திருவண்ணாமலை பர்வதமலை - கோ.ஜெயக்குமார்,
பர்வதமலையின்
சொத்துக்களை அபகரிக்கும் மோசடி கும்பல் !...
கிரிவலப்பாதைக்கு
அரசு ஒதுக்கிய இரண்டு கோடி மாயமான மர்மம் !...
ஐநூறு
கிலோ பஞ்சலோக நந்தி சிலையும் கொள்ளைப்போன பயங்கரம்
!...
----------
நாட்டில்
வனக்கொள்கை சட்டம் இருந்தாலும் மலைகளையும், காடுகளையும் சுரண்டும் போக்கு அதிகரித்துக்கொண்டுதான்
உள்ளது. உயிர் காக்கும் காடுகளையும், மலை களையும் கூறுபோடும் கும்பல், தங்கள் சுயநலத்திற்காக
கடவுளையும் புறம் தள்ளி செயல்படுகிறார்கள். இதுபோன்ற போக்கால் நேர்ந்து ஒரு விபரீதத்தை
பற்றி இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில்
உள்ள பல கோயில்களின் சொத்துக்களையும், நிலங்களையும் பல கும்பல் ஆண்டுக்கணக்கில் அனுபவதித்து
வருவதோடு, சந்தர்ப்பம் கிடைத்தால் அவற்றை அப்படியே கபளீகரம் செய்யும் போக்கு தொடர்ந்துக்கொண்டு
உள்ளது. இப்படித்தான், தென்னக கயிலாயம் என்று கூறப்படும் பர்வதமலை கோயிலின் விளை நிலங்களை
அபகரிக்கும் சம்பவத்தின் உண்மையையும் அதன் பின்னணியையும் இப்போது பார்ப்போம்.
மகாதேவமலை,
கொல்லிமலை, சுருளிமலை பொதிகைமலை, வெள்ளியங்கிரிமலை, சதுரகிரிமலை போன்ற பல சித்தர்களின்
மலைகளுக்குக் குறிப்பிட்ட சில மாதங்கள் அல்லது நாட்களுக்குத்தான் செல்ல முடியும். ஆனால்
வருடம் முழுவதும் பர்வதமலைக்கு சென்று வரலாம். நவநாத சித்தர்கள், பதினெண் சித்தர்கள்
எனச் சித்தர்கள் பலர் உறையும் புனித இடமாக பர்வதமலை கருதப்படுகிறது.
சித்தர்கள்
இம்மலையில் இருக்கும் மல்லிகார்ஜுன சுவாமிக்கும், பிரமராம்பிகை அம்மனுக்கும் தினமும்
இரவில் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவதாகக் கூறப்படுகிறது. திருவண்ணாமலையில் அடிக்கு
ஒரு லிங்கம் இருப்பதாக சொல்வார்கள். ஆனால் பர்வதமலையில் பிடிக்கு ஒரு லிங்கம் இருப்பதாக
கருதப்படுகிறது.
தவசிகள்
யோகம் செய்வதற்காகவே சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இம்மலையில் ஆலயம் அமைத்து
இதனை யோகமலை ஆக்கியிருக்கின்றனர். இந்த மலையில் சகலநோய்களையும் தீர்க்கும் `பாதாள சுனைத்தீர்த்தமும்'
உள்ளது.
சித்தர்கள்
தங்கும் தாமரைத் தடாகம், வாழைத் தோட்டம், காராம்பசு போன்றவை இங்கு உள்ளதாகப் பெரியோர்கள்
கூறுகின்றனர். பூண்டி மகான் இங்கு வந்து பாதிமலை ஏறும்போதே மலையை நோக்கியதும் சிவலிங்கம்
தொடர்வடிவமாகக் காட்சி தரவே `காலால் மிதிப்பது கூடாது' என்று மலைமீது செல்வதை நிறுத்தி
விட்டு மலையைச் சுற்றிச் கிரிவலம் மட்டும் செய்து விட்டு வணங்கிச் சென்றார் என்று கூறப்படுகிறது.
இம்மலையிலுள்ள
நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த
பர்வதமலை, திருவண்ணாமலை - வேலூர் நெடுஞ்சாலையில் சுமார் 40 கிலோ மீட்டிர் தொலைவில்
உள்ளது தென்மாதிமங்கலம். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் நடைபாதை பயணம் சென்றால், சுற்றிலும்
மலைகள் தென்படும் அந்த மலைகளுக்கு நடுவே தனித்துக் காட்சி தருவதுதான் பர்வதமலை.
பிரமிக்கும்
தோற்றம் கொண்ட இந்த பர்வதமலைக்கு திரிசூலகிரி, கந்தமலை, அகத்திய மலை போன்ற பல பெயர்கள்
உண்டு. இதன் நிலப்பரப்பு சுமார் 5500 ஏக்கர் மற்றும் நான்காயிரம் அடி உயரம் கொண்டது.
பர்வதமலையின்
உச்சியில் மல்லிகார்ஜுனர், பிரமராம்பிகை அம்மன் கோவில்கள் உள்ளன. மலையின் அடிவாரத்தில்
இருபதடி உயரத்தில் ஏழு முனீஸ்வர சிலைகள் பயங்கர உருவத்துடன் காட்சிதருகின்றனர். அங்கிருந்து
சற்று தூரம் சென்றால் மலையின் எல்லைக் காவல் தெய்வமாக வீரபத்திரர் சுவாமி மிரட்டலுடன்
காட்சியளிக்கிறார். இந்த இடத்திலிருந்துதான் பர்வதமலையின் எல்லை ஆரம்பமாகிறது.
பர்வதமலையில்,
சித்ரா பவுர்ணமி, ஆடி 18, ஆடிபூரம், கார்த்திகை தீபம், மகா சிவராத்திரி மற்றும் பங்குனி
உத்திரம் போன்ற விஷேச நாட்களில் விழாக்கள் நடக்கும்.
இந்த
பர்வதம்மலை கோயிலுக்கு சொந்தமான ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களும், மலையை
சுற்றி 350 குளங்களும் உண்டு.
ஆகாய
உயரத்தில் இருக்கும் இந்த மலை உச்சிக்கு சென்று கடவுளை தரிசிக்க வேண்டும் என்றால், உயிரையே பணயம் வைத்துதான் செல்லவேண்டும்.
மேலும் இந்த மலையை சுற்றி வந்தாலே கயிலாயத்தை சுற்றிவந்ததாக கருத்தப்படும்.
இங்கு
வரும் பக்தர்கள் ஒரு காலத்தில் குடிநீரைக்கூட கீழே இருந்துதான் கூலி கொடுத்துக் கொண்டு
வருவார்கள். ஆனால், தற்போது 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் ஒரு தொட்டி கட்டி மழைநீரை
சேமித்து வைத்துப் பயன்படுத்துவது சற்று ஆறுதலான விஷயம்.
இந்நிலையில்,
ஆன்மீகத்திற்கு புகழ் பெற்ற பர்வதமலையில், இயற்கை வளங்கள் கொழித்துக் கிடப்பதால் அவற்றை
சுரண்ட சில சமூக விரோத கும்பல் பல்வேறு வழிகளில் முறைகேடுகளை செய்து வருகின்றனர்.
குறிப்பாக,
பர்வதமலை சுற்றியுள்ள கிரிவலபாதை அடர்ந்த காடு மேடுகள் சூழ்ந்த பகுதியாக இருப்பதால்,
அந்த பாதையை மேம்படுத்தி, பக்தர்கள் சிரமமின்றி மலை உச்சிக்கு சென்று கடவுளை வழிபட
தமிழக அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கியது. ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. அந்த வேலையை சரிவர
செய்யாமல் அந்த பணத்தை அப்படியே ஏப்பம்விட முயன்று வருவதாக அந்த தொகுதி மக்கள் குற்றம்
சாட்டுகின்றனர்.
பக்தர்களின்
வசதிக்காக கிரிவலப்பாதை போட அரசு வழங்கிய இரண்டு கோடி ரூபாய் எங்கே போனது, இதை பற்றி
சரியான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது தமிழக அரசு தகுந்த நடவடிக்கை
எடுக்கவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.
அதோடு,
இந்த மலைக்கு சொந்தமான 1000த்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களை உள்ளூர் தாதாக்கள்,
தங்களுக்குள்ள அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அவற்றை அப்படியே அபகரித்துக் கொண்டதோடு,
அதில், விளையும் விளைச்சல்களையும் கோயிலுக்கு கொடுக்காமல் யானை வாயில் போட்ட கறும்பை போல சுருட்டி
வருவதாக கூறப்படுகிறது.
கோயிலுக்கு
சொந்தமான நிலங்களில் மாந்தோப்புகள் மற்றும் விளை நிலங்கள் என மாற்றி, பல சுரண்டல்
கும்பல்கள், அவற்றை தங்களின் சொந்த நிலங்களாக உரிமை கொண்டாடி வருவது உள்ளூர்வாசிகளுக்கு
பெரும் அதிர்ச்சியைும், வேதனையும் ஏற்படுத்துகிறது.
மேலும்,
பக்தர்கள் பர்வதமலை கோயிலுக்கு சென்றுவர, மலை அடிவாரம் வரை மூன்று கிலோ மீட்டர் சாலை
அமைத்திருந்தும், அந்த வழியில் பக்தர்களின் வாகனங்கள் செல்ல அங்கு சோதனை சாவடி வைத்திருக்கும் வனத்துறையினர்
அனுமதிப்பதில்லை. ஆனால், ஒருசில வாகனங்களிடம் மட்டும் ரகசியமாக பணம் வாங்கி அனுமதி
வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
மேலும்,
பர்வதமலையை சுற்றியுள்ள மரங்களையும், மூலிகைகளையும் பாதுகாக்கும் வேலையை விட்டு விட்டு
இப்படி ரகசியமாக வசூலில் ஈடுபட்டு கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர்.
மலையில்
நடக்கும் இந்த அநியாயத்தை பற்றி வனத்துறை ஊழியரிடம் கேட்டபோது, சரியான பதில் கூறாமல்
மேல் அதிகாரிகளிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று கூலாக பதில் சொல்லிவிட்டு வண்டியில் பறந்தார்.
மேலும்,
பர்வதமலை சுற்றியுள்ள கோயில்களில், விலைமதிப்பற்ற பஞ்சலோக சிலைகள் அடிக்கடி திருடுபோவதாகவும்,
குறிப்பாக ஐநூறு கிலோ எடைகொண்ட பஞ்ச முலாம் பூசப்பட்ட நந்தி சிலையும் கொள்ளை போயுள்ளது.
இதை பற்றி போலீசில் புகார் கொடுத்தும், இதுவரை எந்தவித தகவலும் இல்லை என்று அந்த பகுதி
மக்கள் மனம் குமுறுகின்றனர்.
மேலும்,
பர்வதமலையில் கிடைக்கும் பல அரிய இயற்கை மூலிகைகளை திருடி, அவற்றை வெளிச்சந்தையில்
பல கோடி ரூபாய்க்கு விற்று, ஒரு கும்பல் நல்ல லாபம் பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தென்னகத்தின்
கயிலாயம் என்று போற்றப்படும் பர்வதமலையின் உச்சியில் உள்ள மல்லிகார்ஜுன பிரமராம்பிகை
சுவாமிகளை சிரமமின்று அனைத்து பக்தர்களும் தரிசிக்க பழநி மலையில் இருப்பதுபோல் ரோப்
கார் அமைத்து தர வேண்டும் என்று பலர் குரல் கொடுக்கிறார்கள்.
பர்வதமலையில்
இருக்கும் கோயில்கள் பெயரளவில் மட்டுமே இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
இங்கு பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் அனைத்தும் சில உள்ளூர் வாசிகளே சுரண்டுவதாக
கூறப்படுகிறது.
மேலும்,
மலையில் சில அடிப்படை வசதிகளை மட்டும் செய்துகொடுத்து, சுற்றியுள்ள நிலங்களை கையகப்படுத்தியவர்களை
விரட்டி கோயிலுக்கு சொந்தமான ஆயிரக் கணக்கான நிலங்களை மீட்க அரசு வழிவகை செய்யவேண்டும்
என்பதே அப்பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.
இயற்கை
எழில் சூழ்ந்த இந்த பர்வதமலையை குறி வைக்கும் மர்ம கும்பலை கண்டறிந்து அவர்கள் மீது
தகுந்த நடவடிக்கை எடுத்து, மலையை காப்பாற்றி அவற்றின் சொத்துக்களையும் மீட்கவும் அறநிலையத்துறை
நிர்வாகம் முன்வரவேண்டும் என்பதே ஆன்மீகவாதிகளின் கோரிக்கையாக உள்ளது.
=========
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக