வெள்ளி, 29 நவம்பர், 2013

வரலாறு பேசும் புனித ஜார்ஜ் கோட்டை - கோ.ஜெயக்குமார்.



வரலாறு பேசும் புனித ஜார்ஜ் கோட்டை - கோ.ஜெயக்குமார்.
புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George), இந்தியாவில் பிரித்தானியரின் முதலாவது கோட்டையாகும்.பிரான்சிஸ்டே, ஆண்ட்ரூ கோகன் என்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் முயற்சியால் 1639 ஆம் ஆண்டில் கரையோர நகரான மதராசில் (இன்றைய சென்னை நகரம்) கட்டத் தொடங்கப்பட்டது. வெறுமனே கிடந்த இப் பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால், புதிய குடியேற்றங்களும், வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இன்றைய சென்னை நகரம் இக் கோட்டையைச் சுற்றியே உருவானது எனக் கூற முடியும்.
 படிமம்:Fort St. George, Chennai.jpg
1600 ஆம் ஆண்டில் வணிக நோக்குடன் இந்தியாவுக்குள் நுழைந்த பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி சூரத்தில் அனுமதி பெற்ற வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது. இதன் வணிகக் கப்பல்களையும், வாசனைப் பொருள் வணிகத்தில் அவர்களுடைய நலன்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, மலாக்கா நீரிணைக்கு அண்மையில் துறைமுகம் ஒன்றின் தேவையைக் கம்பனியினர் உணர்ந்தனர். 
 படிமம்:Fort St. George, Chennai 2.jpg
மேற்குக் கடற்கரைப் பகுதியில் மதராஸ்பட்டினம் அல்லது சென்னபட்டினம் என அழைக்கப்பட்ட ஒரு நிலப்பகுதியை அவர்கள் அப்பகுதித் தலைவர் ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கி அதிலே ஒரு துறைமுகத்தையும், கோட்டை ஒன்றையும் கட்டத் தொடங்கினர். கோட்டை புனித ஜார்ஜ் நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டதால், இதற்கு புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிடப்பட்டது.
 படிமம்:Flag post.jpg
கடலையும், சில சிறிய மீனவர் ஊர்களையும் நோக்கிக் கொண்டிருந்த இக் கோட்டைப் பகுதி விரைவிலேயே வணிக நடவடிக்கைகளின் ஒரு மையமானது. இக் கோட்டை, இப் பகுதியிலே ஜார்ஜ் டவுன் என்னும் புதிய குடியேற்றப் பகுதி உருவாகக் காரணமாயிற்று. இது அங்கிருந்த ஊர்களையெல்லாம் தன்னுள் அடக்கி வளர்ந்து சென்னை நகரம் உருவாக வழி வகுத்தது. இது கர்நாடகப் பகுதியில் பிரித்தானியரின் செல்வாக்கை நிலை நிறுத்தவும், ஆர்க்காடு மற்றும் ஸ்ரீரங்கப்பட்டின அரசர்களையும், பாண்டிச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரரையும் கண்காணிப்பில் வைத்திருக்கவும் உதவியது.
 http://upload.wikimedia.org/wikipedia/commons/a/a5/Fort_St._George.jpg
6 மீட்டர் உயரமான சுவர்களைக் கொண்டிருந்த இக் கோட்டை, 18 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற பல தாக்குதல்களைச் சமாளித்தது.1640 முதல் தற்காலம் வரை இக்கோட்டையின் உட்பகுதியில் பல கட்டடங்கள் எழுந்துள்ளன. ஆங்கில ஆளுநர்களின் தலைமையிடமாக விளங்கிய இக்கோட்டைப் பகுதியில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக அலுவலகங்கள், அமைச்சர் அலுவலகங்கள், சட்டமன்றங்கள் ஆகியவை உள்ளன. கோட்டைக்கு உள்ளே வர மூன்று வாயில்கள் உள்ளன. கோட்டையைச் சுற்றி அகழி உள்ளதை இன்றும் காணலாம். இவை தவிர மூன்று முக்கியக் கட்டடப் பகுதிகள் உள்ளன.
 http://www.columbia.edu/itc/mealac/pritchett/00routesdata/1600_1699/madras/drawings/swain1804b.jpg
  1. புனித மேரி கிறித்தவ ஆலயம்
  2. கிளைவ் மாளிகை
  3. கோட்டை அருங்காட்சிய
ஜார்ஜ் டவுன் (George Town) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் நகர்ப்புறப் பகுதியாகும். புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டபிறகு இங்கு குடியேற்றம் நிகழ்ந்தது; இதுவே சென்னையில் அமைந்த முதல் குடியிருப்புப் பகுதியாகும். குடிமைப்பட்ட காலத்தில் இது கறுப்பர் நகரம் என அழைக்கப்பட்டு வந்தது. 1911ஆம் ஆண்டில் பிரித்தானிய மன்னர் ஜார்ஜ் V இந்தியாவின் பேரரசராக முடி சூடியபோது இப்பகுதிக்கு ஜார்ஜ் டவுன் என பெயர் மாற்றப்பட்டது.

 http://lh5.ggpht.com/_IEYubfMaOJM/SnEfECxz0aI/AAAAAAAABPw/CnLlafBijfM/Fort%20ST%20George%201700s%5B3%5D.jpg
வரைபடத்தில் புனித ஜார்ஜ் கோட்டையும் ஜார்ஜ் டவுனும் நகரத்தின் மற்ற குடிமைப்பட்டக் காலப் பெயர்கள் மாற்றப்பட்டபோதும் இப்பகுதி இன்றும் அலுவல்முறையாக ஜார்ஜ் டவுன் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. 1640களில் சென்னை இங்கிருந்துதான் வளரத் துவங்கியது. புனித ஜார்ஜ் கோட்டைக்கு அண்மையில் உள்ளூர்வாசிகளின் குடியிருப்பாக துவங்கிய ஜார்ஜ் டவுன் குடிகளின் தேவைகள் மற்றும் ஆட்சியாளர்களின் வசதிகளை முன்னிட்டுவிரைவாக வளரத் தொடங்கியது. 
முன்பு இந்துக் கோவிலாக இருந்தவிடத்தில் உயர் நீதி மன்ற வளாகமும் முதல் கலங்கரை விளக்கமும் கட்டப்பட்டன. அங்கிருந்த சென்னக் கேசவப் பெருமாள் மற்றும் சென்ன மல்லிசுவரசுவாமி கோவில்கள் தற்போதுள்ள இடத்தில் தங்கச்சாலைக்கு இடம் பெயர்க்கப்பட்டன. இவை இந்துக்களிடையே பட்டணம் கோவில் என புகழ்பெற்றிருந்தன
புனித மேரி கிறித்தவ ஆலயம் இந்தியாவின் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தென்பகுதியில் காணப்படும் மிகத் தொன்மையான கிறித்தவ ஆலயம் ஆகும். ஆங்கிலத் திருச்சபையினருக்குரிய ஆலயங்களில் இந்தியாவில் முதன்முதலில் எழுப்பப்பட்ட ஆலயமாகும்.[1] கி. பி. 1680 இல் கிழக்கிந்திய கம்பெனியாரால் இவ்வாலயம் எழுப்பப்பட்டது. இவ்வாலயத்தில் இறந்த பல ஆங்கிலேயர்களின் நினைவாகப் பல பதிப்புக் கற்பலகைகள் உள்ளன.
 
புனித மேரி ஆலயத்தினுள் இங்கிலாந்து நாட்டுச் சிற்பிகளின் கைவண்ணத்தைக் காட்டும் பல சலவைக்கல் சிற்பங்கள் உள்ளன. இவை அரிய கலைப்படைப்புகளாகும். இவ்வாலயத்தில் தான் இராபர்ட் கிளைவ் மற்றும் ஆளுநர் எலிஹுஹேல் என்பவர்களின் திருமணம் நடைபெற்றது
கிளைவ் மாளிகை (Clive House) என்பது சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள கட்டடமாகும். 
 படிமம்:Clive House.jpg
இந்தக் கட்டடம் முன்னாளில் சேமியர் சுல்தான் என்பவருக்குச் சொந்தமானதாக இருந்தது. இதனை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார் விலைக்கு வாங்கினர். கி.பி. 1753 இல் ஆர்க்காட்டு வீரர் எனப்பட்ட இராபர்ட் கிளைவ் இங்கு வசித்தார். அப்போது இக்கட்டடம் அட்மிரல் மாளிகை என அழைக்கப்பட்டது. பின் இது புனித ஜார்ஜ் கோட்டை ஆளுநரின் நகர மாளிகையாக மாறியது. கி.பி. 1800 முதல் இதில் அரசு அலுவலகங்கள் சில செயல்பட்டு வருகின்றன.
 


கோட்டை அருங்காட்சியகம் தமிழகத்தின் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திலுள்ள ஓர் கட்டடம் ஆகும். கி.பி. 1795 இல் கட்டப்பட்ட இக்கட்டடத்தில் கி. பி. 1948 ஆம் ஆண்டு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.
 
புனித ஜார்ஜ் கோட்டையில் கிடைத்த பழம்பொருட்கள், பலவகைப் பீரங்கிகள், ஆயுதங்கள், ஆங்கிலேயரும் பிற சில ஐரோப்பியரும் வெளியிட்ட நாணயங்கள், காரன்வாலிஸ் பிரபுவின் பெரிய பளிங்குச் சிலை, இங்கிலாந்து நாட்டின் அரசர்கள், அரசிகள், புனித ஜார்ஜ் கோட்டையில் பணியாற்றிய ஆளுநர்கள், ஆர்க்காட்டு நவாபுகள் ஆகியோரது பெரிய கண்கவர் உருவ ஓவியங்கள், இராபர்ட் கிளைவ் எழுதிய கடிதங்கள், பிரெஞ்சுக்காரர்கள் பயன்படுத்திய விளக்குகள், பீங்கான் பாத்திரங்கள், பிரெஞ்சுத் தலைவர்களின் படங்கள், மைசூரை ஆட்சி புரிந்த உடையார்களின் வரலாற்றைக் குறிக்கும் சிற்பம், சித்திரம் முதலியவை காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக