வியாழன், 18 ஜூலை, 2013

பிரபல தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வாலி இறந்தார் - கோ.ஜெயக்குமார்.

பிரபல தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வாலி இறந்தார் - கோ.ஜெயக்குமார்.
பிரபல தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வாலி இன்று வியாழன் தனியார் மருத்துவமனையொன்றில் காலமானார்.
அவருக்கு வயது 82. அவர் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்.
கடந்த ஜுன் 8ம் நாள் அன்று வசந்தபாலனின் தெருக்கூத்து படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல் எழுதிக்கொடுத்துவிட்டு வீடு திரும்பியவர் , அன்று இரவே உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இடையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
ஆனால் அவர் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது.
தீவிர சிகிச்சை பயனளிக்காமல் இன்று மாலை ஐந்து மணி அளவில் அவர் இறந்தார்.
ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்டவாலி பிறந்து, வளர்ந்தது திருவரங்கத்தில். தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி.

 

ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட[1] வாலி பிறந்து, வளர்ந்தது திருவரங்கத்தில். தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால் வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.
திருவரங்கத்தில் வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிகையில் பல இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா
 http://i82.servimg.com/u/f82/13/02/10/42/000210.jpg

 மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக, ஜூன் 7-ஆம் தேதி 2013 அன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி அவர் 18 ஜூலை 2013 மாலை 5 மணியளவில் காலமானர்.

 http://img.youtube.com/vi/u0cgR4b1Sp4/0.jpghttp://onlysuperstar.com/wp-content/uploads/2011/04/6.jpg

 http://www.tamilcinemaa2z.com/images/ilayarajavaali.jpg

 தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார்.

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh122i20WHNiBL5WvmncpD9-U28aUGs3qXct6ydY63gQsMCIj5jdn4AakhaU_cfGDt9684d5WnrNyExoCtohYSeQK71wS-DKxDK-XoToo5jWak0Sp2-7D0y07QY-pXM8uLstQj1IaaKy2o/s400/P1230431.JPG

 http://tamil.oneindia.in/img/2011/11/23-vaali-kushboo-300.jpg

 சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தங்கள் எழுதியுள்ளார்[1] .அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன். வாலி அவர்களின் 80வது பிறந்தநாள் அன்று நடைபெற்ற விழாவில், 'வாலி 1000' என்ற பெயரில், வாலியின் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையிசைப்பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது. அவ்விழாவில் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், சூர்யா, பத்திரிகையாளர் சோ உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

 http://www.thehindu.com/multimedia/dynamic/01521/Vaali_nagesh_1521231g.jpg

  • பத்மஸ்ரீ விருது-2007
  • 1973-ல் 'இந்திய நாடு என் வீடு' என்ற பாரத விலாஸ் திரைப்படப் பாடலுக்காகக் கிடைத்த இந்திய தேசிய விருதை மறுத்தார்.
வாலி ஐந்துமுறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர்[3].

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-usBRtBzWOpjcaLrlCp_kMzkUITW1gyjy0ZDLnDxuepg-7dMjg1DOYIeJjQP24uMrqz5_cBPH0jITE9G-L0HYyjN1lSRYnbsqmssgME1WKlhtGj15-P3fNjw7iYf_68k6WYer8UUkYdLx/s400/vaali-karunanidhi-895.jpg

ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை... " ஆயிரத்தில் ஒருவன் 1968
" மல்லிகை என் மன்னன் மயங்கும்... " தீர்க்க சுமங்கலி 1974
" மாதவிப்பொன் மயிலாள் தோகைவிரித்தாள்... " இரு மலர்கள் 1967
நான் ஆணையிட்டால் எங்க வீட்டு பிள்ளை (1965)
காற்று வாங்க போனேன் - கலங்கரை விளக்கம் (1965)
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ- சந்திரோதயம் (1966)
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா - எதிர்நீச்சல் (1968)
இறைவா உன் மாளிகையில்- ஒளிவிளக்கு (1968)
அந்த நாள் ஞாபகம் - உயர்ந்த மனிதன் (1968)
புன்னகை மன்னன் பூவிழிகண்ணன்- இருகோடுகள் (1969)
ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி- சுபதினம் (1969)
மதுரையில் பறந்த மீன்கொடியை- பூவா தலையா (1969)

 http://tamilnews.jupiterwebsoft.com/wp-content/uploads/2010/06/kalaingeruku-paaraatu.jpg

கவிஞர் வாலி (இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், 29 அக்டோபர், 1931 - 18 சூலை 2013) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை. ஆனந்த விகடன் இதழில் வாலி தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய‌ 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் பெயர் பெற்றது. வாலி திரைப்படங்களுக்கு 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அவர் நடித்த திரைப்படங்களுள் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும் 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

 http://tamil.oneindia.in/img/2013/07/18-1374152727-vaali433-600.jpg

வாலியின் திரை ஆளுமை: ஒரு பார்வை

கவிஞர் வாலியின் திரை ஆளுமை : ஒரு பார்வை
தமிழ்த் திரையுலகில் ஐம்பது ஆண்டுகளாக ஒரு பாடலாசிரியராக வலம் வந்த கவிஞர் வாலியின் பங்களிப்பு குறித்த சிறப்பு பெட்டகம்.
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழர் ஒருவர் ‘மாலி'யைப் போல நீயும் சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார் என்று கூறப்படுகிறது.



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNsEToKJqV8kTWDBkO96FeqO_kLV0f5apQqjWILLuIsvM-EZXbwkphfLFVosmyDowWDbtfq2ZzJxZ_XyT0FpyUAzE4uxB48JcRjOk3JXzDwNwcLZ11TLpAm3F5kFE4o4BTgwvLDGCL611S/s400/Rajini-speech-at-Vaali-function-659x441.jpg
 http://andhimazhai.com/images/news_images/kanimoli.jpg
வாலி ஏறத்தாழ ஐந்து தசாப்தங்களாக தமிழ்த் திரையுலகில் முக்கியமானதொரு ஆளுமையாக விளங்கினார். இவ்வளவு நீண்ட காலம் நிலைத்து நின்ற திரைப்படப் பாடலாசிரியர் வேறு எவரும் இல்லை என்கிறார் திரைப்பட ஆய்வாளர் வாமனன்.
வாலி பத்தாயிரம் பாடல்களுக்கும் மேல் எழுதியதாகக் கருதப்படுகிறது.
2007ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்ற வாலி பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன் போன்ற கவிதை நூல்களையும் படைத்துள்ளார்.
 http://onlysuperstar.com/wp-content/uploads/2011/06/Vaali_Rajini.jpg
அவரது மறைவிற்கு திரையுலகப் பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்துவருகின்றனர்.
 http://cdnw.vikatan.com/av/2013/03/zjnimu/images/p60.jpg
தமிழ் சினிமாவின் இணையற்ற கவிஞர்களில் ஒருவரும், சாகை வரம் பெற்ற பல தேமதுர தமிழ்ப் பாடல்களைப் படைத்தவருமான கவிஞர் வாலி இன்று மாலை 5 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு வயது 82. வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். ஸ்ரீரங்கத்தில் 1931-ம் ஆண்டு பிறந்தவர். ஆரம்பத்தில் அகில இந்திய வானொலியில் நிலையக் கலைஞராக பணி்யாற்றிய வாலி, பின்னர் சினிமாவில் பாடலாசிரியராக 1958-ல் வாழ்க்கையைத் தொடங்கினார். மறைந்தார் காவியக் கவிஞர் வாலி... திரையுலகம் கண்ணீர் எம்ஜிஆருக்காக நல்லவன் வாழ்வான் படத்தில் முதல் முதலாக பாடல் எழுதினார் வாலி. பின்னர் எம்ஜிஆரின் தர்பாரில் ஆஸ்தான கவிஞராக கடைசி வரை இருந்தார். திரையுலகில் அதிக பாடல்களை எழுதிய சாதனையாளர் வாலி. இதுவரை 10000 பாடல்களுக்கும் மேல் அவர் எழுதியுள்ளார். ஏற்கெனவே இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட வாலிக்கு, நுரையீரல் தொற்று மற்றும் அதிகமான சளியின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 40 நாட்களாக அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் 2 நாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. 1958-ம் ஆண்டு படங்களுக்கு பாடல்கள் எழுதத் துவங்கிய கவிஞர் வாலி இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியுள்ளார். பத்மஸ்ரீ மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். சில படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ள வாலி, தமிழ் இலக்கியத்துக்கு தன் பங்களிப்பாக அவதார புருஷன் உள்ளிட்ட பல அரிய நூல்களை எழுதியுள்ளார். பொய்க்கால் குதிரை, சத்யா, ஹே ராம், பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் பாராட்டுப் பெற்றுள்ளார். வாலியின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் மறைந்துவிட்டார். வயது வித்தியாசம், ஈகோ மோதல் எதுவுமின்றி அனைவருடனும் இனிமையாகவும் உரிமையாகவும் பழகிய கவிஞரின் மறைவு தமிழ் திரையுலகை அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWYTGhP4cUG8gmR-AfpNyt6YMZe7yN5oFfnGgoVAt9oZU8mFf9wNXPXzUoBBMkDDs6uLbiYS7aqPJ2ZOq5Zdb8aPtW_atXLM2Dc_KyiKoFThGr6ZVT04ov-XstvO-FLX9p_R_RD8RuGJY/s400/valli1c.jpg
 http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/sundar/2013/JULY/18/vali-kangaiamaran01.jpg
தமிழ் வாழும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக