சனி, 29 நவம்பர், 2014

பேக்கல் கோட்டை வரலாறு - கோ.ஜெயக்குமார்

பேக்கல் கோட்டை வரலாறு - கோ.ஜெயக்குமார்

பேக்கல் துறைமுகத்திலிருந்து 1 கி.மீ தொலைவு. காஸர்கோடு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 16 கி.மீ தெற்கில் உள்ளது. காஸர்கோடு மாவட்டம், வட கேரளா. கேரளாவின் வடகோடியிலுள்ள மாநிலமான காஸர்கோடு அங்குள்ள கோவில்கள், கோட்டைகள், ஆறுகள், குன்றுகள் மற்றும் அழகிய கடற்கரை ஆகியவற்றிற்குப் பிரசித்திப் பெற்ற இடமாக உள்ளது.

பேக்கலில் உள்ள கோட்டை கேரளாவின் மிகப்பெரிய, நன்கு பராமரிக்கப்பட்ட கடற்கரைகளுள் ஒன்றாகும். பேக்கல் கோட்டை அருகிலுள்ள பேக்கல் கோட்டை கடற்கரை மிகவும் அழகான, சமதளமான மணல் கடற்கரையாகும். இது பேக்கல் ரிசார்ட்ஸ் வளர்ச்சிக் கழகத்தால் (BRDC) பராமரிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது.

அழகுபடுத்துதல்  இந்த இடத்தை அழகுபடுத்துவதற்காக செந்நிற களிமண்ணால் செய்யப்பட்ட இரு தேயம் வகை சிற்பங்கள் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளன. நீலாம்பூரிலுள்ள கலைஞர்களை வைத்து அதன் சுவர்கள் எல்லாம் முரல் வகை ஓவியங்கள் வரையப்பட்டுள்ன.

இவைதவிர வண்டிகள் நிறுத்தும் பகுதிகளில் ஒரு பாறைப்பூங்கா அமைக்கப்பட்டு, அங்குள்ள செந்நிற களிமண்ணால் வெவ்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செதுக்கப்பட்டு, அங்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. சமூக காட்டுத் திட்டத்தின் கீழ் கடற்கரை முழுவதும் மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

வாகனங்கள் நிறுத்தும் வசதிகள் : BRDC யானது 7000 சதுர மீட்டர் பரப்பளவில் வெவ்வேறு வகையான வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. நடைபாதை  அழகான கடற்கரைப் பகுதி மற்றும் அழகான துறைமுக காட்சிகள் ஆகியவற்றைக் கண்டுகளிக்க ஏற்ற விதமாக நடந்து செல்லும் உல்லாச பயணிகளுக்கு ஒரு அருமையான நடைபாதை பேக்கல் துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

ஒளிரும் கடற்கரை  மாலை வேளையில் இந்தக் கடற்கரை வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருப்பதால் சுற்றுலாப்பயணிகள் சூரிய மறைவுக்குப் பின்னரும் அதிக நேரம் இந்தக் கடற்கரையில் செலவிட முடியும்.

ஓய்வு வசதிகள்  பல்வேறு கூடாரங்கள் மற்றும் மாடி வீடுகள் ஆகியவற்றில் சுற்றுலாப் பயணிகள் தங்கி ஓய்வெடுக்கவும் கடல் காற்றை நுகர்ந்து இன்புறவும் போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை வைத்து பயணிகள் அமர்வதற்கான இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கழிவறைகள்  சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்துவதற்காக கழிவறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. கடற்கரையைத் தூய்மையாக வைப்பதற்காக கடற்கரை முழுவதும் இயற்கைக்கு உகந்த மூங்கிலால்  செய்யப்பட்ட குப்பைக் கூடைகள் வைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் பூங்கா  14 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்காக தனிப்பட்ட முறையில் ஒரு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதி மேம்பாட்டிற்காகவும், பராமரிப்பிற்காகவும் சுற்றுலா பயணிகள் ஒவ்வொருவரிடமும் நுழைவுக்கட்டணமாக ஒரு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதே போன்று வாகனங்கள் நிறுத்துவதற்காகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

வருங்காலத்தில் கடற்கரையிலுள்ள 11 ஏக்கர் பரப்பில்  வாட்டர் பார்க், தீம்பார்க் ஆகியவற்றைக் கட்ட BRDC திட்டமிட்டுள்ளது.கேரள அரசு பேக்கல் பகுதியை ஒரு திட்டமிட்ட இயற்கைக்கு உகந்த சுற்றுலாத்தளமாக மாற்ற BRDC யை ஏற்படுத்தியது. BRDC யானது 19 ஏக்கர் நிலப்பரப்பை பேக்கல் கோட்டை கடற்கரை வளர்ச்சிக்காக பயன்படுத்தி வருகிறது. நிலம் கையகப்படுத்துதல், மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் என்று ஏறத்தாழ 25 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

அங்கு சென்று அடைவதற்கு அருகிலுள்ள இரயில் நிலையம்  கோழிக்கோடு  –  மங்களூர்  –  மும்பை வழியில் உள்ள காஸர்கோடு. அருகிலுள்ள விமான நிலையம்  மங்களூர் காஸர்கோடு டவுனிலிருந்து 50 கி.மீ. தொலைவு. காரிபூர் பன்னாட்டு விமான நிலையம்:கோழிக்கோடு, காஸர்கோடு டவுனிலிருந்து 200 கி.மீ தொலைவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக