ஜவ்வாதுமலை. வேலூர் - திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் வரும் கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி. இந்த மலையின் மேற்கு பகுதியில் மனதுக்கு குளிச்சி தரும் ஏலகிரிமலை உள்ளது என்றால் கிழக்கு பகுதியில் மனதுக்கு குளிர்ச்சி, வரலாற்று தகவல்கள், பொது அறிவுத்தகவல்கள் புதைந்துள்ள ஒர் சுற்றுலா தலமாக ஜம்னாமத்தூர் பகுதி உள்ளது என்றால் அது மிகையில்லை.
ஜவ்வாது மலையின் மைய பகுதியான ஜம்னாமத்தூர் திருவண்ணாமலையில் இருந்து 70கி.மீ தொலைவில் உள்ளது. போளுரில் இருந்து செல்வது ரம்மியமாக, த்ரில்லாக இருக்கும். வளைவான மலைப்பாதைகள், கொண்டை ஊசி வளைவுகள் என சூப்பராக போகலாம். சாலைகள் போடப்பட்டுள்ளதால் பேருந்து, கார், இரு சக்கர வாகனம் போன்றவற்றில் பயமில்லாமல் பயணிக்கலாம். ஜம்னாமத்தூரில் குழந்தைகளுக்கான பூங்கா உள்ளது. ஆண்டுதோறும் ஜீன் மாதத்தில் நடைபெறும் கோடைவிழாவின்போது அழகாக அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அதன் அருகேயுள்ள கோமுட்டேரி ஏரியில் படகு வலமும் வரலாம்.
பீமன் நீர்வீழ்ச்சி:
ஜம்னாமத்தூரிலிருந்து 3கி.மீ தொலைவு சென்றால் அழகான பீமன் நீர் வீழ்ச்சியுள்ளது. 80 அடி உயரத்தில் இருந்து கொட்டுகிறது நீர். நீர் வரும் பாதை முதல் நீர் சென்று சேரும் இடம் வரை நடந்தே செல்லலாம் எந்த தடையும் கிடையாது. ஆனந்தமாக குளிக்கலாம் எந்த அதிகாரியும் திட்டமாட்டார்கள். குடும்பத்தோடு சென்று விளையாடலாம் எந்த தொந்தரவும் இருக்காது. ஆனால் மழை காலம் முடிந்தபின் தான் இங்கு செல்ல வேண்டும். ஏன் எனில், அப்போது தான் அந்த அருவில் தண்ணீர் கொட்டும். அப்போது வந்தால் தான் ஆனந்தமாக ரசிக்கவோ, குளிக்கவோ முடியும்.
ஜம்னாமத்தூர் டூ பரமனந்தல் செல்லும் வழியில் மேல்பட்டு என்ற மலை கிராமம் உள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 3050 அடி உயரம் கொண்ட பகுதியாகும். எவ்வளவு வெயில் அடித்தாலும் இங்கு மட்டும் குளிச்சியாகவே இருக்கும். கோடைகாலத்திலும் ஏசி போட்டது போலவே இருக்கும். இங்கு 1890ல் கட்டப்பட்ட கண்ணாடி மாளிகை என்ற பெயர் கொண்ட பயணியர் விடுதியுள்ளது. இங்கு போக பாதைகள் சரியில்லாததால் இங்கு தங்க யாரும் செல்வதில்லை. தங்க விரும்புபவர்கள் திருவண்ணாமலையில் உள்ள வனத்துறை அதிகாரியிடம் அனுமதி பெற்று அங்கு தங்கலாம்.
மலையின் சில இடங்களில் நீர் மத்தி மரங்கள் உள்ளன. இந்த மரங்களை 15 பேர் ஒன்றிணைந்தால் மட்டுமே கட்டி பிடிக்க முடியும். அந்தளவுக்கு அதன் விட்டம் பெரியது. இந்த மரங்களில் மட்டும் தான் ஒன்றுக்கும் மேற்பட்ட அதாவது நூற்றுக்கும் அதிகமான தேன்கூடுகளை தேனிக்கள் கட்டும். 21வது கி.மீ மேல்பட்டு என்ற இடத்தில் உள்ள ஒரு மரம் மட்டும் சுலபமாக சென்று பார்க்கும் வகையில் உள்ளது.
தமிழ்நாடு காவல்துறைக்கான கண்ட்ரோல் டவர் உள்ளது. இந்த டவர் மட்டும் பழுதானால் காவல்துறையின் ஒயர்லெஸ் செயல்பாடுகள் அத்தனையும் முடங்கிவிடும். மலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், அடி அண்ணாமலை கோயில் கட்டப்படுவதற்கு முன் கட்டப்பட்ட அண்ணாமலையார் ஆலயம் சிதலமடைந்து உள்ளது. தெற்கு பகுதியில் பர்வதமலை என்ற மலை இம்மலையை ஒட்டியுள்ளது. இங்குள்ள அம்மன கோயில் சிறப்பு வாய்ந்ததாகும். பௌர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த மலைக்கு சென்று அங்குள்ள அம்மனுக்கு அவர்களே பூஜை செய்து வணங்கிவிட்டு சூரிய உதயத்தின் போது மலையை விட்டு இறங்குகிறார்கள்.
சாமை - பேஎள்:
மலையில் பேஎள் என்ற எள் விளைகிறது. இதிலிருந்து கொழுப்பு சத்து இல்லாத எண்ணெய் இந்த பேஎள்ளில் இருந்து எடுக்க முடியும். இந்த எள் மழைக்காலத்திற்கு பின் விளையும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் மின்னும். அப்போது இந்த மலைப்பகுதியை வலம் வந்தால் சூரிய வெளிச்சத்தில் தங்கமாக இந்த மஞ்சள் பூக்கள் பிரகாசிக்கும். அதேபோல், மலைப்பிரதேசத்தில் மட்டுமே விளையும் சாமை என்ற தானியம் இங்கு அதிகமாக விளைவிக்கப்படுகின்றன. இது உணவு பொருளாக பயன்படுத்தப்படுகின்றன. பிரபல பிஸ்கட் கம்பெனியான மேரிக்கோல்டு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பிஸ்கட்கள் சாமையை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அதேபோல் நாசிக்கில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகளில் இந்த சாமை பயன்படுத்தப்படுகின்றன.
காவனூர்:
ஜம்னாமத்தூரில் இருந்து 15கி.மீ தூரம் சென்றால் காவனூர் வருகிறது. ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி மையம் இதுதான். வாரத்தில் சனிக்கிழமை மாலை 4 முதல் 6 மணி வரை மட்டும் பார்வையாளர்களை அனுமதிக்கிறார்கள். உள்ளே தொலைநோக்கி கோபுரத்தில் 2 சிறிய தொலைநோக்கிகள், 4 பெரிய தொலைநோக்கிகள் உள்ளன. சிறியதில் மட்டும் பார்வையாளர்கள் பார்க்க முடியும். வானத்தில் உள்ள கோள்களை காணலாம் ஒவ்வொரு பார்வையாளருக்கும் சில நிமிட நேர அனுமதி மட்டுமே.
இந்தியாவில் வானியல் படிக்கும் மாணவர்கள், வெளிநாட்டு ஆய்வாளர்கள் இங்கு வந்து வானியல் ஆய்வு செய்கின்றனர். இது இந்திய வானியல் ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
குள்ளர் வீடுகள்:
ஜம்னாமத்தூரில் இருந்து 18 கி.மீ தொலைவில் பட்டறைக்காடு என்ற பகுதியுள்ளது. அங்கு செல்ல இரண்டு குன்றுகளை ஏறி இறங்க வேண்டும். சில நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு குள்ள மனிதர்கள் வாழ்ந்ததாக இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். அந்த குன்றில் நூற்றுக்கணக்கான நான்கடி உயரம், 7 அடி அகலம் கொண்ட கருங்கற்களை கொண்டு அமைக்கப்பட்ட அறைகளை காணலாம். இங்கு 3 அடி உயர குள்ள மனிதர்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் வாலியர்கள் என்று அப்பகுதி மக்கள் பெயர் வைத்து பேசுகின்றனர்.
அமர்தி நீர்வீழ்ச்சி விலங்கியல் பூங்கா:
ஜம்னாமத்தூரில் இருந்து அமிர்திக்கு செல்லலாம். 32வது கி.மீட்டரில் உள்ளது அமிர்தி. இங்கு நீர் வீழ்ச்சியும், விலங்கியல் பூங்காவும் உள்ளது. நாம் சென்றிருந்த நேரம் வேலூர் கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள் ஜோடி ஜோடியாக வந்திருந்தனர். வார நாட்களில் குடும்பத்துடன் பலர் வருகின்றனர் என்றனர் அங்கிருந்த ஊழியர்கள்.
இப்பகுதிகளில் இடம் வாங்குவது, விற்பது மலைவாசிகளுக்குள் மட்டுமே என்பதால் வெளிநபர்கள் யாரும் அங்கு வீடு, விடுதிகள் கட்ட முடிவதில்லை. அதனால் அது ஒரு சிறு கிராமமாக தான் ஜம்னாமத்தூர் உள்ளது. ஒரே ஒரு அரசினர் விடுதி உள்ளது. சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. இரவு தங்க வேண்டும் என்றால் முன்கூட்டியே பதிவு செய்துவிட்டு சென்றால் சிறப்பு. இல்லையேல் திருவண்ணாமலை, வேலூர் பகுதிகளில் தங்கிவிட்டு செல்லலாம்.
சாதாரண சின்ன உணவு விடுதிகள் ஏராளமாக உள்ளன. இங்கு அசைவ உணவு அற்புதம். அசல் தேன் இங்கு கிடைக்கும்.
வழித்தடம் :
ஜம்னாமத்தூர் செல்ல நான்கு பாதைகள் உள்ளன. திருவண்ணாமலையில் இருந்து போளுர் சென்று செல்வது ஒருவழி. செங்கம் வழியாக மேல்பட்டில் உள்ள நீர்மத்தி மரத்தை பார்த்துவிட்டு ஜம்னாமத்தூர் செல்லலாம்.
வேலூரிலிருந்து அமிர்தி சென்று அருவி, விலங்கியல் பூங்கா பார்த்துவிட்டு அங்கிருந்து ஜம்னாமத்தூர் செல்லலாம். வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் வழியாக காவலூர் தொலைநோக்கி மையத்தை பார்த்துவிட்டு ஜம்னாமத்தூர் செல்லலாம்.
இந்த நான்கு பாதையிலும் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை தான் பேருந்து வசதி. அதனால் வெளியூர் சுற்றுலா பயணிகள் காரில் செல்வது சிறந்தது.
கிழக்கு மலைத் தொடர்............
இந்திய
நாட்டை வேளாண் பெருநாடாகக் பொலிவுறச் செய்யும் தகுதிவாய்ந்த வாய்ப்புகளைத்
தந்து உணவுப்பொருள் உற்பத்தியில் குறிப்பிடத்தகுந்த இடத்தையும், தொடர்ந்து
கொடுத்துக்கொண்டு இருப்பவை இயற்கை வளங்கள் அத்தனையும் தனக்குள்ளே
கொண்டுள்ள மலைகளும் அதன் காடுகளுமென்றால் அது மிகையாகுமா?
சைபீரியாவின் கடுங்குளிர் மிகுந்த உலர் மற்றும் கோடைக்காற்றை இந்தியத் துணைக் கண்டத்திற்குள் அண்டவிடாமல் நின்று நிலைத்துத் தடுக்கும் பணியை காலங்கள் கடந்து மேற்கொண்டு, ஈரப்பதம் மிக்க பருவகால மழைக்காற்றை நாடு முழுவதும் கொண்டு செலுத்துவது இமயமலையன்றி வேறில்லை.
இமயமலைக்கு அடுத்தபடியாக உன்னதமான மலைச்சிகரங்களைத் தன்னகத்தே கொண்டிலங்கி தென்னகத்தை வளங்கொழிக்கச் செய்தது நீலகிரி மற்றும் ஆனைமலைத் தொடர்கள், மேற்குக்கரை எல்லையான அரபிக் கடற்கரைக்கு இணைச் சுவரினைப்போல சங்கிலித் தொடராய் இம்மலை விளங்குகிறது.
மும்பைக்கு சற்று மேற்கே தோன்றி முக்கடல் சங்கமிக்கும் குமரி முனைவரை இம்மலை நீண்டு காணப்படுகிறது. இம்மலைத் தொடர்கள் ஏதும் இல்லாமல் இருந்திருந்தால் சைபீரியாவின் ஸ்டெபி சமவெளிபோல வறண்ட பாலைவனமாக இந்தியா இருந்திருக்கும்.
இமயமலைத் தொடர் முழுவதுமே ஒரே ஒரு தனிவகையைச் சார்ந்தவை. ஆனால், மேற்குத் தொடர்ச்சி மலைகள் உலகத்திலுள்ள இன்னபிற மலைத் தொடர்களுக்கு நிகராக விளங்குபவை. இதனுடைய எழிலும், தோற்றமும், இயற்கையின் பசுமைச் செழுமையும், தனியிடம் பெற்றிருப்பது பெருஞ்சிறப்பாகும்.
இமயமும், நீலகிரி மலையும் நமது தீபகற்பத்தின் இயற்கையின் அரும்பெரும் கொடை எனக்கொண்டாலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
சாத்புரா, விந்தியம், ஆரவல்லி மலைத்தொடர்களும், காசி, காரோ போன்ற மலைக்குன்றுகளும் குறைவில்லாமல் இந்திய உயிரின மேன்மைக்குத் துணையாக இருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரண்டு மலைத்தொடர்கள் சூழ்ந்துள்ளன. ஒன்று மேற்குத் தொடர்ச்சி மலைகள், இரண்டாவது கிழக்குத் தொடர்ச்சி மலைகள். வடகிழக்காகத் தொடங்கி தென்மேற்காக அமைந்துள்ள மலைகளை கிழக்குத் தொடர்ச்சி மலைகள் என்கிறோம். உண்மையில் இஃது தொடர்ச்சியாக, அதாவது மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் போன்று அமையப் பெற்றதல்ல. மகா நதி தொடங்கி வைகை நதி வரையிலான பகுதிகளில் உள்ள பல்வேறு மலைகளின் தொகுப்பே இம்மலைத் தொடர்ச்சி.
இம்மலைத் தொடரை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒரிசாவில் (ஒடிசா) தொடங்கி ஆந்திரத்தின் குண்டூர் வரையிலான மலைகளை வடக்குப் பகுதியாகவும், குண்டூரில் இருந்து தமிழக எல்லை வரையிலானவற்றை நடுப்பகுதியாகவும், தமிழகத்தின் பிற பகுதிகளில் அமைந்துள்ளவற்றை நிறைவுப்பகுதியாகவும் வரையறுத்துள்ளனர்.நிறைவுப் பகுதியானது தென் மேற்காகச் சென்று நீலகிரி மலையைச் சந்திக்கிறது.
கொல்லிமலை, பச்சைமலை, ஜவ்வாதுமலை, கல்வராயன் மலை, சேர்வராயன்மலை, அழகர்மலை மற்றும் கரூர், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் அமைந்துள்ள சிறுமலை என்று வழங்கப்படும் மலைத்தொகுதி வரை உள்ள அனைத்து உயரங்குறைவான மலைக்குன்றுகளும் கிழக்குத் தொடர்ச்சி மலை என்றே அழைக்கப்படுகின்றன. சுமார் 400 மீட்டர் முதல் 1,650 மீட்டர்கள் வரை உயரமுள்ள குன்றுகளால் ஆனது இம்மலைக்குடும்பம்.
பூமத்திய ரேகை மழை மண்டலத்தில் அமையப்பெற்றுள்ள இம்மலைப் பகுதிகள் வடகிழக்குப் பருவ மழையாலும், தென்மேற்குப் பருவ மழையாலும் மழை பெறுகிறது. இம்மலைத்தொடரின் வடக்குப்பகுதி (ஒடிசா, ஆந்திரம்) ஆண்டொன்றுக்கு 1,200 மில்லி மீட்டர் முதல் 1,600 மில்லி மீட்டர் வரை மழைப் பொழிவைப் பெறுகிறது. ஆந்திரம் 600 மில்லி மீட்டரும், தெற்குப் பகுதியாக உள்ள தமிழ்நாடு 1,000 மில்லி மீட்டரும் மழையைப் பெறுகின்றன. இதனால் மலை உச்சிகளைத் தவிர, பிற பகுதிகளில் அரை வறட்சி தட்ப வெப்பநிலையே நிலவுகிறது.
வெப்பநிலையும் வெவ்வேறு பகுதிகளில் மாறுபடுகிறது. ஜனவரியில் 20 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உள்ளது. வடக்கிலிருந்து மேற்காகச் செல்லச்செல்ல வெப்பநிலை அதிகரித்து 41 டிகிரி செல்சியஸ் வரை உயர்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையைப்போல ஆண்டு முழுவதுமான தட்பவெப்பநிலையை இம்மலை கொண்டிருக்கவில்லை.
தமிழகத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலையின் மொத்த பரப்பளவு 98,000 சதுர கிலோ மீட்டர்களாகும். சேர்வராயன் மலை தமிழகத்தின் இதயம் போன்று அமைந்துள்ளது. திசைகள்தோறும் சமவெளியில் சூழப்பட்ட இம்மலை 900 மீட்டர் முதல் 1,624 மீட்டர் வரையுள்ள முகடுகளைக் கொண்டது. தகுதியான மழை வளத்தின் மூலம் ஆரணியாறு, பாலாறு, பெண்ணையாறு, காவிரியாறு போன்றவை நீர்வரத்துப்பெற வேண்டும். ஆனால், நடப்பதில்லை.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மேற்கண்ட கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் மீது அதிகமான கவனம் செலுத்தப்படவில்லை. காரணம் இங்கு பழங்குடி மக்களாக வாழ்ந்து வந்தவர்களுக்கு மலேரியா இருப்பதாக அறிந்து இம்மலைகள் மீது ஆதிக்கம் செலுத்த அவர்கள் பயந்தனர்.
இருப்பினும் 1800-களில் இம்மலைத் தொடரை அளக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவையும் மலேரியா பயத்தால் தோல்வி அடைந்தன. 1820-1829களில் பல்வேறு வழிமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் சேர்வராயன் மலைப்பகுதிகளில் நில அளவை செய்யப்பட்டது. தொடர்ந்து 1840-ம் ஆண்டுகளில் ரயில் பாதைகள் அமைப்பதற்கான (ஸ்லீப்பர் கட்டைகள்) மரங்கள் இம் மலையிலிருந்து பெருமளவு வெட்டப்பட்டன.
முன்னதாக, அதாவது 1820-1829-ம் ஆண்டுகளில் சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த எம்.டி.காக்பெர்ன், கிரேன்ஞ் எஸ்டேட் என்ற இடத்தில் தங்கினார். அவர்தான் காபிப் பயிரை இங்கு அறிமுகம் செய்து வைத்தார். அவரே ஆப்பிரிக்காவில் இருந்து ஆப்பிள் பியர் உள்ளிட்ட பழங்களையும் பயிர் செய்தார். இதன் காரணமாகவே இங்கிருந்து காபி நீலகிரிக்கு அறிமுகமானது. மலையின் பூர்வீகக் குடிகள் கேழ்வரகு, சாமை போன்றவற்றையே பாரம்பரியமாக பயிர் செய்துவந்த நிலை காபியால் முற்றிலும் காலியானது. மலைவாழ் மக்கள் உழைப்பின் நிமித்தம் பிழியப்பட்டனர்.
1841 மற்றும் 1866-ம் ஆண்டுகளில் மீண்டும் சர்வே செய்யப்பட்டது. 1900-ம் ஆண்டு ஏற்காடு-சேலம் சாலைத்திட்டம் தொடங்கி 1903-ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. 1929-ல் மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட பின்னர் 1930-ம் ஆண்டில் இம்மலைக்கு மின்சாரம் வந்தது. பின்னடைவும் வந்தது.
மெல்ல மெல்ல உலகத்தின் கண்களுக்கு தூரத்தில் இருந்து தென்பட்ட கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் முக்கியப் பகுதிகள் மனிதரின் கரங்களுக்குள் சிக்கின. மலைகளின் உயிர் நாடியாக இருந்த மரங்கள் நாளொன்றுக்கு பலநூறு டன் வெட்டப்பட்டு கீழிறக்கப்படுகின்றன. இதனால் குறிப்பாக, சேர்வராயனின் சரபங்கா மற்றும் திருமணிமுத்தாறு ஆகிய இரு நதிகள் காய்ந்து வறண்டுவிட்டன. இதே நிலைதான் கிழக்குத் தொடர்ச்சி மலை முழுதும்.
கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் முக்கியப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெளியிலிருந்து கொண்டு வரப்பட்ட 204-க்கும் மேற்பட்ட களைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. பாரம்பரியமான பூவினங்கள் சுமார் 62 வகை முற்றிலுமாக அழிந்துவிட்டன.
மேலும் 20 வகை பூவினங்கள் அரிய வகைகளாகிவிட்டன. 3 இனங்கள் உச்சபட்ச அழிவு நிலையில் உள்ளன என தமிழகத்தின் "சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை - 2005' வேதனையுடன் தெரிவிக்கிறது. அதே ஆய்வறிக்கை கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் பல்வேறு இடங்களில் அன்னியத் தாவர இனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளூர் இனங்களை ஆதிக்கம்செய்து அழித்து வருகின்றன என்று தெரிவிக்கிறது.
லேன்டானா, காமரா என்ற வகையினம் வனங்களின் உட்பகுதியையும், குளங்களை ஐகோர்னியா கிராஸ்பைஸ் என்ற தாவர வகையினமும், நீர்வளத்தைப் பாதித்து வருகின்றன. சமவெளிகளில் பரவிவரும் பார்த்தீனியம், வனங்களை ஆக்கிரமித்து கடும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது என்கிறது அறிக்கை.
மலைகளில் உள்ள இடங்களில் மேக்னசைட் கல்லும், பாக்சைட் கனிமமும், டன் கணக்கில் வெட்டியெடுக்கப்படுகின்றன. இந்த நிலை மலையின் உறுதித்தன்மையை நாளும் பாதித்து வருகிறது. காடுகள் விரிவாக்கம் எனும் பெயரில் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். லட்சக்கணக்கான ஹெக்டேர்கள் அளவிலான அரசின் காட்டு நிலங்கள் ஜட்ரோபா எனும் காட்டு ஆமணக்கு போன்ற எரிபொருள் தாவரங்கள் பயிரிட அழிக்கப்படுகின்றது.
1864-ம் ஆண்டு வனத்துறையை ஆங்கில அரசு நிறுவியது. "அறிவியல் பூர்வமான காடு மேலாண்மை' எனும் பெயரில் நமது மண்ணுக்கும் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்புடையதல்லாத செயல்களைச் செய்து கோடிக்கணக்கில் லாபமீட்டி மலைவளம், காடுவளம் ஆகியவற்றை அழித்தொழித்தது. இப்போது இதே பணியைத்தான் நம்மவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர் என்பது பெருந்துயரமாகும்.
""காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம், நோக்க நோக்க களியாட்டம் நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை'' என்றார் பாரதி.
வனங்களும், மலைகளும் மனித குலத்தின் வளத்திற்கான ஆதாரங்கள் என்கிற மனோபாவத்திற்கு நாம் உடனே மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மலைகள் இயற்கை வளங்களோடு மதிக்கப்பட வேண்டும். இல்லையேல் அவை நமக்குத் தகுந்த உதவிகள் செய்வது சீராக இருக்காது. அதற்கான வாய்ப்புகளைத் தொடர்ந்து நாம் உருவாக்கிக் கொண்டுதான் இருக்கப் போகின்றோமா என்பதுதான் இப்போது நம்முன் உள்ள கேள்வி.

சவ்வாது மலையின் வரலாற்றை அழகு தமிழில் ,எளிய நடையில் பதிவிட்ட முனைவர் கோ. ஜெயக்குமார் ஜெயஸ்ரீ
பதிலளிநீக்குஅவர்கட்கு என ஆழ் மனதின்
வாழ்த்துக்கள்.
எல்.தருமன்.
18. பட்டி.