இலங்கை: விடுதலைப்புலி பெண் தளபதி தமிழினி திடீர் விடுதலை
விடுதலை புலிகளின் அமைப்பு அரசியல் பிரிவு பொருப்பாளராக இருந்தவர் தமிழினி.
இவர் விடுதலை புலிகள் தளபதியாகவும் செயல்பட்டு வந்தவர்.
இலங்கை இறுதிகட்ட போரின் போது இவர் தனது குடும்பத்துடன் மானிக்பார்ம்
முகாமில் தங்கி இருந்தார். அதை கண்டு பிடித்த இலங்கை ராணுவம் அவரை கைது
செய்தது.
பின்னர் அவர் வவுனியாவில் உள்ள புணர் வாழ்வு மையத்தில் தங்க
வைக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு புணர் வாழ்வு பயிற்சிகள்
அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று தமிழினியை இலங்கை ராணுவம் விடுதலை செய்தது. அவரது
தாயார் சின்னம்மாளிடம் தமிழினியை ஒப்படைத்தனர்.
தமிழினியின் சொந்த ஊர் கிளிநொச்சி அருகே பரந்தன் ஆகும்.
இலங்கை தமிழர் பகுதியில் மாகாண தேர்தல் நடக்க உள்ளது. இதில் வடக்கு மாகாண
தேர்தலில் தமிழினியை நிறுத்துவதற்கு இலங்கை ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளதாக
தெரிகிறது. இதற்காகவே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக