டாஸ்மாக்கில் தகராறு – கலவர பகுதியாக வந்தவாசி ( படங்கள் )
திருவண்ணாமலை
மாவட்டம் வந்தவாசி அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட
சமூக இளைஞர்கள் கார்த்திக், சிலம்பரசன். இவர்களுக்கும் செம்புர் கிராமத்தை
வன்னிய சமூகத்தை சேர்ந்த சிலருக்கும் இடையே 27ந்தேதி மாலை டாஸ்மாக்
கடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கேயே இரண்டு தரப்பும்
அடித்துக்கொண்டுள்ளனர்
.
அங்கிருந்தவர்கள்
சண்டையை விளக்கி அனுப்பியுள்ளார்கள். கார்த்திக்இ சிலம்பரசன் இருவரும்
வீட்டுக்கு செல்லும்போது இருவரையும் இரவு ஒரு கும்பல் தாக்கியுள்ளார்கள்.
இதில் காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக வந்தவாசி மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டனர். தாக்கியவர்களை கைதுசெய்ய வேண்டும் என சாலை மறியல்
செய்தனர்.
காயம்
அடைந்த கார்த்திக் வந்தவாசி தெற்கு போலீசில் செய்த புகாரின் பேரில்
போலீசார் செம்பூர் கிராமத் தைச் சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு
செய்யப்பட்டது.
இதற்கிடையில்
கார்த்திக்இ சிலம்பரசன் ஆகியோரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி
அம்பேத்கர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 29ந்தேதி வந்தவாசி பழைய
பேருந்து நிலையம் எதிரே உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. இதனால் செம்பூரை
சேர்ந்த குமார் அத்திப்பாக்கத்தை சேர்ந்த குப்பன் ஆகிய இருவரை போலீசார்
கைது செய்தனர்.
இந்த
பிரச்னையில் போலீசார் ஒருதலைபட்சமாக நடப்பதாக கூறி பாமகவைச் சேர்ந்தவர்கள்
செம்பூர் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு
பணிக்காக நிறுத்தி வைத்திருந்த போலீஸ் பஸ்இ கார் இரண்டையும் வழிமறித்து
கைது செய்யப்பட்ட இரண்டு பேரை விடுவிக்கும்படி வலியுறுத்தினர். மேலும்
வாகனம் வெளியே செல்ல முடியாதபடி மரத்தை வெட்டி போட்டும் அப்பகுதியில்
கிடந்த மரக்கட்டைகளையும் சாலையின் குறுக்கே போட்டு சிறைபிடித்தனர்.
மேலும்
கடந்த சனிக்கிழமை நெல்லியாங்குளம் வன்னிய சமூகத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரை
அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள் வழி மடக்கி
தாக்கியதாக வந்தவாசி வடக்கு போலீசார் நந்தன் என்பவரை 29ந்தேதி கைது
செய்தனர். பொதுவாக காவல் துற சரியாக செயல் படவில்லை என்பதெ பொதுமக்கலின் குற்றச்சாட்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக