செவ்வாய், 29 அக்டோபர், 2013

19-ம் நூற்றாண்டின் அரண்மனைக்குள் 1000 டன் தங்கம் - கோ.ஜெயக்குமார்.



உத்தர பிரதேசத்தில் டான்டியா கேரா கிராமத்தில் 19-ம் நூற்றாண்டின் அரண்மனைக்குள் 1000 டன் தங்கம்  - கோ.ஜெயக்குமார்.

 

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள டான்டியா கேரா கிராமத்தில் 19-ம் நூற்றாண்டின் அரண்மனை ஒன்று பாழடைந்த நிலையில் உள்ளது. ராவ் ராம் பக்ஸ் சிங் ஆட்சி செய்த இந்த அரண்மனைக்குள் 1000 டன் தங்கம் புதைக்கப்பட்டிருப்பது போன்று தனக்கு கனவில் தெரிந்ததாக யோகி சுவாமி ஷோபான் சர்க்கார் என்ற சாது கூறியுள்ளார். இதுதொடர்பாக மத்திய வங்கிக்கு அவர் கடிதம் எழுதியிருக்கிறார்.

இதையடுத்து இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, டான்டியா கேரா கிராமத்திற்கு தொல்பொருள் ஆய்வாளர்கள் குழுவை அனுப்பியிருக்கிறது. அவர்கள் வெள்ளிக்கிழமை அரண்மனை வளாகத்தை தோண்டி தங்கள் ஆய்வுப் பணியை தொடங்க உள்ளனர்.
இந்த அரண்மனையில் புதையுண்டு கிடக்கும் தங்கத்தை அரசு கைப்பற்றினால், பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியா மீண்டு வருவதற்கு உதவியாக இருக்கும் என்று சாது தெரிவிக்கிறார்.

 
1000 டன் தங்கம் இருப்பதாக கண்ட சாதுவின் கனவு பலித்தால், ஓராண்டுக்கு இறக்குமதி செய்யும் தங்கத்திற்கு இணையாக இருக்கும்.அரண்மனைக்கு பின்புறம் இரண்டு இடங்களில் தலா 100 சதுர மீட்டர் அளவுக்கு பள்ளம் தோண்ட தொல்பொருள் ஆய்வுக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். எனினும், அந்த மண்ணில் புதையல் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று ஆய்வுக்குழு தலைவர் மிஷ்ரா தெரிவித்தார். 

 

உ.பி.யில் பழங்கால கோட்டையில் பள்ளம் தோண்டி தங்கப்புதையலைத் தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. அங்கு பூமிக்கு அடியில் விலை உயர்ந்த உலோகம் இருக்கலாம் என தொல் பொருள் ஆராய்ச்சித்துறை வல்லுனரும், கலெக்டரும் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் பழங்கால மன்னர் ராஜா ராவ் ராம் பக்ஸ் சிங், உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த சாமியார் ஷோபன் சர்க்கார் கனவில் தோன்றி, தாண்டியா கெராவில் உள்ள தனது கோட்டையில் 1000 டன் தங்கத்தை புதைத்து வைத்துள்ளதாகக் கூறிய தகவல் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்தக் கோட்டையில் 1000 டன் தங்கப்புதையலை தேடும் வேட்டையை இந்திய தொல் பொருள் ஆராய்ச்சித்துறையினர் நேற்று முன்தினம் தொடங்கினர்.தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் தங்கப்புதையல் தேடும் வேட்டை, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. தொல் பொருள் ஆராய்ச்சித்துறை துணை இயக்குனர் பி.கே.மிஷ்ரா தலைமையில், அந்தத் துறை மற்றும் இந்திய புவி அமைப்பியல் ஆராய்ச்சித்துறையை சேர்ந்த 12 உறுப்பினர் குழு வழிகாட்டுதலில், உள்ளூர் தொழிலாளர்கள் மண்வெட்டி, மண்கொத்தி, கடப்பாரை போன்றவற்றைக் கொண்டு தோண்டி வருகின்றனர்.

இதை வேடிக்கை பார்க்க சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக் கான மக்கள் வெள்ளமென திரண்டனர். இதனால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சர்வானந்த் சிங் உறுதிப்படுத்தினார்.தோண்டுதல் பணி நடக்கிற இடத்திற்குள் பொதுமக்கள் நுழைந்துவிடாதபடி தடுப்பதற்காக அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு அங்கு திடீர் கடைகள் உதயமாகி உள்ளன. அங்கு வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை கோட்டை அமைந்துள்ள பகுதியை துளையிடும் எந்திரம் கொண்டு துளையிட்டு பார்த்தபோது 20 மீட்டர் ஆழத்தில், உலோகப்படிமம் தென்பட்டது. அது பாறைபோல இல்லை. அந்தப்பகுதியில், 10-க்கு 10 மீட்டர் பரப்பளவு கொண்ட 3 பள்ளங்கள் தோண்டுவதற்கு இந்திய தொல் பொருள் ஆராய்ச்சித்துறையினர், இந்தியப் புவி அமைப்பியல் ஆராய்ச்சித்துறையினர் குறியிட்டுள்ளனர். அந்தப் பள்ளங்களைத் தோண்டும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

 
இதுதொடர்பாக இந்திய தொல் பொருள் ஆராய்ச்சித்துறை துணை இயக்குனர் பி.கே.மிஷ்ரா கூறுகையில், "இங்கே தங்கத்தை நாங்கள் கண்டுபிடிப்போமா என்பதை இப்போதே உறுதியாக கூற முடியாது. ஆனால், எங்களது ஆய்வு, ஏதோ ஒரு உலோகப்படிமம் இங்கு இருப்பதாகக் காட்டுகிறது. அது என்ன உலோகமாகவும் இருக்கலாம். நாங்கள் தங்கப்புதையல் புதைந்துள்ளதாகக் கூறப்படும் இடத்தை (ஆழத்தை) நெருங்கும்போது, அந்த மண் கட்டமைப்பின் மாதிரியை எடுத்து சோதித்துப் பார்த்து அது என்ன உலோகம் என்பதை கண்டறிய முடியும்" என்றார்.

 
உன்னாவ் மாவட்ட கலெக்டர் விஜய் கிரன் ஆனந்தும், விலை உயர்ந்த உலோகம் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவர், "இந்திய புவி அமைப்பியல் ஆராய்ச்சித்துறை வரைந்துள்ள வரைபடத்தில் பூமிக்கடியில் விலை மதிப்புள்ள உலோகம் இருப்பது காட்டப்பட்டுள்ளது. அது தங்கமா, இரும்பா அல்லது இன்ன பிற உலோகமா என்பதை இப்போது உறுதியாகக்கூற முடியாது" என கூறினார். 

 

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த துறவியான ஷோபன் சர்க்கார் என்பவர், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள கோட்டையில் 1000 டன் தங்கம் புதைந்திருப்பதாக தன் கனவில் மன்னர் கூறியதாக தெரிவித்தார்.இதையடுத்து அந்த கோட்டையில் கடந்த 18–ந்தேதி முதல் தங்கம் தேடும் பணியை தொல்பொருள் ஆய்வுத்துறை தொடங்கியது. இன்று (செவ்வாய்க்கிழமை) 5–வது நாளாக தங்கப் புதையலை தேடும் பணி நடந்தது.
 http://images.travelpod.com/tw_slides/ta00/9db/f68/jodhpur-fort-up-close-pretty-high-ghanerao.jpg
கோட்டையில் அகழாய்வு பணியில் ஓரிரு நாட்களில் தங்கம் வந்து விடும் என்று கூறப்பட்டது. ஆனால் தோண்ட தோண்ட மண்தான் வருகிறதே தவிர, இதுவரை ஒரு கிராம் தங்கம் கூட வரவில்லை. இதையடுத்து தங்கப் புதையலை தேடும் பணி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கோட்டையில் அகழாய்வு நடத்த நாங்கள் உத்தரவிடவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.
 http://www.thebahrain.com/images/bg_dilmun.jpg
மத்திய தொல்பொருள் துறையும், ''நாங்கள் துறவி ஷோபன் சர்க்கார் சொன்னதை வைத்து கோட்டையில் மண்ணை தோண்டவில்லை. இது எங்களது வழக்கமான அகழாய்வு பணியாகும். இதில் தங்கம் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்'' என்று கூறியுள்ளது.
இதையடுத்து தங்கப் புதையலை தோண்டி எடுப்பதை வேடிக்கை பார்க்க திரண்ட மக்கள் கூலிப்படைந்தனர். ''தங்கம் இருக்காது'' என்று கூறியபடி மக்கள் கலைந்து வருகின்றனர்.
நேற்று நடந்த அகழாய்வின்போது உடைந்த பொம்மைகள், உடைந்த வளையல்கள்தான் கிடைத்தது. ஒரு செங்கல் சுவர் பகுதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த சுவர் 17–ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று தொல்லியல் துறையினர் கணித்துள்ளனர்.
 http://images.jagran.com/up-fort-unnao-19-10-2013.jpg
இதையடுத்து கோட்டையின் பிற பகுதிகளில் 5 மீட்டர் ஆழத்துக்கு தோண்ட திட்டமிட்டுள்ளனர். இன்னும் 3 வாரத்துக்கு இந்த அகழாய்வு பணி நடக்கும் என்று தொல்பொருள் ஆய்வுத்துறை அறிவித்துள்ளது. தங்கம் தேடப்பட்டு வரும் மன்னரின் கோட்டை அமைந்துள்ள தாண்டி யாகேதா கிராமத்தில் இப்போது 469 குடும்பங்கள் வசித்து வருகிறது. இன்னமும் அந்த ஊருக்கு மின்சார இணைப்பு கொடுக்கப்படவில்லை.
 http://www.thehindubusinessline.com/multimedia/dynamic/01622/UNNAO_1622829e.jpg
சுதந்திரம் பெற்று இவ்வளவு நாட்களுக்கு பிறகும் இருளில் உள்ள அந்த கிராமத்தின் மேம்பாட்டுக்காக தங்கப் புதையலில் 20 சதவீதத்தை கொடுக்க வேண்டும் என்று சாமியார் ஷோபன் கூறியுள்ளார். அதாவது ரூ. 60 ஆயிரம் கோடியை அந்த கிராமத்துக்கு கொடுக்க சொல்கிறார். ஆனால் தங்கம்தான் கிடைத்தபாடில்லை.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidCxFb-zaZpfLFuGL32nfP7DDO9xblniAcGiMy7_WJOVHnYr8NtUP7AOqXbAhy-kecla2WP9igUZ5AONEUAEbvo4eOUS_iXdSRDZ97QDyXgoHd7fqVyV7BckvyQqMVR3oBanrtIGsbHaBT/s640/19TH_FORT_1622999e.jpg
மத்திய தொல் பொருள் ஆய்வு துறை சார்பில், கடந்த 12 நாட்களாக தொடர்ந்து தோண்டியும், புதையல் எதுவும் சிக்கவில்லை. பூமிக்கு அடியில் புதைந்திருந்த செங்கல்சுவரின் சிதைந்த பகுதிகள் மட்டுமே காணப்பட்டன.
 
http://static.ibnlive.in.com/ibnlive/pix/sitepix/10_2013/gold_rush_gsi_claims.jpg
தங்கப்புதையல் வேட்டை தோல்வியில் முடிந்ததால், அந்த பகுதியில் தோண்டும் பணியை தொல் பொருள் ஆய்வுத்துறை நேற்று திடீரென்று நிறுத்திவிட்டதாகவும், தங்கப்புதையல் வேட்டை கைவிடப்பட்டதாகவும், பரபரப்பான தகவல் வெளியானது.
 http://u4uvoice.com/wp-content/uploads/2013/10/Treasure-hunt-ASI-to-begin-excavation-in-UP-fort.jpg
தொல்பொருள் துறை அறிவிப்பு

ஆனால், மத்திய தொல் பொருள் ஆய்வுத்துறையின் தலைமை இயக்குனர் பிரவின் ஸ்ரீவஸ்தவா, இந்த தகவலை மறுத்தார். நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர், “12 உறுப்பினர்களைக் கொண்ட குழு மேற்கொண்டு வரும் தங்கப்புதையல் வேட்டைக்கான தோண்டும் பணி நிறுத்தப்படவில்லை. மாறாக, தோண்டும் பணியை மேலும் விரிவுபடுத்த இருப்பதாக” தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது-
“இணையான இரண்டு சுவர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் மட்டும் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. அந்த சுவரின் அடிப்பகுதி வரை, 4.80 மீட்டர் ஆழத்துக்கு தோண்டப்பட்டு உள்ளது. கோட்டையை சுற்றி அமைக்கப்பட்ட அகழியின் ஒரு பகுதியில் தற்போது தோண்டி இருக்கிறோம். அந்த அகழி செல்லும் பாதை குறித்த புகைப்படங்கள், வரைபடங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
முதலாம் நூற்றாண்டு பொருட்கள்
 http://www.pictureworldbd.com/images/India_Travel/part%20way%20up%20to%20Golconda%20Fort-hyderabad.jpg
செங்கல் சுவர்களை அகற்றியபிறகு, இந்த அகழிப்பகுதியில், தோண்டும் இடத்தை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டு இருக்கிறோம். கங்கை நதி அருகில் உள்ள மற்றொரு இடத்தில் பரிசோதனை அடிப்படையில் தோண்டிப்பார்க்கவும், இந்திய புவியியல் ஆய்வு மையம் யோசனை தெரிவித்து உள்ளது. அதன்படி புதிய இடம் சுத்தம் செய்யப்பட்டு, புதன்கிழமை (இன்று) முதல் தோண்டும் பணி தொடங்கும்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7qMO0PhKWWeGV1lDazUAsH2OaO0r5bZZzNQcHIQaIJs_8Lo_cszRRLHQEwmvx1CfIZfPJRZm8FSSREOZxpNNn-uWgXiuJqrQGAdht89vtEEAS0saJFAJVnhaouhzpEw8JAwvlt3p_aL8V/s1600/mcshane+fort.jpeg
இதுவரை தோண்டிய இடத்தில், கண்ணாடி வளையல்கள், இரும்பு ஆணிகள், சிங்கம் ஓவியம் வரையப்பட்ட கற்களின் உடைந்த பகுதிகள் மற்றும் ஓடுகள் போன்ற கி.மு.முதலாம் நூற்றாண்டு, கி.பி. 7, 17 மற்றும் 19-ம் நூற்றாண்டு கால பொருட்கள் சில கிடைத்துள்ளன. சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட சுவரின் செங்கற்கள், இரண்டு அடுப்புகளும் கிடைத்துள்ளன”.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக