நடிகர் நாகேஷ், நடிகை பானுமதி, கவிஞர் கண்ணதாசனுக்கு தபால்தலை
இந்திய திரைப்பட நூற்றாண்டு விழாவையொட்டி மறைந்த பழம்பெரும் நடிகர்களுக்கு தபால்தலை வெளியி டப்படுகிறது.
நடிகை
பானுமதி, நடிகர்கள் நாகேஷ், பிரேம்நசீர், எஸ்.வி. ரங்காராவ், டைரக்டர்
ஸ்ரீதர், கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன், கவிஞர் கண்ணதாசன், தயாரிப்பாளர்
டி.ஆர்.சுந்தரம், அல்லு ராமலிங்கையா ஆகியோ ருக்கு தபால்தலை
வெளியிடப்படுகிறது.
பானுமதி
1940, 50 மற்றும் 60-களில் தமிழில் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், பி.யு. சின்னப்பா, எம்.கே. ராதா போன்றோருக்கு
ஜோடியாக நடித்தார். சொந்த குரலில் பாடல்களும் பாடினார். மத்திய அரசு
இவருக்கு 2003-ல் பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தது. நாகேஷ் தமிழ்
திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர். கவிஞர் கண்ணதாசன்
சினிமாவில் ஏராளமான பாடல்கள் எழுதி உள்ளார். குறிப்பாக எம்.ஜி.ஆர்., சிவாஜி
படங்களுக்கு அதிக பாடல்கள் எழுதினார்.
டைரக்டர்
ஸ்ரீதர் கல்யாண பரிசு, தேன்நிலவு, காதலிக்க நேரமில்லை, நெஞ்சம்
மறப்பதில்லை, நெஞ்சில் ஓர் ஆலயம், வெண்ணிற ஆடை, ஊட்டி வரை உறவு,
நெஞ்சிருக்கும் வரை உள்பட ஏராளமான ஹிட் படங்களை டைரக்டு செய்தவர். பிரேம்
நசிர் மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் ஆக இருந்தவர் விஷ்ணுவர்த்தன்,
கன்னடத்தில் முன்னணி கதாநாயகன் ஆவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக