திங்கள், 30 டிசம்பர், 2013

சங்ககிரி மலைக் கோட்டை (அ) சங்கரி துர்க்கம் - கோ.ஜெயக்குமார்.


சங்ககிரி மலைக் கோட்டை  (அ) சங்கரி துர்க்கம் - கோ.ஜெயக்குமார்.

சங்ககிரி மலைக் கோட்டை சேலம் மாவட்டத்தில் சங்ககிரி வட்டத்தில் 'சங்கரி துர்க்கம்' என்ற மலையின் மேல் காணப்படும் கோட்டையாகும். இது சேலத்திலிருந்து 35 கிமீ வடக்கில் அமைந்துள்ளது.
 படிமம்:Sankagiri hill 3.jpg
 பெயர்க்காரணம் 
  • இந்த கோட்டை சங்கு போன்ற வடிவம் கொண்டதால் இதற்க்கு சங்ககிரி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
    படிமம்:Sankagiri hill 1.jpg
  • இந்த கோட்டையில் ஆள் இறங்கும் குழி, தோல் உரிச்சான் மேடு, தொங்கவிட்டான் குகை, உரிட்டிவிட்டான் பாறை ஆகியவற்றில் தண்டனை பெறுபவர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு கொள்ளப்படுவதால் சங்ககிரி என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. படிமம்:View of sankagiri.jpg
வரலாறு
வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோட்டை விஜயநகர அரசர்களால் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோட்டையின் உயரம் 5 கி. மீ. சங்ககிரி மலைக்கோட்டை தமிழகத்தின் மிக உயரமான மலைக்கோட்டையாகும். மலை அடிப்பகுதியிலிருந்து உச்சிவரை இக்கோட்டையில் ஒன்பது வாயில்கள் உள்ளன. 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmckFk6TmzYc-zRGMdnEvLcL8ylSoaY16gDweowiLRNHrtQoMAXHfsEfXiQOJd6qiRu2Qcxlkd-DIHdF1vwFhIJL255-33FJeuXxMtJPlGGHvxL-JClLNiXpwRE9rTzKV2IAtgJ1UDh-M/s1600/Image025.jpg
மலையிலுள்ள பாறைகள் மிக அழகான முறையில் செதுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. கோட்டை கட்டப் பயன்படுத்தப்பட்ட செங்கற்களும் மிகவும் உறுதிவாய்ந்தவையாக உள்ளன. கி. பி. பதினேழாம் நூற்றாண்டில் திப்பு சுல்தானால் இக்கோட்டைப் பலப்படுத்தப்பட்டது என அறியப்படுகிறது. 9 ஆவது வாயிலில் 1799 என்ற ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது ஆங்கிலேயர்களால் இவ்வாயில் கட்டப்பட்டிருக்கலாம்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisR1G1jWVANDRyKpAFa9eALzDYmIK7caCodmQbV4qdkyscgcVVXtrqj2nOAPOrbNFLOD6FMl_BypN8exxyThEon1g6zkC617o98gp53otp23LmnYghHVUJn7HUnH3GR6_uSQ5-zNgnrXk/s1600/Image003.jpgடையின் மூன்றாவது வாயிலில் வரதராசப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு இன்றும் வழிபாடு நடத்தப்படுகிறது. இக்கோவிலுள்ள கல்யாண மண்டபத்தில் அமைக்கப்பட்ட தூண்கள் வேலைப்பாடு மிகுந்தவை. 
 http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2012/10/IMG_6071.jpg
இக்கோவிலின் ஒருபகுதி இந்தியத் தொல்பொருள் துறையினரால் புணரமைக்கப்பட்டுள்ளது. 5ஆவது வாயிலை அடுத்து படைவீரர்கள் தங்குமிடம் சிதைவடைந்த நிலையில் காணப்படுகிறது. 
 
5ஆம் 6ஆம் வாயில்களுக்கிடையில் இசுலாமியர்களின் வழிபாட்டுத்தலம் ஒன்றும் அதனருகில் மர்மமான சுரங்கப்பாதை ஒன்றும் உள்ளது. 6ஆவது வாயிலுக்கருகில் வெடிமருந்து வைப்புக் கிடங்கு ஒன்று உள்ளது.
 http://static.panoramio.com/photos/large/76581329.jpg
கோட்டையின் உச்சியில் சென்ன கேசவப்பெருமாள் கோவில் உள்ளது. முக்கிய விழா நாட்கள் தவிர பிற நாட்களில் இக்கோவிலின் உற்சவர் மலை அடிவாரத்தில் வைக்கப்படுகிறார். மலையடிவாரத்தில் சோமேஸ்வரசுவாமி கோவில் ஒன்றும் உள்ளது. இக்கோட்டை இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையினரின் பாதுகாப்பில் உள்ளது
 
1.    தீரன் சின்னமலையை இக்கோட்டையில் ஆங்கிலேயர் 1805ம் ஆண்டு சூலை 31ந் தேதி (ஆடி 18 அன்று) தூக்கிலிட்டார்கள். கீழ் அரணில் சிவன் கோவில்
 http://mw2.google.com/mw-panoramio/photos/medium/76585108.jpg
2.    வரதராசப் பெருமாள் கோவில்
 
3.    சென்ன கேசவப் பெருமாள் கோவில்
 http://photos1.blogger.com/img/265/1151/640/000036.jpg
4.    தஸ்தகீர் மகான் தர்கா
 http://historicalsocietyslm.weebly.com/uploads/4/0/4/7/4047994/2212731.jpg?364
5.    கெய்த் பீர் மசூதி
 
வெளிநாடுகளிலெல்லாம் ஒரு 50 வருடத்திற்கு முந்தைய ஒரு மண் குட்டை கண்டாலும் உடனே அதனை பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவித்து பராமரிக்க ஆரம்பித்துவிடுவார். அதனால்தான் வெளிநாடுகளில் சுற்றுலா தளங்கள் படம் போடுகின்றன!
 http://mw2.google.com/mw-panoramio/photos/medium/76583472.jpg
ஆனால் நம் ஊரிலோ?...
200 வருடங்கள் பெருமை வாய்ந்த பகுதிகளைக்கூட பராமரிக்காமல் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன... அப்படிப்பட்ட பகுதிகளில் ஒன்றுதான் இந்த சங்ககிரி மலை.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLqv68gHT0ly1doVBFf_6GPKRNORma40y4hDfzgEbfIl-j2an4nfJQ4iqT1mBV4j5VO40EoN_xqCQPm_VjQro3r9Ez8NAgx-4wjc5msmhaspBcjPk4kFB2VIZy1JM1OX7VWOYhJmy5em0/s1600/Image004.jpg
சங்ககிரி கோட்டை சேலத்தில் உள்ள முக்கிய வரலாற்று இடமாகும். சங்ககிரி மலையில் இது கட்டப்பட்டுள்ளது. அனால் பராமரிப்பு இல்லாததால் வரலாற்று புகழ் வாய்ந்த இக்கோட்டை தற்பொழுது சிதிலமடைந்துள்ளது. 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdjOf_2noYFQE043q_GJ2nSPNWrOFSC7_BO-WYNpdiCL_Ws82LIoZ3ILO-TculximZHrrBX7Rc7lYPfHwqs_7foEyeyj_SVHDO-cMqMQ_GASMZykFXmRmXiSdINM_7D2uJeG9vAfiPCIM/s1600/Image022.jpg
இக்கோட்டையில்தான் கொங்குநாட்டு சிங்கமான தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்டார் என்று வரலாறு கூறுகிறது. இதை ஆட்சி செய்தவரும் அவரே. கோட்டைக்கு 10 சுற்று சுவர்கள் உள்ளன.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLBjQP5SpOw2CARA1fLW4gtRdDZ63N8_4n2i-hE-NxjX0xV0Hk2znQRDUzBmegBi_uMkcDmB0ZWG2851i3qz9jPbg9sVEot4EaIWBnVes0gzeidVpiwR56a1gOgBLDJzAeZhpx3xJy_Mg/s1600/Image023.jpg
இப்பகுதியில் அதிகப்படியான மூலிகைகளும் இருப்பதாக கூறப்படுகிறது. அதை எண்ணித்தான் மூலிகை ஆய்வுக்காக நான் அம்மலைக்கு சென்றேன். அப்பொழுதுதான் தெரிந்தது மூலிகையை விட சிறப்புவாய்ந்த பொருள் அக்கோட்டை என்பது...உடனே நான் மூலிகை தகவல் சேகரிப்பதை விட்டு அக்கோட்டை பற்றிய தகவல்களை சேகரித்தேன். 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRl_wECPGQH7T7nNM5Xxim3R9Gphq0hC65J4MGwreMbs3aWr-5kQYfCxgWx37tpsr5IJkblZN7rGmheHXtPPpaJLsX-Z5YLD50ss4Xw-qoN7SCHU8a1_vtFczMN0lBfADFbrkvnxdEn9o/s1600/Image027.jpg
ஆனால் நான் அப்பொழுது அதற்கு தகுந்த உபகரணங்களுடன் செல்லாததால் சரியனவகையில் கோட்டையை இங்கு பதிவிட இயலவில்லை. என்னால் கோட்டையின் 20 சதவீத பகுதிகளைத்தான், உண்மையை சொல்லவேண்டுமானால் கோட்டையின் சுற்று சுவர்களை மட்டும்தான்  பார்க்க முடிந்தது. 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJliHMOPPjtEpqwPgFolQ0n-AagPK-VN-bmBr6cum2u4PUDShrt11JXatwE6qmM3BrYUurWG6-6vYlErlQxGoSIMD2TD1nwEXndMBzMwWvuFF5X66aHmBh-luzgYMLesxjujX46rWhX7E/s1600/Image033.jpg
இரண்டரை மணி நேர மலை ஏற்றத்தில் இப்போது மலைக்கோட்டையின் உச்சியில் இருக்கிறோம்.  சங்ககிரி கோட்டை பதினைந்தாம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தால் கட்டப்பட்டு பின்னர் ராணுவ துருப்பாக திப்பு சூல்தானுக்கும், அதன் பிறகு ஆங்கில அரசுக்கும் பயன்படுத்தப்பட்டது.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMckaYDDMAlcCfq_S4pLqN8D4Q6Hnw8OHp6TqBOMDxacn29nG_wuLPkp3hehs4Elw5qUtMiRltz5Fw2o7WgD4GyQ71FJPBSQ5T2hCa6_m096mqNjkWA6BOxQN71j1tUK_MdlNyDtQ8kzM/s1600/Image036.jpg
 கடைசியில் கொங்கு நாடு என்று அழைக்கப்பட்ட பகுதிகளுக்கு இது வரி வசூல் மையம் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் ஆனது. ஜூலை 31, 1805 அன்று மாவீரன் தீரன் சின்னமலை இங்குதான் தூக்கிலிடப்பட்டார். அதைத்தவிர அந்த கோட்டையின் முக்கிய வரலாறு, அதன் பின்னால் இருக்கும் பல சுவாரசியாமான தகவல்கள் சரிவர தெரியவில்லை.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRbS_kJ1BHhxJEYQ50SDa05nU0wqIEIzV65SX5lMW-29lZsL_uRb2Bafo-pVDmvbA2sGLgnf8M_G7tQ1JnVVCV5fmqXXKB_weQdibdic9QFHFX0YeXJ6j0gK5MCdC3gTFrxoz3GLZbrX8/s1600/Image039.jpgலை உச்சியில் பாதி இடம் வெறும் பாறை தான். மொத்தம் தோராயமாக ஒரு ஐந்து ஏக்கர் பரப்பளவு மேலே இருக்கும். அந்த கடைசி நிழல் மண்டபத்தை விட்டு வெளியே வந்தவுடன் முதலில் ஒரு பெரிய பாறையும் அதன் மேல் ஒரு சிறிய அனுமார் கோவிலும் இருக்கிறது. இதை தாண்டிதான் அடுத்து செல்ல முடியும். 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEie-STpZ6b7RAwYhMtwOs6Uj0EBNh_ZzVGqO-rxYCg39xj0kOGDOF4m5w7BKsTd_3lZz1WLklb2FQqqARm9LirggZWx1HIw6A8cWQLGh-APXxrg-iEIJrdkHzNj5lsbgVzu0ThT03YmPww/s1600/Image040.jpg
இந்த பாறையை ஒட்டி கீழே ஒரு தண்ணீர் பாலி இருக்கிறது. அதாவது அந்த பாறையின் சரிவில், கீழே ஒரு சுவர் எழுப்பி, அங்கு தேங்கும் மலை நீரை அப்போது சேகரித்து வைத்து வந்துள்ளனர். அதாவது அந்த காலத்து மலை நீர் சேகரிப்பு திட்டம்.  
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4uhJSijMoW4pa9NSqrEi_8N_L3hyK_YQy-Hhmt-0HxNEQyWDFZ5Bzh_6gfGVR791epTIwANcSWAW0t2vwJL_KnsRmc0Wcs5wPm9Dg3FRAvT_gdOsuL4V2VavTG7WMRV5uIL444HXQweI/s1600/Image042.jpg
இது குடிப்பதற்கும், புலங்குவதற்க்கும் அப்போது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கலாம். இதை விட்டால் அப்போது அந்த மலை உச்சியில் தண்ணீர் கிடைக்க வேறு வழி இல்லை. ஏன் இப்போதும் கூட அங்கு வாழ்ந்துக்கொண்டு இருக்கும் குரங்குகளுக்கு அது பயன்பட்டு கொண்டு இருக்கிறது.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRZB49KeabywH7pkTFLYo95C6I_NLGqSCRSSBBnob1xok6PoznP2HBVKlw3bUmeFKut4ny5NP4gUSpu4keqmj0j0VY2jKihw2D89asrNJ9OrhK60Z3Y8LiFtaHRj13WQCI0L9LKyIPI4s/s1600/Image047.jpg
அடுத்து அதன் அருகிலேயே இருக்கிறது வரதராஜ பெருமாள் கோவில். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் தான் இன்று சிறப்பு பூஜை. அதாவது புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் மட்டும் பூஜை செய்யப்படும். அன்று தான் முதல் சனிக்கிழமை.  
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0j0v_cF2Dke3AE2icD7DlcNGNWbW-LYtaqqIjv53S4efNthBDWTLKcZXDWTO86L7GGUEsh5XOmkrn3BAN2U6RoDcSTXd90YX1bKHcpcWM2a-LwakAalTcnjcnTljgjks00WTfELipmL0/s1600/Image078.jpg
வருடத்தின் மற்ற நாட்களில் இந்த கோவில் பூட்டியே தான் இருக்கும். யாரேனும் பூஜைக்கு கொடுத்தால் மட்டுமே மற்ற நாட்களில் மேலே வந்து திறப்பார்கள் என்று கேள்விப்பட்டேன்.
அது ஒரு சிறிய கோவில் தான். ஒரு பெரிய பாறை மேல் சற்று உயரத்தில் கட்டப்பட்டு இருக்கிறது. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9fdE9GCSwa279L-YndscRw_V936qlUoqgDlOTGjkty4V0uqpy-9Mfd9ipfqxAY5e7eR7i4b9p_0VOW8zfwCYgO5UJsidbUZx_aFP4nib7GVxUG5g75TzDhki0jS8JsX6I8DrGuhhn0Uc/s1600/Image093.jpgகோவிலின் சில பேருக்கு மேல் நிற்க முடியாது. முகப்பின் கீழே பள்ளம் தான். ஆக அந்த பாறை மேல் ஏறுவதற்கு கற்களால் அடுக்கப்பட்ட படி தான்.  நாங்கள் சென்ற போது கோவிலின் உள்ளே நுழைய முடியவில்லை. 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9HSpooQRxWQq4gSEvYwox6ceQUtp10gadANPq82b9kNRMioO4wTcOAq5MLGPFSZ0x3wy303ZkjTOjR51yEXwF5s1AVJuBS_k-pbd6en-JVdMm2SyiBhQau2ITkleZst4B8-hzTnR-QpM/s1600/Image111.jpg
பூஜைக்கு நிறைய பேர் ஏற்கனவே வரிசையில் காத்திருந்தனர். கோவிலின் கீழே ஒரு லிங்கம் போன்ற ஒரு உருவம் பாறையில் செதுக்கப்பட்டு அதன் அருகில் உருது மொழில் ஏதோ எழுதி இருந்தது.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjJbLAB_7ULKbbjnBaHkvJAhk89GAjlCgiEeOZS2oN0eTTgmnub8YdpevU1xQXFT10lbYzWWZTqG4yGyDv7qWa9oTPWBbMSKQ8MYQ3SYd0UDdfgcC3aWB-L7nmetb9bZjTq6jGKH0uYSE/s1600/Image113.jpg
சங்ககிரி மலைக்கோட்டை ஒரு சுற்றுலா தளமாக்கப்பட வேண்டும்.  கேட்பாரற்று கிடக்கும் தீரன் சின்ன மலை தூக்கிலிடப்பட்ட அந்த இடத்தை நினைவிடம் ஆக்க வேண்டும்.  இந்த மலைக்கோட்டையின் வரலாற்றை பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhr2tInhjEnn2_QjHhXnhMaFTJVwoVBXEJCK3Ypkh7SZPOIS74HSik75BsiUeX0Py5cen8uCrjeBViVhrYdZ_r_SEjruKWC0pvWFQCpmT7QWAKEQJ9CW8gWjEtJDVVSt3cMD15A3a0iOnU/s1600/Image124.jpg
காரில் வந்து இறங்கியவுடன் எந்த இடத்தையும் பார்த்துடவிடவேண்டும் என்ற மனநிலைக்கு வந்து விட்ட மக்களை சுலபமாக மலை உச்சி செல்ல “விஞ்ச்” சேவை கொண்டு கவர வேண்டும். குறைந்த பட்சம் இந்த இடம் மேலும் சிதைவதிலிருந்தாவது பாதுகாக்கப்பட வேண்டும்.
 http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2012/10/IMG_5760.jpg
இவை அனைத்தையும் சாத்தியப்படுத்த இந்த மலைகோட்டையை தற்போது கையகப்படுத்தி வைத்திருக்கும் தொல்பொருள்துறையால் மட்டுமே முடியும். ஆனால் இந்த மலையின் அடிவாரத்தில் தொல்பொருள் துறையால் வைக்கப்பட்டு இருக்கும் ஒரு எச்சரிக்கை போர்டின் நிலையை பார்த்தாலே அந்த கோட்டையும், அங்குள்ள புராதான இடங்களையும் எந்த லட்சணத்தில் அவர்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று புரியும்.

2 கருத்துகள்:

  1. அனைத்து படங்களும் அருமை...
    சுற்றுலா தலமாக்க அனைத்து முயற்சிகளும் தொல்லியல் துறை எடுக்க முன் வரவேண்டும்.

    பதிலளிநீக்கு