கோவளம் கடற்கரை – மூழ்கடிக்கப்பட்ட வரலாறு
தமிழ்நாட்டின் பிரபலமான மீன்பிடி கிராமமான கோவளம், கடற்கரையை நேசிப்பவர்களுக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கக்கூடிய சுற்றுலாத் தலம். இந்த ஸ்தலம் சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் வார இறுதியை குடும்பத்துடன் சந்தோஷமாக கழிப்பதற்காக ஏராளமான சென்னை வாசிகள் கோவளத்திற்கு வருகின்றனர்.கோவளத்தில் உள்ள டச்சு கோட்டையானது சுற்றுலா விடுதியாக மாற்றப்பட்டு வருடந்தோறும் நிறைய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இது ‘தாஜ் பிஷர்மேன் கோவ்’ என்று அழைக்க்படுகிறது. இளைப்பாறுவதற்க்கும் நல்ல முறையில் நேரத்ததை செலவு செய்வதற்க்கும் ஏற்ற இடம் இது.
கோவளத்தில் 5ம் நூற்றாண்டு முதல் 8ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவ பேரசரர்களால் கட்டப்பட்ட கோயில்களை சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக தவற விட்டுவிடக் கூடாது. இந்த கோவில்கள் முன்னாள் தென் இந்திய பேரரசுகளின் வளமான பண்பாட்டு பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்றன.
இந்த கடற்கரை கோவில்கள் இந்த பிராந்தியத்தில் கோவளத்தின் சுற்றுலாவிற்கு மதிப்பு கூட்டி வருகின்றன. பல்வேறு நீர் விளையாட்டுகளை கோவளத்தில் தெரிவு செய்ய முடியும். இந்தியாவில் பாய்மர படகு போட்டிக்கான ஒரே இடம் கோவளம் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்காள விரிகுடாவிற்கு இணையாக செல்லும் ஒரு கால்வாய் கோவளத்தை நிலப்பகுதியில் இருந்து பிரிக்கின்றது. இந்த பிராந்தியத்தின் மற்ற முக்கிய இடங்கள் கோவளம் கடற்கரை, கத்தோலிக்க தேவாலயம், டச்சு கோட்டை, முத்துக்காடு காயல் நீர் முதலியன.
தமிழக கடற்கரை பகுதியில் காணப்படும் அதே வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த கால நிலையானது இங்கும் காணப்படுகின்றது. கோடைகாலத்தில் இங்கு பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது ஏனென்றால் அப்போது வெப்ப நிலையானது 38 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். இங்கு சுற்றி பார்க்க சிறந்த நேரம் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம். இது கோவளத்தின் குளிர்காலமாகும்.
சென்னை, பாண்டிச்சேரி மற்றும் தரங்கம்பாடி அருகில் அமைந்துள்ள கோவளம், தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் சாலை வழியாக எளிதில் அடையும் வகையில் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக