரம் வரை ஆட்சி புரிந்த சோழப் பேரரசு - விஜயலாயன் தொடங்கி,ராஜ ராஜன் சோழன், ராஜேந்திர சோழன் என்று புகழின் உச்சிக்கே சென்ற சோழர்கள் பேரரசு தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போனது இந்த தெள்ளாற்றில் நடந்த போரினால் தான். சோழர்கள் வீழ்ந்த இடம் இந்த "தெள்ளாறு" தான் .
http://www.tamilvu.org/courses/degree/a041/a0412/images/a0412nan.jpg
சோழப் பேரரசு மூன்றாம் ராஜ ராஜனின் ஆட்சியின் போது அழிவின் விளிம்பில் இருந்தது, தெற்கே பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியன் சற்றே வலிமை பெற்று, சோழர்களின் மீது போர் தொடுத்தான், பாண்டியனுக்கு அஞ்சிய சோழன் காஞ்சிபுரத்தை நோக்கி ஓடினான், அவனை காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் இந்த தெள்ளாற்றில் இடைமறித்து போர் புரிந்தான், அதில் மூன்றாம் ராஜ ராஜன் தோல்வியுற்றான்,அது சோழர்களுக்கு பெரும் பின்னடைவாய் இருந்தது.
 
 மூன்றாம் ராசா ராசனுக்கு பின், மூன்றாம் ராஜேந்திரன் சிறிது காலம் ஆட்சி புரிந்தான், பின்னர் சோழப் பேரரசு தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போனது !.
நந்திக் கலம்பகம்: நந்திக் கலம்பகம் தமிழில் உருவான கலம்பக இலக்கியங்களில் ஒன்று. இது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் குறித்துப் பாடப்பட்டது. இதுவே கலம்பக நூல்களில் காலத்தால் முற்பட்டு விளங்குவதாகும்.
 
மூன்றாம் நந்திவர்மனின் காலம் கி.பி.825 - 850 என்பதால் நந்திக் கலம்பகத்தின் காலம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு ஆகும். காஞ்சி, மாமல்லபுரம், மயிலை ஆகிய நகரங்கள் பற்றி இந்நூலில் சிறப்பாகப் போற்றப்பட்டுள்ளது. சிறந்த சொற்சுவை பொருட்சுவையோடு கற்பனை வளமும் நிறைந்த இந்நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை.

நந்திவர்மனிடம் இருந்து அரசைக் கவரும் நோக்கில் அவனது தம்பியால் ஒழுங்குசெய்யப்பட்டு அறம் பாடுதல் என்னும் முறையில் இப்பாடல்கள் பாடப்பட்டன. அறம் வைத்துப்பாடிய நூலின் பாடலைத் தற்செயலாகக் கேட்ட நந்தி வர்மன் அப்பாடலின் சிறப்பில் மனம் பறிகொடுத்து பாடல் முழுவதையும் பாட விரும்பினான்.
 
 நூல் முழுவதையும் கேட்டால் மன்னன் உடல் எரிந்து இறப்பான் என்பதை அறிந்தும் தமிழின் மீதுள்ள தனியாத காதலால் உயிரையும் பொருட்படுத்தாது, எரியும் பந்தலின் கீழிருந்து கேட்டு உயிர் இறந்தான் என்று கூறப்படுகிறது.
மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 846-869)

தந்திவர்மனுக்கும் கதம்ப இளவரசிக்கும் பிறந்தவன் மூன்றாம் நந்திவர்மன். இவன் ஆற்றல் மிக்கவனாக விளங்கினான். இழந்த பல்லவப் பேரரசினை மீட்டான். இவனது வெற்றியை நந்திக்கலம்பகம் விளக்குகின்றது.
மூன்றாம் நந்திவர்மன் சிறந்த போர்த்திறம் படைத்தவன். இவனுக்கு நந்திபோத்தரசன், நந்தி விக்கிரமவர்மன், விஜய நந்தி, விக்கிரமவர்மன் என்று பல பெயர்கள் உண்டு.
 
 நந்திக் கலம்பகத்தில் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் எனப் பாராட்டப்படுகிறான். தெள்ளாறு என்னும் இடத்தில் நடந்த போரில் பாண்டியரை வெற்றி பெற்றதால் இவ்வாறு பாராட்டப்படுகிறான். நந்திக்கலம்பகம் அவனுக்காகவே எழுந்த இலக்கியம் ஆகும்.
தெள்ளாற்றில் மட்டுமின்றி, வெள்ளாறு, கடம்பூர், வெறியலூர், தொண்டி, பழையாறு ஆகிய இடங்களிலும் பகைவரை வென்றான்.
 http://www.varalaaru.com/images/Sep08/TCPoondi3.jpg
 மூன்றாம் நந்திவர்மன் நந்திக்கலம்பகத்தில் ‘அவனி நாராயணன்’ என்றும், ‘ஆட்குலாம் கடற்படை அவனி நாரணன்’ என்றும், ‘நுரை வெண்திரை நாற்கடற்கு ஒரு நாயகன்’ என்றும் பாராட்டப் பெறுகின்றான். இவன் காலத்தில் மல்லையிலும், மயிலையிலும் துறைமுகங்கள் அமைந்திருந்தன. இம்மன்னன் கடல் கடந்துசென்று அயல் நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தான்.
http://www.varalaaru.com/images/Sep08/TCPoondi4.jpg
மூன்றாம் நந்திவர்மன் இராஷ்டிரகூடர்களைத் தோற்கடித்தான். பாண்டியருடன் போர்செய்து வெற்றி வாகை சூடினான். பாண்டியரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல்லவ நாட்டுப் பகுதிகளை மீட்டான். வடக்கிலும், தெற்கிலும் பல்லவப் பேரரசிற்கு ஏற்பட்ட ஆபத்துகள் இவனது ஆட்சிக் காலத்தில் ஒழிந்தன.

வியாழன், 12 மார்ச், 2015

தாராசுரம் தமிழர்களின் பண்பாட்டுச்சின்னம் - கோ.ஜெயக்குமார்.

தாராசுரம் தமிழர்களின் பண்பாட்டுச்சின்னம் - கோ.ஜெயக்குமார்.

தாராசுரம் (ஆங்கிலம்:Darasuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர்.

ஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ள ஓர் இந்துக் கோவில் ஆகும். இக்கோவில் இரண்டாம் ராசராசனால் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில், கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன.

திருவிடைமருதூர், திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம் (கருப்பூர்) ஆகிய ஐந்து தலங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் எனப்படுகின்றன. கும்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர் இந்த பஞ்சகுரோசத் தலங்களுக்குச் சென்று விதிப்படி நீராடி தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்டுவிட்டு கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் செல்வர். கும்பகோணத்திற்கு அங்கமாக இந்த ஐந்து தலங்களும் அமைந்துள்ளன.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKHAnpafbSibmxmCH5aaLRpOy48N4IkeDmLJz_c1sSBqQt5d5RtgG-R0Mv6jxajiDOgxehRi12KkcGk9T1lO18LxsTkvfkMRWuSWatYBLw6J10RjdzEktzR9o4O2i_oDj9XIGdk0aQHPY/s1600/Photo0042.jpg
 12-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயிலுக்காக அறியப்படுகிறது. இக்கோவில் மிகச்சிறப்பான கட்டிடக்கலையின் இருப்பிடமாக விளங்குகிறது. இதனுடைய விமானம் 85 அடி உயரம் கொண்டது. பத்தாம் நூற்றாண்டில் இருந்து 12-ஆம் நூற்றாண்டுக்கு இடையில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் கோவிலும் தாராசுரம் கோயிலும் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiid2P7jooFiazetgMsU6dDXIDoXngvKe1NiWPdIw9o3xXNdhY_zIgk5W4R5G4tBObUqayl_rXYsGrIx1b8LePz6VKcfjoJSPsuQBkeFKRbxAx-jGdgf9Ecy1YBk4lF7X5IP5G1Uc2WGao/s1600/Darasuram+Airavateshwarar+Temple.jpg
1987-ல், பெருவுடையார் கோயில் யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. பின்னர், 2004-ல் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலும் மற்றும் ஐராவதேஸ்வரர் கோயிலும் உலகப்பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன.[1] தமிழ் நாடு தொல்லியல் துறை இக்கோயிலின் அமைப்புக்களை ஆராய்ந்து இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களைப் படியெடுத்து சோழ மன்னர்களைப் பற்றிய பல தகவல்களை பதிப்பித்துள்ளது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgl41lg9Xfj-UgKcChKg2TZ6ejnCFaPcBgi7XjtE3uAXeBTbh7DthEMqT5dCArWVnBKvwx7BGg8DacNsM8PPHCWUhoDqv2Y2xrVqqTFlhjNCNjkiL9zJw55dL2jSL-yz03VCQG3VU-oejtg/s1600/DARASURAM+2.JPG
சோழ மன்னர்களில் 2ம் ராஜராஜனால் கட்டப்பட்ட அழகிய கலைக்கூடம் இக்கோயில். இக்கோயிலைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோயில் கொண்டுள்ளது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhno7u3TUpPKY8qQM4r7L7SyL3xVCLf8pFIObGPzd625up-ofWqIhyuTMX8dpYBo_VX7fMjtMunq6hvszsdWo1_E7HKMN0yJJszgoYx_sYhOT5wvnxRvbhD-GgWut4snTOAr1GVFvUZchG/s1600/10.jpg
வல்லுனர்களால், "சிற்பிகளின் கனவு" என்று கருதப்படும் இந்த தலம் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால் நிறைந்துள்ளது. வழக்கமான சைவத்தலங்களின் அமைப்பிலிருந்து சற்றே வேறுபட்டுள்ளது. இறைவிக்கென்று தனியே ஒரு கோயில் வலதுபுறம் அமைந்துள்ளது. இது வழக்கமான தலங்களைபோல முதலில் அமையப்பெற்று பின் கால மாற்றத்தில் சுற்றுச்சுவர் மறைந்து தனித்தனி சன்னதிகளாக அமையப்பெற்றிருக்கலாம் என்று ஒரு கூற்று இருந்தாலும், ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பெண் தெய்வத்துக்கும் சமமாய் ஒரு தனி கோயில் அமைத்திருப்பது இதன் சிறப்பாகும். கோபுரம் ஐந்து நிலை மாடங்களுடன் 85 அடி உயரம் உள்ளது.
http://static.panoramio.com/photos/large/56869793.jpg
கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜராஜன் அங்கிருந்து பெயர்ந்து தாராசுரத்திற்கு வந்து கட்டிய கோயிலே தாராசுரம் ஆகும். மூவருலாவில் சிறப்பிக்கப்படுகிறான். மூவருலா எனப்படுவது விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜசோழன் ஆகிய மூவருடைய புகழைப் பாடுவதாக அமைந்த பாடல். இதனை எழுதியவர் ஒட்டக்கூத்தர்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgzP_DeECVglvlZ1AWHvGsIlUgMbH70TR5qgxkyjU2MifAz7PNAgfgBwgX0PoXjgteLRjQGOuqz5_Mymq9z5WAiW4nEnaNQ3cFh-8gK4e7BdU_GN7c9Q5nXytj5YyTPZ174dbZzVdcHiwH/s1600/DARASURAM+1.JPG
கட்டிடக் கலை, சிற்பக்கலை, கலை நுணுக்கம் ஆகிய அனைத்து சிறப்புக்களும் கொண்ட ஒரு கோயில் தாராசுரம். முதன் முதலில் இதன் இறைவனுக்கு ராஜராஜேஸ்வரமுடையார் என்ற பெயர் வழங்கப்பட்டது. பின்னர் ஐராவதேஸ்வரர் என பெயர் கொண்டது. தக்கயாகப்பரணி இந்தக் கோயிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றம் கண்டது.63 நாயன்மார்களின் சிற்பங்களும் இந்தக் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
http://upload.wikimedia.org/wikipedia/commons/6/65/Airavateswarar_temple.png
 இந்தக் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் இராஜராஜசோழனுக்கும் அவரது 5 மனைவியருக்கும் பள்ளிப்படை அமையப்பெற்றது என்ற செய்தி முதன் முதலாக அறியப்பட்டது.
http://upload.wikimedia.org/wikipedia/commons/6/65/Airavateswarar_temple.png
இரண்டாம் இராஜராஜனின் காலத்தில் இராஜராஜேச்சுரம் என்று பெயரிடப்பட்டு, இன்று தராசுரமென மருவி வழங்கப்படுகிறது. ஐராவதேஸ்வரரின் துணைவி தெய்வநாயகி. இந்திரனின் வாகனமான ஐராவதம் என்கிற யானை துருவாச முனிவரின் சாபத்தால் அதன் வெள்ளை உருவம் மாறி கருமை நிறம் அடைந்தது.

தன் நிறம் மாறியதால் வருத்தமுற்ற ஐராவதம் இத்தலத்திற்கு வந்து இங்கு எழுந்தருளிய சிவபெருமானை வணங்கி சாபத்திலிருந்து விடுதலை பெற்றதாகவும், அதனால்தான் இங்குள்ள இறைவனின் பெயர் ஐராவதேசுவரர் என்று வழங்கலாயிற்று என்றும் தல புராணம் தெரிவிக்கிறது.

இந்திரனின் வெள்ளை யானையான ஐராவதம் வந்து இங்கு வழிபாடு செய்ததால் இறைவனின் பெயர் ஐராவதேஸ்வரர். எமதர்மன் சாபம் பெற்றதால் கொண்ட உடல் எரிச்சல் தீர இங்குள்ள குளத்தில் நீராடி விமோசனம் பெற்றதால், அக்குளம் "எமதீர்த்தம்" என அழைக்கப்படுகிற்து.

இத்திருத்தலம் தொடர்பான மற்றொரு புராணமும் உள்ளது. மரணமற்ற பெருவாழ்வு வாழவும், தேவர்களை வெல்லவும் தாரன் என்ற அசுரன் இத்தலத்து இறைவனை பூசித்து, தவம் இருந்து தான் விரும்பிய அருளைப் பெற்றதால் இத்தலம் உள்ள இடம் தாராசுரம் என்றானது என்றும் கூறுகிறது.
நுழைவாயிலில் நந்தியினருகே அமையப்பெற்றிருக்கும் பலி பீடத்தின் படிகள் இசையொலி எழுப்பும் நாதப்படிகளாக அமைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு கனங்களிலிருக்கும் இந்த தூண்கள் தட்டும்போது சரிகமபதநீ என்ற சுரங்களைக் கொடுக்கின்றன.

ராஜகம்பீரம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் ஐராவதம் எனப்படும் யானைகளாலும் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது . இம்மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில் யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச் செல்வதுபோல் உள்ள சிற்பத்தின் சக்கரம், இன்றுவரை இந்திய கலையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இதில் உள்ள சக்கரம் உள்ளிட்ட பல சிற்பங்கள் அந்நியர் படையெடுப்பால் சிதைக்கப்பட்டு தொல்லியல் துறையால் பிற்காலத்தில் திரும்ப சேர்க்கப்பட்டது.

குதிரைகள், யானைகள் பூட்டப்பட்ட ரதத்தின் அமைப்பில் இருக்கும் மண்டபம், நுணுக்கமான பல சிற்பங்களுடன் கூடிய தூண்களால் நிறைந்தது. தூண்களில் நர்த்தன கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம் உள்ளது. நாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும், வாத்தியக்காரர்களின் குழுக்களும், புராணக் கதைகளும் சில சென்டிமீட்டர் அளவிலேயே மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன.

கோயிலின் மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். கருவரையில் இலிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர். இது பிற சிவன் கோயில்களில் காணப்படாதது.
 
 சூர்ய லிங்கங்கள் (பதினொன்று), அபூர்வமான விலைமதிக்கமுடியாத சாலிக்கிராம லிங்கம் பிரகாரத்தில் காணப்படுகிறது.
 
பிறகோயில்களில் இல்லாத, அதிசயமான சிற்பங்களும் இங்கு உண்டு. கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், அன்னபூரணி என சாதரணமாகக் கோயில்களில் காணப்படாத சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
 
 கோயிலின் வெளிச் சுவர்களில் மூன்றுமுகங்கள், எட்டுகைகளுடன் அர்த்தநாரீஸ்வரர்(சிவனும் பார்வதியும் ஒன்றுகலந்தது), மேல்கரங்களில் சிவனுக்குரிய மானும், கோடாலியும். கீழ்கரங்களில் அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவனும் குழலூதும் கண்ணனும் இணைந்த சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் எனப் பல சிற்பங்களும் உண்டு.

குழலூதும் சிவன் இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பம் என்று சரித்திர ஆய்வாளரான குடவாயில் சுப்ரமணியம் கண்டறிந்துள்ளார். மண்டபத்தின் மேல் பிரகாரத்தில் நாயன்மார்கள், 108 சிவனடியார்களின் உருவங்கள் ஆகியவை சோழர்களின் சைவப்பற்றுடையவன் இரண்டாம் இராஜராஜன் என்பதைக் காட்டும்.

பிரகாரங்களின் மற்றொரு அழகான அம்சம் அங்கு அமைக்கப்பட்டுள்ள காற்றோட்டமிக்க மண்டபங்கள். சதுர, செவ்வக, நீள்சதுர, வட்ட, பூக்கள் வடிவிலான குறுக்கும் நெடுக்கிலும் காற்று நுழையும்படி அமைக்கப்பட்ட ஒரே கல்லால் அமைக்கப்பட்ட கிரானைட் சாளரங்கள் அமைந்துள்ளன.

சனி, 29 நவம்பர், 2014

பேக்கல் கோட்டை வரலாறு - கோ.ஜெயக்குமார்

பேக்கல் கோட்டை வரலாறு - கோ.ஜெயக்குமார்

பேக்கல் துறைமுகத்திலிருந்து 1 கி.மீ தொலைவு. காஸர்கோடு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 16 கி.மீ தெற்கில் உள்ளது. காஸர்கோடு மாவட்டம், வட கேரளா. கேரளாவின் வடகோடியிலுள்ள மாநிலமான காஸர்கோடு அங்குள்ள கோவில்கள், கோட்டைகள், ஆறுகள், குன்றுகள் மற்றும் அழகிய கடற்கரை ஆகியவற்றிற்குப் பிரசித்திப் பெற்ற இடமாக உள்ளது.

பேக்கலில் உள்ள கோட்டை கேரளாவின் மிகப்பெரிய, நன்கு பராமரிக்கப்பட்ட கடற்கரைகளுள் ஒன்றாகும். பேக்கல் கோட்டை அருகிலுள்ள பேக்கல் கோட்டை கடற்கரை மிகவும் அழகான, சமதளமான மணல் கடற்கரையாகும். இது பேக்கல் ரிசார்ட்ஸ் வளர்ச்சிக் கழகத்தால் (BRDC) பராமரிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது.

அழகுபடுத்துதல்  இந்த இடத்தை அழகுபடுத்துவதற்காக செந்நிற களிமண்ணால் செய்யப்பட்ட இரு தேயம் வகை சிற்பங்கள் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளன. நீலாம்பூரிலுள்ள கலைஞர்களை வைத்து அதன் சுவர்கள் எல்லாம் முரல் வகை ஓவியங்கள் வரையப்பட்டுள்ன.

இவைதவிர வண்டிகள் நிறுத்தும் பகுதிகளில் ஒரு பாறைப்பூங்கா அமைக்கப்பட்டு, அங்குள்ள செந்நிற களிமண்ணால் வெவ்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செதுக்கப்பட்டு, அங்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. சமூக காட்டுத் திட்டத்தின் கீழ் கடற்கரை முழுவதும் மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

வாகனங்கள் நிறுத்தும் வசதிகள் : BRDC யானது 7000 சதுர மீட்டர் பரப்பளவில் வெவ்வேறு வகையான வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. நடைபாதை  அழகான கடற்கரைப் பகுதி மற்றும் அழகான துறைமுக காட்சிகள் ஆகியவற்றைக் கண்டுகளிக்க ஏற்ற விதமாக நடந்து செல்லும் உல்லாச பயணிகளுக்கு ஒரு அருமையான நடைபாதை பேக்கல் துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

ஒளிரும் கடற்கரை  மாலை வேளையில் இந்தக் கடற்கரை வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருப்பதால் சுற்றுலாப்பயணிகள் சூரிய மறைவுக்குப் பின்னரும் அதிக நேரம் இந்தக் கடற்கரையில் செலவிட முடியும்.

ஓய்வு வசதிகள்  பல்வேறு கூடாரங்கள் மற்றும் மாடி வீடுகள் ஆகியவற்றில் சுற்றுலாப் பயணிகள் தங்கி ஓய்வெடுக்கவும் கடல் காற்றை நுகர்ந்து இன்புறவும் போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை வைத்து பயணிகள் அமர்வதற்கான இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கழிவறைகள்  சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்துவதற்காக கழிவறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. கடற்கரையைத் தூய்மையாக வைப்பதற்காக கடற்கரை முழுவதும் இயற்கைக்கு உகந்த மூங்கிலால்  செய்யப்பட்ட குப்பைக் கூடைகள் வைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் பூங்கா  14 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்காக தனிப்பட்ட முறையில் ஒரு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதி மேம்பாட்டிற்காகவும், பராமரிப்பிற்காகவும் சுற்றுலா பயணிகள் ஒவ்வொருவரிடமும் நுழைவுக்கட்டணமாக ஒரு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதே போன்று வாகனங்கள் நிறுத்துவதற்காகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

வருங்காலத்தில் கடற்கரையிலுள்ள 11 ஏக்கர் பரப்பில்  வாட்டர் பார்க், தீம்பார்க் ஆகியவற்றைக் கட்ட BRDC திட்டமிட்டுள்ளது.கேரள அரசு பேக்கல் பகுதியை ஒரு திட்டமிட்ட இயற்கைக்கு உகந்த சுற்றுலாத்தளமாக மாற்ற BRDC யை ஏற்படுத்தியது. BRDC யானது 19 ஏக்கர் நிலப்பரப்பை பேக்கல் கோட்டை கடற்கரை வளர்ச்சிக்காக பயன்படுத்தி வருகிறது. நிலம் கையகப்படுத்துதல், மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் என்று ஏறத்தாழ 25 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

அங்கு சென்று அடைவதற்கு அருகிலுள்ள இரயில் நிலையம்  கோழிக்கோடு  –  மங்களூர்  –  மும்பை வழியில் உள்ள காஸர்கோடு. அருகிலுள்ள விமான நிலையம்  மங்களூர் காஸர்கோடு டவுனிலிருந்து 50 கி.மீ. தொலைவு. காரிபூர் பன்னாட்டு விமான நிலையம்:கோழிக்கோடு, காஸர்கோடு டவுனிலிருந்து 200 கி.மீ தொலைவு

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஆனைமலையின் வரலாறு - கோ.ஜெயக்குமார்.


ஆனைமலையின் வரலாறு - கோ.ஜெயக்குமார்.

ஆனைமலை (ஆங்கிலம்:Anaimalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,556 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். ஆனைமலை மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும்.


இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆனைமலை மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்
ஆனைமலைக்கோவில் செல்லும் வழியில் மிகப்பழைமையான அரிய போர்வாள்கள் பத்து கண்டுபிடிக்கப்பட்டன. இவை சுமார் 4500 வருடங்களுக்கு முற்பட்டவை என்று சிந்து சமவெளி நாகரிக தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.


காடுகளை விரும்பும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடம் ஆனைமலை புலிகள் காப்பகம். சில நாட்கள் தங்கி காடுகளின் அழகை ரசிப்பதோடு மனதிற்கும், உடலுக்கும் ஓய்வு கொடுக்கலாம். ஏனெனில் ஆனைமலை கடவுளே நமக்காக அருளிய அழகின் மலை.


நகரத்தின் இரைச்சலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இந்த ஆனைமலை சரணாலயம் கோவை மாவட்டத்தில் உள்ளது. பொள்ளாச்சி, டாப்சிலிப், மானாம்பள்ளி, வால்பாறை, உடுமலை, அமராவதி ஆகிய 6 வனச் சரகங்களை உள்ளடக்கியது ஆனைமலை புலிகள் காப்பகம்.


பொள்ளாச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த சரணாலயம் இந்திராகாந்தி தேசிய வனவிலங்கு சரணாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள வனவிலங்கு சரணாலயங்களில் இது மிக முக்கியமான ஒன்றாகும்.

பாரம்பரிய சின்னம்

கடல்மட்டத்தில் இருந்து 340 முதல் 2513 மீட்டர் உயரத்தில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது. 958 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயத்தில் 2000 வகையான மரங்களும், செடிகளும் காணப்படுகின்றன. இதில் ஏராளமான மருத்துவகுணம் நிறைந்த மூலிகைச்செடிகளும் உள்ளன. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த சரணாலயம் யுனெஸ்காவின் பாரம்பரிய சின்னமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆனைமலையில் உள்ள கரிசன்சோழா என்னும் பகுதியை மூலிகை மருத்துவமனை என்றே செல்ல பெயரிட்டு அழைக்கின்றனர். அமராவதி, சின்னாறு, குரங்கனாறு, ஆழியாறு, சிறுவாணி ஆறு, பரம்பிக்குளம், நீராறு, சோலையாறு, போன்றவை பாய்ந்து இப்பகுதியை வளப்படுத்துகின்றன.
விதவிதமான விலங்குகள்.

இந்த காப்பகத்தில் புலிகள், யானைகள், நீலகிரி தார், கரடி, நரி உள்ளிட்ட பல விலங்குகளும், பலவகையான அணில்களும், பாதுகாக்கப்படுகின்றன. இதுபோல 300க்கும் மேற்பட்ட பலவகையான பறவைகளும் வந்து செல்கின்றன. இந்த அழகிய வனப்பகுதியை சுற்றிப்பார்க்க வனத்துறை சார்பில் யானைசவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேன் மூலமாகவும் காடுகளின் அழகை கண்டு ரசிக்கலாம். வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை ஆழியாறு, திருமூர்த்தி, அமராவதி உள்ளிட்ட அணைகள் நிறைவு செய்கின்றன.

டாப்சிலிப் வனப்பகுதி

இந்த சரணாலயத்தில் உள்ள டாப்சிலிப் வனப்பகுதி மிகவும் பிரசித்தி பெற்றது. அழகிய பசுமை மாறாக்காடுகளைக் கொண்ட இந்த வனப்பகுதியில் தேக்கு மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. இங்கு சிங்கவால் குரங்குகள் மற்றும் ஏரளாமான மான்வகைகள் உள்ளன. அவற்றை நேரடியாக எளிதில் கண்டு ரசிக்கலாம். சொந்த வாகனம் மூலம் டாப்சிலிப் செல்பவர்கள் அதனை வனத்துறை அலுவலகம் அருகே நிறுத்திவிட்டு வனத்துறையினர் ஏற்பாடு செய்து தரும் வாகனம் மூலமே காடுகளை சுற்றிப்பார்க்க முடியும்.

எப்படி செல்வது

கோவை மற்றும் பொள்ளாச்சியில் இருந்து பேருந்து வசதி உள்ளது.இங்கு டிசம்பர் முதல் ஏப்ரல் வரை சீசன் காலமாகும். மழைக் காலங்களில் இங்கு செல்வது ஆபத்தானது. காடுகளின் அழகை சில நாட்கள் தங்கி ரசிக்கவேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ஏற்ப குடில்களும் உள்ளன. முன்பதிவு அவசியம் தேவை.

வால்பாறை : புலிகள் காப்பகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை, சுற்றுலா பயணிகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள அரிய வகை வனவிலங்குகளையும், வனப்பகுதியை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள், வழியில் வனவிலங்குகளுக்கு உணவு கொடுப்பதாலும், பிளாஸ்டிக் பைகளை வனப்பகுதியில் வீசி விட்டு வருவதாலும், இயற்கை எழில் மாசுபடுவதோடு, வனவிலங்குகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட எந்த ஒரு பகுதியிலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை, டம்ளர் உள்ளிட்டவைகளை பயன்படுத்தக்கூடாது. சுற்றுலா பயணிகள் இவற்றை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்' என்றனர்.
மாசாணி அம்மனின் திரு உருவம் மிகவும் தனிப்பட்ட வடிவுடைய ஒன்றாகும்.
 
மிகவும் சக்தி வாய்ந்த இந்த அம்மன், 15 அடி உயரமானபொதுவாக நாம் அனைத்துத் தலங்களிலும் அம்மன் நின்ற கோலத்திலோ, அமர்ந்த கோலத்திலோதான் காட்சி கொடுப்பதைக் கண்டிருப்போம். ஆனால் இந்த மாசாணி அம்மனோ சயன கோலத்தில் மிக வித்தியாசமான காட்சி அருளும் நாயகியாக இருப்பது அதிசயத்திலும் அதிசயம் . நான்கு கைகளில. இரண்டு கைகளை நிலத்தின் மேலே தூக்கிக் கொண்டு,மற்ற இரு கைகளும் தரையோடு இருக்கும். கைகள் திரிசூலம், முரசு, அரவம் மற்றும் மண்டையோடு தாங்கியிருக்கும்.

மிகவும் சக்தி வாய்ந்த சிறு தெய்வமான மாசாணி அம்மன், மயானத்தில் துயில் கொள்ளும் ‘மயான சயனி’ என்னும் பெயர் கொண்ட ஒரு அற்புத அன்னையாவாள். இத்தகைய சக்தி வாய்ந்த அம்மன் உரையும் இடம்,கோவை மாவட்டத்தின், ஆனைமலை என்னும் சிற்றூரில். இது பொள்ளாச்சியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆழியாற்றின் கிளை நதியான உப்பாற்றங்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவில். இக்கோவிலில் குடி கொண்டுள்ள மற்றைய தெய்வங்கள், மகா முனீஸ்வரர் மற்றும் நீதிக்கல் தெய்வம்.

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் மாசாணி அம்மனுக்கு உகந்த நாட்கள். அன்று அம்மன் வழிபாட்டில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்திலும், பௌர்ணமி நாட்களிலும் விசேட பூசைகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் குண்டம் மிதிவிழா சிறப்புடன் நடத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த குண்டம் மிதி விழாவில் கலந்து கொள்கின்றனர்.
 
ஒவ்வொரு ஆண்டும் தை மாத பௌர்ணமி நாளில் கொடியேற்றி, 14 ஆம் நாள், விசேட பூசைகளுடன், 16 ஆம் நாள் தேர் திருவிழாவும், அதே நாள் இரவு 10 மணி அளவில் தீமிதி விழாவும் நடைபெரும். 50 அடி நீளமுள்ள அந்த குண்டம், பக்தர்கள் உண்மையான பக்தியுடன் செல்கையில் காலில் எந்த தீக் காயங்களையும் ஏற்படுத்துவதில்லை என்கின்றனர். 18 ஆம் நாள் கொடி இறக்கி, 19 ஆம் நாள் விசேச அபிசேக, ஆராதனைகளுடன், விழா நிறைவு பெறும்.

இத்தலத்தின் வரலாறு

 இது சங்க காலத்தில் உம்பற்காடான, ஆனைமலையில் நடந்த கதை. இந்தப் பகுதியை நன்னன் என்னும் ஓர் அரசன் ஆண்டு வந்தான். இவன் ஆழியாற்றங்கரையில் இருந்த தன் அரசு தோட்டத்தில் ஒரு மாமரத்தை வளர்த்து வந்தான். அம்மரத்தின், கிளைகளையோ, காய்களையோ, கனிகளையோ ஒருவரும் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தான்.

ஒரு நாள், விதி வசத்தால், ஆழியார் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த ஒரு பெணகள் குழுவிலிருந்த ஒரு பெண், பக்கத்தில் இருந்த நன்னனின் மாந்தோட்டத்து மரத்திலிருந்த ஒரு மாங்கனி அந்த ஆற்றில் விழுந்ததைக் கண்டு, அதன் கட்டுப்பாடு குறித்து மறந்து போனவளாக, அதனை உண்டுவிட்டாள். இதை அறிந்த நன்னன் அப்பெண்ணை உடனடியாக கொலை செய்துவிடும்படி உத்த்ரவிட்டான்.

அப்பெண்ணின் தந்தை அதற்குப் பிராயச்சித்தமாக, எடைக்கு எடை தங்கத்தால் செய்த பாவை ஒன்றையும், எண்பத்தோரு களிற்றையும், அந்தப் பெண் அறியாமல் செய்த தவறுக்காக தண்டம் இழைப்பதாகக் கூறியும் இரக்கமற்ற அந்த மன்னன், நன்னன் அந்தப் பெண்ணைக் கொன்று
விட்டான். பிற்காலங்களில் அந்தப் பெண்ணின் மிக நெருங்கியத் தோழியான இன்னொரு பெண் அரசனின் மீது கடுங்கோபம் கொண்டு அவனை பழி தீர்ப்பதற்காக, போரின் போது கொன்று விட்டாள் என்று சொல்லப்படுகிறது.
 
அதற்குப் பிறகு அந்தப் பெண் ஆழியாறு ஆற்றங்கரையில் இருந்த மயானத்தில் புதைக்கப் பட்டுள்ளாள். மக்கள் அவள் உருவ நடமாட்டம் இருப்பதைக் கண்டு , வழிபட ஆரம்பித்து உள்ளனர். அந்தப் பெண்ணைத்தான் மயான சயனி என்று வழங்கி, காலப்போகில் அது மருவி, மாசாணி என்றாகி உள்ளது.